Khub.info Learn TNPSC exam and online pratice

இந்திய வம்ச ஆட்சிகள் -- INDIAN DYNASTY RULE

Q1. வம்ச ஆட்சி என்பது என்ன?
தொடர்ச்சியாக ஒரே குடும்பத்திலிருந்து ஆட்சியாளர்கள் உருவாவது.

Q2. வம்ச ஆட்சி உருவான காலக்கட்டமும், வம்சமும் எது?
"சூர்ய வம்சம் -- SUN DYNASTY – கி.மு 1700 முதல் 1500 வரை. – சூர்ய கடவுல் விவாசாந்த் இந்த வம்சத்தை துவக்கியதாக நம்பப்படுகிறது. இந்த வம்சத்தின் கடைசி அரசர் ராமர் எனவும் நம்பப்படுகிறது. இந்த வழிவழி வம்சாவளிகள் சூர்ய வம்சத்தை சேர்ந்தவரகளாக ""சூர்ய வன்ஷ்"" அல்லது ""சூர்ய வம்சம்"" எனவும் அழைக்கப்பட்டனர். "
Q3. சிறிய/பெரிய பேரரசுகளும், அரச ஆட்சிகளும் உருவாவதற்கு முன் ஆண்ட சில வம்ச ஆட்சிகள் யாவை?
பரத வம்சம் -- கி.மு 1700 முதல் 1400 வரை;
குரு வம்சம் -- கி.மு 1400 முதல் 450 வரை;
பாண்டவ வம்சம் -- கி.மு. 1200 முதல் 1100 வரை;
ஜஞ்சூவா வம்சம் கி.மு 1026 முதல் 964 வரை;
ப்ரஹத்ரதா வம்சம் -- கி.மு 1700 முதல் 799 வரை.
Q4. பெருமளவிலான மன்னர் ஆட்சிகள் அமைவதற்கு முன் பல சிறு அளவிலான மன்னர் ஆட்சிகள் நிலவின. அவை யாவை?
"1. அங்கா 2. மகதா 3. காசி 4. கோசலா 5. வஜ்ஜி 6. மல்லா 7. சேடி 8. வாத்ஸா 9. குரு 10. பஞ்சாலா 11. மத்ஸ்யா 12. சூரசேனா 13. அஸ்ஸகே 14. அவந்த்தி 15. காந்தாரா 16. காம்போஜா. இவையெல்லாம் காலக்கட்டத்தில் பெரிய மன்னர் ஆட்சிகளுக்கு வழி விட்டன. இந்த காலக்கட்டத்தை மௌர்யர்களுக்கு முன் காலமாக கருதப்படுகிறது. "
Q5. பெருமளவில் அமைந்த நான்கு அரசர் ஆட்சிகள் அமைந்து நிலைத்தன. அவை யாவை? அந்த காலத்தில் வாழ்ந்த இந்திய சரித்திரத்தின் முக்கிய நபர் யார்?
"1. வாத்ஸா 2. அவந்த்தி 3. கோசாலா 4. மகதா. இந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த முக்கிய நபர் புத்தர் -- கி.மு. 563ல் பிறந்தவர். "
Q6. வத்ஸா மன்னர் ஆட்சி என்பது எங்கிருந்தது, அதன் தலை நகர் என்ன, அதற்கு ஏற்பட்டது என்ன?
"வம்சா மன்னர் ஆட்சி எனவும் அழைக்கப்பட்டது. ஜமுனா நதிக்கரையில் அமைந்த ஆட்சி. கௌசாம்பி (அலஹாபாத் பகுதி) இதன் தலைநகரம். பிற்காலத்தில் அவந்த்தி மன்னர் ஆட்சி வசம் மாறியது. "
Q7. அவந்த்தி மன்னர் ஆட்சி எங்கு அமைந்தது, அதன் தலைநகரம் என்ன, அதற்கு ஏற்பட்டது என்ன?
"இந்த மன்னர் ஆட்சி மால்வா, நிமார் மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் இருந்த ஆட்சி. உஜ்ஜைன் இதன் தலைநகரம். கி.மு. 4 காலத்தில் மகதா மன்னர் ஆட்சியால் கைப்பற்றப்பட்டது. இந்த கால கட்டத்தில் புத்த மதம் பிரசித்தம் பெற்றது. "
Q8. கோசாலா மன்னர் ஆட்சி எங்கு நிலவியது, அதன் தலைநகரம் எது, அதற்கு ஏற்பட்டது என்ன?
