Khub.info Learn TNPSC exam and online pratice

மௌரிய சாம்ராஜ்யம் -- MAURYAN EMPIRE

Q1. மௌரிய சாம்ராஜ்யத்தை நிறுவியவர் யார்?
சந்திரகுப்த மௌரியர் -- இந்த பேரரசு கி.மு.321 முதல் 297 வரை -- 24 ஆண்டுகள் ஆண்டனர். Chandragupta Maurya 321 to 297 BC – 24 years. (The Greeks call him .

Q2. கிரேக்கர்கள் சந்திரகுப்த மௌரியரை எவ்வாறு அழைத்தனர்?
சான்ட்ரோகோட்டஸ் -- (Sandrocottus)
Q3. மகத அரசாட்சியின் எந்த கடைசி மன்னரை வீழ்த்தி, சந்திரகுப்த மௌரியர், மௌரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்?
நந்த வம்சத்தை சார்ந்த தனானந்தாவை கி.மு.321ல் வீழ்த்தி பாடலிபுத்ரத்தை கைப்பற்றினார்.
Q4. சந்திர குப்த மௌரியரின் முக்கிய ஆலோசகராக இருந்தவர் யார்?
கௌடில்யா == சாணக்யா == இயற்பெயர் விஷ்ணுகுப்தா.
Q5. சந்திர குப்த மௌரியரின் எல்லை முன்னேற்றம் எவ்வாறிருந்தது?
"ஆசியாவின் சில பகுதிகளை கைக்கொண்டிருந்த, அலெக்ஸாண்டரின் தளபதி செல்யூகஸ் நிகேடர் என்பவரை வீழ்த்தினார். இருவருக்குமிடையில் கி.மு. 303 ல் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பகுதிகள் சந்திரகுப்தர் வசம் வந்தது. இதற்கு மாற்றாக 500 யானைகள் அவருக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கங்கை பள்ளத்தாக்கு, மத்திய இந்தியா மற்றும் நர்மதை நதிப் பகுதிகள் இவரால் கைப்பற்றப்பட்டது. "
Q6. எந்த கிரேக்க தூதுவர், மௌரிய சாம்ராஜ்யத்தில் பாடலிபுத்ரத்தில் தங்கி, பிறகு மௌரிய சாம்ராஜ்ய ஆட்சியைப்பற்றி மிக விரிவான விவரங்களை அளித்துள்ளார்?
மெகஸ்தனிஸ் -- MEGASTHENES – செல்யூகஸ் நிகேடர் அவர்களால் அனுப்பப்பட்டவர்.
Q7. சந்திரகுப்த மௌரியர் தனது பிற்காலத்தில் எந்த மதத்தை தழுவினார்?
ஜைன மதம்.
Q8. சந்திரகுப்த மௌரியர் தனது கடைசிகாலத்தில் எங்குச் சென்று தனது மறைவு வரை தங்கி இருந்தார்?
"பத்ரபாஹூ என்பவரையும், அவருடன் சில் ஜைன துறவிகளையும் அழைத்துக்கொண்டு மைசூருக்கு அருகில் சரவணபேலகுலா என்ற இடத்தில் தங்கி இருந்து, உணவில்லா விரதத்தை (இதற்கு ""சல்லேகானா"" என ஜைனர்கள் கூறுவர்) மேற்கொண்டு மறைந்தார். "
Q9. சந்திரகுப்தரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
"பிந்துசாரா -- BINDUSARA – கி.மு. 297-272 – இவரை கிரேக்கர்கள் AMITROCHATES என அழைத்தனர். (இத்தொடர் சமஸ்கிருத வார்த்தை “ AMITRAGHATTA “ என்ற வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது. இதன் பொருள் ""எதிரிகளை அழிப்பவன்"". derived from the Sanskrit word meaning slayer of foes."
Q10. பிந்து சாரர் காலத்தில் மௌர்ய சாம்ராஜ்யம் தென் இந்தியாவில் பரவியிருந்த இடம்?
மைசூரு.
Q11. பிந்து சாரர் காலத்தில் விஜயம் செய்த திபெத்திய புத்த துறவி யார்?
தாரநாதர்.
Q12. பிந்துசாரரின் அவைக்கு வ்ந்த சிரிய தூதுவர் யார்?
டெய்மாக்கஸ் -- DEIMACCHUS.
Q13. பிந்து சாரரின் மகனின் பெயர் என்ன?
அசோகர்.
Q14. பிந்து சாரரின் எந்த ஆருட நிபுணர் அசோகர் எதிர்காலத்தில் மிகப்பெரிய மன்னராவார் என கணித்தார்?
பிங்கலவாத்ஸா.
