Khub.info Learn TNPSC exam and online pratice

இமாச்சல பிரதேசம்

Q1. இமாச்சல பிரதேசம்
தொடக்கம் : 25.01.1971
தலை நகர் : சிம்லா.
பரப்பளவு : 55,673 ச.கி.மீ. (17 வது பெரிய மா நிலம்) மாநில எல்லை : ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட், திபெத்.
மொழி : ஹிந்தி, ஆங்கிலம்.
கல்வியறிவு : 83.78%
மாவட்டங்கள் : 12
ஜனத்தொகை : 68,56,509 (20 வது)
மக்களவை உறுப்பினர்கள் : 4
மாநிலங்களவை உறுப்பினர்கள் : 3
சட்டசபை உறுப்பினர்கள் : 68
மாநில மரம் : தேவ்தார் (Deodar)
மாநில பறவை : ஜுஜுரானா
மாநில மிருகம் : பனிச்சிறுத்தை (Snow Leopard)
மாநில மலர் : பொங்கல் பூ (Rhodendron)
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : செனாப், ரவி, பியாஸ், சட்லெஜ், யமுனா.
மாநில ஆளுநர் : ஆச்சார்ய தேவ் வ்ரத்.
மாநில முதன் மந்திரி : ஜெய ராம் தாகூர்.


 

Q2. வரலாற்று சுருக்கம் :
ஐக்கிய பஞ்சாப் குறுநில மன்னர்கள் பகுதியாக இருந்து, ஆங்கிலேயர்கள் காலத்தில் பஞ்சாப் மாகாணத்தின் பகுதியாக இருந்து, பிறகு சிம்லா மலைப்பிரதேசமாக இருந்து, சுதந்திரத்திற்கு பிறகு யூனியன் பிரதேசமாக இருந்து, 25.1.1971ல் முழு மாநிலமாக உருவெடுத்தது.
Q3. இமாச்சல பிரதேசத்தின் முதல் முதலமைச்சர் யார்?
யஷ்வந்த் சிங் பர்மார்.
Q4. இமாச்சல பிரதேசத்தின் முக்கிய நகரங்கள் யாவை?

1. சிம்லா : தலை நகர். 1822ல் ஆங்கிலேயர்கள் இந்த இடத்தை அபிவிருத்தி செய்து தங்களது கோடைகால வாசஸ்தலமாகவும், தலை நகராகவும் மாற்றினர். ""கோடைத் திருவிழா"" மிகவும் புகழ் பெற்றது. உயர்தர பொது கல்வி நிறுவனங்கள் (Public Schools) உள்ளது. பிஷப் காட்டன் பள்ளி மிகவும் புகழ் பெற்றது. இப்பள்ளியில் பல இந்திய மற்றும் ஆங்கிலேய தலைவர்கள் படித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாலியன் வாலா பாக் படுகொலையில் ஈடுபட்ட ஜெனரல் டையர் இங்கு படித்தவர். அரசியல் ரீதியாக ""சிம்லா உடன்படிக்கை"" 1914 (திபெத் பற்றிய ஆங்கிலேயர் சீனா), 1945 (வேவல் திட்ட த்தைப் பற்றி ஆங்கிலேயர்-இந்திய தலைவர்கள்), 1947 (இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவு பற்றி), 1972 (1971ல் வங்காள தேச போருக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் உடன்படிக்கை) நிகழ்ந்த இடம். கோடை கால சுற்றுலா தலம்.
2. குலுமணாலி, தரம்சாலா, டல்ஹௌசி : புகழ்பெற்ற குளிர் வாசஸ்தலங்கள், சுற்றுலா மையங்கள்.

Q5. இமாச்சல பிரதேச மாநிலத்தின் மாவட்டங்கள் யாவை?

1. பிலாஸ்பூர் : பஞ்சாப் மா நிலம், உனா, ஹமீர்பூர், மண்டி, சோலன் மாவட்டங்கள் இதன் எல்லை. பக்ரா நங்கல் அணையும், கோவிந்த் சாகர் ஏரியும் அமைந்துள்ளது. இப்பகுதி முன்னாள் குறு நில மன்னர் பகுதி. கோட்டைகள் மற்றும் சில சுற்றுலா தலங்களும் உள்ளன.

