Khub.info Learn TNPSC exam and online pratice

தேசிய சுதந்திர போராட்டம். NATIONALIST FREEDOM MOVEMENT

Q1. இந்த பகுதி சுதந்திர போராட்டம், ஏன் "தேசிய சுதந்திர போராட்டம்" எனப்பட்டது?
இதற்கு முன்பு நடந்த சுதந்திர போராட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ, ஒவ்வொரு இடத்தில் தனியாகவோ, தனிப்பகுதிகளிலோ நடைபெற்றன. பிறகு, இந்த போராட்டம், கிராமங்கள் வரை பரவி, அனைத்து மதம், இனம், தகுதி, அந்தஸ்து மக்களும் பங்கு பெற தொடங்கினர். குறிப்பாக சொன்னால், இந்த போராட்டம் ஒவ்வொரு இல்ல போராட்டமாக மாறி அவரவர் பங்குக்கு ஏதேனும் செய்யத் தொடங்கினர். அதனால் இந்த நிலையில் ""தேசிய சுதந்திர போராட்டம்"" என அழைக்கத் தொடங்கினர்

Q2. சுதந்திர போராட்டம், தேசிய போராட்டமாக முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவை எவை?
1. இந்தியா முழுவதும் சமச்சீர் பணி அமைப்பை அறிமுகப்படுத்தியதால், நிர்வாக ரீதியாக அனைவரும் இணையத் தொடங்கினர்.
2. கிராமப்புற பொருளாதாரத்திலிருந்து, தொழிற்துறை பொருளாதாரத்திற்கு மாற்றம் ஏற்பட்டதால் மக்களின் சுய பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.
3. ரயில்வே, தந்தி, தபால் போன்ற வசதிகள் முன்னேற்றத்தால் மக்கள் மற்றும் தலைவர்களின் இடையிலான தொடர்பு மிகவும் முன்னேறியது.
4. போராட்டத்துக்கு காந்திஜி மற்றும் இதர தலைவர்களின் வருகை.
5. ஆங்கில வழி கல்வி அறிமுகத்தால் மக்களின் கல்வித்தரம் உயர்ந்து, சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம், அரசியல், போன்ற திசைகளில் மக்களின் அறிவு மேம்பட்டு, இத்துடன் மேல்நாட்டு கலாச்சாரமும் சேர, அவ்வாறு படித்தவர்களும் போராட்டத்தில் பங்கு பெற தொடங்கினர்.
6. அச்சுத்தொழில் மேம்பாட்டினால், மக்களிடையே, தினசரி நாளிதழ்கள், புத்தகங்கள் மூலமாக, ஆங்கிலம் மற்றும் தாய்மொழி மூலம், சிந்தனைகள் பரவத்தொடங்கியது. அதனால், மக்களிடையே தேசிய எண்ணம் மேலோங்கத் தொடங்கியது.
Q3. தேசிய விழிப்புணர்வு மேம்பட்ட நிலையில், சமூக-ஆன்மீக இயக்கங்கள் அமையத் தொடங்கின. அவை யாவை, அவற்றின் தலைவர்களும் பங்கும் என்ன?
சீர்திருத்த வாதிகள் -- ராஜா ராம் மோகன் ராய் -- பிரம்ம சமாஜம்; ஸ்வாமி விவேகானந்தா -- ராமகிருஷ்ணா மடம்; தயானந்த சரஸ்வதி -- ஆர்ய சமாஜம் போன்ற சமூக ஆன்மீக இயக்கங்கள் தொடங்கி, மக்களிடையே விழிப்புணர்வையும் ஒற்றுமையையும் வளர்த்தது. இந்த இயக்கங்களின் முக்கிய குறிக்கோள், நம் நாட்டின் அபரிமிதமான கலாச்சாரம் பற்றி எடுத்துக் கூறி, மக்களிடையே ஆன்மீக நம்பிக்கை, தன்னம்பிக்கை, இதர மதங்களுடன் நல்லிணக்கம் போன்றவற்றை மேம்படுத்துவது. இதன் மூலம், இந்தியர்களாலும் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது. இந்து முஸ்லீம்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்துவது. இதன் மூலம் ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்கள் மீதுள்ள தவறான எண்ணங்களைப் போக்குவது. இதே சமயத்தில் ஐரோப்பியர் அன்னி பெசண்ட் தொடங்கிய Theosophical Society யும் பெரிதும் உதவியது.
