Khub.info Learn TNPSC exam and online pratice

தெலங்கானா

Q1. தெலங்கானா:
தொடக்கம் : 2.6.2014.
தலை நகர் : ஹைதராபாத்.
பரப்பளவு : 1,14,840 ச.கி.மீ.
மாநில எல் லை: மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்.
மொழி : தெலுங்கு, உருது.
மாவட்டங்கள் : 10
கல்வியறிவு : 66.50%
ஜனத்தொகை : 3,51,93,978
மக்களவை உறுப்பினர்கள் : 17
மாநிலங்களவை உறுப்பினர்கள் : 7
சட்டசபை உறுப்பினர்கள் : 119 + 40
மாநில மரம் : வன்னி.
மாநில பறவை : பாற்குருவி (Indian Roller)
மாநில மிருகம் : புள்ளி மான் (Spotted Deer)
மாநில மலர் : ஆவாரம்
மாநில சின்னம் : காகத்தியா பூர்ணகும்பம்
மாநில கீதம் : "ஜெய ஜெய ஹே தெலங்கானா..."
மாநில ஆறுகள் : கோதாவரி, கிருஷ்ணா, பீமா, முசி, மஞ்சிரா.
மாநில ஆளுநர் : E.S.L. நரசிம்மன்.
மாநில முதன் மந்திரி : K. சந்திர சேகரராவ்.


Q2. தெலங்கானா உருவாவதற்கு காரணமாயிருந்து, முதல் முதலமைச்சராகவும் ஆனவர் யார்?
K. சந்திரசேகர ராவ்.
Q3. தெலங்கானா மாகாணத்தின் மாவட்டங்களும் அவற்றின் முக்கியத்துவம் யாது?

1. அடிலாபாத் : சுமார் 45 சதவிகிதம் வனப்பகுதி - மர வேலைப்பாடுகளும், விளையாட்டுப் பொருட்கள் (கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி மாவட்டம் - பொச்சேரா, குண்டாலா நீர்வீழ்ச்சிகள், சில வனவிலங்கு சரணாலயங்களும் சுற்றுலா தலங்கள்.

2. ஹைதராபாத் : தலை நகரம் - (ஆந்திரப்பிரதேசம் பகுதியில் இந்த நகரத்தைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது). இது தெலங்கானா மாவட்ட்த்தின் நிரந்தர தலை நகரம்.

3. கரீம் நகர் : அடிலாபாத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், வாரங்கல், மேடக், நிஸாமாபாத் இதன் எல்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாவட்டம். சில கோட்டைகளும், ஹிந்து கோயில்களும் முக்கிய சுற்றுலா தலங்கள். விவசாயம், சிங்கரேணி நிலக்கரி சுரங்கம், ராம குண்டம் அனல்மின் நிலையம் மற்றும் வெள்ளி கை வேலைப்பாட்டு பொருட்கள், மற்றும் சிமெண்ட் தொழிற்சாலை.

4. கம்மம்: ஆந்திரப்பிரதேசம், நல்கொண்டா, வாரங்கல், சத்தீஸ்கர் இதன் எல்லை, கோதாவரி முக்கிய ஆறு, சிங்கரேணி நிலக்கரி சுரங்கம், கோத்தகுடம் அனல்மின் நிலையம் இங்கு அமைந்துள்ளது. மாம்பழம், முந்திரி, தென்னை, கோக்கோ, மிளகு ஆகியவை முக்கிய விவசாய பயிர்கள். கம்மம் கோட்டை, பத்ராசலம் ராமர் கோயில் ஆகியவை முக்கிய சுற்றுலா தலங்கள். கோயா, கொண்டா ரெட்டி, மற்றும் லம்பாடா மலைவாழ் மக்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதி.

5. மகபூப் நகர் : ஆந்திரப்பிரதேசம், மகாரஷ்டிரா, ரங்கா ரெட்டி மற்றும் நல்கொண்டா மாவட்டங்கள் இதன் எல்லை. முன்பாக இது ருக்கம்மாபேட், பலமூர் எனவும் அழைக்கப்பட்ட மாவட்டம். விவசாயம் முக்கிய தொழில்.

6. மேடக் : மகாராஷ்டிரா, ரங்கா ரெட்டி, நல்கொண்டா, வாரங்கல், கரீம் நகர், நிஸாமாபாத் இதன் எல்லை. இதன் தலை நகர் கங்கா ரெட்டி நகரம். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நகரம். விவசாயமே முக்கிய தொழில்.