Q15. மௌர்ய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கியது எது?
"பாடலிபுத்ரம் -- கங்கை மற்றும் சோன் நதிகளின் சந்திப்பில் உள்ளது. தற்போது பாட்னா என அழைக்கப்படுகிறது. "
Q16. சந்திரகுப்தரின் அரசவைக்கு விஜயம் செய்த கிரேக்க தூதுவர் யார்? அவர் சந்திரகுப்தரின் ஆட்சியைப்பற்றி எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?
மெகஸ்தனிஸ் -- அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் -- இண்டிகா.
Q17. சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் ""அஷ்டினோமோய்"" மற்றும் ""அக்ரோனோமோய்"" என அழைக்கப்பட்டவர்கள் யார்?
அஷ்டினோமோய் -- ASTYNOMOI - நகர அதிகாரிகள்; அக்ரோனோமோய் -- AGRONOMOI -- மாவட்ட அதிகாரிகள்.
Q18. அசோகரின் ஆட்சிக்காலம் என்ன?
கி.மு. 268 to 232 BC.
Q19. "தேவனாம்பியா பியாதாஸி“Devanampiya Piyadassi” மற்றும் “Piyadassi” என்ற சிறப்புப்பெயர்கள் கொண்ட மௌர்ய அரசர் யார்? "
அசோகர்.
Q20. அசோகரின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை பற்றி எழுதப்பட்ட புத்தகம் எது?
தீபவம்சா மற்றும் மகா வம்சா. Dipa Vamsa and Maha Vamsa.
Q21. பிந்துசாரர் கி.மு.272 ல் மறைந்தார். அசோகர் எப்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்?
கி.மு. 268.
Q22. அசோகரின் காலத்தில் நடந்த போர்களில் முக்கியமானது ""கலிங்கப் போர்"" . இது நடந்த காலம் என்ன?
கி.மு 265 – 264 – கலிங்கா அவ்வமயம் மகத நந்தா வம்ச ஆட்சியில் இருந்தது.
Q23. கலிங்கப்போருக்கு பின் அசோகர் கூறிய வார்த்தைகள் என்ன?
" நூற்றி ஐம்பது ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள், அதைப்போன்று பன்மடங்கு பேர் அழிந்தார்கள்“ "
Q24. கலிங்கப்போருக்கு பின்பு அசோகருக்கு ஏற்பட்டது என்ன?
"அந்த கோர சம்பவத்தினால் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு உடனே புத்த மதத்தை தழுவினார். "
Q25. இலங்கைக்கு புத்த மத தூதுவர்களாக அனுப்பி வைக்கப்பட்ட அசோகரின் புதல்வர் மற்றும் புதல்வியின் பெயர் என்ன?
"மஹேந்திரா (மகன்) மற்றும் சங்கமித்ரா (மகள்) அவர்களுடன் ஒரு அரசமரக் கன்றும் கொடுத்தனுப்பினார். "
Q26. அசோகரின் முக்கிய மகாராணி யார்?
அசந்திமிட்டா -- ASANDHIMITTA
Q27. அசோகரின் வாழ்க்கை மற்றும் நிகழ்ச்சிகள் எந்தெந்த புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது?
மகாவம்சா, தீபவம்சா, வம்சதபக்ஷிணி, திவ்யதானா, அசோக வதனா, ராஜதரங்கிணி.
Q28. அசோகரை புத்த மதத்தை தழுவ தூண்டியவர் யார்?
புத்த துறவி உபகுப்தா.
Q29. அசோகரின் இரண்டாவது மகள் யார்?
சாருமதி -- CHARUMATI – இவர் நேபாள க்ஷத்திரிய வீரர் தேவபாலாவை திருமணம் முடித்தார்.
Q30. மௌரிய சாம்ராஜ்யத்தின் பிற்கால மன்னர்கள் யாவர்?
"அசோகரின் மறைவுக்குப்பின் மௌரிய சாம்ராஜ்யம் கிழக்கு மேற்கு என பிரிந்தது. மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் அசோகரின் மற்றொரு மகன் குணாலாவுக்கும், கிழக்குப்பகுதி அசோகரின் பேரன் தசரதாவுக்கும் பிரிக்கப்பட்டது. இவர்களுடைய சந்ததிகள் சில காலம் ஆண்டனர். மௌர்ய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னர்களாக சததன்வான், அவரைத் தொடர்ந்து ப்ருஹத்ரதா ஆண்டனர். ப்ருஹத்ரதாவை புஷ்யமித்ரா சுங்கா கொன்று அவருடைய வம்ச ஆட்சியை நிறுவினார். (சுங்க வம்சம்)"
Q31. அசோகரின் அரசாணைகள், பிரகடனங்களில் பயன்படுத்தப்பட்ட மொழி எது ?
