Khub.info Learn TNPSC exam and online pratice

"அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவியியல் அமைச்சகம் MINISTRY OF SCIENCE, TECHNOLOGY & EARTH SCIENCES:"

Q1.
"இந்த அமைச்சகத்தின் கீழ் கீழ்கண்ட துறைகள்- Departments இயங்குகின்றன. 1. அணு சக்தி -- Atomic Energy 2. உயிரி தொழில்நுட்பம் -- Bio Technology 3. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி -- Science and Industrial Research 4. அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் -- Science and Technology and 5. வானியல் 6. புவியியல் அமைச்சகம் -- The Ministry of Earth Science "

Q2. அணுசக்தி துறை -- DEPARTMENT OF ATOMIC ENERGY:
" பிரதம்மந்திரியின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் துறை. இந்திய அணுசக்தி ஆணையம் 1948ல் அறிவியல் ஆராய்ச்சி துறையின் ஒரு அங்கமாக தொடங்கியது. 1954/1958 ல் இது ஒரு தனி துறையாக உயர்த்தப்பட்டு டாக்டர் ஹோமி ஜே. பாபா அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது பதவியின் அடிப்படையில் இந்த துறையின் முக்கிய செயலர் தலைவராக இயங்குகிறார். இவருக்கு உறுதுணையாக இந்த அமைச்சக துணை அமைச்சரையும் சேர்த்து 8 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த துறையின் கீழ் கீழ்க்கண்ட துணை துறைகள், பொதுத்துறை நிறுவன்ங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இயங்குகின்றன. "
Q3.
"1. அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு -- ATOMIC ENERGY REGULATORY BOARD: மும்பை – 1983 - அணுசக்தி சட்டத்தின் ( 1962 ) 27வது பகுதியின் கீழ் அமைக்கப்பட்டது. அணுசக்தி பயன்பாட்டின் அனைத்து கட்டுப்பாட்டு விதிமுறைகள் இந்த அமைப்பால் மேலாண்மை செய்யப்படுகிறது. (www.aerb.gov.in)"
Q4.
"2. கதிர்வீச்சு மற்றும் ஐசோடோப்பு தொழிற்நுட்ப குழு - BOARD OF RADIATION AND ISOTOPE TECHNOLOGY: மும்பை – 1948 – அணுசக்தி தொழிலுக்குத் தேவையான பொருட்களை தயாரித்து விநியோகிப்பது இதன் முக்கிய பணி. அணுசக்தியின் சாதக/பாதகங்களைப் பற்றி படிப்பித்தல், பாதிப்பை தடுக்கும் வழிமுறைகளை வகுத்தல், புதிய திட்டங்களை தீட்டுதல் ஆகிய பணிகளையும் மேற்கொள்கிறது. (www.britatom.gov.in) "
Q5.
3. இந்திய அணுசக்தி மின் உற்பத்தி கழகம்--NUCLEAR POWER CORPORATION OF INDIA: மும்பை – 1987 – அணுசக்தியின் மூலம் மின் உறபத்தி தயாரிப்பின் அனைத்து விவரங்களையும் மேற்கொள்கிறது. இந்த அமைப்பின் கீழ் பல அணுசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குகின்றன. மேலும் சில திறன் மேம்பாட்டு நிலையிலும், புதியன நிர்மாண நிலையிலும் உள்ளன. (www.npcil.nic.in)
Q6.
"4. இந்திய அருமண் லிமிடெட் -- INDIAN RARE EARTHS Ltd.,-- மும்பை – 1950 – பூமியில் கிடைக்கும் அரிய தனிமங்களை பயன்பாட்டு நிலைக்கு உற்பத்தி செய்து விநியோகிக்கிறது. இதன் ஆராய்ச்சி கிளை கேரளாவின் கொல்லம் நகரில் உள்ளது. (www.irel.gov.in)"
Q7.
"5. மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் -- ELECTRONIC CORPORATION OF INDIA Ltd: ஹைதராபாத் -- 1967 – (www.ecil.co.in)"
Q8.
"6. பாபா அணு ஆராய்ச்சி மையம் -- BHABHA ATOMIC RESEARCH CENTRE : மும்பை – 1954 –
ஹோமி ஜே. பாபா அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட அமைப்பு - இதன் கீழ் சில அணு உலைகளும், கீழ்க்கண்ட ஆராய்ச்சி மையங்களும் இயங்குகின்றன.
i) Atomic Minerals Directorate for Exploration and Research, Hyderabad. (1948);
ii) Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam, TN (1985);
iii)Variable Energy Cyclotron Centre, Kolkatta (1977);
iv) Raja Ramanna Centre for Advance Technology, Indore."
Q9.
"7. இந்திய யுரேனியம் கார்ப்பொரேஷன் -- URANIUM CORPORATION OF INDIA : சிங்பூம், பீஹார் – 1967 – இந்தியாவில் யுரேனியம் கிடைக்கும் இடங்களை ஆய்வு செய்வது, தோண்டி எடுப்பது, பயன் நிலைக்கு தயார் செய்வது ஆகியவை இதன் பணி. (www.ucil.gov.in) "
Q10. "அணு சக்தி துறை - The Department of Atomic Energy யின் கீழ் கீழ்க்கண்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியுடன், இயங்குகிறது."
Q11.
"1. அணு சக்தி கல்விக் குழு ATOMIC ENERGY EDUCATION SOCIETY:
1969 – அணு சக்தி துறையில் பணி புரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிப்பதற்காக இயங்கும் அமைப்பு. இதன் கீழ் 30 பள்ளிகள், சுமார் 1800 கல்வி ஊழியர்கள், சுமார் 30000 மாணவர்கள் உள்ளனர்."
Q12.
"2. டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் -- TATA INSTITUTE OF FUNDAMENTAL RESEARCH:
மும்பை – 1945 – கணிதம் மற்றும் அறிவியலில் முனைவர் பட்டம் வரை கல்வி மற்றும் ஆராய்ச்சி நடத்த இயங்குகிறது. "
Q13.
"3. டாடா நினைவு மையம் -TATA MEMORIAL CENTRE :
மும்பை – 1941 – ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய மருத்துவமனை. "
Q14.
"4. அடிப்படை அறிவியல் சிறப்புபெறும் மையம் -- CENTRE FOR EXCELLENCE IN BASIC SCIENCES :
மும்பை – 2007 – அறிவியலில் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்."
Q15.
5. சாஹா அணு இயற்பியல் கல்வி மையம் -- SAHA INSTITUTE OF NUCLEAR PHYSICS :
கொல்கத்தா – 1949 – இயற்பியலில் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்.
Q16.
6. இயற்பியல் கல்வி மையம் -- INSTITUTE OF PHYSICS : புவனேஷ்வர் -- ஒடிசா – 1972.
Q17.
"7. ஹரிஷ்சந்திரா ஆராய்ச்சி மையம் -- HARISHCHANDRA RESEARCH INSTITUTE : அலஹாபாத் – 1966 – கோட்பாட்டு இயற்பியல் மற்றும் கணிதத்தில் ஆராய்ச்சி கொள்ள சிறப்பு மையம். "
Q18.
"8. கணித அறிவியல் மையம் - INSTITUTE OF MATHEMATICAL SCIENCES :
சென்னை – 1962 – தேசிய கணித மற்றும் இயற்பியல் கல்வி மையம்"
Q19.
"9. தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் -- NATIONAL INSTITUTE FOR SCIENCE EDUCATION AND RESEARCH : புவனேஷ்வர் – 2007 – (www.niser.ac.in) "

"அணுசக்தி துறையில் தொழில் மற்றும் சுரங்க நிறுவனங்கள் INDUSTRIES & MINING SECTOR of DEPARTMENT OF ATOMIC ENERGY:"

Q20.
"1. அணு எரிபொருள் வளாகம் -- Nuclear Fuel Complex: ஹைதராபாத் – 1971 – அணு எரிபொருள், மற்றும் உலைகளுக்கு தேவையான உதிரிகளைத் தயாரித்தல். (www.nfc.gov.in) "
Q21.
"2. கன நீர் குழு -- Heavy Water Board:
ஹைதராபாத் – 1962 – அணு உலைகளுக்கு தேவையான கன நீர் தயாரிப்பில், வடோடரா, ஹசிரா, கோட்டா, மங்கூரு, தல்ச்சேர், தால் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் தயாரித்து விநியோகம் செய்கிறது. ( www.heavywaterboard.org) "

உயிரி தொழில் நுட்ப துறை -- DEPARTMENT OF BIO TECHNOLOGY:

Q22. உயிரி தொழில் நுட்ப துறை -- DEPARTMENT OF BIO TECHNOLOGY:
"இந்த துறை 1986ல் தொடங்கப்பட்டு உயிரி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி, பெரிய அளவில் பயன்படுத்துவது, கல்வி நிறுவன்ங்களுக்கும் தொழிற் நிறுவன்ங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துதல், பாதுகாப்பு விதி முறைகளை வகுப்பது போன்ற பணிகளை செய்கிறது. இதன் கீழ் சில ஆராய்ச்சி மையங்களும், பொதுத்துறை நிறுவன்ங்களும் இயங்குகின்றன. அவை:"
1. தேசிய மூளை ஆராய்ச்சி மையம் - National Brain Research Centre: மனேசர் - ஹரியானா - (www.nbrc.ac.in)
2. Centre for DNA Finger Printing & Diagnostics: ஹைதராபாத் – 1990 (www.cdfd.org.in)
3. ராஜீவ் காந்தி உயிரி அறிவியல் மையம் - Rajiv Gandhi Centre for Biotechnology: திருவனந்தபுரம் - 2002 – மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி அறிவியலில் நம்நாட்டின் பிரதான கல்வி மையம். (www.rgcb.res.in)
4. பாரத் தடுப்பாற்றல் மற்றும் உயிரியல் நிறுவனம் -- Bharat Immunological & Biological Corporation: புலந்த்ஷார் -- உ.பி. -- 1989 – வாய் வழி போலியோ சொட்டு மருந்து மற்றும் தடுப்பாற்றல் மருந்துகள் தயாரிப்பு நிறுவனம்.

"அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி துறை: DEPARTMENT OF SCIENTIFIC & INDUSTRIAL RESEARCH:"

