Khub.info Learn TNPSC exam and online pratice

அழகிப் போட்டிகள் -- BEAUTY PAGEANTS

Q1. அழகி போட்டி என்பது என்ன?
உலகின் அழகி யை தேர்வு செய்யும் போட்டி. இதே போல், இப்போது ஆண், திருநங்கை, மூத்த குடி மக்கள், கணவன் மனைவி, என பல வகையான போட்டிகள் சிறு/பெரிய நகர அளவில், போட்டியில் பங்கேற்கும் ஒரு ஆர்வத்துடன் நடத்தப்படுகிறது.

Q2. அழகி போட்டிகள் நடத்தப்படுவதின் தொடக்க வரலாறு என்ன?
1854ல் அமெரிக்காவின் P.T. Barnum என்பவரால் தொடங்கப்பட்டு, பல வகையான பொதுமக்கள் சர்ச்சை, போராட்டங்களுக்கும் உள்ளாகி நிறுத்தப்பட்டது. மீண்டும் 1880ல் “Bathing Beauty Pageant” என்ற போட்டி, அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் வியாபார முன்னேற்ற நோக்கத்துடன் நடத்தப்பட்டது. தற்கால முதல் அழகிப்போட்டி, 1921ல் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ""அமெரிக்க அழகி"" போட்டி நடத்தப்பட்டது. இதன் பின்னணியில் உலக அழகிப் போட்டிகள் தொடங்கின.
Q3. தற்கால அழகி போட்டிகளை தொடங்கக் காரணமாயிருந்தவர் யார், எப்போது?
ஐக்கிய ராஜ்யத்தின் (இங்கிலாந்து) எரிக் மார்லி Eric Morley என்பவர் 1951ல் முதல் உலக அழகிப் போட்டி தொடங்க காரணமாக இருந்தார்.
Q4. உலக அழகி மற்றும் இதைச்சார்ந்த இதர போட்டிகளில் பங்கு பெற அடிப்படை தகுதிகளாக கருதப்படுவது என்ன?
ஒவ்வொரு போட்டியாளரும், தங்கள் நாட்டளவில் நடைபெறும் போட்டியில் வென்றவராக இருத்தல் வேண்டும். பிறகு உலகப் போட்டிகளின் முன்பாக நடத்தப்படும் சில பூர்வாங்க (preliminaries) போட்டிகளும் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு, படிப்படியான போட்டிகளுக்குப் பிறகு, குறிப்பிடப்படும் தேதி/இடத்தில் உலகப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் பல தரப்பட்ட பிரிவு போட்டிகளை கொண்டு சுமார் ஒரு மாத காலத்திற்கு நடத்தப்படுகிறது.
Q5. அழகிப் போட்டிகளின் வெவ்வேறு நிலைகள் என்ன?
இந்தியா, ஆசியா பசிபிக், பூமி, சர்வதேசம், உலகம், பிரபஞ்சம் என்ற பிரிவுகளைக் கொண்டது.
Q6. இந்திய அழகிப் போட்டிக்கு ஆதரவளிக்கும் sponsors இந்திய நிறுவனம் எது?
ஃபெமினா Femina – என்ற பெண்கள் இதழ் வெளியிடும் Bennet Colmen & Co., நிறுவனம். (இதே போல் உலக போட்டிகளுக்கு பல்வேறு நாடுகளின் பெரிய நிறுவனங்கள் வியாபார நோக்கத்தை மனதில் கொண்டு ஆதரவளிக்க அவ்வப்போது முன் வருகின்றன).
Q7. இந்தியாவின் சார்பில் உலக மற்றும் பிரபஞ்ச அழகி போட்டியில் முதன் முதலில் பங்கேற்றவர்கள் யார்?
பிரபஞ்ச அழகி -- 1953 --- இந்திராணி ரஹ்மான் உலக அழகி -- 1959 --- Fleur Ezekiel
Q8. சர்வ தேச அழகி Miss International போட்டி எப்போது தொடங்கியது ?
1960 ல் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் லாங் பீச் என்ற நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் முதல் சர்வதேச அழகியாக தேர்வு செய்யப்பட்டவர், கொலம்பியா நாட்டின் Maria Stella Marquez Zawadsky. இப்போது தொடர்ந்து ஜப்பானில் நடை பெறுகிறது.