Q4. மக்களிடையே பிளவு ஏற்படுத்தி அரசியல் நடத்துவதே ஆங்கிலேயர்களின் திட்டம் என்பது, அவர்கள் ஆட்சியில்/நிர்வாகத்தில் கடைப்பிடித்த அணுகுமுறைகளே சான்று என்பது வரலாறு. இது எவ்வாறு மக்களிடையே எடுத்துச்செல்லப்பட்டது?
ஆங்கிலேயர்கள் தங்களிடம் பணி புரிபவர்களுக்கு அவர்களது இனத்தின் அடிப்படையில் தகுதி, ஊதியம், சலுகைகள் ஆகியவற்றை வழங்கி வந்தனர். இவ்வாறு இன வேறுபாட்டினை இவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினர். இதை தினநாளிதழ்கள் பல மொழிகளில் வெளிப்படுத்தின. இதனால் வேறுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் உணரத் தொடங்கினர். இதை மற்றவர்களுக்கும் எடுத்துரைத்தனர். இதனால் கொதித்தெழுந்த மக்கள் ஆங்கிலேயருக்கு எதிராக போராட துவங்கினர். இதனால் மக்களிடையே ஒற்றுமை மேம்படத் தொடங்கியது.
Q5. மக்களிடையே தேசியம் வளர்வதையும், இந்திய பத்திரிகை தொழிலின் வளர்ச்சியையும் கண்ட ஆங்கிலேயர்கள், சில சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்தனர். அவை யாவை?
1.லிட்டன் பிரபு -- 1876-1880 – தேசியம் வளர்ச்சியை கவனித்து, தாய் மொழி பத்திரிக்கை சட்டம் இயக்கி இந்திய பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்கினார்.
2. பொதுப் பணி தேர்வுக்குண்டான வயதைக் குறைத்து, இந்தியர்கள் பங்குபெறும் வாய்ப்பைக் குறைத்தனர். இந்த நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Q6. தாய்மொழி பத்திரிக்கை சட்டம் ஒரு தடியாக இருந்த போது, ஆங்கிலேயர்களின் மற்றொரு நடவடிக்கை கரும்பாகவும் இருந்தது. அது என்ன?
தாய்மொழி பத்திரிக்கை சட்டத்தை அறிமுகப்படுத்தி பத்திரிக்கை சுதந்திரத்தை ஒரு பக்கம் பிடுங்கிய போது, இல்பெர்ட் சட்டம் 1884 ஐ அறிமுகப்படுத்தி, இந்திய நீதிபதிகளுக்கு ஐரோப்பிய குற்றவாளிகளை விசாரணை செய்யும் முறையால் சலுகை கொடுத்ததாக ஆங்கிலேயர்கள் கருதினர். ஆனால், இது அவர்களுக்கே எதிராக அமைந்தது. காரணம், ஐரோப்பியர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். இதன் மூலம், சலுகை கொடுப்பது போல் கொடுத்து பிடுங்கிக் கொண்டனர். இதனால், மக்கள் இதை சரியாக புரிந்து கொண்டதால், தேசியம் இன்னும் வேகமாக மக்களிடையே பரவியது.
Q7. இந்திய தேசிய காங்கிரஸ் அமைய காரணமாயிருந்தவர் யார்?
ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் -- இவர் ஆங்கிலேய ஓய்வு பெற்ற பொது ஊழியர். அரசியல் சீர்திருத்த வாதி. பல இடங்களில் சிறிய அளவில் இயங்கும் போராட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு மத்திய அமைப்பு அமைக்கவேண்டும் என முன்வைத்தார். இதற்கு பேராதரவு கிடைத்ததால் டிசம்பர் 1885ல் உருவானதே இந்திய தேசிய காங்கிரஸ்.
Q8. சுதந்திர போராட்டம் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. இந்த போராட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் எத்தனை நிலைகளாக பிரிக்கலாம்?
1. மிதவாத/ தொடக்க கால தேசிய போராட்டம் - 1885 – 1905;
2. தீவிரவாத தேசிய போராட்டம் – 1905 – 1918;
3. காந்திய கால சத்யாகிரக/அமைதியான போராட்டம். – 1918-1947.
Q9. ஆங்கிலேயர்களிடம் மிதவாத தேசிய வாதிகளின் அணுகுமுறை எவ்வாறிருந்தது?
கண்ணியமாகவும், மிதமானதாகவும், ராஜ்ய அரசுக்கு பணிவான நிலையில், தீர்மானங்கள், மனுக்கள் என்ற முறையில் 20ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தொடர்ந்து, சுய அரசாங்கம் தேவை என முறையிட்டு வந்தது. ""சாசன முறைப்படியான போராட்டம்"" என அழைக்கப்பட்டது.
Q10. மிதவாத தலைவர்களின் சாதனை என்ன?
இந்த மிதவாதிகளின் இந்த முயற்சிகள், மக்களிடையே தேசியம், ஜனநாயகம், ஆங்கிலேயர்களின் பிரித்து ஆளும் திட்டம், பொருளாதார திட்டங்கள் பற்றி எடுத்துரைத்து, தேசிய உணர்வை மேம்படுத்தினாலும், மறு பக்கத்தில், ஆங்கிலேயர்களை இந்திய கவுன்சில் சட்டம் 1892 ஐ இயற்ற வைப்பதில் வெற்றி கண்டது.
Q11. மித வாதிகளின் அணுகுமுறை ஆங்கிலேயர்களிடம் பெரியதொரு சலுகைகளோ அல்லது அரசியல் முன்னேற்றங்களோ பெற முடியவில்ல. அதற்கான காரணங்கள் யாவை?
இரண்டு அடிப்படை காரணங்களுக்காக மிதவாதிகளின் நடவடிக்கைகள் பெரிதாக எந்த சாதிக்க முடியவில்லை. அவை:
1. இவர்கள் அமைதியான, ரத்தம் சிந்தாமல் சாதிக்க நினைத்தது, படித்தவர்கள் மத்தியில் மட்டுமே சென்றடைந்தது. கிராமங்களில் அடிமட்ட மக்களிடையே போய் சேரவில்லை.
2. இவர்கள், ஆங்கிலேயர்களின் திட்டங்களை சரியாக புரிந்து கொள்ளாமை, நேர்மையாக நடந்து கொள்வார்கள் என தவறாக நினைத்தது ஆகியவை முக்கிய காரணமாக அமைந்தது.
Q12. ஆங்கிலேயர்களின் மறைமுகமான திட்டங்களை, தாதாபாய் நௌரோஜி தனது ஒரு விளக்கத்தின் மூலம் வெளிப்படுத்தினார். அது என்ன?
""வடிகால் திட்டம்"" -- ""DRAIN THEORY"": ஆங்கிலேயர்கள், இந்தியர்கள் மீது தங்கள் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியவுடன், கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும், பெருந்தொகை, விலையுயர்ந்த ஆபரணங்கள், போர் இழப்பீட்டுத் தொகை, உயர்வான வரி என, தங்களிடம் சரணடைந்த மன்னர்கள், ஆட்சியாளர்களிடமிருந்து பாதுகாப்பு, ராணுவ உதவி என்ற காரணங்களை முன்வைத்து, பெற்று, நம் நாட்டின் பொருள் வளத்தை சுரண்டி, தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர் என வெளிப்படையாக அறிவித்தார்.