Q23. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி துறை:
"இந்த துறை 1985ல் உருவாக்கப்பட்டது. உள் நாட்டு தொழிற்நுட்பத்தை பெருக்குவது, மேம்படுத்துவது, தொழிற்நுட்பத்தை பகிர்ந்து கொள்வது ஆகியவை இதன் பணி. இந்த பணிகளை நடைமுறைப்படுத்துவது: "
Q24. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி குழு
"அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி குழு -- CSIR – Council of Scientific and Industrial Research – 1962ல் தொடங்கி, டெல்லி யை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. – (www.csir.res.in) – இதன் கீழ் கீழ்க்கண்ட ஆராய்ச்சி மற்றும் தள் மையங்கள், சுமார் 17000 ஊழியர்களைக் கொண்டு இயங்கிகறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதி பகிர்வுடன், சுதந்திரமாக இயங்கும் ஒரு அமைப்பு. இதன் கீழ் கீழ்க்கண்ட ஆராய்ச்சி மையங்கள் இயங்குகின்றன: "
1. Advanced Materials and Process Research Institute:போப்பால் – 1982 – Biotech, Chemical Engg., Petro Chemical Technology, B. Pharma ஆகிய கல்விகள் பயிலலாம். (www.ampri.res.in/eng)
2. செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் -- Centre for Cellular and Molecular Biology: ஹைதராபாதி – 1987 – ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம். ( www.ccmb.res.in)
3. மத்திய மருந்து ஆராய்ச்சி கழகம் -- Central Drug Research Institute: Lucknow – 1951 – உயிரி மருத்துவ ஆராய்ச்சியில் நம்நாட்டின் முதன்மை நிறுவனம். (www.cdriindia.org)
4. மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் -- Central Electro Chemical Research Institute: காரைக்குடி, தமிழ்நாடு – 1953 – இத்துறையில் முதன்மை கல்வி நிறுவனம். (www.cecri.res.in)
5. மத்திய மின்னணு ஆராய்ச்சி கல்வி நிறுவனம் - Central Electronics Engineering Research Institute: பிலானி, ராஜஸ்தான் – 1953 – (www.ceerichennai.org)
6. மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் - Central Food Technological Research Institute: மைசூரு – 1950 – (www.cftri.com)
7. மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி கல்வி நிறுவனம், Central Glass & Ceramics Research Institute - 1950 கொல்கத்தா
8. மத்திய மருத்துவ மற்றும் நறுமண செடிகள் பயிர் மையம்.Central Institute of Medicinal & Aromatic Plants: லக்னௌ – 1959 – (www.cimap.res.in)
9. மத்திய தோல் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் Central Leather Research Institute – சென்னை – 1948 – (www.clri.org)
10. மத்திய அறிவியல் உபகரணங்கள் நிறுவனம் - Central Scientific Instruments Organization : சந்திகர் – 1959 – (www.csio.res.in)
11. மத்திய இயந்திர தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் - Central Mechanical Engineering Research Institute: துர்காபூர் – 1958.
12. மத்திய உப்பு மற்றும் கடல் சார் வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் -- Central Salt & Marine Chemical Research Institute: பாவ்நகர் - குஜராத் –1956.
13. மரபணு தொகுப்பு மற்றும் உயிரியல் ஒருங்கிணைப்பு கல்வி மையம் -- Institute of Genomics & Integrative Biology : டெல்லி – 1977 – (www.igib.res.in)
14. இந்திய வேதியியல் தொழில்நுட்ப கல்விக்கழகம் Indian Institute of Chemical Technology: Hyderabad – 1983 (www.iictindia.org)
15. இந்திய வேதிப்பொருள் உயிரியல் கல்விக் கழகம் - Indian Institute of Chemical Biology: Kolkatta – 1935 – (www.iicb.res.in)
16. இந்திய பெட்ரோலிய கல்விக்கழகம் - Indian Institute of Petroleum: Dehradun – 1960 – பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட கல்வியை அளிக்கிறது. (www.iip.res.in/iipnew/index.html)
17. நுண்ணுயிர் கல்விக் கழகம் Institute of Microbial Technology: சந்திகர் – 1984 (www.imtech.res.in)
18. இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி கல்விக்கழகம் - Indian Institute of Toxicology Research: Lucknow – 1965 (www.iitrindia.org/)
19. தேசிய விண்வெளி ஆய்வுமையம் - National Aerospace Laboratories: பெங்களூரு – 1959 (www.nal.res.in)
20. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம் - National Botanical Research Institute: லக்னௌ – 1953 (www.nbri.res.in)
21. தேசிய வேதியியல் ஆய்வுமையம் - National Chemical Laboratory: பூனே – 1950 – (www.ncl.india.org)
22. தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் - National Environmental Engineering Research Institute: -நாக்பூர் – 1958 (www.neeri.res.in)
23. தேசிய புவியியர்பியல் ஆராய்ச்சி மையம் - National Geophysical Research Institute: Hyderabad – 1961 (www.ngri.res.in)
24. தேசிய கடலியல் கல்விமையம் National Institute of Oceanography: கோவா – 1966 – (www.nio.org)
25. தேசிய தொடர்பு மற்றும் தகவல் மூல கல்வி மையம் - National Institute of Science Communication and Information Resources: புது டெல்லி – 2002 – (www.niscair.res.in)
26. தேசிய உடல்சார் ஆய்வு மையம் -- National Physical Laboratory: New Delhi – 1947 (www.nplindia.org)
27. வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையம் -- North East Institute of Science and Technology: ஜோர்ஹத் – 1961 (www.rrljorhat.res.in)
28. தேசிய பலதுறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையம் - National Institute of Interdisciplinary Science & Technology: திருவனந்தபுரம்
29. மத்திய கட்டிட கட்டுமான ஆராய்ச்சி மையம் - Central Building Research Institute: ரூர்கி
30. மத்திய எரிபொருள் ஆராய்ச்சி மையம் -- Central Fuel Research Institute: தன்பாத்
31. மத்திய சுரங்க கல்வி மையம் -- Central Mining Institute: தன்பாத்
32. மத்திய சாலை ஆராய்ச்சி மையம் - Central Road Research Institute: டெல்லி
33. இமாலய பையோசோர்ஸ் தொழில்நுட்ப கல்லூரி - Institute of Himalayan Biosource Technology: பாலம்பூர்
34. தேசிய உலோகவியல் ஆய்வு மையம் -- National Metallurgical Laboratory: ஜம்ஷெட்பூர்.
35. கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் -- Structural Engineering Research Institute: சென்னை
Q25. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை -- DEPARTMENT OF SCIENCE AND TECHNOLOGY:
"தேசிய அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புது பகுதிகளைக் கண்டறிந்து, அதை மேம்படுத்தவும் அதற்கான வழிமுறை வகுக்கவும் 1971ல் அமைக்கப்பட்ட துறை. (http://dst.gov.in) இத்துறையின் கீழ் சில அமைப்புகள் இயங்குகின்றன. அவற்றுள் முக்கியமானது இந்திய தொல்பொருள் மையம், டெஹ்ராடூன் (1767) . இந்தியாவை அளவியல் ரீதியாக படமிடுதல் இந்த அமைப்பின் முக்கிய பணி. (www.surveyofindia.gov.in) "
Q26. விண்வெளித்துறை - DEPARTMENT OF SPACE:
" 1961 ல் ஹோமி ஜே. பாபா அவர்களிடம் இத்துறையை மேம்படுத்தும் பொருப்பு ஒப்படைக்கப்பட்டது. 1962ல் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி தேசிய குழு INCOSPAR (Indian National Committee for Space Research), டாக்டர் விக்ரம் சாராபாய் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது. 1969 ல் இந்த அமைப்பு, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விண்வெளித்துறை என்ற தனித்துறையாக உருவெடுத்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், பெங்களூரில் 15.8.1969 அன்று தொடங்கப்பட்டது. ISRO- INDIAN SPACE RESEARCH ORGANIZATION:இந்தியில் “Bharatiya Antariksha Anusandhan Sanghatan” என அழைக்கப்படுகிறது. இதன் கீழ் இயங்கும் விண்வெளி சம்பந்தப்பட்ட இதர அமைப்புகள் பின் வருமாறு: "
Q27.
1. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் Indian Space Research Organization, பெங்களூரு – 1969. (ISRO)
2. Thumba Equatorial Rocket Launching Station-(TERLS) – திருவனந்தபுரம், கேரளா - 21.11.1963 – நம்நாட்டின் முதல் செயற்கைக்கோளை விண்ணில் அனுப்பும் திட்டம் இங்கு தான் தொடங்கப்பட்டது.
3. விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் -- Space Science and Technology Centre- (SSTC) – 1965 – வெளி மலை, திருவனந்தபுரம் - ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு.
4. செயற்கைக் கோள் ஏவு மையம் - Rocket Propellant Plant --(RPP)– 1969 – தும்பா, திருவனந்தபுரம் - செயற்கை கோள் ஏவுவதற்கு தேவையான பொருட்களை தயார் செய்கிறது.
5. செயற்கைக்கோள் கட்டுருவாக்கப் பணிகளை செய்யும் அமைப்பு -- Rocket Fabrication Facility-(RFF)– 1971 – திருவனந்தபுரம்.
6. ஸ்ரீஹரிக்கோட்டா செயற்கைக் கோள் மையம் -- Sri Harikota Rocket Range – 1971 – ஸ்ரீஹரிக்கோட்டா -- ஆந்திரபிரதேசம் - செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் மையம். 2002 முதல் இது சதீஷ் தவான் விண்வெளி மையம் எனப்படுகிறது. (www.shar.gov.in)
7. Solid Propellant Space Booster Plant: ஸ்ரீஹரிகோட்டா
8. Static Test & Evaluation Complex: ஸ்ரீஹரிக்கோட்டா, ஆந்திரபிரதேசம்.
9. Rocket Sled Facility: ஸ்ரீஹரிக்கோட்டா -- ஆந்திரபிரதேசம்.
10.Experimental Satellite Communication Earth Station: அஹமதாபாத் – 1967 – செயற்கைக்கோள் தொடர்பு தொழில்நுட்ப மையம்.
11. Satellite Instructional Television Experiment Centre: அஹமதாபாத் – 1970.
12.Satellite Communication Systems Division: அஹமதாபாதி Ahmedabad. செயற்கைக்கோள் தொடர்பு கட்டுமானப் பணி.
13.Experimental Satellite Communication Earth Station: இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் தொடர்பு தரை மையம் -- ஆர்வி, பூனே. இதே போல் மற்றொரு மையம் டெஹ்ராடூன் - ல் இயங்குகிறது.
14. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் -- 1970 -- டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களால் உருவாக்கப்பட்டது. 15. Space Application Centre: அஹமதாபாத் – செயற்கைகோளை ஏவுவதற்கான பல பகுதிகளில் பணி செய்கிறது.
16. இஸ்ரோ செயற்கைக்கோள் மையம் - ISRO Satellite Centre: பெங்களூரு -- செயற்கைக்கோள் வடிவமைப்பு, கட்டுமான, சோதனை, மேலாண்மை.
17. Liquid Propulsion Centres: திருவனந்தபுரம், கேரளா; பெங்களூரு, கர்நாடகா; மஹேந்திரகிரி, தமிழ்- நாடு ஆகிய இடங்களில் இயங்குகிறது.
18. ISRO Telemetry, Tracking and Command Network: பெங்களூரு.
19. ISRO Intertial System Unit: திருவனந்தபுரம், கேரளா.
20. National Mesosphere, Stratosphere, Troposphere Reader Facility: கடங்கி, திருப்பதி, ஆந்திரபிரதேசம் - வளிமண்டல ஆராய்ச்சி மையம்.
21. Master Control Facility: ஹாசன், கர்நாடகா. செயற்கைக்கோள் ஏவப்பட்டப்பிறகு, அதன் நடவடிக்கை- களை மேலாண்மை செய்யும் மையம்.
இத்தனை அமைப்புகள், செயற்கைக்கோள் காகித திட்டத்திலிருந்து, கட்டுமான, ஏவுதல், பின் மேலாண்மை ஆகியவைகளை கவனிக்க சிறப்பு அமைப்புகள் திறம்பட இயங்கி வருவதால், நம் நாடு, விண்வெளி ஆராய்ச்சியில் உலகில் பெருமதிப்பு பெற்றிருப்பது ஆச்சரியமில்லை.
விண்வெளியை ஆளுமை செய்வதில் உலகின் ஆறு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது பெருமிதமான விஷயம். 1991ல் INSAT 1B மற்றும் அதற்கு பிறகு இதன் தொடர் செயற்கைக்கோள்வியவுடன் நம்நாட்டில், தொலைத்தொடர்பு மற்றும் தொலைக்காட்சி வலை மிகவும் மேம்பட்டு இருப்பது கண்பார்வை முன் நிற்கும் உண்மை. 2007ல் INSAT 4B செயற்கைக்கோள் ஏவப்பட்ட பிறகு தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரடியாக “Direct to Home (DTH)” வரத்தொடங்கிவிட்டது.
1988ல் இருந்து 1997க்குள் நம்நாட்டால் அனுப்பப்பட்ட தொலை உணர்வு செயற்கைக்கோள்களால் -- 1A in 1988 to IRS 1D (1997) Remote Sensing satellites, நம் நாட்டில் புவியியல் மேலாண்மை மிகவும் அறிவியல் ரீதியாக மேம்பட்டுள்ளது.
2004, 2005 களில், கல்வி சார்ந்தை பிரத்தியேக செயற்கைக் கோள்கள்- Edusat – Educational Satellites - அனுப்பப்பட்டதன் மூலம், தொலைக்காட்சிப் பெட்டி, கணினிகள் மூலமாக உயர்கல்வி பெறவும் அதிகமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறாக, நமது நாட்டு விண்வெளி ஆராய்ச்சிப் பணி சீரிய முறையில் உலகளவில் புகழப்படும் அளவுக்கு முன்னோக்கி செல்வதுடன், பல முன்னேறிய நாடுகளுக்கும் இத்துறையில் உதவிகள் - அவர்களுக்கு தேவையான செயற்கைக்கோள்களை வடிவமைத்து விண்ணில் ஏவி, நிலைநிறுத்தி, தயார் நிலையில் ஒப்படைக்கும் பணிகளையும் புரிந்து வருவது பெருமைக்குரிய விஷயம்.
இத்துறையில் நன்கு வளர்ந்த நாடுகளின் முயற்சியிலும் சில தோல்விகள் ஏற்பட்டிருக்கின்றன. அதே போன்று, நம்நாட்டு முயற்சியிலும் உண்டு. அவை தவிர்த்து, வெற்றிகரமாக ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Q28. "இந்தியாவால் வெற்றிகரமாக ஏவப்பட்ட செயற்கைக் கோள்கள்: INDIA’ S “SUCCESSFUL” SATELLITE LAUNCHES SO FAR:"
செயற்கைக்கோள் ஏவப்பட்ட இடம் தேதி செயல்பாடு.
ஆர்யபட்டா ரஷ்யா 19.04.1975 அறிவியல் ஆராய்ச்சி
பாஸ்கரா 1 ரஷ்யா 07.06.1979 புவி ஆராய்ச்சி
ரோஹிணி இந்தியா 18.07.1980 புவி ஆராய்ச்சி
ரோஹிணி இந்தியா 31.05.1981 அறிவியல் ஆராய்ச்சி
ஆப்பிள் ஃப்ரெஞ்ச் கையானா 19.06.1981 தொலைத் தொடர்பு
பாஸ்கரா 2 ரஷ்யா 20.11.1981 புவி ஆராய்ச்சி
ரோஹிணி இந்தியா 17.04.1983 அறிவியல் ஆராய்ச்சி
இன்சாட் 1பி அமெரிக்கா 30.08.1983 பல்நோக்கு
ஐ.ஆர்.எஸ் 1ஏ ரஷ்யா 17.03.1988 தொலை உணர்வு
இன்சாட் 1டி அமெரிக்கா 12.06.1990 பல்நோக்கு
ஐ.ஆர்.எஸ் 1பி ரஷ்யா 29.08.1991 தொலை உணர்வு
ஸ்ராஸ் 3 இந்தியா 29.05.1992 அறிவியல் ஆராய்ச்சி
இன்சாட் 2ஏ அமெரிக்கா 10.07.1992 பல்நோக்கு
ஸ்ராஸ் 4 இந்தியா 04.05.1994 அறிவியல் ஆராய்ச்சி
ஐ.ஆர்.எஸ் 1சி ரஷ்யா 28.12.1995 தொலை உணர்வு
ஐ.ஆர்.எஸ் பி3 இந்தியா 21.03.1996 தொலை உணர்வு
ஐ.ஆர்.எஸ் 1டி இந்தியா 29.09.1997 தொலை உணர்வு
இன்சாட் 2இ ஃப்ரெஞ்ச் கையானா 03.04.1999 பல்நோக்கு
இன்சாட் 3பி ஃப்ரெஞ்ச் கையானா 22.03.2000 தொலை தொடர்பு
ஜி.எஸ்.எல்.வி டி1 ஃப்ரெஞ்ச் கையானா 18.04.2001 தொலைத் தொடர்பு
பி.எஸ்.எல்.வி சி 3 ஃப்ரெஞ்ச் கையானா 22.10.2001 புவி கவனித்தல்
இன்சாட் 1 க் ஃப்ரெஞ்ச் கையானா 24.01.2002 தொலை தொடர்பு
மெட்சாட் இந்தியா 13.09.2002 வானிலை ஆராய்ச்சி
இன்சாட் 3 இ ஃப்ரெஞ்ச் கையானா 28.09.2003 தொலை தொடர்பு
எடுசாட் இந்தியா 20.09.2004 கல்வி
கார்டோசாட்/ஹாம்சாட் இந்தியா 05.05.2005 கல்வி
இன்சாட் 4ஏ ஃப்ரெஞ்ச் கையானா 22.12.2005 தொலைத் தொடர்பு
கார்டோசாட் 2 இந்தியா 10.01.2007 தொலைத் தொடர்பு
இன்சாட் 4பி ஃப்ரெஞ்ச் கையானா 12.03.2007 தொலைத் தொடர்பு
ஏஜைல் இந்தியா 24.04.2007 தொலைத் தொடர்பு
இன்சாட் 4 சி.ஆர் இந்தியா 02.09.2007 DTH தொலைக்காட்சி ஒளிபரப்பு
டெக்சார் இந்தியா 21.01.2008 தொலைத் தொடர்பு
கார்டோசாட் 2ஏ இந்தியா 28.04.2008 தொலைத் தொடர்பு
சந்திரயான் 1 இந்தியா 22.10.2008 நிலவு ஆராய்ச்சி
ரிசாட், அனுசாட் இந்தியா 20.04.2009 பொது ஆராய்ச்சி
ஓஷன்சாட் 2 இந்தியா 23.09.2009 கடல்வள ஆராய்ச்சி
கார்டோசாட் 2பி இந்தியா 12.07.2010 தொலைத் தொடர்பு
ஜிசாட் 8/இன்சாட் 4ஜி ஃப்ரெஞ்ச் கையானா 21.05.2011 தொலைத் தொடர்பு
ஜிசாட் 12 இந்தியா 15.07.2011 தொலைத் தொடர்பு
மேகா ட்ராபிக்ஸ் இந்தியா 12.10.2011 சிதோஷ்ண நிலை ஆராய்ச்சி
ஜூக்னூ இந்தியா 12.10.2011 ஐ.ஐ.டி.கான்பூர் செயற்கைக்கோள்
பிஎஸ்எல்வி சி19/ரிசாட் இந்தியா 26.04.2012 ராடார் புகைப்பட செயற்கைக்கோள்
எஸ்.ஆர்.எம்.சாட் இந்தியா 26.04.2012 எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக செயற்கைக் கோள்
ஜிசாட் 10 ஃப்ரெஞ்ச் கையானா 29.09.2012 தொலைத்தொடர்ப்பு
சரள் இந்தியா 25.02.2013 கடல் சார் ஆராய்ச்சி
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1ஏ இந்தியா 01.07.2013 பொது ஆராய்ச்சி
இன்சாட் 3டி ஃப்ரெஞ்ச் கையானா 26.07.2013 வானிலை ஆராய்ச்சி
ஜிசாட் 7 ஃப்ரெஞ்ச் கையானா 30.08.2013 தொலைத்தொடர்பு
செவ்வாய் வெளிச்சுற்று இந்தியா 05.11.2013 செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்து ஆராய்ச்சி
ஜிசாட் 14 இந்தியா 05.01.2014 தொலைத்தொடர்பு
ஐஆர்.என்.எஸ்.எஸ்.1பி இந்தியா 04.04.2014 பொது ஆராய்ச்சி
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1சி இந்தியா 16.10.2014 பொது ஆராய்ச்சி
ஜிசாட் 16 ஃப்ரெஞ்ச் கையானா 07.12.2014 தொலைத் தொடர்பு
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1டி இந்தியா 28.03.2015 பொது ஆராய்ச்சி
ஜிசாட் 6 இந்தியா 27.08.2015 தொலைத்தொடர்பு
ஆஸ்ட்ரோசாட் இந்தியா 28.09.2015 விண்வெளி ஆராய்ச்சி
ஜிசாட் 15 ஃப்ரெஞ்ச் கையானா 11.11.2015 தொலைத்தொடர்பு
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1இ இந்தியா 20.01.2016 பொது ஆராய்ச்சி வழிசெலுத்துதல் 
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1 எஃப்  இந்தியா  10.03.2016 பொது ஆராய்ச்சி வழி செலுத்துதல் 
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 ஜி  இந்தியா  28.04.2016  பொது ஆராய்ச்சி வழி செலுத்துதல் 
       
