Q5. சத்தீஸ்கர் மாநிலத்தின் 27 மாவட்டங்கள் யாவை?
1. பலோட் : கங்கேர், ராஜ்நந்த் காவ்ன், துர்க், தம்தாரி மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கியத் தொழில்.
2. பலோடா பஜார் : மஹாசமுந்த், ராய்ப்பூர், பெமெதாரா, முங்கேலி, பிலாஸ்பூர், ஜான்ஜ்கீர் சம்பா, ராய்கர் மாவட்டங்கள் இதன் எல்லை.
3. பலராம்பூர் : ஜார்க்கண்ட், உத்திரபிரதேசம் மா நிலங்களும், சூரஜ்பூர், சர்குஜா, ஜாஷ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
4. பஸ்தார் : ஜக்தால்பூர் இதன் தலை நகர். ஒடிசா மாநிலமும், சுக்மா, தந்தேவாடா, நாராயண்பூர் கொண்டாகாவ்ன் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில். நக்சல் நடவடிக்கைகள்
அதிகம் உள்ள மாவட்டம்.
5. பெமெதாரா : துர்க், ராஜ்நந்த் காவ்ன், கபீர்தாம், முங்கேலி, பலோடா பஜார் மாவட்டங்கள் இதன் எல்லை.
6. பீஜாபூர் : மகாராஷ்டிரா மாநிலமும், நாராயண்பூர், தந்தேவாடா, சுக்மா மாவட்டங்கள் இதன் எல்லை. வனப்பகுதி அதிகம் உள்ள மாவட்டம்.
7. பிலாஸ்பூர் : பலோடா பஜார், முங்கேலி, கொரியா, கோர்பா, ஜாங்கிர் சம்பா மாவட்டங்களும், மத்திய பிரதேசமும் இதன் எல்லை. நிலக்கரி சுரங்கங்கள், ரயில்வே மண்டலம், மின் உற்பத்தி ஆகியவை முக்கிய தொழில் துறைகள்.
8. தந்தேவாடா : நாராயண்பூர், பீஜாப்பூர், சுக்மா, பஸ்தார் மாவட்டங்கள் இதன் எல்லை. நக்ஸல் நடவடிக்கைகள் அதிகம் உள்ள மாவட்டம்.
9. தம்தாரி : கரியாபந்த், கிழக்கு கங்கேரி, பலோட், துர்க், ராய்ப்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயத்தில் செழிப்பான மாவட்டம்.
10. துர்க் : ராய்ப்பூர், தம்தாரி, பலோட், ராஜ்நந்த்காவ்ன், பெமெதாரா ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. பிலாய் நகரம் இரும்பு உருக்காலைக்கு புகழ் பெற்றது.
11. கரியாபண்ட் : ஒடிசா மாநிலம், தம்தாரி, ராய்ப்பூர், மஜாசமுந்த் மாவட்டங்கள் இதன் எல்லை.
12. ஜான்ஜ்கீர் சம்பா : நைலா ஜான்ஜ்கீர் இதன் தலை நகரம். பலோடா பஜார், ராய்கர், கோர்பா, பிலாஸ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில்.
13. ஜாஷ்பூர் : ஜாஷ்பூர் நகர் இதன் தலை நகர். ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலம், ராய்ப்பூர், சர்குஜா, பலராம்பூர் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை.
14. கபீர்தாம் : கவார்தா இதன் தலை நகர். மத்திய பிரதேசம் மாநிலம், ராஜ்நந்த்காவ்ன், பெமெதாரா, முங்கேலி மாவட்டங்கள் இதன் எல்லை
15. கங்கேர் : மகாராஷ்டிரா மாநிலமும், நாராயண்பூர், ராஜ்நந்த்காவ்ன், பலோட், தம்தாரி, கொண்டகாவ்ன், மாவட்டங்கள் இதன் எல்லை. இது ஒரு ஆங்கிலேயர்களின் கீழ் இயங்கி வந்த ஒரு ராஜ வம்ச
பகுதி.
16. கொண்டாகாவ்ன் : ஒடிசாமா நிலம், பஸ்தார், நாராயண்பூர், கங்கேர், தம்தாரி ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை.
17. கொர்பா : ராய்கர், ஜாங்கிர் சம்பா, பிலாஸ்பூர், கொரியா, சூரஜ்பூர், சுர்குஜா மாவட்டங்கள் இதன் எல்லை.
18. கொரியா : வைகுந்த்பூர் இதன் தலை நகரம். மத்திய பிரதேசம் மாநிலம், பிலாஸ்பூர், கொர்பா, சூரஜ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. இது ஒரு குறுநில மன்னர் ஆட்சி பகுதி 1.1.1948ல் இந்தியாவுடன் இணைந்தது. சில சுற்றுலா தலங்களும் உள்ளன.
19. மகாசமுந்த் : ஒடிசா மாநிலம், கரியாபந்த், ராய்ப்பூர், பலோடா பஜார், ராய்கர் மாவட்டங்கள் இதன் எல்லை. கனிமங்கள் நிறைந்த மாவட்டம்.
20. முங்கேலி : மத்திய பிரதேச மாநிலமும், பிலாஸ்பூர், பெமெதாரா, கபீர்தாம் மாவட்டங்கள் இதன் எல்லை.
21. நாராயண்பூர் : மகாராஷ்டிரா மாநிலம், பீஜாப்பூர், தண்டேவாடா, பஸ்தார், கொண்டா காவ்ன், கங்கேர் மாவட்டங்கள் இதன் எல்லை.
22. ராய்கர் : ஒடிசா மாநிலம், மகாசமுந்த், ஜான்ஜ்கிர், சம்பா, கொர்பா, சர்குஜா, ஜாஷ்பூர் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. முன்னாள் குறுநில மன்னர் பகுதி. தொழிற்துறையில் முன்னேறி வரும் மாவட்டம்.
23. ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தின் தலை நகர் அமைந்துள்ள மாவட்டம். கரியாபந்த், தம்தாரி, துர்க், பெமெதாரா, பலோடாபஜார், மகாசமுந்த் மாவட்டங்கள் இதன் எல்லை.
24. ராஜ் நந்த் காவ்ன் : மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களும், கங்கேர், பலோட், துர்க், பெமெதாரா, கபீர்தாம் மாவட்டங்கள் இதன் எல்லை.
25. சுக்மா : ஆந்திர பிரதேசம், தெலங்கானா மாநிலங்களும், பிஜாப்பூர், தந்தேவாடா, பஸ்தார் மாவட்டங்கள் இதன் எல்லை.
26. சூரஜ்பூர் : மத்திய பிரதேச மாநிலம், கொரியா, கொர்பா, சுர்குஜா, பலராம்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
27. சுர்குஜா : அம்பிகாபூர் இதன் தலை நகரம். ராய்கர், கொர்பா, சூரஜ்பூர், பலராம்பூர், ஜாஷ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை."