Khub.info Learn TNPSC exam and online pratice

குப்தர்கள் வம்ச ஆட்சி -- GUPTA EMPIRE –கி.பி 300 முதல் 750

Q1. குப்தர்கள் சாம்ராஜ்யத்தை நிறுவியர் யார்?
"சந்திரகுப்தர் 1. இவருக்கு முன், ஸ்ரீகுப்தர் 1 மற்றும் கடோத்கஜ குப்தர் 1 ஆட்சியில் இருந்தனர். இருந்தாலும் இவர்களுடைய ஆட்சி பெயரளவுக்கு மட்டுமே இருந்ததேயன்றி, வேறு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருந்ததால், சந்திரகுப்தர் 1 (கடோத்கஜ குப்தரின் மகன்) இந்த வம்ச ஆட்சியை நிறுவியதாக கருதப்படுகிறது. "

Q2. குப்தர்கள் ஆட்சி எவ்வாறு விவரிக்கப்படுகிறது?
இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் "பொற்காலம்" என அழைக்கப்படுகிறது.
Q3. சந்திரகுப்தர் 1 ந் ஆட்சி எப்போது தொடங்கியதாக கருதப்படுகிறது?
26 பிப்ரவரி கி.பி. 320
Q4. சந்திரகுப்தர் 1 ஐ தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
சமுத்ரகுப்தர்.
Q5. சமுத்ரகுப்தர் ஆட்சிக்குப் பிறகு தொடர்ந்தவர் யார்?
சந்திரகுப்தர் 2 -- இவர் "விக்ரமாதித்யா" எனவும் அழைக்கப்பட்டார்.
Q6. சந்திரகுப்தா 2 தனது மகளை யாருடன் திருமணம் முடித்தார்?
"அவருடைய மகள் பெயர் ப்ரபாவதி. மத்திய இந்தியாவில் ஆட்சிபுரிந்த வாடகா வம்ச மன்னர் ருத்ரசேனா 2 உடன் திருமணம் நடந்தது. His daughter’s name was Prabhavati married to Vataka King Rudrasena II."
Q7. குப்தர்கள் சாம்ராஜ்யம் பரவியிருந்த பகுதிகள் யாவை?
"சுருக்கமாக சொன்னால், வங்காள விரிகுடா முதல் அரபிக்கடல் எல்லை வரை. தென் இந்தியாவின் தென் கோடியைத் தவிர்த்து, வடக்கில் குஜராத், கத்தியாவார், சிந்த் மற்றும் இதர பகுதிகள் இவர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. "
Q8. குப்தர்கள் காலத்தில் விஜயம் செய்த சீன யாத்திரிகர் யார்?
ஃபா ஹியான்.
Q9. சந்திரகுப்தர் 2 க்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் யார்?
குமரகுப்தர்.
Q10. குமரகுப்தரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மன்னர் யார்?
ஸ்கந்தகுப்தர். குப்தர்கள் ஆட்சியின் கடைசி சிறந்த மன்னர்.
Q11. ஸ்கந்தகுப்தர், பாரசீகத்தையும், இந்தியாவையும் மிரட்டி வந்த ஹூனா வம்ச படையெடுப்பை முறியடித்ததால் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புப்பெயர் என்ன?
விக்ரமாதித்யா -- இதே சிறப்புப்பட்டம் சந்திரகுப்தர் 2 மன்னருக்கு முன் அளிக்கப்பட்டிருந்தது.
Q12. ஹூனா படையெடுப்பை தடுத்து வெற்றி பெற்ற ஸ்கந்தகுப்தரின் வரலாறு எந்த நூல்களில் விவரிக்கப்பட்டிருந்தது ?
சந்திர வ்யாகரனா மற்றும் கதா சரித் சாகரா.
Q13. குப்தர்களின் எந்த மன்னர் ஆட்சியில், சிநேக மன்னர்கள் விலகியதின் காரணமாக, குப்தர்கள் ஆட்சி சரிவை சந்திக்கத் தொடங்கியது?
புத்த குப்தா.
Q14. குப்தர்கள் சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னர் யார்?
விஷ்ணுகுப்தர்.
