பீஹார்
Q1. பீஹார்
தொடக்கம் : 1912/1936/1956.
தலை நகர் : பாட்னா.
பரப்பளவு : 94,163 ச.கி.மீ. (13வது பெரிய மாநிலம்)
மாநில எல்லை : சிக்கிம், உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம்.
மொழி : ஹிந்தி, உருது, போஜ்பூரி, ஆங்கிலம்.
கல்வியறிவு : 63.4%
மாவட்டங்கள் : 38
ஜனத்தொகை : 10,38,04,637
மக்களவை உறுப்பினர்கள் : 40
மாநிலங்களவை உறுப்பினர்கள் : 7
சட்டசபை உறுப்பினர்கள் : 243+75
மாநில மரம் : அரசமரம் (PEEPAL)
மாநில பறவை : சிட்டுக்குருவி (SPARROW)
மாநில மிருகம் : எருது (OX)
மாநில மலர் : சாமந்தி (MARIGOLD)
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : கங்கை, கோசி.
மாநில ஆளுநர் : லால்ஜி டாண்டன்
மாநில முதன் மந்திரி : நிதிஷ் குமார்.
Q2. வரலாற்று சுருக்கம்:
அசோக சக்கரவர்த்தியின் மௌரியர் ஆட்சியில் தொடங்கி, சுங்கா, குப்த, கில்ஜி, சுல்தான்கள், மொகலாய பேரரசு வம்சங்களால் ஆளப்பட்டு, 1764ல் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு வந்தது. 1936ல் தனி மாகாணம் ஆக்கப்பட்டு அதே நிலையில் சுதந்திரம் வரை இயங்கியது. இதன் ஒரு பகுதி 2000ல் ஜார்க்கண்ட் மாநிலமாக உருவானது.
Q3. பீஹாரின் 38 மாநிலங்கள் யாவை?
1. அராரியா : நேபாளம் மற்றும் சுபால், மாதேபூரா, புர்னியா, கிஷங்க்ஞ்ச் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயமே முக்கியத்தொழில்.
2. அர்வால் : ஜஹானாபாத், கயா, அவுரங்காபாத், ரோட்டாஸ், அரா மற்றும் பாட்னா மாவட்டங்கள் இதன் எல்லை. நக்சல் நடவடிக்கை அதிகமுள்ள மாவட்டம். விவசாயமே முக்கிய தொழில்.
3. அவுரங்காபாத் : ஜார்க்கண்ட் மற்றும் ரோட்டாஸ், அர்வால் கயா மாவட்டங்கள் இதன் எல்லை.
4. பங்கா : ஜார்க்கண்ட் மற்றும் ஜாமுர், முங்கேர், பகல்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. இந்து மத சுற்றுலா தலம்.
5. பெகுசராய் : லக்கிசராய், பாட்னா, சம்ஸ்திபூர், க காரியா மற்றும் முங்கேர் மாவட்ட ங்கள் இதன் எல்லை.
6. பகல்பூர் : மேற்கு வங்காளம் மற்றும் பங்கா, முங்கேர், க்காரியா, மாதேபுரா, கத்திஹார் மாவட்டங்கள் இதன் எல்லை. கங்கை நதி இந்த மாவட்ட த்தில் பாய்கிறது. கங்கை டால்ஃபின் சரணாலயம் இங்குள்ளது. விவசாயமே முக்கியத் தொழில்.
7. போஜ்பூர் : அர்ரா இதன் தலை நகரம். அர்வால், ரோட்டாஸ், பக்ஸார், சரண் மற்றும் பாட்னா மாவட்டங்கள் இதன் எல்லை. உத்திர பிரதேசமும் ஒரு சிறு தொலைவுக்கு இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில்.
8. பக்ஸார் : உத்திரபிரதேசம் மற்றும் கைமூர், ரோட்டாஸ், போஜ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
9. தர்பங்கா : சமஸ்திபூர், முசாஃபர்பூர், மதுபனி, ஸஹர்சா மற்றும் க காரியா மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில். காகித ஆலைகள், சர்க்கரை ஆலைகள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழில்கள் உள்ளன.
