Khub.info Learn TNPSC exam and online pratice

பாலங்களும் சுரங்கப் பாதைகளும் -- BRIDGES AND TUNNELS:

Q1. பாலம் என்பது என்ன?
இடையில் ரயில் போக்குவரத்து, நீர் நிலை, பள்ளத்தாக்கு போன்ற தடைகளால் உள்ள இரண்டு பகுதிகளை இணைக்கும் வகையாக அமைக்கப்படும் கட்டுமானம்.

Q2. பாலங்களின் வகைகள் யாவை?
இடம், நீளம், மண் தன்மை, மூலப்பொருள் என பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பாலங்கள் பல வகைகளில் அமைக்கப்படுகிறது. அவை :
1) Arch Bridge
2) Through Arch Bridge
3) Beam Bridge
4) Log Bridge
5) Cavity Wall Viaduct
6) Boomstring Arch
7) Box Girder Bridge
8) Cable Stayed Bridge
9) Cantilever Bridge
10) Clapper Bridge
11) Covered Bridge
12) Girder Bridge
13) Moon Bridge
14) Movable Bridge
15) Pig Tail Bridge
16) Pontoon Bridge
17) Right Frame Bridge
18) Roving Bridge
19) Segmental Bridge
20) Suspension Bridge
21) Stressed Ribbon Bridge
22) Truss & Arch Bridge
23) Truss Bridge
24) Tubular Bridge என பல வகைகள் உள்ளது.
Q3. உலகின் பெரிய பிடிமானமுள்ள சாண் பாலம் - cantilever bridge எது?
க்யூபெக் பாலம் Quebec Bridge: கேனடாவின் செயிண்ட் லாரன்ஸ் நதியின் குறுக்காக உள்ளது. இதன் சாண் நீளம் 1800 அடி.
Q4. உலகின் நீளமான கமான் பாலம் arch bridge எது?
LUPU BRIDGE – ஷாங்காய், சீனா .
Q5. உலகின் பெரிய தொங்கு பாலம் suspension bridge எங்குள்ளது?
Akashi Kaikyo Bridge: கோபே மற்றும் நருடோ நகரங்களுக்கிடையில், ஜப்பான்.
Q6. உலகின் நீளமான கம்பி வட தொங்கு பாலம் எது?
Rio Antirio Bridge: க்ரீஸ் -- கோரித் வளைகுடாவில் -- 2880 மீ நீளம் -- நான்கு கோபுர தூண்களுடன்.
Q7. உலகின் உயரமான தொங்கு பாலம் எது?
Milau Viaduct – ஃப்ரான்ஸ்.
Q8. இந்தியாவின் நீளமான கம்பி வட தொங்கு பாலம் எது?
வித்யா சாகர் பாலம் Vidya Sagar Ketu – ஹூக்ளி நதி மீது, கொல்கத்தா
Q9. உலகின் புகழ் பெற்ற “Sun Dial” கம்பி வட தொங்கு பாலம் எங்குள்ளது?
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் சாக்ரமெண்டோ நதியின் மீது, சைக்கிள் மற்றும் நடை பாதையான பாலம். இந்த பாலத்தின் நிழல், பாலத்தின் வடப்பகுதியில் உள்ள பெரிய நேரங்காட்டி பலகையில் விழும். இது வருடத்தில் ஒரு நாள் மட்டும் -- ஜூன் 21 -- Summer Solstice கோடை கதிர் திருப்பம் நாளில் மட்டும் சரியான நேரத்தை காட்டும்.
Q10. இந்தியாவில் நகரக்கூடிய ஒரே பாலம் எங்குள்ளது?
பாம்பன் பாலம், ராமேஸ்வரம், தமிழ் நாடு -- இது ஒரு ரயில் போக்குவரத்து பாலம் கடலின் மீது.
Q11. உலகின் உயரமான (இடத்தை பொறுத்து) பாலம் எங்குள்ளது?
பெய்லி பாலம் -- Baily Bridge – இமாலயத்தில் லடாக் பள்ளத்தாக்கில் டார்ஸ் மற்றும் சுர்வ் நதியின் இடையில் 18379 அடி உயரத்தில், ஆகஸ்ட் 1982ல் இந்திய ராணுவத்தால் கட்டப்பட்ட 98 அடி நீள பாலம்.
Q12. பாம்பன் பாலம் எதன் மீது கட்டப்பட்டுள்ளது?
பாக் ஜலசந்தி -- Palk Strait – நிலப்பகுதியின் கடைசியான மண்டபம் ரயில் நிலையத்தையும், கோவில் நகரமான ராமேஸ்வரம் இந்த பாலத்தின் மூலம் ரயில் போக்குவரத்தால் இணைக்கப்பட்டுள்ளது. (இப்போது மிக நீளமான தரைப்பாலமும் இதற்கு இணையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது).
Q13. பாம்பம் பாலத்தின் வழியாக முதல் ரயில் போக்குவரத்து எப்போது தொடங்கப்பட்டது?
24.2.1914 (அப்போது மீட்டர் கேஜ், இப்போது அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது)
Q14. பாம்பன் பாலத்தின் ரயில் வழி எப்போது அகலப் பாதையாக இயங்கத் தொடங்கியது?
12.8.2007.
Q15. இங்கிலாந்து மன்னர் ஜார்ஜ் முடிசூட்டு விழாவை பாராட்டும் வகையில் இந்தியாவில் கட்டப்பட்ட பாலம் எது?
காரோனேஷன் பாலம் Coronation Bridge – டீஸ்டா நதி மீது, டார்ஜிலிங், ஜல்பைகுரி, மேற்கு வங்காளம்.
Q16. இந்தியாவின் புகழ் பெற்ற ஹௌரா பாலம் எவ்வகையைச் சேர்ந்தது?
Canti lever.
Q17. ஹௌரா பால கட்டுமானத்தில் உள்ள சிறப்பு அம்சம் என்ன?
முழுவதுமாக இரும்பு உத்திரங்கள் girders கொண்டு கடையாணி rivets களால் இணைக்கப்பட்டுள்ளது.