"இன்றைய ஔத் பகுதிகளில் நிலவிய ஆட்சி, அயோத்யா தலைநகரம். ப்ரசஞ்ஜித் புகழ் பெற்ற மன்னராக இருந்தார். இவர் தனது, தமக்கையை மகத மன்னர் பிம்பிசாராவுக்கு திருமணம் முடித்து, காசி பகுதியை நன்கொடையாக அளித்தார். பிம்பிசாராவின் இளையவர் அஜாதசத்ருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், இரு அரசுகளுக்கும் இடையில் போர் மூளும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ப்ரசஞ்ஜித் தனது மகளை அஜாத சத்ருவுக்கு திருமணம் முடித்து நிலைமையை சீர் செய்தார். சில காலத்திற்கு பிறகு, மன்னர் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு கோசாலா மன்னர் ஆட்சி மகத ராஜ்யத்துக்கு அடிபணிந்து சேர்ந்தது. இவ்வாறாக உருவானதே வட இந்தியாவில் மகத சாம்ராஜ்யம். "
Q9. மகத மன்னர் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது?
"ஜரசந்தா மற்றும் ப்ரிஹத்ரதா -- இருப்பினும் இந்த சாம்ராஜ்யத்தை நிறுவிய கௌரவம் பிம்பிசாரா மற்றும் அஜாதசத்ரு மன்னர்களுக்கே அளிக்கப்ப்டுகிறது, காரணம், இவர்கள் காலத்தில் இந்த மன்னர் ஆட்சி மிகவும் தழைத்தது."
Q10. மகத மன்னர் ஆட்சி பரவியிருந்த பகுதி எது, அதன் தலைநகரம் எது?
பீஹார் மற்றும் வங்காளம். அதன் தலைநகரம் ராஜ்க்ருஹா (இன்றைய ராஜ்கிர்)
Q11. கி.மு 321ல் வீழும் வரை, மகத மன்னர் ஆட்சியில் ஆட்சி புரிந்த வம்சங்கள் யாவை ?
"ப்ரத்யோத்தா வம்சம் -- PRADYOTA DYNASTY: 799 to 684 BC – இவர்கள் ஆட்சி கங்கையின் தென் புற பீஹார் மற்றும் வங்காளம் வரை பரவி இருந்தது. சிஷூநாகா வம்சம் -- SHISHUNAGA DYNASTY: 684 BC to 424 BC – தலைநகரை பாடலிபுத்ரத்துக்கு (இன்றைய பாட்னா) மாற்றினர். இந்த வம்சத்தின் புகழ் பெற்ற மன்னர்கள் பிம்பிசாரா ( கி.மு. 545-491), அஜாதசத்ரு ( கி.மு 491-461), சிஷூநாகா கி.மு. 430 மற்றும் மகாநந்தின். நந்த வம்சம் -- NANDA DYNASTY: 424-321 BC – சிஷூநாகா வம்சத்தின் மகாபத்மா நந்தின் இந்த வம்ச ஆட்சியை நிறுவி, கி.மு 321 வரை ஆட்சி புரிந்தார். பிறகு மௌர்யர்கள் இதை கைப்பற்றினர். "
Q12. மகத மன்னர் ஆட்சி காலத்தில் 650 to 325 BC, இதர இடங்களில் ஆட்சி புரிந்த சிறு மன்னர் ஆட்சி பகுதிகள் யாவை?
"1. சாக்யா -- கபிலவாஸ்து; 2. லிச்சாவி - வைஷாலி; 3. மல்லா -- பாவா; 4. மல்லா - குஷிநகர்; 5. கோட்டியா - ராமக்ராம்; 6. பக்காஸ் -- சம்சமாஸா; 7. மோரியா - பிப்பாலி வாஹனா; 8. கலாமா - கேசபுட்டா; 9. விதேஹா - மிதிலா; 10. நாயாஸ் -- Nayas (Jhatrikas) -- குண்டல்க்ராம். "
Q13. மகத மன்னர் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டவர் சிலர் படையெடுத்திருந்தனர். அவர்கள் யார்?