"முக்கியமாக ப்ரக்ரித் -- PRAKRIT அந்தந்த பகுதிகளுக்கேற்ப சில மாற்றங்களுடன். இதன் எழுத்து வடிவங்கள் ப்ரமி மற்றும் கரோஷ்டி. இவை தவிர்த்து கிரேக்கம் மற்றும் அரபு மொழிகளும் பயன்படுத்தப்பட்டன. "
Q32. அசோகரின் முக்கிய பிரகடனங்கள் எத்தனை?
"பதினான்கு -- இவைத் தவிர்த்து இந்தியாவின் பல பகுதிகளில் சிறிய அளவிலான பிரகடனங்களும் உள்ளன. "
Q33. "அசோகரின் பிரகடனத்தில் கலிங்கப் போர், மற்றும் அதனால் அசோகரிடம் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது? "
பிரகடன எண் 13. (Edict No. 13 (XIII))
Q34. அசோகரின் கல்லில் செதுக்கப்பட்ட பிரகடனங்களை முதலில் புரிய வைத்தவர் யார்?
ஜேம்ஸ் ப்ரின்செப் -- James Prinsep. (1799-1840 – ஆங்கிலேய இந்திய அறிஞர்).
Q35. அசோகரின் முக்கியமான மற்றும் பிரபலமான தூண் கல்வெட்டுக்கள் யாவை?
1. சாஞ்சி -- SANCHI – போப்பால் அருகில், மத்திய பிரதேசம்.
2. சாரநாத் -- SARNATH –வாரணாசி அருகில், உத்திரபிரதேசம்.
Q36. புத்த மதத்திலும், அசோகரைப் பற்றிய புத்தகங்களிலும் ""தம்மா"" “Dhamma” என அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது எதைக்குறிக்கிறது?
மக்கள் அன்றாடம் அனுசரிக்கவேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்.
Q37. மௌரிய சாம்ராஜ்யத்தின் கௌடில்யரின் "சப்தங்க விதி" “Saptanga Theory” என்பது என்ன?
"கௌடில்யர்/சாணக்யரால், அரசாங்கத்தின் முக்கிய அங்கங்கள் விளக்கமாக கூறியிருக்கிறார். அவை:
1. ஸ்வாமின் -- SVAMIN – மன்னர்;
2. அமத்யா -- AMATYA – மந்திரி/அதிகாரிகள்
3. ஜனபதா -- JANAPADA – எல்லையும் மக்களும்
4. துர்கா -- DURGA – கோட்டை;
5. கோசா -- KOSA – கருவூலம்;
6. பலா -- BALA – ராணுவம்; மற்றும்
7. மித்ரா -- MITRA – நட்பும்/நண்பர்களும். "
Q38. மௌரிய ஆட்சியில் ஒருவரை ஒரு பதவிக்கு அமர்த்தும் முன் எவ்வகையான சோதனைகள் நடத்தப்பட்டன?
1. தர்மோபாத சுத்தா -- DHARMOPADA SUDDHA : நீதித்துறைக்கு பணி அமர்த்தும் முன் ஆன்மீக சிந்தனைகள் பற்றிய சோதனை;
2. அர்த்தோபாத சுத்தா -- ARTHOPADA SUDDHA : வருவாய்த்துறைக்கு பணி அமர்த்தும் முன் பொருளாதாரம்/நிதி அறிவு பற்றிய சோதனை.
3. காமோபாத சுத்தா -- KAMOPADA SUDDHA : இன்பம் சார்ந்த பணிக்கு, இன்பம் சார்ந்த அறிவு சோதனை.
4. பயோபாதசுத்தா -- BHAYOPADASUDDHA: வீரம் சார்ந்த பணிக்கு -- பயம் சார்ந்த சோதனை.
Q39. மௌரியர்கள் ஆட்சியில் நிர்வாக அதிகாரிகளின் பதவிப்பெயர்கள் மற்றும் இதர நிர்வாகப் பெயர்கள் என்ன?
"சம்ஹர்தா-SAMHARTA – வருவாய் -- வரவு செலவு கணக்கு அதிகார்.
அக்ஷாபதல் அத்யக்ஷா -- AKSHAPATAL ADHYAKSHA – கணக்காய்வு தலைவர்.
பிண்டாகரா - PINDAKARA – கிராமங்களிலிருந்து வசூலிக்கப்படும் கூட்டு வரி.
சேனாபக்தம் -- SENABHAKTAM – ராணுவத்தால் ஒரு பகுதி மீது விதிக்கப்படும் தண்டனை வரி.