10. கிழக்கு சம்பரான் : மோதிஹாரி இதன் தலை நகரம். கோபால்கஞ்ச், மேற்கு சம்பரான், சீதாமார் ஹி, ஷிவ் ஹர், முஸாஃபர்பூர், சரண் மாவட்டங்களும், நேபாளமும் இதன் எல்லை.
11. கயா : ஜார்க்கண்ட் மாநிலமும், அவுரங்காபாத், அர்வால், ஜெஹானாபாத், நாளந்தா, நவடா மாவட்டங்கள் இதன் எல்லை. இந்துமத, புத்தமத சுற்றுலா தலம்.
12. கோபால் கஞ்ச் : உத்திரபிரதேச மாநிலமும், சிவான், மேற்கு சம்பரான், கிழக்கு சம்பரான், சரண் ஆகிய மாவட்டங்களும் இதன் எல்லை.
13. ஜமுய் : நவாடா, ஷேக்புரா, லக்கிசராய், முங்கோ, பங்க்கா மாவட்டங்களும், ஜார்க்கண்ட் மாநிலமும் இதன் எல்லை.
14. ஜெகானாபாத் : கயா அர்வால், பாட்னா, நாளந்தா மாவட்டங்கள் இதன் எல்லை. நக்ஸல் நடவடிக்கைகள் அதிகமாக இருந்த மாவட்டம், தற்போது முன்னேற்றப்பாதையில் செல்கிறது. பராபர் குகைகள் உள்ள மாவட்டம்.
15. கைமூர் : பபுவா இதன் தலை நகரம். உத்திர பிரதேசம் மாநிலம், பக்ஸார் மற்றும் ரோட்டாஸ் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில்.
16. கத்திஹார் : வங்காள தேசம், மேற்கு வங்காளம், பகல்பூர், பூர்னியா, மாவட்டங்கள் இதன் எல்லை.
17. சகாரியா : முங்கேர், பேகுசராய், சமஸ்திபூர், தர்பங்கா, சஹர்சா, மாதேபூரா, பகல்பூர் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை.
18. கிஷன் கஞ்ச் : வங்காள தேசம் மற்றும் நேபாளம், அராரியா, பூர்னியா மாவட்டங்கள் இதன் எல்லை. இஸ்லாமியர்கள் அதிகமுள்ள மாவட்டம்.
19. லக்கி சராய் : ஜமுய், ஷேக்புரா, பாட்னா, பேகுசராய் மற்றும் முங்கேர் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில். இந்து மத கோயில்களுக்கு சிறந்த சுற்றுலா தளம்.
20. மாதேபுரா : பகல்பூர், ககாரியா, சஹர்சா, சுபால், அராரியா மற்றும் புர்னியா மாவட்டங்கள் இதன் எல்லை. சிங்கேஷ்வர் சிவன் கோயில் புகழ் பெற்ற கோயில்.
21. மது பனி : நேபாளம், சீதா மார் ஹி, தர்பங்கா, சுபால் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில்.
22. முங்கேர் : பங்க்கா, ஜமுய், லக்கி சராய், பெகுசராய், ககாரியா மற்றும் பகல்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
23. முசாஃபர்பூர் : சமஸ்திபூர், வைஷாலி, சரண், கிழக்கு சம்பரன், சீதாமார் ஹி மற்றும் தர்பங்கா மாவட்டங்கள்இதன் எல்லை. லிச்சி பழங்களுக்கு புகழ்பெற்ற மாவட்டம். விவசாயம் முக்கிய தொழில். சில தொழிற்சாலையும் உண்டு.
24. நாளந்தா : பீஹார் ஷரீஃப் இதன் தலை நகரம். நவாடா, கயா, ஜெகானாபாத், பாட்னா, ஷேக்புரா, மாவட்டங்கள் இதன் எல்லை. நாளந்தா பல்கலைக்கழகம் இருந்த இடிபாடுகள் ஒரு சுற்றுலாத்தலம். பாதுகாப்புத்துறையின் தளவாட த் தொழிற்சாலை (Ordnance Factory) இங்குள்ளது.
