Khub.info Learn TNPSC exam and online pratice

பொது கேள்விகள் -- GENERAL QUESTIONS:

Q1. நுண்கல் உபகரணங்கள் எந்த காலத்தினுடையது?
இடைக்கற்காலம் -- Mesolithic Age.

Q2. கற்காலத்தின் முக்கிய உபகரணங்கள் யாவை?
கைக்கோடாளி, வெட்டுக்கத்தி, செதுக்கு உளி போன்றவை.
Q3. மண் பாண்டங்கள் தயாரிப்பு எந்த காலத்தில் அறிமுகமாயிற்று?
கற்காலத்தின் பின் பகுதி.
Q4. கற்காலங்களில் ஒரு வயதான Paleolithic காலத்து ஆதாரங்கள் எங்கு கிடைத்தன?
தித்வானா - ராஜஸ்தான்; உத்தரபைனி -- ஜம்மு; ரிவாத் -- பஞ்சாப் (பாகிஸ்தான்)
Q5. செம்பு காலத்து, மால்வா கலாச்சாரத்தின் மூலம், யாக மேடைகள் (fire altars), காளைத் தொழுகை, லிங்க வழிபாடு ஆகியவற்றின் ஆதாரங்கள் கிடைத்த இடங்கள் யாவை?
தங்வாடா -- Dhangwada.
Q6. மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரம் தென்இந்தியாவில் முதலில் எங்கு கிடைத்தது?
நீலகிரி, தமிழ்நாடு.
Q7. எந்த இடத்தில், Paleolithic, Mesolithic and Neolithic கலாச்சார காலத்துக்கான தொடர்ச்சியான ஆதாரங்கள் கிடைத்தன?
பேலன் பள்ளத்தாக்கு, உத்திரபிரதேசம்.
Q8. ஆசிய துணைகண்டத்தில் நிலைப்பட்ட விவசாயம் நடந்ததற்கான ஆதாரங்கள் எங்கு கிடைத்துள்ளன?
மெஹர்கார் -- தற்சமயம் பலுச்சிஸ்தான், பாகிஸ்தானில் உள்ளது.
Q9. அருமையான குகைச் சித்திரங்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன?
பிம்பேட்கா, ரெய்சன் மாவட்டம், மத்தியபிரதேசம்.
Q10. காவி வண்ண (சுடுமண் வண்ணம்) மண்பாண்டங்கள் கலாச்சாரம் முக்கியமாக எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
மேற்கு உத்தியபிரதேசம்.
Q11. தெற்கு இந்தியாவின் பெருங்கல் நினைவுச்சின்னங்கள் எந்த காலத்தை சார்ந்தது?
இரும்புக்காலம்.
Q12. துளை போடும் நுண்கல் கருவி எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஆவ்ல் -- Awl.
Q13. ஹரப்பா கலாச்சார ஆதாரங்களின் முன்னோடி எது?
மெஹர்கரில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் முத்திரைகள்
Q14. எந்த சிந்து சமவெளி ஆராய்ச்சி இடத்தில், தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிறு நகரங்களை கண்டுபிடித்தனர்?
தோளவீரா -- கச், குஜராத்.
Q15. ஹராப்பா ஆராய்ச்சி மையங்கள் அதிகமாக உள்ள பகுதிகள் எங்குள்ளது?
சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் சமவெளிகளில் அடங்கியுள்ளன.
Q16. எந்த சிந்து சமவெளி நாகரீக நகரத்தில் அதன் கோட்டை மற்றும் சிறு நகரத்தை சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டிருந்தன?
லோதல், குஜராத். காளி பங்கான், ராஜஸ்தான்.
Q17. எந்த ஹராப்பா ஆராய்ச்சி இடத்தில் கற்கோட்டையும், அதன் நான்கு மூலைகளிலும் சதுர வடிவ சிறு கோபுர கோட்டைகளும் அமைக்கப்பட்ட ஆதாரம் கிடைத்துள்ளது?
