Khub.info Learn TNPSC exam and online pratice

பொது கேள்விகள் -- GENERAL QUESTIONS:

Q1. உலகின் முதல் அச்சடிக்கப்பட்ட புத்தகம் எது?
ஹிரகா சூத்ரா -- Hiraka Sutra – ஒரு சமஸ்கிருத ஆய்விலிருந்த சீன மொழியில் எழுதப்பட்ட புத்தகம் -- கி.பி. 868 ல் அச்சடிக்கப்பட்டதாக தெரிகிறது. ""டையமண்ட் சூத்ரா"" எனவும் அழைக்கப்படுகிறது.

Q2. ஒரு இயந்திரம் மூலமாக அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகம் எது?
பைபிள் -- இதை "" குந்தென்பர்க் பைபிள் Gutenberg Bible"" என அழைப்பர். ஜெர்மனியில், ஜோனஸ் குந்தன்பர்க் கண்டுபிடிந்த ஒரு அச்சு இயந்திரத்தில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகம்.
Q3. எந்த புத்தகம் அதிகமான மொழிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளது?
பைபிள்
Q4. எந்த ஆன்மீக புத்தகம் பிட்மேன் சுருக்கெழுத்து முறையிலும் Pitman’s Shorthand script அச்சடிக்கப் பட்டது?
பைபிள்.
Q5. உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் எங்கு அச்சடிக்கப்பட்டது?
சூப்பர் புக் -- Super Book – 252 கிலோ எடை -- 270 × 300 cm, டென்வர், கொலொரேடோ, அமெரிக்கா -- 1976.
Q6. உலகின் மிகப் பெரிய/நீளமான நெடுங்கதை (நாவல்) எது?
""Les Hommes De Bonne Volonte"" == “Man of Goodwill” 1885ல், ஃப்ரான்ஸ் நாட்டின் லூயிஸ் ஹென்றி ஜீன் ஃபரிகோவில் என்பவரால் எழுதப்பட்ட இந்த நாவல், 27 புத்தகங்களைக் கொண்டது. இதன் ஆங்கிலப் பதிப்பு 1933ல் 4959 பக்கங்கள் கொண்டதாக 14 புத்தகங்களில் வெளியிடப்பட்டது.
Q7. உலகில் அதிகமான நாவல்களை எழுதிய எழுத்தாளர் யார்?
திருமதி மேரி ஃபாக்னர் (கேத்தலீன் லின்ட்சே) -- ஆப்பிரிக்கா -- 904 நாவல்கள். இவருக்கு அடுத்ததாக, சிறுவர்களுக்கான துப்பறியும் நாவல்கள் எழுதி புகழ் பெற்ற எனிட் ப்ளைடன் -- இங்கிலாந்து -- சுமார் 800 புத்தகங்கள்.
Q8. உலகிலேயே, அச்சடிக்கப்பட்ட மிகச் சிறிய புத்தகம் எது?
1.Old King Cole – ஒரு சிறுவர் புத்தகம் -- 1 × 1 mm (0.04 அங்குல அகலம்) 1985ல் ஸ்ட்ராத்க்ளைட், ஸ்காட்லாந்தில் வெளிவந்தது. இதன் சிறப்பு என்னவென்றால், இதன் பக்கங்களை திருப்ப ஒரு ஊசி முனையை பயன்படுத்த வேண்டும்.
2. “The World’s Smallest Book” என்ற புத்தகம் -- 2.4mm X 2.9mm -- ஜோஷூவா ரிச்செர்ட் என்ற் ஜெர்மானியரால் வெளியிடப்பட்டது. இதைப் படிப்பதற்கு ஒரு பூதக்கண்ணாடி பயன் படுத்த வேண்டும்.
Q9. உலகிலேயே மிகவும் கனமான thickest அச்சடிக்கப்பட்ட புத்தகம் எது?
ஸ்விட்சர்லாந்து நாட்டின் பீட்டர் ட்ரோயண்ட்ள் என்பவர் தயாரித்த புத்தகம் நீள அகலத்தில் 5 x 4.5 செ.மீ ஆக இருந்த போதிலும், இதன் தடிமன் சுமார் 2.75 மீட்டர்.
Q10. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த புத்தகம் எது?
“The Gospel Book of Henry The Lion” என்ற புத்தகம், 226 ஓலைச்சுவடிகளைக் கொண்டதாக இருந்தது. இது 8.14 மில்லியன் பவுண்டு விலைக்கு விற்கப்பட்டது.
Q11. உலகிலேயே மிகவும் பழமையான புத்தகம் என மக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டது எது?
1600 வருட பழமையான “Coptic Psalter”, 490 பக்கம் கொண்ட ""சங்கீதங்கள்"" (பைபிளின் ஒரு பகுதி) புத்தகம், 1984ல் ஒரு 12 வயது பெண்ணின் கல்லறையிலிருந்து, கெய்ரோ நகரில், எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புத்தகம் 17 க்கு 13 செ.மீ அளவில் இருந்தது. இதை அந்த பெண்ணின் தலைக்குக் கீழே ஒரு தலையணை போல் வைத்திருந்தனர்.