Q18. ஹௌரா பாலத்தின் ஒரு சிறப்பு அம்சம் என்ன?
உலகிலேயே அதிகமான போக்குவரத்து உள்ள (busiest) பாலம்.
Q19. இந்தியாவின் நீளமான பாலம் எது?
மகாத்மா காந்தி பாலம் -- கங்கை நதி மீது -- பாட்னா-ஹாஜிபூருக்கிடையில் (பீஹார்) -- 5450 மீட்டர்.
Q20. நீர் மட்டத்திலிருந்து மிக உயரத்திலிருக்கும் பாலம் எது?
ராயல் கார்ஜ் பாலம் -- Royal Gorge Bridge – அர்கான்சாஸ் நதி -- கொலராடோ, அமெரிக்கா -- 1053 அடி உயரத்தில் உள்ளது.
Q21. உலகின் நீளமான பாலங்கள் யாவை?
1. Pontchartrain Bridge – over Pontchartrain lake – 38.35 Kms – longest bridge over water (continuous), Lousiana, America
2. Jiaozhou Bay Bridge – connecting Qingdao with Huangdao – 41.58 Kms Long – longest bridge over water (aggregate), China.
Q22. பஹ்ரைன் மற்றும் சௌதி அரேபியா வை இணைக்கும் பாலம் பெயர் என்ன? இதே போல் கத்தார் உடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ள பாலத்தின் பெயர் என்ன?
1. பஹ்ரைன் --> சௌதி அரேபியா Bahrain to Saudi Arabia – மன்னர் ஃபஹத் படுகை பாலம் King Fahd Cause Way - 25 Kms 1986ல் முடிக்கப்பட்டது.
2. பஹ்ரைன் --> கத்தார் Bahrain to Qatar – தோழமை படுகை பாலம் Friendship Causeway – 40 கி.மீ – 2022ல் முடிவு பெறக்கூடும்.
Q23. உலகின் நீளமான தொங்கு பாலம் எது?
Akashi Kaikyo பாலம் -- Akashi நீர்சந்தி -- Kobe மற்றும் Awaji ஜப்பானிய தீவுகளை இணைக்கிறது.
Q24. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பாலம் எது?
பாஸ்ஃபோரஸ் பாலம் Bosphorous Bridge -- பாஸ்ஃபோரஸ் நீர்சந்தி மீது Bhosphorous Strait -- இஸ்தான்புல், துருக்கி.
Q25. உலகின் நீளமான கடல் மேல் பாலம் எது?
Hongkong -- Zhuhai -- Macao Bridge – 55 Kms
Q26. உலகின் நீளமான இணைப்பாலம் parallel (two) எங்குள்ளது?
Lake Pontchartrain Causeway – Metairie in Louisiana வையும் Mandeville, Louisiana, USA வையும் இணைக்கிறது. - 38.42 கி.மீ – 1956ல் கட்டப்பட்டது.
Q27. உலகின் முதல் தரை போக்குவரத்து தொங்கு பாலம் road suspension bridge எது?
Menai Suspension Bridge – வேல்ஸ் – ஐக்கிய ராஜ்யம் – 1826 ல் கட்டப்பட்டது.
Q28. டென்மார்க் மற்றும் ஸ்வீடன் நாடுகளை இணைக்கும் பாலம் எது?
Oresund Bridge – இரும்பு வட தொங்கு பாலம் – 7845 மீ . டென்மார்க் நாட்டின் Copenhagen மற்றும் ஸ்வீடன் நாட்டு Malmo நகரையும் இணைக்கிறது.
Q29. அமெரிக்காவின் Penobscot Bridge ன் சிறப்பு அம்சம் என்ன?
இதே பெயர் கொண்ட நதியின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் நீரால் அரிக்கப்படாமல் இருக்க அழுத்த நைட்ரஜன் வாயு வால் கவரப்பட்டுள்ளது. (pumped with full of pressurized Nitrogen gas)
Q30. உலகில், அகலமான குறுக்கு கிடைமட்ட தூண்கள் கொண்ட நீளமான பாலம் எது?
சிட்னி துறைமுக பாலம் -- Sydney Harbour Bridge, ஆஸ்திரேலியா.
Q31. லண்டன் நகரின் குறியீடு புகழ் பெற்ற பாலம் எது?
Tower Bridge – தேம்ஸ் நதி மீது – 1894 ல் கட்டப்பட்டது.
Q32. Where is the world’s longest bridge?
Hangzhou Bay Bridge – 36 Kms – Cixi, Zhejiang Province, China – linking Hiaiyan of Jiaxing city with Cixi of Ningbo City.
Q33. கொல்கத்தாவின் நுழைவாயில் எனப்படுவது .................
ஹௌரா பாலம்
Q34. இந்தியாவின் உயரமான மற்றும் நீளமான இரும்பு வட தொங்கு பாலம் எது?
Bandra-Worli Sea Link -- மும்பை நகரில்.
Q35. அமெரிக்காவின் எந்த பாலம், இரும்பு வட தொங்கு பாலம், முழுவதுமாக ஒரு வித்தியாசமான வண்ணம் “International Orange” பூசப்பட்டுள்ளது?
Brooklyn Bridge -- நியூயார்க்.
Q36. ஆங்கில திரைப்படம் மூலம் உலகப் புகழ் பெற்ற க்வாய் Kwai நதி பாலம் எங்குள்ளது?
காஞ்சனாபூரி, தாய்லாந்து -- Kanchanaburi, Thailand. Bridge on the River Kwai என்ற புகழ் பெற்ற ஆங்கிலப் படம் இதை அடிப்படையாக எடுக்கப்பட்டது.
Q37. இந்தியாவின் எந்த நகரில் உயரமான அதி வேக தரைப் போக்குவரத்து பாலம் longest elevated expressway அமைந்துள்ளது?
