Khub.info Learn TNPSC exam and online pratice

விளையாட்டு கல்வி மையங்கள் -- SPORTS EDUCATION CENTRES

Q1.
"1. SAI -- SPORTS AUTHORITY OF INDIA : 1984ல் தொடங்கப்பட்டு, டெல்லியை தலைமயகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதன் மண்டல அலுவலகங்கள் -- பெங்களூர், காந்திநகர், சென்னை, கொல்கத்தா, சந்திகர், போப்பால், இம்ஃபால், கவுஹாத்தி, லக்னௌ ஆகிய இடங்களில் இயங்குகிறது. இதன் மற்றொரு அங்கமாக இமாச்சல பிரதேசத்தின் ஷிலாரு என்ற இடத்தில் உயரமான இடப் பயிற்சி (Higher Altitude Training Centre) என்ற மையம் இயங்குகிறது. "
"2. NIS, PATIALA -- நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கல்வி மையம், பட்டியாலா: 1950ல் தொடங்கப்பட்டது. 268 ஏக்கர் பரப்பளவு கொண்ட மையம். பட்டியாலாவின் முன்னாள் மன்னரின் மோத்தி பாக் அரண்மனை, இதன் அலுவலகமாக இயங்குகிறது. விளையாட்டின் அனைத்துத் துறைகளிலும் கலை, முதுகலை, முனைவர் ஆகிய பிரிவுகளில் விளையாட்டுக் கல்வி அளிக்கப் படுகிறது. "
"3. LAXMIBAI NATIONAL COLLEGE FOR PHYSICAL EDUCATION: லக்ஷ்மிபாய் தேசிய உடற்பயிற்சி கல்லூரி திருவனந்தபுரம் மற்றும் குவாலியர் -- இந்த கல்லூரிகளில், கல்வி மையங்களுக்கு தேவையான உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக அந்தஸ்துடன் இயங்கிவருகிறது. "