Q13. மிதவாத தலைவர்களின் தோல்விகளுக்கு காரணம், அதே சமயம் தீவிரவாத தலைவர்- களின் குறிக்கோள்களுக்கு வளர்ச்சியும் ஆதரவும் கிடைக்கக் காரணம் ஆயிற்று. தோல்வியின் முக்கிய காரணங்கள் யாவை. ?
மிதவாத தலைவர்கள் -- கோபால கிருஷ்ண கோகலே, எஸ்.என்.பானர்ஜி, W C பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, மதன் மோகன் மாளவியா மற்றும் சிலர்.
1. மிதவாத தலைவர்களின் நடவடிக்கைகள் படித்தவர்களை மையமாக கொண்டு, தாங்கள் அறியாமலேயே பொதுமக்களை ஒதுக்கி விட்டனர்.
2. மிதவாதிகள் தங்கள் அணுகுமுறையால் ஆங்கிலேயர்களிடமிருந்து, இந்திய கவுன்சில் சட்டம் 1892 ஐ தவிர்த்து (அதுவும் பிற்காலத்தில் ஒரு தோல்வி) வேறு எதுவும் பெறவில்லை.
3. ஆங்கிலேயர்களின் அடக்குமுறை நடவடிக்கைகள் --
அ) 1898ல் தேசிய உணர்வைப் பற்றி போதனை செய்வதை எதிர்த்து சட்டம் இயற்றினர்.
ஆ) இந்திய அலுவலக ரகசிய சட்டம் 1904 ஐ இயக்கி, இந்திய அதிகாரிகள் எந்த ரகசியத்தையும் வெளியிடாதவாறு செய்து, தாய்மொழி பத்திரிக்கை சட்டத்தை அமல் படுத்துவதில் வெற்றி கண்டனர்.
இ)தேசியத்தை போதித்ததற்காக பால கங்காதர திலக் போன்ற தலைவர்களை கைது செய்தனர்.
ஈ) பூனா சப்பேகர் சகோதரர்களை, இரண்டு ஆங்கிலேய அதிகாரிகளை கொலை செய்ததற்காக விசாரணை இன்றி நாடு கடத்தப்பட்டனர்.
4. பொதுமக்களை ஈடுபடுத்தாததை புரிந்து கொள்ளாமலிருந்தது;
5. மக்களிடம் சுய மரியாதை மற்றும் தங்களை தாங்களே ஆள முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்த தவறியது. இக்காரணங்களால் மிதவாதிகளின் முயற்சிகள் தோல்வி அடைந்தது.
Q14. இந்திய சுதந்திரத்திற்காக தீவிரவாத பாதையை கடைப்பிடித்த தலைவர்கள் யாவர்?
முதலில் தீவிரவாத செயல்களில் இறங்கியவர்கள் -- வங்காளத்திலிருந்து ராஜ்நாராயண் போஸ், அஷ்விணிகுமார் தத் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து விஷ்ணு சாஸ்திரி சிப்லுங்கர். பிறகு, இந்த பாதையை தேசிய தலைவர்களான பால கங்காதர திலக், பிபின் சந்திர பால், அரவிந்த கோஷ், லாலா லஜ்பத்ராய், அஸித் சிங், ப்ரகாசம், கிருஷ்ணா ராவ், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதி போன்ற தலைவர்கள் தொடர்ந்தனர்.
Q15. சர்வதேச அளவிலான வேறு எந்த நிகழ்ச்சிகள், தீவிரவாத தலைவர்களுக்கு சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்த தூண்டுதலாக அமைந்தது?
1. ஜப்பானின் வளர்ச்சியும், ரஷ்யா வை 1905 ல் தோற்கடித்தது.
2. 1896ல் எத்தியோப்பியா இத்தாலிய ராணுவத்தை தோற்கடித்தது. --- இந்த இரண்டு நிகழ்வுகள், ஐரோப்பியர்கள் தோற்கடிக்கமுடியாத் நாடுகள் அல்ல என்பதை தெளிவுப்படுத்தியது.
