Khub.info Learn TNPSC exam and online pratice

தொழிற்துறை

Q1. தொழிற்துறை -- INDUSTRY

தொன்று தொட்டு நம் நாடு விவசாயத்தை சார்ந்த ஒரு நாடாகவே இருந்து வந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணம் கல்வியறிவு குறைவே காரணமாக இருந்தது. 190 நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து கல்வியில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கினாலும், தொழில் துறையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இதே நிலையில், 1947ல் சுதந்திரமும் பெற்றது. இதன் காரணமாக, சுதந்திரத்திற்கு பிறகு நம் தலைவர்களுக்கு, கல்வியறிவை மேம்படுத்துவது, அதே சமயத்தில், விவசாயத்திற்கு தேவையான கட்டுமான வசதிகளை மேற்கொள்வது, அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் தொழிற்துறையில் முன்னேற்றம் காணுவது, முக்கிய பணியாக அமைந்தது.
இதன் அடிப்படையிலேயே நம் நாட்டின் ஆரம்ப கால திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சுதந்திரத்திற்கு பிறகும் நம் நாட்டின் பொருளாதாரம் விவசாய வருமானத்தை சார்ந்தே இருந்தது. இருப்பினும், 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது. இதற்கு, நம் நாட்டு தலைவர்களின் தொலை நோக்கு பார்வையும் நல்ல திட்டங்களும் காரணமாயிற்று.
கல்வியறிவு முன்னேற்றம் காணத் தொடங்கியவுடன், வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது அரசாங்கத்தின் ஒரு பெரிய சவாலாக முன் நின்றது. இதன் காரணமாக, 1960லிருந்து 1990 வரை சீரான தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டிய அவசியம் உருவெடுத்து, தொழிற்துறையில் தாராளமயமாக்கல், அன்னிய முதலீடு போன்ற நடவடிக்கைகள் தொடங்கின. இதன் காரணமாக தொழில்துறை வளர்ச்சி அதிக வேகம் கண்டது.
1991ல் தொடங்கி, தாராளமயமாக்கல் கொள்கை வேகப்படுத்தப்பட்ட பின்பு, தொழில்துறையில் அன்னிய முதலீடு பெரும் வளர்ச்சி கண்டது மட்டுமின்றி, அன்னிய முதலீட்டுக்கு நம் நாடு மிகவும் உகந்த நிலையை எட்டியது. இந்த வளர்ச்சிக்கு உதவ, கல்வியறிவு உயர்ந்த இளைஞர்களும் தொழிலாளர்களும் கிடைக்கத் தொடங்கினர். இவ்வகையில், அன்னிய முதலீட்டை மேலும் அதிகப்படுத்த ஏற்படுத்தப்பட்டது தான் பிரத்தியேக பொருளாதார மண்டலங்கள் -- Special Economic Zone. குஜராத் மாநிலம் காண்ட்லாவில் முதல் பிரத்தியேக பொருளாதார மண்டலம் தொடங்கப்பட்டு, இன்றைய நிலையில் நம் நாட்டில் சுபார் 115 மண்டலங்கள் இயங்குகின்றன. 2005ல் பிரத்தியேக பொருளாதார மண்டலங்கள் சட்டம் இயக்கப்பட்டது. இதன் காரணமாக, அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கல், பல வசதிகள், சலுகைகள் அளிப்பது போன்றவை முக்கியத்துவம் பெற்றது மட்டுமின்றி முதலீட்டாளர்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையாக அமைந்தது.
அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட அனைத்து தொழிற்சாலைகளும் லாபகரமாக இயங்குவதாக புள்ளி விவர கணக்குப்படி, உண்மையில்லை என்பது தெளிவாகிறது. இவ்வாறான நலிந்த தொழிற்சாலைகளை மேலும் தொடர்வது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை என்பதன் அடிப்படையில், இவற்றிலிருந்து அரசாங்கத்தின் பெரும் பகுதியை தனியார் துறைக்கு விற்று "" Disinvestment"" இவ்வகை தொழிற்சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது மட்டுமின்றி, இந்த பணிக்காக ஒரு தனித்துறையையே -- Department of Disinvestments - நிதி அமைச்சகத்தின் கீழ் உருவாக்கியுள்ளது.
இவ்வாறாக நம்நாட்டு தொழிற்துறை முன்னேற்றம் மற்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளது என்பதில் பெருமிதம் கொள்வோம். தொழிற்துறையை தேவைக்கேற்ப மேம்படுத்துவதற்காக அவ்வப்போது திட்டங்களில் மாறுதல் செய்வதுடன், நிர்வாக அமைப்பையும் மாற்றிவருகிறது அரசாங்கம். தொழிற்துறை சார்ந்த வெவ்வேறு அமைச்சகங்களை பற்றி காண்போம்.

Q2. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் -- MINISTRY OF COMMERCE AND INDUSTRY:
"இந்த அமைச்சகத்தின் கீழ் இரண்டு துறைகள் இயங்குகின்றன.
1. வணிகத்துறை - Department of Commerce :
வணிகம் சார்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக கொள்கைகள், வெளிநாடுகளுடன் வணிக உறவுகளை மேம்படுத்துவது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கைகளை தீர்மானிப்பது போன்ற பணிகளைச் செய்கிறது.
2. தொழிற்சாலைகள் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு துறை - Department of Industrial Policy & Promotion:
1965ல் தொடங்கப்பட்ட இந்த துறை, நம் நாட்டின் தேவைக்கேற்ப, தொழிற்துறை திட்டங்களை தீட்டுவது, நம் நாட்டு கண்டுபிடிப்புகள், வடிவமைப்புகள் போன்றவற்றிற்கு ""அறிவுசார் சொத்து உரிமைகள்"" வழங்குவது, ""இடம் சார்ந்த தொழில் அங்கீகாரம்"" (Geographical Indication) பெற்று அவற்றை உலக அளவில் எடுத்து செல்வது போன்ற பணிகளை மேற்கொள்கிறது. "
Q3. சிமெண்ட் தொழில்: CEMENT INDUSTRY:
" சிமெண்ட் தயாரிப்பு 1904ல் சென்னையில் ஒரு சிறிய அளவில் தொடங்கி, 1914ல் போர்பந்தர், குஜராத்தில் ஒரு பெரிய தொழிற்சாலை தொடங்கி, அதற்கு பிறகு படிப்படியாக வளர்ந்து, இன்று சுமார் 280 மில்லியன் மெட்ரிக் டன் தயாரிப்பு நிலையில் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டின் முன்னணி சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் -- ACC, குஜராத் அம்புஜா, இந்தியா சிமெண்ட், JK லக்ஷ்மி, பிர்லா, இன்ஃபோடெக், என பல நிறுவனங்கள் உள்ளன. இன்றைய நிலையில் சுமார் 159 பெரிய அளவிலான தொழிற்சாலைகளும், பல சிறிய அளவிலான தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. "
Q4. காகித தொழில் - PAPER INDUSTRY
" ஒரு நாட்டின் கலாச்சார பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது காகிதம். காகித பயன்பாட்டில், நம்நாடு பின் தங்கிய நிலையில் இருந்தாலும், சுமார் 700 சிறிய/பெரிய காகித தொழிற்சாலைகள் உள்ளன. 100 சதவிகித அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்ட ஒரு தொழில்."
Q5. தோல் தொழில் -- LEATHER INDUSTRY
" இத்தொழில் மூலம் அந்நிய செலாவணி வரவு அதிகம் இருந்த போதிலும், இன்னும் சரியான முறைபடுத்தப்பட்ட தொழிலாக இயங்கவில்லை. இத்தொழில் இன்னும் சிறிய அளவிலும், சிறு தொழிலாகவும் மட்டுமே இயங்கி வருகிறது. புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில், பெண்களுக்கு பெரும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு தொழில். உலகின் பதப்படுத்தப்பட்ட தோல் தேவையில் சுமார் 10 சதவிகிதம் நம் நாட்டிலிருந்து விநியோகிக்கப்படுகிறது. - "
Q6. தானூர்தி தொழில்: AUTOMOTIVE INDUSTRY:
" 1897ல் நம்நாட்டுக்கு வந்த முதல் தானூர்தி - கார் - ஃபோஸ்டர் என்ற க்ராம்ப்டன் & க்ரீவ்ஸ் நிறுவனத்தின் ஆங்கிலேய அதிகாரியுடையது. அதற்குப் பிறகு ஃப்ரான்சிஸ் ஸ்ப்ரிங் என்ற ஆங்கிலேயர் 1901 முதல் தொடர்ந்து சென்னையில் தானூர்தியை தொடர்ந்து பயன்படுத்தினார். 1901ல் ஜாம்ஷெட்ஜி டாடா மற்றும் ருஸ்தம் காமா ஆகிய இரண்டு இந்தியர் தானூர்தி சொந்தமாக பயன்படுத்த தொடங்கினார். இவ்வாறாக தொடங்கிய தானூர்தி இந்திய பயன்பாடு, 1930 வரை இறக்குமதி மூலமே நடந்தது. 1940ல் எம்ப்ரயானிக் தானூர்தி நிறுவனமும், அதைத் தொடர்ந்து மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், ஜீப், ட்ராக்டர் போன்ற தானூர்தி தயாரிப்பில் ஈடுபட்டனர். அதற்கு பிறகு 1945ல் டாடா நிறுவனம், 1949ல் சென்னையில் ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ், 1978ல் டி.வி.எஸ், 1981ல் மாருதி, 1984ல் ஹீரோ போன்ற நிறுவனங்கள் தயாரிப்பை தொடங்கியவுடன், தானூர்தி பயன் அதிகரித்துவிட்டது.
இவ்வாறாக தொடங்கிய தானூர்தி தொழில் தாராளமயமாக்கல் கொள்கைக்கு பிறகு பெருமளவில் பெருகி, இன்று உலகில் தானூர்தி தயாரிப்பில் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதில் நான்கு சக்கர தானூர்தி தயாரிப்பில் சென்னை பெரும் பங்கு வகிக்கிறது. இங்கு உலகின் பல பெரிய தானூர்தி தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. Detroit of India என்ற சிறப்பு பெயர் கொண்டது.
தானூர்தி தயாரிப்பில் அரசாங்கம் ஈடுபடவில்லை. தானூர்தி தயாரிப்பு அனைத்தும் தனியார் வசம் உள்ளது. இன்றைய நிலையில் இந்தியா தயாரிப்பில் ---
1. சுமார் 18 மில்லியன் வாகனங்களை தயாரிக்கிறது (இரு மற்றும் நான்கு)
2. சுமார் 2.35 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது.
3. இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நாடு.
4. தானூர்தி தயாரிப்பில் உலகில் 7வது முன்னணி நாடு.
தானூர்தி தயாரிப்பின் முன்னேற்றத்துக்காக அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை, திட்டங்கள் வகுப்பது SIAM Society of Indian Automobile Manufacturers -- 38 நிறுவன அங்கத்தினர்கள் கொண்ட இந்த அமைப்பு. "
Q7. ரசாயனம் மற்றும் உர அமைச்சகம் -- MINISTRY OF CHEMICALS AND FERTILIZERS:
"இந்த அமைச்சகத்தின் கீழ் இரண்டு துறைகள் இயங்குகின்றன.
1. ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் துறை -- Department of Chemicals & Petrochemicals :
ரசாயனம், பெட்ரோ ரசாயனம் மற்றும் மருந்து தயாரிப்பின் திட்டங்கள் தீட்டுவது, விதிமுறைகள் வகுப்பது, ஏற்றுமதி, இறக்குமதி ஆகிய பணிகளை செய்கிறது.