Q9. பூமி அழகி “Miss Earth” என்பது எப்போது முதல் நடைபெறுகிறது?
இந்த போட்டி அழகி போட்டிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (பிரபஞ்ச மற்றும் உலக அழகிக்கு பிறகு). 2001 முதல் நடத்தப்படுகிறது. இந்த போட்டியை முதலில் வென்றவர் டென்மார்க் நாட்டின் Catherina Svennson என்பவர். இந்த போட்டியில் இரண்டு முதல் நான்காவது இடம் வரை பெறுபவர்கள் Miss Earth Air, Miss Earth Water, Miss Earth Fire என்ற பட்டங்களைப் பெறுகிறார்கள்.
Q10. உலக மற்றும் பிரபஞ்ச அழகி போட்டிகள் எப்போது முதல் தொடங்கின?
1951 -- உலக அழகி மற்றும் 1952 -- பிரபஞ்ச அழகி போட்டி, இந்த வரிசையில்.
Q11. முதல் உலக அழகி போட்டியை வென்றவர் யார்?
1951ல் ஸ்வீடன் நாட்டின் Kicki Hakkansson என்பவர் வென்றார். இந்த போட்டியை இவர் சுமார் 495 நாட்கள் தக்க வைத்துக் கொண்டது ஒரு உலக சாதனை. (காரணம், இந்த போட்டி வருடந்தோறும் நடைபெறுவது)
Q12. எந்த நகரம், உலக அழகிப் போட்டியை தொடர்ந்து 34 வருடங்களுக்கு தொடர்ச்சியாக நடத்தியது?
லண்டன் -- London. 1951-1985.
Q13. உலக அழகி போட்டி முதல் முதலாக லண்டனை விட்டு வெளியில் நடத்தப்பட்டது?
1986 – லண்டன் மற்றும் சீனாவின் வெளிப்புறப் பகுதியான மக்காவ் நகரிலும் நடத்தப்பட்டது.
Q14. உலக அழகி Miss World போட்டியை வென்ற முதல் இந்திய பெண்மணி யார்?
ரீட்டா ஃபாரியா -- Rita Faria – 1966 – லண்டன்.
Q15. உலக அழகி Miss World போட்டியை வென்ற இரண்டாவது இந்திய பெண்மணி யார்?
ஐஷ்வர்யா ராய் Aishwarya Rai – 1994 – சன் சிட்டி, தென் ஆப்பிரிக்கா
Q16. பிரபஞ்ச அழகி Miss Universe போட்டியை வென்ற முதல் இந்திய பெண்மணி யார்?
சுஷ்மிதா சென் -- Sushmita Sen – 1994 - மணிலா, பிலிப்பைன்ஸ்
Q17. பிரபஞ்ச அழகி Miss Universe போட்டியை வென்ற இரண்டாவது இந்திய பெண்மணி யார்?
லாரா தத்தா Lara Dutta – 2000 – நிகோஸியா, சைப்ரஸ்
Q18. உலக அழகி போட்டியை வென்ற இந்திய பெண்மணிகளை வரிசைப்படுத்துக
ரீட்டா ஃபாரியா -- Rita Faria – 1966 - லண்டன் ஐஷ்வர்யா ராய் -- Aishwarya Rai - 1994 - சன் சிட்டி, தென் ஆப்பிரிக்கா டையானா ஹேய்டன் -- Diana Hayden -- 1997 - சீஷெல்ஸ் யுக்தா முக்கி -- Yuktha Mookey 1999 -- லண்டன்/மால்டா ப்ரியங்கா சோப்ரா -- Priyanka Chopra 2000 -- லண்டன்/மால்தீவ்
Q19. பிரபஞ்ச அழகிப் போட்டியை வென்ற இந்திய பெண்மணிகள் யாவர்?
1994 – சுஷ்மிதா சென் Sushmita Sen (Miss Universe) 2000 – லாரா தத்தா Lara Dutta (Miss Universe)
Q20. எந்த நாடு, ஒரே வருடத்தில், உலக மற்றும் பிரபஞ்ச அழகி போட்டியை, அதுவும் இரு முறை வென்ற நாடு எது?
இந்தியா.
1. 1994 – சுஷ்மிதா சென் (பிரபஞ்ச அழகி) & ஐஷ்வர்யா ராய் (உலக அழகி)
2. 2000 – லாரா தத்தா (பிரபஞ்ச அழகி) & ப்ரியங்கா சோப்ரா (உலக அழகி)
Q21. 2000 ஆண்டில், அழகிப்போட்டியில் செய்த சாதனை என்ன?
