Khub.info Learn TNPSC exam and online pratice

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்.

Q1. சுகாதாரம் எதன் கட்டுப்பாட்டில் உள்ளது? Health is a subject of the Centre or the States?
"மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை செய்து கொடுப்பது மாநில அரசாங்கங்களின் பொறுப்பு. "

Q2. மக்களின் சுகாதாரம் பொறுப்பில் மத்திய அமைச்சகத்தின் பங்கு என்ன?
" ஆலோசனை, திட்டங்கள் வகுப்பது, நிதி ஒதுக்கீடு மற்றும் மருத்துவ ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவுவது, மருத்துவ கல்வி நிறுவனங்களை மேலாண்மை செய்வது போன்ற பணிகளை மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது. "
Q3. சுதந்திர இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சர் யார்?
ராஜ்குமார் அம்ரித் கௌர்.
Q4. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகள் யாவை?
" 1. சுகாதாரத்துறை Department of Health. 2. குடும்ப நலத்துறை Department of Family Welfare 3. ஆயுஷ் துறை Department of Ayush (Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy) established in 1995."
Q5. சுகாதார அமைச்சகத்தின் முக்கிய பணிகள் யாவை?
" மக்கள் சுகாதார பாதுகாப்பு, விழிப்புணர்ச்சி முகாம்கள், நோய் தடுப்பு மருந்து முகாம்கள், மருத்துவ திட்டங்கள் தீட்டுவது.
இதன் கீழ், கீழ்க்கண்ட அமைப்புகள் இயங்குகின்றன.
1. தேசிய எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு -- National Aids Control Organization – 1992 – டெல்லி
2. இந்திய மருத்துவ கழகம் -- Medical Council of India – 1934 – டெல்லி – நாட்டில் மருத்துவ கல்வியின் முழு பொறுப்பு இந்த துறையை சார்ந்தது. இதன் கீழ் சில மருத்துவ கல்லூரிகள் நாட்டின் சில இடங்களில் இயங்கி வருகிறது.
3. இந்திய பல் மருத்துவ கழகம் -- Dental Council of India – 1948 – நாட்டில் பல் மருத்துவ கல்வி பணிகளை மேற்கொள்கிறது.
4. இந்திய மருந்து கழகம் -- Pharmacy Council of India - 1948/49 – டெல்லி -- மருந்துகள் சார்ந்த கல்வியும், மற்றும் மருந்து தயாரிப்பு, தரம் கட்டுப்பாடு ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.
5. இந்திய செவிலியர் கழகம் -- Indian Nursing Council - 1947 – செவிலியர் கல்வி சார்ந்த அனைத்து பணிகளையும் செய்கிறது.
6. அகில இந்திய பேச்சு மற்றும் கேள்வித்திறன் கல்வி நிறுவனம் -- All India Institute of Speech and Hearing – 1966 – மைசூரு – நம் நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவை தவிர்த்து இந்த துறை தேசிய அளவிலான, எய்ட்ஸ், புற்றுநோய், யானைக்கால் நோய், அயோடின் குறைபாடு, தொழுநோய் தடுப்பு, மன நிலை குறைபாடு, கண்பார்வை குறைபாடு, காது கேளாமை, புகையிலை தவிர்ப்பு, தடுப்பு ஊசி போடுதல் போன்ற பல விஷயங்களுக்கான விழிப்புணர்ச்சி முகாம்கள், நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது. "
Q6. மத்திய குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் அமைப்புகள் யாவை?
" 1. மத்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம் -- Central Drug Research Institute: 1951 – லக்னௌ
2. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் -- Indian Council of Medical Research : 1911 – டெல்லி – இந்தியாவின் பழமையான ஆராய்ச்சி மையங்களில் ஒன்று. உயிரி மருத்துவ ஆராய்ச்சி (biomedical research) நடவடிக்கைகளுக்கு முதன்மை அமைப்பு. இதன் கீழ் பல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் இயங்குகின்றன. "
Q7. "ஆயுஷ்" என்ற துறையின் நடவடிக்கைகள் என்ன?
" ஆயுஷ் -- AYUSH என்பதின் விரிவாக்கம் -- A = Ayurveda - ஆயுர்வேதம்; Y = Yoga - யோகா; U = Unani - யுனானி; S = Siddha - சித்தா; H = Homeopathy - ஹோமியோபதி. மேலே கூறப்பட்ட துறைகளில், ஆராய்ச்சி, மேம்பாடு, அவற்றின் பயன் பற்றிய விழிப்புணர்ச்சி மற்றும் இவை சார்ந்த மருந்துகளுக்கு தணிக்கை தரம் அளித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது.