Q15. குப்தர்கள் ஆட்சிக்காலத்தைப் பற்றி விவரிக்கும் நூல்கள் யாவை?
"கதாசரிதசாகரா -- சோம்தேவ்; ஸ்வப்னவாசவதத்தா -- பாசா; சந்திரகுப்த பரிப்ரிச்சிஹா -- சேது பந்தா; காவ்யா மிமாம்சா -- ஆயுர்வேத தீபிகா. "
Q16. குப்தர்கள் காலத்து முக்கியமான குகை, மலைக்குடைவு கோவில்கள் யாவை?
அஜந்தா, எல்லோரா (மகாராஷ்டிரா) மற்றும் உதயகிரி (ஒடிசா)
Q17. குப்தர்கள் காலத்து முக்கிய இலக்கிய நூல்கள் யாவை?
ம்ரிச்சகட்டிகா - சுத்ரகா;
முத்ரகாசா, தேவிசந்திரகுப்தம் -- விசாகதத்தா;
அஷ்டத்யாயி, மகாபாஷ்யா (சமஸ்கிருத இலக்கணம்) -- பணினி
பதாஞ்சலி அமரகோசா -- அமரசிம்ஹா
சந்திரவ்யாகரணம் -- சந்திரகோமியா (சீனர்)
Q18. இலக்கிய பங்களிப்புக்காக ஸ்கந்தகுப்தருக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பட்டம் என்ன?
கவிராஜா.
Q19. சமுத்ரகுப்தரின் அரசவையில் இருந்த புகழ்பெற்ற கவிஞர் யார்?
ஹரிசேனா.
Q20. குப்தர்கள் அரசவையில் இருந்த சிறந்த ஒன்பது அமைச்சர்கள் ""நவரத்தினங்கள்"" என அழைக்கப்பட்டனர். அவர்கள் யார்?
"காளிதாஸ், அமரசிம்ஹா, விசாகதத்தா, தன்வந்திரி, பக்தமார ஸ்தோத்ரா, ஷங்கு, வேதாள் பட்டா, வராஹ மிஹிரா, வரருச்சி. "
Q21. அறிவியலுக்கு குப்தர்களின் பங்களிப்பு என்ன?
1. பூஜ்யத்தை கண்டுபிடித்ததினால் ஏற்பட்ட தசம விதிகள்.
2. சூர்ய சித்தாந்தா -- SURYA SIDDHANTA : ஆர்யாபட்டா வினால் எழுதப்பட்டது. சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் பற்றி விவரிக்கும் நூல்.
3. ஆர்யாபட்டா அவர்களின் பூமியைப்பற்றிய கணிப்புகள் இன்றைய அறிவியல் கண்டு - பிடிப்புகளுக்கு இணையாக இருந்தது.
4. பூமி தன்னைத்தானே தன் அச்சில் சுழல்கிறது என்ற தத்துவ உண்மையை உலகுக்கு எடுத்துரைத்த முதல் வானியல் நிபுணர் ஆர்யபட்டா.
5. ஆர்யபாட்டியம் என்பது ஆர்யபட்டரின் கணிதத்தின் முக்கிய பகுதிகளை விவரிக்கும் நூல்.
6. ப்ருஹத் மித்ரா -- வராஹ மிஹிராவின் வானியல், புவியியல், தாவரவியல், மற்றும் வரலாற்றைப்பற்றிய மிகச்சிறந்த நூல்.
7. வராஹ மிஹிரரின் இதர அறிவியல் நூல்கள் -- பஞ்ச சித்தாந்திகா, ப்ருஹத் ஜாடகா.
8. ப்ரம்ம குப்தாவின் நூல்கள் - ப்ரம்மஸ்ஃபுடா சித்தாந்தா மற்றும் கண்ட காட்யாகா
9. வைசேஸிக இயற்பியல் வல்லுநர்கள் நிலையம் -- அணு விதிகளை விவரித்தது.
10. ஹஸ்த்யாயுர்வேதா -- பாலகாப்யா எழுதிய கால்நடை மருத்துவத்தை பற்றிய நூல்.
