Khub.info Learn TNPSC exam and online pratice

சமூக மற்றும் சாதி அடிப்படை இயக்கங்களும், சங்கங்களும்: SOCIAL AND CASTE BASED ORGANIZATIONS AND MOVEMENTS:

Q1. "நீதி இயக்கம்" “Justice” என்பது என்ன?
இது ஒரு சாதி அடிப்படையில் உருவான ஒரு இயக்கம். இதில் வெள்ளாள, முதலியார், செட்டியார் என்ற தமிழ்நாடு இனத்தவர், ஆந்திர தெலுங்கு இன ரெட்டி, கம்மா, பலிஜா நாயுடு, மற்றும் கேரளாவைச் சேர்ந்த நாயர் இன மக்கள் அடங்கியதாக இருந்தது. இந்த இயக்கத்தை, மதராஸில், 1915-1916 களில், சி.என்.முதலியார், டி.எம்.நாயர் மற்றும் பி. தியாகராஜ செட்டி ஆகியோர்களால் நிறுவப்பட்டது. அவர்களுடைய முக்கிய குறிக்கோள், அரசாங்க பணிகளில் பிராமணர்கள் அதிகமாக சேர்க்கப்படுதல், கல்வி, அரசியல் ஆகியவற்றிலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகமான பங்களிப்பை எதிர்ப்பதே. பிற்காலங்களில் இது ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்தது.

Q2. "சுய மரியாதை" இயக்கம் என்பது என்ன, அதை நிறுவியவர் யார்?
1925ல் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் (பிற்காலத்தில், ஈ.வெ.ரா, பெரியார்) என்பவரால் நிறுவப்பட்டது. இந்த இயக்கம்,குறிப்பாக பிராமணர்கள் எதிராகவும், பிற்படுத்தப்பட்டோர் கோவில்களில் நுழைவு, பிராமண குருக்கள் இல்லாத திருமணங்கள், ""மனு ஸ்மிரிதி"" ஐ எரிப்பது, மொத்தத்தில் நாத்திகம் பரவச் செய்வதே, இவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. இவர்களுடைய இந்த நோக்கங்களைப் பரப்ப ""குடியரசு"" என்ற பத்திரிக்கை நடத்தப்பட்டது. இந்த இயக்கம் இப்போது ""திராவிட கழகம்"" என்ற பெயரில் சிறிது அரசியல் சாய்வுகளுடன் இயங்குகிறது.
Q3. "நாடார் இயக்கம்" என்பது என்ன?
இவர்கள் ""ஷானான்"" என அழைக்கப்பட்டனர். இவர்கள், கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்ட தீண்டப் படாத சாதியினராக கருதப்பட்டனர். இவர்கள் 19வது நூற்றாண்டுகளில் வணிகத்தில் ஈடுபட்டு, பிற்காலத்தில் மிக பொருளாதார ரீதியாக மிகுந்த முன்னேற்றம் அடைந்தனர். தங்கள் இனத்தை ""நாடார்கள்"" என அழைத்துக்கொண்டு சத்திரிய அந்தஸ்தை பெற்றனர். தங்கள் இன முன்னேற்றதுக்காக ""நாடார் மகாஜன சங்கம்"" என்ற அமைப்பை உருவாக்கி, உயர் சாதி இனத்தவரின் கலாச்சாரங்களை பின்பற்றி, தங்களை உயர்த்திக்கொள்ள பாடுபட்டனர்.
Q4. "பள்ளர் இயக்கம்" Pallis” என்பது என்ன?
பள்ளர்கள் என்பவர்கள் வட தமிழ்நாட்டின் கீழ் சாதி இன மக்களாக வாழ்ந்தனர். 1871ல் இருந்து இவர்கள் தங்கள் இனத்துக்கு ""சத்திரிய"" அந்தஸ்து வேண்டுமென போராடினர். தங்களை ""வன்னிய குல சத்திரியர்கள்"" என பெயர் கொண்டு, உயர் சாதி இன மக்களின் பழக்க வழக்கங்களை தொடர ஆரம்பித்தனர்.