3. அயர்லாந்து, ரஷ்யா, எகிப்து, துருக்கி மற்றும் சீனாவில் ஏற்பட்ட புரட்சிகள்.
4. ""போயர் போர்"" Boer War தென் ஆப்பிரிக்காவில், பழங்குடியினருக்கும் ஆங்கிலேயர்களுக்கும்.
Q16. கர்ஸன் பிரபுவின் நடவடிக்கைகளும், நிர்வாக சீர்திருத்தங்களும், தீவிரவாத தலைவர்களை மேலும் கொதிப்படைய செய்தது. அவை யாவை?
கர்ஸன் பிரபு வைஸ்ராயாக 1899-1905 காலத்திலிருந்தார். அவருடைய கீழ்க்கண்ட நடவடிக்கைகள் தீவிரவாத தலைவர்களின் எண்ணங்களுக்கு மேலும் வலுவூட்டியது:
1. வங்காள பிரிவினை -- 1905: இந்த செயல் நிர்வாக ரீதியானது என கூறப்பட்டாலும், உள்நோக்கம் இந்து முஸ்லீம் ஒற்றுமையை குலைப்பதற்காகவும், தேசிய உணர்வு வளருவதை தடுக்கவும் செய்யப்பட்டது.
2. கல்கத்தா முனிசிபல் சட்டம் 1899 -- இந்த சட்டம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, கடைசியாக 1923ல் திரும்பப்பெறப்பட்டது.
Q17. தீவிரவாதிகள் என அழைக்கப்பட்டாலும், சுதந்திரத்திற்கான அவர்களுடைய நடவடிக்கைகள் அடக்கமான ஆக்கப்பூர்வ செயல்களாக இருந்தன. அவை யாவை?
தீவிரவாத தலைவர்களின் முக்கிய குறிக்கோள் சுதந்திரத்தை முழுமையாக ஒரே முறையில் பெற வேண்டும் என்பதே. அதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள்:
1. அமைதியான எதிர்ப்பு -- ஆங்கிலேயர்களுடன் ஒத்துழையாமை -- அரசாங்க வேலை, நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணித்தல்;
2. உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவதை மக்களிடம் ஊக்குவித்து, வெளிநாட்டு பொருட்களை நிராகரித்தல்;
3. இந்திய வழி கல்வியை அறிமுகப்படுத்தி, ஊக்குவித்து புதிய எதிர்கால இந்தியாவை உருவாக்குதல்.
Q18. மக்களை ஒன்று படுத்துவதிலும், அவர்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்துவதிலும் பால கங்காதர திலக் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
1. 1893ல் கணபதி பூஜையை தொடங்கி, (இன்றும் அனுசரிக்கப்படும் ஒரு மிகப்பெரிய ஆன்மீக நடவடிக்கை) மக்களை ஆன்மீக ரீதியாக ஒன்றுபடுத்தினார். மகாராஷ்டிராவில் இது ஒரு மிகப்பெரிய ஆன்மீக நடவடிக்கை.
2. 1895ல் ""சிவாஜி திருவிழா"" வைத் துவக்கி, மக்களிடையே நாட்டுப்பற்றையும், வரலாற்று கலாச்சாரத்தையும் மேம்படுத்தியது.
3. 1896-1897ல் மகாராஷ்டிரா பகுதியில் வறட்சி நிலவியதால், வரி கொடாமை இயக்கத்தை நடத்தினார்.
4. நம்நாட்டில் கல்வியை இந்திய மயமாக்குவதற்காக டெக்கான் கல்விக் கழகத்தை தொடங்கி, ஒரு ஆங்கில பள்ளியையும் தொடங்கினார், அதுவே பிற்காலத்தில் புகழ் பெற்ற ஃபெர்கூஸன் கல்லுரி ஆனது.
