Khub.info Learn TNPSC exam and online pratice

விளையாட்டு பொது கேள்விகள்:

Q1. சைனீஸ் செக்கர் போர்டு பலகையில் மொத்தம் எத்தனை குழிகள் இருக்கும்?
121

Q2. TOBOGANNISING என்ற தொடர் எந்த விளையாட்டுடன் சம்பந்தப்பட்டது?
பனிச்சறுக்கு -- SKIING
Q3. சீட்டு விளையாட்டை (CARDS) கண்டு பிடித்தவர்கள் யார்?
சீனா.
Q4. ஆங்கில கால்வாயை (English Channel) நீந்திக் கடந்த முதல் இந்திய வீரர் யார்?
மிஹிர் சென்.
Q5. "SCRABBLE" என்ற விளையாட்டைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜேம்ஸ் ப்ரூனாட் -- அமெரிக்கா - 1949.
Q6. "காது கேளாமை, பார்வைதிறன் குறைவுடன் கூறிய ஒரு இந்திய வீரர் ஜிப்ரால்டர் கால்வாயை கடந்த முதல் வீரர். அவர் யார்?"
தாராநாத் ஷெனாய் -- இந்தியா - 1984ல்
Q7. ஃபார்முலா 1 கார் ஓட்டப்பந்தய "ஃபெராரி -- Ferrari" அணி எந்த தரை தானூர்தி நிறுவனத்துக்கு சொந்தமானது?
ஃபியட் -- Fiat.
Q8. ஜெஸ்ஸி ஓவன்ஸ் (அமெரிக்கா) முன்னாள் உலகப்புகழ் பெற்ற தடகள வீரர். அவரது துயர பின்னணி என்ன?
அவர் ஒரு கருப்பு இன அடிமையின் பேரன்.
Q9. ஆங்கில கால்வாயை -- English Channel -- நீந்திக் கடந்த முதல் பெண்மணி வீரர் யார்?
கெர்ட்ரூட் கரோலின் எடெர்லி -- அமெரிக்கா.
Q10. குங்ஃபூ கலையின் பிறப்பிடம் எது?
ஷாவோலின் புத்த மடம், சீனா.
Q11. "விஜய்பத் சிங்கானியா இந்தியாவின் புகழ் பெற்ற தொழிலதிபர் (ரேமாண்ட் குழுமம்). விளையாட்டில் இவர் பதித்துள்ள உலக சாதனை என்ன?"
"2005ல் வெப்பக்காற்று நிறைந்த பலூனில் (Hot Air Balloon) 21290 மீ உயரத்தில் ஆகாயத்தில் பறந்து சாதனை படைத்து உள்ளார். இச்சாதனை இன்று வரை நிலைத்திருக்கிறது."
Q12. இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற கார் ரேஸ் பந்தய வீரர் யார்?
நாராயண் கார்த்திகேயன்.
Q13. ஆங்கில கால்வாயை நீந்த்க் கடந்த முதல் இந்திய பெண்மணி யார்?
ஆரத்தி சாஹா - மேற்கு வங்காளம் -- 1959ல் இந்த சாதனையைப் படைத்தார்.
Q14. """பறக்கும் சிங் -- FLYING SIKH "" - என்று அன்பாக அழைக்கப்படும் இந்திய முன்னாள் தடகள வீரர் யார்? அவருடைய சாதனை என்ன?"
"மில்கா சிங். 1960 ரோம் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 4 வது இடம் பெற்றார். இவருடைய மகன் ஜீவ் மில்கா சிங் உலகத்தரம் வாய்ந்த கோல்ஃப் விளையாட்டு வீரர். "
Q15. இந்தியாவின் புகழ் பெற்ற பெண் தடகள வீரங்கனை யார்? அவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? அவர் சாதனை என்ன?
"P.T. உஷா.
(P=Pilavullakandi; T = Thekke Parambil) -- PAYYOLI EXPRESS, GOLDEN GIRL, QUEEN OF INDIAN TRACK & FIELD., ஆகிய அன்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். 1984 லாஸ் ஏஞ்ஜெல்ஸ் ஒலிம்பிக்கில் 1/100 வினாடி வித்தியாசத்தில், 400 மீ ஓட்டத்தில் வெண்கல பதக்கம் பெற தவறினார். (4வது இடம்)."
Q16. SPRINGBOKS என அழைக்கப்படுவது இந்த நாட்டு விளையாட்டு அணி?
தென் ஆப்பிரிக்காவின் ரக்பி (Rugby) விளையாட்டு அணி.
Q17. RUBIK'S CUBE -- கை விளையாட்டுப் பொறுளில் எத்தனை வண்ணம் உள்ளது?
