Khub.info Learn TNPSC exam and online pratice

புவியியல் வரைபட அறிவியல் -- CARTOGRAPHY

Q1. புவியியல் வரைப்பட அறிவியல் என்பது என்ன?
புவியில் உள்ள நிலப்பகுதி, அதன் எல்லைகள், மலைகள், மழைப்பகுதி, வனப்பகுதி, என அனைத்து அம்சங்களையும் வரை படத்தின் மூலம் குறிப்பிட்ட அளவுகோலில் வரைபடம் மூலம் வெளிப்படுத்துவது. இதைத்தான் ஆங்கிலத்தில் CARTOGRAPHY எனப்படுகிறது.

Q2. புவியியல் அறிவியலுக்கு ஒரு கணித அடிப்படை வடிவம் கொடுத்து நிரூபிக்க முதலில் முனைந்தவர் யார்?
எராஸ்டோதெனிஸ் -- ERASTOTHENES -- ஒரு கிரேக்க வானியல் நிபுணர். கி.மு.275-195, இவர் முதன் முதலாக பூமியின் சுற்றளவை அறிவியல் ரீதியாக கணித்து, சுமார் 5 சதவிகித மட்டுமான வித்தியாசத்தில் நிரூபித்தார்.
Q3. Geography (புவியியல்) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்?
எராஸ்டோதெனிஸ் -- கிரேக்க வானியல் நிபுணர்.
Q4. பூமியை "நீள்வட்ட" வடிவில் முதலில் வரைபடத்தில் வெளியிட்டவர் யார்?
க்ளாடியஸ் ப்டோலெமி -- Claudius Ptolemy கி.பி 90 -- 164 .
Q5. ப்டோலெமி, பூமியின் நீள்வட்ட வடிவத்தை எடுத்துக்காட்ட பயன்படுத்திய வரைபட தொழில் நுட்ப முறையின் பெயர் என்ன?
Perspective Projection Technique.
Q6. கிரேக்க வானியல் நிபுணர் ப்டோலெமி எழுதிய எந்த புத்தகம், இன்றும் புவியியல் வரைபடம் தயாரிக்க முன்னோடியாக பயன்படுத்தப்படுகிறது?
Geographia.
Q7. தற்காலத்தில், புவியியல் வரைபடம் தயாரிக்க பயன்படுத்தும் தொழில்நுட்ப முறை என்ன அதை கண்டுபிடித்தவர் யார்?
Mercator Projection – இந்த முறையை தயார் செய்தவர் கெரார்டஸ் மெர்காட்டர், பெல்ஜியம் (1512-1594) .
Q8. கெரார்டஸ் மெர்காட்டர் தனது தொழில் நுட்பத்தில் எந்த சிறப்பு அம்சத்தை புகுத்தி வரைபடங்களை தயாரித்தார்?
தீர்க்க ரேகை மற்றும் அட்ச ரேகையை பயன்படுத்தி வரைபடங்களைத் தயாரித்தார். இவர் தான் முதன் முதலில் அட்லஸ் எனப்படும் உலக வரைபடத்தைத் தயாரித்தவர்.
Q9. தற்கால உலக வரைபடத்தை Atlas முதலில் வெளியிட்டவர் யார்?
கி.பி.1570ல் பெல்ஜியம், ஆண்ட்வெர்ப் நகரத்தை சேர்ந்த ஆப்ரகாம் ஆர்டீலியஸ் என்பவர் வெளியிட்டார். அப்போது அதன் பெயர் Theatrum Orbit Terrarum.
Q10. வானூர்தி போக்குவரத்துக்காக தயாரிக்கப்படும் வரைபடங்களுக்கு எந்த வரைபட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது?
Lambert Conformal Conic Projection.
Q11. வரைபட தொழில் நுட்பத்தில் Zenythical Projection என்பது என்ன?