5. அவருடைய, மற்றும் இவரின் தோழமை தலைவர்களின் நோக்கங்களையும், குறிக்கோள்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக, ஆங்கிலத்தில் ""மராட்டா"" , மராத்தியில் ""கேசரி"" என்ற நாளிதழ்களை தொடங்கியதால், அவர் எதிர் பார்த்த மக்கள் ஈடுபாடு கிடைத்தது.
6. மக்களிடையே சுயராஜ்யம், சுதந்திரம் என்பதை வலியுறத்த , ""உள்ளாட்சி சங்கம்"" Home Rule League 1916ல் தொடங்கி, ""சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை பெற்றே தீருவேன்"" என்ற கோஷத்தை மக்களுக்கு அளித்தார்.
Q19. பால கங்காதர திலக் ன் தேசிய நடவடிக்கைகள் ஆங்கிலேயரை மிகவும் அச்சம் கொள்ள செய்தது. அதனால் அவர் மீது ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் என்ன?
அவருடைய தீவிர தேசிய நடவடிக்கைகளால் அவர் இருமுறை சிறை செய்யப்பட்டார். முதலில்
1. 1897ல் 18 மாதங்கள்;
2. 1908ல் 6 வருடங்கள், வங்காள பிரிவினையை எதிர்த்து தீவிரமாக எதிர்த்து, அதை ஒரு தேசிய பிரச்சனையாக்கியதற்காக, பர்மாவின் மண்டாலே சிறையில் அடைக்கப்பட்டார்.
Q20. ஒரு தீவிரவாத சுதந்திர போராளியாக லாலா லஜ்பத் ராய் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தன்னுடைய கல்லூரி நாட்களில் ""ஆர்ய சமாஜம்"" நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இவர், தன்னை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டார்.
1. வங்காள பிரிவினையை கடுமையாக எதிர்த்ததினால், 1907ல் இவர் பர்மாவுக்கு நாடு கடத்தப் பட்டார்.
2. நாடு திரும்பிய பிறகு, அமெரிக்காவுக்கு சென்று, அங்கு 1914ல் சுய ஆட்சி சங்கத்தை Home Rule League நிறுவினார்.
3. ""பஞ்சாபி"" “Punjabee” என்ற தினசரியையும், ""மகிழ்ச்சியற்ற இந்தியா “Unhappy India” என்ற புத்தகமும் எழுதினார்.
Q21. லாலா லஜ்பதி ராய் எவ்வாறு மறைந்தார்?
30.10.1928 அன்று, சைமன் கமிஷன் ஐ எதிர்த்து, லாகூரில் ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினார். அவ்வமயம், காவல் துறையினர் தடியடி நடத்திய போது, லாலா லஜ்பத் ராய் படுகாயம் அடைந்து 17 நவம்பர் 1928 அன்று மறைந்தார்.
Q22. பிபின் சந்திர பால் என்பவர் யார், சுதந்திரத்திற்காக தீவிரவாத போராளியாக அவர் அளித்த பங்கு என்ன?
1. ""இந்தியாவின் புரட்சி சிந்தனையாளர்"" என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்.
2. பத்திரிகை தொழிலில் ஈடுபட்டார். ""பரிதர்ஷக்"" என்ற பத்திரிகையில் தொடங்கி, ""வங்காள மக்கள் கருத்து"" “Bengal Public Opinion” மற்றும் ""ட்ரைப்யூன்"" “Tribune” என்ற பத்திரிகைகளின் ஆசிரியர் ஆனார். 1901ல் ""புதிய இந்தியா “New India” என்ற பத்திரிகையைத் தொடங்கி, தேசியத்தை மக்களிடையே பரப்புவதில் ஈடுபட்டார்.