       
       

புவி அறிவியல் அமைச்சகம் -- MINISTRY OF EARTH SCIENCES:

Q29. புவி அறிவியல் அமைச்சகம்:
"ஜூலை 2006ல்,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்க, புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சகம். வளிமண்டலம், கடல், மற்றும் நில நடுக்க அறிவியல் பற்றி ஒரே அமைப்பின் கீழ் மேலாண்மை செய்ய உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகத்தின் கீழ் கீழ்க்கண்ட அமைப்புகள் இயங்குகின்றன.
1. தேசிய வானிலை முன் அறிவிப்பு மையம் -- National Centre for Medium Range Weather Forecasting: நொய்டா, உ.பி.
2. இந்திய வானிலை ஆய்வு துறை -- 1866 மற்றும் 1871ல் வங்காளம் மற்றும் பீஹார் மாகாண வறட்சி, 1864ல் கொல்கத்தாவின் பயங்கர புயல் - இவற்றின் பின்னணியில் 1889ல் இந்த துறை உருவாக்கப்பட்டது. ஸர். ஜான் எலியட் என்பவர் இதன் முதல் டைரக்டர் ஜெனரல்.டெல்லில்யை தலைமயாக்க்கொண்டு, மும்பை, சென்னை, புது டெல்லி, கொல்கத்தா, நாக்பூர், மசூலிப்பட்டிணம் மற்றும் கவுஹாத்தி ஆகிய மண்டல அலுவலகங்களைக் கொண்டு இயங்குகிறது. செயற்கைக்கோள்களைக் கொண்டு வானிலை முன்னறிவிப்பு செய்வதில் நம் நாடும் மற்ற வளர்ந்த நாடுகளைப்போல் முன்னணியில் உள்ளது. (www.imd.gov.in)
3. இந்திய தேசிய கடல் சார் தகவல் சேவை மையம் -- Indian National Centre for Ocean Information Services:ஹைதராபாத் -- 2007 -- ஓஷன்சாட் 2 செயற்கைக்கோளின் உதவியால் கடல் சார் தகவல்களை நாட்டுடன் பகிர்ந்துகொள்கிறது. ( www.incois.gov.in)
4. தேசிய அண்டார்டிக் மற்றும் கடல் ஆராய்ச்சி மையம் -- National Centre for Antarctic & Ocean Research: வாஸ்கோட காமா, கோவா -- 1998 -- நம்நாட்டின் அண்டார்டிக் பயண திட்டங்களை வகுத்தல், அண்டார்டிகாவில் உள்ள ""மைத்ரி"", நார்வேயில் உள்ள ""ஹிமாத்ரி"", கடல் ஆராய்ச்சி கப்பல் “ ORV Sagar Kanya” மற்றும் இதர ஆராய்ச்சி மையங்களை மேலாண்மை செய்தல் இதன் முக்கிய பணி. (www.ncaor.gov.in)
5. தேசிய கடல் தொழில் நுட்ப கல்வி மையம் -- National Institute of Ocean Technology:-- 1993 – சென்னை -- கடல் சார்ந்த அனைத்து விவரங்களைப் பற்றிய கல்வி அளிக்கும் ஒரு நிறுவனம். (www.niot.res.in)
6. கடல் வாழ் ஜீவராசிகள் மூலம் மற்றும் சூழலியல் மையம் -- Centre for Marine Living Resources and Ecology -- கொச்சி -- (www.cmlre.gov.in)
Q30. இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்கள்:
"வ.எண்.பெயர்வருடம்
1.வி.பி. சிங் 1989 - 1990
2.சந்திரசேகர் 1990 - 1991
3.முரளி மனோஹர் ஜோஷி 13.10.1999 - 21.5.2004
4.கபில் சிபல் 23.5.2004 - மே 2009
5.பவன் குமார் பன்சால் 19.1.2011 - 19.7.2011
6.விலாஸ் ராவ் தேஷ்முக் 19.7.2011 - 14.8.2012
7.வாயலார் ரவி 14.8.2012 - 28.10.2012
8.ஜெய்பால் ரெட்டி 28.10.2012 - 26.5.2014
9.ஜிதேந்திர சிங் 26.5.2014 - 9.11.2014
10.ஹர்ஷ்வர்தன் 9.11.2014 - ....."

"பொது கேள்விகள்: விண்வெளி ஆராய்ச்சி:"

Q31. இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
"டாக்டர் விக்ரம் சாராபாய் - Dr. Vikram Sarabhai – 12.8.1919 to 31.12.1971 – தூக்கத்தில் மாரடைப்பால் திருவன்ந்தபுரத்தில் மறைந்தார்.
இவருடைய மகள் மல்லிகா சாராபாய் நம்நாட்டின் மிகவும் புகழ் பெற்ற நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. he died of heart attack in sleep at Thiruvananthapuram, Kerala."
Q32. நம் நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி எவ்வாறு தொடங்கியது?
"1961, மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், ஹோமி ஜே. பாபா அவர்கள் தலைமை தாங்கி வந்த விண்வெளி ஆராய்ச்சி பணியை , அணுசக்தி துறையுடன் இணைத்தார். இதனால் இந்த பணி ஒரு அரசாங்க அமைப்பானது. "
Q33. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு ஒரு தனி அங்கீகாரம் எப்போது கிடைத்தது?
"1962ல் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு -- Indian National Committee for Space Research (INCOSPAR) உருவாக்கப்பட்டது. "
Q34. இந்திய விண்வெளி ஆராய்ச்சி எப்போது அணு சக்தி துறையிலிருந்து நீக்கப்பட்டு தனித் துறையாக உருவாக்கப்பட்டது?
"1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் 1969ல் பெங்களூரில் உருவாக்கப்பட்டது.
2. 1972 விண்வெளித்துறை என்ற Department of Space தனித்துவம் பெற்றது."
Q35. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் Indian Space Research Organization முதல் தலைவர் யார்?
டாக்டர் விக்ரம் சாராபாய். (இவர் பின் வந்த தலைவர்களின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது).
Q36. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர்களின் பட்டியல்..?
" 1. டாக்டர் விக்ரம் சாராபாய் 1969 – 1972
2. எம்.ஜி.கே.மேனன் -- ஜனவரி 1972 -- செப்டம்பர் 1972
3. சதீஷ் தவான் -- 1972 -- 1984
4. யு.ஆர்.ராவ் -- 1984 -- 1994
5. கஸ்தூரிரங்கன் -- 1994 -- ஆகஸ்ட் 2003
6. மாதவன் நாயர் -- செப்டம்பர் 2003 -- அக்டோபர் 2009
7. கே.ராதக்ருஷ்ணன் -- அக்டோபர் 2009 -- டிசம்பர் 2014
8. ஷேலேஷ் நாயர் -- ஜனவரி 2015
9. ஏ.எஸ். கிரண்குமார் - ஜனவரி 2015 ......"
Q37. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் இணை நிறுவனங்கள் யாவை?
" 1. உடல் கூறு ஆய்வு நிலையம் Physical Research Laboratories.
2. தேசிய தொலை உணர்வு மையம் -- National Remote Sensing Agency – 1980"
Q38. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எப்போது எங்கிருந்து ஏவப்பட்டது?
"ஆர்யபட்டா -- Aryabhatta – 19.4.1975 – கபுஸ்தின்யார், ரஷ்யா -- Kapustinyar, USSR. இதன் பெயர், சந்திர குப்த விக்ரமாதித்யா அவையில் இருந்த புகழ்பெற்ற வான சாஸ்திர நிபுணர் ஆர்யபட்டா பெயர் இடப்பட்டுள்ளது. "
Q39. விண்வெளித்துறையின் புழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்றொடர் சுருக்கங்களின் விரிவாக்கம் என்ன?
" 1.ISRO-Indian Space Research Organization
2.DOS-Department of space
3.NRSA-National Remote Sensing Agency
4.INSAT-Indian National Satellite System
5.APPLE-Arraine Passenger Pay Load Experiment
6.SLV-Satellite Launch Vehicle
7.ASLV-Augmented Satellite Launch Vehicle
8.PSLV-Polar Satellite Launch Vehicle
9.GSLV-Geo Synchronous Launch Vehicle
10.RLV- Reusable Launch Vehicle
11.SHAR-Sriharikota Rocket Range
12.SDSC-Satish Dhawan Space Centre
13.IRS-Indian Remote Sensing Satellite
14.ALS-Automatic Launch Processing System
15.SROSS-Stretched Rohini Satellite Series
16.RISAT-Radar Imaging Satellite
17.EDUSAT-Educational Satellite
18.METSAT-Meteorological Satellite
19.ANUSAT-Anna University Satellite."
Q40. நம் நாட்டில் சுய தொழில் நுட்பத்தில் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் எது?
RS D2 ரோஹிணி கோள் - 17.4.1983.
Q41. எந்த தொடர் செயற்கைக்கோள் ஏவப்பட்டதின் மூலம் நம் நாட்டின் தொலை தொடர்பில் ஒரு புரட்சி ஏற்பட்டது?
"இன்சாட் - INSAT.
இந்த செயற்கைக்கோள்கள், இந்திய வான்வெளி, தொலைத்தொடர்பு, ஆகாஷ்வாணி மற்றும் தொலைக்காட்சி துறைகளின் கூட்டு முயற்சி. இவ்வகை செயற்கைக்கோள்கள் அவ்வப்போது ஏவப்பட்டு தொலைத்தொடர்பு மேம்படுத்தப்படுகிறது."
Q42. நம் நாட்டின் தொலையுணர்வு (Remote Sensing) செயற்கைக்கோள்கள் யாவை?
IRS (Indin Remote Sensing) தொடர் செயற்கைக்கோள்கள்.
Q43. எந்த இந்தியர் முதன்முதலில் வான்வெளிக்குச் சென்றார்?
"ஸ்குவார்டன் லீடர் ராகேஷ் ஷர்மா - விண்கலம் மூலம் 11.4.1984 அன்று வான்வெளிக்குச் சென்றார். இது ரஷ்யாவில் ஏவப்பட்டது. இவருக்கு ரஷ்யாவின் நாயகன் என்ற பட்டமளித்து கௌரவிக்கப்பட்டது."
Q44. ராகேஷ் சர்மா விண்வெளியிலிருந்த போது, பிரதம மந்திரியாக இருந்தவர் யார், அவர் ராகேஷ் சர்மா பேசியது என்ன?
"மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், ராகேஷ் சர்மாவிடம், விண்வெளியிலிருந்து இந்தியா எவ்வாறு தெரிகிறது என்று வினவியபோது, அதற்கு அளித்த பதில் - ""உலகின் எல்லா இடங்களையும் விட சிறந்ததாக தெரிகிறது"" - என்று பதிலளித்தார். (Sare Jahan Se Achaa - ஸாரே ஜஹான்ஸே அச்சா). மேலே கூறப்பட்ட வரி, புகழ்பெற்ற கவிஞர் முகமது இக்பால் என்பவரின் இந்தி கவிதையின் முதல் வரி."
Q45. விண்வெளி சென்ற இரண்டாவது இந்தியர் (வம்சாவளி) யார்?
"கல்பனா சாவ்லா.
இந்திய வம்சாவளி அமெரிக்கர். இவர் முதலில் STS 87 என்ற விண்கலம் மூலம் 1997ல் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். இவரது இரண்டாவது விண்வெளிப் பயணம் - STS 107 மூலம் 16.2.2003 மேற்கொள்ளப்பட்டது. 1.2.2003 அன்று பூமிக்கு திரும்பியபோது, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் அருகில் வெடித்து சிதறி சக வான்வெளி வீர்ர்கள் 6 பேருடன் இவரும் மரணம் அடைந்தார் என்பது வருந்தத்தக்கது."
Q46. மூன்றாவது இந்தியர் (வம்சாவளி) விண்வெளிக்குச் சென்றவர் யார்?
"சுனிதா வில்லியம்ஸ் - இவரது தந்தை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். தாயார் ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்தவர். ஆகவே, இவர் ஒரு இந்திய வம்சாவளி அமெரிக்கராகிறார். இவர், விண்வெளிக்குப் பயணம் செய்த பெண்களில், அதிக காலம் - 195 நாட்கள் - விண்வெளியில் வாழ்ந்த சாதனையை கொண்டுள்ளார். விண்வெளியில் ஏழு தடவை நடந்து, 50 மணி 40 நிமிடம் நடந்த - சாதனையையும் கொண்டுள்ளார். ஏப்ரல் 16, 2007ல் விண்வெளியில் இருந்துகொண்டே, பாஸ்டன் மராத்தன் (Boston Marathon) ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற முதல் பெண்மணி (மனிதர்) என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் தனக்கென்று விண்வெளிக்கு எடுத்துச் சென்ற பொருட்களில் பகவத் கீதை, ஒரு சிறு விநாயகர் சிலை மற்றும் தின்பண்டமாக சமோசாக்களும் அடங்கும்."
Q47. விண்வெளிக்குச் சுற்றுலா பயணியாகச் சென்ற முதல் இந்தியர் யார்?
"சந்தோஷ் ஜார்ஜ் குலங்கரா - கோட்டயம் - கேரளா. அவர் சென்ற விண்கலத்தின் பெயர் - ""விர்ஜின் கேலக்டிக்"" (VIRGIN GALACTIC)."
Q48. விண்வெளியில் கல்விக்காக செயற்கைக் கோள் செலுத்திய முதல் இந்திய பல்கலைக்கழகம் எது?
"அண்ணா பல்கலைக் கழகம், சென்னை, தமிழ் நாடு. ""அனுசா்"" (ANUSAT) என்ற செயற்கைக்கோள் 20.4.2009 அன்று விண்ணில் ஏவப்பட்ட து. அடுத்த்தாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை. "
Q49. "சந்த்ரயான் 1" விண்கலம் விண்ணில் எப்போது ஏவப்பட்டது?
"22.10.2008. இது நிலவில் ஆய்வுகள் செய்வதற்கே ஏவப்பட்ட விண்கலம். அடுத்த சந்த்ரயான் 2, 2016 - 17க்கு திட்டமிடப்பட்டுள்ளது."
Q50. விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் கட்டுமான நிறுவனங்கள் யாவை?
"1. INDIAN SPACE RESEARCH ORGANIZATION - ISRO - இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் : 15.9.1969ல் பெங்களூரில் துவங்கப்பட்டது. இதன் முதல் தலைவர் விக்ரம் சாராபாய். இதன் குறிக்கோள் ""Space Technology in the Service of Human Kind"" - ""மனித சேவையில் விண்வெளி ஆராய்ச்சி"".
2. THUMBA EQUATORIAL ROCKET LAUNCHING STATION - TERLS - 21.11.1963 - தும்பா ராக்கெட் ஏவுதளம், திருவனந்தபுரம், கேரளா.
3. SPACE SCIENCE AND TECHNOLOGY CENTRE - 1965 - விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையம், திருவனந்தபுரம், கேரளா.
4. ROCKET PROPELLANT PLANT - 1969 - திருவனந்தபுரம், கேரளா.
5. ROCKET FABRICATION FACILITY - 1971 - திருவனந்தபுரம், கேரளா.
6. SRI HARIKOTA ROCKET RANGE - ஆந்திர பிரதேசம் - இது சதீஷ் தவான் விண்வெளி மையம் என்றும் அழைக்கப்படுகிறது.
7. SOLID PROPELLANT SPACE BOOSTER PLANT - ஸ்ரீ ஹரிகோட்டா.
8. STATIC TEST AND EVALUATION COMPLEX - ஸ்ரீ ஹரிகோட்டா.
9. ROCKET SLED FACILITY - ஸ்ரீ ஹரிகோட்டா.
10. EXPERIMENTAL SATELLITE COMMUNICATION EARTH STATION - 1967 - அஹமதாபாத்
11. SATELLITE INSTRUCTIONAL TELEVISION EXPERIMENT CENTRE - 1970 - அஹமதாபாத்.
12. SATELLITE COMMUNICATION SYSTEMS DIVISION - அஹமதாபாத்.
13. INTERNATIONAL SATELLITE COMMUNICATION EARTH STATION - ஆர்வி, பூனே.
14. VIKRAM SARABHAI SPACE CENTRE - 1970 - திருவனந்தபுரம்.
15. SPACE APPLICATION CENTRE - அஹமதாபாத்.
16. ISRO SATELLITE CENTRE - பெங்களூரு.
17. LIQUID PROPULSION CENTRE - திருவனந்தபுரம், பெங்களூரு, மஹேந்திரகிரி (திருநெல்வேலி, த. நா)
18. ISRO TELEMETRY, TRACKING AND COMMAND NETWORK - பெங்களூரு.
19. ISRO INTERTIAL SYSTEM UNIT - திருவனந்தபுரம்.
20. NATIONAL MESOSPHERE, STRATOSPHERE, TROPOSPHERE READER FACITLITY - திருப்பதி.
21. MASTER CONTROL FACILITY - ஹாசன், கர்நாடகம்.
22. INDIAN DEEP SPACE NETWORK - பியாலாளு, கர்நாடகம்."
Q51. "மங்கள்யான்" என்றழைக்கப்படும் செவ்வாய் கிரக சுற்று வட்ட விண்கலம் எப்போது ஏவப்பட்டது?
"5.11.2013 - இரு கிரகங்களுக்கிடையில் விண்கலம் அனுப்பிய முதல் ஆசிய நாடு. முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக இவ்வகை விண்கலம் அனுப்பியது நம் நாடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஆங்கிலத்தில் Mars Orbiter Mission - MOM என்று அழைக்கப்படுகிறது."