பூமியின் சம தூரம், பரப்பு, மழை, உயரம், தாழ்வு, என புவியியல் அம்சங்கள் கொண்ட இடங்களை கோடிட்டு இணைத்துக் காட்டும் ஒரு முறை. இது ஒரு மேலோட்டமான விளக்கம். இந்த முறையில் இன்னும் பல தொழில் நுட்பங்களும் அடங்கியுள்ளது.
Q12. தீர்க்க ரேகை -- Longitudes என்பது என்ன?
மேற்கு கிழக்காக உயர வாக்கில் வரையப்பட்டுள்ள கோடுகள். ஒரு தீர்க்க ரேகையின் அளவு, க்ரீன்விச் 0° யை மையமாகக் கொண்டு, 360 சம பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கோணம் அளவில் கணக்கிடப்படுகிறது.
Q13. மெரிடியன் - Meridian என்பது என்ன?
தீர்க்க ரேகையின் ஒரு கோடு. ஒரு வில் அல்லது அரை வட்ட வடிவில், வட தென் துருவங்களை இணைக்கும் வகையில் போடப்பட்டிருக்கும் ஒரு வரை கோடு. லண்டன் வழியாக செல்லும் இக்கோடு 0° என சர்வதேச நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
Q14. முதன்மை நெடுவரை -- Prime Meridian என்பது என்ன?
லண்டன் நகரின் க்ரீன்விச் என்ற இடத்தில் செல்லும் தீர்க்க ரேகை இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதை க்ரீன்விச் மெரிடியன் எனவும் அழைக்கப்படுகிறது.
Q15. நேர் வடக்கு -- True North என்பது என்ன?
இதுவே புவியியல் ரீதியான மெரிடியன் கோடு. இது ஒரு திசை காட்டி (compass) கருவி மூலம் அறிய முடியும்.
Q16. Isobath என அழைக்கப்படுவது என்ன?
உலகில் சம கடல் ஆழம் கொண்ட பகுதிகளை இணைத்துக் காட்டும் வரை கோடு.
Q17. Isobars என அழைக்கப்படுவது என்ன?
ஒரு குறிப்பிட்ட நேரம்/நாளில், ஒரே சமமான வளிமண்டல அழுத்தம் கொண்ட பகுதிகளை இணைத்துக் காட்டும் வரை கோடு.
Q18. Isohel என்பது என்ன?
உலகில் சமமான சூரிய ஒளி வெளிச்சம் கொண்ட பகுதிகளை இணைத்துக் காட்டும் வரை கோடு.
Q19. Isohyte என்பது என்ன?
உலகின் பல பகுதிகளில், ஒரு குறிப்பிட்ட காலத்தில் சம அளவு மழை பெறும் பகுதிகளை இணைத்துக் காட்டும் வரை கோடு.
Q20. Isohaline என்பது என்ன?
கடல்களில் சம அளவு உப்புத் தன்மை கொண்ட பகுதிகளை இணைத்துக் காட்டும் வரை கோடு.
Q21. Isoneph என்பது என்ன?
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பல இடங்களில், சம அளவான மேக மூட்டம் இருப்பதை இணைத்துக் காட்டும் வரை கோடு.
Q22. Isoseismic Lines என்பது என்ன?
ஒரு நில அதிர்வினால் பல இடங்களில் சம அளவிலான அதிர்வை பெறும் இடங்களை இணைத்துக் காட்டும் வரை கோடு.
Q23. Isotherm என்பது என்ன?
ஒரு குறிப்பிட்ட நேரம்/காலத்தில் சம அளவு கால நிலை temperature நிலவும் இடங்களை இணைத்துக் காட்டும் வரை கோடு.
Q24. Isogonic Lines என்பது என்ன?
சம அளவிலான காந்த சக்தி இறக்கம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் வரை கோடு.
Q25. Isostasy என்பது என்ன?
