Q5. குஜராத் மாநிலத்தின் மாவட்டங்கள் யாவை?
1. அஹமதாபாத் : மெஹ்சானா, காந்தி நகர், கேடா, ஆன ந்த், போடாட், பாவ் நகர், சுரேந்திர நகர் மாவட்டங்களும், கம்பாட் வளைகுடாவும் இதன் எல்லை. அஹமதாபாத் இதன் தலை நகர்.
2. அம்ரேலி : அரபிக்கடல், கிர்சோம் நாத், ஜுனாகத், ராஜ்கோட், போடாட், பாவ் நகர், சுரேந்திர நகர் மாவட்டங்களும், கம்பாட் வளைகுடாவும் இதன் எல்லை. அஹமதாபாத் இதன் தலை நகர்.
3. ஆனந்த் : அரபிக்கடல், அஹமதாபாத், கேடா, வடோடரா, பரூச் மாவட்டங்கள் இதன் எல்லை. புகையிலை மற்றும் வாழை முக்கிய பயிர். உலகப்புகழ் பெற்ற ""அமுல்"" கூட்டுறவு பால் பண்ணை அமைந்துள்ள மாவட்டம். சில சுற்றுலா தலங்களும் உண்டு.
4. ஆரவல்லி : ராஜஸ்தான் மாநிலம், மஹிசாகர், கேடா, காந்தி நகர், மெஹ்சானா, சாபர் காந்தா மவட்டங்கள் இதன் எல்லை. மொடாசா இதன் தலை நகரம். ஆரவல்லி மலைத்தொடரின் பெயர் இந்த மாவட்டம். விவசாயம் முக்கியத்தொழில்.
5. பனஸ்காந்தா : பாலன்பூர் இதன் தலை நகரம். ராஜஸ்தான் மாநிலம், கச்ச், பதான், மெஹ்சானா, சாபர் கந்தா, மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயமும், விளைபொருட்கள் சார்ந்த தொழில்களும், எண்ணெய் வித்துக்களும், காய்கறி விளைச்சலும், பொருளாதார நடவடிக்கை. கனிமப் பொருட்கள் நிறைந்த மாவட்டம்.
6. பரூச் : அரபிக்கடல், சூரத், நர்மதா, வடோடரா மாவட்டங்கள் இதன் எல்லை.
7. பாவ் நகர் : அரபிக்கடல், அம்ரேலி, போடாட், அஹமதாபாத் மாவட்டங்கள் இதன் எல்லை. இந்தப்பகுதி கோஹில் ராஜ்புத் மன்னர்களால் ஆளப்பட்ட குறு நில மன்னர் பகுதி. சில சுற்றுலா தலங்களும் உள்ளன.
8. போடாட் : பாவ் நகர், அம்ரேலி, ராஜ்கோட், சுரேந்திர நகர், அஹமதாபாத் மாவட்டங்கள் இதன் எல்லை.
9. சோட்டா உதய்ப்பூர் : மத்திய பிரதேச மாநிலம், நர்மதா, வடோடரா, பஞ்ச் மஹால், தஹோத் மாவட்டங்கள் இதன் எல்லை. அதிகமான வனப்பகுதியும், கனிம வளங்களும் நிறைந்த மாவட்டம்.
10. தஹோத் : மத்திய பிரதேசம் மாநிலம், மஹிசாகர், பஞ்ச் மஹால், சோட்டா உதய்ப்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. இந்தப்பகுதி முன்னாள் குறு நில மன்னர்கள் பகுதி (தேவ்கத், சஞ்ஜேலி, ராம்பூர்) முகலாய மன்னர் அவுரங்கசீப் பிறந்த மாவட்டம்.
11. டாங் : அஹ்வா இதன் தலை நகர். மகாராஷ்டிரா மா நிலம், நவ்சாரி, தபி மாவட்டங்கள் இதன் எல்லை. இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாநிலமாக கருதப்படுகிறது.
12. துவாரகா : தேவ்பூமி, துவாரகா என அழைக்கப்படுகிறது. கம்பாலியா இதன் தலை நகரம். அரபிக்கடல், ஜாம் நகர், போர்பந்தர் மாவட்டங்கள் இதன் எல்லை. இந்து மத மக்களின் சுற்றுலா தலம்.