Q12. ஒரு புத்தகத்துக்கு அதிகமான முன் பணம் பெற்ற எழுத்தாளர் யார்?
விக்ரம் சேத் -- அவருடைய புத்தகம் “A suitable Boy” , இங்கிலாந்தின் Phoenix House என்ற நிறுவனம் 2,50,000 பவுண்டும், அமெரிக்க நிறுவனம் Harper Collins 6,00,000 லட்சம் டாலர்களும் முன் பணமாக கொடுத்து விற்பனை உரிமைப் பெற்றனர்.
Q13. மருத்துவத்தின் மிகப் பழமையான புத்தகம் எது?
அதர்வண வேதம் -- கி.மு.1000 -- மருத்துவ முறைகளை விவரிக்கும் ஒரு புராண காலத்து இந்திய புத்தகம்.
Q14. சீனாவின் மருத்துவத்தில் பழமையான புத்தகம் எது?
Huangdi Neiching – கி.மு. 450
Q15. இந்த புத்தகத்தை, தேச துரோகத்தைத் தூண்டும் புத்தகம் என ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். இந்த புத்தகத்திலிருந்து தான் வந்தே மாதரம் பாடல் எடுக்கப் பட்டது. அது எது?
"ஆனந்த மடம்" "Anand Math" -- பங்கிம் சந்த்ர சட்டர்ஜி எழுதியது.
Q16. அரசியல், அரசாங்கம் ஆகியவைப் பற்றிய மிகப் பழமையான மற்றும் சிறந்த புத்தகம் எனக் கருதப்படும் புத்தகம் எது?
கௌடில்யர்/சாணக்யர் எழுதிய "அர்த்த சாஸ்திரம்" .
Q17. அக்பரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் எது?
அயினி அக்பரி -- அபும் ஃபஸல் அவர்களால் எழுதப்பட்டது.
Q18. ரவீந்திர நாத் தாகூர் எந்த புத்தகத்துக்காக நோபல் இலக்கிய பரிசு பெற்றார்?
கீதாஞ்சலி -- கவிதைத் தொகுப்பு புத்தகம் -- 1913ல் இந்த விருதைப் பெற்றார்.
Q19. புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் ன் எந்த புத்தகத்துக்கு, சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. பிறகு ஒரு திரைப்படமாகவும், தேவ் ஆனந்த் அவர்களால் தயாரிக்கப்பட்டது?
கைட் -- Guide == வழிகாட்டி எனப் பொருள்.
Q20. சல்மான் ருஷ்டி என்பவரின் எந்த புத்தகம், இஸ்லாமியர்களிடையே ஒரு பெருத்த எதிர்ப்பையும், அவருக்கு கொலை மிரட்டல்களும் வர காரணமாயிற்று?
"Satanic Verses". 1989ல் இந்திய அரசாங்கமும் இந்த புத்தகத்தை தடை செய்தது.
Q21. “India Wins Freedom” என்ற புத்தகம் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்களின் சுயசரிதம். இதன் சிறப்பு என்ன?
ஆங்கில மொழி பெயர்ப்பு செய்தவர் ஹூமாயூன் கபீர். ஆஸாத் அவர்கள் இந்த புத்தகத்தின் குறிப்பிட்ட 30 பக்கங்களை, இந்தியா சுதந்திரம் பெற்று 40 ஆண்டுகளுக்குப் பிறகே வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதின் பேரில், அது நிறுத்தப்பட்டு, ஒரு உறையினுள் வைத்து அடைக்கப்பட்டு, கொல்கத்தா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. 1989ல் இந்த புத்தகத்தை முன்பு வெளியிட்டவர்கள், இந்திய உச்ச நீதிமன்றத்தை அணுகி, அதன் அனுமதி பெற்று, பிற்கால பிரதிகளில் அந்த பகுதியை சேர்க்கத் தொடங்கினர்.
Q22. சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய புகழ்பெற்ற நாவல், ""இரண்டு நகரங்களின் கதை"" “Tale of Two Cities” என்ற நாவலின் மைய பின்னணி என்ன?
ஃப்ரெஞ்ச் புரட்சி.
Q23. காந்திஜியின் சுயசரிதை புத்தகத்தின் பெயர் என்ன?
"உண்மையுடன் எனது அனுபவம்" -- My Experiments with Truth.
Q24. “Dr. Zhivago” என்ற புத்தகத்திற்காக Boris Pasternak என்ற ரஷ்ய எழுத்தாளர் நோபல் பரிசு நோபல் இலக்கியப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் அதைப் பெறுவதற்கு மறுத்துவிட்டார். காரணம் என்ன?
இந்த புத்தகம் ரஷ்ய நாட்டில் நிலவிய கம்யூனிச பின்னணியில் எழுதப்பட்டிருந்தது. ஆகவே, ரஷ்ய அரசாங்கம் கொடுத்த அழுத்தத்தின் பின்னணியில், அவர் இந்த விருதை நிராகரித்தார்.
Q25. தத்துவ மேதை ப்ளாட்டோ வின் ""The Republic” என்ற புத்தகத்தில், இவருக்கும் சாக்ரட்டீஸூக்கும் இடையில் ஒரு விவாதம் நடக்கிறது. அது எதைப்பற்றி?
