Khub.info Learn TNPSC exam and online pratice

நாள் காட்டி (காலண்டர்) CALENDAR

Q1. நாள் காட்டி என்பது என்ன?
loading...
காலத்திற்கு பெயரிட்டு அவற்றுக்கு தேதிகளை குறிப்பிட்டு கூறும் ஒரு முறை. இந்திய முறையில் இது பொதுவாக சூரியன் மற்றும் சந்திரனில் நகர்வைப் பொருத்து நாள்காட்டி வடிவமைக்கப்பட்டு, இந்திய விழாக்களை முடிவு செய்கிறது. ஆங்கில நாள்காட்டியில் இந்த முறை அனுசரிக்கப்படுவதில்லை. கிரேக்க நாள்காட்டியில் (Gregorian Calendar) ஜனவரி 1 ஐ தொடக்கமாகக் கொண்டு 365 நாட்களுக்கு நாள் தேதி, விழாக்கள் கிறித்துவ முறைப்படி திட்டமிடப்படுகிறது. ஆகவே தான், இந்த இரு முறை நாள் காட்டிகளில் விழா நாட்களின் தேதிகளில் வேறுபாடுகள் தெரிகிறது.

Q2. நாள் காட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள சர்வதேச தரக் குறியீடு என்ன? international standard code
ISO 8601. இந்த முறையில் 24 மணி நேர சுழற்சி தேதி முறை அனுசரிக்கப்படுகிறது.
Q3. சர்வதேச அளவில் அனுசரிக்கப்படும் நாள் காட்டி முறை என்ன?
கிரேக்க நாள் காட்டி முறை. Gregorian Calendar.
Q4. “Gregorian Calendar” எனப் பெயர் வரக்காரணம் என்ன?
1582 ல் அவ்வமயம் புனித போப்பாண்டவராக இருந்த க்ரெகரி XIII இந்த நாள்காட்டி முறையை அறிமுகப் படுத்தியதால் இப்பெயர் பெற்றது.
Q5. க்ரெகேரியன் நாள்காட்டி (ஆங்கில) எப்போது முதல் பயனுக்கு வந்தது?
24.2.1582.
Q6. க்ரெகேரியன் நாள் காட்டியின் பின்னணி என்ன?
இந்த நாள் காட்டின் முறை இதற்கு முன்பாக நிலவி வந்த ஜூலியன் நாள்காட்டி (கிரேக்க) முறையை பின்பற்றி அறிமுகப்படுத்தியது. அதன் படி சாதராண வருடங்களில் 365 நாட்களும் லீப் (நெட்டாண்டு) ஆண்டுகளில் 366 நாட்களும் அடங்கியதாக இருந்தது. இந்த க்ரெகேரியன் நாள்காட்டி, போப்பாண்டவர் க்ரெகரி யின் ஆணைப்படி 24.2.1582 முதல் அமலுக்கு வந்தது. இந்த நாள்காட்டியை அனுசரிக்க பரிந்துரைத்தவர் இத்தாலிய மருத்துவர் அலாய்சியஷ் லிலியஸ் என்பவர். இந்த நாள் காட்டி, யேசு பிறந்த காலமான “Anna Domini” – AD அல்லது Common Era – CE – or Christian Era காலத்திலிருந்து வருட எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.
Q7. ஐக்கிய ராஜ்யம் (British Empire) எப்போது க்ரெகேரியன் நாள்காட்டி முறையை அறிமுகப் படுத்தியது?
1752 ல்– இதே காலகட்டத்தில் இந்தியாவிலும் இம்முறை பயன்பாட்டுக்கு வந்தது.
Q8. நாள் காட்டியில் எத்தனை வகைகள் உள்ளன?
Luni Solar, Solar and Lunar.
Q9. காலண்டர் திட்டமிடுவதில் உள்ள இரண்டு புவியியல் ரீதியான அடிப்படை அம்சங்கள் என்ன?
1. வெப்ப மண்டல ஆண்டு -- Tropical Year:
2. Side Real Year:
Q10. Luni Sonar முறையில் நாள்காட்டி பயன்படுத்தும் சமூகங்கள் யாவை ?
புத்தர்கள், ஹீப்ரூ மக்கள், சீன மக்கள் மற்றும் திபெத்திய மக்கள்.
Q11. சூரிய நாள்காட்டி Solar Calendar என்பது என்ன?
இந்த நாள்காட்டியின் தேதிகள் பூமி சூரியனை சுற்றி வரும் நிலையைல் அன்றாட நிலையை குறிக்கும். அதே சமயம் சூரியனின் விண் நிலையையும் குறிக்கும். ஒவ்வொரு சூரிய நாளும் solar day, சூரிய உதயம் தொடங்கி, சூரிய மறைவு வரை கணக்கிடப்படுகிறது.
Q12. சூரிய நாள் காட்டியின் சில உதாரணங்களைக் கூறுக?
1. ஜூலியன் நாள்காட்டி Julian Calendar -- கிரேக்க காலத்து நாள்காட்டி.
2. க்ரெகேரியன் நாள்காட்டி Gregorian Calendar -- தற்போது உலகளவில் உள்ள ஆங்கில நாள்காட்டி. ஜனவரி 1 ம் தேதி புது வருட நாளாக அனுசரிக்கப்படுகிறது. 12 மாதங்கள் கொண்டது.
3. பஹாய் நாள் காட்டி Bahai’, I Calendar -- இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர்--மார்ச் 20/21 தேதிகளில் புது வருடம் அனுசரிக்கப்படுகிறது. 19 நாட்கள் கொண்ட 19 மாதங்கள் அடங்கியது.
4. இரானிய நாள் காட்டி -- Iranian Calendar -- இரான் நாட்டில் வழக்கத்தில் உள்ளது. மார்ச் 21 அருகில் இதன் புது ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. 12 மாதங்களைக் கொண்ட இந்த நாள் காட்டியில் முதல் 6 மாதம் தொடர்ந்து 31 நாட்களும், அடுத்த 5 மாதங்கள் 30 நாட்களும், கடைசி மாதம் 29 அல்லது 30 (லீப்) நாட்களை கொண்டதாக உள்ளது.
5. மலையாளம் நாள் காட்டி -- Malayalam Calendar -- கேரள மக்கள் பயன்படுத்தும் நாள் காட்டி. 12 மாதங்களைக் கொண்டது. ஏப்ரல் 13/14 தேதிகளில் வரும் இந்த நாள் ""விஷூ"" என அழைக்கப்படுகிறது.
6. தமிழ் நாள் காட்டி -- Tamil Calendar -- தமிழ் மக்கள் பயன் படுத்தும் நாள் காட்டி. 12 மாதங்களைக் கொண்டு, ஏப்ரல் 13/14 சித்திரை முதல் தேதி புத்தாண்டாக அனுசரிக்கப்படுகிறது.
7. தாய்லாந்து நாள் காட்டி -- Thai Solar Calendar -- 12 மாதங்களைக் கொண்டது. புத்தாண்டு ஏப்ரல் 14 அன்று ""சொங்க்ரான்"" என்ற பெயரில் அனுசரிக்கப்படுகிறது.
8. பெங்காலி நாள் காட்டி - Bengali Calendar -- 12 மாதங்களைக் கொண்ட இதன் புது வருடம் ஏப்ரல் 13/14 தேதிகளில் ""பொய்லா பொய்ஷாக்"" என அனுசரிக்கப்படுகிறது.
Q13. சந்திரன் நாள் காட்டி என்பது என்ன?
சந்திரனின் நகர்வை பொருத்து அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் முக்கிய பண்டிகை நாட்கள் அனுசரிக்கப்படும் நாள் காட்டி.
Q14. சந்திரன் நாள் காட்டியை Lunar Calendar அதிகமாக பயன்படுத்தும் சமூகம் எது?
இஸ்லாமியர்கள் -- இஸ்லாமிய நாள் காட்டி -- 12 மாதங்களைக் கொண்டிருந்தாலும், சூரிய நாள் காட்டியை விட வருடத்திற்கு 10 முதல் 12 நாட்கள் குறைவாகக் கொண்டிருப்பதால், இதன் பண்டிகைகள் க்ரெகேரியன் நாள் காட்டி மாதம்/நாட்களில் வருடா வருடம் மாறிக்கொண்டே இருக்கும். இந்த சுழற்சி 33 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆங்கில நாள் காட்டியுடன் சம நிலைக்கு வரும். இதன் புத்தாண்டு என்பது முஹரம் மாதத்தின் முதல் நாள்.
Q15. இந்திய தேசிய நாள்காட்டி எது?
சக நாள்காட்டி -- சக சகாப்தம் (ஷாலிவாகன சகாப்தம்) அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட அலுவலக நாள்காட்டியாக இருந்தாலும், இதன் பயன்பாடு வெளிப்படையாக இல்லை. ஒரு சில அலுவலக பிரதிகளில் மட்டும் வெளிப்படுத்தப்படுகிறது. ஆங்கில நாள்காட்டியே அதிகமாக வழக்கத்தில் உள்ளது. (காரணம் சுமார் 200 வருட ஆங்கிலேயர் ஆட்சி).
Q16. சக சகாப்த நாள்காட்டி எப்போது முதல் அனுசரிக்கப்படுகிறது?
இந்த சக சகாப்த நாள்காட்டி கி.பி.78ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் இப்போது 2016 எனில், சக சகாப்த வருடம் -- 1938 ( 2016 -78 == 1938).
Q17. சக சகாப்த நாள்காட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஷாலிவாகனா -- சதவாகன வம்ச மன்னர்.
Q18. இந்திய தேசிய நாள்காட்டி எப்போது முதல் அமலுக்கு வந்தது?
22.3.1957 == சைத்ர மாதம் முதல் தேதி, சக சகாப்த வருடம் 1879.
Q19. இந்து நாள் காட்டி என்பது எதை அடிப்படையாகக் கொண்டது?
சந்திரன் சூரியன் இரண்டின் நகர்வையும் அடிப்படையாக கொண்டதால் Luni Solar Calendar எனப்படுகிறது.
Q20. இந்து நாள் காட்டியைப் பற்றி ................
பழங்காலத்திலிருந்து வழக்கத்தில் இருந்தாலும், மொழி வாரியாக மண்டலங்கள் உருவானதைத் தொடர்ந்து மாற்றங்கள் பெற்று, தமிழ், மலையாளம், பெங்காலி என மண்டல வாரியாக நாள்காட்டிகள் அனுசரிக்கப் படுகின்றன. ஆனால் அனைத்துமே இந்து நாள் காட்டிகள் தான். இந்து நாள் காட்டியின் மேம்பாட்டுக்கு பெரும் பங்கு கொண்டவர்கள் -- ஆர்ய பட்டா, வராஹ மித்ரா, பாஸ்கரா போன்ற வானியல் நிபுணர்கள்.
Q21. இந்து நாள் காட்டி எந்த 5 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது?
1. திதி Thithi 2. வாசரா Vaasara 3. நட்சத்திரம் Nakshatr 4. யோகம் Yoga மற்றும் 5. கரணா Karana. அதனால் தான் இந்து நாள் காட்டிகள் பஞ்சாங்கம் ( ஐந்து அங்கங்கள்) என அழைக்கப்படுகிறது.
Q22. திதி என்பது என்ன?
வானத்தை 360° கொண்ட ஒரு வட்டமாக கொண்டு, 30 பகுதிகளாக -- ஒவ்வொரு பகுதிக்கும் 12° -- என்ற அடிப்படையில், இந்த 12° பாதையில் சந்திரன் பயணித்த நேரம் ஒரு திதி எனப்படுகிறது.
Q23. திதி ஒவ்வொன்றும் மேலும் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