விண்வெளி ஆராய்ச்சி - உலகம் - SPACE EXPLORATION WORLD

Q52. அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலை நாடுகள். ஆனால் இவர்களுக்கு முன்பே வேறொரு நாட்டில் விண்வெளி வீர ர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. எந்த நாடு?
ஜெர்மனி - 1927.
Q53. விண்வெளி ஆராய்ச்சியில் முதலில் ஈடுபட்ட நாடு எது?
"ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - USSR. 4.10.1957ல் SPUTNIK - ஸ்புட்னிக் 1 என்ற செயற்கைக் கோள் செலுத்தி, விண்வெளி ஆராய்ச்சியை தொடங்கி வைத்தது."
Q54. எந்த நாடு முதன் முதலில் உயிருள்ள விலங்கை விண்ணில் செலுத்தியது?
"ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள். 3.11.1957 அன்று, தனது இரண்டாவது செயற்கைக்கோளில் ""லைகா-LAIKA"" என்ற நாயை விண்ணில் செலுத்தியது."
Q55. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியை எப்போது துவக்கியது?
ஜனவரி 1958 - எக்ஸ்ப்ளோரர் 1 - EXPLORER 1 - என்ற செயற்கைக் கோளுடன் துவக்கியது.
Q56. விண்வெளியில் உள்ள ஒரு உருவகத்தில் (Celestial Body) எப்போது முதன்முதலாக ஒரு செயற்கை பொருள்/உருவகம் சென்று அடைந்தது?
"14.9.1959 அன்று சோவியத் நாட்டின் ""லூனா 2 - LUNA 2"" என்ற செயற்கைக்கோள் சந்திரனின் பரப்பில் சென்று இறங்கியது."
Q57. மனிதன் சந்திரனில் சென்று இறங்குவதற்கு முன் அனுப்பப்பட்ட உயிருள்ள ஜீவராசிகள் எவை?
"1. லைகா-LAIKA - நாய் - ஸ்புட்னிக் 2 - ரஷ்யா - 3.11.1957 - 10 நாட்கள் விண்வெளியில் இருந்து பிறகு இறந்துவிட்ட து.
2. பெல்கா & ஸ்ட்ரெல்கா - BELKA & STRELKA - நாய்கள் - ரஷ்யா - 19.8.1960. விண்வெளி பயணத்திற்கு பிறகு பத்திரமாக திரும்பி வந்தன.
3. ஃபெலிக்ஸ் - FELIX - பூனை - 18.10.1963 - ஃப்ரான்ஸ் நாட்டால் அனுப்பப்பட்டு பத்திரமாக திரும்பி வந்தது.
4. ஏபிள் & பேக்கர் - ABLE & BAKER - குரங்குகள் - 28.5.1959 அன்று அமெரிக்காவால் விண்ணுக்கு அனுப்பப்பட்டு, பத்திரமாக திரும்பி வந்தன.
5. ஈனோஸ் - ENOS - சிம்பன்ஸி குரங்கு - 29.11.1961 அன்று அமெரிக்காவால் விண்ணுக்கு அனுப்பப்பட்டு பத்திரமாக திரும்பி வந்தன.
இவற்றிற்கு முன்பாக, எலி, பூனை, பூச்சிகள், குரங்குகளும் சோதனை முறையில் அனுப்பப்பட்டன. ஆனால் 3.11.1957ல் அனுப்பப்பட்ட லைகா நாய் தான் முதலில் விண்வெளியை சென்றடைந்தது."
Q58. விண்வெளிக்கு மனிதகுலத்தை அனுப்பிய நாடுகள் எவை?
1. ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள்;
2.அமெரிக்கா;
3. சீனா;
- இந்த வரிசையில்.
Q59. விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் யார்?
யூரி காகரின் - 12.4.1961 - வாஸ்டாக் 1 விண்கலம் - ஐக்கிய சோவியத் நாடுகள்.
Q60. விண்வெளியிலிருந்து பூமியை ஒரு வட்டப் பாதை சுற்றை (Orbit) முடித்த முதல் மனிதர் யார்?
ஜான் க்ளென் - John Glen - 20.2.1962 - Friendship 7 - விண்கலம் - அமெரிக்கா.
Q61. விண்வெளியில் நடந்த முதல் மனிதர் யார்?
"அலெக்ஸி லியோனாவ் - ALEXI LEONON - 18.3.1965 - வாஸ்கோட் 2 விண்கலம் - ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 12 நிமிடம் 9 வினாடிகள் விண்வெளியில் நடந்து சாதனை புரிந்தார். இரண்டாவதாக, விண்வெளியில் நடந்தவர் அமெரிக்க விண்வெளி வீர ர் எட்வர்டு ஒயிட் - 3.6.1965 - ஜெமினி 4 விண்கலம்."
Q62. விண்வெளியில் சந்திரனில் காலடி பதித்த முதல் மனிதர் யார்?
"நீல் ஆர்ம்ஸ்ட்ராங் - Neil Armstrong - 21.7.1969 - அப்போலோ விண்கலம். இவரைத் தொடர்ந்து அதே விண்கலத்தில் பயணித்த எட்வின் ஆல்ட்ரின் - Edwin Aldrin - நிலவின் மீது காலடி வைத்தார்."
Q63. நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங் காலடி வைத்த இட த்திற்கு என்ன பெயர் கொடுக்கப்பட்டுள்ளது?
அமைதி தளம் - Tranquility Base - இப்பெயர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கால் வைக்கப்பட்டது.
Q64. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கியவுடன் ஹூஸ்டனிலுள்ள விண்வெளி மையத்துடன் பேசிய முதல் வார்த்தைகள் என்ன?
""Houston - Tranquility Base here - the Eagle has landed"" - ஹூஸ்டன், இது நிலவில் அமைதி தளம் - கழுகு நிலவில் இறங்கிவிட்டது."
Q65. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலடி பதித்தவுடன் பேசிய வார்த்தைகள் என்ன?
""This is one step for a man, one giant leap for mankind - இது மனிதனின் முதல் அடி ஆனால் மனிதகுலத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்"."
Q66. நிலவில் காலடி எடுத்து வைத்த சரித்திர நிகழ்ச்சி நடந்தபோது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் யார்? அவருக்கு என்ன மரியாதை கொடுக்கப்பட்ட து?
"ரிச்சர்டு நிக்ஸன். அவருடைய கையெழுத்திடப்பட்ட உலோகப்பலகை நிலவில் பதிக்கப்பட்டு இன்றும் நிலவி வருகிறது."
Q67. நிலவில் காலடி எடுத்து வைத்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் நீல் ஆர்ம்ஸ்ட் ராங் மற்றும் எட்வின் ஆல்ட் ரின் எவ்வாறு கௌரவிக்கப்பட்ட து?
"அமெரிக்காவின் மிக உயரிய பொது விருதான ""PRESIDENTIAL MEDAL OF FREEDOM"" ஜனாதிபதி சுதந்திர பதக்கம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்."
Q68. இரண்டாவதாக நிலவில் காலடி எடுத்து வைத்த விண்வெளி வீர ர்கள் யாவர்?
பீட்டர் கான்ராட் & ஆலன் பீன் - 19.11.1969 - அப்போலோ 12 விண்கலம் - அமெரிக்கா.
Q69. மூன்றாவதாக நிலவில் காலடி எடுத்து வைத்த விண்வெளி வீர ர்கள் யாவர்?
ஆலன் ஷெப்பர்டு & டேவிட் மிட்ச்செல் - 5.2.1971 - அப்போலோ 14 விண்கலம் - அமெரிக்கா.
Q70. இன்றைய நிலையில் (2015) கடைசியாக, நிலவில் கடைசியாக காலடி எடுத்து வைத்தவர்கள் யார்?
"இக்வின் செர்னான் ஹேரிசன் ஷிமிட், ரொனால்டு ஆர். எவான்ஸ் - 7.12.1972 - 19.12.1972 - அப்போலோ 17 விண்கலம் - அமெரிக்கா."
Q71. "வான்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்குமிடையே ஒரு பெரிய போட்டி நடந்து வந்தது. இதை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஒரு கூட்டுறவு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது என்ன?"
15.7.1975 அன்று இரு நாடுகளும் சேர்ந்து, அப்போலோ மற்றும் சோயூஸ் விண்கலங்களின் அமைப்பை சேர்த்து, ஒரு விண்கலம் உருவாக்கி, அதில் 3 அமெரிக்க (தாமஸ் ஸ்டேஃபோர்டு, வேன்ஸ் டி - பிராண்ட், டொனால்ட் கே ஸ்லேடன்) மற்றும் 2 ரஷ்ய (அலெக்ஸி லியோனாவ், வலேரி குபசோவ்) விண்வெளி வீர ர்களை அனுப்பியதால் அந்த போட்டி ஒரு முடிவுக்கு வந்தது.
Q72. சந்திரனுக்குப் பிறகு, விண்ணுலகத்தின் எந்த அமைப்புக்கு செயற்கைக் கோள் அனுப்பப்பட்டது?
சுக்ரன் - VENUS - 8.6.1975 - வெனரா 9 விண்கலம் - ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள்.
Q73. சந்திரன் மற்றும் சுக்ரனுக்குப் பிறகு, விண்ணுலக எந்த அமைப்புக்கு ஒரு செயற்கைக் கோள் அனுப்பப்பட்ட்து?
"செவ்வாய் (MARS) - 20.8.1975 - வைகிங் 1 விண்கலம் - அமெரிக்கா. இந்த விண்கலம் தான் முதல் முறையாக வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. இதற்கு முன்னால் எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாம் தோவியடைந்தன.
அதற்கு பிறகு வைகிங் 2, மார்ஸ் க்ளோபல் சர்வேயர், மார்ஸ் பாத்ஃபைண்டர், மார்ஸ் ஒடிஸ்ஸி, மார்ஸ் எக்ஸ்பிரஸ், ஸ்பிரிட், ஆப்பர்ச்சூனிட்டி, , ஃபோனிக்ஸ், க்யூரியாசிட்டி, மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (இந்தியா), மேவன் போன்ற விண்கலங்கள் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பட்டுள்ளது."
Q74. SPACE SHUTTLE - விண்ணோடங்கள் (SHUTTLE - திரும்ப போய் வரக்கூடிய) என்றால் என்ன, இந்த முறை எப்போது தொடங்கியது?
"அடிக்கடி அல்லது திரும்ப திரும்ப அனுப்பக்கூடிய விண்கலங்கள் 12.4.1981 அன்று இந்த வகை முதல் விண்ணோடம் STS 1 விண்ணுக்கு அனுப்ப ப்பட்டது."
Q75. ஆளில்லா விண்ணோடம் (UNMANNED SPACE SHUTTLE) எப்போது முதலில் அனுப்பப்பட்டது?
"15.11.1988 - சோவியத் விண்ணோடம் - பூரான் - BURAN - விண்ணில் ஏவப்பட்டு பூமியை இரண்டு முறை சுற்றிய பிறகு, தானாகவே குறிப்பிட்ட இட த்தில் வந்திறங்கியது."
Q76. விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலை நோக்கி எது?
"HUBBLE SPACE TELESCOPE - ஹப்புள் வான் வெளி தொலை நோக்கி - 24.4.1990 அன்று அமெரிக்காவால் ஏவப்பட்டு பூமியின் வட்டச்சுற்றுள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் இயங்குத் தன்மை 2013ல் முடிவடைந்த போதிலும் 2015 நிலையில் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
2018ல் இதற்கு மாற்றாக ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (James Webb Space Telescope) ஏவப்பட உள்ளது."
Q77. விண்ணோடங்களில் (SPACE SHUTTLE) நடந்த மிகவும் துயரமான சம்பவம் எது?
"STS 107 COLUMBIA - 1.2.2003 அன்று தரை இறங்கும்போது டெக்ஸாஸ், (அமெரிக்கா) மாநிலம் அருகே வெடித்துச் சிதறி அதில் பயணம் செய்த ஏழு விண்வெளி வீரர்களும் (கல்பனா சாவ்லாவையும் சேர்த்து) மரணம் அடைந்தனர்."
Q78. அமெரிக்காவால் வானில் செலுத்தப்பட்ட முதல் வான்வெளி நிலையம் எது?
ஸ்கை லேப் - SKYLAB - 14.5.1973 அமெரிக்காவால் விண்ணில் ஏவப்பட்டு 1979 வரை இயங்கி வந்தது.
Q79. STS 107 கொலம்பியா விண்ணோடம் 1.2.2003 அன்று, இறங்கும்போது, வெடித்து சிதறி 7 விண்வெளி வீரர்கள் (கல்பனா சாவ்லா சேர்த்து) இறந்த நிகழ்ச்சியின்போது, ஒரு அதிசயமும் நடந்தது. அது என்ன?
"நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு பரிசோதித்த போது, பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்த குப்பிப் புழுக்கள் (CANISTER WORMS)உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது."