ஆறு -- மஞ்சள், பச்சை, சகப்பு, நீலம், இளஞ்சிவப்பு, வெள்ளை.
Q18. பாப் பீமோன் (Bob Beamon) அமெரிக்கா, புகழ் பெற்ற நீளம் தாண்டுதல் வீரர். இவருடைய புத்தகத்தின் பெயர் என்ன?
"THE PERFECT JUMP -- 1968 மெக்ஸிகோ ஒலிம்பிக்கில் இவர் படைத்த நீளம் தாண்டுதல் சாதனை - 8.90 மீ - 22 வருடங்கள், 316 நாட்களுக்குப் பிறகு முறியடிக்கப்பட்டது. முறியடித்தவர் மைக் பவெல் - அமெரிக்கா - 8.95 மீ."
Q19. எல்லா விளையாட்டு போட்டிகளுக்கும் பிறந்த நாளாக கருதப்படுவது எந்த தேதி ?
ஜனவரி 1.
Q20. "BERMUDA BOWL" எந்த விளையாட்டுக்கு அளிக்கப்படும் பரிசு?
BRIDGE எனப்படும் சீட்டு விளையாட்டு.
Q21. "LONG JENNY, SHORT JENNY" ஆகிய ஆங்கில தொடர்கள் எந்த விளையாட்டுடன் சம்பந்தப்பட்டது?
பில்லியார்ட்ஸ்.
Q22. குதிரை ஓட்டப்பந்தயத்தில், ஓடுவதற்கு தயாராக நிறுத்தப்பட்டு விடுவிக்கப்படும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
STALLS.
Q23. "CHEQUERED FLAG" -- இத்தொடர் எந்த விளையாட்டுடன் சம்பந்தப்பட்டது?
"கார் மற்றும் இரு சக்கர தானியங்கி வாகனங்களின் முடிவில், முதல் வீரர் முடிவைத் தாண்டும் போது காண்பிக்கப்படும் கொடி.
(கருப்பு வெள்ளை சதுரங்கள் அடங்கியது). "
Q24. "ஃபார்முலா 1 மற்றும் இரு சக்கர வாகனங்கள், போட்டியின் போது, எண்ணெய் போடுவதற்கோ, அல்லது பழுது பார்ப்பதற்கோ ஒதுங்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?"
PITS.
Q25. ஃபார்முலா 1 கார் ஓட்டப் பந்தயத்தை அதிக முறை வென்றவர் யார்?
மைக்கேல் ஷூமேக்கர் - ஜெர்மனி.
Q26. "ஸ்நூக்கர் விளையாட்டில் அதிகப்படியான 147 புள்ளிகளை மிகக்குறைந்த நேரத்தில் பெற்று சாதனை படைத்துள்ளவர் யார்?"
ரானி சுல்லிவான் -- இங்கிலாந்து -- 5 நிமிடம் 20 விநாடிகளில் எடுத்து முடித்துள்ளார்.
Q27. "SCRABBLE" விளையாட்டில் "DOUBLE WORD" கட்டங்கள் எத்தனை உள்ளன?
17
Q28. சீட்டுக்கட்டில் உள்ள நான்கு ராஜா சீட்டில் ஒரு ராஜாவுக்கு மீசை இருக்காது. அது எது?
KING OF HEARTS
Q29. சீட்டுக்கட்டில் உள்ள நான்கு ராஜா சீட்டுகளுக்கும் மன்னர்கள் பெயருண்டு. அவை யாவை?
"KING OF SPADE ---- டேவிட்
KING OF HEARTS ------ சார்லஸ்
KING OF DIAMOND ------ சீஸர்
KING OF CLOVER ---- அலெக்ஸாண்டர்."
Q30. சீட்டுக்கட்டில், எந்த ராணி சீட்டு BLACK LADY என அழைக்கப்படுகிறது?
QUEEN OF SPADES
Q31. எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்தியப் பெண்மணி யார்?
பச்சேந்திரி பால் -- உத்தராகாண்ட் -- 23.5.1984 அன்று இந்த சாதனையை படைத்தார்.
Q32. மனிதனால் நிலவில் விளையாடப்பட்ட (முதல்) விளையாட்டு எது?
கோல்ஃப் -- விளையாடியவர் ஆலன் ஷெப்பர்டு - அமெரிக்க விண்வெளி வீரர் -- 6.2.1971 அன்று.
Q33. ஆங்கில கால்வாயை நீந்திய முதல் மனிதர் யார்?
மேத்யூ வெப் -- இங்கிலாந்து -- எந்த உதவி சாதனமுமின்றி நீந்தியவர்.
Q34. "2008 ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடந்தது. ஆனால் ஒரு போட்டி மட்டும் வேறு நகரில் நடந்தது. அது என்ன?"