2. உரத் துறை - Department of Fertilizers:
உரத் தொழிலுக்குத் தேவையான திட்டங்களை தீட்டுவது, விதிமுறைகள் வகுப்பது, உர விநியோகம் போன்ற பல பணிகளை செய்கிறது.
3. மருந்து துறை -- Department of Pharmaceuticals:
மருந்து தயாரிப்பு வளர்ச்சி, விநியோகம், விலை நிர்ணயம் போன்ற பல பணிகளை மேற்கொள்கிறது. மருந்து பொருட்களின் விலைக் கட்டுப்பாடு, நிர்ணயம், விலை மாற்றம் போன்ற முக்கிய பணிகளை தேசிய மருந்து விலைக்கட்டுப்பாடு ஆணையம், புது டெல்லி (1965) கவனித்துக் கொள்கிறது. "
"இந்த அமைச்சகத்தின் கீழ், கீழ்க்கண்ட பொதுத்துறை நிறுவனங்கள் இயங்குகின்றன:
1. Bengal Chemicals & Pharmaceuticals Ltd., Kolkatta – 1901 – ப்ரஃபுல்ல சந்திர ராய் என்ற மேற்கு வங்காள சுதந்திர போராட்ட வீரர் அவர்களால் தொடங்கப்பட்டு, பிறகு அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுத்துறையாக இயங்குகிறது.
2. Fertilizers & Chemicals Travancore Ltd.,: கொச்சி, கேரளா.
3. Hindustan Antibiotics Ltd., பிம்ப்ரி, பூனே, மஹாராஷ்டிரா -- 1954 -- உலக சுகாதார அமைப்பு மற்றும் UNICEF உதவியுடன் நிறுவப்பட்ட தொழிற்சாலை.
4. Gujarat State Fertilizers & Chemicals Ltd., வடோடரா, குஜராத் --1967 -- யூரியா, அம்மோனியா, அம்மோனியம் சல்ஃபேட், சல்ஃப்யூரிக் அமிலம், ஃபாஸ்ஃபோரிக் அமிலம் போன்றவற்றை தயாரிக்கிறது.
5. Indian Farmers Fertilizers Cooperative Ltd., புது டெல்லி -- நவம்பர் 1967 – ரசாயன உரக்கலவை தயாரிப்பில் முன்னணி நிறுவனம்
6. Krishak Bharati Cooperative Ltd., சூரத் – 1985. யூரியா மற்றும் அம்மோனியா தயாரிப்பில் முன்னணி நிறுவனம்.
7. Indian Drugs and Pharmaceuticals Ltd., 1961 – மருந்து மற்றும் உபகரணங்கள் தயாரிப்பில் ஹைதராபாத், குர்காவ்ன், ரிஷிகேஷ் போன்ற பல இடங்களில் இதன் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது.
8. Hindustan Organic Chemicals Ltd., 1960 – மும்பை.. "
Q8. நிலக்கரி அமைச்சகம் -- MINISTRY OF COAL:
"இந்திய நலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரி தோண்டுதல், உற்பத்தி, விநியோகம் மற்றும் விலை நிர்ணயம் போன்ற பல பணிகளை மேற்கொள்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் கீழ்க்கண்ட பொதுத்துறை நிறுவனங்களும், கல்வி நிறுவனமும் இயங்கி வருகிறது. an institution to impart coal management programme - Indian Institute of Coal Management, Ranchi. "
"1. Coal India Limited: 1975 – கொல்கத்தா -- இது ""மகாரத்னா"" அந்தஸ்து பெற்ற நிறுவனம். இதன் கீழ் கீழ்க்கண்ட துணை நிறுவனங்கள் இயங்குகின்றன."
a) Bharat Coking Coal Ltd., தன்பாத், ஜார்க்கண்ட்
b) Central Coal Fields Ltd., ராஞ்சி, ஜார்க்கண்ட்
c) Western Coal Fields Ltd., நாக்பூர், மகாராஷ்டிரா
d) Eastern Coal Fileds Ltd., அசன்சால், மேற்கு வங்காளம்
e) South Eastern Coal Fields Ltd., பிலாஸ்பூர், சத்தீஸ்கர்
f) Northern Coal Fields Ltd., சிங்ரோலி, மத்திய பிரதேசம்
g) Mahanadhi Coal Fields Ltd., சம்பல்பூர், ஒடிசா
"2. Neyveli Lignite Corporation Ltd., : 1956 - சென்னை -- சுரங்கம், நெய்வேலி, கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இதனுடன் ஒரு அனல் மின் நிலையம் உள்ளது."
3. Singareni Collieries Ltd., : 1920 – கோத்தகுடெம், கம்மம் மாவட்டம், தெலங்கானா.
Q9. கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவன அமைச்சகம் -- MINISTRY OF HEAVY INDUSTRIES AND PUBLIC ENTERPRISES:
"இந்த அமைச்சகத்தின் கீழ் பல தொழில் சார்ந்த சுமார் 48 பொதுத்துறை நிறுவனங்கள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளின் மேம்பாடு, மற்றும் தொழில் ரீதியான வளர்ச்சியை மேற்பார்வை செய்யும் அமைச்சகம். இதன் கீழ் இயங்கும் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்கள்: "
1. Andrew Yule Co., Ltd., 1979 -- கொல்கத்தா
2. Bharat Bhari Yudyog Ltd., 1986 -- கொல்கத்தா
"3. Bharat Heavy Electricals Ltd., 1953 -- புது டெல்லி -- இதன் தொழிற்சாலைகள், திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை, போப்பால், ஹரித்வார், பெங்களூரு, ஹைதராபாத் போன்ற இடங்களில் உள்ளது. "
4. Bharat Heavy Plates & Vessels Ltd., 1966 -- விசாகப்பட்டினம்
5. Bharat Pumpts & Compressors Ltd., 1970 -- அலஹாபாத்
6. Bridge & Roof Co., India Ltd., 1972 -- கொல்கத்தா
7. Burn Standard Co., Ltd., 1976 -- கொல்கத்தா
8. Cement Corporation of India 1965 -- புது டெல்லி -- இதற்கு நாட்டின் பல இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன
"9. Hindustan Cables Ltd., 1972 -- அசன்சால், மேற்கு வங்காள்ம் -- இதற்கு ஹைதராபாத், அலகாபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. "
10. Hindustan Newsprint Ltd., 1982 -- வெல்லூர் - கேரளா
11. Hindustan Paper Corporation Limited -- 1970 -- ஹைலாகாண்டி, அஸ்ஸாம்.
12. Hindustan Salts Ltd., 1959 -- ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
13. HMT International Ltd., 1975 -- பெங்களூரு.
14. HMT Bearings Ltd., 1981 -- ஹைதராபாத் - தெலங்கானா
15 HMT Chinar Watches Ltd., 1999 -- ஸ்ரீநகர்
16. HMT Limited 1953 -- பெங்களூரு
17. HMT Machine Tools Ltd., 1999 -- பெங்களூரு
18. HMT Watches Ltd., 1999 -- பெங்களூரு
19. Hooghly Printing Co.Ltd., 1979 -- கொல்கத்தா
20. Power Electronics Ltd., 2000 -- கோட்டா, ராஜஸ்தான்
21. Instrumentation Control Valves Ltd., 2000 -- ராஜஸ்தான்
22. Instrumentation Digital Control Ltd., 2000 -- கோட்டா, ராஜஸ்தான்
23. Richardson & Cruddas Ltd., 1972 -- மும்பை
24. Triveni Structurals Ltd., 1965 -- அலஹாபாத்
25. Tungabhadra Steel Products Ltd., 1960 -- அலஹாபாத்
Q10. குறு, சிறு மற்றும் நடுநிலை நிறுவன அமைச்சகம் -- MINISTRY OF MICRO, SMALL & MEDIUM ENTERPRISES:
"சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அமைச்சகம். இதன் கீழ் இயங்கும் முக்கிய நிறுவன அமைப்புகள்:
1. தென்னை நார் குழுமம் -- Coir Board: 1953 – எர்ணாகுளம், கேரளா -- தென்னை நாரால் இயங்கும் தொழில் வளர்ச்சி பெற, ஆராய்ச்சி, கல்வி, மற்றும் தென்னை நார் பொருட்களை சந்தைப்படுத்துவது ஆகிய பணிகளை செய்கிறது.
2. கதர் மற்றும் கிராம கைவினைப் பொருட்கள் குழுமம் -- Khadi & Village Industries Commission : மும்பை – 1956 -- கதர் மற்றும் கிராம கைவினைப் பொருட்களை மேம்படுத்துவது மற்றும் சந்தைப்படுத்துவது இதன் முக்கிய பணி."
Q11. சுரங்க அமைச்சகம் -- MINISTRY OF MINES:
"நாட்டில் உள்ள பல் வகை சுரங்க நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது, சார்ந்த விதிமுறைகளை சட்ட வடிவத்தில் ஏற்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறது. நாட்டில் உள்ள, கனிம, தனிம வளங்கள் சம்பந்தமான அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறது. இதன் கீழ் இயங்கும் முக்கிய அமைப்புகள்/பொதுத்துறை நிறுவனங்கள்:
1. இந்திய புவியியல் ஆய்வு மையம் -- Geological Survey of India: 1851ல் தொடங்கப்பட்டு, கொல்கத்தா-வை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், நாட்டின் புவியியல் ஆய்வுகளை மேற்கொண்டு, வளங்களை கண்டறிவது இதன் முக்கிய பணியாகும்.
2. தேசிய அலுமினியம் நிறுவனம் - National Aluminium Co. Ltd: 1981ல் நிறுவப்பட்டு, புவனேஷ்வர் - ஐ தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்த பொதுத்துறை நிறுவனம், நாட்டின் பல இடங்களில் தொழிற்சாலைகளைக் கொண்டு, அலுமினியம் சார்ந்த அனைத்து பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. அலுமினியம் தொழிலில் உலகின் பெரிய நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
3. இந்துஸ்தான் செம்பு நிறுவனம் Hindustan Copper Limited: 1967 -கொல்கத்தா - வை தலைமையகமாகக் கொண்டு நாட்டில் செம்பு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. "
Q12. "நம் நாட்டில் கிடைக்கும் முக்கிய கனிம/தனிம வளங்களும்/இடங்களும் -- IMPORTANT ELEMENTS AND MINING REGIONS IN INDIA:"

செம்பு -- COPPER: கேத்ரி, ராஜஸ்தான்; மலாஞ்ச்கண்ட், மத்தியபிரதேசம்; ரக்கா, காட்ஷீலா, ஜார்க்கண்ட்.
வைரம் -- DIAMOND: பக்ஸ்வாஹா மற்றும் பன்னா, மத்தியபிரதேசம்; கொல்லூர், ஆந்திரபிரதேசம்.
இரும்பு தாது -- IRON ORE: பார்பில், ஒடிசா; ச்சிரியா, கிரிபுரு, குவா, நோவாமுடி, ஜார்க்கண்ட்; தல்லி ராஜ் ஹரா, சத்தீஸ்கர்; தோனிமலை, குத்ரேமுக் கர்நாடகா. 
நிலக்கரி -- COAL : ஆந்திரபிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்காளம், பீஹார், மகாராஷ்டிரா.
கல்நார் -- ASBESTOS : குஜராத், ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம். Gujarat, Rajasthan, Andhra Pradesh.
பாக்ஸைட் -- BAUXITE : தமிழ்நாடு, கோவா, மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம்.
டோலோமைட் - DOLOMITE : ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்.