சன்னிதாத்தா -- SANNIDHATA – முக்கிய கருவூல அதிகாரி.
கோச க்ருஹ/ கோஷ்டகாரா --KOSA GRIHA/KOSHTAGARA – அரசாங்க சொத்து காப்பறை.
சேனாபதி -- SENAPATI – ராணுவ முக்கிய அதிகாரி
பாதத்யாக்ஷா - PADADHYAKSHA – தரை ராணுவம்
அஸ்வத்யாக்ஷா - ASVADHYAKSHA - குதிரை வீரர் படை
ஹஸ்தத்யாக்ஷா -- HASTYADHYAKSHA – யானை வீரர் படை
ரதத்யாக்ஷா -- RATHADHYAKSHA – தேர் ஓட்டி வீரர்கள்
நவத்யாக்ஷா -- NAVADHYAKSHA – கப்பற்படை வீரர்கள்
ஆயுதகாராத்யாக்ஷா -- AYUDHAGARA DHYAKSHA – ஆயுதக்கிடங்கு
மௌலா -- MAULA – வம்சாவளி வீரர்கள்
ப்ரிடகாஸ் -- BHRITAKAS – கூலிப்படை
அடாவிலாவாஸ் -- ATAVIVALAS – பழங்குடி வீரர்கள்
மித்ரவாலா -- MITRAVALA - நட்புதவி வீரர்கள்
தர்மாஸ்தியா -- DHARMASTHIYA – உரிமையியல் நீதி மன்றம்
கண்டகசோதனாஸ் -- KANTAKASODHANAS – குற்றவியல் நீதிமன்றங்கள்
தர்மாதிகாரின் -- DHARMADHIKARIN – தலைமை நீதிபதி
ராஜ சாசனா -- RAJA SASANA – ராஜ்ய பிரகடனங்கள்
பந்தநகரா --BANDHANAGARA – சிறைச்சாலை
சரகா -- CHARAKA –காவல் நிலைய சிறை
ஸ்தானியா, த்ரோனமுகா, -- காவல் நிலையம்
பந்தாநகரா த்யாக்ஷா - BANDHANAGARA DHYAKSHA – சிறைச்சாலை அதிகாரி
குதாபுருஷா -- GUDHAPURUSHAS – ஒற்றர்கள்
விஷ கன்யா -- VISHA KANYAS –பெண் ஒற்றர்கள்
நிஸ்ரிஷ்டர்த தூதா -- NISRISHTARTHADUTA – தூதுவர்
சசன்ஹரா தூதா -- SASANHARA DUTA – பிரத்தியேக தூதுவர்
த்வாரிகா -- DAUVARIKA – அரண்மனைக் காவல் அதிகாரி
வஹிபாதா -- VAHIKPATHA – சாலை கட்டுமானம்.
பன்யபட்டனா -- PANYAPATTANA – அங்காடி கூட்டம்
ரஜூகா RAJUKA – மாவட்ட் ஆணையர்
யுக்தா -- YUKTAS – அரசாங்க இடைமட்ட அதிகாரிகள்
கோபா - GOPA –கோப்புகள் காப்பகம்
ஸ்தானிகா -- STHANIKA – வரி வசூல் மையம்
கிராமணி -- GRAMANI – கிராம தலைவர்
நகரிகா - NAGARIKA – நகர தலைவர். "
Q40. கௌடில்யரின் எந்த புத்தகம் மௌரிய நிர்வாக சிறப்பை விளக்குவதுமின்றி, பொது நிர்வாக வழிகாட்டியாகவும் உள்ளது?
"அர்த்தஷாஸ்த்ரா -- ARTHASHASTRA – இது 15 புத்தகங்கள், 150 அத்தியாயங்கள், 180 தலைப்புகள் 6000 செய்யுள், 380 ஸ்லோகங்கள் - ஐ கொண்டது. "
Q41. "வருணா அமைப்பு" “Varna” system என்பது என்ன?
"மனித குலத்தை தொழில் ரீதியாக வகைப்படுத்தி, அவற்றுள் செய்யும் தொழிலுக்கேற்ற பெயர் வைத்தல் முறையே இவ்வாறு அழைக்கப்படுகிறது. அந்த நான்கு முக்கிய பிரிவினர்:
1. பிராமணர்கள் - BRAHMINS – Priests (Advisors) -- ஆன்மிக தொழில் மற்றும் ஆலோசகர்கள்
2. க்ஷத்திரியர்கள் -- KSHATRIYAS – வீரர்கள் - மன்னர்கள்
3. வைஸ்யர்கள் -- VAISHYAS – வணிகர்கள்
4. சூத்திரர்கள் -- SUDRAS – பல வகை தொழிலை செய்பவர்கள். "
Q42. மௌர்யர்களின் எந்த கல்வெட்டிலிருந்து நமது நாட்டு தேசிய சின்னம் பெறப்பட்டது?