ஹைதராபாத் -- Hyderabad – மெஹ்திபட்டினம் மற்றும் ஆராம்கர் பகுதிகளை இணைத்து ஷம்சாபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு செல்கிறது. சுமார் 11.6 கி.மீ நீளம்.
Q38. Bascule Bridge எனப்படுவது என்ன?
இது நகரும் வகை பாலம். பாலத்தின் கீழ் உள்ள நீர்நிலையின் போக்குவரத்தை அனுமதிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. உதாரணம்: ராமேஸ்வரம் ரயில் பாலம், லண்டன் கோபுர பாலம்.
Q39. அஸ்ஸாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரில் உள்ள சராய்காட் பாலத்தின் வரலாற்று பின்னணி என்ன?
இந்த பாலம், ராம் சிங் தலைமையிலான முகலாய படை மற்றும் லச்சித் பர்ஃபுகான் தலைமையிலான அஸ்ஸாம் அஹோம் வம்ச படை இடையே நடந்த போரின் இடப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Q40. இந்தியாவின் நீளமான ரயில்வே பாலம் எங்குள்ளது?
வல்லர்படம் பாலம் Vallarpadam Bridge – கேரள மாநிலம் கொச்சி அருகில் -- வேம்பநாடு ஏரி மீது - 4.62 Kms.
Q41. இந்தியாவின் புகழ் பெற்ற பாலங்கள் -- THE FAMOUS BRIDGES OF INDIA
1. பாம்பன் பாலம் -- PAMBAN BRIDGE:
(a) இந்தியாவில் உள்ள ஒரே நகரும் பாலம். பாக் ஜலசந்தி மீது, தரைப்பகுதியின் கடைசி ரயில் நிலையமான மண்டபம் மற்றும் கோவில் நகரமான ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் ஒரு ரயில் பாலம்.
(b) இது சுமார் 2.3 கி.மீ நீளம் கொண்டது.
(c) பாலத்தின் நடுவில், மேல் பக்கமாக உயர வாக்கில் திறக்கும் படியாக அமைக்கப்பட்டு கீழை கடல் கப்பல் போக்குவரத்துக்கு உதவுமாறு அமைக்கப்பட்டுள்ளது. (e) இந்த பாலத்தை வடிவமைத்தவர்கள் -- அமெரிக்க சிகாகோ நகரின் நிறுவனம் - Scherzer Rolling Lift Bridge Co., Chicago, USA.
(f) 12.8.2007 முதல் அகலப்பாதை ரயில் போக்குவரத்து தொடங்கியது. (g) இந்த பாலத்தில் சுமார் 146 தூண்கள் உள்ளன.
2. காரோனேஷன் பாலம் CORONATION BRIDGE:
செவோக் பாலம் Sevoke Bridge எனவும் அழைக்கப்படுகிறது. மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மற்றும் ஜல்பைகுரி இடையில் அமைந்துள்ளது. இந்த பாலம் இங்கிலாந்து மன்னர் ஜார்ஜ் அவர்களின் முடிசூட்டு விழாவின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்டது.
3. எல்லிஸ் பாலம் -- ELLIS BRIDGE:
ஸ்வாமி விவேகானந்தர் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. அகமதாபாத் நகரில், சாபர்மதி நதியின் மீது 1875ல் கட்டப்பட்டுள்ளது.
4. கோல்டன் பாலம் -- GOLDEN BRIDGE:
நர்மதா நதியின் மீது, 1881ல், குஜராத்தின் அங்க்லேஷ்வர்-பரூச் நகரங்களை இணைக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.
5. ஹௌரா பாலம் -- HOWRAH BRIDGE:
(a) ரவீந்திர சேது (பாலம்) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாலம் Cantilever வகையைச் சார்ந்தது. ஹூக்ளி நதி மீது ஹௌரா மற்றும் கொல்கத்தா நகரங்களை இணைக்கிறது.
(b) 1937-1943க்கு இடையில், Cleveland Bridge and Engineering Company என்ற நிறுவனத்தால் முழுவதுமாக இரும்பு உத்திரங்கள் girders மற்றும் கடையாணிகளால் உருவாக்கப்பட்டது.
(c) உலகிலேயே அதிகமான தரைப் போக்குவரத்துக் கொண்ட பாலம்.
(d) 705 மீ/1500 அடி நீளமும், 97 மீ அகலமும், 72 அடி அகல தூண்களும் கொண்டது.
(e) இந்த பாலத்துக்கு இணையாக வித்யா சாகர் (சுதந்திர போராட்ட வீரர்) பாலம் மற்றும் விவேகானந்தர் பாலம் என இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தேங்கல் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. 1992ல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
6. கோலியா போமோரா பாலம் KOLIA BHOMORA SETHU:
பிரம்மபுத்ரா நதியின் மீது, அஸ்ஸாம் மாநிலத்தில் தேஜ்பூர் என்ற இடத்தில் உள்ளது. அஹோம் வம்ச தளபதி போமோரா என்பவர் பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 3015 மீட்டர் நீளம் கொண்டது.
7. மகாத்மா காந்தி பாலம் -- MAHATMA GANDHI SETHU:
பீஹாரில், பாட்னா-ஹாஜிபூர் நகருக்கிடையில் கங்கை நதியின் மீது 1982ல் கட்டப்பட்டது. சுமார் 5450 மீ நீளம் -- இந்தியாவின் நீளமான, உலகில் ஒரு நீளமான பாலம்.
8. நேரு பாலம் -- NEHRU BRIDGE:
அகமதாபாத் நகரில் சாபர்மதி ஆற்றின் மீது அமைந்துள்ளது.
9. PONTE DE LINHARES:
கோவா மாநிலத்தில் ரிபாண்டர் மற்றும் பஞ்சிம் நகருக்கு இடையில் 1633ல் போர்ச்சுகீசியரால் கட்டப்பட்ட 2.5 Kms நீள பாலம்.
10. வாஷி பாலம் VASHI BRIDGE:
பழைய மும்பையின் தானே கடல் நீர் ஓடைகளில், மாங்குண்ட் என்ற இடத்தையும் புது மும்பையின் வாஷி என்ற இடத்தை இணைக்கும் விதமாக 1970ல் கட்டப்பட்டது.