30 திதிகள் ஒவ்வொன்றும் மேலும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை ""பக்ஷம்"" என அழைக்கப்படுகிறது. இந்த இரு பிரிவுகள் ஷூக்ல பக்ஷம் (அமாவாசை முதல் பௌர்ணமி) மற்றும் கிருஷ்ண பஷம் (பௌர்ணமி முதல் அமாவாசை) என அழைக்கப்படுகின்றன.
Q24. இந்து நாள் காட்டியில் உள்ள மாதங்களின் பெயர்கள் யாவை?
1. சைத்ரா Chaitra, 2. வைஷாகா Vaisakha, 3. ஜெய்ஷ்டா Jyaishta, 4. ஆசாதா Asadha, 5. ஷ்ரவணா Shravana, 6. பத்ரபாட் Bhadrapad, 7. அஷ்வின் Ashwin, 8. கார்த்திக் Kartik, 9. மகஷீர்ஷா Maghashirsha, 10. பௌஷ் Paush, 11. மாக் Magh, 12. ஃபல்குன் Phalgun.
Q25. இஸ்லாமிய நாள் காட்டி எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது?
இது சந்திரனின் நகர்வை அடிப்படையாக, 12 மாதங்கள், 354 நாட்கள் கொண்ட வருடமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை ஹிஜ்ரி நாள்காட்டி என அழைப்பர். ஹிஜ்ரா என்பது புனிதர் முகமது மெதீனாவுக்கு சென்றடைந்ததை குறிப்பது. இந்த நாள் காட்டி 12 மாதங்களும் 354 நாட்களும் கொண்டதாக உள்ளது. அதாவது, ஆங்கில நாள்காட்டியை விட வருடத்திற்கு 10 முதல் 12 நாட்கள் வரை வித்தியாசப்படுகிறது. இதன் விளைவாக ஒவ்வொரு வருட நிகழ்வும், அடுத்த 33 வது வருடத்தில் அதே தேதியில் நிகழும் சுழற்சி ஏற்படுகிறது. அதனால், ஆங்கில தேதிகளுடன் ஒப்பிடும் போது, ஒரு வருட பண்டிகை, அடுத்த வருடம் கட்டாயமாக மாறுபடும்.
Q26. இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள் என்ன?
1. முகர்ரம் Muharram, 2. ஸஃபர் -- Safar 3. ஜூமாடா அல் அவ்வல் Jumada-al-awwal, 4. ரபி அல் தானி Rabi al Thani, 5. ஜூமாடா அல் உலா Jumada al Ula , 6. ஜூமாடா அல் அகிரா Jumada al Akhira, 7. ரஜாப் Rajab, 8. ஷா ஆபான் Sha’aban, 9. ரமதான் Ramadaan, 10. ஷவ்வால் Shawwal, 11. துல் அல் கிதா Dhu al Qidah, 12. து அல் ஹிஜ்ஜா Dhu al Hijjah.
Q27. இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினரான பஹாய் இனத்தவரின் நாள்காட்டி என்ன?
இதை ""படி (பெரிய) நாள்காட்டி"" எனவும் அழைப்பர். 365/366 நாட்கள் கொண்ட நாட்களாக இருந்தாலும், 19 நாட்கள் கொண்ட 19 மாதங்களாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நாள்காட்டி மார்ச் 21, 1844ல் தொடங்கி, இன்றைய - 2016 - நிலையில் 172 வருடங்களை கடந்துள்ளது. இவர்களுடைய புது வருடம் மார்ச் 21 வாக்கில் ""நௌரோஸ்"" என்ற பெயரில் அனுசரிக்கப்படுகிறது. இதை அறிமுகப்படுத்தியவர் இந்த மதப் பிரிவை ஏற்படுத்திய பஹாவுல்லா என்பவர்.
Q28. பெங்காலி நாள் காட்டி எப்போது முதல் உபயோகத்துக்கு வந்தது?
இது சூரிய நாள்காட்டி -- கி.பி.593/594ல் அறிமுகப்படுத்தப்பட்டது (2016ல் 1423 ஆண்டுகள் ஆகிறது). இந்த நாள் காட்டி, மேற்கு வங்காளம், கிழக்கிந்திய மாகாணங்கள், வங்காள தேசம் ஆகிய பகுதிகளில் பயனில் உள்ளது. 12 மாதங்கள் -- 1. பைஷாகா Bishaka, 2. ஜேஷ்டோ Jeshto, 3. ஓஷாரோ Osharho, 4. ஷ்ரபான் Shraban, 5. பத்ரபோடா Bhadrapoda, 6. ஒஷ்ஷினி Oshshini, 7. க்ருத்திகா Krittika, 8. அக்ரைஹோன் Agraihon, 9. புஷ்டோ Pushto, 10. மோகா Moga, 11. ஃபல்குனி Falguni, மற்றும் 12. சைத்ரா Chaitra (மார்ச்-ஏப்ரல்). வருட முதல் நாள் ஏப்ரல் 14 அன்று தொடங்குகிறது. அதை ""பொய்லா பைஷாக்"" The first day of the year falls on April 14 (Bishaka=April/May) and called as“ Poila Bhaishak “. முதல் 5 மாதங்கள் 31 நாட்களும், மற்ற 7 மாதங்களும் 30 நாட்களை கொண்டது. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளும் ஃபல்குனி மாதத்தில் (பிப்ரவரி) ஒரு நாள் சேர்க்கப்படும்.
Q29. மலையாளம் காலண்டர் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது?
கி.பி 825 ல் தொடங்கிய இந்த சூரிய நாள் காட்டி இப்போது 2016ல் 1191 ஆண்டுகள் ஆகிறது. மலையாளம் புத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகிறது. புத்தாண்டுக்கு ""விஷூ"" என்று பெயர். இந்த நாள் காட்டி மாதங்கள் -- 1. சிங்கம் .Chingam, 2. கன்னி Kanni, 3. துலாம் Thulam, 4. விருச்சிகம் Vrichikam, 5. தனுDhanu, 6. மகரம் Makaram, 7. கும்பம் Kumbham, 8. மீனம் Meenam, 9. மேடோம் Medom, 10. எடவம் Edavam, 11. மிதுனம் Midhunam, 12. கர்க்கிடக்கம் Karkidakam. பெயருடன் அஷ்ச்சா (நாள்) சேர்க்கப்படுகிறது.
Q30. தமிழ் காலண்டர் பற்றி கூறுக.
சூரிய நாள்காட்டி -- தமிழர்கள் வாழும் இடங்களான தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்கா போன்ற இடங்களில் அனுசரிக்கப்படுகிறது. புத்தாண்டு ஏப்ரல் 14 அன்று சித்திரை 1 ம் நாள் ""வருஷப் பிறப்பு"" ""தமிழ் புத்தாண்டு"" என அனுசரிக்கப்படுகிறது. வருடம் ஒவ்வொன்றுக்கும் பெயரிடப்பட்டு 60 வருட சுழற்சி செயல் முறையில் உள்ளது. மாதங்கள் -- 1. சித்திரை 2. வைகாசி 3. ஆணி 4. ஆடி 5. ஆவணி 6. புரட்டாசி 7. ஐப்பசி 8. கார்த்திகை 9. மார்கழி 10. தை 11. மாசி 12. பங்குனி. வார நாட்கள் கோள்களின் பெயர்களை கொண்டதாகவும், கிழமை என்ற சொல் சேர்த்தும் அழைக்கப்படுகிறது. .
Q31. சீக்கிய நாள் காட்டி என்ன?
இந்த இனத்தவரின் நாள் காட்டி நானக் ஷாஹி நாள் காட்டி என அழைக்கப்படுகிறது. பாலி சிங் ப்யூர்வால் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. சீக்கிய மத குரு நானக் தேவ் பிறந்த வருடத்திலிருந்து கணக்கிடப்பட்டு 2016 நிலையில் 547 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதன் புத்தாண்டு 14 மார்ச் மாத வாக்கில் ""வைஷாகி"" என அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் காட்டியில் உள்ள மாதங்கள்: 1. ச்சேட் Chet, 2. வைசாக் Vaisakh, 3. ஜேத் Jeth, 4. ஹர் Harh, 5. சாவன் Sawan, 6. பாதோன் Bhadon, 7. அஸ்ஸூ Assu, 8. கடக் Katak, 9. மகர் Maghar, 10. போஹ் Poh, 11. மாக் Magh, 12. ஃபாகுன் Phagun (February – March). முதல் நான்கு மாதங்களுக்கு 31 நாட்களும், அடுத்த ஏழு மாதங்களுக்கு 30 நாட்களும், கடைசி மாதம் 30 நாட்களும், நான்கு வருடத்திற்கு ஒரு முறை ஒரு கூடுதல் நாளும் கொண்டதாக இருக்கும்.
Q32. தெலுங்கு, கன்னடா, சிந்தி, மராத்தி மற்றும் ஒடியா மக்கள் அனுசரிக்கும் நாள் காட்டி என்ன?
தெலுங்கு, கன்னடா, சிந்தி மற்றும் மராத்திய மக்கள் இந்து நாள் காட்டியை பயன்படுத்துகிறார்கள். இவர்களுடைய புத்தாண்டு ஆங்கில மார்ச் மாத நடுவில் அனுசரிக்கப்படுகிறது. ஒடியா மக்கள் தமிழ் நாட்டு நாள் காட்டி போல் அனுசரிக்கின்றனர். அதனால் இவர்கள் புத்தாண்டை ஏப்ரல் மாத நடுவில் அனுசரிக்கின்றனர்.
Q33. புத்த மதத்தினர் எவ்வகையான நாள் காட்டியை அனுசரிக்கின்றனர்?
சூரிய நாள் காட்டி Luni Solar, ஒவ்வொரு மாற்று மாதங்களும் 29 அல்லது 30 நாட்கள் கொண்டதாகவும், இடையில் 30 நாள் கொண்ட ஒரு மாதம் இடையில் சேர்க்கும் படியாகவும் அமைக்கப்படுகிறது. இவர்கள் நாள் காட்டி சூர்ய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. மாதப் பெயர்கள் இந்து நாள் காட்டியைப் போன்றதே.
Q34. நேபாள மக்களின் நாள் காட்டி எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது?
இந்திய மன்னர் விக்ரமாதித்யா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இது, பிக்ரம் சம்வாத் அல்லது சம்பத் என அழைக்கப்படுகிறது. இவர்களுடைய நாள் காட்டி ஆங்கில ஆண்டுகளை விட 57 ஆண்டுகள் முன்பேயானதாக அமைந்துள்ளது. ஏப்ரல் 13/14 தேதியில் புத்தாண்டும், இந்திய கிழக்கு மாகாணங்களில் அழைக்கப்படும் பெயர்களே மாதங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. மாத நாட்கள் 29 முதல் 32 நாட்கள் வரை வேறுபடுகிறது.
Q35. சீன நாள் காட்டியின் சிறப்பு அம்சம் என்ன?
சந்திர சூரிய நாள்காட்டி A lunisolar calendar -- ""யாங்“Yang” என அழைக்கப்படுகிறது. மக்களின் கலாச்சார பண்டிகைகள் நாளைக் குறிக்க மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மற்ற அலுவல்களுக்கு ஆங்கில நாள் காட்டி தான் பயன்படுத்தப்படுகிறது. சீன நாள் காட்டியின் சிறப்பு அம்சம் என்னவென்றால், வருடங்களுக்கு விலங்குகள் பெயர்கள் இடப்பட்டுள்ளன -- எலி, எருது, புலி, முயல், ட்ராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி ஆகியவை. தற்சமயம், பிப்ரவரி 2017 வரை, இது குரங்கு ஆண்டாக உள்ளது. இதே போல் ராசிகள் இயற்கை, விளைப் பொருட்கள் -- இளவேனிற் காலம், மழை, தானியங்கள், கோடைகாலம் என பெயரிடப்பட்டுள்ளது.
