Khub.info Learn TNPSC exam and online pratice

அஸ்ஸாம்

Q1. அஸ்ஸாம்
தொடக்கம்:1912/1947/1956/1972
தலைநகர்: திஸ்பூர்
பரப்பளவு: 79000 ச.கி.மீ
மாநில எல்லை: அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுரா, மேகாலயா
மொழி: அஸ்ஸாமிஸ், போடோ, கர்பி, பெங்காலி, ஆங்கிலம்.
கல்வியறிவு: 73.18
மாவட்டங்கள்: 32
ஜனத்தொகை: 3,11,69,272
மக்களவை உறுப்பினர்கள்: 14
மாநிலங்களவை உறுப்பினர்கள்: 7
சட்டசபை உறுப்பினர்கள்: 126
மாநில கீதம்: ஓ மூர் அபுனார் தேக்ஸ்
மாநில சின்னம்:
மாநில ஆறுகள்: பிரம்மபுத்திரா, பரக்
மாநில பறவை: White Winged Wood Duck.
மாநில மிருகம்: ஒற்றைக்கொம்பு காண்டா மிருகம்
மாநில மரம்: Hallong
மாநில மலர்: Fox Tail Orchid
மாநில ஆளுநர்: ஜகதீக்ஷ் முகி
மாநில முதலமைச்சர்: சர்பானந்த் சோனோவால் 


 

Q2. வரலாற்று சுருக்கம்:
சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேலாக அஹோம் ராஜ வம்சத்தால் ஆளப்பட்டு வந்த இந்த பகுதி, ஆங்கிலேயர்களால் 1912ல் அஸ்ஸாம் மாகாணமாக்கப்பட்டு, சுதந்திரத்திற்கு பிறகும், மாகாண சீரமைப்பின் போதும் எந்த மாற்றமும் இல்லாமல் மாகாணமாக தொடர்ந்தது. 1963ல் நாகாலந்தும், 1972ல், மேகாலயா, அருணாச்சல பிரதேசமும், மிசோராமும், இதன் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாகாணங்களாக உருவாக்கப்பட்டன.
Q3. அஸ்ஸாம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
ப்ரக்ஜோதிஷ்புரா மற்றும் காம்ரூபா.
Q4. அஸ்ஸாம் மாநிலத்தின் எல்லைகள் யாவை?
இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா மாகாணங்களும், பூடான் மற்றும் வங்காள தேசமும் இதன் எல்லைகள்.
Q5. அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் முக்கிய மலைவாழ் மக்கள் யாவர்?
அபோர்ஸ், அங்காமி, ஆவோ, காசிஸ், லஹோரா, மிகிர்ஸ், சீமா, டங்குகுல்.
Q6. அஸ்ஸாம் மாநில தலை நகர் திஸ்பூர். இதன் முக்கிய அம்சங்கள் யாவை?

1. அஸ்ஸாம் மா நிலத்தின் முன்னாள் தலை நகர் ஷில்லாங். 1973ல் திஸ்பூர் தலை நகராக மாற்றப்பட்டது.
2. இறையியலில் முக்கியமான பசிஸ்தா ஆஸ்ரமும், புகழ்பெற்ற கலாச்சார மையம் - சங்கர் தேவ் கலாக்ஷேத்ரா இங்கு உள்ளது.
3. கவுஹாத்தி (அஸ்ஸாம்) தேயிலை ஏல மையம் இங்குள்ளது.
4. ஷில்பாக்ராம் - கைவினைப் பொருட்களுக்குப் புகழ் பெற்றது.
5. கவுஹாத்தி மக்களவை தொகுதியில் அடங்கியது."
Q7. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்கள் யாவை?
1. பக்ஸா : முஷால்பூர் இதன் தலை நகரம். பூடான் மற்றும் உடல்குரி, பார்பேட்டா, நல் பாரி, காம்ரூப், சிராங் மாவட்டங்கள் இதன் எல்லை. மானஸ் தேசிய பூங்கா உலகப் புகழ் பெற்றது.

2. பார்பேட்டா : கோல்பாரா, பொங்கை காவ்ன், சிராங், பக்ஸா, நல்பாரி, காம்ரூப் மாவட்டங்கள் இதன் எல்லை. இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள மாவட்டம்.

3. பொங்கை காவ்ன் : துப்ரி, கொக்ராஜார், சிராங், பார்பேட்டா மற்றும் கோல்பாரா மாவட்டங்கள் இதன் எல்லை. அஸ்ஸாமின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இங்கு இயங்கி வருகிறது.

4. கச்சார் : சில்க்சார் இதன் தலை நகரம். வங்காள தேசம், கரீம்கஞ்ச், ஹைலகண்டி, திமாஹாசம் மாவட்டங்களும் மணிப்பூர் மாகாணமும் இதன் எல்லைகள். பராக் நதி இந்த மாவட்ட த்தில் பாய்கிறது.