"ஈக்வெஸ்ட்ரியன் (Equestrian) என்ற ஒரு வகை குதிரைப் போட்டி ஹாங்காங் நகரில் நடத்தப்பட்டது.. காரணம், பெய்ஜிங் நகரின் சீதோஷ்ண நிலை குதிரைகளுக்கு ஏற்றதாக இல்லாததால். "
Q35. "2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இரானிய ஜூடோ வீரர் ஒருவர், தனது எதிர் வீரர் ஒருவருடன் போட்டி போடாமல் விலகியதற்காக, இரான் நாட்டு அரசு அவருக்கு 1.25 லட்சம் அமெரிக்க டாலர் பரிசளித்தது. பின்னணி என்ன?"
"அராஸ் மிரெஸ்மெய்லி என்ற இரானிய ஜூடோ வீரர் தனக்கு எதிராளி இஸ்ரேல் வீரர் எஹூத் வாக்ஸ் என்பவருடன் போட்டி போடுவதை தவிர்த்தார். காரணம், இஸ்ரேல், பாலஸ்தீனிய மக்களுக்கு இழைக்கும் கொடுமையை எதிர்த்து இந்த முடிவு எடுத்தார்."
Q36. "உலகின் மிகவும் புகழ் பெற்ற தடகள வீரர் பிழைப்புக்காக, குதிரைகளுக்கும், நாய்களுக்கும் எதிராக ஓடி சம்பாதித்தார். அவர் யார்?"
ஜெஸ்ஸி ஓவன்ஸ், அமெரிக்கா.
Q37. அட்லாண்டிக் சிட்டி மராத்தன் என்பது …….
ஒரு நீச்சல் போட்டி.
Q38. "மலை ஏறும் வீரர்கள் கையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு நீண்ட கொம்பு எடுத்துச் செல்வர். அதன் பெயர் என்ன?"
ALPENSTOCK
Q39. எந்த விளையாட்டில் ஒரு வீரர் இடதுகையால் விளையாட மறுக்கப்படுகிறார்?
போலோ.
Q40. சீட்டுக்கட்டில் உள்ள எந்த ராஜா " தற்கொலை ராஜா - SUICIDE KING " என அழைக்கப்படுகிறார்?
KING OF HEARTS
Q41. RUBIK'S CUBEஐ கண்டுபிடித்தவர் யார்?
எர்னோ ரூபிக் -- ஹங்கேரி -- சிற்பி -- 1974ல்.
Q42. உலகப் புகழ்பெற்ற அமெரிக்க தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் எந்த சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்?
EBONY EXPRESS
Q43. THE EAGLES என்றழைக்கப்படுவது எந்த நாட்டு ரக்பி அணி?
அமெரிக்கா.
Q44. FLYING FINN என்றழைக்கப்படும் புகழ் பெற்ற தடகள வீரர் யார்?
"PAAVO NURMI -- பாவோ நுர்மி -- ஃபின்லாந்து -- 1920, 1924 ஒலிம்பிக் போட்டிகளில் வெகு தூர ஓட்ட பந்தயங்களில் 9 ஒலிம்பிக் தங்க பதக்கங்கள் வென்றவர் "
Q45. "பரமபதம்" எனப்படும் "SNAKES AND LADDERS" விளையாட்டைக் கண்டுபிடித்தவர் யார்?
GYAN DEV -- க்யான் தேவ் என்ற 13ம் நூற்றாண்டு கவிஞர். முன்பு இந்த விளையாட்டை "மோட்சத்தின் வழி" என்றழைத்தனர்.
Q46. "புற்று நோயாளி, 7 முறை TOUR DE FRANCE -- ஃப்ரான்ஸ் சுற்றுலா சைக்கிள் போட்டி வெற்றியாளர், ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக அனைத்து வெற்றிகளையும் இழந்தவர். இவர் யார்?"
லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் -- அமெரிக்கர்.
Q47. உலகின் பழமையான விளையாட்டு பரிசு எது?
அமெரிக்காவில் 1851 முதல் நடத்தப்படும் படகுப் போட்டிக்காக வழங்கப்படும் "அமெரிக்கா கோப்பை".
Q48. SCRABBLE விளையாட்டு பலகையில் எத்தனை கட்டங்கள் உள்ளன?
225
Q49. விளையாட்டு போட்டிகளின் வானொலி வர்ணனை எப்போது தொடங்கியது?
1898ல் இங்கிலாந்தில் நடந்த ஒரு படகுப்போட்டி முதன் முதலாக வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
Q50. "மின் உதவியால் ஒரு விளையாட்டுப் போட்டியின் முடிவு, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செய்தி அனுப்பப்பட்டது?"