Q36. யூதர்களின் நாள் காட்டி எவ்வகையை சார்ந்தது, சிறப்பு அம்சம் என்ன?
சந்திர சூரிய நாள் காட்டி -- A lunisolar calendar. இம்முறையில் சந்திர மாதங்களுக்கும் சூர்ய வருடத்துக்கும் இடையில் 11 நாட்கள் வித்தியாசம் ஏற்படுவதால், இந்த நாள் காட்டி 19 வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி பெறுகிறது. இதன் காரணமாக இரண்டு/மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சந்திர மாதம் வீதமாக 19 வருடங்களில் 7 முறை சேர்க்கப்படுகிறது. பொதுவாக 12 மாதங்கள் கொண்டது. மேற்கூறிய முறைப்படி இரண்டு/மூன்று வருடங்களுக்கு ஒரு முறை 13 மாதங்கள் கொண்டதாகிறது. நாட்கள் “Yom” என அழைக்கப்படுகிறது. நாட்கள் எண்களின் மூலம் (First =Sunday) அறியப்படுகிறது. சனிக்கிழமை “Sabbath” ""ஓய்வு நாள்"" எனவும் ஹீப்ரு மொழியில் அறியப்படுகிறது.
Q37. பார்சி இன Zoroastrian மக்களின் நாள் காட்டி எவ்வகையில் அமைந்துள்ளது?
இவர்களின் நாள் காட்டி ஏறக்குறைய வெப்பமண்டல பகுதி மக்களின் நாள் காட்டிக்கு இணையானது. கி.மு காலத்து சஸ்ஸானித் வம்ச மன்னர் அர்தாஷிர் 1 என்பவரால் கி.மு 226-224 காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்டு, பல மாறுதல்களுக்குட்பட்டு, 1925ல் இரானிய பாராளுமன்றம் தற்போது வழக்கத்திலிருக்கும் நாள் காட்டி அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாள் காட்டி “Solar Hejri” என அழைக்கப்படுகிறது. இவர்களின் புத்தாண்டு மார்ச் 21ந்தேதி தொடங்குகிறது. முதல் 6 மாதங்கள் 31 நாட்களும், அடுத்த 5 மாதங்கள் 30 நாட்களும் கடைசி மாதம் 29/30 (லீப்) நாட்கள் உடையதாகவும் இருக்கும். இவர்களுடைய வாரத் தொடக்கம் சனிக்கிழமை தொடங்கி வெள்ளி அன்று முடிகிறது. நாட்களின் பெயர்களின் பின்னால் “ambe” என்ற சொல் சேர்க்கப்படுகிறது. Saturday is “Yekshambe”
Q38. இஸ்லாமிய நாள் காட்டி ஆங்கில நாள் காட்டியை விட எத்தனை நாட்கள் குறைவானது?
11 நாட்கள் -- அதனால் இஸ்லாமிய பண்டிகைகளின் ஆங்கில தேதி, ஒவ்வொரு வருடமும் 11 நாட்கள் மாறி வரும்.
Q39. எந்த இனத்தவரின் நாள் காட்டி 19 நாட்களைக் கொண்ட 19 மாதங்களாக இருக்கிறது?
இஸ்லாமியர்களி ஒரு பிரிவினரான பஹாய் இனத்தவரின் நாள் காட்டி. அதனால் இதை ‘Badi Calendar” ""பெரிய நாள்காட்டி"" என அழைக்கின்றனர்.
Q40. எந்த நாள்காட்டி, ஆங்கில நாள் காட்டியை விட 57 வருடங்களுக்கு முன்பானது?
நேபாள நாள் காட்டி -- இப்போது 2016 -- நேபாள நாள் காட்டியில் 2073.
Q41. எந்த நாள்காட்டியில் மாதங்களுக்கு விலங்குகளின் பெயர்கள் இடப்பட்டுள்ளன?
சீன நாள்காட்டி.
Q42. எந்த நாள் காட்டி முறையில், இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் மூலம், 19 வருடங்களுக்குள் 7 மாதங்கள் சேர்க்கும் முறை பழக்கத்தில் உள்ளது?
யூதர்களின் நாள்காட்டி.
Q43. தொடக்க காலத்தில் க்ரெகேரியன் நாள் காட்டியில் 10 மாதங்களே இருந்தன. பிறகு இரண்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன. அவை எவை?
ஜனவரி மற்றும் பிப்ரவரி .. இவை ஜூலியன் நாள் காட்டிக்கு கி.மு.713ல் சேர்க்கப்பட்டது.
Q44. க்ரெகேரியன் மாதங்களில் எந்த மாதம் “Hunter’s month” என அழைக்கப்படுகிறது?
பிப்ரவரி
Q45. க்ரெகேரியன் நாள்காட்டி அறிமுகப்படுத்துவதற்கு முன் இருந்த நாள்காட்டிகள் யாவை?
ரோமன் Roman: ஜூலியன் நாள்காட்டிக்கு முன்பாக இருந்தது. இது சந்திரன் நகர்வை பொருத்து உருவாக்கப் பட்டது. ரோமை நிறுவிய ரொமலஸ் என்பவரால் கி.மு.753ல் அறிமுகப்படுத்தப்பட்டு, கி.மு.46 வரை அனுசரிக்கப்பட்டது. இதில் 10 மாதங்கள் ( 4 × 31 and 6 × 30 days) கொண்டு 304 நாட்களுக்கு உட்பட்டதானது. இம்முறையில் 61 பனி நாட்கள் விலக்கப்பட்டிருந்தது. கி.மு. 713ல் நூமா போம்பிலஸ் என்ற கிரேக்க மன்னர் பனி மாதங்களான ஜனவரி 29 நாட்களையும், பிப்ரவரி 28 நாட்களையும் சேர்த்து, மற்ற 10 மாதங்களை 29 நாட்கள் கொண்டதாக மாற்றி, 355 நாட்கள் கொண்ட 12 மாத நாள் காட்டியை அறிமுகப் படுத்தினார்.
ஜூலியன் Julian: கி.மு. 46 வரை இருந்த ரோமன் நாள் காட்டியான 355 நாட்களாக இருந்த்தில், பல புவியியல் காரணங்கள் அடிப்படையில் 10 நாட்கள் மேலும் சேர்க்கப்பட்டு 365 நாட்கள் கொண்ட வருடமாக மாற்றப்பட்டது. இவ்வாறாக மாற்றம் செய்யப்பட்ட ஜூலியன் நாள் காட்டி, கி.பி.1582 வரை நடைமுறையில் இருந்தது. பிறகு 1582ல் போப்பாண்டவர் க்ரெகரி 12 மாதங்கள், 365 நாட்கள் கொண்ட நாள் காட்டியை பிரகடனம் செய்தார். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள்சேர்க்கப்பட்டு மொத்தமாக 365.25 நாட்கள் கொண்ட வருடமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை க்ரெகேரியன் நாள் காட்டி என அழைக்கப்படுகிறது.
Q46. இந்து நாள் காட்டி முறையில் "வாசரா" “Vaasara” என்பது என்ன?
""நாள் “Day” என்று பொருள். 7 நாட்கள் கொண்டது ஒரு வாரமாக - ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கோளின் பெயர் இடப்பட்டுள்ளது. பெயருடன் கிழமை (நாள்) சேர்த்து அழைக்கும் வழக்கம் உள்ளது.
1. ரவி வாஸரா Ravi (Sun) Vasara–ஞாயிறு
2. சோம வாஸரா Soma (Moon) Vasara–திங்கள்
3. மங்கள வாஸரா Mangala (Mars) Vasara–செவ்வாய்
4. புத வாஸரா Budha (Mercury) Vasara–புதன்
5. குரு வாஸரா Guru (Jupiter) Vasara–வியாழன்
6. ஷூக்ர வாஸரா Shukra (Venus) Vasara–வெள்ளி
7. ஷனி வாஸரா Shani (Saturn) Vasara–சனி.
Q47. இந்திய தேசிய நாள்காட்டிக்கும் ஆங்கில க்ரெகேரியன் நாள்காட்டிக்கும் உள்ள ஒப்பீடு:
சக சகாப்த மாதம் நாட்கள் ஆங்கில க்ரெகேரியன் மாத ஒப்பீட்டு நாட்கள்
சைத்ரா * Chaitra 30/31 மார்ச் 21/22
வைஷாகா Vaishaka 31 ஏப்ரல் 21
ஜெய்ஷ்டா Jyaishta 31 மே 22
ஆஷாடா Ashada 31 ஜூன் 22
ஸ்ரவணா Sravana 31 ஜூலை 23
பத்ரா Bhadra 31 ஆகஸ்ட் 23
அஸ்வினா Asvina 30 செப்டம்பர் 23
கார்த்திகா Kartika 30 அக்டோபர் 23
மார்கசீரிஷ் Margha Shirsh 30 நவம்பர் 22
பௌசா Pausa 30 டிசம்பர் 22
மகா Magha 30 ஜனவரி 21
ஃபல்குனா Phalguna 30 பிப்ரவரி 20.
* லீப் வருடங்களில் சைத்ரா 31 நாட்கள்
** முதல் ஐந்து மாதங்கள் 31 நாட்கள் கொண்டதாக இருக்கும்.
Q48. ஆண்டு விழாக்கள் -- ANNIVERSARIES:
ஒரு நிகழ்வு நடந்து ஒரு வருடம் முடிந்தால் அதை ஒரு நினைவாகவும், அதே போல் சில குறிப்பிட்ட ஆண்டுகள் முடிவு பெறும் போது அதை கொண்டாடுவதும், நினைவாகவும் அனுசரிப்பது உலகளவில் உள்ள வழக்கம். அவற்றுக்கு ஆங்கில பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவை கொடுக்கப்பட்டுள்ளது.
வருட ஆங்கில பெயர்கள் வருட முடிவுகள்
Annual 1
Biennial 2
Tricennial 3
Quadrennial 4
Quinquennial 5
Sexennial 6
Septennial 7
Octennial 8
Novennial 9
Decennial 10
Undecennial 11
Duodecennial 12
Tredecennial 13
Quattuordecennial 14
Vigintennial or Vicennial 20
Semicentennial/Quinquagenary 50
Semisesquicentennial 75
Centennial 100
Quasquicentennial 125
Sesquicentennial 150
Demisemiseptcentennial/Quartoseptcentennial 175
Bicentennial 200
Semiquincentennial 250
Tercentennial/Tricentennial 300
Semiseptcentennnial 350
Quadri centennial/Quarter Centennary 400
Quin Centennial 500
Sex Centennial 600
Septcentennial/Septua Centennial 700
Octo Centennial 800
Nona Centennial 900
Millenial/Millenium 1000
Bimillenial 2000
விழா பெயர் JUBILEE: வருட முடிவு
வெள்ளி விழா Silver 25
பொன் விழா Golden 50
வைர விழா Diamond 60
ப்ளாட்டினம் விழா Platinum 75
நூற்றாண்டு விழா Centenary 100
திருமண விழாக்கள் -- WEDDING ANNIVERSARIES:
வருட முடிவு பெயர்
1 காகிதம் Paper
2 பருத்தி Cotton
3 தோல் Leather
4 லினன், சில்க் Linen, Silk
5 மரம் Wood
10 டின் Tin
15 க்றிஸ்டல் Crystal
20 சைனா China
25 வெள்ளி Silver
30 முத்து Pearl
35 பவளம் Coral
40 ரூபி Ruby
45 சஃபையர் Sapphire
50 பொன் Golden
60 வைரம் Diamond
65 நீலக்கல் Blue Sapphire.