இத்துறையின் கீழ், கீழ்க்கண்ட அமைப்புகள் இயங்குகின்றன:
1. மத்திய ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகம் -Central Council for Research in Ayurveda and Siddha: 1978 – புதுடெல்லி
2. மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் - Central Council for Research in Unani Medicine -- 1971 -- ஹைதராபாத்.
3. மத்திய ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் - Central Council for Research in Homeopathy, புதுடெல்லி.
4. தேசிய ஹோமியோபதி மருத்துவ நிறுவனம் - National Council of Homeopathy, - 1973 – டெல்லி.
5. மத்திய இந்திய மருந்துகள் நிறுவனம் -- Central Council of Indian Medicines – 1971 – புது டெல்லி "
Q8. பொது சுகாதாரம் பற்றிய மத்திய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்பு எது?
டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஹெல்த் சர்வீசஸ் -- Director General of Health Services, புது டெல்லி..
Q9. "மருந்துகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை (உற்பத்தி, தரம், விலை நிர்ணயம், கட்டுப்பாடு/கட்டுப்பாடற்ற மருந்துகள் மருந்து தயாரிப்பு உரிமம், இறக்குமதி, புதிய மருந்து சோதனையிடல்) மேற்பார்வையிடும் மத்திய அமைப்பு எது? "
மத்திய மருந்து தர கட்டுப்பாடு நிறுவனம் -- Central Drugs Standard Control Organization – புது டெல்லி. It is responsible for standardization, regulations, introduction of new drugs, clinical research, manufacturing license, import of drugs, testing of drugs and so on.
Q10. இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருத்துவம்/மருந்து சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் யாவை?
1. தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் -- National Institute of Malaria Research – 1977 – புது டெல்லி
2. தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் - National Institute of Nutrition – 1918 – ஹைதராபாத்
3. தேசிய இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி மையம் -- National Institute for Research in Reproductive Health – 1970 -- மும்பை
4. ராஜேந்திர நினைவு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையம் -- Rajendra Memorial Research Institute of Medical Sciences, பாட்னா – 1963.
5. ஊனீரியல் கல்வி மையம் -- Institute of Serology,கொல்கத்தா.
6. மத்திய மன நோய் சிகிச்சை மையம் -- Central Institute of Psychiatry,ராஞ்சி – 1918
7. மத்திய உணவு ஆய்வகம் -- Central Food Laboratory,கொல்கத்தா
8. உணவு ஆராய்ச்சி மற்றும் தர நிர்ணய ஆய்வகம் -- Food Research & Standardization Laboratory, காஸியாபாத்
9. காச நோய் தடுப்பு ஊசி BCG Vaccine Laboratory, Guindy, Chennai – 1948.
10. அகில இந்திய உடற்கூறு மருந்து மற்றும் புனர்வாழ்வு மையம் -- All India Institute of Phtysical Medicine and Rehabilitation, மும்பை
11. தேசிய தொற்றுநோய் ஆய்வு மையம் -- National Institute of Communicable Diseases, டெல்லி – 1963.(www.nicd.nic.in)
12. அகில இந்திய சுகாதாரம் மற்றும் பொது சுகாதார நிறுவனம் -- All India Institute of Hygiene and Public Health, கொல்கத்தா
13. கிராமப்புற சுகாதார பயிற்சி மையம் -- Rural Health Training Centre, புது டெல்லி.
14. மத்திய தொழு நோய் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் -- Central Leprosy Teaching & Research Institute, செங்கல்பட்டு T.N.