"1871ல் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடந்த டெர்பி குதிரைப்பந்தய முடிவுகள், கொல்கத்தாவுக்கு 5 நிமிடங்களில் வந்தடைந்தது."
Q51. ஒவ்வொரு கோல் போட்ட பிறகும், அணிகள் ஆடுகளப்பகுதி மாற்றம் செய்ய வேண்டும். எந்த விளையாட்டில்?
போலோ.
Q52. எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் ஆப்பிரிக்க கருப்பு இன வீரர் யார்?
சிபுசிஸோ விலானே -- SIBUSSISSO VILANE -- தென் ஆப்பிரிக்கா -- 2003.
Q53. "பேஸ்பால் மற்றும் கால்பந்து போட்டிகளில், ஒரு அணியால் நிராகரிக்கப்பட்ட போட்டி, எதிர் அணிக்கு எந்த புள்ளிக் கணக்கில் வெற்றி அறிவிக்கப்படுகிறது?"
பேஸ்பால் -- 9 - 0; கால்பந்து -- 1 - 0.
Q54. "இந்தியாவிலிருந்து சென்று, இந்தியாவுக்காக அல்லாமல், ஒலிம்பிக்கில் பங்கேற்று, இரண்டு வெள்ளி பதக்கங்கள் வென்றவர் யார்?"
"நார்மன் பிச்சர்டு -- 1900 பாரீஸ் ஒலிம்பிக் -- ஒலிம்பிக் ஆவணங்களில், இவர் இங்கிலாந்துக்காக பங்கு பெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் இவருடைய வெற்றிகளை இந்திய கணக்கில் சேர்த்து உள்ளது. (1877ல் கொல்கத்தாவில் பிறந்தவர்.)"
Q55. காமன்வெல்த் போட்டிகளில் சிறந்த வீரருக்கு அளிக்கப்படும் விருது யாது?
டேவிட் நிக்ஸன் விருது
Q56. பனி ஹாக்கியின் கோல் கொம்புகளின் இடைவெளி எவ்வளவு?
ஆறு அடி.
Q57. சுமோ மல்யுத்தப் போட்டி நடுவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
GYOGI
Q58. லாரியஸ் விளையாட்டு விருதுக் குழுவில் ஒரு நடுவராக இருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் யார்?
கேப்டன்
Q59. போலோ விளையாட்டு அணி ஒன்றில் எத்தனை குதிரைகள் (வீரர்கள்) இருக்கும்?
நான்கு
Q60. "எந்த தற்காப்பு கலைப்போட்டி துவங்குவதற்கு முன், அந்நாட்டின் பாரம்பரிய கலை நாட்டியத்தை, போட்டியிடும் வீரர்கள் ஆடவேண்டும் என்பது ஒரு வழக்கம்?"
தாய்லாந்து நாட்டின் முவா தாய் போட்டி.
Q61. "கார் ஓட்டப்பந்தயங்களில், போட்டி துவங்கும் மு, கார்களை வரிசைப்படுத்தி நிறுத்தும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?"
THE GRID
Q62. எந்த வருடம் கோடை மற்றும் குளிர் ஒலிம்பிக் போட்டிகள் ஒரே வருடத்தில் நடந்தது?
1992ல்.
Q63. OCTOPUSH என்பது எவ்வகை விளையாட்டு?
நீருக்குள் ஹாக்கி விளையாடுவது.
Q64. இந்தியாவின் தங்க மங்கை P.T. உஷாவின் பயிற்சியாளராக இருந்தவர் யார்?
O M நம்பியார்.
Q65. ஃபார்முலா 1 கார் ஓட்டப் பந்தயத்தில் பங்கு கொண்ட முதல் கருப்பு இன வீரர் யார்?
லூயிஸ் ஹேமில்டன் -- இங்கிலாந்து.
Q66. "ஸ்பெயின் நாட்டின் புகழ் பெற்ற எருதுச்சண்டை BULL FIGHT ல் பங்கு பெறும் வீரர்கள் எவ்வாறு அழைக்கப் படுகிறார்கள்? "
MATADOR -- மேட்டடார்.
Q67. "ஸ்பெயின் நாட்டு எருதுச்சண்டை வீரர்கள், களமிறங்கும் முன், ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானியை வணங்கிச் செல்கிறார்கள். அவர் யார்?"
"அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் -- இவர் கண்டு பிடித்த கிருமி நாசினி மருந்தான ""பெனிசிலின் - Penicillin "" மருந்தினால் பல வீரர்கள் காயத்திலிருந்து காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள்."