ஆங்கில மாதங்களைப் பற்றிய விவரங்கள்: GREGORIAN MONTHS: ஜனவரி

Q49. ஜனவரி மாதம் யாருடைய பெயர் பெற்றுள்ளது?
ஜேனஸ் Janus – ரோமானிய கதவுகளுக்கான கடவுள். இந்த கடவுளின் ஒரு முகம் முந்தைய வருடத்தை நோக்கியதாகவும், இன்னொரு முகம் எதிர் வரும் வருட்த்தை நோக்கியதாகவும் அமைந்திருக்கும். ஜனவரி மாதத்தின் சிறப்பு -- ஜனவரி மாதத்தின் தொடக்கநாள் அக்டோபர் மாத தொடக்க நாளும் ஒன்றாக இருக்கும். லீப் வருடங்களில் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்தைப் போல் தொடங்கும். சாதாரண வருடங்களில், ஜனவரி மாதத்தின் முடிவு நாள், பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாத முடிவு நாளுடன் சமமாக இருக்கும். லீப் வருடத்தில், ஜனவரி மற்றும் ஜூலை மாத முடிவு நாட்கள் ஒன்றாக இருக்கும்.
Q50. ஜனவரி மாதம் எப்போது நாள் காட்டியில் சேர்க்கப்பட்டது?
கி.மு. 713ல். இதனுடன் பிப்ரவரியும் சேர்க்கப்பட்டது. இதற்கு முன்பாக 10 மாதங்கள் கொண்ட நாள்காட்டியில் மார்ச் தான் முதல் மாதமாக இருந்தது.
Q51. ஜனவரி மாதத்தின் மலரும் ராசிக்கல்லும் எது?
மலர் == Galanthus ; ராசிக்கல் -- மாணிக்கம் Garnet
Q52. ஜனவரி மாதத்தின் ஜோதிட அடையாளங்கள் (zodiac astrological signs) யாவை ?
மகரம் -- கும்பம் Capricorn – Aquarius.
Q53. ஜனவரி மாதத்தின் முக்கியமான நாட்கள் யாவை?
ஜனவரி 1 -- புத்தாண்டு
ஜனவரி 13/14 -- பைஷாகி, பொங்கல், சங்கராந்தி பண்டிகைகள். கேரளாவில் மகர விளக்கு - சபரிமலை
ஜனவரி 26 -- இந்திய குடியரசு தினம். ஆஸ்திரேலியா நாள் இந்த மாதத்தில் வரக்கூடிய இஸ்லாமிய பண்டிகை முஹர்ரம்.

பிப்ரவரி

Q54. பிப்ரவரி மாதம் எப்போது நாள் காட்டியில் சேர்க்கப்பட்டது?
கி.மு. 713
Q55. பிப்ரவரி மாதத்தின் சிறப்பு அம்சம் என்ன?
(1) இந்த ஒரு மாதம் மட்டும் 30 க்கும் குறைவான நாட்களைக் கொண்டது. பொதுவாக 28 நாட்களும், லீப் வருடத்தில் ஒரு நாள் சேர்த்து 29 நாட்களும் கொண்டது.
(2) பிப்ரவரி மாதத்தின் நாட்கள் மார்ச் மற்றும் நவம்பர் மாதத்துக்கு இணையாக இருக்கும்.
(3) 1712ல், ஸ்வீடன் நாட்டில் மட்டும் இந்த மாதத்தில் 30 நாட்கள் கணக்கிடப்பட்டது.
Q56. பிப்ரவரி மாதத்தின் மலரும் ராசிக்கல்லும் எது?
மலர் == Violet/Primrose; ராசிக்கல் == செவ்வந்திக் கல்.
Q57. பிப்ரவரி மாதத்தின் ஆங்கில ஜோதிட அடையாளங்கள் zodiac astrological signs யாவை?
கும்பம் -- மீனம் Aquarius – Pisces.
Q58. பிப்ரவரி மாதத்தின் முக்கிய நாட்கள் யாவை?
பிப்ரவரி 3 -- சீன புத்தாண்டு நாள்
பிப்ரவர் 4 -- ஸ்ரீ லங்கா சுதந்திர தினம்; நியூசிலாந்தின் ""வைடாங்கி"" நாள்
பிப்ரவரி 11 -- ஜப்பான் நாடு உருவான நாள்;
பிப்ரவரி 12 -- ஆப்ரஹாம் லிங்கன் பிறந்த நாள் - அமெரிக்கா
பிப்ரவரி 14 -- காதலர் தினம்
பிப்ரவரி 21 -- சர்வதேச தாய் மொழி தினம்
பிப்ரவரி 22 -- ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த நாள்;
பிப்ரவரி 26 -- குவைத் சுதந்திர நாள்
பிப்ரவரி 27 -- டொமினிகன் குடியரசு சுதந்திர நாள் இந்த மாதத்தின் 3 வது வாரம் வட இந்தியாவின் முக்கிய பண்டிகையான ""ஹோலி"" .
Q59. பிப்ரவரி என்ற பெயரின் பின்னணி என்ன?
புராண காலத்து ரோமானிய பண்டிகை ""பிப்ருவா"" “Februa” -- பாவம் செய்தவர்கள் தங்கள் பாவங்களை ஏற்றுக் கொண்டு பாவ மன்னிப்பு பெறும் பண்டிகை.

மார்ச்

Q60. மார்ச் மாதம் இப்பெயர் பின்னணி என்ன?
மார்ஸ் MARS – ரோமானிய போர்க் கடவுள்
Q61. மார்ச் மாதத்தின் தொடக்கமும் எவ்வாறிருக்கும்?
(1) மார்ச் மாத தொடக்கம் நவம்பர் மாத தொடக்க நாளும் ஒன்றாக இருக்கும்.
(2) மார்ச் மாத முடிவு நாள் ஜூன் மாதத்துக்கு இணையாக இருக்கும்.
Q62. மார்ச் மாதத்தின் மலர் மற்றும் ராசிக்கல் எது?
மலர் -- Daffodil ; ராசிக்கல் -- Aquamarine and Blood Stone
Q63. மார்ச் மாதத்தின் ஆங்கில ஜோதிட அடையாளங்கள் யாவை?
மீனம் -- மேஷம் Pisces and Aries.
Q64. மார்ச் மாதத்தில் நடைபெறும் சில முக்கியமான பண்டிகைகள் யாவை?
தெலுங்கு வருட பிறப்பு, மஹாவீர் ஜெயந்தி, மார்டி க்ராஸ், ஆஷ் புதன் கிழமை, புனித வெள்ளி, புனித டேவிட் திருநாள், புனித ஜோசஃப் நாள், ஈஸ்டர், நௌரோஸ் பார்சி புத்தாண்டு,
மார்ச் 8 -- சர்வதேச மகளிர் தினம்.
மார்ச் 14 -- அமெரிக்காவில் பை (22/7) நாள்
மார்ச் 22 -- உலக நீர் தினம்
மார்ச் 23 -- பாகிஸ்தான் நாள்
மார்ச் 26 -- வங்காள தேச சுதந்திர நாள், மார்ச் மாதத்தின் முதல் புதன் கிழமை -- உலக கணித தினம் மார்ச் மாதத்தின் இரண்டாம் வியாழக்கிழமை -- உலக சிறுநீரக நாள்.

