Khub.info Learn TNPSC exam and online pratice

அருணாச்சல பிரதேசம்

Q1. அருணாச்சல பிரதேசம்
தொடக்கம் : 20.2.1987.
தலை நகர் : இட்டா நகர்.
பரப்பளவு : 83,743 ச.கி.மீ.
மாநில எல்லை : அஸ்ஸாம், நாகாலாந்து, மியான்மார், பூட்டான், சீனா.
மொழி : ஆங்கிலம், ஹிந்தி.
கல்வியறிவு : 66.95%
மாவட்டங்கள் : 16
ஜனத்தொகை : 13,82,611
மக்களவை உறுப்பினர்கள் : 2
மாநிலங்களவை உறுப்பினர்கள் : 1
சட்டசபை உறுப்பினர்கள் : 60
மாநில மரம் : ஆலமரம் (Hollong)
மாநில பறவை : மலை இருவாய்ச்சி (Great Horn Bill)
மாநில மிருகம் : காட்டெருமை (Gayal)
மாநில மலர் : Lady's Slipper.
மாநில சின்னம் : மாநில கீதம் : மாநில ஆறுகள் : பிரம்மபுத்திரா.
மாநில ஆளுநர் : Brig.Dr.B.D.மிஷ்ரா
மாநில முதன் மந்திரி :பேமா காண்டு



Q2. அருணாச்சல பிரதேசம் - இதன் அர்த்தம் என்ன?

"சூரியன் உதிக்கும் பூமி" - Land of the Rising Sun.
"காலை ஒளி மலைப்பிரதேசம்" - Land of the Dawn Lit Mountains.                                                             இந்திய மாநிலங்களில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம்.                                                                                                                                        

Q3. ஆங்கிலேயர் வருகைக்கு முன் இப்பகுதியை ஆண்டவர்கள் யார்?
அஹோம் வம்சமும், மோன்பா அரசர்களும், ஆங்கிலேயர்கள், இந்த மலைப்பகுதியை அடைய முடியாத தினால், அப்போது ஆண்ட மன்னர்களின் ஒத்துழைப்பை ஒரு ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தி, அப்பகுதி மன்னர் தன்னிச்சையாக வடகிழக்கு எல்லை பகுதியாக இயங்க அனுமதிக்கப்பட்ட து. சுதந்திரத்திற்கு பிறகு அதே நிலை தொடர்ந்து, 20.1.72ல் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, 20.2.1987ல் மாகாண அந்தஸ்தைப் பெற்றது.
Q4. அருணாச்சல பிரதேசத்தின் தலை நகர் இடா நகர் எனப் பெயர் பெறக் காரணம்?

ITA கோட்டை - இமாலயத்தின் அடிவாரத்தில் பப்பும்பரே மாவட்டத்தில் உள்ளது இந்த கோட்டை.

Q5. அருணாச்சல பிரதேசத்தின் மாவட்டங்கள் யாவை?
1. அஞ்ஜா : சைனா, மியான்மார் நாடுகளும், லோகித், லோயர் திபாங் வேலி (பள்ளத்தாக்கும்) இதன் எல்லை. ஹவாய் தலைமையகம். இதுதான் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கடைசி மாவட்டம் - லோகித் மற்றும் சிறு ஆறுகள் நிறைய உள்ளன. விவசாயம் மட்டுமே முக்கிய தொழில். அமைதியான, ரம்மியமான சூழ் நிலையில் முக்கிய சுற்றுலா மாவட்டம்.

2. சங்லாங் : மியான்மார் நாடு, அஸ்ஸாம் மாகாணம், திராப் மற்றும் லோகித் மாவட்டங்கள் இதன் எல்லை. அதிகமான மழை பெய்யும் பகுதி. சுற்றுச்சூழல், விலங்குகள் அடர்ந்த பகுதி. மக்கள் தொகை அதிகமிருந்தும், மருத்துவ வசதி குறைவான மாவட்டம்.

3. கிழக்கு காமெங் : அஸ்ஸாம் மாகாணம், மேற்கு காமெங், குருங் குமி, பரும்பரே மாவட்டங்கள், மற்றும் திபெத் இதன் எல்லை. ஜும் விவசாய முறை பரவலாக உள்ளது. மீன்பிடி தொழில், பழ வகைகள் பயிர் முக்கியமான தொழில்.

4. கிழக்கு சீயாங் : பாசிகாட் இதன் தலை நகரம். அஸ்ஸாம் மாநிலம், லோயர் திபாங் வேலி, அப்பர் சியாங், வெஸ்ட் சியாங் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை.

5. குருங் குமி : கோலோரியாங் இதன் தலை நகரம். சீன நாடு, கிழக்கு காமெங், பரும்பாரே, லோயர் சுபன்சிரி, அப்ப சுபன்சிரி ஆகியவை இதன் மாவட்ட எல்லைகள்.