Q5. "எழவா இயக்கம்" “Ezhava” என்பது என்ன?
எழவா இன மக்கள் கேரளாவின் தீண்டத்தகாத இன மக்களாக இருந்தனர். இவர்களுடைய சமூக மேம்பாட்டுக்காக ""நானு ஆசான்"" பிற்காலத்தில் ""நாராயண குரு"", இந்த தீண்டாமை வழக்கத்தை ஒழிப்பதற்காகவும், சடங்கு முறைகளை சீர் செய்யவும் இந்த இயக்கத்தை தொடங்கினார். இவர்கள் உயர்சாதி பழக்க வழக்கங்களை தங்கள் இனத்திலும் புகுத்தினர். பிற்காலங்களில் இவர்கள் கேரளாவில் கம்யூனிசம் வளர காரணமாக அமைந்தனர்.
Q6. "நாயர் இயக்கம்" “Nair” என்பது என்ன?
கேரளாவின் உயர் மற்றும் கீழ் மட்ட சாதியினருக்கு இடைப்பட்ட சாதி இன மக்கள். இவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருந்தனர்.பிராமணர்களின் பதவி ஆதிக்கத்தை எதிர்த்து 19ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். 1891ல், சி.வி. ராமன் பிள்ளை என்றவரின் தலைமையில், பிராமணர்கள் அரசாங்க பதவிகளில் அதிகமாக இருப்பதை தீவிரமாக எதிர்க்கத் தொடங்கினர். இவர் ""மார்த்தாண்ட வர்மா"" என்ற நாவலையும் 1891ல், நாயர்களின் மறைந்த ராணுவ மகிமையை எடுத்துச் சொல்லும் விதமாக எழுதப்பட்டது.
1890களில், இவர்கள் அரசாங்க உயர் பதவிகளில் சேர்க்கப்படத் தொடங்கியது. 1900க்குப் பிறகு, எம். பத்மநாப பிள்ளை மற்றும் கே. ராமகிருஷ்ண பிள்ளை தலைமையில் இவர்களுடைய இயக்கம் தீவிரமடைந்தது. ராமகிருஷ்ண பிள்ளை ""ஸ்வதேஷிபிமானி"" (1906-1919) பத்திரிக்கையில், தங்களுக்கு அரசியல் அந்தஸ்தை நீதி மன்றங்கள் அளிக்க மறுத்ததைக் கண்டித்து எழுதியதால், இவர் திருவாங்கூர் ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மறு பக்கத்தில், பத்மநாப பிள்ளை, ""நாயர் சேவா சங்கம்"" NSS – Nair Service Society என்ற அமைப்பை 1914ல் நிறுவி, நாயர் இன மக்களின், கல்வி, சமூக, அரசியல் மேம்பாட்டுக்காக பாடுபட்டார். கேரளாவில் இந்த அமைப்பின் கல்வி நிலையங்கள் அதிகமாக இருப்பது, இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. இதன் தலைமையகம், பெருண்ணா, சங்கனாச்சேரி என்ற இடத்தில் உள்ளது.
Q7. "சத்ய ஷோதக்" இயக்கம் “Sathya Shodhak” என்பது என்ன?
மகாராஷ்டிரா வைச் சேர்ந்த ஜோதிபா ஃபூலே என்பவரால் செப்டம்பர் 1873ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், உயர் சாதி இனத்தவரால், கீழ் சாதி இனத்தவர் மீது இழைக்கப்படும் அநீதிகளை தடுக்கவும், சாதி முறையை அழிக்கவும் பாடுபட்டது. இந்த இயக்கத்தின் நோக்கங்களை தனது நூல்கள் -- ""குலாம் கிரி"" 1872 மற்றும் ""சத்யஷோதக் சமாஜ்"" 1873 மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
Q8. "மஹர் இயக்கம்" “Mahar” என்பது என்ன?