சாரநாத் தூண் கல்வெட்டு -- உத்திரபிரதேசம்.
Q43. சாஞ்சி -- மத்தியபிரதேசத்தில் உள்ள உள்ள தூணின் அளவுகள் என்ன?
77.5 அடி உயரம்; 121.5 அடி விட்டம். அசோகரால் நிறுவப்பட்டது.
Q44. "அர்த்த சாஸ்திரம்" -- ஆங்கில மொழி பெயர்ப்பு முதலில் யாரால் செய்யப்பட்டது?
டாக்டர் ஆர். ஷாமா சாஸ்திரி, மைசூரு -- 1915.
Q45. அசோகர் காலத்தில் தென் இந்தியாவில் நிலவிய மன்னர் வம்ச ஆட்சி எது?
சோழ்ர்கள்.
Q46. அசோகர், புத்த மதத்தை தழுவிய பிறகு, அதை பரப்புவதற்காக பல யாத்திரைகள் மேற்கொண்டார். அவற்றைப் பற்றி விவரிக்கும் புத்தகம் எது?
திவ்யவதனா Divyavadana.
Q47. மேற்கு பகுதிகளை நிர்வகிக்க அசோகர் யாரை நியமித்தார்?
துசாப்பா - பாரசீக நாட்டைச் சேர்ந்தவர்.
Q48. மௌரிய ஆட்சியிலெவ்வகை அதிகாரிகள், மற்ற அதிகாரிகளை விட அதிகமாக இருந்தனர்?
"வரி வசூலிக்கும் அதிகாரிகள். வரி சீராகவும் முழுமையாகவும் வசூலிக்கப்பட வேண்டும் என்பதனை இது வலியுறுத்துகிறது. "
Q49. மௌரியர் காலத்து வெள்ளி நாணயங்களில் காணப்பட்ட உருவச்சிலை எது?
மயில் தலையின் பிறை.
Q50. மௌரியர் காலத்தில் புழக்கத்திலிருந்த நாணயத்தின் (பணம்) பெயர் என்ன?
பானா
Q51. அசோகர் ஒரு துறவியின் ஆடையில் இருந்த சிலையைக் கண்டவர் யார்?
இட்சிங் -- சீன யாத்திரிகர்.
Q52. இறையாண்மை மற்றவர் உதவியுடன் மட்டுமே தொடரமுடியு. ஒற்றை சக்கரத்தால் எதுவும் நகராது. அதுபோல், மன்னரும் அவருக்கு உதவியாளராக மந்திரிகளையும் நியமித்து அவர்களின் ஆலோசனைக் கேட்டு அரசாங்கம் நடத்த வேண்டும்"" எனக் கூறியவர் யார்?
கௌடில்யர்/சாணக்யர்.
Q53. மௌரியர்கள் காலத்தில் "அக்ஷபாதாலத்யாக்ஷா" என அழைக்கப்பட்டவர்கள் யார்? உயர் கணக்கு தணிக்கை அதிகாரி/Accountant General
உயர் கணக்கு தணிக்கை அதிகாரி/Accountant General
Q54. மௌரியர் காலத்து "ரூபதர்ஷகா" என்பவர்கள் யார்?
அச்சு நாணயங்களை பரிசோதிப்பவர்.
Q55. "நவகாராயோகாரிக்கா மகாமட்டா" என்பவர்கள் யார்?
நீதித்துறை அதிகாரிகள்
Q56. மௌரியர்கள் காலத்தில் "சேனாபக்தம்" என்பது என்ன? What was
"ராணுவத்தால் ஒரு பகுதியாக செல்லும் போது அந்த பகுதியின் மீது விதிக்கப்படும் தண்டனை வரி. "
Q57. மௌரியர்கள் காலத்து பரம்பரை வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
மௌலா.
Q58. மௌரிய காலத்து அரண்மனை முக்கிய பாதுகாவலர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
த்வாரிகா.
Q59. மௌரியர்கள் காலத்து வணிகச்சந்தைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
பான்யபட்டா
Q60. அசோகரின் தாயாரின் பெயர் என்ன?
சுபத்ராங்கி
Q61. அசோகரின் எந்த மனைவி ஆன்மீகம் மற்றும் பொதுச்சேவைக்கு அதிகமான நன்கொடைகள் வழங்கி வந்தார்?
கருவாக்கி
Q62. அசோகரின் மகள் சாருமதி யாரை மணந்தார்?
