Khub.info Learn TNPSC exam and online pratice

சுங்கா & கன்வா வம்ச ஆட்சி -- SUNGA AND KANVA DYNASTY -185 – 26 BC

Q1. சுங்கா வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
"புஷ்யமித்ர சுங்கா -- மௌரிய அரசரான ப்ருஹத்ரதாவை கொலை செய்து அந்த ஆட்சியை முடிவுறச் செய்து இந்த வம்ச ஆட்சியை (கி.மு.185 - 73 வரை நீடித்தது) நிறுவினார். "

Q2. சுங்கா வம்ச ஆட்சியின் இதர மன்னர்கள் யாவர்?
அக்னி மித்ரா, சுஜ்யஷ்தா, வசுமித்ரா, மற்றும் அக்னிமித்ராவின் புதல்வர்கள் வஜ்ரமித்ரா, பாகவதா, கடைசியாக தேவபூதி.
Q3. சுங்க வம்சத்துக்கு எதிராக இருந்த செயல்கள் யாவை?
பிராமணர்கள் ஆதிக்கமும், பாகவதா பிரிவு இறை நம்பிக்கையும்.
Q4. புஷ்யமித்ரரின் சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற இலக்கண நிபுணர் யார்?
பதாஞ்சலி.
Q5. சுங்கா வம்சத்தின் கடைசி அரசரான தேவபூதி -யை கொலை செய்து கன்வா வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
வசுதேவா -- இவர் தேவபூதியின் அரசவையில் ஒரு அமைச்சராக இருந்தார். இந்த வம்சம் கி.மு. 73 முதல் 26 வரை ஆட்சி செய்தது.
Q6. கன்வா வம்ச ஆட்சியின் இதர மன்னர்கள் யார்?
பூமிமித்ரா, இவரைத் தொடர்ந்து இவரது மகன் நாராயணா மன்னராக இருந்தனர். இவருக்கு பிறகு சுசவர்மன் மன்னராகி, ஆந்திர மன்னர்களால் நீக்கப்பட்டார்.