மஹர் இனத்தவர் மகாராஷ்டிராவில் வாழ்ந்த தீண்டத்தகாத மக்கள். இந்த இயக்கத்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் முன் நின்று நடத்தி, 1920களில் தீவிரமடைந்தது. இவர்களுடைய கோரிக்கை, பொது இடங்களில் குடிநீர் எடுப்பது, கோவில்களில் நுழைவு, கிராம தலைவர்களுக்கு மஹர் இன மக்கள் சேவை செய்வது நிறுத்துவது, சட்ட மன்ற கவுன்சில்களிலும் இட ஒதுக்கீடு போன்றவை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ""மனு ஸ்மிரிதி"" யை கொளுத்தினர்.
Q9. வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இயங்கிய சிறிய அளவிலான சாதி இயக்கங்கள் யாவை?
கைவர்தாஸ் -- KAIVARTAS – மேற்கு வங்காள மிதினாபூர் பகுதியில் வாழ்ந்த பொருளாதாரத்தில் வசதி பெற்ற கீழ் சாதி இன மக்கள். இவர்கள் தங்களை ""மஹிஷ்யா"" என அழைத்துக்கொண்டு, தங்கள் இன மக்களின் மேம்பாட்டுக்காக ""ஜாதி நிர்தரணி சபா"" (1897) மற்றும் ""மஹிஷ்யா சமிதி"" (1901) என்ற அமைப்புகளின் மூலம் இயங்கி வந்தனர். பிற்காலத்தில் அவர்கள தேசிய சுதந்திர இயக்கத்தில் பெருமளவில் ஈடுபட்டனர்.
காயஸ்தா -- KAYASTHAS – வடக்கு மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் வாழ்ந்த இன மக்கள். தங்கள் இன மக்களுடைய நலனுக்காக ""அகில இந்திய காயஸ்தா சங்கம்"" என்ற அமைப்பை உருவாக்கி, ""காயஸ்தா சமாச்சார்"" என்ற பத்திரிகை மூலம் தங்கள் இன மக்களிடையே தொடர்பு வளர்த்து இயங்கி வந்தனர். ஆனால், இவர்களுக்கு எதிராக ராஜபுத்திரர்கள் மற்றும் இதர காயஸ்தா பிரிவு இன சங்கங்கள் மற்றும் வேறு சாதி இன சங்கங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால், இந்த இயக்கம் போதிய அளவு விரிவு படாமல் இருந்தது.
நாம் சூத்ரா -- NAM SHUDRAS – வங்காளத்தில் ஃபரீத்பூர் மகுதியில் வாழ்ந்த தீண்டத்தகாத இன மக்கள். 1901களில் தங்கள் இனத்துக்குள் கல்வி அறிவு பெற்றவர்களைக் கொண்டு, தங்கள் இன சங்கங்களை ஏற்படுத்திக் கொண்டு சிறிய அளவில் இயங்கி வந்தனர்.
Q10. இந்திய தேசிய சுதந்திர போராட்டத்துக்கு குறிப்பிடும் அளவில் பங்களித்த விவசாய ஊழியர்கள் சங்கம் எவை?
வங்காள இண்டிகோ விவசாயிகள் போராட்டம் -- INDIGO AGITATION OF BENGAL – 1859 - 1869. வங்காளத்தில் இண்டிகோ பயிரிடும் பகுதிகளில் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிகளை எதிர்த்து போராடிய சங்கம். இவர்கள் இண்டிகோ பயிரிடுவதை எதிர்த்தது மட்டுமின்றி, பிஷ்ணுசரன் விஸ்வாஸ் மற்றும் திகம்பர் விஸ்வாஸ் தலைமையில், ஆயுதம் ஏந்தி போராட துவங்கினர். இவர்களுக்கு வேறு படிப்பறிவு மிகுந்த சங்க மக்களின் ஆதரவும் கிடைத்ததால், போராட்டம் வலுப்பெற்று ஆங்கிலேயர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனால், 1869ல் ""இண்டிகோ கமிஷன்"" அமைத்து, விவசாயிகளின் மீது இழைக்கப்பட்டு வந்த பல அநீதிகள் நிறுத்தப்பட்டது.