15. தேசிய காசநோய் மையம் -- National Tuberculosis Institute, பெங்களூரு
16. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் - National Aids Control Organization, டெல்லி – 1992 (www.nacoonline.org)
17. மத்திய அணு மற்றும் மூலக்கூறு அறிவியல் மையம் -- Centre for Cellular & Molecular Biology, ஹைதராபாத்
18. மத்திய டி.என்.ஏ கைரேகை மற்றும் சிகிச்சை காணல் மையம் -- Centre for DNA Finger Printing & Diagnostics., ஹைதராபாத்
19. அகில இந்திய பேச்சு மற்றும் கேள்வி திறன் கல்வி மையம் -- All India Institute of Speech & Hearing, மைசூரு
20. மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் -- Central Drugs Research Institute, லக்னௌ
21. மத்திய உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மையம் -- Central Food Technological Research Institute, மைசூரு
22. மத்திய மருந்து பயிர் வளர்ப்பு கழகம் -- Central Indian Medicinal Plants Organization, லக்னௌ
23. இந்திய சோதனை மருந்து ஆய்வு நிறுவனம் -- Indian Institute of Experimental Medicine, கொல்கத்தா
24. இந்திய கால்நடை மையம் -- Indian Veterinary Institute, இஸ்ஸத்நகர்
25. கிங் தடுப்பு மருந்து ஆய்வு மையம் -- King Institute of Preventive Medicine, சென்னை
26. ஹாஃப்கின் ஆய்வு மையம் -- Haffkine Institute, மும்பை
27. ஆயுர்வேத மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் -- Institute of Ayourvedic Studies & Research, ஜாம் நகர், குஜராத்
28. மத்திய உள்நாட்டு மருந்து முறைகள் ஆராய்ச்சி மையம் -- Central Institute of Research in Indigenous Systems of Medicine, ஜாம்நகர்.
29. இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் -- Indian Cancer Research Centre, மும்பை
30. சித்தரஞ்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் -- Chittaranjan Cancer Research Centre, கொல்கத்தா
31. தேசிய நச்சுயுரியல் மையம் -- National Institute of Virology, பூனே – 1978 –
32. தேசிய மனநோய் சிகிச்சை மையம் -- National Institute of Mental Health, பெங்களூரு
33. பாஸ்ச்சர் ஆய்வு கூடம் -- Pasteur Institute, கூனூர்.
34. வல்லபாய் படேல் மார்பு நோய் ஆய்வு மையம் -- Vallabhai Patel Chest Institute, டெல்லி
35. காலரா ஆராய்ச்சி மையம் -- Cholera Research Centre, கொல்கத்தா
36. தேசிய தொழில்சார் சுகாதார மையம் -- National Institute of occupational health., அஹமதாபாத்
37. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் Food Safety and Standards Authority of India -- 2011 -- புது டெல்லி
Q11. சுற்றுலாத்துறை அமைச்சகம் -- MINISTRY OF TOURISM:
"5000 வருட கலாச்சார பாரம்பரியமும், இயற்கை சூழ்நிலைகல், பல்வேறு கலாச்சாரம், வெவ்வேறு மன்னர்களின் ஆட்சி, என பல காரணங்களால், நம் நாடு சுற்றுலாவுக்கு ஏற்ற நாடாக அமைந்துள்ளது. 1966ல் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சகத்தின் கீழ் பல உயர் ரக சொகுசு விடுதிகள், பல சுற்றுலா சேவை கல்வி மையங்கள் ஆகியவை இயங்குகின்றன. ""Incredible India"" என்பது இந்திய சுற்றுலாத்துறையின் வணிக குறிக்கோள் வாக்கியம். 2011ல் லண்டனில் நடந்த உலக சுற்றுலா மகாநாட்டில், சுற்றுலாவுக்கு மிகவும் உகந்த நாடு மற்றும் சிறந்த சுற்றுலாத் துறை ஆகிய விருதுகளைப் பெற்றது. இந்திய சுற்றுலாக்களை மேலாண்மை செய்ய இந்திய சுற்றுலாக் கழகம் -- India Toursim Development Corporation, Delhi -- என்ற பொதுத்துறை நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. "
Q12. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் -- MINISTRY OF RURAL DEVELOPMENT:
"நம் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் கிராமப்புறத்தில் வசிக்கிறது. இந்நிலையில் கிராமப்புற மேம்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைச்சகம். இதன் கீழ் இரண்டு துறைகள்
1. கிராமப்புற மேம்பாடு 2. நில வளம் இயங்குகின்றன.