பளிங்கு கற்கள் -- GRANITE : கர்நாடகா, ஆந்திரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான்.Karnataka, Andhra Pradesh, Gujarat, Rajasthan.
பழுப்பு நிலக்கரி -- LIGNITE : தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர். Tamilnadu, Gujarat, Rajasthan, Jammu & Kashmir.
சுண்ணாம்பு - LIME STONE : தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், இமாச்சலபிரதேசம்-பஞ்சாப் எல்லை.
Q13. எஃகு அமைச்சகம் -- MINISTRY OF STEEL:
"3ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எஃகு சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் முதல் எஃகு தொழிற்சாலை 1907-1908ல் தோராப்ஜி டாடா அவர்களால் TISCO என்ற எஃகு தொழிற்நிறுவனம் நிறுவப்பட்டது. அதன் பின், அரசாங்கத்தால் கீழ்கண்ட நான்கு பொதுத்துறை எஃகு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது.
1. ரௌர்கேலா -- 1959 -- ஜெர்மன் நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது.
2. பிலாய் -- 1959 -- ரஷ்யா நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது.
3. துர்காபூர் -- 1965 -- இங்கிலாந்து நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது.
4. பொக்காரோ -- 1965 -- ரஷ்ய நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது.
இவ்வாறாக, 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எஃகு உருக்காலைகள் உருவாகி, எஃகு தாது அதிகப்படியாக கிடைப்பதால், இத்தொழில் விரிவு- படுத்தப்பட வேண்டிய நிலை உருவாகியது. இதற்கு சாதகமாக 1991ல் தாராளமயமாக்கல் கொள்கையும் அமைந்தது. இத்தொழிலில் முன்னோடி நிறுவனங்களாக டாடா மற்றும் மிட்டல் உருவெடுத்து, இன்று உலகளவில் இத்தொழிலில் பெரிய நிறுவனங்களாக திகழ்கின்றன. பொதுத் துறையில் Steel Authority of India Ltd. நிறுவப்பட்டு, நாட்டின் எஃகு உற்பத்தியின் பெரும்பங்கு இந்த நிறுவனத்தின் கீழ் பல தொழிற்சாலைகள் மூலம் நடக்கிறது. இன்றைய நிலையில் உலகின் எஃகு உற்பத்தி நாடுகளில் நம் நாடும் முன்னணியில் -- 5வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. "
இந்த அமைச்சகத்தின் கீழ், கீழ்க்கண்ட பொதுத்துறை நிறுவனங்கள் இயங்குகின்றன:
"1. Steel Authority of India Ltd., (SAIL): 1954 – HQ: புது டெல்லி – இதன் நிர்வாகக் கட்டுப்பாட்டில் பிலாய், பொக்காரோ, துர்காபூர், ரௌர்கேலா, பர்ன்பூர், சேலம் மற்றும் பத்ராவதி ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளும், நாட்டின் முக்கியமான நகரங்களில் மண்டல அலுவலகங்களும் விற்பனை மையங்களும் உள்ளன. தமிழ் நாட்டின் சேலத்தில் தயாரிக்கப்படும் ஸ்டீல் உலகத் தரத்தில் முதன்மையானதும், பிரத்தியேகமானதும் ஆகும்."
"2. National Mineral Development Corporation Ltd., (NMDC) – 1958 – HQ: ஹைதராபாத் – நாட்டில் கிடைக்கும் கனிம தனிமங்களை ஆராய்ந்து, கண்டுபிடித்து, தோண்டுதல், விற்பனை, ஏற்றுமதி போன்ற அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறது."
"3. Metallurgical & Engineering Constultants (India) Ltd., : 1973 – HQ: ராஞ்சி – ஜார்க்கண்ட் – எரிசக்தி, கட்டுமானம், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு, உலோக அறிவியல் போன்ற துறைகளில் ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கும் பணியை மேற்கொள்கிறது. "
4. Rashtriya Ispat Nigam Ltd., : விசாகப்பட்டினம், ஆந்திரபிரதேசம்.
5. Kudremukh Iron Ore Co. Ltd., 1976 – HQ: பெங்களூரு
6. Manganese Iron Ore Co. Ltd., 1977 – HQ: நாக்பூர்
7. MSTC Ltd., வடோடரா, குஜராத்
8. Hindustan Steel works Constn. Ltd., - 1964 - HQ: கொல்கத்தா
9. Ferro Scrap Nigam Ltd: 1979 – பிலாய், சத்தீஸ்கர்.
10. Bird Group of Companies: 1980 – HQ: கொல்கத்தா
Q14. உணவு பதனிடும் தொழில் அமைச்சகம் -- MINISTRY OF FOOD PROCESSING INDUSTRIES:
"நம் நாட்டில், தானிய வகைகள், பழங்கள், பால், பருப்பு வகைகள், காய்கறிகள் உற்பத்தியில் குறையில்லாத நிலை இருந்தாலும், அவற்றை பதப்படுத்தி, பாதுகாத்து, சேமித்து, தேவைக்கேற்ற பயிர் வளர்ப்பு மாற்றங்கள் செய்யும் நிலையில் முன்னேற்றம் மிக மிக குறைவாகவே உள்ளது. குறிப்பிட்டு சொன்னால், நாம் நாட்டில் வருடத்திற்கு சுமார் 50000 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வீணாவதாக மதிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையை கருத்தில் கொண்டு, இத்தொழிலில் வேகமான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, 1988ல் இந்த அமைச்சகம் உருவாக்கப்பட்டது. உணவு பதனிடும் தொழிற்சாலை துவங்க தேவையான வசதிகள், சலுகைகள் ஏற்படுத்தி, 2025க்குள் இத்துறையில் ஒரு பெரிய மாற்றம், முன்னேற்றம் காண வேண்டும் என்ற குறிக்கோளுடன் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இத்துறையில் 100 சதவிகித அன்னிய முதலீடும் அனுமதிக்கப்பட்டுள்ளது "
Q15. ஜவுளித்துறை அமைச்சகம் -- MINISTRY OF TEXTILES:
"நெசவுத் தொழில், மனித குலத்தின் ஒரு பழமையான தொழில். இன்றும், நம்நாட்டில் நெசவுத்தொழில் கிராமப்புற பகுதிகளில் ஒரு குடிசைத் தொழிலாகவும், வாழ்வாதாரமாகவும் உள்ளது. தொழிற்புரட்சி, அதைத் தொடர்ந்து, சுதந்திர போராட்டத்தின் போது, சுதேசி இயக்கமும், நம் நாட்டில் நெசவுத் தொழிலில், இயந்திர மயம் சிறிது சிறிதாக புகுந்து, இன்று, நம் நாட்டில் வேலை வாய்ப்பு அளிப்பதில் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் உள்ளது.
1818ல் முதன் முதலாக இயந்திர நெசவாலை கொல்கத்தாவில் தொடங்கியது. இருப்பினும், அதிகமான இயந்திர நெசவாலைகள் மும்பை, சூரத், அஹபதாபாத் போன்ற நகரங்களை சுற்றியே உருவானது. சிறிய அளவில் தமிழ் நாட்டின் கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் தொடங்கின. கைநெசவு, நூலாடை போன்றவை திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய இடங்களைச் சுற்றி அமைந்துள்ளன. காஞ்சிபுரம், ஆரணி, வாரணாசி, மைசூரு போன்ற இடங்கள் பட்டு நெசவுத் தொழிலில் முன்னணியில் உள்ளது குறிப்படத்தக்கது.
நாட்டின் உள்நாட்டு உற்பத்தி திறனில் சுமார் 5% ஜவுளிதுறையின் மூலம் கிடைக்கிறது. ஏற்றுமதி மதிப்பில் சுமார் 13.5% ஜவுளித்துறையின் மூலம் கிடைக்கிறது. சுமார் 35 லட்சம் மக்கள் இத்துறையின் மூலம் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் என்பது முக்கியமான குறிப்பு. பருத்தி உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளதால், ஜவுளித்துறையின் மேம்பாடு, ஏற்றுமதி, ஆராய்ச்சி போன்றவைகளை கவனித்துக்கொள்ள இந்த அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள்: "
1. National Textile Corporation Ltd.,: 1968 – புது டெல்லி
2. British India Corporation : 1956 – கான்பூர்
3. Cotton Corporation of India Ltd., 1970 –HQ: மும்பை – பருத்தி உற்பத்தியில் மேம்பாடு, விநியோகம், விற்பனை, ஏற்றுமதி ஆகிய பணிகளை செய்கிறது
4. Jute Corporation of India: 1971 – HQ: கொல்கத்தா - சணல் உற்பத்தி, மேம்பாடு, விற்பனை, விநியோகம் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
5. National Handloom Development Corporation Ltd.: 1983 – லக்னௌ.
6. Central Wool Development Board: ஜோத்பூர், ராஜஸ்தான்.
7. National Institute of Fashion Technology: 1986 – தேசிய அளவிலான ஜவுளித்துறையில் ஒரு கல்வி மையம். ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனம். டெல்லி, மும்பை, கொல்கத்தா, காந்திநகர், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, ரே பரேலி, பாட்னா, ஷில்லாங், போப்பால், தலிபரம்பா, கங்க்ரா, ஜோத்பூர், மற்றும் மொரீசியஷ் ஆகிய இடங்களில் இதன் கல்வி மையங்கள் உள்ளன."
8. Sardar Vallabhai Patel Institute of Textile Management: 2002 – கோயம்புத்தூர் "அரசாங்கத்தால் முன் வைக்கப்படும் திட்டங்கள், சலுகைகள் ஆகியவற்றை ஜவுளித்துறை தயாரிப்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துச்செல்லும் பணியை -- Synthetic and Art Silk Mills Research Association (SASMIRA), Manmade Textile Research Association (MANTRA) and South Indian Textiles Research Association (SITRA) ஆகிய அமைப்புகள் செய்து வருகின்றன.