1. சைரஸ் -- CYRUS : பெர்சியா நாட்டைச்சேர்ந்த இவர் காபூல் வரை படையெடுத்து சில பகுதிகளைக் கைப்பற்றினார்.
2. கேம்பிசெஸ் -- CAMBYSES: சைரஸின் புதல்வர். இவருடைய படையெடுப்பினால் எந்த பகுதியும் கைப்பற்றப்படவில்லை. followed
3. டேரியஸ் -- DARIUS I: சைரஸின் பேரன். கி.மு 518ல் சிந்து பள்ளத்தாக்கை கைப்பற்றினார். சிந்த், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் சில பகுதிகள் இவரால் கைப்பற்றப்பட்டது. இருப்பினும் இவர் பெர்சியா பேரரசர் கீழ் இருப்பதையே விரும்பி இருந்துவிட்டார்.
4. க்ஸெரெக்ஸெஸ் -- XERXES: 465-456BC – இவர் இந்திய வீரர்களை ஒன்று திரட்டி கிரேக்கத்தில் அவரது எதிரிகளை தோற்கடிக்க பயன்படுத்தினார்.
5. டேரியஸ் 3 -- DARIUS III: இவர் மிகப்பெரிய இந்திய படையை உருவாக்கி அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுப்பதை தடுக்க முயன்றார். அலெக்ஸாண்டர் வருகையால் இந்தியா மீது பாரசீக மன்னர்களின் பிடி தளர்ந்தது.
Q14. இப்படியாக, இந்தியாவுக்குள் படையெடுத்து வந்த முதல் வெளிநாட்டவர் யார்?
சைரஸ் தலைமையிலான பாரசீகர்கள்.
Q15. இந்தியாவின் மீது படையெடுத்த இரண்டாவது வெளிநாட்டவர் யார்?
மாமன்னர் தலைமையிலான கிரேக்கர்கள் -- கி.மு. 326.
Q16. மாமன்னர் அலெக்ஸாண்டரின் தந்தை யார்?
மேசிடோனியா மாமன்னர் ஃபிலிப்.
Q17. மேசிடோனியாவின் மாமன்னராக அலெக்ஸாண்டர் எப்போது பதவியேற்றார்?
கி.மு. 334ல் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு.
Q18. இந்தியாவை கைப்பற்ற, தனக்கு முன்பாக், அலெக்ஸாண்டர் அனுப்பி வைத்த தனது துணைத்தளபதிகள் யார்?
"ஹெஃபாஸ்தியன் மற்றும் பெர்டிக்காஸ் -- HEPHAESTIAN and PERDICCAS – இவர்கள் கைபர் கணவாய் வரை வந்து அங்கு ஒரு பாலத்தை அமைத்தனர். அதே சமயம் கி.மு 327ல் அலெக்ஸாண்டர் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடர்ச்சி வழியாக இந்திய எல்லையை அடைந்தார். "
Q19. அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குள் நுழைய உதவிய இந்திய அரசர் யார்?
தட்சசீல மன்னர் அம்பி.
Q20. அலெக்ஸாண்டரின் படையெடுப்பை எதிர்த்து, அவரிடம் அடிபணிய மறுத்த இந்திய அரசர் யார், பிறகு என்ன நடந்தது?
"போரஸ் -- PORUS – அலெக்ஸாண்டரை எதிர்த்து, ஹைடஸ்பாஸ் நதிக்கரையில் கர்ஸி என்ற போரிட்டு, தோல்வி கண்டார். இதன் பின் அலெக்ஸாண்டர் மேலும் முன்னேறி மகத சாம்ராஜ்யத்துக்குள் படையெடுக்க முயற்சித்த போது, அவருடைய போர் வீரர்கள் மிகுந்த சோர்வடைந்த நிலையில் இருந்ததால் தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல முடிவெடுத்தார். இது நடந்தது கி.மு. 326ல்."
Q21. தன் நாட்டை நோக்கி திரும்பி செல்லுகையில், அலெக்ஸாண்டருக்கு நிகழ்ந்தது என்ன?
"ஜூன் கி.மு.323ல் பாபிலோன் (பாக்தாத்) நகரை வந்தடைந்தபோது நோய்வாய்ப்பட்டு தனது 33வது வயதில் மரணமடைந்தார். "