தேவபாலா - நேபாளத்து போர் வீரர்.
Q63. அசோகரின் எந்த மகாராணி போதி மரத்தை காயப்படுத்தினார்?
"திஸ்ஸாரக்கா -- விஷம் தடவிய ஒரு முள்ளை போதி மரத்தில் பாய்ச்சி அதை அழிக்க நினைத்தார். காரணம், அசோகரின் அதிகமான புத்தமத ஈடுபாடு."
Q64. மௌரியர்கள் காலத்தில் "பரிஹாரிகா Pariharika " எதை குறித்தது?
வரி விதிப்பிலிருந்து நீக்கப்பட்ட கிராமம்.
Q65. ஜம்மு காஷ்மீரின் "ஸ்ரீநகர்" அசோகரால் உருவாக்கப்பட்டது என கூறும் நூல் எது?
"ராஜ தரங்கணி" -- எழுதியவர் கல்ஹானா.
Q66. எந்த மௌரிய மன்னர், மேற்கு ஆசியாவை ஆண்டு வந்த கிரேக்கர் செல்யூகஸ் நிக்கேடர் அவர்களுடன் திருமண பந்தம் ஏற்படுத்திக் கொண்டார்?
சந்திரகுப்த மௌரியர்.
Q67. பிந்து சாரரின் அரசவைக்கு அனுப்பப்பட்ட கிரேக்க தூதுவர் யார்? Which Greek Ambassador of Antiochus I of Syria was sent to the court of Bindusara?
டெய்மாக்கஸ் -- சிரியா--வின் கிரேக்க மன்னர் ஆண்டியோக்கஸ் 1 ஆல் அனுப்பப்பட்டார்.
Q68. எந்த கல்வெட்டு ஆதாரம் மூலம் அசோகர் தன்னை ""பியாதாஸ்ஸி"" என்ற பெயரால் அழைத்துக்கொண்டார் என்பது புலப்படுகிறது?
மகாவம்சம்.
Q69. தனது கூடப்பிறந்தவர்களுடன் நடந்த ஆட்சியைக் கைப்பிடிக்கும் சண்டையில், அசோகருக்கு உதவிய மந்திரி யார்?
ராதாகுப்தா.
Q70. அசோகரைப் போலவே தனது ஆட்சியை மாற்றிக்கொண்ட இலங்கை அரசர் யார்?
டிஸ்ஸா.
Q71. கிழக்கு மற்றும் மேற்கு மௌரிய அரசுகளை ஒருங்கிணைத்த அரசர் யார்?
சம்ப்ராதி . (அசோகருக்கு பிறகு மௌரிய சாம்ராஜ்யம் மீண்டும் பிரிந்தது)
Q72. திறமையான நிர்வாகம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அசோகரின் கல்வெட்டு எது?
ஆறாவது கல்வெட்டு.
Q73. இன்றைய மாவட்ட ஆட்சியர் - க்கு இணையான மௌரிய காலத்து பதவி எது?
ரஜூகா.
Q74. சாரநாத் தூணிலிருந்து எடுக்கப்பட்டு, தேசிய சின்னமாக இந்திய தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள தர்ம சக்கரத்தில் எத்தனை ஆரங்கள் உள்ளன?
இருபத்தி நான்கு
Q75. பிந்து சாரர் புத்தமதத்தின் எந்த பிரிவை வழிபற்றினார்?
அஜிவிகா பிரிவு.
Q76. பிற்காலத்து மௌர்ய அரசர்களை வரிசைப்படுத்துக?
தசரதா, சம்ப்ரதி, சாலிசுகா, தேவவர்மன், சத தன்வான், ப்ரிஹத்ரதா.
Q77. சாரநாத் தூணில் பொறிக்கப்பட்டிருக்கும் விலங்கு சின்னங்கள் எவை?
யானை, குதிரை, எருது, சிங்கம்.
Q78. ப்ரக்ருதி மொழியின் எந்த வடிவம், அசோகரால் தனது கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டன?
அர்த மகதி.
Q79. அசோகர் எந்த தெய்வத்தை அதிகமாக வழிபட்டார் என ராஜதரங்கணி புத்தகம் கூறுகிறது?
சிவன்.
Q80. பிற்காலத்தில் எந்த சுல்தானிய அரசு மன்னர் மீர மற்றும் டோப்ரா நகரிலிருந்து இரண்டு தூண்களை டெல்லிக்கு கொண்டு வந்தார்?
ஃபிரோஷ் ஷா துக்ளக்.
Q81. மௌரிய சாம்ராஜ்யம் எவ்வாறு முடிவுக்கு வந்தது?