11. பாந்த்ரா - ஒர்லி கடல் தொடர் பாலம் -- BANDRA WORLI SEA LINK: இரும்பு வட தொங்கு பாலம். எட்டு வழி பாதை கொண்ட இந்த பாலம் 5.6 கி.மீ நீளத்துக்கு ஜூன் 2009ல் கட்டி முடிக்கப்பட்டது. மொத்தமாக 126 மீ உயரமும், நீருக்கும் பாலத்தின் அடி மட்டத்துக்கும் 66 அடி இடைவெளியும் கொண்டது.
உலகின் சில புகழ்பெற்ற பாலங்கள் -- SOME FAMOUS BRIDGES ACROSS THE WORLD:
1. ஆல்பர்ட் எட்வர்டு பாலம் -- ALBERT EDWARD BRIDGE: 1864ல் ஷார்ப்ஷையர், இங்கிலாந்தில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம்.
2. ஆகாஷி கைக்யோ பாலம் AKASHI KAIKYO BRIDGE: 3411 மீ -- ஜப்பானில் கோபே மற்றும் ஆவாஜி தீவுகளை இணைக்கும் பாலம். நீளமான தொங்கு பாலம்.
3. போஸ்ஃபோரஸ் பாலம் -- BOSPHOROUS BRIDGE: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் போஸ்ஃபோரஸ் ஜலசந்தியின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கிறது.
4. ப்ரூக்ளின் பாலம் BROOKLYN BRIDGE: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மான்ஹட்டன் மற்றும் ப்ரூக்ளின் பகுதிகளை இணைக்குமாறு, கிழக்கு நதி மீது 1825 மீ நீளம் கொண்டது.
5. சிகாகோ வான்வழி பாலம் -- CHICAGO SKYWAY: அமெரிக்காவின் சிகாகோ நகரில் காலுமெட் நதியின் மீது 12.6 கி.மீ நீள பாலம்.
6. கான்ஃபெடரேஷன் பாலம் CONFEDERATION BRIDGE: கேனடா நாட்டில் ப்ரின்ஸ் எட்வர்ட் தீவையும் கேனடா தரைப்பகுதியையும் இணைக்கிறது. சுமார் 12.9 கி.மீ நீளத்துக்கு நார்த் அம்பர் லேண்ட் ஜலசந்தி மீது அமைந்துள்ளது. உறைந்த பனி நீர் படலதுக்கு மேல் அமைந்துள்ள நீளமான பாலம்.
7. டோங்காய் பாலம் DONGHAI BRIDGE: சீனாவின் ஷாங்காய் மற்றும் யாஷான் துறைமுகத்தை இணைக்கும் விதமாக 32.5 கி.மீ நீளத்துக்கு கடல் மேல் போடப்பட்டுள்ள பாலம். 2005ல் தொடங்கப்பட்ட இந்த பாலம் கடல் கடந்து போடப்பட்டுள்ள மிக நீளமான பாலம்.
8. கோல்டன் கேட் பாலம் -- GOLDEN GATE BRIDGE: உலகின் மிக புகழ் பெற்ற தொங்கு பாலம். கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் ஃப்ரான்சிஸ்கோ மற்றும் மரீன் பகுதியை இணைக்கும் 2740 மீட்டர் பாலம்.
9. GREAT BELT FIXED LINK: டென்மார்க் நாட்டில் ஸீலாண்ட் மற்றும் ஃபுனென் தீவுகளை இணைக்கும் விதமான தரை மற்றும் ரயில் வழி பாலம் -- 6790 மீ நீளம்.
10. ஹார்ட்லாண்ட் பாலம் HARTLAND BRIDGE: கேனடா நாட்டில் ஹார்ட்லாண்ட் மற்றும் சோமர்வில் இடங்களை, 390 மீட்டர் நீளத்துக்கு கூரையுடன் கூடிய நீளமான பாலம்.
11. HERCILIO LUZ BRIDGE: ப்ரேசில் நாட்டில் ஃளோரோய்னோபோலிஸ் தீவுக்கும் முக்கிய தரைப்பகுதிக்கும் இடையில் உள்ள மிக பழமையான தொங்கு பாலம்.
12. இரும்பு பாலம் THE IRON BRIDGE: 1781ல் இங்கிலாந்தின் ஷார்ப்ஷையர் பகுதியில் கட்டப்பட்ட உலகின் முதல் இரும்பு பாலம்.
13. ஜமுனா பாலம் JAMUNA BRIDGE: வங்காள தேசத்தில் ஜமுனா நதி மீது 4.8 கி.மீ நீளமான பாலம். ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலம்.
14. LAKE PONTCHARTRAIN CAUSEWAY: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் இதே பெயர் கொண்ட ஏரி மீது, 1956 ல் கட்டப்பட்ட 38.42 கி.மீ நீள பாலம். உலகின் நீளமான பாலங்களுள் ஒன்று.
15. MACKINAC BRIDGE: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் மாக்கினாக் ஜலசந்தி மீது 8083 மீ நீள பாலம்.
16. MENAI SUSPENSION BRIDGE: ஐக்கிய ராஜ்யத்தின் வேல்ஸ் பகுதியில், 1826ல் கட்டப்பட்ட உலகின் முதல் தரைப் போக்குவரத்து தொங்கு பாலம்.
17. NATCHEZ TRACE PARKWAY BRIDGE: அமெரிக்காவின் டென்னெஸ்ஸி மாகாணத்தில் 479.1 மீக்கு காங்க்ரீட் மூலம் போடப்பட்ட முதல் வளைவு பாலம்.
18. NEW RIVER GORGE BRIDGE: அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியா மாகாணத்திலுள்ளது. உலகில் இரண்டாவது மிக உயரமான -- 267 மீ/867 அடி -- தரை வழிப் போக்குவரத்து பாலம். 1977ல் புது நதி New River மீது அமைக்கப்பட்டுள்ளது.