Q22. குப்தர்கள் தங்கள் நாணயங்களை எந்த அரசு நாணயங்களைப் போல் தயாரித்தனர்?
குஷான வம்ச நாணயங்களைப் போல்.
Q23. குப்தர்களின் நாணயங்களில் எந்த குப்த மன்னரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது?
சமுத்ரகுப்தர்.
Q24. குப்தர்கள் காலத்து முதல் மற்றும் கடைசி மன்னர்கள் யாவர்?
முதல் -- ஸ்ரீகுப்தா; கடைசி -- விஷ்ணுகுப்தா.
Q25. குப்தர்கள் காலத்து எந்த நூல், மௌரியர்கள் காலத்து ""அர்த்த சாஸ்திர""த்துக்கு இணையானது என கருதப்படுகிறது?
"நீதிசாரா" எழுதியவர் கமண்டகா.
Q26. சந்திரகுப்தர் 1 அரியணைக்கு ஏறிய விவரத்தை விவரிக்கும் நூல் எது?
கௌமுடி மகோத்சவா.
Q27. குப்தர்களின் முன் கால மன்னர்களைப்பற்றி விவரித்த சீன யாத்திரிகர் யார்?
இத்ஸிங்.
Q28. குப்தர்கள் காலத்து "நவநீடகம்" “Navanitakam” என்ற நூல் எதைப் பற்றியது?
மருத்துவம்/மருந்துகள்.
Q29. பழங்காலத்து நாளந்தா பல்கலைக்கழகம் எந்த குப்த மன்னரால் நிறுவப்பட்டது?
குமரகுப்தர் 1
Q30. குப்தர்கள் காலத்து காளிதாசரால் எழுதப்பட்ட நூல்கள் யாவை?
"அபிஞான சாகுந்தலம், மேகதூதம், ரகுவம்சம், ரிதசம்ஹாரா, மாளவிகாக்னிமித்ரம் மற்றும் குமார சம்பவம். "
Q31. எந்த புராணங்களில் குப்தர்களின் வம்ச வரிசை விரிவாகக் கூறப்பட்டுள்ளது?
வாயு, மத்ஸ்யா, விஷ்ணு, பாகவதா, ஸ்கந்த, ப்ராமனா மற்றும் மார்க்கண்டேய புராணம்.
Q32. புகழ்பெற்ற குப்த மன்னர்களை வரிசைப்படுத்துக.
"1. ஸ்ரீகுப்தா 1 ; 2. கடோத்கஜா குப்தா 1 ; 3. சந்திர குப்தா 1 ; 4. சமுத்திர குப்தா 1 ; 5. சந்திரகுப்தா 2 ; 6. குமார குப்தா; 7. ஸ்கந்த குப்தா; 8. புத்த குப்தா; 9. விஷ்ணு குப்தா "
Q33. எந்த குப்த அரசர்கள் "விக்ரமாதித்யா" என்ற சிறப்பு பட்டப் பெயர்கள் பெற்றனர்?
சந்திரகுப்தர் 2 மற்றும் ஸ்கந்த குப்தர்.
Q34. இந்தியாவிற்கு விஜயம் செய்த சீன யாத்திரிகர்களை வரிசைப்படுத்துக.
"ஃபாஹியான் (399 to 412); ஹூவான் சுவாங் (633/634); வாங் ஹூவான் ஸே மற்றும் இத்சிங் (7வது நூற்றாண்டு) "
Q35. பழங்காலத்து வானியல் நிபுணர்களையும்/கணித மேதைகளையும் வரிசைப்படுத்துக. Varahamihira, Bhaskara, Brahma Gupta and Aryabhatta?
ஆர்யபட்டா, வராஹமிஹிரா, ப்ரம்மகுப்தா, பாஸ்கரா.
Q36. சமஸ்கிருத இலக்கண மேதைகளை வரிசைப்படுத்துக.
பணினி, பதாஞ்சலி, அமரசிம்ஹா, சந்திரகோவினா.
Q37. குப்தர்கள் காலத்தைப்பற்றிய கல்வெட்டுகள் சுமார் எத்தனை உள்ளன?
நாற்பத்திரெண்டு.