5. சிராங் : காஜல் காவ்ன் இதன் தலை நகரம். கொக்ரஜார், பொங்கைகாவ்ன், பார்பேட்டா மற்றும் பக்சா மாவட்டங்களும், பூடான் இதன் எல்லை. மனாஸ் தேசிய பூங்காவின் ஒரு பகுதி இந்த மாவட்டத்திலும் உள்ளது.

6. டராங் : மங்கள் டாய் இதன் தலை நகரம். மோரி காவ்ன், திஸ்பூர், பக்ஸா, உடல்குரி, சோனித்பூர், மாவட்டங்கள் இதன் எல்லை. மனாஸ் தேசிய பூங்காவும், கெராங் தேசிய பூங்காவும் இங்குள்ளது.

7. தேமாஜி : அருணாச்சல பிரதேசமும், தின்சுகியா, திப்ருகர், லக்கிம்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.

8. துப்ரி : மேற்கு வங்காளம், வங்காள தேசம் மற்றும் கோல்பாரா, பொங்கை காவ்ன், கொக்ரஜார் மாவட்டங்களும், மேகாலயாவும் இதன் எல்லை. இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள மாவட்டம். சில புராதன மசூதிகள் உள்ளன.

9. திப்ருகர் : தின்சுகியா, தேமாஜி, லக்கிம்பூர், சிவசாகர் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. அதிகமாக தேயிலை தோட்டங்கள் உள்ள மாவட்டம். பெட்ரோல், இயற்கை எரிவாயு மற்றும் வேறு சில விவசாய தொழில்களும் உள்ளன. நிலக்கரியும் எடுக்கப்படுகிறது.

10. திமா ஹாசோவ் : ஹாஃப்லாங் இதன் தலை நகர். நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா மாகாணங்களும், கச்சார், கர்பி அங்லாங், நகாவ்ன் ஆகிய மாவட்டங்களுமே இதன் எல்லை.

11. கோல்பாரா : மேகாலயாவும், காம்ரூப், பார்பேட்டா, பொங்கை காவ்ன், துப்ரி மாவட்டங்கள் இதன் எல்லை.

12. கோலாகாட் : நாகாலாந்து மற்றும் கர்பி அங்லாங், சோனித்பூர், லக்கிம்பூர், ஜோர் ஹாட் ஆகிய மாவட்டங்களும் இதன் எல்லை. உலகப்புகழ் பெற்ற காஸிரங்கா தேசிய பூங்கா (ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம்) இந்த மாவட்ட த்தில் உள்ளது. விவசாயம் முக்கிய தொழில். நுமாலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இங்கு உள்ளது.

13. ஹைலாகண்டி : மிசோரம், கரிம்கஞ்ச், கச்சார் மாவட்டங்கள் இதன் எல்லை.

14. ஜோர் ஹாட் : நாகாலாந்து, கோலாகாட், லக்கிம்பூர், சிவசாகர் மாவட்டங்கள் இதன் எல்லை.

15. காம்ரூப் : கோரோய்மாரி இதன் தலை நகர். மேகாலயா மற்றும் கோல்பாரா, பார்பேட்டா, நல்பாரி மற்றும் திஸ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.

16. காம்ரூப் மெட்ரோபாலிடன் : கவுஹாத்தி இதன் தலை நகர். திஸ்பூர், டர்ராங், மோரிகாவின் மாவட்டங்கள் மற்றும் மேகாலயா இதன் எல்லை.

17. கர்பி அங்லாங் : திஃபு இதன் தலை நகர். கோலகாட், மோரிகாவ்ன், நகாவ்ன், திமாஹசாவ் மாவட்டங்களும், மேகாலயா மற்றும் நாகாலாந்து இதன் எல்லை.

18. கரீம் கஞ்ச் : மிசோராம், திரிபுரா, வங்காள தேசம், மற்றும் கச்சார், ஹைலாகண்டி மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் இதன் முக்கிய தொழில்.

19. கொக்ராஜார் : மேற்கு வங்காளம், பூட்டான் மற்றும் சிராங், துப்ரி மாவட்டங்கள் இதன் எல்லை. மகா மாயா கோயில் மற்றும் சில சுற்றுலா தலங்கள் உள்ளன. புகழ்பெற்ற மணாஸ் தேசிய பூங்கா இந்த மாவட்ட த்தில் உள்ளது.

