Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. இந்தியாவில் நடத்தப்படும் நடன திரு விழாக்கள் யாவை?
1. சென்னை -- CHENNAI : மார்கழி இசைத்திருவிழாவின் போது, சென்னையின் பல அரங்கங்களில் டிசம்பர்/ஜனவரி மாதங்களில் நடத்தப்படுகிறது.
2. சிதம்பரம் -- CHIDAMBARAM: வருடந்தோறும் பிப்ரவரி/மார்ச் மாதங்களில் நடராஜர் கோவிலில் நடத்தப்படுகிறது.
3. எலிஃபெண்டா திருவிழா -- ELEPHANTA FESTIVAL : மும்பையின் எலிஃபெண்டா குகைக் கோவில்களின் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் நடனத் திருவிழா.
4. கஜூராஹோ நடன திருவிழா -- KHAJURAHO DANCE FESTIVAL : மத்தியபிரதேசத்தின் பண்டெல்காண்ட் என்ற இடத்தில் பிப்ரவரி/மார்ச் மாதங்களில் நடத்தப்படும் விழா.
5. கொனாரக் நடன திருவிழா -- KONARAK DANCE FESTIVAL : ஒடிசாவின் கொனாரக் ல் உள்ள சூரிய பகவான் கோவிலில் வருடந்தோறும் பிப்ரவரி மாதம் நடத்தப்படும் விழா.
6. மாமல்லபுரம் நடன திருவிழா -- MAMALLAPURAM DANCE FESTIVAL : சென்னையின் அருகில் உள்ள மாமல்லபுரத்தில், ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும் விழா.
7. மொதேரா நடனத் திருவிழா -- MODHERA DANCE FESTIVAL : ஜனவரி மாதத்தில் குஜராத் மாநில மொதேராவில் நடத்தப்படும் விழா..
8. நிஷா காந்தி நடனத் திருவிழா -- NISHA GANDHI DANCE FESTIVAL : திருவனந்தபுரம், கேரளாவில், வருடந்தோறும் பிப்ரவரி மாதத்தில், குமரகோம் அரண்மனை மைதானத்தில் நடத்தப்படும் நடன விழா.
9. பட்டடக்கல் நடன திருவிழா -- PATTADACKAL DANCE FESTIVAL : ஜனவரி மாதத்தில் கர்நாடகாவின் பட்டடக்கல் கோவிலில் நடத்தப்படும் நடன திருவிழா.
10. ராஜ்கிர் நடன திருவிழா -- RAJGIR DANCE FESTIVAL : பீஹாரின், ராஜ்கிர் நகரத்தில் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும் நடன திருவிழா.