ஏப்ரல்

Q65. ஏப்ரல் மாதத்திற்கு யாருடைய பெயரிடப்பட்டுள்ளது?
சரியான தகவல் எதுவுமில்லை. இருப்பினும், கிரேக்க காதல் கடவுல் அஃப்ரோடைட் பெயர் வைத்திருக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அல்லது, ரோம சொல் ""ஏப்ரைர் “Aprire” லிலிருந்து எடுத்திருக்கப் படலாம் எனவும் நம்பப்படுகிறது.
Q66. ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் மற்றும் முடிவு நாட்கள்……….
எல்லா வருடமும் ஜூலை மாதம் முதல் நாள் போல் தொடங்கி, டிசம்பர் மாதம் முடிவு பெறும் நாளில் முடிவடைகிறது.
Q67. ஏப்ரல் மாதத்தின் மலரும், ராசிக் கல்லும் எது?
மலர் == Daisy and Sweet Pea மற்றும் ராசிக்கல் == வைரம்
Q68. ஏப்ரல் மாதத்தின் ஆங்கில ஜோதிட அடையாளங்கள் யாவை?
மேஷம் - ரிஷபம் Aries and Taurus.
Q69. ஏப்ரல் மாதத்தில் பொதுவாக அனுசரிக்கப்படும் நாட்கள் யாவை?
ஏப்ரல் -- 1 உலக முட்டாள்கள் தினம். வணிகக் கணக்கு தொடங்கும் நாள்.
ஏப்ரல் -- 4 மார்ட்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்ட நாள் 1968.
ஏப்ரல் -- 7 World Health Day
ஏப்ரல் -- 8 புத்த பூர்ணிமா
ஏப்ரல் -- 13 தாய்லாந்து, லாவோஸ், மியான்மார் நாடுகளில் புத்தாண்டு
ஏப்ரல் -- 14 ஆப்ரஹாம் லிங்கன் கொலை செய்யப்பட்ட நாள் 1865; டைட்டானிக் கப்பல் மூழ்கிய நாள் 1912;
ஏப்ரல் -- 17 சிரியா சுதந்திர நாள்
ஏப்ரல் -- 20 ஹிட்லர் பிறந்த நாள்
ஏப்ரல் -- 22 உலக புவி நாள்
ஏப்ரல் -- 25 அன்ஸாக் நாள் Anzac Day -- ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில்
ஏப்ரல் -- 26 செர்னோபில் அணு விபத்து 1986
ஏப்ரல் மாதத்தில் வரும் இதர பண்டிகைகள் -- புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு, விஷூ மலையாள புத்தாண்டு
ஏப்ரல் மாத மூன்றாவது திங்கள் -- பாஸ்டன் மராத்தான் போட்டி.
ஏப்ரல் மாத நான்காவது ஞாயிறு -- லண்டன் மராத்தான் போட்டி.

மே

Q70. மே மாதத்திற்கு இப்பெயர் வரக்காரணம் என்ன?
மையா -- MAIA – கருவுறுதல் மற்றும் தாவரங்களின் கிரேக்க கடவுள் --(ஜூபிடரின் துணைவியார்)
Q71. மே மாதத்திற்கான மலர் மற்றும் ராசிக்கல் எது?
மலர் == Lily/Hawthorn ; ராசிக்கல் == மரகதம் Emerald
Q72. மே மாதத்திற்கான ஆங்கில ஜோதிட அடையாளங்கள் யாவை?
ரிஷபம் -- மிதுனம் Taurus -- Gemini.
Q73. மே மாதத்தின் தொடக்க, முடிவு நாள் எவ்வாறு அமைந்துள்ளது?
மே மாதம் சற்றே வித்தியாசமானது. மே மாதத்தின் தொடக்க நாள் வேறு எந்த மாதத்திலும் இருக்காது. (ஜூன் மாதமும்). பொதுவாக மே மாதத்தின் தொடக்க நாள் அடுத்து வரும் வருடத்திலும் அதே நாளாக இருக்கும். மே மாதத்தின் முடிவு நாள் வேறு எந்த மாதத்திலும் இருக்காது.
Q74. மே மாதத்தின் மலர் மற்றும் ராசிக்கல் எது?
மலர் == Crataegus monogyna, Lily of the Valley ; ராசிக்கல் == மரகதம் Emerald
Q75. மே மாதத்தில் எந்த நோய்களின் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது?
மூளைக்கட்டி Brain Tumor மற்றும் தோல் புற்று நோய் Skin Cancer.
Q76. மே மாதத்தின் முக்கியமான பண்டிகைகள் யாவை?
மே 1 -- தொழிலாளர் தினம்
மே 4 -- டென்மார்க் மற்றும் நெதர்லாந்தின் விடுதலை நாள்
மே 5 -- ஜப்பானில் குழந்தைகள் தினம்
மே 9 -- ஐரோப்பிய யூனியன் நிறுவப்பட்ட நாள்.
மே 12 -- சர்வதேச செவிலியர்கள் தினம்
மே 24 -- எரிட்ரியா சுதந்திர தினம்
மே மாத இரண்டாவது சனிக்கிழமை -- தாய்மார்கள் தினம், அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில்.
மே மாத இரண்டாவது சனிக்கிழமை -- உலக வர்த்தக கண்காட்சி நாள்

ஜூன்

Q77. ஜூன் மாதத்திற்கு யாருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது?
ஜூனோ -- Juno – ரோமக் கடவுள் ஜூபிடரின் துணைவியார் -- பெண்கடவுள், சொர்க்கத்தின் கடவுள்.
Q78. ஜூன் மாதத்தின் மலர் மற்றும் ராசிக்கல் எது?
மலர் == Rose and Honey Suckle ; ராசிக்கல் – Pearl, Moonstone and Alexandrite
Q79. ஜூன் மாதத்தின் ஆங்கில ஜோதிட அடையாளங்கள் யாவை?
மிதுனம் - கடகம் Gemini and Cancer.
Q80. ஜூன் மாத அமைப்பின் சிறப்பு அம்சம் என்ன?
ஜூன் மாதத்தின் தொடக்க நாள் மற்ற எந்த மாதத்துடனும் ஒத்து இருக்காது. முடிவு நாள் மார்ச் மாதத்துக்கு இணையாக இருக்கும்.
Q81. ஜூன் மாதத்தில் நிகழக்கூடிய முக்கியமான புவியியல் ரீதியான நிகழ்வு என்ன?
ஜூன் 20 -- 22 தேதிக்குள், வட துருவத்தில் கோடை கதிர் திருப்பமும் Summer Solstice, தென் துருவத்தில் பனிக் கதிர் Winter Solstice திருப்பமும் நிகழ்வது.
Q82. வருடந்தோறும் ஜூன் மாதத்தில் நடக்கக்கூடிய உலகப்புகழ் பெற்ற விளையாட்டு போட்டி எது?
லண்டன் நகரில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி
Q83. ஜூன் மாதத்தில் நடைபெறும் சில முக்கிய பண்டிகைகள் யாவை?
ஜூன் -- 12 -- பிலிப்பைன்ஸ் சுதந்திர தினம்
ஜூன் -- 13 -- டொனால்ட் டக் கார்ட்டூன் பிறந்த நாள்
ஜூன் -- 17 -- ஐஸ்லாந்து சுதந்திர தினம்
ஜூன் மாதம் -- அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்களின் கௌரவ மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
ஜூன் மாதம் இரண்டாவது ஞாயிறு -- தந்தையர் தினம் -- பெல்ஜியம்.
ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறு -- தந்தையர் தினம் -- அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம், நெதர்லாந்து, அயர்லாந்து, கேனடா.

ஜூலை

Q84. ஜூலை மாதத்துக்கு யாருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது?
ஜூலியஸ் சீசர் -- Julius Caesar. (இவர் ஜூன் மாதத்தில் பிறந்தவர்)
Q85. ஜூலை மாதம் எந்த நாளில் தொடங்கி என்று பொதுவாக தொடங்கும்?
ஜூலை மாதம், பொது வருடங்களில் ஏப்ரல் மாதம் தொடங்கும் நாளில் தொடங்கி, லீப் வருடங்களில் ஜனவரி மாத தொடக்கநாளில் தொடங்குகிறது. பொது வருடங்களில் ஜூலை மாதத்தின் முடிவு நாள் மற்ற மாதங்கள் முடிவு நாட்களுடன் சேராது. லீப் வருடத்தில் மட்டும் ஜனவரி மாத முடிவு நாளும் ஜூலை முடிவு நாளும் ஒன்றாக இருக்கும்.
Q86. ஜூலை மாதத்தின் மலர் மற்றும் ராசிக்கல் எது?
மலர் == Water Lily ; ராசிக்கல் == ரூபிக் கல் – Ruby .
Q87. புவியியல் ரீதியாக ஜூலை மாதத்தின் சிறப்பு அம்சம் என்ன?
வட துருவத்தில் ஜூலை மாதமும், தென் துருவத்தில் ஜனவரி மாதமும் புவியியல் ரீதியாக ஒன்றாகும்.
Q88. வருடந்தோறும் ஜூலை மாதத்தில் நடக்கும் முக்கிய விளையாட்டு போட்டி என்ன?
டூர்-டி-ஃப்ரான்ஸ் -- Tour-de-France – சைக்கிள் போட்டி.
Q89. ஜூலை மாதத்தின் ஆங்கில ஜோதிட அடையாளங்கள் யாவை?
கடகம் - சிம்மம் Cancer – Leo.
Q90. ஜூலை மாதத்தில் பொதுவாக நடக்கும் பண்டிகைகள் யாவை?
ஜூலை 1 -- கேனடா நாள்; சோமாலியாவின் சுதந்திர நாள்
ஜூலை 3 -- பெலாரூஸ் சுதந்திர நாள்
ஜூலை 4 -- அமெரிக்காவின் சுதந்திர நாள்
ஜூலை 5 -- வெனிசுலா, அல்ஜீரியா நாட்டின் சுதந்திர நாள்.
ஜூலை 6 -- மாளவி நாட்டு சுதந்திர தினம்
ஜூலை 9 -- அர்ஜெண்டினா நாட்டின் சுதந்திர தினம்
ஜூலை 10 -- பஹாமாஸ் நாட்டு சுதந்திர தினம்
ஜூலை 20 -- கொலம்பியா நாட்டின் சுதந்திர தினம்
ஜூலை 21 -- பெல்ஜியம் நாட்டின் சுதந்திர தினம்
ஜூலை 23 -- எகிப்து நாட்டின் தேசிய தினம்
ஜூலை 26 -- மாலத்தீவின் சுதந்திர தினம்
ஜூலை 28 -- பெரு நாட்டின் சுதந்திர தினம்
ஜூலை 30 -- வனுவாட்டு நாட்டின் சுதந்திர தினம்