19. ORESUND BRIDGE: டென்மார்க் நாட்டின் கோப்பெஹேகன் மற்றும் ஸ்வீடன் நாட்டின் மலுண்ட் க்கும் இடையில், ஒரேசாண்ட் ஜலசந்தி மீது, போடப்பட்டுள்ள இரும்பு வட தொங்கு பாலம் -- 7845 மீ நீளம்.
"20. PENANG BRIDGE: மலேசியாவின் பினாங் பகுதியில் தெற்கு கால்வாய் மீது போடப்பட்டு உள்ள 13.5 கி.மீ நீள இரும்பு வட தொங்கு பாலம். உலகின் நீளமான தொங்கு பாலங்களுள் ஒன்று.
21. PENOBSCOT NARROWS BRIDGE: அமெரிக்காவில் இதே பெயர் கொண்ட நதி மீது இரும்பு வட தொங்கு பாலம் -- 646 மீ -- Cable stayed bridge across Penobscot river in USA-646 mtrs –
22. க்யூபெக் பாலம் QUEBEC BRIDGE: கேனடாவின் செயிண்ட் லாரன்ஸ் நதி மீது 987 மீ நீள பாலம். 1919ல் தொடங்கப்பட்டது.
23. சிட்னி துறைமுக பாலம் SYDNEY HARBOUR BRIDGE: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 1149 மீ நீள பாலம். இரும்பாலான வளைவு பாலம் -- இதன் உச்சி உயரம் 134 மீட்டர்.
24. TOWER BRIDGE: லண்டன் நகரின் ஒரு புகழ்பெற்ற குறியீட்டு தலம் -- தேம்ஸ் நதி மீது -- 1894 ல் போடப்பட்ட இந்த பாலம் 244 மீ நீளம் கொண்டது.
25. TSING MA BRIDGE: ஹாங்காங்கில் இரண்டு தீவுகளை இணைக்கும் ஒரு தொங்கு பாலம். தரை மற்றும் ரயில் போக்குவரத்து 1377 மீ நீள தொங்கு பாலம் - உலகின் நீளமான தொங்கு பாலங்களுள் ஒன்று. 1977ல் போடப்பட்டது.
26. VERRAZANO NARROWS BRIDGE: அமெரிக்காவின் ஸ்டேடன் தீவு-ப்ரூக்ளின் நகரை இணைக்கும் பாலம் -- 1298 மீ நீளம் -- 1964ல் தொடங்கப்பட்டது.
27. VICTORIA FALLS BRIDGE: ஆப்பிரிக்காவின் ஸம்பேஸி நதி குறுக்கே ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா நாடுகளை இணைக்கும் ஒரு பாலம். 250 மீ நீளம். இந்த பாலம் உருவாவதற்கு காரணமாக இருந்தவர் செசில் ரோட்ஸ் என்ற தொழிலதிபரும் அரசியல் வாதியும் ஆவார்.

சுரங்கப்பாதை -- TUNNEL:

Q42. சுரங்கப் பாதை என்பது என்ன?
தரை நிலையிலிருந்து கீழே அல்லது தரை நிலையில் உள்ள தடையின் மூலமாக (மலை), அல்லது நீருக்கடியில் போக்குவரத்து வழி ஏற்படுத்துவது, ஆகியவை சுரங்கப் பாதைகளாகும். இவ்வழிகள் மூலம், தரைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, நடை பாதை என பல்வேறு போக்குவரத்து முறைகள் நடைபெற வழி வகுக்கப்படுகிறது.
Q43. இத்தாலி மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகளை இணைக்கும் சுரங்கப்பாதை எது?
சிம்ப்ளன் சுரங்கப்பாதை -- Simplon Tunnel – 19803 மீ நீளம் -- 1905ல் தொடங்கப்பட்ட ரயில் பாதை.
Q44. Channel Tunnel என்பது எங்குள்ளது?
இந்த சுரங்கப்பாதை சுமார் 50 கி.மீ (49.887) நீளம் கொண்ட ரயில் பாதை -- பெல்ஜியம் நாட்டின் ப்ரஸ்ஸல்ஸ் நகருக்கும், ஐக்கிய ராஜ்யத்தின் லண்டன் நகருக்குமிடையில் உள்ளது.
Q45. நீருக்கடியில், உலகின் நீளமான சுரங்கப்பாதை எது?
சீகன் சுரங்கப்பாதை -- Seikan Tunnel – 53.85 கி.மீ நீளம் -- ஜப்பான் நாட்டில் ஹொன்ஷூ மற்றும் ஹொக்கைடோ தீவுகளுக்கிடையில் Tsugarua நீர்சந்தியில் அமைக்கப்பட்டுள்ளது.
Q46. உலகின் நீளமான தரை வழி சுரங்கப்பாதை உள்ளது?
Laedral Tunnel – 24.5 Kms--நார்வே நாட்டில் லேட்ரல் மற்றும் அவுர்லேண்ட் இடையில் உள்ளது.
Q47. நன்னீர் மட்டுமே எடுத்துச்செல்ல அமைக்கப்பட்டுள்ள சுரங்க வழி எங்குள்ளது?
Pijanne Tunnel – ஃபின்லாந்து – 120 கி.மீ நீளம் கொண்டது. ஹெல்சிங்கி நகருக்கும் நன்னீர் விநியோகம் செய்ய.
Q48. உலகில் அதிக தரை வாகனப்போக்குவரத்து உள்ள சுரங்க வழிப்பாதை எது?
லிங்கன் சுரங்கப்பாதை -- நியூ ஜெர்ஸி - நியூயார்க்.
Q49. உலகின் உயரமான (கடல் மட்டத்திலிருந்து) ரயில் சுரங்கப்பாதை எங்குள்ளது?
ஃபெங்குவாஷான் சுரங்கப்பாதை -- Fenghuoshan Tunnel -- 1338 மீ நீளம் -- 4905 மீ உயரத்தில் Qinghai-Tibet Mountain Railway, சீனா வில் அமைக்கப்பட்டுள்ளது.