Q80. நிலவில் காலடி வைத்தவர்களின் பட்டியலை வரிசைப் படுத்துக :
"எண் பெயர்/கள் விண்கலம் தேதி
1. நீல் ஆர்ம்ஸ்ட் ராங் &
2. எட்வின் ஆல்ட் ரின் அப்போலோ 11 16.4.1969 - 21.4.1969
3. சார்லஜ் கான்ராட் &
4. ஆலன் எல். பீன் அப்போலோ 12 14.11.1969 - 24.11.1969
5. ஆலன் ஷெப்பர்டு &
6. எட்கர் மிச்செல் அப்போலோ 14 31.1.1971 - 4.2.1971
7. டேவிட் ஸ்காட் &
8. ஜேம்ஸ் இர்வின் அப்போலோ 15 26.7.1971 - 30.7.1971
9. ஜான் யங்
10. தாமஸ் மேட்டிங்லி &
11. சார்லஸ் ட்யூக் அப்போலோ 16 16.4.1972 - 27.4.1972
12. இக்வின் செர்னான்
13. ஹேரிசன் ஷ்மிட் &
14. ரொனால்ட் எவான்ஸ் அப்போலோ 17 7.12.1972 - 19.12.1972"
Q81. இதுவரையில் எத்தனை பேர் நிலவில் காலடி எடுத்து வைத்துள்ளனர்?
14 பேர்.
Q82. 2015 நிலைப்படி, நிலவில் கடைசியாகக் காலடி எடுத்து வைத்தவர் யார்?
இக்வின் செர்னான்.
Q83. அமெரிக்காவின் - NASA - National Aeronautics and Space Agency - என்றழைக்கப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் யாருடைய முயற்சியால் எங்கு நிறுவப்பட்டது?
"அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி (34வது) ட்வைட் ஐசன் ஹோவர் அவர்களின் முயற்சியால் ஜூலை 29, 1958 அன்று தொடங்கப்பட்டு வாஷிங்டன் தலைமையகமாக கொண்டு இயங்குகிறது."
Q84. "விண்ணுலக கோள்களுக்கு அனுப்பப்பட்ட அல்லது கோள்களின் வட்டச் சுற்றுகளை சுற்றி வந்த விண்கலங்கள் யாவை?"
"வ.எண் கோள் விண்கலங்கள் வருடம்
1. சுக்ரன் (வீனஸ்) மெரைனர் 2 (USA) சுற்றியது 1962 வெர்னா 4 இறங்கியது 1967 மெசஞ்ஜர் (USA) சுற்றியது 2006/7
2. செவ்வாய் (மார்ஸ்) மெரைனர் 4 (USA) சுற்றியது 1965 பாத் ஃபைண்டர் (USA) இறங்கியது 1997 ரிகனைசன்ஸ், ஆர்பிட்டர் (USA) வட்டச் சுற்றில் உள்ளது 2006
3. குரு (ஜூபிடர்) பயனியர் 10 (USA) சுற்றியது 1973 கலிலியோ (USA) இறங்கியது 2003 நியூ ஹாரிசன் (USA) சுற்றியது 2007
4. மெர்க்குரி மெரைனர் 10 (USA) சுற்றியது 1974 மெசஞ்ஜர் (USA) சுற்றியது 2008/9
5. சாட்டர்ன் பயனியர் 11 (USA) சுற்றியது 1979 கேஸினி/ஹ்யூஜன்ஸ் சுற்றியது 2004/5
6. யுரேனஸ் வாயேஜர் 2 (USA) சுற்றியது 1986
7. நெப்ட்யூன் வாயேஜர் 1 சுற்றியது 1989
8. ப்ளூட்டோ நியூ ஹாரிசன் சுற்றியது 2015"
Q85. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்?
வெர்னர் வான் ப்ரான் (WERNER VON BRAUN) ஜெர்மானிய அமெரிக்க விஞ்ஞானி.
Q86. விண்வெளியில் "கர்மான் எல்லை" (KARMAN) என்பது என்ன?
"பூமியிலிருந்து 100 கி.மீ. உயரத்தில் ஒரு கற்பனைக் கோடு. வளி மண்டலத்தையும் (Earth's Atmosphere) விண்மண்டலத்தையும் பிரித்துக் காட்டும் ஒரு கோடு. இவ்வாறு பிரிக்கப்பட்டதின் காரணம், இந்த உயரத்திற்கு மேற்பட்ட பகுதி வானூர்தி நடவடிக்கைகளுக்கு உயர்ந்தது அல்ல (அடர்த்தி குறைவு) என கண்டறியப்பட்ட து. இந்தக் கருத்தை கண்டு பிடித்து முன் வைத்தவர் தியோடார் வான் கர்மான் என்ற அமெரிக்க விஞ்ஞானி."
Q87. விண்வெளி ஆராய்ச்சியில் விண்கல சாதனைகள் பட்டியல் :
"1. V 2 ராக்கெட் : ஜெர்மனி - 3.10.1942 - முதல் செயற்கைக் கோள் வானில் 100 கி.மீ. கர்மான் கோட்டை தாண்டியது. இதற்குப் பிறகு ஜெர்மனி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை.
2. V 2 ராக்கெட் : அமெரிக்கா - 20.2.1947 - விண்வெளிக்கு முதல் உயிருள்ள ஜீவன்களை - பழ ஈக்கள் (FRUIT FLIES) - ஏற்றிச் சென்ற செயற்கைக்கோள்.
3. ஸ்புட்னிக் 1 : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 4.10.1957 - விண்வெளிக்கு வெற்றிகரமாக சென்றடைந்த முதல் செயற்கைக் கோள்.
4. ஸ்புட்னிக் 2 : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 3.11.1957 - ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - விண்ணில் முதலாக ஒரு விலங்கை (லைகா நாய்) கொண்டு சென்றது.
5. லூனா 1 : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 4.1.1959 - முதல் செயற்கைக்கோள் நிலவின் அருகே சென்றது.
6. வாஸ்டாக் 1 : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 12.4.1961 - முதலாவதாக மனிதனை விண்ணுக்கு ஏற்றிச் சென்ற செயற்கைக்கோள்.
7. வெனரா 1 : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 19.5.1961 - முதல் செயற்கைக்கோள் விண்ணுலகின் வேற்று கிரகத்தின் (வீனஸ்) அருகில் சென்றது.
8. வோஸ்டாக் 6 : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 16.6.1963 - விண்வெளிக்கு முதல் பெண்மணியை (வேலன்டினா டெரஸ்கோவா) ஏற்றிச் சென்றது.
9. மெரைனர் 4 : அமெரிக்கா - 14.7.1965 - செவ்வாய் கிரகத்தின் அருகில் சென்ற முதல் செயற்கைக்கோள்.
10. லூனா 9 : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 3.2.1966 - விண்ணின் வேற்று உலகத்தில் - நிலவில் - முதல் செயற்கைக்கோள் இறங்கியது.
11. வெனரா 3 : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 1.3.1966 - விண்ணின் வேற்று கிரகத்தில் (வீனஸ்) ஒரு தாக்கத்தை உருவாக்கியது.
12. ஜெமினி / அஜெனா : அமெரிக்கா - 16.3.1966 - முதல் முறையாக விண்ணில் இரண்டு செயற்கைக் கோள்கள் இணைப்பு ஏற்படுத்தப் பட்ட து.
" "13. லூனா 10 : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 3.4.1966 - முதன்முதலாக ஒரு செயற்கைக்கோள் விண்ணின் வேறு உலகத்தை சுற்றியது ( நிலவை).
14. அப்போலோ 11 : அமெரிக்கா - 21.7.1969 - முதல்முறையாக செயற்கைக்கோள் மூலம் விண்ணின் வேறு உலகத்தில் ( நிலவில்) மனிதன் காலடி எடுத்து வைத்தான்.
15. சல்யூட் 1 : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 23.4.1971 - முதல் விண்வெளி நிலையம்.
16. பயனியர் 10 : அமெரிக்கா - 3.12.1973 - ஜூபிடர் கிரகத்தின் அருகே சென்ற முதல் செயற்கைக்கோள்.
17. மெரைனர் 10 : அமெரிக்கா - 29.3.1974 - முதல் செயற்கைக்கோள் மெர்க்குரி கோளின் அருகில் சென்றது.
18. பயனியர் 11 : அமெரிக்கா - 1.9.1979 - முதல் செயற்கைக்கோள் சாட்டர்ன் (சனி) கிரகத்தின் அருகில் சென்றது.
19. STS : அமெரிக்கா - 12.4.1981 - மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஆள் கொண்ட செயற்கைக்கோள்.
20. வாயேஜர் 2 : அமெரிக்கா - 24.1.1986 - முதல் செயற்கைக்கோள் யுரேனஸ் கிரகத்தின் அருகில் சென்றது.
21. மிர் : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 19.2.1986 - நீண்ட நாட்கள் மனிதர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி நிலையம்.
22. வாயேஜர் 2 : அமெரிக்கா - 25.8.1989 - நெப்ட்யூன் கிரகத்துக்கு அருகில் சென்ற முதல் செயற்கைக்கோள்.
23. மிர் : ரஷ்யா - 22.3.1995 - அதிக நாட்கள் (437.7 நாட்கள்) விண்வெளிப்பயணம் - விண்வெளி வீரர் வலேரி போல் யகோவ்.
24. கேஸினி ஹ்யூஜென்ஸ் : அமெரிக்கா - ஐரோப்பா - 1.7.2004 - சனி கிரகத்தை சுற்றி வந்த முதல் செயற்கைக்கோள். இவை தவிர்த்து பல தொழிற் நுட்ப ரீதியான சாதனைகளும் உள்ளன."
Q88. விண்வெளி ஆராய்ச்சியில் மனிதர்களின் சாதனைப்பட்டியல் :
"1. யூரி காகரின் : USSR - 12.4.1961 - VOSTOK 1 - செயற்கைக்கோள் மூலம் விண்ணுக்கு சென்ற முதல் மனிதர்.
2. அலன் ஷெப்பேர்டு : அமெரிக்கா - 5.5.1961 - MERCURY REDSTONE - செயற்கைக்கோ மூலம் விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கர்.
3. யாங் லீவி : சீனா - 15.10.2003 - ஷென்ஸொள - 5 செயற்கைகோள் மூலம் விண்ணுக்குச் சென்ற முதல் சீன வீரர்.
4. ஜெர்ரி எஸ். ரோஸ் : அமெரிக்கா - 7 தடவை (அதிகமான) விண்வெளிப்பயணம் செய்தவர்.
5. செர்ஜி க்ரிகலேவ் : ரஷ்யா - 6 தடவை விண்வெளிப் பயணம் மூலம் 803 நாட்கள், 9 மணி 39 நிமிடங்கள் விண்வெளியில் தங்கிய சாதனை புரிந்திருக்கிறார்.
6. பெக்கி விட்சன் : அமெரிக்கா - 376 நாட்கள், 17 மணி 22 நிமிடம் (இரண்டு பயணத்தின் மூலம்) விண்ணில் தங்கிய சாதனையை பெற்ற பெண்மணி.
7. வாலேரி போல்ய கோவ்: ரஷ்யா - ஒரே ஒரு விண்வெளி பயணத்தில் அதிக நாட்கள் - 437.7 நாட்கள் - விண்ணில் தங்கி சாதனை புரிந்தார்.
8. சுனிதா வில்லியம்ஸ் : அமெரிக்க இந்தியர் - ஒரே ஒரு விண்வெளிப் பயணத்தில் அதிக நாட்கள் - 195 நாட்கள் - விண்ணில் இருந்து சாதனை புரிந்துள்ளார்.
9. வேலரி பை கோவ்ஸ்கி : ரஷ்யா - - 14 முதல் 19 ஜூன் 1963 வரை, தொடர்ந்து 4 நாட்கள் 23 மணி நேரம் தனியாக பயணம் செய்து சாதனை புரிந்துள்ளார்.
10. இக்வின் செர்னான் & ஹேரிசன் ஷ்மிட் : அப்போலோ 17 - அமெரிக்கர்கள் - நிலவின் பரப்பில் 74 மணி, 59 நிமிடம் இருந்து சாதனை புரிந்தார்கள். "
"11. ஜிம்லோவெல், ஃப்ரெட் ஹெய்ஸ், ஜேக் ஸ்விகெர்ட் : அமெரிக்கா - அப்போலோ 13 மூலம் நிலவுக்கு பயணம் செய்தபோது, நிலவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை சுற்றும்போது, பூமியிலிருந்து 4,00,171 கி.மீ. தூரத்தில் இருந்து சாதனை புரிந்துள்ளார்கள்.
12. கெர்மான் டிட்டோவ் : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 25 வயது - மிக க்குறைந்த வயதில் விண்ணுக்கு பயணம் செய்த ஆண். வாஸ்டோக் - VOSTOK 2 விண்கலம் - 6.8.1961.
13. வாலென் டினா டெரெஷ்கோவா : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - 26 வயது - மிக க் குறைந்த வயதில் விண்ணுக்கு பயணம் செய்த பெண் வாஸ்டோக் 6 விண்கலம் - ஜூன் 1963.
14. ஜான் க்ளென் : அமெரிக்கா - 95 விண்கலம் - அக்டோபர் 1998 - 77 வயது - அதிக வயதில் விண்ணுக்கு பயணம் செய்தவர்.
15. அனடோலி சோலோவ்யெவ் : ஐக்கிய சோவியத் ரஷ்ய நாடுகள் - இவருக்கு 3 சாதனைகள் உள்ளன.
1. விண்வெளியில் 16 முறை நடந்து சாதனை படைத்துள்ளார்.
2. மொத்தமாக 77 மணி நேரம் 41 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார்.