20. லக்கிம்பூர் : வட லக்கிம்பூர் இதன் தலை நகரம். அருணாச்சல பிரதேசம் மற்றும் சோனித்பூர், கோலாகட், ஜோர் ஹாட், திப்ருகார், தேமாஜி மாவட்டங்கள் இதன் எல்லை. அடர்த்தியான காடுகள் நிறைந்த மாவட்டம். விவசாயம் முக்கிய தொழில்.

21. மோரிகாவ்ன் : காம்ரூப் மெட்ரோபாலிடன், டர்ராங், சோனித்பூர், நகாவ்ன், கர்பி அங்லாங் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. போபிடோரா வனவிலங்கு சரணாலயம் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு பெயர் பெற்றது.

22. நகாவ்ன் : கர்பி அங்லாங், திமாஹசாவ், மோரிகாவ்ன், சோனித்பூர், கோலாகாட் மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலாவுக்கு பல முக்கிய தலங்கள் உள்ளன.

23. நல்பாரி : திஸ்பூர், காம்ரூப், பார்பேட்டா, பக்சா மாவட்ட ங்கள் இதன் எல்லை.

24. சிவசாகர் : நாகாலாந்து மற்றும் ஜோர் ஹாட், திப்ருகர் மாவட்டங்கள் இதன் எல்லை.

25. சோனித்பூர் : தேஜ்பூர் இதன் தலை நகரம். நகாவ்ன், டர்ராங், உதால்குரி, கோலாகாட், லக்கிம்பூர் மாவட்டங்களும், அருணாச்சல பிரதேசமும் இதன் எல்லை.

26. தின்சுகியா : அருணாச்சல பிரதேசம் மற்றும் திப்ருகர், தேமாஜி மாவட்டங்கள் இதன் எல்லை. திக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது. சுற்றுலா தலம். தேயிலை அதிகம் விளைகிறது.

27. உடால்குரி : அருணாச்சல பிரதேசம், பூடான் மற்றும் பக்சா, டராங், சோனித்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. புகழ் பெற்ற மணாஸ் தேசிய பூங்காவின் பகுதி இந்த மாவட்ட த்தில் உள்ளது.

28. பிஸ்வநாத்:

29. சராய்தேவ்:

30. ஹொஜாய்:

31. தெற்கு சல்மாரா மங்கசார்:

32. மேற்கு கர்பி அங்லாங்:
Q8. அஸ்ஸாமின் 14 மக்களவை தொகுதிகள் யாவை?

1. தனி சுதந்திர மாவட்ட தொகுதி (ST) இது அஸ்ஸாமின் திமாஹசாவ் மற்றும் கர்பி அங்லாங் மாவட்டங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தொகுதி.
2. பார்பேட்டா
3. துப்ரி
4. திப்ருகர்
5. கவுஹாத்தி
6. ஜோர் ஹட்
7. கலியபோர்
8. கரீம் கஞ்ச் (SC)
9. கோக்ரஜார் (ST)
10. லக்கிம்பூர்
11. மங்கல்டோய்
12. நௌகாங்
13. சில்ச்சார்
14. தேஜ்பூர்."
Q9. அஸ்ஸாமின் மாநிலங்களவை உறுப்பினர்கள் எத்தனை?
7
Q10. அஸ்ஸாமின் எந்த மாவட்டத்தில் தேயிலைத்தோட்டம் அதிகம் உள்ளது?
தின்சுகியா.
Q11. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற தேசிய பூங்கா எது?
காஸிரங்கா தேசிய பூங்கா - ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு புகழ் பெற்றது. கோலாகாட் மாவட்டத்தில் உள்ளது.
Q12. அஸ்ஸாமில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் எத்தனை எங்கு உள்ளன?
3, திக்பாய், பொங்கைகாவ்ன் மற்றும் நுமாலிகர் (இப்போது கட்டுமான நிலையில் உள்ளது).
Q13. அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய பண்டிகை எது?
பிஹு (BIHU)
Q14. அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் யாவை?
1. போடோ இன மக்களுக்கு தனி மா நிலம் கேட்டு போராட்டங்களும் தீவிரவாத செயல்களும்
2. கிராமப்புற மக்கள் வேலையின்மை.
Q15. அஸ்ஸாம் மாநிலத்தின் புகழ்பெற்றவர்கள் யாவர்?
1. ஃபக்ருதீன் அலி அகமது - முன்னாள் குடியரசு தலைவர்,
2. சோம் நாத் சட்டர்ஜி - முன்னாள் மக்களவை சபா நாயகர்,
3. பூபேன் ஹசாரிகா - புகழ்பெற்ற பாடகர்."
Q16. அஸ்ஸாம் அதிகமாக உற்பத்தி செய்யும் பொருட்கள்?
தேயிலை மற்றும் முகா சில்க்.
Q17. அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் யார்?
கோபிநாத் போர்தொலாய் - 1947 முதல் 1950 வரை.