Khub.info Learn TNPSC exam and online pratice

சதவாகன வம்ச ஆட்சி -- SATAVAHANA DYNASTY: கி.மு 230 முதல் கி.பி. 199 வரை.

Q1. சதவாகன வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
சிமுகா -- SIMUKHA – மத்திய இந்தியாவான மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய பகுதிகளை சுமார் 460 ஆண்டுகள் ஆட்சி செய்தது.

Q2. சதவாகன வம்ச ஆட்சியின் முக்கிய மன்னர்கள் யாவர்?
கன்ஹா -- KANHA – சிமுகாவின் இளையவர். நாசிக் வரை எல்லையை நீட்டினார்.
ஸ்ரீசத்கர்னி -- SRI SATKARNI I – சிமுகாவின் மைந்தர். மேற்கு மாளவா, விதர்பா போன்ற பகுதிகளை கைப்பற்றி சேர்த்தார்.
ஸ்ரீசத்கர்னி 2 - SRI SATKARNI II – சுங்கா வம்சத்தினரிடமிருந்து கிழக்கு மாளவ பகுதிகளைக் கைப்பற்றினார்.
லம்போதரா -- LAMBODARA – சத்கர்னி 2 ஐ தொடர்ந்த மன்னர்.
அபிலாகா -- APILAKA – லம்போதராவின் மைந்தர்
ஹாலா -- HALA – சில முக்கியமற்ற மன்னர்களுக்கு பிறகு மன்னரானவர்.
கௌதமிபுத்ர சத்கர்னி -- GAUTAMIPUTRA SATKARNI – சதவாகன வம்சத்தின் முக்கிய மற்றும் புகழ்பெற்ற மன்னர். இழந்த பகுதிகளை மீட்டு, புதிய பகுதிகளை கைப்பற்றினார். புத்த மதத்தையும், பிராமணர்களையும் மிகவும் போற்றினார்.
வசிஷ்டிபுத்ர புலமாயி 1 -- VASHISHTIPUTRA PULAMAYI I – கௌதமி புத்ரரை தொடர்ந்து, ஆந்திராவின் பல புதிய பகுதிகளை கைப்பற்றியதுடன், கப்பற்படையை மேம்பாடு செய்தார்.
வசிஷ்டிபுத்ர புலமாயி ஸ்ரீசத்கர்னி -- VASHISHTIPUTRA PULAMAYI SRI SATKARNI – சத்ரப் மன்னர் ருத்ரமன் மகளை மணந்து, அவர்களுடைய சிநேகத்தை மேம்படுத்தினார்.
யஜ்ன ஸ்ரீசத்கர்னி -- YAJNA SRI SATKARNI – இந்த வம்சத்தின் மற்றொரு புகழ்பெற்ற மன்னர். தனது டெக்கான் பகுதிகளை திறம்பட பாதுகாத்து வந்தார்.
புலமாயி 4 -- PULAMAYI IV – இந்த வம்சத்தின் கடைசி மன்னர். இவருடைய மறைவுக்குப் பிறகு ஐந்து சிறு மன்னர் ஆட்சி பகுதிகளாக மாறியது.
Q3. கௌதமிபுத்ர சத்கர்னிக்கு வழங்கப்பட்ட சிறப்புப்பெயர் என்ன?
ஏகப்ராம்ஹனா
Q4. சதவாகன வம்சத்தின் கடைசி மன்னர் யார்?
புலமாயி 4
Q5. சதவாகன வம்சத்தால் ஆளப்பட்ட பகுதிகள் யாவை?
"மத்திய இந்தியா -- தெற்கில் கிருஷ்ணா நதியிலிருந்து மேற்கில் மாளவா- விலிருந்து கொங்கன் வரை , வடக்கில் சௌராஷ்டிரா, கிழக்கில் பேரார் வரை பரவியிருந்தது. "
Q6. மேற்கு சத்ராப் என்பவர்கள் யார்?
"சக வம்ச மன்னர்கள். மேற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளான குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேச பகுதிகளை கி.பி.199-380 வரை ஆண்டனர். "