Q16. சர்க்கரை ஆலைகள் -- SUGAR INDUSTRY:
"கரும்பு பயிர் வளர்ச்சி 7 வது நூற்றாண்டில் சீனாவில் தொடங்கியதாக தெரிகிறது. பிறகு ஐரோப்பியர்கள், மேற்கு இந்திய தீவு நாடுகள் மற்றும் இதர நாடுகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியவுடன் கரும்பு பயிர் மற்ற இடங்களுக்கும் பரவியது. 18வது நூற்றாண்டில் தான் இந்தியாவில் கரும்பு பயிர் வளர்ச்சி முக்கியத்துவம் பெற்று முன்னேற்றம் கண்டது (காரணம் -- இங்கிலாந்தில் சர்க்கரை தட்டுப்பாடும் அதிகமான விலை ஏற்றமும் இருந்ததால், இந்தியாவில் அதிகமான சாதகமான சூழ்நிலை நிலவியதால்). இவ்வாறாக தொடங்கிய இத்தொழில் வேகமாக வளர்ந்து, இன்றைய நிலையில் உலகில் கரும்பு பயிர் வளர்ப்பிலும், சர்க்கரை உற்பத்தியிலும் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது பெருமைக்குரிய விவரம். நம் நாட்டில் சுமார் 582 சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தியில் உத்திரபிரதேசம் முன்னணியில் உள்ளது. இத்தொழில் முழுமையாக தனியார் வசம் இருந்தாலும், கரும்புக்கான விலை நிர்ணயம், ஏற்றுமதி, இறக்குமதி, கரும்பிலிருந்து இதர பொருட்கள் (எத்தனால்) தயாரிப்பு ஆகியவற்றை விவசாய அமைச்சகம் தன் கட்டுப்பாட்டில் மேற்கொள்கிறது. "
Q17. கனரக தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்: MINISTRY OF HEAVY INDUSTRIES & PUBLIC ENTERPRISES:
" பொதுத்துறைகள் லாபகரமாக இயங்குவதும், அவ்வாறு இயங்குவதற்கேற்ற சுற்று சூழலை, அனைத்து துறைகளுடன் இணைந்து உருவாக்கி கொடுப்பதற்காக இயங்கும் அமைச்சகம். இதன் கட்டுப்பாட்டில் சுமார் 48 பொதுத்துறை நிறுவனங்கள் இயங்குகின்றன. "
Q18. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் -- MINISTRY OF PETROLEUM & NATURAL GAS:
"நம் நாட்டில் முதன் முதலில் 1889 ல் அஸ்ஸாம் மாநில திக்பாய் என்ற இடத்தில் எண்ணெய் வளம் இருப்பதாக கண்டறியப்பட்டது. உடனடியாக எண்ணெய் வெளியெடுக்கப்பட்டு அதை சுத்திகரிக்க 1901ல் ஒரு சுத்திகரிப்பு ஆலை இங்கு நிறுவப்பட்டது. அதற்கு பிறகு இத்துறையில் அதிகமான நடவடிக்கை ஏதுமின்றி இருந்தது -- காரணம், நாட்டில் தானூர்தி பயன்பாடு முன்னேறாமல் இருந்ததால். "
"1930 -1950 களில் நம்நாட்டில் தானூர்தி தயாரிப்பு மற்றும் பயன்பாடு அதிகரித்ததால், எண்ணெய் தேவையும் அதிகரித்தது. அதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கவே, சுத்திகரிப்பு வேலையும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. "
"எண்ணெய் கண்டுபிடிப்பு நம்நாட்டில் மிக மெத்தனமாகவே நகர்ந்தது. 1966-1967ல் மும்பையின் கடற்பகுதியில் அதிகமான எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, முதல் எண்ணெய் கிணறு 1974ல் தயாரிப்பு தொடங்கியது. இன்றைய நிலையில், மும்பை எண்ணெய் கிணறு சுமார் 3,50,000 பீப்பாய் எண்ணெய் தினமும் உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டியது. அதற்கு பிறகு 1999ல் மங்களா பகுதி, ராஜஸ்தானிலும், தமிழ்நாட்டின் நரிமணம் பகுதியிலும் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறாக, உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கவே, சுத்திகரிப்பு ஆலைகள் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும் எண்ணெய் வளப் பகுதிகளை கண்டுபிடிக்கும் ஆய்வுப்பணி தொடர்கிறது. கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிக்கரையில் அதிகமான இயற்கைவாயு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு வளர்ந்த இத்தொழில், உள்நாட்டு உற்பத்தி திறனில் சுமார் 15 சதவிகிதம் பங்கு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. "
இத்துறையின் நிர்வாகத்தை இந்த அமைச்சகம் மேற்கொள்கிறது. இதன் கீழ், கீழ்க்கண்ட பொதுத்துறை நிறுவனங்கள் இயங்குகின்றன.
1. Balmer Lawrie & Co. Ltd., 1867 – கொல்கத்தா – பீப்பாய்கள், எண்ணெய் சார்ந்த இதர தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது.
2.Bharat Petroleum Corporation Ltd., - 1976 – மும்பை – எண்ணெய் சுத்திகரிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றை மேற்கொள்கிறது.
3. Bongaigaon Refinery & Petrochemicals Ltd., 1974 – பொங்கைகாவ்ன், அஸ்ஸாம்
4. Chennai Petroleum Corporation Ltd., 1965 – சென்னை
5. Engineers India Ltd., 1965 – புது டெல்லி - எண்ணெய் சார்ந்த தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனம்.
6. Gas Authority of India Limited: 1984 – புது டெல்லி
7. Hindustan Petroleum: 1974 – மும்பை
8. Indian Oil Corporation Ltd., 1964 – மும்பை
9. Mangalore Refinery & Petrochemicals Ltd., 1989 – மங்களூர்
10. Oil & Natural Gas Corporation Ltd., 1956 – டெஹ்ராடூன்
11. Oil India Limited., 1959 – HQ: துலியாஜான், அஸ்ஸாம்
Q19. மின்சார துறை -- POWER SECTOR
"நம் நாட்டில் மின்சாரம் உற்பத்தி 1887ல் தொடங்கியது - டார்ஜிலிங் மேற்கு வங்காளத்தில் முதல் நீர் மின் உற்பத்தி தொடங்கியது. 1899ல் கொல்கத்தாவில் மின் விநியோகம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கர்நாட்காவில் கிருஷ்ணசாகர் அணை துவங்கப்பட்டு, நீர் மின் உற்பத்தி தொடங்கி 1906ல் பெங்களூரில் மின் விநியோகம் தொடங்கியது." "இவ்வாறாக தொடங்கிய மின்சார உற்பத்தி, நாளடைவில் பல நீர்மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள் என விரிவடைந்து, படிப்படியாக நாட்டின் பல பகுதிகள் மின் இணைப்பு பெறத் தொடங்கியது. 1969ல் அணு மின் நிலையங்களும் அமைக்கப்பட தொடங்கின. மின் விநியோகம் வேகப்படுத்தப்பட்டாலும், தேவைக்கேற்ற மின் உற்பத்தி இல்லாததால் குறைபாடு இருந்து கொண்டே வருகிறது. அரசாங்கம் எல்லா முயற்சிகளும் மேற்கொண்டு மின் உற்பத்தி நிலையை பல வழிகளில் மேம்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. " "இவ்வாறாக, மின் உற்பத்தியில், நீர்மின் நிலையம், அனல் மின் நிலையம், அணு மின் நிலையம், காற்றாலைகள், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி என பல வழிகளில் முயற்சிகள் நடந்து வருகிறது. "
Q20. அணுமின் நிலையங்கள் -- NUCLEAR POWER STATIONS:
1. நரோரா அணுமின் நிலையம், உத்திரபிரதேசம் 1991
2. ராஜஸ்தான் அணுமின் நிலையம், சித்தோர்கர் 1973.
3. தாராபூர் அணுமின் நிலையம், மும்பை – 1969
4. காக்ராபார் அணுமின் நிலையம், குஜராத் - 1993
5. மெட்ராஸ் அணுமின் நிலையம், சென்னை – 1984
6. கைகா அணுமின் நிலையம், கர்நாடகா – 2000.
7. கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ்நாடு - 2012.
Q21. அனல் மின் நிலையங்கள் -- THERMAL POWER STATIONS:
"நாட்டின் மின் தேவையில் சுமார் 75 சதவிகிதம் அனல் மின் நிலையங்களால் பெறப்படுகிறது. இந்த மின் நிலையங்கள், நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. "
சில முக்கியமான அனல் மின் நிலையங்கள் -- LIST OF IMPORTANT THERMAL STATIONS STATEWISE:
மாநிலம் அனல் மின் நிலையங்கள் உள்ள இடங்கள்.
ஆந்திரபிரதேசம் ராமகுண்டம், பலோஞ்சா, இப்ராஹிம்பட்டினம், கடப்பா, வாரங்கல், கரீம்நகர், கொண்டாபள்ளி.
அஸ்ஸாம் திப்ருகர், சிவசாகர்.
பீஹார் பரௌனி, முஸாஃபர்பூர்
சத்தீஸ்கர் கோர்பா
டெல்லி ராஜ்காட், புதுடெல்லி.
குஜராத் தபி, கேடா, ஜாம்நகர், ஆனந்த், கச், சூரத், காந்திநகர், வடோடரா, பரூச்
கோவா கோவா :
ஹரியானா பானிபட், ஃபரிதாபாத், ஹிசார்.
ஜார்க்கண்ட் பொக்காரோ
ஜம்மு காஷ்மீர் புலவாமா
கேரளா காயம் குளம்
மத்திய பிரதேசம் பேட்டூல், உமாரியா, அனுப்புர், சிதி
மகாராஷ்டிரா நாக்பூர், நாசிக், ஜல்காவ்ன், அக்கோலா, சந்திராபூர், ராய்கர், ட்ராம்பே
ஒடிசா ஜார்ஸ்குடா, பகல்பூர், ஆங்குல், சம்பல்பூர்.
பஞ்சாப் பதிண்டா, ரூப்நகர்.
ராஜஸ்தான் ஸ்ரீகங்கா நகர், கோட்டா, பார்மெர், பரன், ராம்கர், தொல்பூர், பிகானீர்.
தமிழ்நாடு சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் நெய்வேலி, தூத்துக்குடி
உத்திரபிரதேசம் சோன்பத்ரா, கான்பூர், ஜான்சி, அலிகார், சிங்க்ரௌலி, கவுத்தம் புத்தா நகர், ரே பரேலி, அம்பேத்கர் நகர், ஷாஜஹான்பூர், அவுரய்யா
மேற்கு வங்காளம் பிர்பூம், புருளியா, மூர்ஷிதாபாத், பர்தமான், பங்க்குரா.
Q22. நீர்மின் நிலையங்கள் -- LIST OF IMPORTANT HYDRO ELECTRIC PROJECTS:
எண் இடம்/மாநிலம் நதி.
1. தேஹ்ரி, உத்தராகாண்ட் பாகீரதி
2. ஸ்ரீசைலம், ஆந்திரா கிருஷ்ணா
3. நாகார்ஜூனா சாகர், ஆந்திரா கிருஷ்ணா
4. சர்தார் சரோவர், குஜராத் நர்மதா
5. பக்ரா, இமாச்சல பிரதேசம் சட்லஜ்
6. ஊரி, ஜம்மு காஷ்மீர் ஜீலம்
7. துல் ஹஸ்தி, ஜம்மு காஷ்மீர் செனாப்
8. ஷ்ராவதி, கர்நாடகா ஷ்ராவதி
9. இடுக்கி, கேரளா பெரியார்
10. மேட்டூர், தமிழ்நாடு காவேரி
11. க்ருஷ்ணராஜ சாகர், கர்நாடகா காவேரி
12. பார்கி, மத்திய பிரதேசம் நர்மதா
13. ஓம்காரேஷ்வர், மத்தியபிரதேசம் நர்மதா
14. இந்திரா சாகர், மத்தியபிரதேசம் நர்மதா
15. ரங்கீத், சிக்கிம் ரங்கீத்
16. டீஸ்டா, சிக்கிம் டீஸ்டா
17. டானக்பூர், உத்தராகாண்ட் சர்தா
18. தௌலிகங்கா, உத்தராகாண்ட் தௌலிகங்கா
19. லோஹாரிநாக், உத்தராகாண்ட் பாகீரதி
20. மூஷி, மகாராஷ்டிரா முலா.
Q23. காற்றாலை மின் சக்தி -- WIND POWER:
"இந்தியாவின் பல பகுதிகளில் காற்றாலைகளின் மூலம் மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றுள் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. காற்றாலை மின் சக்தி உற்பத்தி செய்யப்படும் இடங்கள்:"
எண் இடம் மாநிலம்
1. சத்தாரா மகாராஷ்டிரா
2. கன்னியாகுமரி தமிழ்நாடு
3. கயத்தார் தமிழ்நாடு
4. ராமக்கல்மேடு கேரளா
5. முப்பந்தல் தமிழ்நாடு
6. குடிமங்கலம் தமிழ்நாடு
7. புத்லூர் ஆந்திரா
8. லம்டா தனிடா குஜராத்
9. சென்னை தமிழ்நாடு
10. ஜம்குத்ரானி கர்நாடகா
11. ஜோக்பட்டி கர்நாடகா
12. பெருங்குடி தமிழ்நாடு
13. கெத்தானூர் தமிழ்நாடு
14. புலவாடி தமிழ்நாடு
15. திருப்பூர் தமிழ்நாடு.