ஆகஸ்ட்

Q91. ஆகஸ்ட் மாதத்திற்கு யாருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது?
ரோம மன்னர் அகஸ்டஸ்.
Q92. ஆகஸ்ட் மாத அமைப்பின் சிறப்பு அம்சம் என்ன?
1. பொது வருடங்களில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்க நாள் மற்ற மாதங்களுக்கு இணையாக இருக்காது.
2. லீப் வருடத்தில், ஆகஸ்ட், பிப்ரவரி மாதங்களின் தொடக்க நாள் ஒன்றாக இருக்கும்.
3. ஆகஸ்ட் மாதத்தின் முடிவு நாள் நவம்பர் மாதத்துக்கு இணையாக இருக்கும்.
4. தொடக்கத்தில் 29 நாட்கள் மட்டுமே கொண்ட இந்த மாதம், கி.மு. 45ல் ஜூலியஸ் சீஸரால் 2 நாட்கள் சேர்க்கப்பட்டு 31 நாட்கள் ஆனது.
Q93. புவியியல் ரீதியாக ஆகஸ்ட் மாதம் எந்த மாதத்துக்கு இணையானது?
தென் துருவ ஆகஸ்ட் வட துருவ பிப்ரவரிக்கு இணையாக இருக்கும்.
Q94. ஆகஸ்ட் மாதத்தின் மலரும், ராசிக் கல்லும் என்ன?
மலர் == Gladiolus or Poppy ; ராசிக்கல் == Peridot or Onyx
Q95. ஆகஸ்ட் மாதத்தின் சில முக்கியமான பண்டிகைகள் யாவை?
ஆகஸ்ட் 1 - ஸ்விட்சர்லாந்து தேசிய தினம்
ஆகஸ்ட் 5 - பர்கினோ ஃபாஸோ சுதந்திர தினம்.
ஆகஸ்ட் 6 - இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா நகரில் குண்டு போடப்பட்ட நாள்.
ஆகஸ்ட் 9 - இரண்டாம் உலகப்போரில் நாகசாகி நகரில் குண்டு போடப்பட்ட நாள். சிங்கப்பூர் சுதந்திரநாள்.
ஆகஸ்ட் 10 - இக்குவேடார் சுதந்திர நாள்
ஆகஸ்ட் 14 - பாகிஸ்தான் சுதந்திர நாள்; முதல் உலகப்போர் தொடக்க நாள் (1914)
ஆகஸ்ட் 15 - இந்தியா, கொரியா, பஹ்ரைன் சுதந்திர தினம். நெப்போலியன், அரவிந்த கோஷ் பிறந்த நாள்; கொல்கத்தாவின் மோஹன் பேகன் கால்பந்து சங்கம் நிறுவப்பட்ட நாள்; வங்காள தேச தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை செய்யப்பட்ட நாள்.
ஆகஸ்ட் 17 - இந்தோநேசியா சுதந்திர தினம்
ஆகஸ்ட் 25 - உருகுவே நாட்டின் சுதந்திர தினம்
ஆகஸ்ட் 31 - மலேசியா நாட்டின் சுதந்திர தினம் ஆகஸ்ட் மாதத்தில், விநாயக சதுர்த்தி, இங்கிலாந்தில் எடின்பர்க் திருவிழா ஆகியவை.

செப்டம்பர்

Q96. செப்டம்பர் பெயர் வரக் காரணம் என்ன?
தொடக்கத்தில் இது ஏழாவது மாதமாக இருந்ததால், லத்தீன் மொழியில் (ஏழாம் எண்) இதன் பெயர் இவ்வாறு அழைக்கப்பட்டது. இதற்கு பிறகு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் சேர்க்கப்பட்ட பிறகும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் அழைக்கப்பட்டு வருகிறது.
Q97. செப்டம்பர் மாதத்தின் தொடக்க மற்றும் முடிவு நாள் எவ்வாறு அமைந்துள்ளது?
செப்டம்பர் மாத தொடக்க நாளும், டிசம்பர் மாத தொடக்க நாளும் ஒன்றாக இருக்கும். செப்டம்பர் மாத முடிவு நாள், வேறு எந்த மாதத்துக்கும் இணையாக இருக்காது.
Q98. புவியியல் ரீதியாக செப்டம்பர் மாதம் .............
1. வட துருவ செப்டம்பர் தென் துருவ மார்ச் மாதத்துக்கு இணையாகவும், அதே போல் மாற்று நிலையிலும் இருக்கும்.
2. செப்டம்பர் 21-24 தேதிக்குள், வட துருவத்தின் இலையுதிர் சம இரவும் Autumnal Equinox, தென் துருவ இளவேனிற் சம இரவும் Vernal Equinox நிகழும்.
Q99. செப்டம்பர் மாதத்தின் மலரும் ராசிக்கல்லும் எது?
மலர் == Aster, Morning Glory and Forget me Not ; ராசிக்கல் == Sapphire
Q100. செப்டம்பர் மாத பொதுவான பண்டிகைகள் யாவை?
செப்டம்பர் 1 - உஸ்பெகிஸ்தான் சுதந்திர தினம்
செப்டம்பர் 2 - இரண்டாம் உலகப்போர் 1939 ல் தொடங்கி, 1945 ல் முடிவடைந்தது.
செப்டம்பர் 5 - டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் -- ஆசிரியர்கள் தினம்.
செப்டம்பர் 7 - ப்ரேசில் நாட்டு சுதந்திர தினம்
செப்டம்பர் 11 - விவேகானந்தரின் சிகாகோ நகர மகத்தான சொற்பொழிவு -- 1893. வினோபா பாவே பிறந்த நாள், முகமது அலி ஜின்னா மறைவு நாள், தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி அமைதி போராட்டம் 1906ல் தொடங்கிய நாள், அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தில் தீவிர வாத தாக்குதல் -- 2001.
செப்டம்பர் 16 - மெக்ஸிகோ சுதந்திர தினம்
செப்டம்பர் 18 - சிலி நாட்டின் சுதந்திர தினம்.
செப்டம்பர் 19 - செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் சுதந்திர தினம்
செப்டம்பர் 21 - சர்வதேச அமைதி நாள்
செப்டம்பர் மாத இறுதியில , ஜெர்மனி நாட்டில் அக்டோபர் திருவிழா. செப்டம்பர் மாத முதல் ஞாயிறு, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ""தந்தையர் தினம்""

அக்டோபர்

Q101. அக்டோபர் என்ற பெயரின் பின்னணி என்ன? How did October get its name?
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் சேர்ப்பதற்கு முன் 10 மாதங்களாக இருந்த நாள் காட்டியில் இது 8 வது மாதமாக இருந்த போது லத்தீன் மொழி சொல் “Octo” (பொருள் = எட்டு) என்ற பெயர் இருந்தது. அது அப்படியே இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Q102. புவியியல் ரீதியாக அக்டோபர் மாதம் ...........?
வட துருவத்தின் அக்டோபர் மாதம், தென் துருவத்தின் ஏப்ரல் மாதத்துக்கு இணையாக இருக்கும். இது இவ்வாறே மாறுபட்டு வரும்.
Q103. அக்டோபர் மாதத்தின் ஆங்கில ஜோதிட அடையாளங்கள் யாவை?
துலாம் -- விருச்சிகம் Libra and Scorpio
Q104. அக்டோபர் மாதத்தின் மலரும், ராசிக்கல்லும் எது?
மலர் == Calendula ; ராசிக்கல் == Opal (ஒரு வகை மாணிக்கக்கல்)
Q105. நாள்காட்டியில் அக்டோபர் மாதத்தின் அமைப்பு எவ்வாறு உள்ளது?
பொது வருடங்களில் அக்டோபர் மாத, ஜனவரி மாத தொடக்க நாளும் ஒன்றாக இருக்கும். லீப் வருடத்தில் அக்டோபர் மாதம் தொடங்கும் நாளில் வேறு எந்த மாதமும் தொடங்காது. பொது வருடங்களில் அக்டோபர் மாத முடிவு நாள் ஜனவரி மாத முடிவு நாளுக்கு இணையாக இருக்கும். லீப் வருடங்களில் அக்டோபர் மாத தொடக்க நாள் முந்தைய வருடத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கு இணையாக இருக்கும்.
Q106. அக்டோபர் மாதத்தில் பொதுவாக நிகழும் பண்டிகைகள் யாவை?
அக்டோபர் 1 -- சைப்ரஸ், நைஜீரியா, துருக்மெனிஸ்தான் நாடுகளின் சுதந்திர நாள். சீன தேசிய தினம்.
அக்டோபர் 2 -- காந்திஜி பிறந்த நாள் -- சர்வ தேச வன்முறை எதிர்ப்பு நாள் ; லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள்; காமராஜர் மறைவு நாள்;
அக்டோபர் 3 -- ஜெர்மனி ""ஒற்றுமை நாள்"" “Unity Day”
அக்டோபர் 5 -- சர்வதேச ஆசிரியர்கள் தினம்
அக்டோபர் 8 -- க்ரோஷியா நாட்டு சுதந்திர தினம்
அக்டோபர் 10 -- தைவான் தேசிய தினம்
அக்டோபர் 12 -- ஸ்பெயின் தேசிய தினம்
அக்டோபர் 16 -- உலக உணவு தினம்
அக்டோபர் 24 -- ஐ.நா. சபை தினம்
அக்டோபர் 26 -- ஆஸ்திரிய தேசிய தினம்
அக்டோபர் 27 -- செயிண்ட் வின்செண்ட் & க்ரெனெடைன்ஸ் சுதந்திர தினம்.
அக்டோபர் 29 -- துருக்கி குடியரசு தினம்
அக்டோபர் 1917 ல் ரஷ்யாவில் ""அக்டோபர் புரட்சி""
அக்டோபர் இரண்டாவது திங்கள் அமெரிக்காவில் ""கொலம்பஸ் நாள்"" அக்டோபர் மாதத்தில் ரம்ஜான், விஜய தசமி, துர்கா பூஜை, நவராத்திரி, ஆயுத பூஜை, தீபாவளி, தசாரா ஆகிய பண்டிகைகள்.
Q107. நவம்பர் மாதப் பெயர் எவ்வாறு கொடுக்கப்பட்டது?
நவம்பர், 10 மாதங்கள் கொண்ட நாள்காட்டியின் ஒன்பதாவது மாதமாக லத்தீன் மொழியில் எண் 9ன் பெயரைக் கொண்டு இருந்தது. அது அப்படியே இன்றும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
Q108. நவம்பர் மாத தொடக்கமும் முடிவும் எவ்வாறு அமைந்துள்ளது?
நவம்பர் மற்றும் மார்ச் மாத தொடக்கம் ஒரே நாளில் இருக்கும். முடிவு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிட்டு இருக்கும்.
Q109. புவியியல் ரீதியாக நவம்பர் மாதம் .....?
தென் துருவ நவம்பர் மற்றும் வட துருவ மே மாதமும் ஒன்றாக இருக்கும்.
Q110. நவம்பர் மாதத்தின் ஆங்கில ஜோதிட அடையாளங்கள் யாவை?
விருச்சிகம் -- தனுசு -- Scorpio and Sagittarius.
Q111. நவம்பர் மாதத்தின் மலரும் ராசிக்கல்லும் எது?
மலர் == Chrysanthemum ; ராசிக்கல் == புஷ்பராகம் Topaz
Q112. நவம்பர் மாத பொதுவான பண்டிகைகளும் நிகழ்வுகளும் யாவை?
நவம்பர் -- 2 அனைத்து பித்ருக்கள் தினம் All Souls Day
நவம்பர் -- 11 போலந்து நாட்டின் சுதந்திர நாள்
நவம்பர் -- 14 நேருஜியின் பிறந்த நாள் -- குழந்தைகள் தினம்.
நவம்பர் -- 18 லாட்வியா நாட்டின் சுதந்திர நாள்
நவம்பர் -- 19 சர்வதேச ஆண்கள் தினம்.
நவம்பர் -- 20 லெபனான் நாட்டின் சுதந்திர நாள்
நவம்பர் மாத நான்காவது வியாழக்கிழமை -- அமெரிக்கா மற்றும் ப்யூரிட்டோ ரிக்கோ - நன்றி தெரிவிக்கும் நாள் நவம்பர் மாதத்தில் தீபாவளி மற்றும் பக்ரீத் பண்டிகைகள்.