உயர்வு மற்றும் தாழ்வான இடங்களில் உள்ள பாறை வகைகளின் கனபரிமாணத்தால் ஏற்படும் சம நிலை இடங்களை இணைத்துக்காட்டும் வரை கோடு.
Q26. வரை படம் தயாரிப்பதில் உலக ரீதியாக அனுசரிக்கப்படும் ஒரு முக்கிய விதிமுறை/அம்சம் என்ன?
வரைபடத்தின் மேல் பகுதி வடக்காகவும், வலது கை புறம் கிழக்காகவும் அமைக்கப்படும்.
Q27. Kangnido என்பது என்ன?
1402ல் கொரியாவில் தயாரிக்கப்பட்ட உலக வரை படம்.
Q28. “Mappo Mundi” என அழைக்கப்படுவது என்ன ?
இது ஒரு பொதுவான ஸ்பானிய சொல். ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட இடைக்கால உலக வரைபடங்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டின் ஜூவான் டி லா கோசா என்பவரால் உருவாக்கப்பட்டவை.
Q29. எந்த உலக வரைப்படத்தில் முதன் முதலாக ""அமெரிக்கா"" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது?
1507ல் மார்டின் வால்ட்ஸி முல்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட உலக வரைப்படத்தில்.
Q30. ஒரு வரைபடத்தின் புரிதல் முறையையும், வரை பட தொழில் நுட்ப முன்னிறுத்தல் projection ஆகியவையை முறைப்படுத்தியவர் யார்?
கெர்ஹாடஸ் மெர்காட்டர் Gerhardus Mercator (1512-1594) பெல்ஜியம். இவருடைய முதல் உலக வரை படம் 1554ல் வெளி வந்தது.
Q31. உலகின் மிகப் பழமையான வரைபடம் எனப்படுவது எது?
இமேகோ முண்டி Imago Mundi – பாபிலோனிய வரைபடம்.
Q32. உலகின் வரைபடத்தை முதலில் உருவாக்கியவராக கருதப்படுபவர் யார்?
அனாக்ஸி மேண்டர் Anaxi Mander -- க்ரீஸ்.
Q33. Cartogram என்பது என்ன?
இதுவும் ஒரு வரை படமே. ஆனால் இதில் நில நீர்ப்பகுதிகள் இல்லாமல், முக்கிய புள்ளி விவரங்களை காட்டுவதாக அமைக்கப்படுவது.
Q34. Contour Map எனப்படுவது என்ன?
ஒரு வரை படத்தில் பல சம நிலைகளை, மாறி மாறி கோடிட்டு காட்டியிருக்கும் வரைபடம்.
Q35. உலக மற்றும் இதர வரைபடங்களை இணையதளம் மூலம் அளிக்கும் புகழ் பெற்ற வலை தளங்கள் யாவை?
Mapquest, Google Maps, Google Earth and Yahoo maps.
Q36. அட்லஸ் Atlas எனப்படுவது என்ன?
புத்தக வடிவில், வரை படங்களை பல பரிமாண பகுதிகளாகப் பிரித்து, எல்லைக் கோடுகள், கலாச்சாரம், மதம், பொருளாதாரம் அடிப்படையில் புள்ளி விவரங்களுடன் பகிர்ந்து காட்டுவது.
Q37. அட்லஸ் புத்தகத்தை முதலில் வெளியிட்டவர் யார்?
பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரைச் சேர்ந்த ஆப்ரஹாம் ஆர்டீலியஸ் என்பவர். 1570ல்.
Q38. உலகப்புகழ் பெற்ற மில்லர் அட்லஸ் புத்தகத்தை வெளியிட்டவர் யார்?
லோபோ ஹோமெம், பெட்கோ ரீனெல் மற்றும் ஜார்ஜ் ரீனெல் என்பவர்கள் -- போர்ச்சுகல். Lopo Homem, Pedko Reinel and Jorge Reinel of Portugal.
Q39. Graticule என்பது என்ன ?