Q68. சுமோ மல்யுத்தப் போட்டி வீரர்களின் தரவரிசைப் பட்டியல் படி உயர்ந்த பட்டம் எது?
YOKOZUNA - GRAND CHAMPION.
Q69. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை யார்?
"கமல்ஜித் சிங் சாந்து -- 1970 -- பாங்காங் --400 மீ. ஒலிம்பிக் தடகளப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தகுதிப் பெற்ற முதல் வீராங்கனையும் இவரே. (1972 - முனிச் ஒலிம்பிக் -- 400 மீட்டர்)."
Q70. உடற்கட்டுமானப் போட்டி -- BODY BUILDING - ல் Mr.OLYMPIA என்ற உயரிய பட்டத்தை அதிக முறை வென்ற வீரர் யார்?
லீ ஹேனி -- LEE HANEY -- மற்றும் ரானி கோல்மேன் RONIE COLEMAN -- இருவரும் அமெரிக்கர்கள் -- 8 முறை.
Q71. "1911ல் தொடங்கப்பட்ட ஒரு விளையாட்டு கோப்பையில், வென்றவர்கள் அனைவரின் முகமும் பொறிக்கப்படுகிறது. அது எது?"
"போர்க்-வார்னர் கோப்பை -- BORG WARNER TROPHY -- INDY 500 என்ற கார் ஓட்ட பந்தயத்தில். இந்த கோப்பையின் மற்றொரு பிரத்தியேகம் என்னவென்றால், ஒரு ஆடையில்லா மனிதன் போட்டி முடிவுக் கொடியை அசைப்பது போல (CHEQUERED FLAG) ஒரு சித்திரம் பொறிக்கப்பட்டிருக்கும்."
Q72. விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் வெற்றிக் கோப்பையின் -- VENUS ROSEWATER DISH -- பிரத்தியேகம் என்ன?
"வெள்ளியால் செய்யப்பட்ட தட்டு. இதன் விளிம்புகளிலும் (முக்கியமாக) இதர பகுதிகளிலும், ரோமர் பெண் கடவுள் வீனஸ் உருவமும், கணிதம், ஜோதிடம், வடிவியல், இலக்கணம், இசை ஆகியவற்றின் குறியீடுகளும், ஒரு சிறிய சொற்பொழிவு மற்றும் பல உபயோகப் பொருட்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் முதல் (அசல்) வடிவமைப்பு லாவ்ரே அருங்காட்சியகம், பாரீஸ் ல் வைக்கப்பட்டுள்ளது."
Q73. "இங்கிலாந்து-ஸ்காட்லாந்து நாடுகளுக்கு இடையில் நடக்கும் ரக்பி போட்டிக்கு, ஒரு இந்திய நகரத்தின் பெயர் கொண்ட கோப்பை பரசளிக்கப்படுகிறது. அது என்ன, அதன் பின்னணி என்ன?"
"கல்கத்தா கோப்பை -- CALCUTTA CUP -- 1873-1877களில் கல்கத்தாவில் இயங்கி வந்த கல்கத்தா கால்பந்து குழு - CALCUTTA FOOTBAAL CLUB -- மூடப்பட்ட போது மிச்சமிருந்த தொகைக்கு இணையான வெள்ளி நாணயங்கள் பெறப்பட்டு, அதில் செய்யப்பட்ட கோப்பை இது. இந்தக் கோப்பை உயரவாக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பிரத்தியேகம் என்னவென்றால் இதன் மூன்று கைப்பிடிகளும் ஒரு கருநாகம் படமெடுத்த நிலையில் இருக்கும், மேலும் கோப்பையின் உச்சியில் ஒரு முழு உருவ யானை சிற்பமும், மற்றும் பல சிற்ப வேலைகளும் பொறிக்கப்பட்டிருக்கும்."
Q74. "NIKE விளையாட்டு பொருள் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனம். இதை நிறுவியவர்கள் யார்?"
"ஃபில் நைட் PHIL KNIGHT மற்றும் பில் பவர்மேன் BILL BOWERMAN -- 25.1.1964 - ஒரேகான், அமெரிக்கா வில் தலைமையகம். ஆரம்பத்தில் BLUE RIBBON SPORTS எனத் தொடங்கி, 1971ல் NIKE என பெயர் மாற்றம் பெற்றது. (NIKE - ரோமர் வெற்றிக் கடவுள்) "
Q75. BLEDISLOE CUP - எந்த விளையாட்டுக்கு அளிக்கப்படுகிறது?
"ஆஸ்திரேலியா--நியூசிலாந்துக்கு இடையே நடக்கும் ரக்பி போட்டி வெற்றியாளருக்கு 1931 முதல் அளிக்கப்படும் விருது. நியூசிலாந்து கவர்னர் ஜெனரல் ப்ளெடிஸ்லோ பிரபுவால் 1931ல் அளிக்கப்பட்டது."