Q50. இந்தியாவின் நீளமான/உயரமான ரயில் சுரங்கப்பாதை எங்குள்ளது?
1. பீர் பஞ்சால் ரயில் சுரங்கப் பாதை -- 11.21 கி.மீ -- பனிஹால் --> ஹில்லார் ஷாஹாபாத் ரயில் நிலையம் -- (இதற்கு மேலே சற்று உயரத்தில் ஜவஹர் தரைப் போக்குவரத்து சுரங்கப்பாதையும் அமைந்துள்ளது)
2. கார்புடே சுரங்கப்பாதை - Karbude Tunnel – 6.5 கி.மீ – உக்ஷி --> போக் Ukshi – Bhoke ரயில் நிலையங்கள் -- கொங்கன் ரயில் திட்டம் -- மேற்கு தொடர்ச்சி மலை -- மகாராஷ்டிரா.
Q51. தற்சமயம் (2016) பணியில் உள்ள மிகப்பெரிய தரைப்போக்குவரத்து சுரங்கப்பாதை எங்கு நடைபெற்று வருகிறது?
ரோட்டங் சுரங்கப்பாதை Rohtang Tunnel: லே-மணாலி நெடுஞ்சாலையில் -- 8.8 கி.மீ நீளம் -- சுமார் 10000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
Q52. இந்தியாவின் நீளமான தரை வழிப் போக்குவரத்து சுரங்கப்பாதை எது?
ஜவஹர் தரை வழி போக்குவரத்து சுரங்கப்பாதை -- 1956ல் முடிக்கப்பட்ட இது சுமார் 2.5 கி.மீ நீளம் -- காஷ்மீரின் பனிஹால் --> காஸிகண்ட் இடையில்.
Q53. இந்தியாவின் இரண்டாவது நீளமான தரை வழிப் போக்குவரத்து சுரங்கப்பாதை எது?
நியூ கத்ராஜ் சுரங்கப்பாதை New Katraj tunnel – 1338 மீ -- NH 4 -- பூனே -மும்ப இடையில். 2006ல் முடிவுற்றது.
Q54. இந்தியாவில் இயற்கையாகவே அமைந்துள்ள சுரங்கப்பாதை எங்குள்ளது?
புனர்ஜனி சுரங்கப்பாதை Punarjani Tunnel – 150 மீ நீளம் – திருச்சூர் மாவட்டம், கேரளா.
Q55. சுரங்கப் பாதைகள் அமைப்பதில் உள்ள பல வகை தொழில் நுட்பங்கள் யாவை?
1. CUT AND COVER 2. TUNNELLING SHIELD 3.NEW AUSTRIAN TUNNELLING METHOD 4. PIPE JACKING 5. UNDER WATER TUNNELS
Q56. இந்திய ரயில்வேயில் உள்ள முக்கிய சுரங்கப்பாதைகள் -- RAILWAY TUNNELS IN INDIA WITH ATLEAST 2 Kms IN LENGTH:
1. பீர் பஞ்சால் ரயில் சுரங்கப் பாதை -- 11.21 கி.மீ -- பனிஹால் --> ஹில்லார் ஷாஹாபாத் ரயில் நிலையம் -- பணி நிலையில் உள்ளது. (இதற்கு சற்று உயரத்தில் ஜவஹர் தரைப் போக்குவரத்து சுரங்கப்பாதையும் அமைந்துள்ளது)
2. கார்புடே சுரங்கப்பாதை - Karbude Tunnel – 6.5 கி.மீ – உக்ஷி --> போக் Ukshi – Bhoke ரயில் நிலையங்கள் -- கொங்கன் ரயில் திட்டம் -- மேற்கு தொடர்ச்சி மலை -- மகாராஷ்டிரா.
3. நாத்வாடி ரயில் சுரங்கப்பாதை -- NATHUWADI TUNNEL: 4389 மீ நீளம் – கொங்கன் ரயில்வேயில் கரஞ்சாடி -- திவான் காவட்டி ரயில் நிலையங்கள் -- மேற்கு தொடர்ச்சி மலை -- மகாராஷ்டிரா.
4. டைக் ரயில் சுரங்கப்பாதை -- TIKE TUNNEL: 4077 மீ நீளம் – கொங்கன் ரயில்வேயில் ரத்னகிரி --> நிவாசார் ரயில் நிலையங்களுக்கிடையில் -- மேற்கு தொடர்ச்சி மலை -- மகாராஷ்டிரா.
5. பெர்டேவாடி ரயில் சுரங்கப்பாதை -- BERDEWADI TUNNEL: 4000 மீ நீளம் – அடாவாலி --> விலாவாடே ரயில் நிலையங்களுக்கிடையைல் -- மேற்கு தொடர்ச்சி மலை -- மகாராஷ்டிரா.
6. சவார்தே ரயில் சுரங்கப்பாதை SAVARDE TUNNEL: 3429 மீ நீளம் – கமாத்தே --> சவார்டே ரயில் நிலையங்களுக்கிடையில் -- மேற்கு தொடர்ச்சி மலை -- மகாராஷ்டிரா.
7. பரீம் ரயில் சுரங்கப்பாதை -- BAREEM TUNNEL: 3343 மீ நீளம் – பல்லி --> கேனகோனா ரயில் நிலையங்களுக்கிடையில் -- மேற்கு தொடர்ச்சி மலை -- மகாராஷ்டிரா.
8. கர்வார் ரயில் சுரங்கப்பாதை - KARWAR TUNNEL: 2950 மீ நீளம் – கர்வார் --> ஹர்வாடா ரயில் நிலையங்களுக்கிடையில் -- மேற்கு தொடர்ச்சி மலை -- மகாராஷ்டிரா.
9. சௌக் ரயில் சுரங்கப்பாதை -- CHOWK TUNNEL: 2830 மீ நீளம் -- பன்வேல் --> கர்ஜத் ரயில் நிலையங்களுக்கிடையில் -- பூனே -- மும்பை ரயில் பாதியில்.