2. சம்பா : ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்கள், கங்ரா மற்றும் லாகூல்-ஸ்பிட்டி மாவட்டங்கள் இதன் எல்லை. டல் ஹௌசி கோடை வாசஸ்தலம், லஷ்மி நாராயண், ப்ரஜேஷ்வரி, சாமுண்டா தேவி, சுய் மாதா கோவில்கள் மற்றும் சில சுற்றுலா தலங்களும் உள்ளன. கஜ்ஜியார் என்ற மலைவாசஸ்தலம் ஸ்விட்சர்லாந்துக்கு இணையாக கருதப்படுகிறது.

3. ஹமீர்பூர் : உனா, மண்டி, பிலாஸ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.

4. கங்ரா : தர்மசாலா இதன் தலை நகரம். பஞ்சாப் மா நிலம், சம்பா, மண்டி, ஹமீர்பூர், உனா மாவட்டங்கள் இதன் எல்லை. மஸ்ரூர் என்ற இட த்தில் உள்ள மலைக்குடைவு கோயில்கள் உலகப்புகழ் பெற்றது. மற்றும் பல இந்து கோவில்களும் உள்ள மலைப்பிரதேச சுற்றுலா தலம். விவசாயம் முக்கியத்தொழில்.

5. தின்னார் : ரெக்காங் பியோ இதன் தலை நகர். சீனா, லாகூல்-ஸ்பிட்டி, குளு, சிம்லா மாவட்டங்கள் இதன் எல்லை.

6. குளு : சிம்லா, மண்டி, கங்ரா, லாகூல்-ஸ்பிட்டி, கின்னார் மாவட்டங்கள் இதன் எல்லை. மிகவும் புகழ்பெற்ற கோடை சுற்றுலா தலம்.

7. லாகூல்-ஸ்பிட்டி : கீலாங் இதன் தலை நகரம். சீனா, ஜம்மு காஷ்மீர் மா நிலம், கின்னார், குளு, கங்ரா, சம்பா மாவட்டங்கள் இதன் எல்லை. மிகவும் உயரமான மலை வாசஸ்தலம்-சராசரி 14000 அடி. இந்து மற்றும் புத்த மத த்தினரின் முக்கிய சுற்றுலா தலம். உலகின் உயரமான வாகனம் ஓட்டும் சாலை அமைந்துள்ளது. விவசாயம் முக்கிய தொழில். உலகின் உயரமான தபால் நிலையம் இங்குள்ளது.

8. மண்டி : சிம்லா, சோலன், பிலாஸ்பூர், ஹமீர்பூர், கங்ரா, குளு மாவட்டங்கள் இதன் எல்லை. மண்டி மற்றும் சாகேத் குறுநில மன்னர்கள் இணைந்து உருவான மாவட்டம். சுற்றுலா தலம்.

9. சிம்லா : தலை நகர். உத்தரகாண்ட் மாநிலம், சிர்மார், சோலன், மண்டி, குளு, கின்னார் மாவட்டங்கள் இதன் எல்லை.

10. சிர்மார் : நகான் இதன் தலை நகர். ஹரியானா, உத்திரபிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களும், சோலன், சிம்லா மாவட்டங்களும் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில்.

11. சோலன் : பஞ்சாப், ஹரியானா மாநிலங்களும், பிலாஸ்பூர், மண்டி, சிம்லா, சிர்மார் மாவட்டங்கள் இதன் எல்லை.

12. உனா : பஞ்சாப் மாநிலம், கங்ரா, ஹமீர்பூர், பிலாஸ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.

Q6. இமாச்சல பிரதேசத்தில் உள்ள மாநகராட்சிகள் யாவை?
சிம்லா மட்டும் தான்.
Q7. இமாச்சல பிரதேசத்தில் மக்களவைத்தொகுதிகள் யாவை?
1. கங்ரா   2. மண்டி   3. ஹமீர்பூர்   4. சிம்லா
Q8. இமாச்சல பிரதேசம் மலை பிரதேசமாகவும், ஆறுகள் நிறைய இருப்பதாலும், அணைகளும் அதிகமாக உள்ளன. முக்கியமானவை யாவை?

1. பக்ரா அணை - நங்கல் - சட்லெஜ் ஆறு.
2. போங் அணை - தல்வாரா - பியாஸ் ஆறு.
3. பாண்டோ அணை - மண்டி - பியாஸ் ஆறு.
4. சமேரா அணை - சம்ப்ரா - ரவி ஆறு.
5. நாத்ஃபா அணை - ராம்பியா - சட்லெஜ் ஆறு.