Q24. மின் துறையை நிர்வகிக்க இரண்டு அமைச்சகங்கள் உள்ளன.
மின் எரிசக்தி அமைச்சகம் -- MINISTRY OF POWER :
"புதிய மற்றும் புதிப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் -- MINISTRY OF NEW AND RENEWABLE ENERGY: மின்சாரம் தயாரிக்க புதிய வழிமுறைகளை அடையாளம் காண்பது மற்றும் அவற்றை பயன்பாட்டு மேம்பாடு செய்வது ஆகிய பணிகளை செய்கிறது. "
இதன் கீழ், கீழ்க்கண்ட பொதுத்துறை நிறுவனங்கள் இயங்குகின்றன.
1. தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பொரேஷன் -- Damodar Valley Corporation,ஜார்க்கண்ட் – 1948.
2. நர்மதா நீர்மின் அபிவிருத்தி கழகம் -- Narmada Hydroelectric Development Corporation Ltd., - 2000.
3. NTPC மின் விநியோக நிறுவனம் Electric Supply Co. Ltd., - 2003
4. Power Finance Corporation Ltd., New Delhi – 1986. (www.pfcindia.com)
5. Power Grid Corporation of India – 1992 – Gurgaon (www.powergridindia.com)
6. கிராமப்புற மின்மயமாக்கல் குழுமம் -- Rural Electrification Corporation – 1988 –ரிஷிகேஷ், உத்தராகாண்ட்
7. தேசிய அனல் மின் சக்தி குழுமம் -- National Thermal Power Corporation Ltd., (NTPC Ltd) – 1975 – டெல்லி
8. தேசிய நீர்மின் சக்தி குழுமம் -- National Hydroelectric Power Corporation - 1975
9. Bureau of Energy Efficiency: Delhi – Established in 2002 - Energy Conservation Act of 2001 ந் கீழ் உருவாக்கப்பட்டது. மின் சக்தி சேமிப்பு திட்டங்களைத் தீட்டுவது.
"10.மத்திய மின்சக்தி ஆணையம் -- Central Electric Authority: Created under Electricity Act of 2003, தேசிய மின்சக்தி திட்டங்களை தீட்டுவதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் பணி. . "
Q25. வணிகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகத்தின் கீழ் எத்தனை துறைகள் உள்ளன?
இரண்டு -- வணிகம் (Commerce) மற்றும் தொழிற்சாலை திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு துறை (Industrial Policy & Promotion)
Q26. சிமெண்ட், காகிதம் மற்றும் தானூர்தி தொழில்கள் எந்த அமைச்சகத்தின் நிர்வாகத்தில் செயல்படுகிறது?
வணிகம் மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சகம் -- Ministry of Commerce and Industry.
Q27. "நம் நாட்டில் சுமார் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் - Public Sector Undertakings (மத்திய அரசாங்கத்தின் முழு முதலீட்டிலோ அல்லது பெரும்பகுதி முதலீட்டிலோ இயங்கும்) உள்ளன?"
சுமார் 250 – பல அமைச்சகங்களின் கீழ் இயங்குகின்றன.
Q28. பெரிய அளவிலான சிமெண்ட் தொழிற்சாலைகள் சுமார் எத்தனை நம் நாட்டில் உள்ளன?
159
Q29. சிமெண்ட் உற்பத்தியில் உலகளவில் நம் நாட்டிந் நிலை என்ன?
இரண்டாமிடம். (சீனா முதலிடம்)
Q30. சிறிய/பெரிய அளவிலான சுமார் எத்தனை காகித தொழிற்சாலைகள் நம் நாட்டில் உள்ளன?
700
Q31. நம் நாட்டில் கார் (4 சக்கர தானூர்தி) ஓட்டிய முதல் மனிதர் யார்?
1897ல் திரு ஃபோஸ்டர் Mr. Foster என்ற ஆங்கிலேய வியாபார நிறுவன அதிகாரி.
Q32. நம்நாட்டில் சொந்தமாக கார் வைத்துக்கொண்ட முதல் இந்தியர்கள் யார்?
1901 ல் ஜாம்ஷெட்ஜி டாடா மற்றும் ருஸ்தம் காமா என்ற தொழிலதிபர்கள். First Indians to own a car in India was Jamshedji Tata followed by Rustom Cama in 1901.
Q33. நம் நாட்டில் தானூர்தி தொழிலை தொடங்கிய முதல் நிறுவனம் எது?
“Embryonic” எனப்படும் தானூர்தி தயாரிப்பின் மூலக்கரு 1940களில் உருவாயிற்று.
Q34. நம் நாட்டில் வியாபார ரீதியாக தானூரித் தயாரிப்பில் ஈடுபட்ட முதல் நிறுவனம் யாது?
மஹிந்த்ரா & மஹிந்த்ரா -- 1940களில், சிறிய வகை வாகனங்கள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் ட்ராக்டர்.
Q35. இந்தியாவின் டெட்ராய்ட் “Detroit of India” என அழைக்கப்படும் இந்திய நகரம் எது?
" சென்னை -- இங்கு பல உயர்ரக தானூர்தி தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. (மகாராஷ்டிராவின் பூனே நகரிலும் நிறைய நிறுவனங்கள் தானூர்தி சம்பந்தப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன) "
Q36. தானூர்தி உற்பத்தியில் இந்தியாவின் உலக நிலை என்ன?
"1. வருடந்தோறும் சுமார் 1,80,00,000 வாகனங்கள் (அனைத்து ரக தானூர்திகள்) தயாரிக்கப்படுகின்றன.
2. சுமார் 23,50,000 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
3. இரு சக்கர தானூர்தி தயாரிப்பில் உலகில் முன்னணியில் உள்ளது.
4. தானூர்தி தயாரிப்பில் உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது."
Q37. "தானூர்தி கண்காட்சிகள், திட்டங்கள், தொழில் ரீதியான விதிமுறைகளை வரையறுக்க அரசாங்கத்துக்கு உதவும் அமைப்பு எது? "
SIAM – இந்திய தானூர்தி தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு -- Society of Indian Automobile Manufacturers – 1960 – புது டெல்லி.
Q38. ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தில் என்னென்ன துறைகள் உள்ளன?
" 1.ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனத் துறை 2. உரத் துறை 3. மருந்துத் துறை. 1.Department of Chemicals & Petrochemicals : 2. Department of Fertilizers:3. Department of Pharmaceuticals."
Q39. நம்நாட்டில் சுமார் எத்தன் உரத் தொழிற்சாலைகள் உள்ளன?
" சுமார் 56 பெரிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றுள் பொதுத்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் அடங்கும். "
Q40. கட்டுப்பாட்டு, கட்டுப்பாடற்ற மருந்துகளின் விலை நிர்ணயத்தை நிர்வகிக்கும் அமைப்பு எது?
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் - புது டெல்லி -- 1995. National Pharmaceutical Pricing Authority: New Delhi – 1995.
Q41. நம் நாட்டில் தொடங்கப்பட்ட முதல் மருந்து தயாரிப்பு நிறுவனம் எது?
"1. பெங்கால் கெமிக்கல்ஸ் & ஃபார்மாசூட்டிகல்ஸ் லிட்., கொல்கத்தா. Bengal Chemicals & Pharmaceuticals Ltd., Kolkatta – 1901 – மேற்கு வங்காளத்தின் புகழ் பெற்ற கல்வியாளர், அரசியல் வாதி, மற்றும் சுதந்திர போராட்ட வீரர் ப்ரஃபுல்ல சந்திர ராய் அவர்களால் தொடங்கப்பட்டது. "
Q42. ஹிந்துஸ்தான் ஆண்டிபியோடிக்ஸ் (கிருமி நாசினி) தொழிற்சாலை எங்குள்ளது?
பிம்ப்ரி, பூனே, மகாராஷ்டிரா -- 1954. Pimpri, Maharashtra – 1954.
Q43. Indian Drugs & Pharmaceuticals Ltd., எப்போது நிறுவப்பட்டது, அதன் தொழிற்சாலைகள் எங்குள்ளன?
1961 – இதன் முக்கிய தொழிற்சாலைகள், ஹைதராபாத், குர்காவ்ன், ரிஷிகேஷ், சென்னை, முஸாஃபர்பூர் ஆகிய இடங்களிலுள்ளது.
Q44. இந்திய நிலக்கரி நிறுவனம் - Coal India Limited ன் தலைமையகம் எங்குள்ளது?
கொல்கத்தா -- 1975ல் நிறுவப்பட்டது.
Q45. "இந்தியாவில் பழுப்பு நிலக்கரி lignite சுரங்கம், அதைச்சார்ந்த அனல் மின் நிலையம், அதன் தலைமையகம் எங்குள்ளது? "
நெய்வேலி, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு. இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. 1956ல் தொடங்கப்பட்டது.
Q46. இந்தியாவின் புகழ்பெற்ற சிங்கரேணி நிலக்கரி சுரங்கம் எங்குள்ளது?
கோத்தகுடேம், கம்மம் மாவட்டம், தெலங்கானா. இது மாநில(51%) மற்றும் மத்திய (49%) கூட்டு நிறுவனம்.
Q47. தென்னை நார் குழுமம் Coir Board எப்போது உருவாக்கப்பட்டது, அதன் தலைமையகம் எங்குள்ளது?
1953 – எர்ணாகுளம், கேரளா.
Q48. கதர் மற்றும் கிராமப்புற தொழில் நிறுவன தலைமையகம் எங்குள்ளது?
மும்பை Mumbai – 1956.
Q49. இந்திய புவியியல் ஆய்வு மையம் எப்போது தொடங்கப்பட்டுள்ளது, தலைமையகம் எங்குள்ளது?
1851 -- கொல்கத்தா
Q50. தேசிய அலுமினியம் நிறுவனம் - National Aluminium Co. Ltd தலைமையகம் எங்குள்ளது?
1981 – HQ: புவனேஷ்வர், ஒடிசா. நாட்டின் பல இடங்களில் இதன் தொழிற்சாலைகள் உள்ளன.
Q51. ஹிந்துஸ்தான் செம்பு நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
கொல்கத்தா . 1967.
Q52. நம் நாட்டில் வைர சுரங்கங்கள் எங்குள்ளன?
பக்ஸ்வாஹா, பன்னா -- மத்தியபிரதேசம் மற்றும் கொல்லூர் -- ஆந்திரபிரதேசம்.
Q53. நம் நாட்டில் செப்பு சுரங்கங்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது?
ராஜஸ்தான் (கேத்ரி பகுதி)
Q54. தமிழ் நாட்டைத் தவிர்த்து வேறு எந்த மாநிலத்தில் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது?
குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர்
Q55. கர்நாடகாவில் உள்ள தோனிமலை மற்றும் குத்ரேமூக் எதற்கு புகழ்பெற்றது?
இரும்பு தாது சுரங்கங்கள்.
Q56. கருங்கல் - Granite வெட்டி எடுக்கும் நடவடிக்கை எந்த மாநிலங்களில் அதிகமாக நடக்கிறது ?
கர்நாடகம், ஆந்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான்.
Q57. எஃகு கண்டுபிடித்து பயனில் கொண்டு வந்தவர்கள் யார்?
சீனர்கள் -- கி.பி. 202-220 -- ஹான் வம்சத்தினரால்.