25. நவாடா : ஜார்க்கண்ட் மா நிலமும், கயா, நாளந்தா, ஷேக்புரா மற்றும் ஜுமாய் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில்.
26. பாட்னா : லக்கிசராய், ஷேக்புரா, நாளந்தா, ஜெஹானாபாத், அர்வால், போஜ்பூர், சரண், வைஷாலி சமஸ்திபூர், பெகுசராய் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை.
மிகவேகமாக வளர்ந்து வரும் இந்திய நகரம் பாட்னா. விவசாயமும், தோல் தொழிற்சாலைகள், கைவேலைப்பாடுகள், உணவுப் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவை உள்ளன. பாட்னா நகர் தவிர்த்து, மீதமுள்ள பகுதி பிற்படுத்தப்பட்ட மாவட்டமாக கருதப்படுகிறது.
27. புர்னியா : வங்காள தேசம் மற்றும் கத்திஹார், பகல்பூர், மாதேபுரா, அராரியா மற்றும் கிஷன் கஞ்ச் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில்.
28. ரோட்டாஸ் : சசாரம் இதன் தலை நகரம். கைமூர், பக்சார், போஜ்பூர், அர்வால், அவுரங்காபாத் மாவட்டங்கள் மற்றும் ஜார்க்கண்ட் மா நிலம் இதன் எல்லை. விவசாயமும் சிறிய அளவிலான தொழிற்சாலைகளும் இம்மாவட்டத்தின் பொருளாதாரம்.
29. சகர்ஸா : ககாரியா, தர்பங்கா, சுபால், மாதேபுரா மாவட்டங்கள் இதன் எல்லை.
30. சமஸ்திபூர் : பேகுசராய், பாட்னா, வைஷாலி, முசாஃபர்பூர், தர்பங்கா ககாரியா மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயமும் சிறிய அளவிலான தொழிற்சாலைகளும் உள்ளன.
31. சரண் : சப்ரா இதன் தலை நகரம். உத்திரபிரதேச மாநிலமும், சிவான், கோபால்கஞ்ச், கிழக்கு சம்பரான், முசாஃபர்பூர், வைஷாலி, பாட்னா மற்றும் போஜ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
32. ஷேக்புரா : நவாடா, நாளந்தா, பாட்னா, லக்கி சராய் மாவட்டங்கள் இதன் எல்லை.
33. ஷேவ்கர் : முசாஃபர்பூர், கிழக்கு சம்பரான், சீதாமார்ஹி மாவட்டங்கள் இதன் எல்லை.
34. சீதாமார்ஹி : நேபாளமும், கிழக்கு சம்பரான், ஷிவ் ஹர், மதுபனி, தர்பங்கா மாவட்டங்கள் இதன் எல்லை.
35. சிவான் : உத்திரபிரதேச மாநிலமும், கோபால் கஞ்ச், சரண் மாவட்டங்கள் இதன் எல்லை.
36. சுபால் : நேபாளமும், அராரியா, மாதேபுரா மற்றும் மதுபனி மாவட்டங்களும் இதன் எல்லை.
37. வைஷாலி : ஹாஜிபூர் இதன் தலை நகரம். பாட்னா, சரண், முசாஃபர்பூர், சமஸ்திபூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
38. மேற்கு சம்பரான் : பேட்டியா இதன் தலை நகரம். உத்திரபிரதேசமும், நேபாளமும், கிழக்கு சம்பரான், கோபால் கஞ்ச் மாவட்டங்களும் இதன் எல்லை."
Q4. பீஹாரின் தலை நகரம் பாட்னாவை பற்றிய முக்கிய அம்சங்கள் யாவை?
1. மகத சாம்ராஜ்ய மன்னர் அஜாத சத்ரு வால் இந்த நகரம் நிறுவப்பட்டது.