3. ஒரே பயணத்தில் ஏழு முறை விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளார்.
16. சுனிதா வில்லியம்ஸ் : அமெரிக்கா. 1. விண்வெளியில் 7 முறை நடந்து சாதனை படைத்துள்ளார். 2. மொத்தமாக 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார்.
17. டேவ் ஸ்காட் & ஜிம் இர்வின் : அமெரிக்கா - அப்போலோ 15 - நிலவில் சக்கரம் வைத்த வாகனம் முதலில் ஓட்டிய சாதனை இவர்களுடையது.
18. டென்னிஸ் டிட்டோ : அமெரிக்கர் - சோயூஸ் விண்கலத்தில் சுற்றுலா பயணியாக சென்ற முதல் மனிதர்."
Q89. எந்த விண்வெளி வீர ர் விண்வெளிக்கு முதன்முதலில் இரண்டு தடவை சென்றார்?
ஜோ வாக்கர் - X 15 விண்கலம் 1990 மற்றும் 1991ல்.
Q90. முதன்முதலில் விண்ணுக்கு ஏவப்பட்ட செயற்கைக்கோள் எது?
EARTH V2 - ஜெர்மனி - 1942/44.
Q91. தனியார் துறையில் விண்ணுக்கு செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் எது?
"SPACE SHIP ONE 15P - மைக் மெல்வில் - 21.6.2004 - இவரே விண்கலத்தைச் செலுத்தி தனியார் துறையின் முதல் விண்வெளி வீரர் ஆனார்."
Q92. "விண்வெளியில் இன்றும் நிலைகொண்டு இருக்கும் மிகப் பழமையான, ஆனால் இயங்காத நிலையில் இருக்கும் செயற்கைக் கோள் எது?"
VAN GUARD 1 - அமெரிக்கா - 17.3.1958 - இந்த விண்கலம் தான் முதன்முதலில் சூரிய சக்தியால் இயக்கப்பட்ட ஒன்று.
Q93. "விண்வெளியில் ஒரு நாளைக்கு மேல் தங்கிய சாதனையை முதலில் படைத்தவர் யார்?"
கெர்மான் டிட்டோவ் - ஸ்புட்னிக் 2 - ரஷ்யா - 1961.
Q94. சீன விண்கலங்கள் ஏவுதளம் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
"""LONG MARCH - நீண்ட பயணம்"" - விண்கல ஏவுதளம் - இத்தொடர், சீனாவில் குவோமிண்டாங் (KUOMINTANG) ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட புரட்சியின் மூலம் மாசேதுங் சீனாவின் புதிய தலைவர் ஆவதற்கு வழி வகுத்த நிகழ்ச்சியுடன் சம்பந்தப்பட்டது."
Q95. "யூரி காகரின் முதன் முதலில் விண்வெளியை சுற்றி வந்த விண்கலத்தின் பெயர் என்ன?"
வாஸ்டாக் 1.
Q96. விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கர்...
எட்வர்டு ஒயிட் 1965.
Q97. "விண்வெளிக்கு முதன்முதலில் இரண்டு முறை சென்ற அமெரிக்க விண்வெளி வீர்ர் யார்?"
கார்டன் கூப்பர்.
Q98. பூமியை விண்கலத்தில் முதலில் சுற்றி வந்தவர் யார்?
ஜான் சிட் JOHN CHID - 1962 - Friendship விண்கலம்.
Q99. எந்த விண்ணோடம் - SPACE SHUTTLE - விண்கற்களால் பாதிக்கப்பட்டது?
ஒலிம்பஸ் - 1993. ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தால் ஏவப்பட்ட விண்ணோடம்.
Q100. ஒரு விண்ணோடத்தின் தலைமை விமானியாக சென்ற முதல் பெண்மணி யார்?
எய்லீன் காலின்ஸ் - அமெரிக்கா - STS 114 விண்ணோடம் - 26.7.2005 முதல் 9.8.2005 வரை.
Q101. விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்ட முதல் ஜீவராசி எது?
பழ ஈக்கள் - FRUIT FLIES.
Q102. """வன வாத்து (WILD DUCK)"" என்று அர்த்தமுள்ள பெயரையும், ""விண்வெளியின் கொலம்பஸ்"" - COLOMBUS OF THE COSMOS என்ற பட்டப் பெயரையும் கொண்டவர் யார்?"
யூரி காகரின்.
Q103. விண்ணில் உட்கொள்ளப்பட்ட முதல் பழம் எது?
குழிப்பேரி என்றழைக்கப்படும் பீச் (PEACH).
Q104. விண்ணில் விளையாடப்பட்ட முதல் விளையாட்டு எது?
கோல்ஃப் (GOLF) எனும் குழிப்பந்தாட்டம்.
Q105. "எந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் தகவல் ஒளிபரப்பில் உலகளவில் புரட்சி ஏற்பட்ட து?"
"EARLY BIRD - 6.4.65 - இதுவே தகவல் தொடர்பு அபிவிருத்திக்காக செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள். இது செலுத்தப்பட்டதன் மூலம் 24 நாடுகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு செயல்படத்துவங்கியது."
Q106. விண்வெளிக்கு மனிதன் முதன் முதலில் எந்த வருடம் செல்லத் தொடங்கினான்?
1961
Q107. "நீல் ஆர்ம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்டரின் ஆகியோர் நிலவில் நடந்த முதல் இரண்டு மனிதர்கள். மூன்றாவது யார்?"
பீட் கான்ராட் (Pete Conrad) - 24.11.1969 - அப்போலோ 12 - அமெரிக்கர்.
Q108. "அனிதா" & "அரபெல்லா" என்பவை எவ்வாறு விண்வெளியுடன் சம்பந்தப்பட்டவை?
"விண்வெளியில் செலுத்தப்பட்ட முதல் SKYLAB - வான்வெளி ஆராய்ச்சிக்கூட த்தில் எடுத்துச் செல்லப்பட்ட எட்டுக்கால் பூச்சி ஜோடிகள்."
Q109. நிலவில் கடைசியாக இறங்கிய விண்கலம் எது?
அப்போலோ 17.
Q110. விண்ணில் கோளாறு சீர் செய்யப்பட்ட முதல் செயற்கைக்கோள் எது?
சோலார் மேக்ஸ் - 14.2.1980.
Q111. பாகிஸ்தானின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் எது?
பதர் 1 - BADR 1 - 16.7.1990 - சீனாவிலிருந்து ஏவப்பட்டது.
Q112. அரபு நாடுகளின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் எது?
அராப்சாட் 1 - 8.2.1985.
Q113. துருக்கி நாட்டின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் எது?
டர்க் சாட் - 9.7.1996.
Q114. "விண்ணிலிருந்து தொலைக்காட்சி படங்களை அனுப்பிய முதல் செயற்கைக்கோள் எது?"
TIROS 1 - 1.4.1960.
Q115. "ஒலிம்பிக் போட்டிகளை சர்வதேச பார்வையாளர்களுக்கு பார்க்கும் வசதியை ஏற்படுத்திய செயற்கைக்கோள் எது?"
"SYNCOM 2 - 19.8.1964. 1964ல் டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளின் நேரடி படங்களை நேயர்களுக்கு பார்க்கும் வசதி அளித்தது."
Q116. "SATELLITE TELEPHONE - செயற்கைக்கோள் தொலைபேசி வசதிக்கு வழிவகுத்த முதல் செயற்கைக்கோள் எது?"
IRIDIUM 1 - இரிடியம் 1 - 5.5.1997 - அமெரிக்கா.
Q117. செயற்கைக்கோள்களை விண்ணுக்கு ஏவ உதவும் ஏவுதளங்களின் பெயர்கள் என்ன?
"1. KAITUOZHE, KUAIZHOU, LONG MARCH - சீனா.
2. ARIANE, VEGA - ஐரோப்பிய விண்வெளிக் கழகம்.
3. POLAR SATELLITE LAUNCH VEHICLE (PSLV) - இந்தியா.
4. PAEKTUSAN, UNHA - வட கொரியா.
5. SOYUZ, ANGARA, LUNA, MOLNIYA M, POLYOT, VOSKHOD, ZENT - ஐக்கிய ரஷ்ய நாடுகள்.
6. ANTARES, ATHENA, ATLAS V, FALCON 9, MINOTAR, PEGASUS, TAURUS, DELTA II - அமெரிக்கா."
Q118. "விண்கலத்தில் PSLV C9 ஏவுதள ராக்கெட் மூலம் இந்தியா உலக சாதனை ஒன்று படைத்துள்ளது. அது என்ன?"
"28.4.2008 அன்று PSLV C9 ஏவுதள ராக்கெட் மூலம் 10 செயற்கைக் கோள்களை ஏற்றிச்சென்று உலக சாதனை படைத்துள்ளது. ஏற்றிச்சென்ற செயற்கைக்கோள்கள் :
1. CARTOSAT 2 A - இந்தியா.
2. IMS 1 - இந்தியா.
3. RUBIN 8 - ஜெர்மனி.
4. COMPASS 1 - ஜெர்மனி.
5. CANX NTS - கனடா.
6. CANX 2 - கனடா.
7. CUTE 1.7 - ஜப்பான்.
8. SEED 2 - ஜப்பான்.
9. RELFI C3 - நெதர்லாந்து.
10. AAUSAT II - டென்மார்க்."
Q119. அமெரிக்கா அதன் விண்கலங்களை ஏவுவதற்கு பொதுவாக பயன்படுத்தும் இடம் எது?
கேப் கேனவரால் - CAPE CANEVERAL.
Q120. "அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) வின் தலைமையகத்தில் எந்த இந்திய மன்னரின் திருவுருவப்படம் மாட்டப்பட்டுள்ளது?"
திப்பு சுல்தான்.
Q121. செவ்வாய் (Mars) கிரகத்தில் இறக்கப்பட்ட செயற்கைக்கோளுக்கு ஒரு புராண (ஆங்கில) கால பறவையின் பெயர் இடப்பட்டுள்ளது. அதன் பெயர்?
"PHOENIX - ஃபீனிக்ஸ் - இது ஒரு ஆங்கில புராண காலப் பறவையின் பெயர். (இதன் சிறப்பு உயிர் நீத்து, பிறகு உயிர் பெறும் சக்தி படைத்தது)."
Q122. சனி கிரகத்துக்கு மிக அருகில் சென்ற முதல் செயற்கைக்கோள் எது?
பயனியர் XI.
Q123. "அமெரிக்க விண்வெளிக் கழகத்தால் ஏவப்பட்ட விண்ணோடங்களில் (Space Shuttles) மிகவும் கோர விபத்தில் அழிந்த இரண்டு விண்ணோடங்கள் எவை?"
"1. சேலஞ்சர் - CHALLENGER - STS 31 - 28.1.1986 - விண்ணில் ஏவப்பட்ட 73வது வினாடியில் வானில் வெடித்துச் சிதறி ஏழு வீர ர்களும் இறந்தனர். விண்கலம் ஃப்ளோரிடா அருகில் அட்லாண்டிக் கடலில் விழுந்தது.
2. கொலம்பியா STS 107 - 1.2.2003 - டெக்ஸாஸ் அருகில் தரை இறங்கும்போது வெடித்துச் சிதறி, ஏழு விண்வெளி வீர ர்களும் இறந்தனர். இதில் கல்பனா சாவ்லாவும் அடங்குவார்."
Q124. ஃப்ரான்ஸ் நாட்டால் 1956ல் அனுப்பப்பட்ட முதல் செயற்கைக்கோள் எது?
ஆஸ்டெரிக்ஸ் - ASTERIX.
Q125. இஸ்லாமிய நாட்டிலிருந்து விண்ணுக்கு சென்ற முதல் பெண்மணி யார்?
அனுஷெ அன்சாரி - ANOOSHEH ANSARI - ஈரான் - 18.9.2006 - SOYOZ TMA9.
Q126. "ஐரோப்பிய விண்வெளிக்கழகம் எப்போது ஏற்படுத்தப்பட்டது, தலைமையகம் எங்குள்ளது, எந்தெந்த நாடுகள் அங்கத்தினர்களாக உள்ளது?"
"30.5.1975 - பாரீஸ் - ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, ஃபின்லாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, க்ரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ரோமானியா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து (UK)."
Q127. "எந்த விண்வெளி வீரர் விண்ணில் மூன்று புது வருடங்களைக் கொண்டாடினார்? "
செர்ஜி அவ்டயேவ் - Sergei Avdeyev - ரஷ்யா - 1993, 1996 மற்றும் 1999.
Q128. தேசிய விண்வெளி ஆராய்ச்சி கழகங்கள் :
"1. NASA - National Aeronautical Space Agewey - அமெரிக்கா - 29.7.1958 - வாஷிங்டன்.
2. ROCOSMOS - Russian Federal Space Agency - ரஷ்யா - 25.2.1992 - மாஸ்கோ.
3. CNSA - China National Space Administration - People's Republic of China - 22.4.1993 - பெய்ஜிங்.
4. ESA - European Space Agency - ஐரோப்பிய நாடுகள் (22) - 30.5.1975 - பாரீஸ்.
5. ISRO - Indian Space Research Organization - 15.8.1969 - பெங்களூரு.
6. JAXA - Japanese Aerospace Exploration Agency - 1.10.2003 - டோக்யோ. இந்த ஐந்து நாடுகள் / அமைப்புகள் தான் விண்வெளி ஆராய்ச்சியில் அதிகமாக ஈடுபட்டுள்ளன. இவை தவிர்த்து பல நாடுகள் தனித்தும், கூட்டுறவு முறையிலும் விண்வெளி ஆராய்ச்சிக் கழகங்கள் தொடங்கி இயக்கி வருகின்றன."