இந்த அமைச்சகத்தின் முக்கிய குறிக்கோள், கிராமப்புற மக்களின் பொருளாதார சமூக முன்னேற்றம், முக்கியமாக விவசாய உற்பத்தி, வேலை வாய்ப்பு, உணவு பாதுகாப்பு, போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் வெவ்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும், கிராமப்புற மேம்பாடு சார்ந்த கல்வி திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்காகவும் பல அமைப்புகள் இயங்குகின்றன. அவை: "
Q13. கிராமப்புற மேம்பாட்டு அமைப்புகள் -- RURAL INSTITUTIONS:
1. கிராமப்புற மேலாண்மை மையம் -- 1990 -- கோட்டயம் -- கேரளா
"2. காந்திக்ராம் கிராமப்புற பல்கலைக்கழகம் -- 1956 -- மதுரை மாவட்டம், தமிழ்நாடு -- மகாத்மா காந்திஜியின் கிராமப்புற பொருளாதார கொள்கையின் அடிப்படையில் [“Nai Talim”] துவங்கப்பட்டது. கிராமப்புற மேலாண்மையில் பல்வகை கல்வியும் பயிற்சியும் அளிக்கிறது. "
"3. கிராமப்புற மேலாண்மை கல்வி நிறுவனம் -- 1979 -- ஆனந்த், குஜராத் -- கிராமப்புற மேலாண்மை கல்வியும், கிராமப்புற நிறுவனங்களை தொழில் ரீதியான மேலாண்மை செய்ய உதவுகிறது."
"4. தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி -- National Bank for Agriculture & Rural Development: 1982-- NABARD – மும்பை. சிவராமன் குழு பரிந்துரையின் பேரில் துவங்கப்பட்ட இந்த வங்கி, கிராமப்புற விவசாய மேம்பாட்டுக்கு தேவையான் கடன் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துகிறது. "
"5. தேசிய கிராமப்புற மேம்பாட்டு கல்வி நிறுவனம் -- National Institute of Rural Development: ராஜேந்திரநகர், ஹைதராபாத் "
"6. மண்டல் கிராமப்புற வங்கிகள் -- Regional Rural Banks: 1975 – கிராமப்புற விவசாயக் கடனுதவி -- இவ்வகையில் நம் நாட்டில் சுமார் 14450 வங்கிகள் இயங்குகின்றன. இந்த வங்கிகளுக்கான முதலீட்டை 50:15:35 -- மத்திய, மாநில மற்றும் தீர்வு செய்யப்பட்ட தேசிய வங்கிகள் செய்கின்றன."
Q14. நலத்திட்டங்கள் -- WELFARE MEASURES:
"1. அடல் ஓய்வூதிய திட்டம் -- Atal Pension Yojana -- நிதி அமைச்சகத்தால் மே 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வராத பிரிவு தொழிலாளருக்கு ஓய்வுதிய வசதி ஏற்படுத்தும் ஒரு திட்டம். "
"2. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் -- Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA): ஆகஸ்ட் 2005ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற பகுதிகளில் குறைந்த பட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பளிக்கப்படுகிறது. "
"3. தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் -- National Rural Livelihood Mission: ஜூன் 2011ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பழங்குடியினர் அதிகம் வாழ் பகுதிகளில் சுய உதவிக்குழுக்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. "
"4. ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வரோஜ்கார் திட்டம் -- Swarna Jayanthi Gram Swarozgar Yojana: சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் திட்டம். "
"5. சம்பூர்ண க்ராமீன் ரோஜ்கார் யோஜனா -- Sampoorna Grameen Rozgaar Yojana: செப்டம்பர் 2001ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் மூலம் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. மத்திய மாநில அரசாங்கங்கள் 75:25 விகிதத்தில் நிதி முதலீடு செய்யப்படுகிறது. "
"6. பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாடு திட்டம் -- Pradhan Mantri Grama Sadak Yojana - 2000ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் சாலைத்தொடர்பு ஏற்படுத்தும் திட்டம்."
"7. சப்லா -- SABLA – ராஜீவ் காந்தி பருவமங்கையர்களின் நலத்திட்டம் -- Rajiv Gandhi Scheme for Adolescent Girls: நவம்பர் 2010ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 11 முதல் 18 வயதுக்குள்ளான பெண்களுக்கு, சுமார் 200 பின் தங்கிய மாவட்டங்களில், ஊட்டச்சத்து மற்றும் சுய வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கும் திட்டம். "
"8. சுய நிதி உதவி குழுக்கள் -- Self Help Groups: கிராமப்புறங்களில் 10 முதல் 20 பெண்கள் கொண்ட ஒரு சுய நிதி உதவிக் குழுக்கள். இந்த குழுக்கள் அந்தந்த ஊர்களில் உள்ள வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, சிறு நிதி உதவிப் பெற்று சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு திட்டம். "
"9. இந்திரா ஆவாஸ் திட்டம் -- ndra Awaas Yojana: 1985ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்கள் தங்கள் வீடுகளை தாங்களே கட்டிக்கொள்ள நிதி உதவி செய்யும் ஒரு திட்டம். மத்திய மற்றும் மாநில அரசுகள் 75:25 விகிதத்திலும், வடகிழக்கு மாகாணங்களில் 90:10 விகிதத்திலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. "
"10. ஜவஹர்லால் நேரு தேசிய ஊரக புதுப்பித்தல் திட்டம் -- Jawaharlal Nehru National Urban Renewal Mission – 2005ல் துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம். "
"11.தீன் தயாள் உபாத்யாய கிராம ஜோதி திட்டம் -- Deen Dayal Upadhyaaya Gram Jyoti Yojana -- 2015ல் மின் துறை அமைச்சகத்தால் துவங்கப்பட்ட இந்த திட்டம் கிராமப்புறங்களில் மின் வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. "
"12.டிஜிட்டல் இந்தியா திட்டம் -- Digital India Programme -- ஜூலை 2015ல் தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலம், கிராமப் புறங்களையம் கணினி மற்றும் இணையதளம் மூலம் நாட்டு நடப்புடன் இணைக்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்."