2. முன் காலத்தில் பாடலிபுத்ரம் என அழைக்கப்பட்டது.
3. உலகின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்று.
4. மகத, நந்தா, மௌர்யா, சுங்கா, குப்த பேரரசுகளின் போது தலை நகரமாக விளங்கியது.
5. இது ஒரு மா நகராட்சி - Corporation.
6. கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது.
7. உருண்டை வடிவ பழங்காலத்து தானியக்கிடங்கு, சீக்கியர்களின் புனித ஆலயங்கள் போன்ற சில சுற்றுலாத்தலங்களும் உள்ளன.
8. கலை, தொழிற் நுட்பம், மருத்துவ, சட்டம் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் உள்ளன."
Q5. பீஹார் மா நிலத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள் யாவை?
1. வால்மீகி நகர், 2. மேற்கு சம்பரான், 3. கிழக்கு சம்பரான், 4. ஷேவ் ஹர், 5. சீதாமார் ஹி, 6. மது பனி, 7. ஜன் ஜார்பூர், 8. சுபால், 9. அராரியா, 10. கத்திஹார், 11. கிஷண் கஞ்ச், 12. பூர்னியா, 13. மாதேபுரா, 14. தர்பங்கா, 15. முசாஃபர்பூர், 16. வைஷாலி, 17. கோபால் கஞ்ச்(SC), 18. சிவான், 19. மகராஜ் கஞ்ச், 20. சரண், 21. ஹாஜிபூர் (SC), 22. உஜியார்பூர், , 23. சமஸ்திபூர் (SC), 24. பேகுசராய், 25. ககாரியா, 26. பகல்பூர், 27. பங்க்கா, 28. முங்கேர், 29. நாளந்தா, 30. பாட்னா சாஹிப், 31. பாடலிபுத்ரா, 32. அர்ரா, 33. பக்ஸார், 34. சசாரம் (SC), 35. கராகட் , 36. ஜஹானாபாத், 37. அவுரங்காபாத், 38. கயா (SC), 39. நவாடா , 40. ஜமுய் (SC)."
Q6. பீஹார் மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள் யாவை?
1. பாட்னா, 2. கயா, 3. பகல்பூர், 4. முசாஃபர்பூர், 5. முங்கேர் , 6. பூர்னியா, 7. தர்பங்கா , 8. பீஹார் ஷரீஃப், 9. அர்ரா, 10. பேகுசராய், 11. சாப்ரா , 12. கத்திஹார் , 13. சஹர்சா.
Q7. பாட்னா பழங்கால நகரமாகையால், பல காலங்களில் பல பெயர்களில் அழைக்கப்பட்டது. அவை யாவை?
பாடலிபுத்ரம், குசும்பூர், புஷ்ப புரா, அஸிமாபாத், பாடாலிக்ராமா, குசும்த்வாஜா, பத்மாவதி.
Q8. பேகுசராய் மாவட்டம் எதற்கு புகழ்பெற்றது?
1. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை,
2. காவேர் ஏரி - இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி.
Q9. அவுரங்காபாத் மாவட்டம் எதற்கு பெயர் பெற்றது?
1. ஷ்யவன்ப்ராஷ் - ஆயுர்வேத மருந்து.
2. சாட் பூஜை (பீஹார் முழுவதுமே).
Q10. போஜ்பூர் மாவட்டத்தின் முக்கியத்துவம் என்ன?
1. போஜ்பூரி மொழி,
2. இந்த மாவட்டத்தின் ஜகதீஷ்பூர் என்ற இடம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 80 வயது ராஜா குன்வார் சிங் என்ற அரசர், 1857ல் சிப்பாய் கலகத்தின் போது ஆங்கிலேயர் படைகளுக்கெதிராக போராடி மரணமடைந்தார்.
Q11. கயா மாவட்டத்தின் முக்கியத்துவம் என்ன?
புத்த கயா : புத்த மதத்தின் முக்கிய புனித தலம்.