சூரகோட்டடா -- பூஜ், கச், குஜராத்.
Q18. ஹராப்பா காலத்து செங்கற்கள் எந்த முறையில் தயாரிக்கப்பட்டிருந்தன?
திறந்த அச்சு முறை.
Q19. உலகின் முதல் மற்றும் முன்னோடி தொழில்நுட்ப கண்டுபிடிப்பான ""சக்கரம்"" எந்த காலக்கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
கற்காலத்தின் பிற்பகுதியான கி.மு 4000 காலத்தில் -- மெஹர்காரில் பயனுக்கு வந்தது.
Q20. நெற்களஞ்சியமும், கிடங்குகளும் எங்கு அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது?
மொஹஞ்சோதாரோ, ஹரப்பா மற்றும் லோத்தல்.
Q21. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நகரம் எது?
தோளாவீரா, குஜராத்.
Q22. சிந்து சமவெளி சுடுமண் பொருட்கள் செய்யப்பட்ட முறை என்ன?
கைவேலைப்பாடு.
Q23. நடராஜரைப் போன்ற, ஒரு ஆடையற்ற ஆண் நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு ஆண் கருங்கல் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
சன்ஹூதாரோ -- மொஹஞ்சாதாரோ அருகில், சிந்த் மாவட்டம், பாகிஸ்தான்
Q24. சிந்து சமவெளி நாகரீக மக்களின் மதம் சார்ந்த அடையாளங்களாக இருந்தவை யாவை?
தாயத்தும், வில்லைகளும்
Q25. சிந்து சமவெளி நாகரீக ஆதாரங்கள் பல இடங்களில் கிடைத்திருந்தாலும், எந்த இடத்தில் காண்டா மிருக எலும்புக்கூடு கிடைத்தது ஒரு சிறந்த ஆதாரமாக அமைந்தது?
ஆம்ரி, யெமன்
Q26. உலகில் வேறெங்கும் கிடைப்பதற்கு முன், இந்தியாவில் கிடைத்த உலோகப்பொருள் எது?
வெள்ளி.
Q27. பெரும்பாலான ஹரப்பா நாகரீக மண்பாண்டங்கள் எவ்வாறு அமைந்திருந்தன?
வேலைப்பாடற்ற மண்பாண்டங்கள்
Q28. ஒட்டகத்தின் எலும்புகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன?
காளிபங்கான், ராஜஸ்தான்.
Q29. ஹராப்பா மக்களின் தரப்படுத்தப்பட்ட உபயோகப் பொருள் எது?
செங்கற்கள்.
Q30. சிந்து சமவெளி நாகரீகத்தின் எந்த நகரத்தின் முக்கிய வீதிகளில் அமைந்திருந்த வீடுகளில் கதவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது?
லோத்தல்.
Q31. ஹராப்பா நாகரீக மக்களின் மொத்த பகுதி எந்த வடிவத்தில் அமைந்திருந்தது?
முக்கோண வடிவம்.
Q32. எந்த இடத்தில் முழுமையாக உழப்பட்ட நிலப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது?
காளிபங்கான், ராஜஸ்தான்.
Q33. ஹராப்பா அழிவு இடங்களை முதலில் கண்டுபிடித்தவர் யார்?
சார்லஸ் மாசன், இங்கிலாந்து. சஹிவால் என்ற இடம், பஞ்சாப், பாகிஸ்தான்
Q34. லோத்தலில் கண்டுபிடிக்கப்ப்ட்ட ஒரு துறைமுகம் போன்ற அமைப்பு, ஒரு கால்வாய் மூலம் எந்த நதியுடன் இணைக்கப்பட்டிருந்தது?
போகாவா நதி.
Q35. ஹராப்பா காலத்து சிற்பங்களுக்கு எவ்வகை கற்கள் பயன்படுத்தப்பட்டன?