ஒரு வரை படத்தில் போடப்பட்டிருக்கும் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை கோடுகளின் வலை.
Q40. அமைதி மண்டலம் -- Doldrums என்பது என்ன?
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள காற்றில்லா பகுதி.
Q41. பூமியின் அச்சு என்பது என்ன?
வட துருவத்துக்கும் தென் துருவத்துக்கும் இடையில் பூமியில் 23.5° சாய்வில் போடப்பட்டிருக்கும் ஒரு கற்பனைக் கோடு. இதை மையமாகக் கொண்டு, 24 மணி நேரத்துக்கு ஒரு முறை பூமி சுழல்கிறது.
Q42. கடக ரேகை Tropic of Cancer என்பது என்ன?
பூமத்திய ரேகையின் வட பகுதியில், 23° 32' இல் உள்ள அட்ச ரேகை. இது வெப்பப்பகுதியின் வட எல்லையைக் குறிக்கிறது.
Q43. மகர ரேகை -- Tropic of Capricorn என்பது என்ன?
பூமத்திய ரேகையின் தென் பகுதியில் 23° 32' இல் உள்ள அட்ச ரேகை. இது வெப்பப்பகுதியின் தென் எல்லையைக் குறிக்கிறது.
Q44. வரை படத்தில் Contour lines என்பது என்ன?
கடல் மட்டத்திலிருந்து சம உயரத்தில் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் வரை கோடு.
Q45. வரை படத்தில் Co-tidinal lines என்பது என்ன?
கடலின் அலை ஒரே சமயத்தில் சேரும் இடங்களை இணைத்துக் காட்டும் வரை கோடு.
Q46. பூமத்திய ரேகை -- Equator என்பது என்ன?
உலகின் நடுவில், வட தென் துருவங்களில் இருந்து சம தூரத்தில், உலகத்தைச் சுற்றி போடப்பட்டு இருக்கும் ஒரு கற்பனைக் கோடு. இது பூமியை இரண்டு அரை பகுதிகளாக -- வட மற்றும் தென் துருவங்களாக பிரித்துக் காட்டுகிறது.
Q47. பூமத்திய ரேகை எந்தெந்த நாடுகள் வழியாக பாய்கிறது?
இக்குவேடார், கொலம்பியா, ப்ரேசில், சாவ் தோமே & ப்ரின்ஸிபே, கேபோன், காங்கோ, ஜனநாயக காங்கோ குடியரசு, உகாண்டா, ரவாண்டா, கென்யா, சோமாலியா, இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ பகுதிகள்.
Q48. பூமத்திய ரேகையின் மீது பகல்/இரவின் நிலை என்ன?
சம அளவிலிருக்கும் சூரியன் காலை 6 மணிக்கு உதித்து மாலை 6 மணிக்கு மறையும்.
Q49. குதிரை அட்ச ரேகை Horse Latitudes என்பது என்ன?
வடக்கு தெற்கிலிருந்து 30 முதல் 35° க்குள் பூமியை சுற்றியுள்ள மித வெப்ப மண்டலங்கள். இவை பெரும்பாலும் கடல் பகுதிகளின் மேல் அமைந்துள்ளது.
Q50. அட்ச ரேகையில் நீளமானது எது?
பூமத்திய ரேகை.
Q51. அட்ச ரேகைகளின் பயன் என்ன?
தெற்கு அல்லது வடக்காக இடங்களை குறிப்பிட்டு காட்ட உதவுகிறது.
Q52. தீர்க்க ரேகைகளின் பயன் என்ன?
கிழக்கு அல்லது மேற்காக இடங்களை குறிப்பிட்டு காட்ட உதவுகிறது.
Q53. அட்ச ரேகைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
இணைக் கோடுகள் -- Parallels.
Q54. தீர்க்க ரேகைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
உச்ச நெடுங்கோடுகள் -- மெரிடியன் -- Meridians.