கயா : இந்து மதத்தினரின் முக்கிய புனித தலம்.
Q12. முங்கேர் மாவட்ட த்தின் முக்கியத்துவம் என்ன?
உலகப்புகழ் பெற்ற பீஹார் யோகா பயிற்சி பள்ளி.
Q13. மதுபனி மாவட்டத்தின் முக்கியத்துவம் என்ன?
புகழ்பெற்ற மதுபனி ஓவியக்கலை.
Q14. வைஷாலி மாவட்டத்தின் முக்கியத்துவம் என்ன?
புத்த மத த்தினரின் புனித த்தலம்.
Q15. முசாஃபர்பூர் எதற்கு புகழ் பெற்றது?
லிச்சி பழங்கள்.
Q16. பீஹாரில் இயங்கிய பழங்கால புகழ்பெற்ற பல்கலைக்கழகம் எது?
நாளந்தா பல்கலைக்கழகம்.
Q17. பீஹாரின் சோன்பூர் நகரம் எதற்கு புகழ்பெற்றது?
ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைச்சந்தை. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பௌர்ணமி மாதத்தன்று நடத்தப்படும் இந்த சந்தை ஒரு மாதத்திற்கு நீடிக்கும் (சோன் நதிக்கரையில்).
Q18. பீஹாரின் மிகவும் புகழ்பெற்ற முக்கியமான பண்டிகை எது?
சாத் பூஜை (CHAATH). தீபாவளி முடிந்து ஒரு வாரம் கழித்து, முக்கியமாக கங்கை நதிக்கரையில், சூரிய பகவானைப் போற்றி நட த்தப்படுகிறது.
Q19. பீஹார் மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் யாவை?
1. கிராமப்புற மக்களின் படிப்பறிவின்மை.
2. ஜாதிக் கலவரம்.
3. நக்ஸல் தீவிரவாதிகளின் நடவடிக்கை.
4. இரண்டு பருவகால மழையின்போதும் புயல் சேதம் அபாயம்."
Q20. பீஹார் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் யார்?
ஸ்ரீ கிருஷ்ணா சின்ஹா - 1947 - 1961.
Q21. பீஹார் மாநிலத்தின் முன்னாள் - இந்நாள் பிரபலங்கள் யாவர்?
1. டாக்டர் ராஜேந்திர பிரசாத் - குடியரசுத்தலைவர் - ஸெரடாய் கிராமம், சிவான் மாவட்டத்தில் பிறந்தவர்.
2. ஜெயப்ரகாஷ் நாராயண் : சர்வோதயா தலைவர் - பாரத ரத்னா, மகஸஸே விருதுகள் பெற்றவர். 1977ல் இந்திரா காந்தியின் தோல்விக்கு முக்கிய காரணமாய் இருந்தவர்.
3. லல்லு பிரசாத் யாதவ் : முதன் மந்திரி, மத்திய அமைச்சர் -தேசிய அரசியலில் முக்கிய பங்குள்ளவர். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர். இந்தி பட உலகின் நடிகர் - BJP அரசியல்வாதி - மத்திய அமைச்சராக இருந்தவர்.
5. ராம் விலாஸ் பஸ்வான் : லோக் ஜனசக்தி தலைவர், மத்திய அமைச்சர்.
6. நிதிஷ் குமார் : ஐக்கிய ஜனதா தள அரசியல் தலைவர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்.
7. ஜார்ஜ் ஆர்வெல் : புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் - பீஹாரின் மோத்திஹார் என்ற ஊரில் பிறந்தவர்.
8. சேகர் சுமன் : ஹிந்தி சினிமா, தொலைக்காட்சி நடிகர், புகழ்பெற்ற சிலேடை வித்தகர்.
9. மனோஜ் பாஜ்பாய் : ஹிந்தி சினிமா நடிகர்.
10. உதித் நாராயண் : ஹிந்தி சினிமா பாடகர்.
11. சபாகரீம் : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.
12. திரேந்திர பிரம்மச்சாரி : யோகா குரு."