நீதி என்பது என்ன? What is Justice? என்ற தலைப்பின் மீது.
Q26. வங்காளதேச எழுத்தாளர் ஒருவர், ஒரு புத்தகம் அவருடைய நாட்டிலேயே பெரிய சர்ச்சைக்குள்ளாகி நாட்டை விட்டே வெளியேறும்படியாயிற்று. அது என்ன புத்தகம், அவர் பெயர் என்ன?
தஸ்லீமா நஸ்ரீன் -- அவர் புத்தகத்தின் பெயர் -- "லஜ்ஜா".
Q27. பாரதீய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய தலைவராக இருந்த ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் பெரும் சர்ச்சைக்குள்ளானது? அது என்ன?
ஜின்னா -- இந்தியா -- பிரிவினை -- சுதந்திரம். Jinnah-India-Partition-Independence.
Q28. ஜெர்மனியின் நாசித் தலைவர் ஹிட்லர் அவர்களின் சுயசரிதையின் பெயர் என்ன?
"மெய்ன் காம்ஃப்" -- Mein Kampf.
Q29. புத்தகங்களை விரும்புபவர்கள் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
Bibliophile. சாதாரண பேச்சு வார்த்தையில் Bookworm புத்தகப்புழு எனப்படுவர்.
Q30. காகிதக் கண்டுபிடிப்பிற்கு முன் எதன் மூலம் எழுத்து ஆதாரங்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டன?
Papyrus – பாப்பிரஸ் (காகித நாணல், ஓலை) செடி கொடிகளின் நார்க்கழிவிலிருந்து செய்யப் பட்ட ஒரு பொருள்.
Q31. "சுருள்" Scroll என்பது என்ன?
பாப்பிரஸ் தாள்களை ஒன்றன் மீது ஒன்றாக தொடராக ஒட்டி நீண்ட சுருளாக தயாரித்து எழுதுவதற்கு பயன்படுத்துவது.
Q32. இயந்திர அச்சுக்கு முன், எவ்வகை அச்சு முறை பயன்படுத்தப்பட்டது?
கட்டை அச்சுகள் -- Wood Blocks: கட்டைகளில், எழுத்துகளையோ, வடிவங்களையோ செதுக்கி அச்சாகப் பயன் படுத்தும் முறை. இவ்வகையில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகம், ""Diamond Sutra"" என்ற சீன புத்தகம். கி.பி.868ல் சீனாவின் டாங் வம்ச ஆட்சியின் போது தயாரிக்கப்பட்ட புத்தகம்.
Q33. புத்தகங்கள் வெளியிடுவதின் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய முறைகள் எவை?
HARD COVER : கடினமான மேலட்டை கொண்டது. இதனால் புத்தகங்களின் வாழ்நாள் அதிகம் ஆகிறது. இதற்குத் தரமான காகிதங்களும் பயன்படுத்தப்படுகிறது.
PAPER BACK : சாதாரண காகித அட்டைக் கொண்டவை. இவ்வகைப் புத்தகங்களில் தரக் குறைவான காகிதங்கள் அச்சுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அதனால் இவ்வகைப் புத்தகங்கள் வாழ்நாள் மிகக் குறைவு.
Q34. இலக்கியத்தொழிலில் மிக உயரிய விருது என்ன?
நோபல் இலக்கியப் பரிசு. (உதிரித் தகவல்கள் அத்தியாயத்தின் விருதுகள் பகுதியில் விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது)
Q35. இலக்கிய தொழிலுக்கு இந்தியாவின் உயரிய விருது என்ன?
ஞான பீட விருது -- JNANPITH: சாஹூ ஜெயின் குடும்பத்தினர் ஆதரவில் வழங்கப்படும் இந்த விருது, 1961லிருந்து, 7 லட்சம் ரொக்கப்பரிசு, ஒரு சான்றிதழ், ""வாக்தேவி"" (சரஸ்வதி) யின் வெண்கல சிலையும் பரிசாக வழங்கப்படுகிறது. (உதிரித் தகவல்கள் அத்தியாயத்தின் விருதுகள் பகுதியில் விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது)
Q36. ஞானபீட விருதை வென்ற முதல் எழுத்தாளர் யார்?
சங்கர குருப் -- கேரளா -- 1965 -- புத்தகத்தின் பெயர் -- "ஓடக்குழல்" .
Q37. இலக்கியத்துக்காக இந்தியாவில் வழங்கப்படும் இரண்டாவது பெரிய விருது என்ன?
சாகித்ய அகாடமி விருது -- 1954 முதல் வழங்கப்படுகிறது. (உதிரித் தகவல்கள் அத்தியாயத்தின் விருதுகள் பகுதியில் விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது)
Q38. இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியர் யார்?
ரவீந்திரநாத் தாகூர் -- 1913. Rabindranath Tagore – 1913.
Q39. சாகித்ய அகாடமி விருது, இந்திய மொழிகளில் எழுதப்படும் புத்தகங்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு, இந்த விருதை மொழி வாரியாக முதலில் பெற்ற எழுத்தாளர்களும், புத்தகங்களும் யாவை?