Q58. நம் நாட்டில் முதன் முதலில் எஃகு உருக்காலையை தொடக்கியவர் யார்?
Tata Iron and Steel Company (TISCO) 1907-1908 களில் தொராப்ஜி டாடா அவர்களால் தொடங்கப்பட்டது.
Q59. பொதுத்துறையில் தொடங்கபட்ட முதல் எஃகு உருக்காலை எது?
ரௌர்கெலா எஃகு உருக்காலை -- 1959 -- ஜெர்மனி நாட்டு உதவியுடன்.
Q60. உலகின் மிகப்பெரிய எஃகு தொழில் “Arcelor” ஐரோப்பிய நிறுவனத்தை வாங்கிய இந்திய தொழிலதிபர் யார்?
லக்ஷ்மி நாராயண் மிட்டல்
Q61. "Corus என்ற குழுமம் ஐரோப்பாவில் ஒரு மிகப்பெரிய எஃகு தொழில் நிறுவனம். இந்த நிறுவனத்தை வாங்கிய இந்திய வணிக குழுமம் எது? "
டாடா குழுமம்.
Q62. இந்திய எஃகு நிறுவனம் -- Steel Authority of India Ltd., தலைமையகம் எங்குள்ளது?
"1954 ல் தொடங்கப்பட்டு, புது டெல்லியை தலைமயகமாகக் கொண்டு, பிலாய், பொக்காரோ, துர்காபூர், ரௌர்கேலா, பர்ன்பூர், சேலம், பத்ராவதி ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. "
Q63. "Stainless Steel -- ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ள இந்திய பொதுத்துறை நிறுவனம் எங்குள்ளது? "
சேலம், தமிழ்நாடு.
Q64. "தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனம் -- National Mineral Development Corporation Ltd., (NMDC) எப்போது தொடங்கப் பட்டது, அதன் தலைமையகம் எங்குள்ளது? "
1958 – ஹைதராபாத்.
Q65. Rashtriya Ispat Nigam Ltd., என்ற இந்திய பொதுத்துறை எஃகு நிறுவனம் எங்குள்ளது?
விசாகப்பட்டினம் -- ஆந்திரபிரதேசம்.
Q66. குத்ரேமுக் எஃகு தாது நிறுவனம் -- Kudremukh Iron Ore Co. Ltd., எங்கு தலைமையகம் கொண்டுள்ளது?
1976 – பெங்களூரு.
Q67. உணவு பதனிடும் தொழில் அமைச்சகம் எப்போது உருவாக்கப்பட்டது?
1988.
Q68. இந்தியாவில் எங்கு முதல் பருத்தி நூற்பாலை தொடங்கப்பட்டது?
ஃபோர்ட் க்ளாஸ்டர், கொல்கத்தா -- 1818ல்
Q69. ஆங்கிலேயர்கள் காலத்தில் எந்த இடங்களில் இயந்திர நெசவாலைகள் அதிகமாக உருவாகின?
சூரத், அஹமதாபாத் (குஜராத்) மற்றும் மும்பை (மகாராஷ்டிரா)
Q70. தமிழ்நாட்டின் எந்த நகரம் நெசவாலைகளுக்கு புகழ் பெற்றது?
கோயம்புத்தூர்
Q71. தேசிய ஜவுளி கார்ப்பொரேஷன் -- National Textile Corporation Ltd. தலைமையகம் எங்குள்ளது?
புது டெல்லி -- 1968.
Q72. இந்திய சணல் நிறுவனம் -- Jute Corporation of India எங்குள்ளது?
கொல்கத்தா -- 1971.
Q73. இந்திய பருத்தி நிறுவனம் -- Cotton Corporation of India தலைமையகம் எங்குள்ளது?
மும்பை - 1970.
Q74. தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் எங்குள்ளது?
லக்னௌ – 1983.
Q75. மத்திய கம்பளி மேம்பாட்டுக் கழகம் எங்குள்ளது?
ஜோத்பூர், ராஜஸ்தான்.
Q76. தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம் எங்குள்ளது?
"1986 – புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, காந்திநகர், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, ரே பரேலி, பாட்னா, ஷில்லாங், போப்பால், தலிபரம்பா, கங்ரா, ஜோத்பூர் மற்றும் மொரிசியஷ். "
Q77. கரும்பு பயிர் விளைச்சலில் முதலில் ஈடுபட்ட நாடு எது?
சீனா - 7 வது நூற்றாண்டு.
Q78. எந்த தீவுக் கூட்டங்கள், கரும்பு விளைச்சலுக்கு புகழ் பெற்றது?
கரீபியன் தீவுகள் -- மேற்கு இந்திய தீவுகள் எனப்படுவது.
Q79. கரும்பு பயிரை இந்திய மண்ணுக்கு கொண்டுவந்தவர் யார்?
" லெஃப்டினண்ட் J. பேட்டர்சன் -- ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம். இவருடைய அறிக்கையின் அடிப்படையில் தான் கரும்பு பயிரை இந்தியாவில் விளைவிக்க இங்கிலாந்து அரசாங்கம் அனுமதி அளித்தது. "
Q80. நம்நாட்டில் சுமார் எத்தனை சர்க்கரை தொழிற்சாலைகள் உள்ளன?
582
Q81. சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவின் நிலை என்ன?
இரண்டாவது நிலை. கரும்பு பயிர் விளைச்சலில் முதலிடம். Largest producers of Sugar Cane and second largest producers of sugar.
Q82. இந்தியாவின் எந்த மாநிலம் கரும்பு விளைச்சலில் முதலிடத்தில் உள்ளது?
உத்திரபிரதேசம்.
Q83. இந்திய தொழிற்சாலைகள் எவ்வகையாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது?
பெரிய, நடு நிலை, சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்.
Q84. நிர்வாக மற்றும் உரிமை நிலையில், தொழிற்சாலைகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
" பொதுத்துறை -- PUBLIC SECTOR: இத்தொழிற்சாலைகளில், மத்திய/மாநில பங்குகள் முழுமையாகவோ அல்லது 51% க்கு மேலும் உள்ளவை.
தனியார் துறை -- PRIVATE SECTORS: இவ்வகைத் தொழிற்சாலைகளின் பங்குகள் முழுமையாக ஒருவரிடமோ/ஒரு குடும்ப அங்கத்தினர்களிடமோ, அல்லது பங்குகளை வாங்கிய அங்கத்தினர்களிடமோ இருப்பது.
சிறு தொழில்: SMALL SCALE: ஒருவர்/ஒரு சிலரின் நிர்வாகத்தில், தனியாகவோ அல்லது, தொழிற் பூங்காக்களில் நடக்கும் தொழிற்சாலைகள். பொதுவாக இவை, பெரிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருள்/உதிரிகளை தயாரிக்கும் நிறுவனங்களாக இருக்கும்.
குடிசைத் தொழில்: COTTAGE INDUSTRIES: கிராமங்களை சார்ந்த தொழில்கள் -- கைவினைப்பொருட்கள், கைத்தறி நெசவு ."
Q85. உற்பத்தி பிரிவில், குறு, சிறு மற்றும் நடுநிலை தொழிற்சாலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
" குறு நிறுவனம் -- Micro Enterprises – இடம், இயந்திரங்கள் மதிப்பையும் சேர்த்து 25 லட்சத்தை மீறாமல் இருப்பது.
சிறு நிறுவனம் -- Small Enterprises -- மதிப்பு 25 லட்சத்துக்கும் மேலாகவும் 5 கோடிக்குள்ளாகவும் இருத்தல்.
நடுநிலை நிறுவனம்.-- Medium Enterprises -- மதிப்பு 5 முதல் 10 கோடிக்குள்ளாக இருத்தல். "
Q86. சேவைத்துறையில் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுநிலை நிறுவனங்கள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன?
"குறு நிறுவனங்கள் - 10 லட்சத்துக்கும் கீழான முதலீடு
சிறு நிறுவனங்கள் -- 10 லட்சத்திலிருந்து 2 கோடி வரையிலான முதலீடு
நடுநிலை நிறுவனங்கள் -- 2 கோடியிலிருந்து 15 கோடி வரையிலான முதலீடு. "
Q87. நம்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் பொதுத்துறை நிறுவனம் எது?
தாமோதர் பள்ளத்தாக்கு குழுமம் -- Damodar Valley Corporation – ஜூலை 1948.
Q88. பொதுத்துறையில் இயங்கும் அனைத்து எஃகு உருக்காலைகள நிர்வகிக்கும் அமைப்பு எது?
Steel Authority of India Ltd., (SAIL) – 1954 – மத்திய அரசாங்கத்தின் முழு முதலீட்டில் 1,42,000 தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனம்.
Q89. "சேலத்தில் உள்ள உருக்காலையைத் தவிர்த்து வேறு எந்த உருக்காலையில் பிரத்தியேகமான எஃகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன? "
பத்ராவதி, கர்நாடகா.
Q90. எஃகு துறையில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் எங்கெல்லாம் இயங்குகின்றன?
"ரௌர்கேலா (ஒடிசா), பிலாய் (சத்தீஸ்கர்), துர்காபூர் (மே.வங்காளம்), பொக்காரோ (ஜார்க்கண்ட்), பர்ன்பூர் (மேற்கு வங்காளம்), சேலம் (தமிழ்நாடு), விசாகப்பட்டினம் (ஆந்திராபிரதேசம்), பத்ராவதி (கர்நாடகா). "
Q91. உலகில் முதன் முதலாக எங்கு எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது?
1829 – பர்க்ஸ்வில், கெண்டக்கி, அமெரிக்கா.
Q92. நம்நாட்டில் முதன் முதலாக எண்ணெய் கிணறு தோண்டப்பட்ட இடம் எது?
திக்பாய், அஸ்ஸாம் -- 1889.
Q93. எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய மாநிலங்கள்/பகுதிகள் யாவை?
" திரிபுரா, மணிப்பூர், மேற்கு வங்காளம், கங்கை பள்ளத்தாக்கு, ஆந்திர பிரதேசம், மற்றும் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேஅம், டமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடல் பகுதிகள். "
Q94. எண்ணெய் கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கச்சா எண்ணெய் -- Crude oil. – நேரடியாக பயன்படுத்த முடியாது. சுத்திகரிக்கப்படவேண்டும்.
Q95. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை என்பது என்ன?
" கச்சா எண்ணெயை சுத்திகரித்து பல நிலைப்பயன்களுக்கு தயார் படுத்துவது மட்டுமின்ற், அதிலிருந்து பல பயனுள்ள இதர பொருட்களை தயாரிப்பது. "
Q96. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எது?
திக்பாய், அஸ்ஸாம் -- 1901. சுதந்திரத்தின் போது இயங்கிய ஒரே ஆலை.
Q97. இந்தியாவில் எண்ணெய கிடைத்துக்கொண்டிருக்கும் இடங்கள் யாவை?
" அங்க்லேஷ்வர் (குஜராத்) , கலோல் (குஜராத்) , நவகாவ்ன் (மகாராஷ்டிரா), மும்பை கடல் பகுதி, கிருஷ்ணா-கோதாவரி நதிக்கரைகள், மங்களா (ராஜஸ்தான்) "
Q98. இந்தியாவில் இயங்கும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் யாவை?