Q76. "பேஸ் பால் ல் (Base Ball), ஹோம் ரன் (Home Run) (கிரிக்கெட்டில் சிக்ஸர் போல), விளையாட்டின் முக்கிய சுவாரஸ்யமான அங்கம். இதை அதிக முறை அடித்து சாதனை படைத்தவர் யார்?"
BARRY BONDS -- பேரி பாண்ட்ஸ் - அமெரிக்கா - 762 ஹோமெ ரன்கள்.
Q77. "ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று டார்ஜானாக நடித்த முதல் வீரர் - ஜானி வீஸ்முல்லர். இரண்டாவது யார்?"
பஸ்டர் க்ரேப் - BUSTER CRABBE -- அமெரிக்கா.
Q78. MADAME BUTTERFLY - என புகழப்படும் புகழ் பெற்ற நீச்சல் வீராங்கனை யார்?
"மேரி மீகர் -- Mary Meagher -- அமெரிக்கா. 1984 லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்கில் Butter Fly பிரிவில் 3 தங்கப் பதக்கங்கள் வென்றவர். "
Q79. "மைக்கேல் ஃபெல்ப்ஸ், அமெரிக்கா -- 2008 பெய்ஜிங், சீனா ஒலிம்பிக்கில், நீச்சல் போட்டிகளில், 8 பதக்கங்களை வென்று, யாருடைய முந்தைய சாதனையான 7 தங்க பதக்கங்களை முறியடித்தார்?"
மார்க் ஸ்பிட்ஸ் -- 7 தங்கம் -- 1972 முனிச் ஒலிம்பிக்.
Q80. நீச்சல் போட்டியில் ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் கருப்பு இன வீரர் யார்?
அந்தோனி நெஸ்டி -- சுரிநாம் -- 1988 சியோல் ஒலிம்பிக் - இவருடைய வெற்றியே அந்த நாட்டின் முதல் தங்கப்பதக்கம்.
Q81. 1996 உலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணி வீரர்களின் உடையை வடிவமைத்தவர் யார்?
சுனித் வர்மா.
Q82. "விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள்ின் முக்கிய நடுவராக பணி செய்து - LIFTING THE COVERS என்ற சுயசரிதையை எழுதியவர் யார்?"
ஆலன் மில்ஸ் -- இங்கிலாந்து.
Q83. "ஒரு டென்னிஸ் வீரர் பந்தை அடிக்க (Service) , எதிராளி எடுக்க முடியாமல் போக, பந்து நடுக்கோட்டு நடுவரின் முக்கிய பகுதியை தாக்க, அவர் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு இறந்த துயர சம்பவம் எப்போது நடந்தது?"
"செப்டம்பர் 10 - 1983 - ஸ்டெஃபான் எட்பர்க் (ஸ்வீடன்) அவரது எதிராளி சைமன் யூல் (ஆஸ்திரேலியா) வுக்கு எதிராக, அமெரிக்க ஓப்பன் இளைஞர் இறுதிப்போட்டியில், அடித்த சர்வீஸ், சைமன் யூல் எடுக்க முடியாமல், நடுக்கோட்டு நடுவர் ரிச்சர்டு விலெம் அவர்களின் முக்கிய பகுதியைத் தாக்கி, அவர் கீழே விழுந்து, மண்டையிலும் அடிபட்டு 5 நாட்களுக்குப் பிறகு இறந்தார். "
Q84. "1964 டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீராங்கனை ஒரு முயற்சியின் அடிப்படையில், விளையாட்டு வாழ்க்கை முடிவு பெற்றது. அவர் யார்?"
"டான் ஃப்ரேசர் - ஆஸ்திரேலியா. குற்றத்தின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு விளையாட்டிலிருந்து தடை செய்யப் பட்டார். "
Q85. நியூசிலாந்து ரக்பி அணி, ஒவ்வொரு போட்டிக்கும் முன்பாக, ஒரு பாரம்பரிய நடனம் ஆடுவார்கள். அது என்ன?
ஹக்கா (Haka) -- நியூசிலாந்து பழங்குடி இன மாவோரி மக்களின் நடனம்.
Q86. "உலகின் மிகப்புகழ் பெற்ற ஒரு விளையாட்டின் அசல் கோப்பை இருமுறை தொலைந்து (திருடப்பட்டு) இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது எது?"
"கால் பந்து விளையாட்டின் ஜூல்ஸ் ரிமெட் கோப்பை. சம்பவம் நடந்தது 1966, 1983. தற்போது உலகக்கோப்பை என வேறு வடிவத்தில் 1970 முதல் வழங்கப்படுகிறது."