வருடம் மொழி புத்தகம் எழுத்தாளர்
1955 அஸ்ஸாம் பனா ஃபூல் ஜதீந்திரா தௌவேரா.
1955 பெங்காலி ஷ்ரேஷ்தா கவிதா ஜீபானந்த தாஸ்
1970 டோக்ரி நிலே அம்பர் காலா ஃபூல் நரேந்திர கஜூரியா
1960 ஆங்கிலம் தி கைட் The Guide ஆர்.கே.நாராயண்
1955 குஜராத்தி மகாதேவ் பாய் டைரி மகாதேவ் தேசாய்
1955 இந்தி ஹீம் தரங்கிணி மக்கன்லால் சதுர்வேதி
1955 கன்னடம் ஸ்ரீ ராமாயணா தர்ஷணம் குவெம்பூ
1977 கொங்கணி இமாலயந்த் ரவீந்திர கேலேகர்.
1955 மலையாளம் பாஷ சாகித்ய சரித்ரம் ஆர். நாராயண பணிக்கர்.
1973 மணிப்பூரி பச்ச மீட்டி நங்ஷிகி இம்ஃபால் அமசங் மகி. Manipuri ஃபிலாம் இஷிங்
1955 மராத்தி வைதிக் சன்ஸ்க்ருதிச விகாஸ் லக்ஷ்மண் சாஸ்திரி ஜோஷி.
1977 நேபாளி நேபாளி உபன்யாஸ் கா இந்திரா பகதூர் ராய் ஆதார்ஹரு
1957 ஒரியா திலீப் உபேந்திர மோஹந்தி.
1974 ராஜஸ்தானி பதன் ரி ஃபுல்வாரி விஜயதான் தேத்தா.
1956 சமஸ்கிருதம் தர்ம சாஸ்திர வரலாறு பி.வி.கானே.
1955 தமிழ் தமிழ் இன்பம் ரா.பி.சேதுப்பிள்ளை.
1955 தெலுங்கு ஆந்த்ருலு சங்கிகே சரிதமு சுரவரம் ப்ரதாப் ரெட்டி
1955 உருது மால் அவுர் மஷியத் ஸாஃபர் ஹூசைன் கான்.
Q40. உலகின் நீளமான கலைக்களஞ்சியம் Encyclopaedia எது
Yongle Dadian – சீனக் கலைக்களஞ்சியம் -- 1403-1408 காலத்தில் மிங் வம்ச ஆட்சியின் போது தொகுக்கப்பட்டது. 11095 தொகுப்புகள், 22877 அத்தியாயங்கள்.
Q41. இங்கிலாந்து நாட்டின் மிகப் புகழ்பெற்ற நாவலாசிரியர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர். அவர் யார்?
ஜெஃப்ரி ஆர்ச்சர்.
Q42. லியோ டால்ஸ்டாய் எழுதிய ""போரும் அமைதியும்"" “War and Peace” புத்தகம் இன்றும் புகழ் பெற்ற புத்தகம். அந்த புத்தகத்தின் பின்னணி என்ன?
நெப்போலியனின் தாக்குதல்களுக்கு எதிரில் ரஷ்யனின் வாழ்வு.
Q43. அமெரிக்க எழுத்தாளர் இர்விங் ஸ்டோன் எழுதிய “Agony & Ecstacy” என்ற புகழ் பெற்ற புத்தகம் யாரைப் பற்றியது?
மிக்கெலாஞ்சேலோ -- Michaelangelo -- 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய ஓவியர், சிற்பி, எழுத்தாளர், வடிவமைப்பாளர், கவிஞர் என பல துறைகளில் வல்லுநர்.
Q44. ஒரே ஒரு ஆங்கில எழுத்த ஒரு புத்தகம் புக்கர் விருது பெற்றது. அது எது?
“G” எழுதியவர் ஜான் பெர்ஜர் -- John Berger – 1952.
Q45. இந்தியாவின் எந்த மொழியில் முதல் பேசும் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது?
தெலுங்கு -- இது ஒரு மருத்துவ சிகிச்சை முறையைப் “Clinical Trial Participation” பற்றிய புத்தகம். இதில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால், புத்தகத்திலுள்ள வாசகங்கள் ஒலி வடிவில் கேட்க முடியும். இதை உலக மருத்துவ கழகமும், ஹைதராபாத் நிஸாம் மருத்துவ கல்லூரி மற்று ஃபைஸர் இந்தியா லிமிடெட் என்ற மருத்துவ நிறுவனமும் சேர்ந்து வெளியிட்டது.
Q46. எந்த நாட்டு மக்கள் சராசரியாக அதிக புத்தகம் படிக்கிறார்கள்?
ஐஸ்லாந்து. Iceland.
Q47. ஷேக்ஸ்பியரின் மிகச் சிறிய நாடக எழுத்து வடிவம் play எது?
"The Comedy of Errors".
Q48. அருந்ததி ராய் இந்தியாவின் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எந்த புத்தகத்திற்காக புக்கர் விருது Booker Prize பெற்றார்?
"The God of Small Things".
Q49. புத்தகங்கள் வெளியிடுவதில், உலகளவில் இந்தியாவின் நிலை என்ன?