டிசம்பர்

Q113. டிசம்பர் மாதத்திற்கு இப்பெயர் வரக் காரணம் என்ன?
இது முதலில் 10வது மாதமாக இருந்த போது லத்தீன் மொழியில் இப்பெயர் வைக்கப்பட்டு இன்றும் தொடர்கிறது.
Q114. டிசம்பர் மாதத்தின் ஆங்கில ஜோதிட அடையாளங்கள் யாவை?
தனுசு -- மகரம் Sagittarius and Capricorn.
Q115. டிசம்பர் மாதத்தில் புவியியல் ரீதியான நிகழ்வுகள் யாவை?
1. வட துருவத்தில் பனிக்கால மாற்றமும் Winter Solstice, தென் துருவத்தில் வெப்பகால மாற்றமும் Summer Solstice டிசம்பர் 20 - 22 தேதிகளுக்குள் ஏற்படுகிறது.
2. வட துருவத்தில் பகல் நேரம் குறைவாகவும், தென் துருவத்தில் அதிக பகல் நேரமும் நிலவும்.
Q116. டிசம்பர் மாதத்தின் மலரும் ராசிக்கல்லும் எது?
மலர் == Holly ; ராசிக்கல் == ரத்தினம், புஷ்பராகம், வைடூரியம், Torquoise, Topaz, Lapis Lazuli, Zircon and Tanzanit
Q117. டிசம்பர் மாதத்தின் பொது பண்டிகைகளும், நிகழ்வுகளும் யாவை?
டிசம்பர் -- 1 உலக எய்ட்ஸ் தினம், ரொமேனியாவின் ஒற்றுமை தினம்.
டிசம்பர் -- 2 ஐக்கிய அரபு நாட்டு தேசிய தினம்
டிசம்பர் -- 5 நெதர்லாந்து நாட்டில் சாண்டா க்ளாஸ் தினம் Santa Claus Day
டிசம்பர் -- 6 ஃபின்லாந்து நாட்டின் சுதந்திர தினம்
டிசம்பர் -- 7 அமெரிக்காவில் பவளத்துறைமுக நாள் Pearl Harbour Day
டிசம்பர் -- 10 உலக மனித உரிமைகள் தினம்; நோபல் பரிசு வழங்கப்படும் நாள்
டிசம்பர் -- 12 கென்யா நாட்டு சுதந்திர தினம்
டிசம்பர் -- 16 வங்காள தேச வெற்றி நாள் (1971)
டிசம்பர் -- 23 ஜப்பான் நாட்டு மன்னர் தினம்
டிசம்பர் -- 25 கிறிஸ்துமஸ், ஐசக் நியூட்டன் பிறந்த நாள்
டிசம்பர் -- 26 ஊழியர்கள் முதலாளிகளிடமிருந்து வெகுமதி பெறும் நாள் Boxing Day , ஸ்லோவேனியா சுதந்திர தினம்
டிசம்பர் -- 31 புத்தாண்டின் முன் தினம் New Year Eve.
இந்த மாதத்தில் யூத பண்டிகை “Hanukkah”, முஹர்ரம், கார்த்திகை தீபம் ஆகிய பண்டிகைகள். டிசம்பர் முதல் ஞாயிறு -- Fukuoka மராத்தான், ஜப்பான் டிசம்பர் இரண்டாம் ஞாயிறு --ஹவாய் Honolulu மராத்தான்

ஆங்கில வார நாட்கள் :SUNDAY:

Q118. Sunday என்ற பெயர் வரக்காரணம் என்ன?
சூர்ய பகவான் -- Sun God.
Q119. Sunday இரண்டு காரணங்களால் முக்கியமானது. அது என்ன?
1. கிறித்தவர்களுக்கு முக்கியமான நாள். காலையில் கிறித்துவ தேவாலயத்தில் ஒன்று கூடி கூட்டு பிரார்த்தனை நடத்தப்படுகிறது. இதனால் கிறித்துவர்கள் இதை ""கடவுளின் நாள்"" “Lord’s Day” என்றழைப்பர்.
Q120. Sunday வேறு மொழிகளில் எவ்வாறு அறியப்படுகிறது?
ரவி வார் Ravi Var – இந்தி மற்றும் வட இந்திய மொழிகளில்.
யாம் அல் அஹத் Yaum al ahad - அரபி
ரொபி பார் Robi Bar – பெங்காலி Bengali
ஜமால் Jamal - Bahai’I பஹாய்
ஞாயிறு Gnyayiru – Tamil
இத்வார் -- உருது
ஷபத் Shabbt - யூதமதம் Judaism
Sonntag --ஜெர்மன்
Dies Solis - லத்தீன் Latin
Domingo -- ஸ்பானிஷ் Spanish, போர்ச்சுகீஸ் Portuguese
ஆதி வாரம் Aadi Vaaram - தெலுங்கு
பானு வாரா -- கன்னடம்.
Q121. கிறித்துவத்தின் மத ரீதியாக Sunday மிக முக்கியத்துவமும் சில பண்டிகைகள் நடத்தப் படுகின்றன. அவை யாவை?
குருத்தோலை ஞாயிறு: Palm Sunday -- ஈஸ்டர் ஞாயிறுக்கு முன் வரும் ஞாயிறு.
ஈஸ்டர் ஞாயிறு Easter Sunday : விரதம் தொடங்கும் நாள்.
Low Sunday : ஈஸ்டர் ஞாயிறுக்கு அடுத்த ஞாயிறு.
Passion Sunday : விரத காலத்து ஐந்தாவது ஞாயிறு.
Stirrup Sunday : The last Sunday before Advent.
Trinity Sunday: The first Sunday after Pentecost.
Gaudete Sunday : விரத காலத்து மூன்றாம் ஞாயிறு.
Good Shepherd Sunday: விரத காலத்து நான்காம் ஞாயிறு.
Whit Sunday : Sunday of the feast of Whitsun or Pentecost in the Christian Liturgical Year, observed seven weeks after Easter.
Q122. அமெரிக்காவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொண்டது. அது என்ன?
Super Bowl Sunday: ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிறு அல்லது பிப்ரவரி மாத முதல் வார ஞாயிறு அன்று அமெரிக்க சட்டதிட்டங்கள் கொண்ட கால் பந்து போட்டி American Professional foot ball மிகப் பெரிய திருவிழா கோலத்துடன் நடக்கும்.
Q123. ஒரு மிகத் துயரமான அல்லது உயிர் சேதம் விளைவித்த நிகழ்வு நடக்கும் ஞாயிற்றுக் கிழமையை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?
Bloody Sunday.
Q124. “Sunday” என்ற பெயரில், புத்தகம், இசை, திரைப்படம், கணினி ஆகிய பல துறைகளில் புகழ் பெற்ற முறையில் பயன் படுத்தப்படுகிறது. அவைகளில் சில என்ன?
Bloody Sunday: அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தின் ஒரு புகழ் பெற்ற கிறித்துவ இசைக் குழு.
Sunday, Bloody Sunday: 1971 ல் தயாரிக்கப்பட்ட ஒரு ஆங்கிலப் படம்.
Sunday, Bloody Sunday : அயர்லாந்து நாட்டு இசைக்குழு “U2” 1972ல் வெளியிட்ட இசைத் தொகுப்பு. இது 1972ல் வட அயர்லாந்தில் ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது.
Black Sunday: தாமஸ் ஹாரிஸ் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நாவல் 1977ல் திரைப்படமானது.
Sunday: 1989 ல் கணினியின் மென் பொருளைத் தாக்கிய ஒரு கணினி வைரஸ்.
Q125. " Bloody Sunday Inquiry " என்ற விசாரணை எதைப் பற்றியது?
1972ல் அயர்லாந்து நாட்டில் நடந்த நிகழ்வுகள் விசாரிக்க இங்கிலாந்து பிரதம மந்திரி டோனி ப்ளேயர் அவர்களால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு.

MONDAY:

Q126. Monday என்ற பெயரின் பின்னணி என்ன?
சந்திரன் -- Moon.
Q127. Monday மற்ற மொழிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சோம் வார் Somvar – இந்தி மற்றும் வட இந்திய மொழிகளில்.
ஷோம் பார் Shom Bar – பெங்காலி மற்றும் கிழக்கிந்திய மொழிகளில்.
திங்கள் Thingal – தமிழ், மலையாளம்.
சோம வாரா -- கன்னடம்
சோம வாரம் -- தெலுங்கு
லுனெடி Lunedi – இத்தாலியன் Italian
லுண்டி Lundi -- ஃப்ரெஞ்ச் French
லுனெஸ் Lunes – ஸ்பானிஷ் Spanish
லுனா Luna -- லத்தீன் Latin
Segunda Fiera -- போர்ச்சுகீஸ்
பீர் Peer -- உருது Urdu
கமல் -- Kamal – பஹாய் Bahai’i.
Q128. கிறித்துவத்தில் Monday சில முக்கிய நாட்களைக் கொண்டது. அது என்ன?
Clean Monday: புனித திங்கள், சாம்பல் திங்கள், விரத திங்கள் எனவும் அழைக்கப்படுகிறது. விரதத்தின் தொடக்க திங்கள்.
Easter Monday: ஈஸ்டர் ஞாயிறின் அடுத்த நாள். இதை “Wet Monday” எனவும் அழைப்பர்.
Whit Monday: The day after the Pentecostal feast in Christianity."
Q129. திங்கள் கிழமைகளில் மித மோசமான நிகழ்வுகள் ஏற்பட்டால் அதை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?
Black Monday – இத்தொடர் வாரத்தின் இதர நாட்களுக்கும் பொருந்தும். Black Tuesday, Black Wednesday etc.,
Q130. ஆங்கிலத்தில் “ Blue Monday” என அழைக்கப்படுவது என்ன?
ஒரு வருடத்தின் ஒரு குறிப்பிட்ட தேதி மிகவும் மோசமானதாக கருதப்படும் போது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q131. ஆங்கிலத்தில் “Handsel Monday” என்பது என்ன?
வருடத்தின் முதல் திங்கள் கிழமை, ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய பகுதிகளில் ஒருவருக்கு ஒருவர் சிறு வெகுமதிகள் கொடுத்துக் கொள்ளும் ஒரு சிறப்பான நாள்.
Q132. ஆங்கிலத்தில் “Plough Monday” என்பது என்ன?
ஜனவரி மாதத்தின் முதல் திங்கள். பாரம்பரியமாக இங்கிலாந்து நாட்டில் வேளாண்மை தொடங்கும் நாள்.
Q133. Monday என்ற சொல் கொண்ட புகழ் பெற்ற ஆங்கில நாவல் எது?
"Miracle Monday" – Elliott S. Maggin – 1981- சூப்பர் மேன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.