பாப்னா இயக்கம் -- PABNA MOVEMENT – 1872 -1876 -- கிழக்கு வங்காள விவசாயிகள் போராட்டம் எனவும் அழைக்கப்படும். இந்த போராட்டம் கிழக்கு வங்காள பாப்னா மாவட்டத்தை மையமாக இயங்கியதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த போராட்டம், ஜமீந்தார்களின் கொடுமைச் செயல்கள் -- வேலை நீக்கம், தொல்லை, சட்ட புறம்பாக நிலங்களைப் பறித்தல், திடீரென நில வாடகைகளை உயர்த்துதல், இவை நிறைவேற ஆள் பலத்தால் அச்சுறுத்தல் -- போன்ற ஜமீந்தாரின் செயல்களுக்கு எதிராக போராடியது. இதற்காக, அந்த விவசாயிகள், வன்மை போராட்டத்திலும் இறங்கினர். வன்மை அதிகமானதால், அரசாங்கம் ஆயுதப்படைகளைக் கொண்டு அடக்கியது. விசாரணைக்குப் பிறகு, ""வங்காள வாடகைதாரர் சட்டம், 1885"" இயக்கப்பட்டு, ஜமீந்தார்களால் இழைக்கப்பட்டு வந்த விவசாயிகளின் பல தொல்லைகள் ஒழிக்கப்பட்டது.
டெக்கான் கிளர்ச்சி DECCAN RIOTS – 1875 – விவசாயிகள் மீது, ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட அதிகமான நிலவரிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் பணம் பெற்று அதனால் ஏற்படும் பல தொல்லைகள் அனுபவித்து வந்தனர். அதனால், அவர்கள் இந்த வட்டிக்காரர்களை எதிர்த்து போராட்டம் துவக்கி, வன்மையில் இறங்கி, வட்டிக்காரர்கள் இடம் சிக்கியிருந்த கடன் பத்திரங்கள், மற்றும் இதர கடன் சார்ந்த பத்திரங்கள், ஆகியவைகளை கைப்பற்றி அழித்தனர். இந்த போராட்டம், பூனா, அஹமத்நகர் போன்ற பகுதிகளில் மையம் கண்டிருந்தது. இதனால், அரசாங்கம் ""டெக்கான் விவசாயிகள் நிவாரண சட்டம் 1879"" இயக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் கிடைத்தது.
பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் PEASANTS UNREST OF PUNJAB 1890-1900 – இங்கேயும் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களின் தொல்லைகள் தாங்காமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கி, வட்டிக்காரர்களை கொலை செய்யத் துவங்கினர். இதனால் அரசாங்கம், 1902ல் ""பஞ்சாப் நில விரோதப்போக்கு சட்டம்"" இயக்கி, விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வழி செய்தது.
Q11. ""சம்பரன் சத்யாகிரகம்"" என்பது என்ன, இந்திய வரலாற்றில் அதன் முக்கியத்துவம் என்ன?
1914 - 1918 -- இந்தக் காலகட்டத்தில் ஒரு கிளர்ச்சியாக தொடங்கி, சத்தியாகிரகம் (அறப்போராட்டம்) ஆன இயக்கம். சம்பரன் பீஹாரில் உள்ள பகுதி. ஆங்கிலேயர்களின் இண்டிகோ தோட்டங்களில் பணி செய்த விவசாயிகள்/தொழிலாளிகளின் கிளர்ச்சி. கிளர்ச்சி: ஆங்கிலேயர்கள் இவர்களுக்கு நிலத்தை ஜமீந்தார்கள் மூலம் விவசாயிகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்து, இண்டிகோ (அவுரிச் செடி) பயிர் செய்யக் கட்டாயப்படுத்தினர். (இந்த செடிகளிலிருந்து கிடைக்கும் இண்டிகோ சாயம், துணிகளுக்கு சாயம் போட உதவும், ஏற்றுமதி மதிப்பு கூடியது). மேலும், குறை மட்ட விலை நிர்ணயம், அதிகமான நில வாடகை போன்ற பல தொல்லைகளுக்கு உட்பட்டனர். இண்டிகோ பயிரிட மறுத்தால் அரசாங்கத்துக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்ற கட்டாயமும் இவர்கள் மீது திணிக்கப்பட்டது. இந்த கடும் நிபந்தனைகளால் விவசாயிகள் பெரும் கஷ்டங்களுக்கு உட்பட்டு ஏழ்மையை நோக்கி தள்ளப்பட்டனர். இந்த கடுந்தொல்லைகளை எதிர்த்து, ஜமீந்தார்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட துவங்கினர்.