பத்தாவது நிலை. (சீனா முதல் இடத்தில் உள்ளது)
Q50. எந்த புத்தகத்தில், சீன தலைவர் மா சே துங் ன் மேற்கோள்கள் கொடுக்கப் பட்டுள்ளன?
Little Red Book -- சிறிய செவ்வண்ணப் புத்தகம்.
Q51. லியோ டால்ஸ்டாயின் ""போரும் அமைதியும்"" புத்தகத்தின் அசல் தலைப்புப் பெயர் என்னவாக இருந்தது?
All Is Well That Ends Well
Q52. "கருப்பு புத்தகம்" Black Book என்பது என்ன?
தண்டனைக்குரியவர்களின் பெயர்கள் அடங்கிய புத்தகம்.
Q53. சல்மான் ருஷ்டி ன் “Satanic Verses” புத்தகத்தை முதன் முதலில் தடை செய்த நாடு எது?
இந்தியா.
Q54. எந்த புத்தகம், DDT என்ற வேதிப்பொருளின் பயன்பாட்டுக்கு எதிராக ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பியது?
“Silent Spring” எழுதியவர் ரேச்சல் கார்ஸன் -- அமெரிக்கா.
Q55. இந்திய அரசாங்கத்தின் "மஞ்சள்" மற்றும் "பச்சை" புத்தகங்கள் என்பது என்ன?
பிரபலங்களுக்கு எவ்வகையான பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்பதை குறிப்பவை.
Q56. எர்னஸ்ட் வின்செண்ட் ரைட் என்பவரின் “Gatsby” என்ற புத்தகத்தின் சிறப்பு என்ன?
இதன் 300 பக்கங்களில், எங்குமே ஆங்கில எழுத்து ‘e’ பயன்படுத்தப்படவில்லை. இந்த சாதனைக்குப் பின்னால் ஒரு துயரமும் அடங்கியுள்ளது. இந்த புத்தகம் வெளியிடப்பட்ட நாளில் இந்த எழுத்தாளர் மரணத்தை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Q57. ஒரு எழுத்தாளர், தனது விருப்பப்படி, ஏதாவது ஒரு/அல்லது சில, ஆங்கில எழுத்துக்கள் வராதவாறு எழுதுவது ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப் படுகிறது?
lipogram.
Q58. உலகின் சில புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மறைவு நினைவு நாள், ""உலக புத்தக நாள்"" ஆக அனுசரிக்கப்படுகிறது. தேதி என்ன, அவர்கள் யார்?
ஏப்ரல் 23 . வில்லியம் ஷேக்ஸ்பியர், Miguel de Cervanter, மற்றும் Garcilaso de la Vega.
Q59. தாதாபாய் நௌரோஜி எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?
"Un British Rule in India" .
Q60. இணையதளம் மூலமாக வெளியிடப்பட்ட முதல் புத்தகம் எது?
"Riding the Bullet" எழுதியவர் Stephen King , அமெரிக்கா.
Q61. "" இலக்கியத்தின் லிங்கன்"" “Lincoln of Literature” என்று அழைக்கப்படும் பிரபல எழுத்தாளர் யார்?
மார்க் ட்வைன் -- Mark Twain -- அமெரிக்க எழுத்தாளர். இயற் பெயர் சாமுவே லாங்ஹார்ன் க்ளெமென்ஸ்.
Q62. ""சத்திய சோதனை"" “My Experiments with Truth” (உண்மையுடன் எனது அனுபவம்) என்ற காந்திஜியின் வாழ்க்கை வரலாறு முதலில் எந்த மொழியில் எழுதப் பட்டது?
குஜராத்தி -- மகாதேவ் தேசாய், காந்திஜியின் காரியதரிசி இதை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தார்.
Q63. “We the People” என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவர்?
N.A. பால்கிவாலா -- Palkiwala -- சட்ட மற்றும் பொருளாதார நிபுணர்.
Q64. உலகின் முதல் நாவல் எது?
"Tale of Genji" என்ற ஜப்பானிய மொழி நாவல்.
Q65. இந்தியாவில், ஒரு நாவலை, சித்திர நகைச்சுவை comic பாணியில் எழுதப்பட்ட முதல் நாவல் எது?
“Corridor” -- சரத் பானர்ஜி என்பவரால் எழுதப்பட்டது. இந்த நாவலின் நாயகனாக சித்தரிக்கப் படுபவர் ஜெஹாங்கீர் ரங்கூன்வாலா.
Q66. உலகப் புகழ் பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் சோமர்செட் மாம் Somerset Maugham எழுதிய முதல் புத்தகம் எது?
Liza of Lambeth.
Q67. “Cat and Shakespeare” என்ற புத்தகம் எந்த நகரத்தை மையமாகக் கொண்டு எழுதப் பட்டுள்ளது?
திருவனந்தபுரம், கேரளா.
Q68. “Broken Wings” (சிதைந்த சிறகுகள்) என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது?
சரோஜினி நாயுடு.
Q69. “In Search of Gandhi” (காந்தியைத் தேடுகிறேன்) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
சர். ரிச்சர்ட் ஆட்டென்பரோ. -- Sir Richard Attenborough, ஆங்கிலேய எழுத்தாளர், நடிகர், இயக்குநர்.
