கோவா
Q1. கோவா
தொடக்கம் : 19.12.1961 / 30.5.1987.
தலை நகர் : பானாஜி
பரப்பளவு : 3702 ச.கி.மீ.
மாநில எல்லை : அரபிக்கடல், கர்நாடகா, மஹாராஷ்டிரா
மொழி : கொங்கனி, ஆங்கிலம், மராத்தி, போர்ச்சுகீஸ்.
கல்வியறிவு : 88.70%
மாவட்டங்கள் : 2
ஜனத்தொகை : 14,57,723
மக்களவை உறுப்பினர்கள் : 2
மாநிலங்களவை உறுப்பினர்கள் : 1
சட்டசபை உறுப்பினர்கள் : 40
மாநில மரம் : அஸ்னா
மாநில பறவை :
மாநில மிருகம் : காட்டெருமை - GAUR
மாநில மலர் :
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : மாண்டோவி, ஜுவாரி, சபோரா, டெரெகோல்.
மாநில ஆளுநர் : மிருதுலா சின் ஹா
மாநில முதன் மந்திரி : லக்ஷ்மி காந்த் பர்சேகர்.
கோவா
Q2. வரலாற்று சுருக்கம் :
கி.மு. 3ல் மௌரிய சாம்ராஜ்யத்தில் தொடங்கி, போஜா, சாளுக்யா (பாதாமி), ராஷ்டிரகுடாஸ், சில்ஹாராஸ், கடம்பாஸ், டெல்லி சுல்தான்கள், அடில் ஷாஹி (பீஜாப்பூர்) மூலமாக 1510ல் போர்ச்சுகீசியர்கள் வசம் வந்து, 1961 வரை 450 ஆண்டுகள் நீடித்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவுடன் சேர மறுத்ததால் 19.12.1961 அன்று, இந்திய ராணுவத்தின் "OPERATION VIJAY" நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டு இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது. பிறகு யூனியன் பிரதேசமாக இயங்கி வந்த இந்த பகுதி 30.5.1987ல் மா நில அந்தஸ்து பெற்றது. கோவாவுடன் இருந்த டாமன், டையூ இன்றும் யூனியன் பிரதேசமாக இயங்கி வருகிறது. மேற்கு மலை தொடர்ச்சியின் கீழ் அமைந்துள்ளதால் நல்ல மழை பெறும் வளமான பகுதி. சுற்றுலாவுக்கு மிகவும் புகழ் பெற்ற மா நிலம்.
Q3. கோவாவை கைப்பற்றிய இந்திய ராணுவ ரகசிய குறியீட்டின் பெயர் என்ன?
OPERATION VIJAY - 19.12.1961.
Q4. கோவா மாநிலத்தின் முதல் முதலமைச்சர் யார்?
தயான்ந்த் பண்டோட்கர் - 1926 - 1966.
Q5. கோவா மாநிலத்தின் முக்கிய நகரங்கள் யாவை?
பானாஜி, மபுசா, பிலார், மர்காவ், சால்சீட், பாண்டா, வாஸ்கோ டா காமா.
Q6. கோவா மாநிலத்தின் ஒரே மாநகராட்சி எது?
பானாஜி.
Q7. கோவா மாநிலத்தின் மக்களவை தொகுதிகள் யாவை?
வடக்கு கோவா, தெற்கு கோவா.
Q8. கோவா மாநிலத்தின் இரண்டு மாவட்டங்கள் யாவை:
1. வடக்கு கோவா: 1736 ச.கி.மீ -- மகாராஷ்டிரா, அரபிக்கடல், தெற்கு கோவா இதன் எல்லை. தலைநகர்
பானாஜி (மாநில தலைநகரும்). கொங்கன் என்றழைக்கப்படும் பகுதியில் உள்ளது. கொங்கனி மற்றும் மராத்தி அதிகமாக பேசப்படும் பகுதி. தலைநகரைத் தவிர்த்து விவசாயமே முக்கிய தொழில்.
2. தெற்கு கோவா: 1966 ச.கி.மீ -- வட்க்கு கோவா, கர்நாடகா, அரபிக்கடல் இதன் எல்லை. மர்கோவா இதன் தலைநகரம். மிகப்பெரிய சுற்றுலா தலம். அழகான கடற்கரைகள் மற்றும் இதர சுற்றுலா தலங்கள் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது."
Q9. கோவா மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் யாவை?
1. அழகான கடற்கரைகள் (மொத்தம் 101 கி.மீ.)
2. உலக புராதன சின்னமாக கருதப்படும் - பார்ன் ஜீசஸ் பாஸிலிகா, புனித ஃப்ரான்ஸிஸ் சேவியர் பூத உடல் பாதுகாப்பாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மற்றும் பல கிறித்துவ ஆலயங்கள்.