13. காந்தி நகர் : மாநில தலை நகர் மாவட்டம். அஹமதாபாத், கேடா, ஆரவல்லி, சபர்கந்தா, மெஹ்சானா மாவட்டங்கள் இதன் எல்லை. அக் ஷார்தாம் கோவில் அமைந்துள்ள மாவட்டம்.
14. கிர் சோம் நாத் : வேராவல் இதன் எல்லை. அரபிக்கடல், ஜுனாகாத், அம்ரேலி மாவட்டங்கள் இதன் எல்லை. இந்தியாவின் புகழ்பெற்ற கிர் காடுகள் அமைந்துள்ள மாவட்டம்.
15. ஜாம் நகர் : அரபிக்கடல், தேவ்பூமி துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், மார்பி மாவட்டங்கள் இதன் எல்லை. உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் தொழிற்சாலைகள், அரண்மனைகள், கடற்சார் தேசிய பூங்கா, பறவை சரணாலயம் ஆகியவை அமைந்துள்ளது.
16. ஜுனாகத் : அரபிக்கடல், போர்பந்தர், ராஜ்கோட், அம்ரேலி, கிர் சோம் நாத் மாவட்டங்கள் இதன் எல்லை. புகழ்பெற்ற ஆசிய சிங்கங்கள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம். கிர்னார் மலைப்பகுதி சுற்றுலா தலம். சரித்திரப் புகழ் பெற்ற சோம் நாத் கோவில் அமைந்துள்ள மாவட்டம்.
17. கச்ச் : பூஜ் இதன் தலை நகரம். இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம். 2001ல் நில அதிர்ச்சியில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம். 22 அணைகள் உள்ள மாவட்டம். முன்னாள் குறு நில மன்னர் மாவட்டம். விலங்குகள் சரணாலங்களும் அதிகம் உள்ள மாவட்டம். காட்டுக் கழுதைகளின் சரணாலயம் புகழ்பெற்றது. தொழிற்துறையில் முன்னேற்றமடைந்துள்ள மாவட்டம். உப்பு தயாரிப்பு முக்கிய தொழிலாகும். அரபிக்கடல் அதிகப் பகுதியையும், பனஸ்கந்தா, பத்தான், சுரேந்திர நகர், மோர்பி மாவட்டங்கள் இதன் எல்லை.
18. கேடா : நதியாத் இதன் தலை நகரம். ஆன்ந்த், அஹமதாபாத், காந்தி நகர், ஆரவல்லி, மஹிசாகர், பஞ்ச் மஹால், வடோடரா மாவட்டங்கள் இதன் எல்லை.
19. மஹி சாகர் : லுனாவாடா இதன் தலை நகரம். ராஜஸ்தான் மாநிலம், ஆரவல்லி, கேடா, பஞ்ச் மஹால், தாஹோத் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை.
20. மெஹ்சானா : காந்தி நகர், அஹமதாபாத், பத்தான், பனாஸ்கந்தா, சாபர்கந்தா, மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாய முக்கியத் தொழில்.
21. மோர்பி : அரபிக்கடல், ஜாம் நகர், ராஜ்கோட், சுரேந்திர நகர், கச்ச் மாவட்டங்கள் இதன் எல்லை.
22. நர்மதா : ராஜ்பிப்லா இதன் தலை நகரம், மத்திய பிரதேச மாநிலம், தபி, சூரத், பரூச், வடோடரா, சோட்டா, உதய்ப்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
23. நவ்சாரி : அரபிக்கடல், மஹாராஷ்டிரா மாநிலம், டாங், தபி, சூரத் மாவட்டங்கள் இதன் எல்லை. தாதா பாய் நவ்ரோஜி, ஜம்ஷெட்ஜி டாடா ஆகியோர் பிறந்த மாவட்டம். பார்ஸி இன மக்கள் அதிகமாக வாழும் மாவட்டம்.
24. பஞ்ச் மஹால் : கோத்ரா இதன் தலை நகரம். தாஹோத், மஹிசாகர், கேடா, வடோடரா, சோட்டபூர் மாவட்டங்கள் இதன் எல்லை. சம்பனேர் உலகப் புராதனச் சின்னம், பாவாகர் காளிகா மாதா கோவில் போன்ற சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன.