கடினமான மணற்கல்
Q36. ஹராப்பா காலத்து மண்பாண்டங்கள் எவ்வாறு அழகுப்படுத்தப்பட்டிருந்தன?
மனித, விலங்கு, மற்றும் கணித வடிவங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.
Q37. ஹராப்பா கலாச்சாரத்தில் குழந்தைகளுக்கு எவ்வகையில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது?
பல வகையான சுடுமண் பொம்மைகள்.
Q38. ஹராப்பா கிராமங்கள் பொதுவாக நதிக்கரையின் வெள்ளச் சமவெளியில் அமைந்திருந்தது. ஏன்?
விவசாயத்தின் மூலம் தேவையான உணவு தானியங்கள் விளைவிப்பதற்காக.
Q39. ஹராப்பா அகழ்வாராய்ச்சி மையங்களில் நீர்ப்போக்கு வசதிகள் நன்கு அமைந்திருந்த இடம் எது?
மொஹஞ்சோதாரோ.
Q40. ஹராப்பா கலாச்சாரம் அழிய சுற்றுச்சூழல் அழிவே முக்கிய காரணம் என முன் வைத்தவர் யார்?
George D. Fales.
Q41. ஹராப்பா காலத்து வீடுகளின் முக்கிய அமைப்பு சிறப்புகள் யாவை?
1. செவ்வக வீடுகள்
2. சுடுமண் செங்கற்களால் ஆன குளியலறை மற்றும் கிணறுகள்
3. வெளிப்புற மாடிப்படிக்கட்டுகள்.
Q42. ஹராப்பா கலாச்சாரத்தின் பின் காலத்தில் ""ஜங்கார் கலாச்சாரம்"" “Jhangar Culture” என்பது எந்த இடத்தில் உருவாயிற்று?
ஆம்ரி -- யெமன்
Q43. சிந்து சமவெளி நாகரீகத்தின் எந்த இடம் நெருப்பினால் அழிவைக்கண்டிருந்தது?
கோட் டிஜி -- சிந்த் மாவட்டம், பாகிஸ்தான்.
Q44. அகழ்வாராய்ச்சி நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ""சாம்பல் குன்றுகள்"" “ash mounds”, கண்டுபிடிக்கப்பட்டது?
Pallavoy, Kupgal, Utmur and Kodekal.
Q45. எந்த இரண்டு புதிய கற்கால Neolithic ஆராய்ச்சி இடங்களில், நெற்பயிர் சாகுபடி (உலகத்தில் முதலாக ? ) செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன?
கோல்திஹ்வா (கங்கை சமவெளி) மற்றும் மஹாகரா (உத்திரபிரதேசம்)
Q46. குஜராத்தில் அமைந்துள்ள சிந்து சமவெளி நாகரீக இடங்கள் யாவை?
சுர்கோடாடா, தோளவீரா, லோத்தல்
Q47. சிந்து சமவெளி நாகரீகத்தின் எந்த இடங்கள், மெசபோடோமியாவுடன் நேரடி வணிகம் இருந்ததை சுட்டிக்காட்டுகின்றன?
லோத்தல், மொஹஞ்சோதாரோ, ஹரப்பா
Q48. சிந்து சமவெளி நாகரீக முத்திரைகளில் முக்கிய இடம் பெற்றிருந்த விலங்குகள் யாவை?
திமில் இல்லாத கால்நடைகள், புலி, யானை, காண்டாமிருகம், எருது.
Q49. ஹராப்பா காலத்தின் எவ்வகை மண்பாண்டங்கள் உலகின் முதல் வகையாக கருதப்பட்டது?
பளபளக்கும் மண் பாண்டங்கல்
Q50. இந்தியாவை சாராத, எலும்பு உபகரணங்கள், அதிகாக கண்டெடுக்கப்பட்ட இடம் எது?
Chirand (பீஹார்), Gufkral (காஷ்மீர்) and Burzahom (காஷ்மீர்).
Q51. ஹரப்பா கலாச்சாரத்தின் மிக அழகிய வேலைப்பாடு கொண்ட செங்கல் கட்டுமானம் எது?
பெரிய குளியல் அறை -- Great Bath.
Q52. ஹராப்பா கலாச்சார முத்திரை மற்றும் சுடுமண் பாண்டங்களில் காணப்படாத விலங்குகள் யாவை?
பசு, குதிரை, புலி.
Q53. சிந்து சமவெளி நாகரீகத்தின் எந்த ஆராய்ச்சி இடத்தில், வன்முறையின் மூலம் மனிதர்கள் மாண்டிருக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன?
மொஹஞ்சோதாரோ.
Q54. சிந்து சமவெளி நாகரீக அழிவுக்கு இந்து மத கடவுளான ""இந்திரன்"" தான் காரணம் என எந்த வேத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
ரிக் வேத சம்ஹிதா மற்றும் தைத்ரியா ப்ராம்ஹனா.
Q55. சிந்து சமவெளி நாகரீக கால கட்டங்களை, அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கும் ஆதாரங்களிலிருந்து எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
கார்பன் காலக் கணிப்பு முறை -- Radio Carbon Dating.
Q56. சிந்து சமவெளி நாகரீக அகழ்வாராய்ச்சி இடங்களில் கிடைத்த சுடப்பட்ட செங்கற்கள் மூலம் அறிவது என்ன?
தரம் வரையறுத்தல் நிலவியது என தெரிகிறது. -- The standardization.
Q57. பாகிஸ்தானின் இன்றைய எந்த இன மக்கள், ஹரப்பா காலத்து வம்சாவளிகள் என அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்?
ப்ரஹ்னிஸ் -- Brahnis.
Q58. எந்த ஹரப்பா அகழ்வாராய்ச்சி இடத்தில், நிபுணர்கள் அழகான நான்கு செம்பு உருவங்களை கண்டெடுத்துள்ளனர்?
தைமாபாத், அஹமத்நகர் மாவட்டம், மகாராஷ்டிரா.
Q59. கற்காலங்களில் மிகவும் பழமையானதாக கருதப்படும் காலக்கட்டம் எது?
Palaeolithic Age.
Q60. மொஹஞ்சோதாரோவில் காணப்பட்ட மிகப் பெரிய கட்டிடம் எது?
பிரம்மாண்ட தானிய கொள்கலன். Great Granary.
Q61. ஹராப்பாவில் எத்தனை தானிய கொள்கலன்கள் இருந்தன?
ஆறு.
Q62. எந்த சிந்து சமவெளி நாகரீக ஆராய்ச்சி இடத்தில் எழுது மை வைக்கப்படும் சிறிய மண் சட்டி கண்டெடுக்கப்பட்டது?
சான்ஹூதாரோ -- Chanhudaro.
Q63. கற்காலத்தில் முத்திரைகள் தயாரிக்க எந்த பொருள் மிகவும் பயன்படுத்தப்பட்டது?
மாக்கல் -- Steatite.
Q64. சிந்து சமவெளி நாகரீக மக்களின் எந்த வளர்ப்பு விலங்கு, அவர்களுடைய சுடுமண் பாண்டங்களில் பிரதிபலிக்கவில்லை?
பசு -- Cow.
Q65. சிந்து சமவெளி நாகரீகத்தை, ஹராப்பா நாகரீகம் என பெயரிட்டவர் யார்?
சர் ஜான் மார்ஷல் -- இங்கிலாந்து.
Q66. எந்த சிந்து சமவெளி நாகரீக அகழ்வாராய்ச்சி மையத்திலிருந்து, மக்கள் பருத்தி ஆடைகள் பயன் படுத்தியதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்தது?
மொஹஞ்சாதாரோ -- Mohenjodaro.