3. திராகோல், சப்போரா, கார்ஜியம், அகுவாடா, ரீஸ் மகோஸ், நானஸ், மர்முகாவ், கேஸ்பர் டயாஸ், கேபோ டி ராமா கோட்டைகள்.
4. சாந்தா துர்கா, மங்குவேஷி, மகலாசா கோவில்கள்.
5. கோவா மா நில அருங்காட்சியகம்.
6. கோவா அறிவியல் மையம்.
7. தேசிய கடல்சார் அறிவியல் பல்கலைக்கழகம்.
8. தேசிய விமானத்துறை அருங்காட்சியகம்."
Q10. கோவா மாநிலத்தின் உயர்ந்த விருது எது?
கோமன்த் விபூஷன் - 2010 முதல் வழங்கப்படுகிறது.
Q11. கோவா மாநில தலைநகர் பானாஜியின் முக்கிய அம்சங்கள் யாவை?
1. மாண்டோவி நதிக்கரையில் அமைந்துள்ளது.
2. கோவாவின் ஒரே மா நகராட்சி மற்றும் மிகப்பெரிய நகரம்.
3. பஞ்ஜிம் (PANJIM) என முன்பு அழைக்கப்பட்ட து.
4. அடில் ஷாஹி அரண்மனை, பழமையான கிறித்துவ தேவாலயங்கள், ஜமா மஸ்தி மசூதி, மஹாலக்ஷ்மி கோவில், மிராமர் கடற்கரை, ஹனுமான் மலைக்கோவில் ஆகிய சுற்றுலா தலங்கள்.
5. தேசிய கடல் அறிவியல் ஆய்வகம் இங்குள்ளது.
6. அனைத்து வகை கல்லூரிகளும் அமைந்துள்ளது."
Q12. கோவாவின் விளைபொருட்களும், கனிமப்பொருட்களும், இயற்கை வளமும் யாவை?
1. மாம்பழம், முந்திரி.
2. இரும்பு, பாக்ஸைட், மாங்கனீஸ், சுண்ணாம்பு, சிலிகா ஆகியவை.
3. வனவளமும், தேவைக்கேற்ற மழையும்."
Q13. கோவாவில் விளையும் உலகப்புகழ் பெற்ற மாம்பழ வகை எது?
அல்ஃபோன்ஸோ (ALPHONSO).
Q14. கோவாவில் (மட்டுமே) மிகவும் பிரபலமான சாராய வகை எது?
ஃபென்னி (FENNY).
Q15. கோவாவின் எந்த கிறித்துவ தேவாலயத்தில் புனித செயிண்ட் சேவியர் பூத உடல் பராமரிக்கப்படுகிறது?
பார்ன் ஜீசஸ் தேவாலயம் - BASILICA OF BORN JESUS.
Q16. மேற்கு தொடர்ச்சி மலையில் கோவா-கர் நாடக எல்லையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி எது?
தூத் சாகர் நீர்வீழ்ச்சி - 310 மீ உயரம் - மாண்டோவி ஆற்றில் அமைந்துள்ளது. இது பெங்களூரு - கோவா ரயில் தொடரில் கேசில் ராக் (CASTLE ROCK) ரயில் நிலையம் அருகில் உள்ளது.
Q17. கோவாவின் புகழ் பெற்ற சுற்றுலா சார்ந்த கடற்கரைகள் பெயர் கூறுக.
காலங்கூட், கொல்வா, பாகா, டோனாபாலா, பாக் மேலோ.
Q18. கோவாவின் புகழ்பெற்ற விளையாட்டும், அதைச் சார்ந்த குழுக்களும் யாவை?
கால்பந்து. வாஸ்கோ, சர்ச்சில் ப்ரதர்ஸ் மற்றும் சல்காவ்ங்கர். கோவாவிலிருந்து நிறைய கால்பந்து வீரர்கள் இந்திய தேசிய அணியில் இடம் பெறுவது வழக்கமான ஒன்று.
Q19. கோவா மாநிலத்தை சார்ந்த பிரபலமானவர்கள் யாவர்?
1. லியாண்டர் பேஸ் - உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீரர்.
2. ரீமோ ஃபெர்ணாண்டஸ் - இசைக்கலைஞர்.
3. தீனா நாத் மங்கேஷ்கர் - சினிமா உலகப் புகழ்பெற்ற பாடகிகள் லதா மற்றும் ஆஷாவின் தந்தை மற்றும் சிறந்த இசைக் கலைஞர்.
4. ஜூலியஸ் ரிபேரோ - புகழ்பெற்ற IPS அதிகாரி.
5. பீட்டர் ஆல்வாரேஸ், மார்கரெட் ஆல்வா - அரசியல்.
6. ஃப்ராங்க் மற்றும் டார்ன் மோரேஸ் - பத்திரிகையாளர்கள்.
7. சல்காவ்ன்க்கர் குடும்பம் - தொழிலதிபர்கள்."