இந்தியா கீழ்க்கண்ட சாதனையை 2000ம் ஆண்டு புரிந்தது. ஆசியா பசிபிக் போட்டி -- Asia Pacific – திவ்யா மிர்ஸா Diya Mirza, Quezon, Philippines உலக அழகிப் போட்டி -- Miss World – ப்ரியங்கா சோப்ரா Priyanka Chopra – London/Maldives பிரபஞ்ச அழகி -- Miss Universe – லாரா தத்தா Lara Dutta – Nicosia, Cyprus.
Q22. லண்டனைத் தவிர்த்து, வேறு எந்த நகரங்கள் உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று போட்டிகளை நடத்தியது?
1. சன் சிட்டி, தென் ஆப்பிரிக்கா Sun City, South Africa – 1992,1993,1994,1995,2001
2. ஜோஹென்னஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா Johannesburg, South Africa – 2008,2009
3. சன்யா, சீனா Sanya, China – 2003,2004,2005,2007,2010, 2012, 2015
4. மாஹே, சீஷெல்ஸ் Mahe, Seychelles – 1997,1998.
5. அமெரிக்கா -- 1991, 2016.
Q23. 1976 உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற நைனா பல்சாவர் என்பவர் செய்தது என்ன?
இவர் 1976ன் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக அழகிப் போட்டியில் பங்கேற்று, தென் ஆப்பிரிக்காவின் இன வெறி கொள்கையை எதிர்த்து, போட்டியிலிருந்து விலகினார்.
Q24. இந்தியாவில் 1996ல் உலக அழகி போட்டி எங்கு நடை பெற்றது, வெற்றி பெற்றவர் யார்?
பெங்களூரு -- ஐரீன் ஸ்க்லிவா, க்ரீஸ்
Q25. முதல் பிரபஞ்ச அழகி Miss Universe யார்?
Armi Kuusela , ஃபின்லாந்து Finland – 1952 – Long Beach, California, USA.
Q26. பிரபஞ்ச அழகி போட்டியில் ஃபின்லாந்து நாட்டின் சாதனை என்ன?
1965 முதல் 1969 வரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடித்தது.
Q27. உலகின் முதல் இரும்பு பாலம் எது?
இரும்பு பாலம் -- Iron Bridge – ஷ்ராப்ஷையர், இங்கிலாந்து -- 1781ல் கட்டப்பட்டது.
Q28. பிரபஞ்ச அழகி வெற்றியாளருக்கு போடப்படும் கிரீடம் பற்றி கூறுக?
இந்த கிரீடத்தில் சுமார் 800 வைரம், 120 பவளம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2,50,000 அமெரிக்க டாலர் (சுமார் 1.63 கோடி) . இதை வடிவமைத்தவர்கள் ஜப்பான் நாட்டு மிக்கிமொடோ நிறுவனம்.
Q29. பிரபஞ்ச அழகி போட்டியில், லாரா தத்தா, செய்த சாதனை என்ன?
பிரபஞ்ச அழகி போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றார். இவரது ஒட்டு மொத்த சராசரி மதிப்பெண் 9.99/10 மதிப்பெண்கள்.
Q30. நீச்சல் உடை அணிய மறுத்து பிரபஞ்ச அழகிப் போட்டியிலிருந்து விலகிய இந்திய அழகி யார்?
நளினி விஸ்வநாதன் Nalini Viswanathan – Miss India 1977
Q31. பிரபஞ்ச அழகியின் முதல் போட்டி எங்கு நடந்தது?
லாங் பீச், கலிஃபோர்னியா, அமெரிக்கா 1952.
Q32. பிரபஞ்ச அழகி போட்டியை வென்ற முதல் ஆசிய பெண்மணி யார்?
Akiko Kojima , ஜப்பான் – 1959 -- Long Beach, California, USA.
Q33. முதல் இந்திய அழகி யார்?
ப்ரமீளா Pramila – 1947 – புகழ் பெற்ற இந்தி நடிகையாக விளங்கினார்.
Q34. இந்தியாவின் முதல் இஸ்லாமியா இந்திய அழகி யார்?
நய்யாரா மிர்ஸா, இப்போது நளினி படேல்.