"13.ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டம் -- Integrated Child Development Programme -- ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் நோய் தடுப்பு திட்டம். 1975ல் மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம். "
"14.ஜனனி சுரக்ஷா திட்டம் -- Janani Suraksha Yojana -- 2005ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தை பிறப்பு செலவுக்காக ஒரு முறை நிதி உதவி திட்டம். "
"15.கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா -- Kasturba Gandhi Balika Vidyalaya -- ஜூலை 2004ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் கல்வியில் பின் தங்கியுள்ள பகுதிகளில், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இன இளைஞர்களின் கல்வி மேம்பாட்டு பயன் அளிக்கப்படுகிறது. "
"16.பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் -- Members of Parliament Local Area Development Programme -- 1993ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அந்தந்த தொகுதி மேம்பாடுகளை மேற்கொள்ள உதவும் திட்டம். "
"17. மதிய உணவுத் திட்டம் -- Midday Meal Scheme -- 1995ல் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் அரசாங்க பள்ளிகள் அனைத்திலும் மாணவர்களுக்கு சத்தான மதிய உணவு வழங்கப்படும். "
"18.தேசிய கல்வியறிவு மேம்பாட்டு திட்டம் -- National Literacy Mission Programme -- 1988ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 15 முதல் 35 வயதுக்குள்ளானவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் ஒரு திட்டம். "
"19.பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா -- Pradhan Mantri Suraksha Bima Yojana -- மே 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் ரூ.12/- வருடாந்திர தவணைத் தொகையில் விபத்துக் காப்பீடு திட்டம். "
"20.பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா -- Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana -- மே 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.330/- தவணைத் தொகையில் ரூ.2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு அளிக்கப்படுகிறது. "
Q15. வெளியுறவுத்துறை அமைச்சகம் -- MINISTRY OF EXTERNAL AFFAIRS:
"இந்த அமைச்சகத்தின் முக்கிய பணி, வெளிநாடுகளுடன் நல்லுறவு, வெளிநாடு செல்லும் அனுமதி, வெளிநாட்டினர் நம்நாட்டுக்கு வருவதற்கு அனுமதி, ஹஜ் யாத்திரை போன்றவையாகும். "
Q16. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் -- MINISTRY OF SOCIAL JUSTICE AND EMPOWERMENT:
"ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பின் தங்கிய, பழங்குடி இன, உடல் ஊனமுற்றோர், முதியோர் ஆகியவர்களுக்கு சமூக நீதி கிடைக்கவும், மற்றும் அதிகார மேம்பாடு பெறவும் ஏற்படுத்தப்பட்ட அமைச்சகம். "
Q17. இந்திய சிறப்பு அடையாள அட்டை வழங்கும் ஆணையம் -- UNIQUE IDENTIFICATION AUTHORITY of INDIA:
"2009ல் உருவாக்கப்பட்டு, திட்டக்குழுவின் கீழ் இயங்கிய ஒரு அமைப்பு. இந்தியர்கள் அனைவருக்கும் 12 இலக்கு கொண்ட ஒரு அடையாள அட்டை வழங்க உருவாக்கப்பட்ட அமைப்பு. தற்சமயம் இது நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. 2016 நிலையில் சுமார் 100 கோடி மக்கள் இந்த வசதியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அடையாள அட்டையை பெற்ற முதல் கிராமம் -- தெம்ப்ளி, நந்தூர்பார், மகாராஷ்டிரா. முதல் அட்டையை பெற்றவர் இந்த கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா சோனாவானே."