சத்தியாகிரகம்: 1917ல் காந்திஜி இந்த பகுதிக்கு, ராஜேந்திர பிரசாத், அனுராக் நாராயன் சின்ஹா, ஜே.பி. கிருபளாணி, மஸர் உல் ஹக், மகாதேவ் தேசாய் போன்ற தலைவர்களுடன் வந்து, இப்பகுதி விவசாயிகளின் வாழ்வு நிலையை உயர்த்துவதற்காக, இங்கு ஒரு ஆஸ்ரமத்தை நிறுவி சத்தியாகிரகத்தில் இறங்கினார். (இந்த நிகழ்வை காந்திஜி, சுதந்திர போராட்டத்திலிருந்து தனிமைப் படுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.) காந்திஜி ஆங்கிலேயர்களால் சிறைப்படுத்தப்பட்டார். ஆனால் மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டார். விவசாயிகளுக்குத் தேவையான சலுகைகளைப் பெற்று தருவதில் வெற்றி கண்டார்.
வரலாற்று முக்கியம்: – இந்த நிகழ்வின் மூலம், காந்திஜி தேசிய அளவில், ஆங்கிலேயருக்கு எதிராக போராட வந்துள்ளது, வெளி உலகுக்கு தெரிய வந்தது. இந்த நிகழ்வால் ஒரு தேசிய இயக்கம் தொடங்க வழி வகுத்தது. இந்த நிகழ்வை அடுத்து, ஆங்கிலேய அரசாங்கம் ஒரு கமிஷனை நியமித்து, விவசாயிகளுக்கு எதிராக ஜமீந்தார்கள் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளால் இழைக்கப் பட்டு வந்த கொடுமைகளை விசாரித்தனர்.
Q12. "கைரோ சத்தியாகிரகம்" நடக்கக் காரணம், முடிவு என்ன?
1918 – கைரோ என்பது குஜராத்தில் உள்ள ஒரு பகுதி. இப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவிய போதும், ஆங்கிலேய அரசாங்கம், நில வருவாய்/வரிகளில் தள்ளுபடியோ எந்த சலுகைகளோ கொடுக்க மறுத்தது. இதன் அடிப்படையில் உருவானது தான் இந்த கிளர்ச்சி. இந்த போராட்டத்தில் காந்திஜி மற்றும் வல்லபாய் படேலும் கலந்து கொண்டனர். இவர்கள் தலையீட்டினால், ஆங்கிலேய அரசாங்கம் நில வருவாய்/வரியை தற்காலிகமாக ரத்து செய்தது.
Q13. "மாப்ளா கிளர்ச்சி" 1921 - என்பது என்ன?