"கி.மு. 185 வாக்கில், மௌரிய கடைசி அரசர் ப்ருஹத்ரதா, புஷ்யமித்ர சுங்காவால் கொல்லப் பட்டார். இத்துடன் மௌரிய சாம்ராஜ்யம் முடிவடைந்தது. "
Q82. குப்தர்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய கணித கண்டுபிடிப்பு எது?
பூஜ்யமும் அதன் முக்கியத்துவமும்.
Q83. சந்திரகுப்தரின் முந்தைய(earliest) குறிப்பு எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
ஜூனாகர் கல்வெட்டு (க்ஷத்ரபாஸ் வம்ச சக மன்னர் ருத்ரதாமன் 1 அவர்களுடையது)
Q84. "அர்த்தசாஸ்திரம்" நிர்வகத்தின் எந்த அம்சங்களைப் பற்றி கூறுகிறது?
"1. மந்திரிகளின் விசுவாசத்தைப் பரிசோதித்தல்
2. தொழில்களுக்கும் சந்தைகளுக்கும் அதிகாரிகளை நியமித்தல்
3. விவசாயத்துக்கு தனி அதிகாரியை நியமித்தல்.
நிர்வாகத்தைப் பற்றிய மௌரிய காலத்து பிரகடனம். "
Q85. எந்த இடத்தில் பெரிய மற்றும் சிறிய தூண் கல்வெட்டு பிரகடனங்களில் நகல்கள் உள்ளன?
அலகாபாத்.
Q86. ஷாபாஸ்கரி மற்றும் மன்ஷேரா இடங்களில் உள்ள அசோகரின் 14 பெரிய கல்வெட்டு பிரகடனங்கள் எந்த எழுத்து வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளன?
கரோஷ்டி.
Q87. தசரதா-வின் நாகார்ஜூனா மலைக்குகை கல்வெட்டுகள் உள்ளன?
பராபர் -- ஜெஹானாபாத் மாவட்டம், பீஹார். Barabar
Q88. மௌயர்களின் தேரில் பறக்கும் கொடிகளின் வண்ணம் எது.
வெள்ளை.
Q89. மேற்கு இந்தியாவின் கிர்னார் பகுதியில் ஒரு நதியின் குறுக்கே அணை கட்டிய மௌரிய அரசர் யார்?
புஷ்யகுப்தா
Q90. சாஞ்சியில் உள்ள தூணை கட்டியவர் யார்?
அசோகர்.
Q91. அசோகரின் சமகாலத்தில் தென் இந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்கள் யாவர்?
சோழர்கள், கேரளபுத்ரர்கள், பாண்டியர்கள், சத்யபுத்ரர்கள்.
Q92. அசோகரின் எந்த பெரிய கல்வெட்டு மிருக பலி தடை செய்யப்பட்டிருந்ததை கூறுகிறது?
கல்வெட்டு எண் 1.
Q93. மௌரியர்கள் காலத்தில் வறட்சி நிவாரணம் செய்யப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டு எது?
மஹஸ்தான் மற்றும் சோஹாகுரா கல்வெட்டுகள்.
Q94. எந்த கல்வெட்டில், அசோகர் தனது புத்த மதத்தின் மீது இருந்த நம்பிக்கையையும், புத்தரை ""பாகவதா"" என்றும் கூறியிருந்தார்?
A. Bhabra Minor Rock Edict.
Q95. சந்திரகுப்தர் எவ்வாறு மறைந்தார்?
உணவு உண்ணா விரதம்.
Q96. நேபாளத்துக்கு செல்லும் எந்த வழி "அரசர்க்குரிய வழி" யாக - royal route - எனப்பட்டது?
பாடலிபுத்ரம் -- வைசாலி -- சம்பரன் -- நேபாளம்.
Q97. மௌர்யர்களின் "கண்டக சோதனா" என்ற அமைப்பு எதைக் குறிக்கிறது?
குற்றவியல் நீதிமன்றங்கள்.
Q98. மௌர்யர்கள் காலத்தில் நீதியை நிலைநாட்ட உதவிய புத்தகங்கள் யாவை?
தர்மா, ராஜாசானா, வ்யாவஹர.
Q99. அசோகரின் எந்த கல்வெட்டு "மகாராணியின் கல்வெட்டு" எனப்பட்டது?
சிறு தூண் கல்வெட்டு எண் 3.
Q100. எந்த கல்வெட்டில் அசோகர் தன்னை "அசோக மன்னர்" “Ashoka Raja” என குறிப்பிட்டிருந்தார்?
கர்நாடகவின் ப்ரம்மகிரியில் உள்ள சிறிய கல்வெட்டு எண் 2.
