Khub.info Learn TNPSC exam and online pratice

பொது கேள்விகள் -- GENERAL QUESTIONS

Q1. தேசிய எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு தலைமையகம் எங்குள்ளது?
புதுடெல்லி -- 1992.

Q2. இந்திய மருத்துவ கழகம் எப்போது உருவாக்கப்பட்டது?
புது டெல்லி -- 1934
Q3. நம் நாட்டின் பல் மருத்துவ கல்வியை நிர்வகிக்கும் அமைப்பு எது?
இந்திய பல் மருத்துவ கழகம் -- 1948 -- டெல்லி.
Q4. நம் நாட்டின் மருந்து சார்ந்த கல்வியை நிர்வகிக்கும் அமைப்பு எது?
இந்திய மருந்து கழகம் - 1948/49 – டெல்லி.
Q5. நம் நாட்டின் செவிலியர் கல்வியை/தொழிலை நிர்வகிக்கும் அமைப்பு எது?
இந்திய செவிலியர் கழகம். – 1947 -- டெல்லி.
Q6. நம் நாட்டின் புகழ் பெற்ற அகில இந்திய பேச்சு மற்றும் கேள்வித் திறன் கல்விமையம் எங்குள்ளது?
மானசகங்கோத்ரி, மைசூரு, கர்நாடகம் – 1966.
Q7. மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?
லக்னௌ – 1951
Q8. மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய நிறுவனம் எங்குள்ளது?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் -- 1911 -- டெல்லி
Q9. சுற்றுலாத்துறையின் கீழ் அமைந்துள்ள புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனம் எது?
இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் -- 1966 – அசோகா குழும தங்கும் விடுதிகள் இந்த நிறுவனத்துக்கு சொந்தமானது.
Q10. கிராமப்புற மேலாண்மைக்கு அமைக்கப்பட்டுள்ள மத்திய கல்வி அமைப்பு எது?
கோட்டயம், கேரளா -- 1990
Q11. "மகாத்மா காந்தியின் எந்த பொருளாதார கொள்கையின் அடிப்படையில் காந்திகிராம கிராமப்புற கல்வி அமைப்பு மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது? "
" “Nai Talim” ""நாய் தலிம்"" -- ஆன்மீகம் கலந்த பொருளாதார கொள்கை -- இதன் அடிப்படையில், அறிவும் தொழிலும் தனித்தனி அல்ல என்பதே. காந்திகிராம கிராமப்புற பல்கலைக்கழகம் 1956ல் நிறுவப்பட்டது. "
Q12. தேசிய கிராமப்புற மேம்பாட்டு கல்விமையம் எங்குள்ளது?
ராஜேந்திர நகர், ஹைதராபாத்
Q13. மண்டல கிராம வங்கிகள் என்பது எப்போது தொடங்கப்பட்டது?
" 1975 -- கிராமப்புற சிறு அளவிலான விவசாயிகள், சுய தொழிலாளிகள் போன்றவர்களுக்கு சிறு அளவிலான கடனுதவி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இவ்வகையில் சுமார் 14450 வங்கிகள் இயங்குகின்றன. இவை NABARD என்ற அமைப்பின் கீழ் இயங்குகின்றன."
Q14. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்பது என்ன?
"கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்கும் ஒரு வகையாக ஒரு குடும்பத்தில் விருப்பப்படும் ஒருவருக்கு வருடத்தில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி அளிக்கும் ஒரு திட்டம். "
Q15. சம்பூர்ண கிராம ரோஸ்கார் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
செப்டம்பர் 2001.
Q16. பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் என்பது என்ன?
"சாலைத்தொடர்பு இல்லாத கிராமப்புற பகுதிகளில் எல்லா காலங்களுக்கும் ஏற்ற சாலை வசதி ஏற்படுத்துவது. 2000ல் அறிமுகப்படுத்தப்பட்டது. "
Q17. பருவப்பெண்கள் மேம்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது?
SABLA –ராஜீவ் காந்தி பருவப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் -- நவம்பர் 2010.
Q18. "கிராமப்புற பகுதிகளில் ஏழைகள் தாங்களாகவே சொந்த வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி அளிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டம் எது? "
இந்திரா ஆவாஸ் யோஜனா -- 1985
Q19. நகர்ப்புற கட்டுமான வசதிகளை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் எது?
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பிக்கும் திட்டம் -- 2005.
Q20. ஹஜ் யாத்திரைகளை நிர்வகிக்கும் அமைச்சகம் எது?
வெளியுறவுத்துறை அமைச்சகம்.
Q21. இந்திய சிறப்பு அடையாள அட்டை வழங்கும் நிறுவனம் எப்போது உருவாக்கப்பட்டது?
பிப்ரவரி 2009.
Q22. மக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு அடையாள அட்டையின் பெயர் என்ன?
ஆதார்