மாப்ளா என்பவர்கள கேரளாவின் வடபகுதிகளில் வாழ்ந்த இஸ்லாமிய விவசாயிகள். இந்த பகுதி இந்து ஜமீந்தார்களால் (ஜென்மி என அங்கு அழைக்கப்பட்டனர்) பல தொழில் ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாயினர். இதற்கு ஆங்கிலேய அதிகாரிகளும் துணை போயினர். இந்த அநீதிகளை எதிர்த்து 1921ல் இந்த இனத்தவர் கிளர்ச்சியைத் தொடங்கினர். திருத்தங்காடி என்ற இடத்தில் இருந்த ஒரு மசூதியை ஆங்கிலேயர்கள் திடீர் சோதனை தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இந்த கிளர்ச்சி தீவிரமடைந்து, மாப்ளா இனத்தவர் வன்மையில் இறங்கி, காவல் நிலையம், அலுவலகங்கள், தொடர்பு மையங்கள், ஜமீந்தார்கள், வட்டிக் கடன் கொடுப்பவர்கள் என அனைத்து இடங்களிலும் வன்முறையில் இறங்கி சேதம் விளைவித்தனர். பிறகு, தங்கள் பகுதியை குன் அஹமது ஹாஜி, கலத்திங்கால் மகமது, அலி முசாலியார், சித்தி கோயல் தங்கால் ஆகியோர் தலைமையில் சுதந்திரம் அறிவித்துக்கொண்டனர்.
இந்த கலவரத்தை ஒடுக்க ஆங்கிலேயர்கள் எடுத்த நடவடிக்கையில், சுமார் 2530 போராளிகள் மாண்டனர், 1650 பேர் படுகாயம் அடைந்தனர், 45000 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த ஆங்கிலேயர் நடவடிக்கையில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது என்னவெனில், சுமார் 66 போராளிகளை, 20.11.1921 அன்று, போத்தனூர் ரயில் நிலையத்தில், ஒரு சரக்கு பெட்டகத்தில் (வேகன் wagon) அடைத்து மூச்சுத்திணற சாகடிக்கப்ப்ட்டனர்.
Q14. 1928 பர்தோலி சத்தியாகிரகம் என்பது என்ன?
பர்தோலி குஜராத் மாகாணத்தின் ஒரு மாவட்டம். இங்கு நில வருவாய் 1927ல் சுமார் 27% திடீரென உயர்த்தப்பட்டது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் நில வருவாய்/வரி தர மறுத்து போரட்டத்தில் இறங்கினர். இந்த இயக்கத்தை சர்தார் வல்லபாய் பட்டேல் தலையேற்று நடத்தினார். இதனால், ஆங்கிலேயர்கள், விவசாயிகளின் அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்வதில் இறங்கினர். போராட்டம் தீவிரமடைந்து, கடைசியில், அரசாங்கம், ஒரு குழுவை நியமித்து, விவசாயிகளின் குறைகளைக் கேட்டு தீர்வு கண்டனர்.
Q15. அகில இந்திய விவசாயிகள் சங்கம் என்பது என்ன, அதன் குறிக்கோள் என்ன?
1923 ஜூலை-டிசம்பர் காலங்களில், ஆந்திராவின் குண்டூர் பகுதியில், என்.ஜி. ரங்காராவ் என்பவரால் விவசாய தொழிலாளர்கள் சங்கம் தொடங்கினார். இது தென் இந்தியா முழுவதும் பரவி, தென் இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு என்ற அளவுக்கு வளர்ந்தது.. இந்த கூட்டமைப்புக்கு, என்.ஜி. ரங்கா பொதுச் செயலாளராகவும், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் துணைச் செயலாளராகவும் பதவி ஏற்றிருந்தனர். இதைத் தொடர்ந்து 1936 ல் லக்னௌ ல் ஒரு அகில இந்திய கூட்டம் நடத்தப்பட்டு அகில இந்திய விவசாயிகள் சங்கம் நிறுவப்பட்டது. அந்த வருடம் முதல், செப்டம்பர் முதல் தேதி ""விவசாயிகள் தினம்"" ஆக அனுசரிக்கப்படுகிறது. அவ்வமயம் அவர்களுடைய முக்கிய கோரிக்கை ஜமீந்தாரி முறையை ஒழித்தல், மகசூலுக்கு ஏற்றி வரி முறைகள், கடன் மற்றும் வட்டி விகிதத்தை குறைத்தல், குத்தகை தாரர்களுக்கு நில உரிமை அளித்தல் போன்றவை.