"பொது கேள்விகள்: அணுசக்தி துறை :"

Q129. அணுசக்தி - ATOMIC ENERGY - என்பது என்ன?
அணுவின் பிணைப்பு அல்லது பிளவு முறையில் வெளியாகும் சக்தியே அணுசக்தி எனப்படும்.
Q130. அணு பிளப்பு - NUCLEAR FISSION - என்பது என்ன?
அணு பிளப்பு முறையில் ஒரு அணுவின் கருவை (Nuclei) பிளக்கும்போது வெளிப்படும் சக்தியின் ஒரு பகுதியை முழுமையான சக்தியாக மாற்றுவது.
Q131. அணு இணைப்பு - NUCLEAR FUSION - என்பது என்ன?
ஒரு அணுவின் கருவை, அடர்த்தி அதிகம் உள்ள கருவாக மாற்றும்போது ஏற்படும் அடர்த்தி இழப்பை சக்தியாக மாற்றுவது.
Q132. அணு உலை - NUCLEAR REACTOR - என்பது என்ன?
"ஒரு அணுவின் தொடர் எதிர்வினையை (Nuclear Chain Reaction) ஒரு பிளவு ஏற்படுத்தக்கூடிய எரிபொருளில் உருவாக்கி பராமரித்து, சக்தியை உருவாக்க அல்லது மேலும் பிளவுபடுத்தக்கூடிய எரிபொருளை உருவாக்க, பயன்படும் உலை/கலன்."
Q133. அணுசக்தி துறையில் BWR என்பது என்ன?
Boiling water Reactor - கொதி நீர் அணு உலை.
Q134. கன நீர் என்பது என்ன?
"A. கன நீர் என்பது ரசாயன ரீதியாக - ஹைட்ரஜன் ட்யூட்டேரியம் ஆக்ஸைடு என அழைக்கப்படுகிறது. இது சாதாரண நீரில் உள்ள பொதுவாக இருக்க க்கூடிய ஹைட்ரஜன் ஐசோடோப் ட்யூட்டேரியம் அளவு அதிகமாக இருக்கக்கூடியது. சாதாரண நீரைப்போல இருந்தாலும், இது நீறைவிட 11% அடர்த்தி அதிகம் ஆனது. அதனால் இது ரசாயன ரீதியாக தயாரிக்கப்படுகிறது. கனநீர் தயாரிப்பில் நம் நாடு முன்னணியில் உள்ளது."
Q135. அணுசக்தி துறையில் PHWR என்பது என்ன?
Pressurized Heavy Water Reactor - அழுத்தப்பட்ட கன நீர் உலை.
Q136. அணுசக்தி துறையில் PWR என்பது என்ன?
Pressurized Water Reactor - அழுத்தப்பட்ட நீர் உலை.
Q137. APS என்பது என்ன?
Atomic Power Station - அணுசக்தி மின் நிலையம்.
Q138. இந்திய அணுசக்தி துறையின் தந்தை எனப்படுபவர் யார்?
"ஹோமி ஜெஹாங்கீர் பாபா - இவருடன் சர் தோராப்ஜி டாடா அவர்களும் சேர்ந்து மும்பையில் 1945ல் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் (Tata Institute of Fundamental Research) தொடங்கி, அணுசக்தி துறையில் ஆராய்ச்சியை துவக்கி வைத்தனர்."
Q139. "அணுசக்தி துறை தனியாக எப்போது இயங்கத் தொடங்கியது? இத்துறை யாருடைய ஆளுமையின் கீழ் இயங்குகிறது?"
ஆகஸ்ட் 1954. பதவியின் அடிப்படையில் இத்துறை எப்போதும் பிரதம மந்திரியின் கீழ் இயங்குகிறது.
Q140. அணுசக்தி குழுமம் (கமிஷன்) Atomic Energy Commission என்பது என்ன?
"அணுசக்தி துறை (Department of Atomic Energy) தொடங்குவதற்கு முன்பே, துவக்கப்பட்ட ஒரு குழுமம். இது 1948ல் தொடங்கப்பட்டது. அணுசக்தி துறையின் கீழ் இயங்குகிறது. இக்குழுமத்தின் பணிகள் :
1. அணுசக்தி துறையில் ஆராய்ச்சி பணிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது;
2. அணுசக்தி துறை விஞ்ஞானிகளுக்கு பயிற்சியளிப்பது;
3. அணுசக்தி தனிமங்களை கண்டறிந்து பயனுக்கு கொண்டு வருவது;
4. இதன் கீழ் இயங்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதி பகிர்ந்தளிப்பது.
இந்தக் குழுமத்திற்கு அணுசக்தி துறையின் காரியதரிசி (Secretary, Department of Atomic Energy) தலைவராக இருப்பார்.இதன் கீழ் கீழ்க்கண்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் இயங்குகின்றன:
1. பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் - Bhabha Atomic Research Centre - மும்பை.
2. இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையம் - Indira Gandhi Centre for atomic Research - கல்பாக்கம், சென்னை.
3. முன்னோடி தொழில் நுட்பமையம் - Centre for Advanced Technology - இந்தூர்.
4. Variable Energy Cyclotron Centre - கொல்கத்தா.
5. அணுசக்தி கனிமங்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையம் - Atomic Minerals Directorate for Exploration and Research - ஹைதராபாத்."
Q141. "அணுசக்தி குழுமத்தின் (Chairman) Atomic Energy Commission தலைவராக இருந்தவர்கள் யார்?"
"எண் பெயர் வருடம்
1. ஹோமி ஜெஹாங்கீர் பாபா 1948 - 1966
2. விக்ரம் சராபாய் 1966 - 1971
3. H.N.சேத்னா 1972 - 1983
4. ராஜா ராமண்ணா 1983 - 1987
5. M.R. ஸ்ரீநிவாசன் 1987 - 1990
6. P.K. அய்யங்கார் 1990 - 1993
7. டாக்டர். ஆர். சிதம்பரம் 1993 - 2000
8. டாக்டர். அனில் காகோட்கர் 2000 - 2009
9. டாக்டர். ஸ்ரீகுமார் பேனர்ஜி 2009 - 2012
10. ரதன் குமார் சின்கா 2012 - அக்டோபர் 2015
11. சேகர் பாசு அக்டோபர் 2015 - ........"
Q142. அணுசக்தி குழுமத்திற்கு தலைவராக இருப்பவர் யார்?
A. பதவி ரீதியாக அணுசக்தி துறையின் முக்கிய செயலர் இந்த அமைப்பின் தலைவராக இருப்பார். இவருக்கு துணையாக இத்துறையின் துணை/இணை அமைச்சரையும் சேர்த்து 8 உறுப்பினர்கள் உள்ளனர்.
Q143. அணு உலை என்பது என்ன?
ஒரு வேதிப் பொருளுடன் மற்றொரு வேதிப் பொருளை இணைத்து உருவாக்கப்படும் வேதி மாற்றங்களுக்கு தேவையான கலன். .
Q144. நம் நாட்டின் முதல் அணு உலை (Atomic Reactor) எது?
APSARA - அப்ஸரா - 4.8.1956 - மும்பையில் உள்ள பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவிலேயே முதல் அணு உலை.
Q145. "பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் எப்போது நிறுவப்பட்டது? இதனுடன் இணைந்த ஆராய்ச்சி மையங்கள் எவை?"
"1954ல் தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி மையம், மும்பையின் ட்ராம்பே பகுதியில் அமைந்துள்ளது. இதனுடன் இணைந்த ஆராய்ச்சி மையங்கள் :
1. Variable Energy cyclotron Centre - கொல்கத்தா.
2. High altitude Research Centre - குல்மார்க், ஜ & கா.
3. Nuclear Research Lab - காஷ்மீர்.
4. Seismic Station - கௌரிபிதானூர், கர்நாடகா."
Q146. நம் நாட்டில் எத்தனை அணு உலைகள் உள்ளன?
"நம் நாட்டில் 21 அணு உலைகள் உள்ளன. இவை நம் நாட்டில் உள்ள 7 அணுமின் நிலையங்களில் அமைந்துள்ளன.
1. கைகா, கர் நாடகா -4
2. கக்ராபார், குஜராத் - 2
3. கல்பாக்கம், சென்னை, தமிழ் நாடு - 2
4. நரோரா, உ.பி - 2
5. கோட்டா, ராஜஸ்தான் - 6
6. தாராபூர், மஹாராஷ்டிரா - 4
7. கூடங்குளம், தமிழ் நாடு - 1."
Q147. BARC, மும்பையின் இதர முக்கிய நடவடிக்கை என்ன?
ரேடியோ, ஐசோடோப்புகள் அதற்குத் தேவையான உபகரணங்கள், ரேடியோ, ரசாயனங்கள் போன்ற தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ட்ராம்பே, பெங்களூரு மற்றும் டெல்லியில் நிறுவனங்கள் உள்ளன.
Q148. இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
"கல்பாக்கம் - சென்னை - 1971. Fast Breeder Test Reactor என்ற முறையை அறிமுகப்படுத்திய மையம். இந்த தொழில் நுட்பத்தில், வளரும் நாடுகளின் முதலாவதாகவும், உலக நாடுகளில் ஏழாவது நாடாகவும் நம் நாடு உள்ளது."
Q149. Centre for Advanced Technology எங்கு உள்ளது ?
"இந்தூர், ம.பி., – 1984 – lasers, fusion and accelerators, synchrotron Radium Sources - போன்ற விஷயங்களில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்கிறது."
Q150. Variable Energy Cyclotron Centre எங்குள்ளது?
கொல்கத்தா -- அணு ஆராய்ச்சிக்குத் தேவையான வேதிப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
Q151. isotope -- ஐசோடோப்பு என்பது என்ன?
"இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் வெவ்வேறு நிலைகளில், அவைகள் ஒரே மாதிரியான வேதிப்பொருள்களைக் கொண்டு, ஒரே எண்ணைக் கொண்டு, ஆனால் வேறுபட்ட அணு எடையைக் கொண்டுள்ளவை இவ்வாறு அழைக்கப்படுகிறது. "
Q152. "ஹைதராபாத்திலுள்ள அணுகனிம நிறுவனத்தின் (Atomic Minerals Division) பணி என்ன?"
"ஹைதராபாத்தில் 1948ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இந்திய எல்லைக்குள் உள்ள கனிம வளங்களை ஆய்வுகள் மூலம் கண்டறிந்து, நாட்டுப் பயனுக்கு கொண்டு வருவது இதன் முக்கியப் பணி. ஜார்க்கண்ட், பீஹார், மேகாலயா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மா நிலங்களில் சுமார் 78000 டன் யுரேனியம் பூமியில் இருப்பதை இந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது."
Q153. "NPCL - Nuclear Power Corporation of India Ltd - இந்திய அணுசக்தி மின் நிறுவனம் என்பது எப்போது தொடங்கப்பட்டது, அதன் பணி என்ன?"
"செப்டம்பர் 1987 துவங்கப்பட்டு, மும்பையைத் தலை நகரமாக க் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், அணுசக்தி மின் தயாரிப்பில், வடிவமைப்பு, நிர்மானம், பராமரிப்பு போன்ற அணுமின்சக்தி நிலையங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் கவனித்துக் கொள்கிறது. அணுசக்தி சட்டம் 1962ன் கீழ் இந்த நிறுவனம் இயங்குகிறது."
Q154. அணுசக்தி துறை சம்பந்தமாக நம் நாட்டில் இயங்கும் நிறுவனங்கள் யாவை?
"1. Heavy Water Board - கன நீர் குழுமம் - அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, நம் நாட்டில் கன நீர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்கு வடோடரா - குஜராத்; ஹசீரா - குஜராத், கோட்டா - ராஜஸ்தான், மனுகுரு - தெலங்கானா, தால்ச்சேர் - ஒடிசா, தால் - மஹாராஷ்டிரா மற்றும் தூத்துக்குடி - தமிழ் நாடு ஆகிய இடங்களில் கன நீர் தயாரிக்கும் வசதியுள்ளது.
2. Nuclear Fuel Complex - அணுசக்தி எரிபொருள் மையம் : ஹைதராபாத் - 1971 - நாட்டில் உள்ள அணுமின் சக்தி நிலையங்களுக்கு எரிபொருள் வி நியோகம் செய்வதே இதன் முக்கிய பணி.
3. Board of Radiation and Isotope Technology - கதிர்வீச்சு மற்றும் ஐசோடோப்பு தொழிற் நுட்ப குழு : மும்பை - 1989 - ரேடியோ ஐசோடோப்புகள் தயாரிப்பு மற்ரும் வி நியோகம் மற்றும் இது சம்பந்தப்பட்ட அனைத்து தொழில் நுட்பங்களையும் கவனித்துக் கொள்கிறது. இதற்கு, ராவத் பட்ட கோட்டா, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் திப்ருகர் ஆகிய இடங்களில் தயாரிப்பு மையங்கள் உள்ளன.
4. Nuclear Power Corporation of India Ltd - இந்திய அணுமின்சக்தி கார்ப்பொரேஷன்: 1987 - மும்பை.
5. Uranium Corporation of India Ltd., - இந்திய யுரேனியம் கார்ப்போரேஷன்: 1967 - சிங்பூம், ஜார்க்கண்ட் - நாட்டில் யுரேனியம் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுப்பது, அதை பயனுள்ளதாக தயாரித்தல் போன்றவை இதன் பணிகளாகும். இதற்கு ஜடுகுடா, பதின், நர்வாபஹார், துரம்திஹ் மற்றும் பண்டுகுராங் ஆகிய ஜார்க்கண்ட் மாநில இடங்களில் யுரேனிய சுரங்கங்கள் உள்ளன.
6. Indian Rare Earths Ltd., - இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் : மும்பை, 1950. அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம், இந்திய மண்ணில் உள்ள அரிதான ( ) கனிமங்களை தேடி எடுப்பதே இதன் முக்கிய பணி. கேரளா ஆலப்பி பகுதிகளின் மோனசைட் மணலிலிருந்து தோரிசம் என்ற அரிதான கனிம எரிபொருளை பிரித்து எடுத்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம், இல்மனைட், ருட்டைல், சிர்க்கான், மோனசைட், சில்லிமனைட் மற்றும் கார்னெட் போன்ற அரிதான கனிமங்கள் தயாரிக்கப்படுகின்றன.
7. Electronic Corporation of India Ltd - இந்திய மின்னணு நிறுவனம்: 1967 - ஹைதராபாத் - இந்திய அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம், அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்குத் தேவையான மின்னணு பொருட்களை தயாரித்துக் கொடுக்கிறது.
8. Atomic Energy Education Society - அணுசக்தி கல்வி சங்கம் : அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, இந்த துறையில் பனிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளிப்பதற்காக 1969ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் கீழ் இந்தியாவின் 16 இடங்களில் 30 பள்ளிகள் - (சுமார் 30,000 மாணவர்கள்)நடத்தப்பட்டு வருகின்றன."
Q155. நம் நாட்டில் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் யாவை?
"1. தாராபூர் அணுமின் நிலையம் - தாராபூர், மகாராஷ்டிரா - 28.10.1969 - நான்கு அணு உலைகள் உள்ளன - 1440 MW.
2. ராஜஸ்தான் அணுமின் நிலையம் : கோட்டா, ராஜஸ்தான் - 16.12.1973, 6 அணு உலைகள், 1180 MW.
3. சென்னை அணுமின் நிலையம், கல்பாக்கம், சென்னை, தமிழ் நாடு - 27.1.1984 - 2 அணு உலைகள், 440 MW.
4. நரோரா அணுமின் நிலையம், புலந்த்ஷார், உத்திர பிரதேசம் - 1.1.1951, 2 அணு உலைகள், 440 MW.
5. கக்ரபார் அணுமின் நிலையம், சூரத், குஜராத் - 6.5.1993, 2 அணு உலைகள், 440 MW.
6. கைகா அணுமின் நிலையம், கைகா, கர் நாடகம் - 16.11.2000, 4 அணு உலைகள், 880 MW.
7. கூடங்குளம் அணுமின் நிலையம், கூடங்குளம், திருநெல்வேலி, தமிழ் நாடு - 22.10.2003 - 1 அணு உலை, 1000 MW."
Q156. தாராபூர் அணுமின் நிலையம் எந்த நாட்டு தொழில் நுட்பத்தில் உருவானது?
அமெரிக்கா.
Q157. ராஜஸ்தான் அணுமின் நிலையம் எந்த நாட்டு தொழில் நுட்பத்தில் உருவானது?
கனடா.
Q158. கைகா அணுமின் நிலையம் எந்த நாட்டு தொழில் நுட்பத்தில் உருவானது?
கனடா.
Q159. கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த நாட்டு தொழில் நுட்பத்தில் உருவானது?
ரஷ்யா.
Q160. "அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட உலகத்தையே அச்சுறுத்திய விபத்துக்கள் யாவை?"
"1. 26.4.1986 : செர்னோபில் (இப்போது கஜகிஸ்தான் - முன்னாள் ஐக்கிய ரஷ்ய நாடுகள்) - ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர், மேலும் பல ஆயிரம் பேர் உடல் ஊனமடைந்தனர். அணு உலை கோளாறால் விபத்து.
2. 11.3.2011 : ஃபுக்குஷிமா, தைச்சி, ஜப்பான் - சுனாமியால் ஏற்பட்ட விபத்து."
Q161. "போர்களில் பயன்படுத்தும் விதமான அணு சோதனை நம் நாட்டில் (சோதனை அடிப்படையில் மட்டும்) எப்போது நடைபெற்றது?"
"1. 18.5.1974 : இந்திரா காந்தி - பிரதமர்.
2. 11.5.1988, 13.5.1988 - அடல் பிஹாரி வாஜ்பேயி - பிரதமர். மூன்று சோதனைகளும் ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் என்னும் இடத்தில் நடந்தது."
Q162. அணுசக்தி தயாரிப்பில் - PRP - என்பது என்ன?
ப்ளூட்டோனியம் மறுசுழற்சி ஆலை Plutonium Recycling Plant.
Q163. "அணுசக்தி ஆராய்ச்சியில் ஐரோப்பிய நாடுகளின் கூட்டுறவு ஆராய்ச்சி மையம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?"
"CERN - European Organization for Nuclear Research - ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் -- செப்டம்பர் 1954 - ஜெனீவா தலைமையகம்."
Q164. "அணுசக்தி ஆராய்ச்சி நடவடிக்கைகளை கண்காணிக்கும் சர்வ தேச அமைப்பு எது? அதன் தலைவர்களாக -- Director General இருந்தவர்கள் யார்?"
"IAEA - International Atomic Energy Agency - சர்வதேச அணுசக்தி நிறுவனம் -- ஜூலை 1957ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, வியன்னா, ஆஸ்திரியாவை தலைமையகமாகக் கொண்டுள்ளது. இதில் 163 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் தலைவர்களாக - Director General இருந்தவர்கள்:
1. டபிள்யூ. ஸ்டெர்லிங் கோல் - அமெரிக்கா W.Sterling Cole USA 1957-1961
2. சிக்வர்ட் எக்லண்ட் -- ஸ்வீடன் Sigvard Eklund Sweden 1961-1981
3. ஹான்ஸ் ப்ளிக்ஸ் -- ஸ்வீடன் Hans Blix Sweden 1981-1997
4. மொகம்மத் எல் வரேடி -- எகிப்து Md.ElBaradei Egypt 1997-2009
5. யுகியா அமேனோ -- ஜப்பான் Yukiya Amano Japan Dec. 2009 ……."
Q165. அணுசக்தி அறிவியலின் - Nuclear Physics - தந்தை எனப்படுபவர் யார்?
எர்னஸ்ட் ருதர்ஃபோர்டு - Ernest Rutherford - 30.8.1871 - 19.10.1937 - நியூசிலாந்தில் பிறந்த இங்கிலாந்து விஞ்ஞானி.
Q166. அணுசக்தியின் பாதுகாப்பு விதிமுறைகளை பாதுகாக்கும் இந்திய அமைப்பு எது?
" அணுசக்தி கட்டுப்பாட்டு குழு -- Atomic Energy Regulatory Board: மும்பை – 1983 - அணுசக்தி சட்டத்தின் (1962) 27வது பகுதியின் கீழ் உருவாக்கப்பட்டது. "
Q167. "அணு உலைகளுக்கு தேவையான ரேடியோ ஐசோடோப்புகளை தயாரிக்கும் அமைப்பு எது? "
"கதிர்வீச்சு மற்றும் ஐசோடோப்பு தொழிற்நுட்ப குழு -- Board of Radiation & Isotope Technology: மும்பை – 1948 ரேடியோ ஐசோடோப்புகள் மற்றும் வேதிப்பொருள்கள் தயாரிக்கிறது. "
Q168. அணுசக்தி மூலம் மின்சாரம தயாரிக்கும் பொருப்பு எந்த அமைப்பிடம் உள்ளது?
"இந்திய அணுமின் கார்ப்பொரேஷன் -- Nuclear Power Corporation of India: மும்பை – 1987 – இது ஒரு மத்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனம்."
Q169. "அணு சக்தி உலைகளுக்குத் தேவையான கன தனிமங்களை தயாரிக்கும் நிறுவனம் எது? "
இந்திய அரிய கனிமங்கள் லிட்., Indian Rare Earths Ltd., மும்பை – 1950.
Q170. "நம்நாட்டின் யுரேனியம் தூண்டி எடுக்கும் சுரங்கப்பணியில் ஈடுபட்டிருக்கும் பொதுத்துறை நிறுவனம் எது? "
இந்திய யுரேனியம் கார்ப்பொரேஷன் -- Uranium Corporation of India : சிங்பூம், பீஹார் – 1967
Q171. "அணுசக்தி உலைகளுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் இதர பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் எது? "
அணு எரிபொருள் வளாகம் -- Nuclear Fuel Complex: ஹைதராபாத் – 1971
Q172. "அணு உலைகளுக்குத் தேவையான கன நீர் (Heavy Water) தயாரிப்பில் ஈடுபட்டு உள்ள நிறுவனம் எது? "
"கன்நீர் குழு -- Heavy Water Board: ஹைதராபாத் – 1962 – இதற்கு, வடோடரா, ஹசிரா, கோட்டா, மங்களூரு, தால்ச்சேர், தால் மற்றும் தூத்துக்குடியில் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. "
Q173. "எந்த அமைப்பி அணுசக்தி துறையில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதி செய்து கொடுக்கிறது? "
"அணுசக்தி கல்வி சங்கம் -- Atomic Energy Education Society: 1969 – இதன் கீழ் 30000 மாணவர்கள், 1781 ஆசிரியர் ஊழியர்களை கொண்ட 30 பள்ளிகளில் கல்வி பயில்கிறார்கள். "