TUESDAY:

Q134. Tuesday என்ற பெயரின் பின்னணி என்ன?
செவ்வாய் கிரகம் Mars.
Q135. Tuesday மற்ற மொழிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மங்கள் வார் Mangalvar- இந்தி மற்றும் இதர வட இந்திய மொழிகளில்
மொங்கொல் பார் Mongol. Bar - பெங்காலி மற்றும் கிழக்கிந்திய மொழிகளில்
செவ்வாய் -- Sevvai - தமிழ்
ச்செவ்வா -- Chevva - மலையாளம்
மங்கல் Mangal – உருது
மங்களவாரம் -- தெலுங்கு
மங்களவாரா -- கன்னடா
Martis Dies – லத்தீன்
Mardi – ஃப்ரெஞ்ச்
Martes – ஸ்பானிஷ்
Terca Fiera -- போர்ச்சுகீஸ்
Martedi – இத்தாலியன்
Fidal (Grace)- பஹாய் Bahaai’i
Terca Fiera - போர்ச்சுகீஸ்
Q136. Tuesday கிறித்துவத்தில் சில முக்கிய நாட்களாக கருதப்படுகிறது. அது என்ன?
Shrove Tuesday: “Mardi Gras” எனவும் அழைக்கப்படுகிறது the fat Tuesday – விரத தொடக்க நாளுக்கு முன்பாக வருவது.
Q137. “Black Tuesday” என்ற தொடர் அமெரிக்காவில் அதிகமாக வழக்கத்தில் உள்ளது. அது என்ன?
29.10.1929 – அமெரிக்க பங்கு சந்தையின் பெரும் வீழ்ச்சி நாள்.
Q138. அமெரிக்காவில் “Super Tuesday” என்பது என்ன?
அமெரிக்காவின் பல மாகாணங்களில் தலைவர் தேர்தலின் முதல் நிலை தேர்தல் நடத்தப்படுகிறது.
Q139. “Patch Tuesday” என்ற தொடர் கணினியுடன் தொடர்புடையது. அது என்ன?
கணினி துறையின் பெரும் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், ஒவ்வொரு மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமையும் தங்கள் மென் பொருட்களுக்கு புதிய அடையாளங்களை வெளியிடும்.
Q140. அமெரிக்காவின் காணொளி Videos துறையில் Tuesday முக்கிய நாளாக கருதப்படுகிறது. அது என்ன?
செவ்வாய் கிழமைகளில் மட்டுமே பெரும்பாலான காணொளி தொகுப்புகள் வெளியிடப்படுகிறது.

WEDNESDAY:

Q141. Wednesday என்ற பெயரின் பின்னணி என்ன?
மெர்க்குரி கிரகம் -- Mercury.
Q142. Wednesday வேறு மொழிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புத்வார் Budhwar - இந்தி மற்றும் இதர வட இந்திய மொழிகளில்
புத்பார் Budhbar - பெங்காலி மற்றும் கிழக்கிந்திய மொழிகளில்
புதன் Budhan -தமிழ், மலையாளம்
புதவாரம் -- தெலுங்கு
புதவாரா -- கன்னடா
Wednesdaeg – ஜெர்மன்
Dies Mercurii – லத்தீன்
Quarta feira -- போர்ச்சுகீஸ்
Idal -- பஹாய் Bahai’i
Yaum al Arbia’a -- அரபி
Chaar Shumba- உருது
Q143. கிறித்துவத்தில் Wednesday என்ன முக்கியத்துவம் பெறுகிறது?
Ash Wednesday – விரத காலத்தின் முதன் புதன் கிழமை.

THURSDAY

Q144. Thursday என்ற பெயரின் பின்னணி என்ன?
ஜூபிடர் கிரகம் Jupiter
Q145. Tuesday மற்ற மொழிகளில் எவ்வாறு அறியப்படுகிறது?
குருவார் -- Guruvar - இந்தி மற்றும் வட இந்திய மொழிகளில்
ப்ரஹஸ்பதிவார் -- Brihospati var- பெங்காலி மற்றும் கிழக்கிந்திய மொழிகளில்
வியாழன் Vyazhan - தமிழ், மலையாளம்
குரு வாரம் -- தெலுங்கு
குரு வாரா -- கன்னடா
Loris Dies – லத்தீன்
Donner Stag - ஜெர்மன்
Grovedi –இத்தாலியன்
Quanta Feira -- போர்ச்சுகீஸ்
Junieraath - உருது
Jueves - ஸ்பானிஷ்
Istijlal - பஹாய் Bahai’i
Jendi - ஃப்ரெஞ்ச்
Q146. கிறித்துவத்தில் வியாழன் பெறும் முக்கியத்துவம் எது?
Maundy Thursday: ஈஸ்டர் தொடங்குவதற்கு முன்பான வியாழன் -- இயேசுவின் கடைசி இரவு உணவு நாள்.
Ascension Thursday: ஈஸ்டர் பண்டிகை முடிந்த 40 வது நாள் -- இயேசு சொர்க்கத்துக்கு பயணித்த நாள்.
Q147. வியாழனுக்கும் ஐக்கிய ராஜ்யத்து United Kingdom அரசியலுக்கும் என்ன தொடர்பு?
எல்லா தேசிய பொது தேர்தல்களூம் வியாழக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. உள்ளூர் தேர்தல்கள் மே மாத முதல் வியாழக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
Q148. அமெரிக்காவில் எந்த வியாழன் நன்றி செலுத்தும் நாளாக “Thanks Giving Day”அனுசரிக்கப் படுகிறது?
நவம்பர் மாதத்து நான்காம் வியாழக்கிழமை.
Q149. “Black Thursday” -- நியூயார்க் பங்குச்சந்தை -- என்ன தொடர்பு?
24.10.1929 – இந்த நாளில் நியூயார்க் பங்குச்சந்தையில் பங்குகள் பெறும் வீழ்ச்சிக் கண்டன.

FRIDAY:

Q150. Friday என்ற பெயரின் பின்னணி என்ன?
வீனஸ் கிரகம் -- Venus
Q151. Friday வேறு மொழிகளில் எவ்வாறு அறியப்படுகிறது?
ஷூக்ரவார் Shukravar - இந்தி மற்றும் இதர வட இந்திய மொழிகளில் Hindi/North India
வெள்ளி Velli - தமிழ், மலையாளம்
சுக்ரவாரம் -- தெலுங்கு
சுக்ரவாரா -- கன்னடம்
ஷூக்ரோபார் Shukrobar - பெங்காலி மற்றும் இதர கிழக்கிந்திய மொழிகளில்
Dies Veneris -லத்தீன்
Friestag - ஜெர்மனி
Fredag – ஸ்வீடிஷ்
Vendredi - ஃப்ரெஞ்ச்
Venerdi - இத்தாலியன்
Ishtiqlal - பஹாய் Bahai’i
Sexta Feira - போர்ச்சுகீஸ்
viernes - ஸ்பானிஷ்
Q152. கிறித்துவத்தில் Friday முக்கிய நாள் எது?
Good Friday – ஈஸ்டர் பண்டிகை தொடங்குவதற்கு முன் வரும் வெள்ளி. யேசு பிரான் சிலுவையில் அறையப் பட்ட நாள்.
Q153. வெள்ளிக் கிழமை அதிக முக்கியத்துவம் பெறும் மதம் எது?
இஸ்லாம் -- Islam – தொழுகை நடத்தும் நாள். இஸ்லாமிய நாடுகளில் வெள்ளி விடுமுறை தினம். தமிழகத்தில், இந்து மதத்தில் ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
Q154. எந்த வெள்ளிக் கிழமை மிக துரதிர்ஷ்டமான நாளாக கருதப்படுகிறது?
Friday -- எந்த ஆங்கில மாதத்திலும் 13ம் தேதி வரும் வெள்ளிக்கிழமை.
Q155. ஆங்கிலத்தில் “Man Friday” and “Woman Friday” என்ற தொடரின் பொருள் என்ன?
Man Friday: நம்பிக்கையான, திறமையான உதவியாளர், ஊழியர்.
Woman Friday: திறமையான பெண் ஊழியர்/உதவியாளர்.
Q156. ஆங்கிலத்தில் “Casual Friday” எனப்படுவது என்ன?
“Dress Down Friday” or “Aloha Friday” எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு நிறுவனத்தில் சீருடை பணியாளர்கள் இந்த வெள்ளிக்கிழமைகளில் தங்கள் விருப்ப ஆடைகளை அணிந்து வரலாம்.

SATURDAY:

Q157. Saturday என்ற பெயரின் பின்னணி என்ன?
சனி கிரகம் -- Saturn.
Q158. Saturday மற்ற மொழிகளில் எவ்வாறு அறியப்படுகிறது?
சனிவார் Sanivar - Hindi/North India
ஷொனிபார் Shonibar - Bengali/East India
சனி Sani - Tamil/Malayalam
சனிவாரம் -- தெலுங்கு
சனிவாரா -- கன்னடா
Samstag - ஜெர்மன்
Lordag - ஸ்வீடிஷ் Swedish
Haftha - உருது
Sabato - இத்தாலியன்
Samedi - ஃப்ரெஞ்ச்
Sabado - ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ்
Jalal - பஹாய் Bahai’i
Yaum al sabt - அரபி
Q159. Saturday – ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் என்ன முக்கியத்துவம்?
இந்த இரண்டு நாடுகளிலும் தேர்தல்கள் சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும்.
Q160. கிறித்துவத்தில் Saturday ன் முக்கியத்துவம் என்ன?
Holy Saturday – ஈஸ்டர் ஞாயிறுக்கு முன் வரும் சனிக்கிழமை. தமிழகத்தில், இந்து மதத்தில், புரட்டாசி மாத சனிக்கிழமை, சனி பிரதோஷம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
Q161. Saturday பெயருடன் கூடிய புகழ்பெற்ற ஆங்கில திரைப்படம் எது?
Saturday Night Fever – 1977.
Q162. ஆங்கில வாரநாட்களைக் கொண்ட புகழ் பெற்ற பள்ளிப்பாடல் (Rhyme) எது?
""Monday's Child is fair of face"" -- Mother Goose பாடல் தொகுப்புகளைச் சேர்ந்தது. இப்பாடல்களை 1760ல் John Newsbery என்ற ஆங்கிலேயர் எழுதியாதாக கருதப்படுகிறது. 1780/1781 களில் Thomas Carnan என்பவரால் வெளியிடப்பட்டது.