10. பர்ச்சூரி ரயில் சுரங்கப்பாதை -- PARCHURI TUNNEL: 2628 மீ நீளம் -- சங்கமேஷ்வர் --> உக்ஷி ரயில் நிலையங்களுக்கிடையில் -- மேற்கு தொடர்ச்சி மலை -- மகாராஷ்டிரா.
11. கொவாய் ரயில் சுரங்கப்பாதை -- KHOWAI TUNNEL: 2472 மீ. நீளம். முங்கியாபாரி --> தெலியாமுரா ரயில் நிலையங்களுக்கிடையில் -- வடகிழக்கு எல்லை ரயில்வே.
12. சங்கார் ரயில் சுரங்கப்பாதை -- SANGAR TUNNEL: 2445 மீ நீளம் -- சங்கார் --> மன்வால் ரயில் நிலையங்களுக்கிடையில் -- வடக்கு ரயில்வே -- ஜம்மு காஷ்மீர்
13. மங்கி ஹில் ரயில் சுரங்கப்பாதை -- MONKEY HILL TUNNEL: 2156 மீ நீளம் – கரஜத் --> கண்டாலா ரயில் நிலையங்களுக்கிடையில் -- பூனே -- மும்பை ரயில் பாதை.
14. ஆராவாலி ரயில் சுரங்கப்பாதை -- ARAVALI TUNNEL: 2100 mtrs -- ஆராவாலி --> சங்கமேஷ்வர் ரயில் நிலையங்களுக்கிடையில் -- கொங்கன் ரயில்வே கார்ப்பொரேஷன் -- மேற்கு தொடர்ச்சி மலை -- மகாராஷ்டிரா.
15. சிப்ளின் ரயில் சுரங்கப்பாதை -- CHIPLUN TUNNEL: 2033 மீ நீளம் – சிப்ளின் --> கமாதே ரயில் ரயில் நிலையங்களுக்கிடையில் -- கொங்கன் ரயில்வே கார்ப்பொரேஷன் -- மேற்கு தொடர்ச்சி மலை -- மகாராஷ்டிரா
Q57. உலகின் சில புகழ் பெற்ற சுரங்கப்பாதைகள் SOME FAMOUS TUNNELS ABROAD:
1. சீகன் சுரங்கப்பாதை -- SEIKAN TUNNEL: ஜப்பான் -- 53.85 கி.மீ -- இதில் 23.3 கி.மீ நீருக்கடியில் -- ஹொன்ஷூ -- ஹொக்கைடோ தீவுகளுக்கிடையில்.
2. சேனல் சுரங்கப்பாதை -- CHANNEL TUNNEL: ஃப்ரான்ஸ் -- இங்கிலாந்துக்கிடையில் ஆங்கில கால்வாய் வழியாக -- 50 கி.மீ -- இதில் 39 கி.மீ நீருக்கடியில்.
3. லேட்ரல் சுரங்கப்பாதை -- LAEDRAL TUNNEL: உலகின் நீளமான தரை வழிப் போக்குவரத்து சுரங்கப்பாதை -- நார்வே நாட்டில் லேட்ரல் -- ஆர்லேண்ட் நகரங்களுக்கிடையில்.
4. செயிண்ட் கோத்தார்ட் சுரங்கப்பாதை -- SAINT GOTTHARD TUNNEL: 16.32 கி.மீ நீள தரை வழிப் போக்குவரத்து பாதை -- ஸ்விட்சர்லாந்து நாட்டில் Goschenen to Airolo நகரங்களுக்கு இடையில்.
5. ஷூஷான் சுரங்கப்பாதை -- HSUEHSHAN TUNNEL: தைவான் நாட்டில் 12.95 கி.மீ நீளப்பாதை -- ஆசியாவின் நீளமான சுரங்கப்பாதை.
6. ரென்ஸ்டீக் சுரங்கப்பாதை -- RENNSTEIG TUNNEL: ஜெர்மனி – துருஞ்சியான் வனத்தின் வழியாக சுமார் 8.5 கி.மீ நீள சுரங்கப்பாதை. ஜெர்மனியில் நீளமானது.
7. வட கேப் சுரங்கப்பாதை -- NORTH CAPE TUNNEL: நார்வே -- கடலுக்கடியில் சுமார் 212 மீட்டர் ஆழத்தில் 7 கி.மீ நீளமான சுரங்கப்பாதை.
8. பைஜேன்னி சுரங்கப்பாதை -- PAIJANNE TUNNEL: ஃபின்லாந்து Finland – உலகின் நீளமான 120 கி.மீ நீளமான சுரங்கப்பாதை மூலம் நன்னீர் ஹெல்சிங்கி நகருக்கு எடுத்துச் செல்லப் படுகிறது.
9. லிங்கன் சுரங்கப்பாதை -- LINCOLN TUNNEL: அமெரிக்காவின் நியூஜெர்சி - நியூயார்க் நகருக்கு இடையில் தரை வழிப் போக்குவரத்துக்கான சுரங்கப்பாதை -- 2280 மீ நீளம்.
10. சிட்னி துறைமுக சுரங்கப்பாதை -- SYDNEY HARBOUR TERMINAL TUNNEL: சிட்னி துறைமுகத்தை கடப்பதற்காக போடப்பட்டுள்ள வாகன போக்குவரத்து சுரங்கப் பாதை. இங்கு இரண்டு சுரங்கப்பாதைகளும், 20 மீ கடலுக்கடியான சுரங்கப்பாதையும் உள்ளது.
11. ஃபெங்குவாஷான் சுரங்கப்பாதை -- FENGHUOSHAN TUNNEL: Qinghat-Tibet ரயில் போக்குவரத்து பாதையில் 1338 மீ நீளமும், கடல் மட்டத்திலிருந்து 4905 மீ உயரத்திலும் உள்ள சுரங்கப்பாதை. சீனாவில் ஃபெங்குவாஷான் மலைப்பகுதியில் உள்ளது.