Q87. சக்கர சறுக்குஉருளை உபகரணம் (Roller Skater) வடிவுப்பதிவு (Patent) செய்தவர் யார்?
ஜேம்ஸ் எல்.ப்ளிம்ப்பன் - அமெரிக்கா.
Q88. SUPER BOWL -- எந்த நாடு, விளையாட்டுடன் சம்பந்தப்பட்டது?
அமெரிக்கா -- அமெரிக்க விதி தேசிய கால்பந்து போட்டி.
Q89. ஆஸ்திரேலிய விதி கால்பந்து அணியில் எத்தனை வீரர்கள் இடம் பெற்றிருப்பார்கள்?
பதினெட்டு.
Q90. அமெரிக்க விதி கால்பந்து ஆடுகளத்தில் போடப்பட்டிருக்கும் இணை கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
THE GRID IRON (பொதுவாக THE GRID)
Q91. குறுக்கெழுத்து புதிர் - CROSSWORD PUZZLE -- கண்டுபிடித்தவர் யார்?
ஆர்த்தர் வின்னி -- ARTHUR WYNNE - அமெரிக்கா -- 1913.
Q92. "வேலண்டினோ ரோஸ்ஸி, இத்தாலி, உலகின் மிகப்புகழ் பெற்ற இரு சக்கர தானூர்தி போட்டி (Motor Cycle Racing). அவருடைய சாதனை என்ன?"
22 வயதில், 125, 250, 500 cc (cc = திறன்) போட்டிகளில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர்.
Q93. 110 மீ தடை ஓட்டத்தில் (hurdle ) முதல் தடை (hurdle ) எவ்வளவு தூரத்தில் நிறுத்தப்படுகிறது?
45 அடி.
Q94. KOLPAKS என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படும் விளையாட்டு வீரர்கள் யார்?
"இங்கிலாந்தின் கிரிக்கெட் மற்றும் ரக்பி விளையாட்டுகளில் உள்நாட்டு தொடர் போட்டிகளில் (League) விளையாடும் வெளிநாட்டு வீரர்கள். "
Q95. TUG OF WAR என்றழைக்கப்படும் "இழுபறி" போட்டியின் ஒரு பகுதியில் பொதுவாக எத்தனை பேர் பங்கு பெறுவர்?
எட்டு.
Q96. "உலகின் எந்த தொழில் ரீதியான விளையாட்டு போட்டி கோப்பையில், வெற்றி அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர்களின் பெயர்களும் பதிவு செய்யப்படுகிறது?"
ஸ்டான்லி கோப்பை -- அமெரிக்க தேசிய பனி ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி.
Q97. விளையாட்டு வீரர்கள், இடைவெளிகளில் வாழைப்பழம் உண்பதை பார்த்திருப்போம். காரணம் என்ன?
"விளையாட்டு உழைப்பினால் உடலில் ஏற்படும் பொட்டாசியம் குறைபாட்டை உடனடியாக ஈடுகட்டுவதற்காக. பொட்டாசியம் உடலின் பலவித இயக்கங்களுக்கு மிகவும் அவசியமானது."
Q98. உலகின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் எனக் கருதப்படுவது எது?
"ரங் ரேடோ மே முதல் தேதி அரங்கம் -- Rungrado 1st of May Stadium -- ப்யாங்யாங் - வட கொரியா. உண்மையிலேயே, ஸ்ட்ராகோவ் அரங்கம், ப்ரேக், செக் குடியரசு தான் பெரியது. ஆனால், இது தற்சமயம் விளையாட்டுப் போட்டிகளுக்கு பயன் படுத்தப்படுவதில்லை."
Q99. ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கு பெற தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை யார்?
2016 ஒலிம்பிக் -- தீபா கர்மாகர் -- அஸ்ஸாம்.
Q100. எந்த பலகை விளையாட்டில் (Board Game) 24 முக்கோண புள்ளிகள் (triangular points)
BACK GAMMON .
Q101. "2007 அக்டோபரில், ஒரு புகழ் பெற்ற ஒலிம்பிக் 5 தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை, தன்னுடைய பதக்கங்களை திருப்பி கொடுக்கும் நிலை ஏற்பட்டது. அவர் யார், என்ன காரணம்?"
மரியன் ஜோன்ஸ் - அமெரிக்கா -- ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்துக்காக.
Q102. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் யார்?
ரோஷன் மிஸ்திரி -- 1952 -- டெல்லி -- 100 மீட்டர் -- வெள்ளிப் பதக்கம்.
Q103. ஒலிம்பிக் மராத்தன் போட்டியில் தங்கம் வென்ற மூத்த வீராங்கனை யார்?