Q101. மௌர்யர்களை எந்த நூல் “ Sudra-Prayast-adharmikah” என குறிப்பிடுகிறது?
புராணங்கள்.
Q102. அசோகரை யாரை முந்தி (supersede) மன்னரானார்?
அவருடை அண்ணன் சுசிமா என்பவரை -- காரணம் அவரால் தக்ஷசீலத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க முடியாததால்.
Q103. அசோகர் தன்னுடைய கல்வெட்டுகளின் தனது மகன்களில் ஒருவர் பெயரை மட்டுமே குறிப்பிட்டிருந்தார். அவர் யார்?
திவாரா.
Q104. அசோகரின் கல்வெட்டுகளில் அவருடைய எந்த மகாராணியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது?
கருவாகி -- அவருடைய ஆன்மீக மற்றும் பொதுச்சேவையில் அதிகமான ஈடுபாட்டினால்.
Q105. அசோகர் தனது எந்த கல்வெட்டில் "மகத மன்னர்" எனவும் குறிப்பிட்டிருந்தார்?
பாப்ரா கல்வெட்டு -- பஞ்சாப் -- இந்தியா.
Q106. மௌரிய அரசவையில் தங்கியிருந்த கிரேக்க தூதுவர்கள் யாவர்?
மெகஸ்தனிஸ், டெய்மக்கஸ், டயோனிசியஸ்
Q107. மௌரிய சாம்ராஜ்யம் உருவான வரலாறைக் கூறும் நூல் எது?
வம்சதபக்ஷினி.
Q108. சந்திரகுப்த மௌரியா ஜைன மதத்தை தழுவியதற்கான ஆதாரம் உள்ள நூல்…..
பரிசிஸ்டபர்வன்.
Q109. மௌர்யர்கள் காலத்து நகர நீதித்துறை உயர் அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
மகாமத்ரா
Q110. மௌரியர்கள் காலத்தில் அடிமைகளும், கந்து வட்டி வசூலிக்கும் பழக்கமும் இருந்தத்தாக எந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது?
மெகஸ்தனிஸ் எழுதிய "இண்டிகா".
Q111. சாரநாத் தூணிலிருந்து தேசிய சின்னம் எடுக்கப்பட்டபோது, ஒரு சிறிய பகுதி விடப்பட்டது. அது என்ன?
தலைகீழ்/ஒரு மணி வடிவத்தில் இருந்த தாமரை மலர்.
Q112. பராபர் மலைக்குகைகளில் (ஜெஹானாபாத் மாவட்டம், பீஹார்) எத்தனை கல்வெட்டுகள் உள்ளன?
மூன்று.
Q113. நினைவுச்சின்னங்கள் செய்வதற்கு பாறைகளை/கற்களை பயன்படுத்த தொடங்கியவர் யார்?
அசோகர்.
Q114. அசோகரின் சமகாலத்து கிரேக்க மன்னர்கள் யார்?
Antiochus II Theos, Ptolemy III Philadelphus மற்றும் Antigono Gonatus.
Q115. அசோகரின் எந்த மகாராணி, அசோகர் புத்த மதத்திற்கு உதவுவதை எதிர்த்தார்?
திஸ்ஸாரக்கா.
Q116. ""நல்லொழுக்கங்களுடன் வாழ்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்"" "The people who behaved well would attain Svarga (Heaven)" . இது யாருடைய கூற்று?
அசோகர்.
Q117. மௌரியர்கள் கட்டுமானத்திற்கு அதிகமாக பயன்படுத்திய பொருள் எது?
மரம்.
Q118. கி.மு. 182ல், இந்தியா மீது படையெடுத்து, வட மேற்கின் சில பகுதிகளை கைப்பற்றிய பேக்டீரியா (இன்றைய துருக்மெனிஸ்தான்) மன்னர் யார்?
திமெத்ரியஸ்
Q119. அசோகரின் தந்தை பிந்துசாரர் மறைவின் போது, அசோகர் எங்கிருந்தார்?
உஜ்ஜெய்ன் பகுதி ஆளுநராக இருந்தார்.
Q120. தந்தை மறைந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அசோகர் பதவி ஏற்றதற்கான காரணம் என்ன? Ashoka’s coronation was performed after four years of his ascending the throne. Why?
அவருடைய ஆன்மீக ஆச்சார்யர்களின் அறிவுரையின் காரணமாக.
Q121. மௌர்யர்களில் எந்த புகழ்பெற்ற அரசர், அவருடைய கடைசி காலத்தில், கர்நாடகாவின் சரவணபேலகுலா என்ற இடத்திற்கு சென்று உண்ணா விரதமேற்று மறைந்தார்?
சந்திரகுப்த மௌரியர்.