Q67. சிந்து சமவெளி நாகரீக நகரங்களில் ஒன்றில் மட்டும் கதவுகள் முக்கிய வீதி பக்கம் அமைந்திருந்தது. அது எது?
லோதல், குஜராத்.
Q68. ஹரப்பா மக்களால் வழிபடப்பட்ட பறவை எது?
புறா.
Q69. சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய முத்திரைகளில் ஒரு விலங்கு வடிவம் அதிகமாக இடம் பெற்றிருந்தது. அது எது?
"யூனிகார்ன் -- Unicorn – பழம்பெரும் கற்பனை விலங்கு -- ஒற்றைக்கொம்பு, ஆட்டு தாடி, இவற்றைக்கொண்ட வெள்ளை நிற குதிரை."
Q70. சிந்து சமவெளி மக்கள், மாண்டவரை எவ்வகையில் அனுப்பி வைக்கும் பழக்கம் பரவலாக இருந்து வந்தது?
முழுமையாக புதைத்தல்
Q71. சிந்து சமவெளி நாகரீகத்தின் எந்த இடத்தில் ஆண், பெண் இருவரையும் ஒன்றாக புதைக்கும் பழக்கம் இருந்து வந்தது?
லோத்தல், குஜராத்.
Q72. சிந்து சமவெளி நாகரீக இடங்களின் கட்டுமானத்தில் ஈடுபட்ட இன மக்கள் யாவர்?
ஆல்பைய், மெடிட்டெரேனியன், மங்கோலியர், ஆஸ்ட்ரோலாயிட்.
Q73. குஜராத்தில் அமைந்துள்ள சிந்து சமவெளி நாகரீக இடங்கள் யாவை?
லோத்தல், ரங்பூர், பகரத்தாவ்.
Q74. ஹராப்பாவில் பொதுவாக கண்டுபிடிக்கப்பட்ட கட்டுமானங்கள் யாவை?
தானிய கொள்கலன், பணித்தரைகள், ஒரு அறை கொண்ட இல்லங்கள்.
Q75. சிந்து சமவெளி மக்கள் ரபி பருவ பயிராக எந்த பயிரை பயிர் செய்தனர்?
கோதுமை மற்றும் பார்லி
Q76. சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதி பொருள் எதுவாக இருந்தது?
பருத்தி துணி, சுடுமண் மற்றும் மண் பாண்டங்கள்.
Q77. சிந்து சமவெளி நாகரீகத்தின் அழிவின் காரணத்தை எடுத்துரைத்தவர் யார்?
ஆஸ்திரேலிய தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் கார்டன் சைல்ட் கூற்றின் படி இந்த நாகரீகம் தானாகவும், நாகரீகம் அல்லாதவர்களின் தாக்குதல்களுமே காரணம்.
Q78. சிந்து சமவெளி நாகரீகத்தின் ஆதாரக் கண்டுபிடிப்புகளை வரிசைப்படுத்துக.
மொஹஞ்சோதாரோ, கோட் டிஜி, ரோப்பர், சுர்கோட்டடா, பணவாலி.
Q79. சிந்து சமவெளியின் காலக்கட்டத்தை நிர்ணயிக்கும் முக்கிய கண்டுபிடிப்பு எது?
மெசோபடேமியன் நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி முத்திரைகள்.
Q80. ஹராப்பாவின் சிற்பங்கள் பொதுவாக எதனால் செய்யப்பட்டிருந்தது?
மாவுக்கல் மற்றும் மென்மையான சுண்ணாம்புக் கற்கள்.
Q81. சிந்து சமவெளி மக்களின் கரீஃப் பருவ பயிர்கள் யாவை?
பருத்தி, துறை பட்டாணி, கடுகு, மற்றும் பேரீச்சம்பழம்.
Q82. சிந்து சமவெளி மக்கள் எந்த பொருள் தயாரிப்பில் தரத்தை கையாண்டனர்?
செங்கற்கள்.