12. ஐவேட் இச்சினோ சுரங்கப்பாதை -- IWATE ICHINOHE TUNNEL: ஜப்பான் நாட்டில் உள்ள ரயில் சுரங்கப்பாதை -- 25.8 கி.மீ நீளம்.
13. வுஷாவ்லிங் சுரங்கப்பாதை -- WUSHAOLING TUNNEL: வுவீ , சீனா – ரயில்வே சுரங்கப்பாதை -- 21 கி.மீ நீளம்.
14. சிம்ப்ளான் சுரங்கப்பாதை -- SIMPLON TUNNEL: ஸ்விட்ஸர்லாந்தின் ஆல்ப் மலைத்தொடரில் 19.8 கி.மீ நீள ரயில் சுரங்கப்பாதை.
15. வெரீனா சுரங்கப்பாதி -- VEREINA TUNNEL: ஸ்விட்சர்லாந்து -- ரயில் சுரங்கப்பாதை -- 19 கி.மீ 16. ஷின் கன்மோன் சுரங்கப்பாதை -- SHIN KANMON TUNNEL: ஜப்பான் -- 18713 கி.மீ ரயில் சுரங்கப் பாதை.
17. அபெனைன் சுரங்கப்பாதை -- APENNINE TUNNEL: இத்தாலியின் போலோக்னா-ஃப்ளாரென்ஸ் நகரங்களுக்கிடையில் உள்ள ரயில் சுரங்கப்பாதை -- 18.5 கி.மீ.
18. கின்லிங் சுரங்கப்பாதை -- QINLING TUNNEL: சீனா -- ரயில் சுரங்கப்பாதை -- 18.4 கி.மீ நீளம். 19. ஷோஞ்ஷான் சுரங்கப்பாதை -- ZHONGNANSHAN TUNNEL: சீனா -- தரை வழி சுரங்கப்பாதை -- 18 கி.மீ.
20. கோட்டார்ட் சுரங்கப்பாதை -- GOTTHARD TUNNEL: ஸ்விட்சர்லாந்தின் ஆல்ப் மலையில் உள்ள தரைவழி சுரங்கப்பாதை -- 16.9 கி.மீ நீளம்.
21. ரோக்கோ சுரங்கப்பாதை -- ROKKO TUNNEL: ஜப்பான் நாட்டின் ரோக்கோ மலையில் 16.25 கி.மீ ரயில் சுரங்கப்பாதை.
22. ஃபுக்ரா பேஸ் சுரங்கப்பாதை -- FUKRA BASE TUNNEL: ஸ்விட்சர்லாந்து ரயில் சுரங்கப்பாதை -- 15.44 கி.மீ நீளம்.
23. ஹருணா சுரங்கப்பாதை -- HARUNA TUNNEL: ஜப்பான் -- ரயில் சுரங்கப்பாதி -- 15.35 கி.மீ 24. செவெரெமுஸ்கி சுரங்கப்பாதை -- SEVEROMUYSKY TUNNEL: ரஷ்யா -- ரயில் சுரங்கப்பாதை -- 15.34 கி.மீ.
25. கோரிகேமைன் சுரங்கப்பாதை -- GORIGAMINE TUNNEL: ஜப்பான் - ரயில் சுரங்கப்பாதை - 15.17 கி.மீ. 26. மாண்டி சாண்ட்டோமார்க்கோ சுரங்கப்பாதை -- MONTE SANTOMARCO TUNNEL: இத்தாலி -- ரயில் சுரங்கப்பாதை -- 15 கி.மீ நீளம்.
27. நகயாமா சுரங்கப்பாதை -- NAKAYAMA TUNNEL: ஜப்பான் -- ரயில் சுரங்கப்பாதை -- 14.85 கி.மீ. 28. மவுண்ட் மேக்டொனால்ட் சுரங்கப்பாதை -- MOUNT McDONALD TUNNEL: கேனடா -- ரயில் சுரங்கப் பாதை -- 14.72 கி.மீ.
29. லாட்ஷ்பெர்க் சுரங்கப்பாதை -- LOTSCHBERG TUNNEL: நார்வே -- ரயில் சுரங்கப்பாதை -- 14.61 கி.மீ 30. ரோமரிக்ஸ்போர்டென் சுரங்கப்பாதை -- ROMERIKSPORTEN TUNNEL: நார்வே -- ரயில் சுரங்கப்பாதை 14.58 கி.மீ.
31. தயாவ்ஷான் சுரங்கப்பாதை -- DAYAOSHAN TUNNEL: சீனாவின் நாலிங் மலையில் உள்ள ரயில் சுரங்கப்பாதை -- 14.29 கி.மீ.
32. ஆர்ல்பெர்க் சுரங்கப்பாதை -- ARLBERG TUNNEL: ஆஸ்திரியா -- Road Tunnel in the Alps in Austria – 13972 mtrs/8/7 miles. 33. ஹோக்கிருக்கு சுரங்கப்பாதை -- HOKURIKU TUNNEL: ஜப்பான் -- ரயில் சுரங்கப்பாதை -- 13.78 கி.மீ. 34. ஃப்ரிஜஸ் மாண்ட் செனிஸ் சுரங்கப்பாதை -- FREJUS/MONT CENIS TUNNEL: ஃப்ரான்ஸ் இத்தாலி இடையில் ஆல்ப்ஸ் மலையில் உள்ள சுரங்கப்பாதை -- 13.63 கி.மீ நீளம்.
35. ஷின் ஷிமிஸூ சுரங்கப்பாதை -- SHIN SHIMIZU TUNNEL : ஜப்பானின் மிகுனி மலையில் உள்ள சுரங்கப்பாதை -- 13.5 கி.மீ.
36. ஹெக்ஸ் நதி சுரங்கப்பாதை -- HEX RIVER TUNNEL: தென் ஆப்பிரிக்கா ரயில் சுரங்கப்பாதை - 13.4 கி.மீ. 37. சிலியர் சுரங்கப்பாதை -- SCILIAR TUNNEL: இத்தாலி ரயில் சுரங்கப்பாதை -- 13.5 கி.மீ நீளம்.