Q70. “Les Miserables” என்ற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
விக்டர் ஹ்யூகோ -- Victor Hugo -- ஃப்ரெஞ்ச் எழுத்தாளர், கவிஞர்.
Q71. “Legacy of Ashes” -- எழுதியவர் Tim Weiner அமெரிக்கா. இவர் எழுதிய இந்த புத்தகம் எந்த புகழ்பெற்ற அமைப்பின் தவறுகளையும், தோல்விகளையும் சுட்டிக் காட்டி எழுதப்பட்டுள்ளது?
CIA’ -- Central Intelligence Agency -- அமெரிக்காவின் உலகப் புகழ் பெற்ற புலனாய்வு நிறுவனம்.
Q72. உலகின் சில நாடுகள், தங்கள் அரசாங்க பணிகளையும், முக்கிய நிகழ்வுகளையும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தில் வெளியிடும் பழக்கம் உள்ளது. அவ்வாறு சில நாடுகளின் புத்தகங்களை குறிப்பிடுக.
1. நீலப் புத்தகம் -- Blue Book – ப்ரிட்டிஷ் அரசாங்கத்தின் அலுவல் அறிக்கை புத்தகம்.
2. பச்சை புத்தகம் -- Green Book – இத்தாலி மற்றும் இரானின் அலுவல் அறிக்கை புத்தகம்.
3. சாம்பல் நிறப் புத்தகம் -- Grey Book – ஜப்பான் மற்றும் பெல்ஜியம் நாட்டு அலுவல் அறிக்கைப் புத்தகம்.
4. இளஞ்சிவப்பு புத்தகம் -- Orange Book – நெதர்லாந்து நாட்டு அலுவல் அறிக்கைப் புத்தகம்.
5. வெள்ளைப் புத்தகம் -- White Book – ஜெர்மனி, போர்ச்சுகல் மற்றும் சீனா நாட்டு அலுவல் அறிக்கைப் புத்தகம்.
6. மஞ்சள் புத்தகம் -- Yellow Book – ஃப்ரெஞ்ச் நாட்டு அலுவல் அறிக்கைப் புத்தகம்.

நூலகங்களும் ஆவணக் காப்பகங்களும் -- LIBRARIES & ARCHIVES

Q73. நூலகம் என்பது என்ன? அதைச் சார்ந்த கல்வியின் பெயர் என்ன?
புத்தகங்களை, பலதரப்பட்ட தலைப்புகளில் சேகரிக்கப்பட்டு, அட்டவணைப்படுத்தி, ஒரு காப்பகத்தில் வாசகர்கள் படிக்கும் வசதியுடன் வைப்பதே நூலகம் என அழைக்கப்படுகிறது. புத்தகங்களை அட்டவணைப்படுத்துவது ஒரு கலையாக கருதப்பட்டு, அதற்கான முறையை தொகுத்து படிப்பதே ""நூலக அறிவியல்"" “Library Science” என அழைக்கப்படுகிறது. இதில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் வரை படிப்பதற்கு வாய்ப்புண்டு.
Q74. உலகின் புகழ் பெற்ற நூலகங்கள் சிலவற்றைக் கூறுக.
1. நியூயார்க் பொது நூலகம் -- NEW YORK PUBLIC LIBRARY : நியூயார்க், அமெரிக்கா -- 1895 -- சுமார் 650 ஊழியர்களைக் கொண்டது -- உலகின் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்று.
2. ரஷ்ய தேசிய நூலகம் -- RUSSIAN NATIONAL LIBRARY : செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா -- 1795 -- ரஷ்யாவின் பழமையான நூலகம்.
3. ப்ரிட்டிஷ் நூலகம் -- BRITISH LIBRARY : லண்டன் -- London – ஆராய்ச்சிக்கு மிக உதவும் உலக நூலகங்களுள் இது முக்கியமானது. தற்போதைய பெயரில் 1972 ல் நிறுவப்பட்டது. அதற்கு முன்பாக அருங்காட்சியகத்துடன் இணைந்திருந்தது.
4. தேசிய நூலகம் -- NATIONAL LIBRARY : பாரீஸ், ஃப்ரான்ஸ் -- 1368ல் மன்னர் சார்லஸ் 5 ஆல் நிறுவப்பட்டது.
5. காங்கிரஸ் நூலகம் -- THE LIBRARY OF CONGRESS: வாஷிங்டன், அமெரிக்கா -- 1800 -- உலகிலேயே மிகப்பெரிய நூலகம். தாமஸ் ஜெஃபர்சன், ஜான் ஆடம்ஸ் மற்றும் ஜேம்ஸ் மாடிசன் என்பவர்களில் பெயர்களால அழைக்கப்படும் மூன்று பெரிய கட்டிடங்களில் பரவியுள்ள இந்த நூலகத்தில் சுமார் 6 கோடி புத்தகங்களை உள்ளடிக்கியது.
6. ஆம்ப்ரோசியன் நூலகம் -- AMBROSIAN LIBRARY: 1609 -- மிலன், ஃப்ரான்ஸ்.
7. பாஸ்டன் பொது நூலகம் -- BOSTON PUBLIC LIBRARY: பாஸ்டன், அமெரிக்கா -- 1826.