6. லோஹித் : தேஸு இதன் தலை நகரம். சாங்லாங், அஞ்ஜா, லோயர் திபாங் வேலி, மாவட்டங்களும் அஸ்ஸாமும் இதன் தலை நகரம். மலை வாழ் மக்கள் அதிகமாக வாழும் மாவட்டம்.

7. லாங்டிங் : மியான்மார், நாகாலாந்து மற்றும் திராப் மாவட்டம் இதன் எல்லை.

8. லோயர் திபாங் வேலி : அஸ்ஸாம் மா நிலம், லோஹித் அஞ்ஜா, திபாங் வேலி, அப்பர் சியாங், ஈஸ்ட் சியாங் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. ரோயிங் இதன் தலை நகர்.

9. திபாங் வேலி : அனினி இதன் தலை நகரம். சீனா, லோயர் திபாங் வேலி, அப்பர் சியாங் மாவட்டங்கள் இதன் எல்லை. வடகிழக்கு இந்தியாவின் கடைசி எல்லை.

10. லோயர் சுபன் சிரி : 'ஜீரோ' இதன் தலை நகர். அஸ்ஸாம், ப ப்பும்பரே, குருங் குமி, அப்பர் சுபன்சிரி மற்றும் மேற்கு சியாங் மாவட்டங்கள் இதன் எல்லை. 11. பப்பும்பாரே : யுபியா இதன் தலை நகரம். மா நில தலை நகர் இட்டா நகர் அமைந்துள்ள மாவட்டம். கிழக்கு காமெங், லோயர் சுபன்சிரி, குருங்குமி மாவட்டங்களும், அஸ்ஸாம் மாகாணமும் இதன் எல்லை.

12. தவாங் : பூடான், சீனா, மேற்கு காமெங் மாவட்டம் இதன் எல்லை. 1681ல் நிறுவப்பட்ட தவாங் மடம் (புத்த) மிகவும் புகழ் பெற்றது. மோன்பா மக்கள் அதிகமாக வாழும் பகுதி.

13. திராப் : கோன்சா இதன் தலை நகர். நாகாலாந்து மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களும், மியான்மார் நாடும் சங்லாங் மற்றும் லாங்டிங் மாவட்டங்களும் இதன் எல்லை.

14. அப்பர் சியாங் : யிங்கியாங் இதன் தலை நகர். சீனா, மேற்கு சியாங், கிழக்கு சியாங், லோயர் திபாங் வேலி, மற்றும் திபாங் வேலி மாவட்டங்கள் இதன் எல்லை.

15. அப்பர் சுபன்சிரி : டேபோரிஜோ இதன் தலை நகர். சீனா, குருங்குமி, லோயர் சுபன்சிரி, மேற்கு சியாங் இதன் எல்லை.

16. மேற்கு காமெங் : போம்டிலா இதன் தலை நகர். திபெத், பூடான், தவாங், கிழக்கு காமெங் மாவட்டங்களும், அஸ்ஸாம் மா நிலமும் இதன் எல்லை.

17. மேற்கு சியாங் : அலாங் இதன் தலைமையகம். சீனா, அப்பர் சியாங், கிழக்கு சியாங், லோயர் சுபன் கிரி, அப்பர் சுபன் கிரி மாவட்டங்கள் இதன் எல்லை."
Q6. அருணாச்சல பிரதேசத்தில் மலைவாழ் மக்கள் (சுமார் 80%) அதிகம். சில பெயர்களை கூறுக.
டுட்சா, டங்க்சா, நாக்டே, சின்ஃபோ, லிசு, நிஷி, மிஜி, ஸுலிங், அகா, ஆடி, மிக்கிர், கோன்யாக், வாஞ்சோ, மெம்பா, அப்தானிஸ், மோன்பா மற்றும் அபோர்ஸ்.
Q7. அருணாச்சல பிரதேசத்தின் முதல் முதன்மந்திரி யார்?
ப்ரேம் காண்டு தங்கோன் - 1975-1979.
Q8. அருணாச்சல பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினர்கள் எத்தனை?
ஒன்று
Q9. அருணாச்சல பிரதேசத்தின் மக்களவை உறுப்பினர்கள் எத்தனை?
இரண்டு. 1. அருணாச்சல் கிழக்கு 2.அருணாச்சல் மேற்கு.
Q10. அருணாச்சல பிரதேசத்தின் இயற்கை வளங்கள் யாவை?
நிலக்கரி, சுண்ணாம்பு, இரும்பு, க்ராஃபைட், குவார்ட்ஸ், க்யானைட், மைக்கா, செப்பு ஆகியவை. விவசாயம் முக்கிய தொழில்.