Q4. ஹரியானா மாநிலத்தின் 21 மாநிலங்கள் யாவை?
1. அம்பாலா : யமுனா நகர், சிர்மார், பஞ்ச்குலா, மொஹாலி, பட்டியாலா, குருஷேத்ரா மாவட்டங்கள் இதன் எல்லை. இது ஒரு கன்டோன்மெண்ட் பகுதி (ராணுவ நிர்வாக அலுவலகங்கள் நிறைந்த பகுதி). கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விவசாயம் ஆகிய அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்ட மாவட்டம்.
2. பிவானி : ராஜஸ்தான் மாநிலம், ஹிசார், ரோடக், ஜஜ்ஜார், மகேந்திரகர் மாவட்டங்கள் இதன் எல்லை. இந்து மத கோவில்கள் நிறைந்த மாவட்டம். நெசவாலைகளும் வேறு தொழிற்சாலைகளும் உண்டு. குத்துச்சண்டை பயிற்சி மற்றும் வீரர்களை உருவாக்கும் ஒரு மாவட்டம். அகில் குமார், விஜேந்தர் குமார், ஜிதேந்தர் குமார் போன்ற புகழ்பெற்ற குத்துச்சண்டை வீர ர்கள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
3. ஃபரீதாபாத் : உத்திரபிரதேச மாநிலம், பால்வால், குர்காவ்ன், டெல்லி இதன் எல்லை. தொழிற்துறையில் மிகவும் முன்னேற்றமடைந்த மாவட்டம். விவசாயமும் முக்கிய தொழில்.
4. ஃபத்தேஹாபாத் : பஞ்சாப் மாநிலம், சிர்சா, ஹிசார், ஜிந்த் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கியத் தொழில்.
5. குர்காவ்ன் : ஃபரீதாபாத், ஜஜ்ஜார், ரேவாரி, மேவத் மாவட்டங்கள் மற்றும் டெல்லி இதன் எல்லை. தொழிற்துறையில் மிக வேகமாகவும் அதிகமாகவும் முன்னேறியுள்ள மாவட்டம்.
6. ஹிசார் : ராஜஸ்தான் மாநிலம், ஃபதேஹாபாத், ஜிந்த், ரோட்டக், பிவானி மாவட்டங்கள் இதன் எல்லை. ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தொழிற்சாலை மற்றும் விவசாயம் முக்கியத்தொழில்.
7. ஜஜ்ஜார் : டெல்லி, குர்காவ்ன், ரேவாரி, பிவானி, ரோட்டக் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கியத்தொழில்.
8. ஜிந்த் : பஞ்சாப் மாநிலம் ஃபதேஹாபாத், ஹிசார், ரோட்டக், சோனிபட், பானிபட், கர்னால், கைத்தால் மாவட்டங்கள் இதன் எல்லை.
9. கைத்தால் : பஞ்சாப் மாநிலம், ஜிந்த், கர்னால், குருஷேத்ரா மாவட்டங்கள் இதன் எல்லை.
10. கர்னால் : உத்திர பிரதேச மாநிலம், பானிபட், ஜிந்த், கைத்தால், குருஷேத்ரா, யமுனா நகர் மாவட்டங்கள் இதன் எல்லை. பால் சம்பந்தப்பட்ட உயர் கல்வி நிறுவனம் (Dairy Development) இங்கு அமைந்துள்ளது.
11. குருஷேத்ரா : கர்னல், கைத்தால், அம்பாலா, யமுனா நகர் மாவட்டங்களும், பஞ்சாப் மா நிலமும் இதன் எல்லை. மகாபாரதப் போர் நடந்த இடமாக கருதி, இந்து இன மக்களின் புனித தலமாக கருதப்படுகிறது.
12. மகேந்திரகர் : நர்னால் இதன் தலை நகர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களும், ரேவாரி, பிவானி மாவட்டங்களும் இதன் எல்லை. ஷவான் ப்ராஷ் என்ற ஆரோக்கிய ஆயுர்வேத மருந்து இந்த மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.
13. மேவத் : ""நூ"" இதன் தலை நகரம். ராஜஸ்தான் மா நிலம், பால்வால், ஃபரிதாபாத், குர்காவ்ன் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயமே முக்கிய தொழில்.
14. பால்வால் : உத்திரபிரதேச மா நிலம், மேவத், குர்காவ்ன், ஃபரீதாபாத் மாவட்டங்கள் இதன் எல்லை.
15. பஞ்ச்குலா : பஞ்சாப், இமாச்சல பிரதேச மாநிலங்கள், அம்பாலா மாவட்டம் இதன் எல்லை.
16. பானிபட் : உத்திர பிரதேச மாநிலம், சோனிபட், ஜிந்த், கர்னால் மாவட்டங்கள் இதன் எல்லை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம். பானிபட் போர்கள் இந்த மாவட்டத்தில் நடந்தது. இந்த மாவட்டத்தின் கைத்தறி நெசவுத்தொழில் உலகப்புகழ் பெற்றது. திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் தரை விரிப்புகள் புகழ்பெற்றவை.
17. ரேவாரி : ராஜஸ்தான் மாநிலம், மகேந்திரகர், பிவானி, ஜஜ்ஜார், குர்காவ்ன் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயமே முக்கியத் தொழில்.
18. ரோட்டக் : ஜஜ்ஜார், பிவானி, ஹிசார், ஜிந்த், சோனிபட் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கியத் தொழில்.
19. சிர்சா : ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களும், ஃபத்தெபாத் மாவட்டமும் இதன் எல்லை.
20. சோனிபட் : உத்திரபிரதேச மாநிலம், டெல்லி, ரோட்டக், ஜின்ட், பானிபட் மாவட்டங்கள் இதன் எல்லை.
21. யமுனா நகர் : உத்திரபிரதேசம், இமாச்சல பிரதேசம், அம்பாலா, குருஷேத்ரா, கர்னால் மாவட்டங்கள் இதன் எல்லை."