8. போட்லியென் நூலகம் -- BODLEIAN LIBRARY: ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், லண்டன், -- 1602.
9. ப்ரிட்டிஷ் நூலகம் - பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் -- BRITISH LIBRARY OF லண்டன் -- 1896.
10. பட்லர் நூலகம் -- BUTLER LIBRARY : கொலம்பியா பல்கலைக்கழகம், அமெரிக்கா -- 1934. 11. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகம் -- கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து -- 1931.
12. கார்னெகி நூலகம் -- CARNEGIE LIBRARY: பிட்ஸ்பர்க், அமெரிக்கா -- 1895.
13. டச் ராயல் நூலகம் -- DUTCH ROYAL LIBRARY : தெ ஹேக், நெதர்லாந்து -- 1798.
14. ஃபைர்ஸ்டோன் நூலகம் -- FIRESTONE LIBRARY: ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகம், அமெரிக்கா -- 1948.
15. ஃபிஷர் நூலகம் -- FISHER LIBRARY: சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா -- 1908.
16. கேரிசன் நூலகம் -- GARRISON LIBRARY: ஜிப்ரால்டர் -- 1793
17. ஹேரால்ட் நூலகம் -- HAROLD B LIBRARY: ப்ரிகாம் யங் பல்கலைக்கழகம், அமெரிக்கா -- 1924.
18. ஃப்ரீ நூலகம் -- FREE LIBRARY: ஃபிலடெல்ஃபியா, அமெரிக்கா -- 1891.
19. ஹவுஸ் ஆஃப் காம்மன்ஸ் நூலகம் -- HOUSE OF COMMONS LIBRARY: லண்டன் -- 1818.
20. ஜெங்கின்ஸ் லேன் நூலகம் -- JENKINS LAN LIBRARY: ஃபிலடெல்ஃபியா, அமெரிக்கா -- 1802.
21. ஜூயிஷ் தேசிய மற்றும் பல்கலைக்கழக நூலகம் -- JEWISH NATIONAL AND UNIVERSITY ஜெருசலேம், இஸ்ரேல் -- 1892.
22. ஜான் ரெய்லாண்ட்ஸ் நூலகம் -- JOHN RYLANDS LIBRARY: மாஞ்செஸ்டர், இங்கிலாந்து -- 1972.
23. லெய்டென் பல்கலைக்கழக நூலகம் -- LEIDEN UNIVERSITY LIBRARY: நெதர்லாந்து - 1587.
24. மிச்செல் நூலகம் -- MITCHELL LIBRARY : லண்டன் -- ஐரோப்பாவின் பெரிய நூலகம்.
25. தேசிய நூலகம் -- NATIONAL LIBRARY : கேன்பெரா -- ஆஸ்திரேலியா.
26. தேசிய நூலகம் -- NATIONAL LIBRARY: அயர்லாந்து.
27. ஓஸ்லர் மருத்துவ நூலகம் -- OSLER LIBRARY OF THE HISTORY OF MEDICINE: கேனடா.
28. கோந்திஷாபூர் நூலகம் -- LIBRARY OF GONDISHARPUR : இரான். கி.பி.489ல் நிறுவப்பட்டது.
29. தேசிய நூலகம் -- NATIONAL LIBRARY OF IRAN : தெஹ்ரான், இரான் -- 1937.
30. ரஷ்யா மாநில நூலகம் -- RUSSIAN STATE LIBRARY : மாஸ்கோ, 1862.
31. ராயல் நூலகம் -- ROYAL LIBRARY: கோப்பென் ஹாகென், டென்மார்க் -- 1793.
32. வத்திகான் நகர நூலகம் -- VATICAN CITY LIBRARY: வத்திகான், ரோம் -- 1448.
33. ஸ்டாட்ஸ்பிப்லியோதெக் -- STATSBIBLIOTHEK: பெர்லின், ஜெர்மனி.
34. மாநில நூலகம் -- STATE LIBRARY: விக்டோரியா, மெல்போர்ன் -- ஆஸ்திரேலியா.
35. கிச்செனர் பொது நூலகம் -- KICHENER PUBLIC LIBRARY: ஆண்டாரியோ, கேனடா - 1884.
Q75. இந்தியாவின் புகழ்பெற்ற நூலகங்கள் யாவை?
1) கன்னிமாரா நூலகம் -- CONNEMARA LIBRARY: சென்னை -- 1890 -- Chennai – இதன் அடிக்கல் நாட்டியவர் கன்னிமாரா பிரபு. இந்தியாவில் வெளிவரும் அனைத்து நாளிதழ், வார/மாத இதழ்கள், ஐ.நா. சபையின் அனைத்து தகவல்களும் இங்கு வருகின்றன. இங்கு ஒரு கண் பார்வையற்றோருக்கான ""ப்ரெய்லி"" நூலகமும் உள்ளது. மத்திய தேர்வாணையம் நடத்தும் நிர்வாக தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் மையமும் உள்ளது.
2) வட வங்காள மாகாண நூலகம் -- NORTH BENGAL STATE LIBRARY: கூச் பீஹார், மேற்கு வங்காளம். -- 1870.
3) அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் -- ANNA CENTENARY LIBRARY -- சென்னை -- 2010.
4) அடையாறு நூலக ஆராய்ச்சி மையம் -- ADYAR LIBRARY RESEARCH CENTRE : சென்னை -- 1886 -- சென்னை அடையாறு தியோசாஃபிகல் சொஸைட்டி வளாகத்தில் இயங்குகிறது. Chennai – 1886 – founded by Henzy Steel Olcott, a theosophist. Functions in the theosophical society, Adyar,Chennai.
5) ஆசியாடிக் சொஸைட்டி நூலகம் -- ASIATIC SOCIETY LIBRARY: மும்பை -- 1804 -- சர் ஜேம்ஸ் மெக்கிண்டோஷ் என்பவரால் துவங்கப்பட்டது.
6) தனஞ்செய் ராவ் காட்கில் நூலகம் -- DHANANJAY RAO GADGIL LIBRARY – 1905 – பூனே.
7) ஹஸரத் பீர் முகமது ஷா நூலகம் -- HAZRAT PIR MOHAMMAD SHAH LIBRARY: அஹமதாபாத்-- குஜராத் -- 1905.
8) ஓரியண்டல் ஆராய்ச்சி நூலகம் -- ORIENTAL RESEARCH INSTITUTE AND MANUSCRIPTS LIBRARY: திருவனந்தபுரம், கேரளா -- இந்திய வரலாற்றுக்கு ஒரு முக்கியமான தகவல் நூலகம். உலகப் புகழ்பெற்ற நூலகம்.
9) பி.கே. கேல்கர் நூலகம் -- P.K.KELKAR LIBRARY: கான்பூர், உத்திரபிரதேசம்.
10) மாநில மத்திய நூலகம் -- STATE CENTRAL LIBRARY: திருவனந்தபுரம், கேரளா -- 1829 -- ஸ்வாதி திருநாள் மகாராஜா அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட இந்தியாவின் முதல் பொது நூலகம்.
11) தேசிய நூலகம் -- கொல்கத்தா -- 1903 -- இந்தியாவின் மிகப்பெரிய நூலகம். 1953 முதல் தேசிய நூலக அந்தஸ்துப் பெற்றது.
Q76. உலகின் மிகப்பெரிய நூலகம் எது?
காங்கிரஸ் நூலகம், வாஷிங்டன் -- The Library of Congress – Washington.
Q77. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எது?
தேசிய நூலகம், கொல்கத்தா.
Q78. இந்திய கலாச்சார, வரலாற்று கல்வி ஆய்வுக்கு, முக்கிய குறிப்புகளுக்கு ஆதார நூலகமாக கருதப்படுவது எது?
ஓரியண்டல் ஆராய்ச்சி மையம் மற்றும் கையெழுத்து பிரதிகள் நூலகம், திருவனந்தபுரம், கேரளா.
Q79. உலகின் பழமையான முதல் பத்து நூலகங்களை எடுத்துக் கூறுக:
1. கோண்டிஷார்பூர் நூலகம், இரான் -- கி.பி.489 .
2. தேசிய நூலகம் -- பாரீஸ், ஃப்ரான்ஸ் -- கி.பி.1368.
3. வத்திகான் நகர நூலகம் -- ரோம் -- கி.பி.1448.
4. லெய்டென் பல்கலைக்கழக நூலகம், நெதர்லாந்து -- 1587.
5. போட்லியன் நூலகம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், லண்டன் -- 1602.
6. ஆம்ப்ரோசியன் நூலகம் -- மிலன், ஃப்ரான்ஸ் -- 1609.
7. கேரிசன் நூலகம், ஜிப்ரால்டர் -- 1793.
8. ராயல் நூலகம், கோப்பென்ஹாகென், டென்மார்க் -- 1793
9. ரஷ்யன் தேசிய நூலகம், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா -- 1795.
10. டச் ராயல் நூலகம், தி ஹேக், நெதர்லாந்து -- 1798.
Q80. காப்பகம் -- Archive என்பது என்ன?
இதுவும் ஒரு வகை நூலகம். ஆனால், இங்கு, அரசாங்கத்தின் பழம்பெரும் முக்கிய ஆவணங்களிலிருந்து இன்றைய நிலை வரையுள்ள முக்கிய ஆவணங்களைப் பாதுகாத்து வைப்பதே இதன் தொழில். இவை பொதுவாக, அரசியல், மற்றும் நிர்வாகம் சார்ந்த ஆவணங்களாகவே இருக்கும்.
Q81. இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகம் எங்குள்ளது?
டெல்லியில் உள்ளது. 1926 முதல் இயங்கி வருகிறது. அசலில், இது 1891ல் கொல்கத்தாவில் இம்பீரியல் ஆவணக் காப்பமாகத் தொடங்கியது. இதன் மண்டல அலுவலகங்கள் போபால், புவனேஸ்வர், ஜெய்ப்பூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இயங்குகிறது. இந்த மையங்களில் கி.பி.1748 முதல் ஆவணங்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன
Q82. "நூலகத் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?
காலிமாக்கஸ் -- Callimachus: கிரேக்க கவிஞர் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா நூலகக் காப்பாளர்.