25. பத்தான் : கச்ச், பனஸ்கந்தா, மெஹ்சானா, சுரேந்திர நகர் மாவட்டங்கள் இதன் எல்லை. ஜெயின் இன மக்களின் சுற்றுலா தலம். ராணி-கா-வாவ் எனும் படிக்கட்டுகளால் ஆன ஆழ்கிணறு, கட்டிட கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
26. போர்பந்தர் : அரபிக்கடல், தேவ் பூமி துவாரகா, ஜாம் நகர், ராஜ்கோட், ஜுனாகத் மாவட்டங்கள் இதன் எல்லை. காந்திஜி பிறந்த மாவட்டம். விவசாயம் முக்கிய தொழில்.
27. ராஜ் கோட் : ஜுனாகத், போர்பந்தர், ஜாம் நகர், மோர்பி, சுரேந்திர நகர், பொடாட், அம்ரேலி மாவட்டங்கள் இதன் எல்லை. முன்னாள் குறு நில மன்னர் பகுதி.
28. சபர்கந்தா : ஹிம்மத் நகர் இதன் தலை நகர். ராஜஸ்தான், பனாஸ் கந்தா, மெஹ்சானா, காந்தி நகர், ஆரவல்லி மாவட்டங்கள் இதன் எல்லை. வனப்பகுதி நிறைந்த மாவட்டம். சுற்றுலா தலங்கள் உள்ளன.
29. சூரத் : அரபிக்கடல், பரூச், நர்மதா, தபி, நவ்சாரி மாவட்டங்கள் இதன் எல்லை. சூரத் மிகப்பெரிய நகரம். இந்திய சரித்திரத்தில் முக்கிய இடம் வகிக்கும் நகரம். இந்த நகரத்தில் தான் 1608ல் வந்திறங்கி, 1615 தங்களது தொழிற்சாலையை துவக்கி அதற்கு பிறகு இந்தியாவையெ ஆண்ட்து சரித்திரம். பர்தோலி சத்தியாகிரகம், தண்டி உப்பு சத்தியாகிரகம் ஆகியவை இந்த மாவட்ட சரித்திர நிகழ்ச்சிகள். சில சுற்றுலா தலங்களும் உள்ளன. வைரத்தொழில், நெசவாலைகள் நிறைந்த மாவட்டம்.
30. சுரேந்திர நகர் : கச்ச், பத்தான், அஹமதாபாத், பொடாட், ராஜ்கோட், மோர்பி மாவட்டங்கள் இதன் எல்லை. உப்பு, பஞ்சாலைகள், பீங்கான் மற்றும் இதர தொழில்கள், விவசாயம் முக்கிய தொழில். ஜைன மத மக்கள் அதிகம் வாழ்கின்றனர். உயர்கல்வி நிலையங்கள் உள்ளன.
31. தபி : வ்யாரா இதன் தலை நகரம். மஹாராஷ்டிரா மா நிலம், டாங், நவ்சாரி, சூரத், நர்மதா மாவட்டங்கள் இதன் எல்லை.
32. வடோடரா : பரூச், ஆனந்த், கேடா, பஞ்ச் மஹால், சோட்ட உதய்ப்பூர், நர்மதா மாவட்டங்கள் இதன் எல்லை. முன்பு பரோடா என அழைக்கப்பட்டது. முன்னாள் குறுநில மன்னர் பகுதி. தொழிற்துறையில் மிகவும் முன்னேற்றமடைந்த பகுதி. பரோடா நகரம் மிகவும் முன்னேற்றமடைந்த பகுதி. இந்நகரில் பல கல்வி உயர் நிலையங்களும், ரயில்வே அதிகாரிகள் பயிற்சி கல்லூரி அமைந்துள்ளது. பரோடாவிலிருந்து பல கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடியிருக்கின்றனர்.
33. வல்சாத் : மஹாராஷ்டிரா மாநிலம், தாத்ரா நாகர் ஹவேலி (யூ.பி) தாமன் (யூ.பி) நவ்சாரி மாவட்டம் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில். பல தொழிற்சாலைகளும் உள்லன. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த மாவட்டம். உயர்கல்வி நிலையங்களும் உள்ளன. "