எண். இடம் வருடம் நிர்வாகம்
1. பரௌனி, பீஹார் 1964 IOC
2. பொங்கைகாவ்ன், அஸ்ஸாம் 1972 IOC
3. சென்னை, தமிழ்நாடு 1965 IOC
4. திக்பாய், அஸ்ஸாம் 1901 IOC
5. எஸ்ஸார், வடினார், குஜராத் 2006 Essar Oil
6. கோயாலி, குஜராத் 1965 IOC
7. படிண்டா, பஞ்சாப் 2011 HPCL
8. குவஹாத்தி, அஸ்ஸாம், 1962 IOC
9. ஹால்தியா, மேற்கு வங்காளம் 1975 IOC
10. ஜாம்நகர், குஜராத் 1999 ரிலையன்ஸ்
11. கொச்சி, கேரளா 1963 BPCL
12. மங்களூர், கர்நாடகா 1988 ONGC
13. மதுரா, உ.பி., 1972 IOC
14. மும்பை, மகாராஷ்டிரா 1954 HPCL
15. மும்பை, மகாராஷ்டிரா 1955 BPCL
16. நாகப்பட்டினம், தமிழ்நாடு 1993 CPCL
17. பானிபட், ஹரியானா 1998 IOC
18. தத்திபாக்கா, ஆந்திரபிரதேசம் 2001 ONGC
19. விசாகப்பட்டினம், ஆந்திரா 1957 HPCL
Q99. தனியார் துறையில் இயங்கும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் எவை?
" இரண்டு -- 1. வடினார், குஜராத்தில் உள்ள ஆலை, எஸ்ஸார் நிறுவன குழுமத்தால் நடத்தப்படுகிறது.
2. ஜாம் நகர், குஜராத்தில் உள்ள ஆலை, ரிலையன்ஸ் குழுபத்தால் நடத்தப்படுகிறது. இது உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. "
Q100. உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது?
ஜாம்நகர், குஜராத் -- ரிலையன்ஸ் வணிக குழுமத்தை சார்ந்தது.
Q101. இந்தியாவின் முதல் கடல் பகுதி எண்ணெய்க் கிணறு எது?
அலியாபெட் - குஜராத்.
Q102. உலகின் மிகப்பெரிய எண்ணெய்க் கிணறு எங்குள்ளது?
காவர் எண்ணெய் கிணறு -- சவுதி அரேபியா. Ghawar oil field, Saudi Arabia.
Q103. “Empty Quarter” எண்ணெயுடன் சம்பந்தப்பட்ட தொடர். இது எதைக் குறிக்கிறது?
" அரபு மொழியில் இது “Rub’ al Khali"" என அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய பாலைவனத்தில் இதுவும் ஒன்று - சுமார் 6,50,000 ச.கி.மீ பரப்பளவு கொண்டு சவுதி அரேபியா, ஒமன், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் யெமன் நாடுகளில் பரவியுள்ளது. இங்கு தான் உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் வளம் உள்ளது. "
Q104. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் நீர்மின் சக்தி நிலையம் எது?
டார்ஜிலிங், 1887.First hydro electric project was commissioned at Darjeeling, in 1887.
Q105. இந்தியாவின் எந்த நகரம் முதலில் மின் சக்தி தொடர்பு பெற்றது?
கொல்கத்தா - 1899 (பெங்களூரு நகரம் 1906 என்பதும் சொல்லப்படுகிறது)
Q106. இந்தியாவில் அணு மின் நிலையம் எந்த வருடம், எங்கு தொடங்கப்பட்டது?
1969 – தாராபூர் அணுமின் நிலையம், தானே, மும்பை.
Q107. வெகு சமீபத்தில் 2013ல் ரஷ்ய உதவியுடன் தொடங்கப்பட்ட அணுமின் நிலையம் எது?
கூடங்குளம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
Q108. அனல் மின் நிலையங்களின் மூலம் நம் நாட்டுக்கு எந்த அளவு மின் சக்தி கிடைக்கிறது?
75%.
Q109. காற்றாலை மின் சக்தி அதிகமாக கிடைக்குமிடம் எது?
முப்பந்தல், கன்னியாகுமரி, தமிழ்நாடு.
Q110. மின் சக்தி சேமிப்பு முறைகளை நடைமுறைப்படுத்து இந்திய அமைப்பு எது?
Bureau of Energy Efficiency: Delhi – 2002ல் Energy Conservation Act of 2001 ன் கீழ் நிறுவப்பட்ட அமைப்பு.
Q111. இந்திய அரசாங்கத்துக்கு மின் சக்தி சம்பந்தப்பட்ட அறிவுரைகள், ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பு எது?
Central Electric Authority: Electricity Act of 2003 ன் கீழ் உருவாக்கப்பட்டது.
Q112. ஸ்ரீசைலம் நீர் மின் சக்தி எந்த நதியில் அமைந்துள்ளது?
கிருஷ்ணா -- மகபூப்நகர் மாவட்டம், தெலங்கானா.
Q113. சர்தார் சரோவர் நீர் மின் சக்தி நிலையம் எந்த நதியில் அமைந்துள்ளது?
நர்மதா -- குஜராத்.
Q114. இடுக்கி நீர்மின் சக்தி நிலையம் எந்த நதியில் அமைந்துள்ளது?
பெரியார் - கேரளா.
Q115. இந்தியாவின் வேறு சில முக்கியமான பொதுத்துறை நிறுவனங்கள் யாவை?
1. ஹிந்துஸ்தான் விமான கட்டுமான நிறுவனம். Hindustan Aeronautics Ltd., பெங்களூரு – 1940/1964. – விமானங்கள், உதிரி பாகங்கள் தயாரிப்பு. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனம். 
2. ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம். Hindustan Shipyard Ltd., விசாகப்பட்டினம் - 1941/1961. 1941ல் சிண்டியா கப்பல் நிறுவனம் எனத் தொடங்கி, 1961ல் அரசாங்க மயமான பிறகு இப்பெயர் கொண்டு, கப்பல் கட்டும் மற்றும் சீரமைப்பு பணியைச் செய்கிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனம். 
3. பாரத் மின்னணு நிறுவனம். Bharat Electronics Ltd., 1954 – பெங்களூரு – பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் போர் விமானங்களுக்கு தேவையான மின்னணு உதிரி பாகங்களை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு துறை பொது நிறுவனம். 
4. இந்திய தொலைபேசி நிறுவனம். Indian Telephone Industries., 1948 – பெங்களூரு – தொலைபேசி, மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொலைத்தொடர்பு அமைச்சக பொதுத்துறை நிறுவனம்.
5. ஹிந்துஸ்தான் செம்பு நிறுவனம் -- Hindustan Copper Limited: 1967 – கொல்கத்தா – அக்னிகுண்டலா (ஆந்திரா), தரிபா (ராஜஸ்தான்) மலாஞ்ச்கண்ட் (மத்திய பிரதேசம்), ரக்கா (ஜார்க்கண்ட்) ஆகிய இடங்களில் சுரங்க நடவடிக்கைகள் உள்ளன. 
7. ஹிந்துஸ்தான் பூச்சிக்கொல்லி நிறுவனம் -- Hindustan Insecticides Ltd., - 1954 – கொச்சி – விவசாயம் சார்ந்த மருந்துகள் தயாரிப்புகள் -- இதன் தொழிற்சாலைகள் உத்யோகமண்டலம் (கேரளா), ரசாயனி (மும்பை), படிண்டா (பஞ்சாப்) ஆகிய இடங்களில் உள்ளன. 
8. பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் -- Bharat Dynamics Ltd., 1970 – ஹைதராபாத் – பாதுகாப்பு துறைக்கு தேவையான உபகரணங்கள், வெடி மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. 
 9. கார்டன் ரீச் கப்பல் கட்டுமான நிறுவனம் -- Garden Reach Shipbuilders & Engineers Ltd., 1884 - கொல்கத்தா -- நீர் மிதவை கப்பல் முதல் அனைத்து வாகனங்களையும் தயாரிக்கிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. 
10.ப்ரகா உபகரணங்கள் நிறுவனம் - Praga Tools Ltd., 1943 – செகந்திராபாத் -- பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
இவ்வாறாக, வெவ்வேறு அமைச்சகங்களின் நிர்வாக கட்டுப்பாட்டில் நம் நாட்டில் சுமார் 254 பொதுத்துறை நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றைப் பற்றி அந்தந்த அமைச்சகங்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. 
Q116. "நம் நாட்டின் சில முக்கிய தனியார் தொழில் குழுமங்கள் மற்றும் அவைகளின் உற்பத்திப் பொருட்களை விவரிக்கவும். "
1. டாடா குழுமம் -- Tata Groups: எஃகு, தானூர்தி, கணினி தகவல், ஆராய்ச்சி மையங்கள், ஆலோசனை, தகவல் தொழில் நுட்பம், தொலை தொடர்பு, மருத்துவ காப்பீடு, அன்றாட உபயோகப் பொருட்கள் என பல் வகை துறைகள். 
2. ரிலையன்ஸ் குழுமம் -- Reliance Groups: ஜவுளி, செயற்கை இழை, ரசாயனப் பொருட்கள், பெட்ரோலிய ரசாயனம், காப்பீடு, சில்லைறை வியாபாரம், அன்றாட உபயோகப் பொருட்கள் என பல வகை துறைகள். 
3. பஜாஜ் குழுமம் -- Bajaj Groups: தானூர்தி, மின் சாதனங்கள், காப்பீடு, அன்றாட பயன் பொருட்கள் என பலவகை துறைகள்.
4. ஹீரோ குழுமம் -- Hero Groups : இரு சக்கர மிதி வண்டி, தானூர்தி.
5. டி.ஐ. குழுமம் - TI Groups: இரு சக்கர மிதி வண்டி, உதிரி பாகங்கள், மற்றும் பல.
6. கைத்தான் குழுமம் -- Khaitan Groups இல்ல உபயோகப் பொருட்கள்
7. அசோக் லேலண்டு குழுமம் -- Ashok Leyland Groups -- கனரக தானூர்தி.
8. டி.வி.எஸ் குழுமம் -- TVS Groups -- இரு சக்கர தானூர்தி, உதிரி பாகங்கள்
9. மஹிந்த்ரா குழுமம் -- Mahindra Groups: இரு நான்கு சக்கர தானூர்தி, காப்பீடு, கணினி தகவல் தொழில்நுட்பம்
10.க்ளாக்ஸோ குழுமம் -- Glaxo Groups: குழந்தை பராமரிப்பு பொருட்கள், மருந்து, தினப்புழக்கப் பொருட்கள்
11.ஹிமாலயா குழுமம் - Himalayas Groups: மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள்
12.நெஸ்லே குழுமம் -- Nestle Groups: பால் பொருட்கள் Dairy Products and food products.
13.ஐ.டி.சி குழுமம் - ITC Groups: புகையிலை சார்ந்த பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் சில.
14.கோத்ரேஜ் குழுமம் -- Godrej Groups: இல்ல பயன் பொருட்கள், தினப்புழக்கப் பொருட்கள், காப்பீடு மற்றும் சில
15.டாபர் குழுமம் -- Dabur Groups: மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள்
16.பையோகான் குழுமம் -- Biocon Groups: மருந்து
17.பிர்லா குழுமம் -- Birla Groups: சிமெண்ட், தானூர்தி மற்றும் சில.
18.இன்ஃபோசிஸ் -- Infosys – தகவல் தொழில் நுட்பம்
19.இந்துஸ்தான் லீவர் -- Hindustan Lever – தினப்புழக்கப் பொருட்கள்
20. மாருதி சுசுகி குழுமம் - Maruti Udyog Ltd., 1981 – டெல்லி – நான்கு சக்கர தானூர்தி - இதன் தொழிற்சாலைகள் குர்காவ்ன் மற்றும் மனேசர் ஆகிய இடங்களில் உள்ளது. 