7. நல்கொண்டா : ஆந்திரப்பிரதேசம், மகபூப் நகர், ரங்கா ரெட்டி, மேடக், வாரங்கல், கம்ம ம் மாவட்டங்கள் இதன் எல்லை. நெல், பருப்பு வகைகள், எலுமிச்சை / சாத்துக்குடி, எண்ணெய் வித்துக்கள் முக்கிய பயிர். நாகார்ஜுனா சாகர் அணை (கிருஷ்ணா நதி) இந்த மாவட்ட்த்தில் உள்ளது. சில்க், வெல்லம், தோல், சிமெண்ட் மற்றும் அரிசி ஆலைகள் முக்கிய தொழில். போச்சம்பள்ளி மற்றும் புட்டபக்கா புடவைகளுக்கு புகழ்பெற்ற மாவட்டம். புவனகிரி, சமஸ்தான் ராயபேட்டா கோட்டைகள், சில ஹிந்து, ஜெயின் கோயில்கள் முக்கிய சுற்றுலா தலங்கள்.

8. நிஸாமாபாத் : மகாராஷ்டிரா, அடிலாபாத், கரீம் நகர், மேடக் மாவட்டங்கள் இதன் எல்லை. நீர்ப்பாசன வசதிகள் நிறைய இருப்பதால் விவசாயம் முக்கியத் தொழில். கரும்பு, மஞ்சள், நெல் தானிய வகைகள் மற்றும் அனைத்து காய்கறிகளும் முக்கிய பயிர் வகைகள். சர்க்கரை ஆலைகள் மற்றும் இதர தொழிற்சாலைகளும் நிறைந்த மாவட்டம். சில சிறிய அளவிலான சுற்றுலா தலங்களும், கோவில்களும் உள்ளன.

9. ரங்கா ரெட்டி : மகாராஷ்டிரா, மகபூப் நகர், நல்கொண்டா, மேடக் மாவட்டங்கள் இதன் எல்லை. தலை நகர் ஹைதராபாத் அமைந்துள்ள மாவட்டம். விக்கராபாத் இதன் தலைமையகம். சிமெண்ட் மற்றும் ரசாயன உர தொழிற்சாலைகள் உள்ளன.

10.வாரங்கல் : கம்மம், நல்கொண்டா, மேடக் மற்றும் கரீம் நகர் மாவட்டங்கள் இதன் எல்லை. காகத்தியா சாம்ராஜ்யத்தின் தலை நகர். ஆந்திராவின் முதல் தலை நகரும் கூட. இந்த நகரம் UNESCO-வால், ஒரு புராதன நகரமாக 2013 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோதாவரி நதியால் விவசாயம் முக்கிய தொழில். ஆயிரம் கால் மண்டபம், வாரங்கல் கோட்டை, ராமர் கோயில் பக்கால் ஏரி போன்ற சில சுற்றுலா தலங்கள் உள்ளன. பல கல்வி நிலையங்களும் உள்ளன." "

தெலங்கானா

Q4. தெலங்கானா மாவட்டத்தில் எத்தனை மாநிலங்கள் அவை உறுப்பினர்கள்?
ஏழு
Q5. தெலங்கானா மாவட்டத்தில் எத்தனை மக்களவை தொகுதிகள் உள்ளன, அவை யாவை?

1. அடிலாபாத் (ST)
2. பெத்தப்பள்ளி (SC)
3. கரீம்நகர்
4. நிசாமாபாத்
5. ஸாஹீராபாத்
6. மேடக்
7. மல்காஜ்கிரி
8. செகந்திராபாத்
9. ஹைதராபாத்
10. செவெல்லா
11. மகபூப் நகர்
12. நாகர் கர்னூல் (SC)
13. நல்கொண்டா
14. போங்கிர்
15. வாரங்கல் (SC)
16. மஹபூப் நகர் (ST)
17. கம்மம்."
Q6. தெலங்கானா மாகாணத்தில் எத்தனை மாநகராட்சிகள் (Corporation) உள்ளன?

1. ஹைதராபாத்
2. வாரங்கல்
3. நிஸாமாபாத்
4. கரீம் நகர்
5. ராம குண்டம்
6. கம்மம்.