பொதுக்கேள்விகள்:

Q174. தேசிய மூளை ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
மனேசர், ஹரியானா.
Q175. மரபணு மற்றும் கைரேகை அச்சு மற்றும் ஆய்வு மையம் எங்குள்ளது?
ஹைதராபாத்
Q176. ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மையம் எங்குள்ளது?
திருவன்ந்தபுரம்.
Q177. போலியோ சொட்டு மருந்து தயாரிக்கும் இந்திய அரசாங்க நிறுவனம் எது?
பாரத் தடுப்புசக்தி மற்றும் உடல்கூறு கார்ப்பொரேஷன் -- புலந்த்ஷார், உ.பி.
Q178. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மையம் எப்போது தொடங்கப்பட்டது?
1962 -- டெல்லி -- 35+ ஆராய்ச்சி மையங்களைக் கொண்டது.
Q179. செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் எங்குள்ளது?
ஹைதராபாத் 1987
Q180. மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
லக்னௌ -- உ.பி. 1951
Q181. மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
காரைக்குடி - தமிழ்நாடு 1953.
Q182. மத்திய மின்னணு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
பிலானி, ராஜஸ்தான் - 1953.
Q183. மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
மைசூரு - 1950.
Q184. மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
Kolkatta.
Q185. மத்திய மருத்துவ மற்றும் நறுமண செடிகள் மையம் எங்குள்ளது?
லக்னௌ - 1959
Q186. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
சென்னை - 1948
Q187. மத்திய அறிவியல் உபகரணங்கள் நிறுவனம் எங்குள்ளது?
சந்திகர் -- 1959.  
Q188. மத்திய இயந்திர தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?
துர்காபூர் -- 1958.  
Q189. மத்திய உப்பு மற்றும் கடல்சார் வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
பாவ்நகர் -- குஜராத் -- 1956.
Q190. "மரபுவழி அறிவியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் கல்வி மையம் எங்குள்ளது? "
டெல்லி -- 1977
Q191. இந்திய வேதியியல் தொழிற்நுட்ப கல்வி மையம் எங்குள்ளது?
ஹைதராபாத் -- 1983.  
Q192. இந்திய வேதியியல் உயிரியல் கல்வி மையம் எங்குள்ளது?
கொல்கத்தா -- 1935.  
Q193. இந்திய பெட்ரோலிய கல்வி மையம் எங்குள்ளது?
டெஹ்ராடூன் -- 1960 .
Q194. நுண்ணுயிர் தொழில்நுட்பக் கல்விமையம் எங்குள்ளது?
சந்திகர் -- 1984.  
Q195. இந்திய நச்சுப்பொருள் ஆராய்ச்சி கல்வி மையம் எங்குள்ளது?
லக்னௌ -- 1965.
Q196. தேசிய வான்வெளி ஆய்வு மையம் எங்குள்ளது?
பெங்களூரு -- 1959.  
Q197. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
லக்னௌ -- 1953.
Q198. தேசிய வேதியியல் ஆய்வு மையம் எங்குள்ளது?
பூனே - 1950
Q199. தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
நாக்பூர் -- 1958.
Q200. தேசிய புவிஇயற்பியல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
ஹைதராபாத் -- 1961
Q201. தேசிய கடலியல் கல்வி மையம் எங்குள்ளது?
கோவா -- 1966.
Q202. தேசிய உடற்கூறு ஆய்வு மையம் எங்குள்ளது?
புது டெல்லி -- 1947.
Q203. மத்திய கட்டிட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
ரூர்கி.
Q204. மத்திய எரிபொருள் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
தன்பாத்
Q205. மத்திய சுரங்க கல்வி நிறுவனம் எங்குள்ளது?
தன்பாத்Dhanbad.
Q206. மத்திய சாலை/நெடுஞ்சாலை ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
டெல்லி
Q207. தேசிய உலோகவியல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
ஜாம்ஷெட்பூர்
Q208. தேசிய கட்டுமான (Structural) ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
சென்னை
Q209. இந்திய நில அளவை மையம் எங்குள்ளது?
டெஹ்ராடூன் -- 1767.
Q210. "அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகத்தால் அளிக்கப்படும் மிக உயரிய விருது எது? "
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது. 1958ல் இருந்து வழங்கப்படும் இந்த விருது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப - CSIR - நிறுவிய சாந்தி ஸ்வரூப் பட்நாகர் அவர்களின் நினைவாக வழங்கப்படுகிறது. இந்த் விருது 5 லட்ச ரூபாய் ரொக்கமும் மாத உதவித்தொகையாக ரூ.15000/- மும் வழங்கப்படும்.