Q117. கைத்தறி/கைவினைப் பொருட்களுக்கு புகழ் பெற்ற மாநிலங்கள்/இடங்கள் யாவை?
தொழில் / பொருட்கள் மாகாணங்கள் -- இடங்கள்
புடவைகள், வேஷ்டிகள், லுங்கி தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகம்.
ஜவுளி அச்சுத் தொழில் மூர்ஷிதாபாத், ஃபருக்காபாத், ஜெய்ப்பூர், மும்பை, கர்நாடகா.
கம்பள விரிப்புகள் மிர்ஸாபூர், பதோஹி, எல்லோரா, காஷ்மீர், ஜெய்ப்பூர், பெங்களூரு.
படுக்கை விரிப்புகள் சோலாப்பூர், ஈரோடு, கரூர்
பட்டு சார்ந்த ஜவுளி காஞ்சிபுரம், ஆரணி, மைசூரு, வாரணாசி, சம்பல்பூர், அஹமதாபாத்
பட்டோலா சில்க் வடோடரா
தந்த கைவினைப் பொருட்கள் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், ராஜஸ்தான்.
சந்தன கைவினைப் பொருட்கள் கர்நாடகம், தமிழ்நாடு
பித்தளைப் பொருட்கள் மொராதாபாத், ஜெய்ப்பூர், காஷ்மீர், வாரணாசி, மதுரை, தஞ்சாவூர்.
Q118. "பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் அடிப்படையில் அவற்றுக்கு அளிக்கப்படும் அரசாங்க அந்தஸ்து யாவை? "
1. மகாரத்னா -- 2009 முதல்; 2. நவரத்னா -- 1997 முதல்; 3. மினிரத்னா 1 & 2 -- 2002 முதல்.
Q119. மகாரத்னா அந்தஸ்து பெற தேவையான நிபந்தனைகள் யாவை?
2009 முதல் வழங்கப்படும் இந்த அந்தஸ்து பெறும் நிறுவனங்கள் தங்களது முதலீட்டை 1000 கோடியிலிருந்து 5000 கோடிக்கு உயர்த்தியிருக்க வேண்டும். இந்த அந்தஸ்து பெறும் நிறுவனங்கள் தங்களது மொத்த முதலீட்டில் 15% வரை வேறு அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்யும் உரிமை பெறுகிறது. இந்த அந்தஸ்து பெற கீழ்க்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டும்:
1. நவரத்னா அந்தஸ்து ஏற்கெனவே பெற்றிருக்க வேண்டும்.
2. இந்திய பங்கு சந்தையில் SEBI விதிமுறைகளுக்கேற்ப பொதுப் பங்குடன் பதிவு செய்திருக்க வேண்டும்.
3. கடந்த மூன்று வருடங்களில் இதன் மொத்த சராசரி வியாபாரம் 20000 கோடிக்கு மேலிருக்க வேண்டும்.
4. கடந்த மூன்று வருடங்களில் இதன் மொத்த மதிப்பீடு தொடர்ந்து 10000 கோடிக்கு மேலிருந்திருக்க வேண்டும்.
5. கடந்த மூன்று வருடங்களில் இதன் நிகர லாபம் 2500 கோடிக்கு மேலிருக்க வேண்டும்.
6. சர்வதேச அளவில், இதன் வர்த்தகம் முன்னிலையிலும், வர்த்தகமும் இருந்திருக்க வேண்டும்.
Q120. மகாரத்னா அந்தஸ்து பெற்றுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் எவை?
" 1. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் -- Bharat Heavy Electricals Ltd.,
2. கோல் இந்தியா லிமிடெட் -- Coal India Limited
3. கெய்ல் (இந்தியா) லிமிடெட் -- Gas Authority of India Limited
4. இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் லிமிடெட் Indian Oil Corporation Ltd.,
5. என்.டி.பி.சி. லிமிடெட் - National Thermal Power Corporation Ltd.,
6. ஓ.என்.ஜி.சி. லிமிடெட் -- Oil & Natural Gas Corporation Limited
7. செய்ல் நிறுவனம். Steel Authority of India Limited.,
இந்த நிறுவனங்களின் அந்தஸ்து மேலும் ""மகா நவரத்னா"" என உயர்த்தப்பட்டு, 5000 கோடி வரை வேறு முதலீடு செய்யும் உரிமையும் அளிக்கப்பட்டுள்ளது. "
Q121. நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனங்கள் யாவை?
"லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 1997 முதல் அளிக்கப்படும் அந்தஸ்து. இந்த அந்தஸ்து பெற்ற நிறுவனங்கள் உலகளவில் வணிகம் செய்யும் சுதந்திரம் பெறுகிறது. இந்த அந்தஸ்து 17 நிறுவனங்களுக்கு அளிக்க்ப்பட்டுள்ளது. "
Q122. What are the Navaratna status PSUs?
1. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் - Bharat Electronics Ltd.,
2. தொழில் வல்லுநர்கள் இந்தியா லிமிடெட் -- Engineers India Limited.,
3. பாரத் பெட்ரோலியம் கார்ப்பொரேஷன் லிமிடெட் -- Bharat Petroleum Corporation Ltd.,
4. தேசிய கட்டுமான கார்ப்பொரேஷன் லிமிடெட் - National Building Construction Corporation Ltd.,
5. ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் -- Hindustan Aeronautics Ltd.,
6. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பொரேஷன் லிமிடெட் -- Hindustan Petroleum Corporation Ltd.,
7. மகாநகர் டெலிஃபோன் நிகாம் லிமிடெட் -- Mahanagar Telephone Nigam Ltd.,
8. தேசிய அலுமினியம் கம்பனி லிமிடெட் -- National Aluminium Co.Ltd.,
9. தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகம் -- National Mineral Development Corporation
10. நெய்வேலி லிக்னைட் கார்ப்பொரேஷன் லிமிடெட் -- Neyveli Lignite Corporation Ltd.,
11. ஆயில் இந்தியா லிமிடெட் -- Oil India Ltd.,
12. பவர் ஃபைனான்ஸ் கார்ப்பொரேஷன் லிமிடெட் -- Power Finance Corporation Ltd.,
13. பவர் க்ரிட் கார்ப்பொரேஷன் லிமிடெட் -- Power Grid Corporation India Ltd.,
14. ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பொரேஷன் லிமிடெட் -- Rural Electrification Corporation Ltd.,
15 ஷிப்பிங் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் -- Shipping Corporation of India Ltd.,
16. ராஷ்டிரிய இஸ்பட் நிகாம் லிமிடெட் -- Rashtriya Ispat Nigam Ltd., (Vizag Steel)
17. இந்திய சரக்கு பெட்டகங்கள் கார்ப்பொரேஷன் லிமிடெட் -- Container Corporation of India Limited
Q123. மினிரத்னா 1 & 2 நிறுவனங்கள் என்பது என்ன?
" மினிரத்னா 1 -- கடந்த மூன்று வருடங்களுக்கு 30 கோடி ரூபாய்க்கு மேலான லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள். இந்த நிறுவனங்களுக்கு 500 கோடி வரை வெளி மூலதன முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மினிரத்னா 2: லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள். 250 கோடி அல்லது நிறுவன மதிப்பீட்டில் 50% வரை வெளி மூலதன முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இன்றைய நிலையில் சுமார் 73 நிறுவனங்கள் உள்ளன. "
Q124. உற்பத்தி பொருட்களுக்கு தரச்சான்றிதழ் வழங்குக் நிறுவன அமைப்பு எது?
" இந்திய தரக்கட்டுப்பாட்டு மையம் -- Bureau of Indian Standards (BIS) – 1947ல் “ Indian Standards Institution” (ISI) என தொடங்கப்பட்டு தற்சமயம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்திய பொருட்களின் அளவு, தரம் ஆகியவற்றை சீரான நிலையில் பராமரித்து கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய பணி. இந்த அமைப்பின் முதன் தர எண் 1 கொண்ட இந்திய பொருள் இந்திய தேசிய கொடி. "
Q125. வணிக கூட்டமைப்பு -- Chamber of Commerce என்பது என்ன?
"வணிகத்தில் சீரான, சமமான விலை நிர்ணயம், வணிகத்தில் ஒரே விதமான விதிமுறைகள் போன்றவற்றை அரசாங்கத்துடன் போச்சு வார்த்தை நடத்தி நடைமுறை படுத்துவது, மண்டல அளவில் உள்ள இதர கூட்டமைப்புகளுடன் தொடர்பு கொண்டு வணிகத்தையும், வணிகர்களையும் பாதுகாப்பது இந்த அமைப்பின் முக்கிய பணி. "
Q126. நம்நாட்டில் முதலில் தொடங்கப்பட்ட வணிக கூட்டமைப்பு Chambers of Commerce எது?
" வங்காள வணிக கூட்டமைப்பு Bengal Chamber of Commerce – 1853 – கொல்கத்தா மற்றும் இதர கிழக்கு பகுதிகளை ஒருங்கிணைத்து செயல்படுகிறது. "
Q127. இந்திய தொழிற்நிறுவனங்களின் கூட்டமைப்பு CII – Confederation of Indian Industry என்பது என்ன?
" 1895ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு டெல்லியை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. இந்திய முன்னேற்ற பாதைக்கு உதவும் வகையில் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு, இந்திய தொழிற் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு உதவவும், தொழில் ரீதியான திட்டங்களை தீட்ட அரசாங்கத்துக்கு உதவவும் இந்த அமைப்பு இயங்குகிறது. இதற்கு நாட்டில் சுமார் 64 இடங்களில் கிளை அமைப்புகள் இயங்குகின்றன."
Q128. பொதுத்துறை நிறுவனங்கள் -- PUBLIC SECTOR UNDERTAKINGS:
எண் நிறுவனப்பெயர் தொடக்கம் தலைமையகம் வணிகம். அமைச்சகம்.
1. ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் லிமிடெட் 1971 மும்பை வான் போக்குவரத்து பொது வான்வழி போக்குவரத்து
2. ஏர் இந்தியா இஞ்சினியரிங் சர்வீசஸ் 2006 மும்பை கட்டுமானம் பொது வான்வழி போக்குவரத்து.
3. ஏர் இந்தியா லிமிடெட் 2007 மும்பை வான் போக்குவரத்து பொது வான்வழி போக்குவரத்து
4. ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா 1996 மும்பை விமான நிர்வாகம் பொது வான்வழி போக்குவரத்து
5. அக்கல்தாரா பவர் 2006 சத்தீஸ்கர் மின்சக்தி மின்சக்தி துறை.
6. அந்தமான் நிக்கோபார் ஐலேண்ட்ஸ் ஃபாரஸ்ட் & 1977 அந்தமான் வனப் பொருட்கள் சுற்றுச்சூழல் ப்ளாண்டேஷன் டெவலப்மெண்ட் கார்ப்பொரேஷன்
7. ஆண்ட்ரூ யூல் & கம்பெனி லிமிடெட் 1919 மும்பை ததொழில்நுட்பம் கனரக தொழில் நிறுவனங்கள்
8. ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பொரேஷன் 1993 பெங்களூரு ததொழில்நுட்பம் வான்வெளி ஆராய்ச்சி.
9. ஆர்ட்டிஃபீஷியல் லிம்ப்ஸ் மேனுஃபக்சரிங் 1973 கான்பூர் உற்பத்தி சமூக நீதி & அதிகாரமளித்தல் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா
10. அஸ்ஸாம் அசோக் ஹோட்டல் கார்ப்பொரேஷன் 1985 அஸ்ஸாம் சேவை சுற்றுலாத்துறை.