Q83. இந்தியாவில் மனிதன் வாழ்ந்ததற்கான முதல் ஆதாரம் எங்கு கிடைத்தது?
ஷிவாலிக் மலைத் தொடர்.
Q84. எந்த சிந்து சமவெளி நாகரீக நகரில் பெரிய கோட்டைச் சுவர்கள் கட்டப்பட்டிருந்தன?
சுர்கோட்டாடா.
Q85. டிஜி என்ற ஹராப்பாவுக்கு முன் இருந்த நகரம் எவ்வாறு அழிந்தது?
நெருப்பு
Q86. எங்கு, தரையில் ஓடுகளும், ஒன்றுக்கொண்று குறுக்கிட்டுக்கொள்ளும் வட்ட வடிவ ஓடுகளும் பதிக்கப்பட்டிருந்தன?
காளிபங்கான், ராஜஸ்தான்.
Q87. எந்த இடத்தில் மருத்துவ நம்பிக்கைகளும், மண்டை ஓட்டு அறுவை முறைகளும் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன?
லோத்தல் மற்றும் காளிபங்கான்.
Q88. ஹராப்பா இன மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் எவ்வாறு இருந்தன?
பளபளப்பு, கைவலைப்பாடுகள், துளைகள், செதுக்குதல், குமிழ்கள் கொண்டதாக இருந்தது.
Q89. ஒரு கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட மண் பாண்டத்தில் ஒரு வேடன் இரு மான்களை வேட்டையாட துரத்துவதான சின்னம் எந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது?
ஹராப்பா.
Q90. ஒரு ஜாடியில் பஞ்சதந்த்ர கதைகளில் வரும் தந்திர நரி கதை வண்ணம் தீட்டப்பட்டது எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
லோத்தல்.
Q91. சதுரங்கத்தைப் போன்ற ஹராப்பா காலத்து விளையாட்டின் ஆதாரம் எங்கு கிடைத்தது?
லோத்தல்.
Q92. எந்த உலோகத்தில் உலகில் முதல் வணிகம் தொடங்கியது?
செம்பு.
Q93. மொஹாஞ்சோதாரோ என்ற சொல்லின் விளக்கம் என்ன?
பிணக்குவியல். லோத்தல் என்பதற்கும் இதே பொருள்.
Q94. ஹராப்பா ஆராய்ச்சி மையங்களில், சுகாதாரத்துக்கான எவ்வகை ஆதாரங்கள் கிடைத்தன?
"1. தெருவோர் நீர் வடிகால்கள் -- Street Drains
2. குப்பைகளுக்கான சரிவு வாய்க்கால்கள் மற்றும்
3. குப்பைத்தொட்டிகள். "
Q95. செவ்வண்ண மண்பாண்டங்கள் எந்த காலத்துடன் இணைந்தது?
ஹராப்பா காலத்து பிற்பகுதி.
Q96. குச்சாய் மற்றும் கொல்பாய் சாசன் ஆகிய இடங்கள் புதிய கற்காலத்தை சேர்ந்தது. இவை இந்த எந்த மாநிலத்தில் உள்ளன?
ஒடிசா.
Q97. வீட்டுக்குள்ளேயே அடக்கம் செய்யும் முறை ”House Burials” எங்கு நிலவியது?
உலேரி, அல்மோரா மாவட்டம், ராஜஸ்தான்.
Q98. குழி வீடுகள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் யாவை?
லோபார் மற்றும் கலோகா டெராய் -- பாகிஸ்தான்.
Q99. புதிய கற்கால இடங்களான கியாக் மற்றும் கியாரி எங்குள்ளது?
லடாக்.
Q100. செம்புக்காலத்தில் பாசனக்கால்வாய்களும் கரையோரங்களும் இருந்ததற்கான ஆதாரங்கள் எங்கு கிடைத்துள்ளன?
இனாம்காவ்ன், மகாராஷ்டிரா.