கான்ஸ்டாண்டினா டிட்டா -- ரொமானிய அமெரிக்கன் -- 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் -- 38 வயது.
Q104. SLASHING, HOOKING, BOARDING என்ற தொடர்கள் எந்த விளையாட்டுடன் சம்பந்தப்பட்டது?
பனி ஹாக்கி.
Q105. புகழ் பெற்ற இங்கிலாந்து கால்பந்து வீரர் ஜார்ஜ் பெஸ்ட் அவர்களின் சுய சரிதம் பெயர் என்ன?
BLESSED.
Q106. மராத்தன் தூரம் 42.195 கி.மீ என நிர்ணயிக்கப்பட காரணமாயிருந்தவர் யார்?
அலெக்ஸாண்ட்ரா மகாராணி - இங்கிலாந்து - 1908
Q107. CHAMPS ELYSEE பாரீஸ், ஃப்ரான்ஸ் என்ற இடத்தில் முடிவடையும், புகழ் பெற்ற போட்டி எது?
Tour De France சைக்கிள் ஓட்டப் பந்தயம்.
Q108. "ஒரு போட்டியில் வெற்றி பெற்ற ஒருவர் அதை கொண்டாடும் வகையில் ஒரு கோப்பை பால் அருந்தும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. என்ன விளையாட்டு?"
INDY 500 கார் ஓட்டப் பந்தயம்.
Q109. வில்வித்தையில் அனுபவம் மிக்கவரை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பார்கள்?
TOXOPHILLITE
Q110. இந்தியாவின் மிகப்பெரிய உள்ளரங்கம் எது?
இந்திரா காந்தி உள்ளரங்கம், டெல்லி.
Q111. உலகத்திலேயே/இந்தியாவிலேயே மிகப்பெரிய கூரை போடப்பட்ட (Covered Stadium) விளையாட்டு அரங்கம் எது?
யுவ பாரதி அரங்கம் -- கொல்கத்தா -- 1,20,000 பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்டது.
Q112. இந்தியாவின் உயர்தரைமட்ட பயிற்சி மையம் எங்குள்ளது?
ஷிலாரு, இமாச்சல பிரதேசம்.
Q113. கேனடா நாட்டு தேசிய விளையாட்டு எது?
லேக்ரோஸ் -- LACROSSE
Q114. SICILIAN, RETI, SOKOLSKY ஆகிய ஆங்கிலத் தொடர்கள் எந்த விளையாட்டுடன் சம்பந்தப்பட்டது?
சதுரங்கம் - Chess.
Q115. SCRABBLE விளையாட்டில் "TRIPLE WORD SCORE" சதுரங்கள் உள்ளன?
எட்டு.
Q116. கோல் கொம்புகளுக்கு பின்னால் வலைகள் பயன்படுத்தும் முறை எப்போது தொடங்கியது?
1891
Q117. "விளையாட்டின் குறிக்கோளுக்கிணங்க விளையாடு" "Play The Game In The Spirit Of The Game" - இத்தொடர் யாருடையது?
ஜவஹர்லால் நேரு.
Q118. MONOPOLY என்ற பலகை விளையாட்டு (நம் நாட்டில் TRADE என்போம்) கண்டு பிடித்தவர் யார்?
சார்லஸ் டேரோ மற்றும் எலிசபெத் மேக்கி -- அமெரிக்கா -- 1903.
Q119. ஜப்பானில் விளையாடப்படும் KENDO என்பது என்ன விளையாட்டு?
மூங்கிலால் செய்யப்பட்ட கத்திகளால் விளையாடப்படும் கத்திச்சண்டை.
Q120. HART TROPHY, LADY RYNG TROPHY, MEMORIAL TROPHY, STANLEY CUP -- இந்த கோப்பைகள் எந்த விளையாட்டுடன் சம்பந்தப்பட்டது?
பனி ஹாக்கி.
Q121. எந்த இந்திய விளையாட்டு வீரரின் பெயரால் ஒரு துணைக்கோள் பெயரிடப்பட்டுள்ளது?
விஸ்வநாதன் ஆனந்த் -- புகழ் பெற்ற சதுரங்க வீரர். சிறிய கோள் 4538 -- கண்டு பிடித்தவர் ஜப்பான் விஞ்ஞானி கென்ஸோ சுசுகி 1988ல் கண்டுபிடித்தார். இந்த துணைக்கோள் ஏப்ரல் 2015ல் விஷி ஆனந்த் 4538 என பெயரிடப்பட்டது. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Q122. ஷாவோலின் குங்ஃபூ முறையை கண்டு பிடித்து அறிமுகப்படுத்தியவர் யார்?
போதி தர்மா.