குஷானா வம்சம் -- KUSHANA DYNASTY: கி.பி 30 - 240.
Q1. குஷான வம்ச ஆட்சியை நிறுவியது யார்?
குஜூலா கேட்ஃபைசெஸ் 1 ( Kujula Kadphises I.)
Q2. குஷான வம்சத்தின் மிக புகழ் பெற்ற மன்னர் யார்?
கனிஷ்கா -- கி.பி. முதல் நூற்றாண்டு.
Q3. மன்னர் கனிஷ்கர், இந்திய நாள்காட்டிக்கு (Indian calendar) அளித்த பங்களிப்பு என்ன?
சாலிவாகன Saka Era ஆண்டு முறையை கி.பி.78ல் தொடங்கிவைத்தார்.
Q4. கனிஷ்கர் காலத்தில் குஷான வம்சம் ஆண்டு வந்த பகுதிகள் யாவை?
"உத்திரபிரதேசம், பஞ்சாப், வடமேற்கு எல்லை பகுதி, பஹவால்பூர் பகுதி (சிங்த்) மற்றும் சில
ராஜ்புத்தானா, மாளவா, சௌராஷ்டிரா பகுதிகள். மேற்கில் பெஷாவர், ஆப்கானிஸ்தானும்
இந்த வம்ச ஆட்சியின் கீழ் இருந்தது. "
Q5. கனிஷ்கர் எந்த நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தார்?
பெஷாவார் -- முன் காலத்தில் "புஷ்பபுரா" என அழைக்கப்பட்டது.
Q6. கனிஷ்கர் அரசவையில் இருந்த ஆயுர்வேத சிகிச்சை முறையின் தந்தை எனப்பட்டவர் யார்?
சரக்கா -- Charaka.
Q7. குஷான வம்சத்தின் கடைசி மற்றும் புகழ் பெற்ற மன்னர் யார்?
"வசுதேவா -- VASUDEVA – இவருடைய ஆட்சி கி.பி.220 வரை நீடித்து, இரானிய சசானிய
வம்ச ஆட்சியாளர்களின் வருகையால் முடிவு பெற்றது. "