3. இவருக்கு துணையாக வங்காளத்தில் அரவிந்த கோஷ் ம் இருந்தார். இந்த இருவரும் சேர்ந்து சுயராஜ்யம், மற்றும் தேசிய கல்வி, மற்றும் ஆங்கிலேயர்களுக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
4. அரவிந்த கோஷுடன் சேர்ந்து ""வந்தே மாதரம்"" என்ற பத்திரிக்கையை தொடங்கினார். இது நாட்டுப்பற்றையும், தேசியத்தையும் தீவிரமாக பரப்பியது.
Q23. 1907ல், பிபின் சந்திர பால் ஏன் கைது செய்யப்பட்டார், அதற்கு பிறகு அவருக்கு நடந்தது என்ன?
""வந்தே மாதரம் தேசத் துரோக செயல்"" வழக்கில், அரவிந்த கோஷுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்ததால், அவர் கைது செய்யப்பட்டு, 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வாசத்துக்கு (March-August 1908) பிறகு இவர் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டு, இந்திலாந்து (1908-1911) சென்றுவிட்டார். பிறகு, அரசியலிலிருந்து முழுவதுமாக ஒதுங்கி வாழ்ந்து மறைந்தார்.
Q24. அரவிந்த கோஷ் என்பவர் யார், அவர் தேசிய போராட்டத்துக்கும், ஆன்மீகத்துக்கும் செய்த தொண்டு என்ன?
அரவிந்த கோஷ் -- (1872-1950). பரோடா வில் ஒரு கல்லூரியின் விரிவுரையாளராக இருந்து, பிறகு 1906ல் கல்கத்தாவில் தேசிய கல்வி இயக்கத்தின் ஒரு அங்கமாக தொடங்கப்பட்ட வங்காள தேசிய கல்லூரி Bengal National college யின் தலைமை பொறுப்பில் பணியாற்றினார். இவருடைய பங்களிப்பு:
1. 1893-1894 காலத்தில் அவர் விரிவுரையாளராக பணியாற்றும் போது ""பழைய தீபத்திற்கு புது தீபம்"" “New lamps for old” என்ற தலைப்பில், மிதவாத தலைவர்களின் அணுகுமுறையை விமர்சித்து எழுதி வந்தார்.
2. 1907ல் ""வந்தே மாதரம் "" பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றும் போது ""அமைதியான புரட்சி"" யைப் பற்றியும் தொடர்ந்து எழுதி வந்தார்.
3. வங்காள பிரிவின் போது, அதை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டார்.
4. 1908ல் ஆங்கிலேய அதிகாரி கென்னடி கொலை வழக்கில் (அலிபூர் குண்டு வெடிப்பு) ஆங்கிலேயர்- களால் கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் தப்பிச் சென்று, பாண்டிச்சேரியை அடைந்து, அங்கு முழுவதுமாக ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக்கொண்டார்.
5. பாண்டிச்சேரியில் ""அரவிந்த ஆஸ்ரமம் "" இவரால் தொடங்கப்பட்டது.
6. ""சாவித்திரி"" “Savitri” என்ற ஆங்கில தொடர் கவிதைத் தொகுப்பும், ""ஆன்மீக வாழ்வு"" “The Divine Life” என்ற நூலும் இவருடைய புகழ்பெற்ற இலக்கிய படைப்புகள்.
Q25. தென் இந்தியாவிலிருந்து, சுதந்திர போராட்டத்தில் ""தீவிரவாத தேசியவாதிகள்"" என அழைக்கப்பட்டவர்கள் யார்?
வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன்.
Q26. இந்திய சுதந்திரத்துக்கு, வ.உ. சிதம்பரனாரின் (1872-1936) பங்களிப்பு என்ன?
தூத்துக்குடி ஒட்டபிடாரம் என்ற இடத்தில் வாழ்ந்த ஒரு வழக்கறிஞர். சுதேசி இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். தேசிய அளவிலான அவர் காலத்து சுதந்திர பெருந்தலைவர்களுடன் தொடர்பு கொண்டு இயங்கி வந்தவர். இந்தியா-சிலோனுக்கு (இலங்கை) இடையிலான கப்பல் போக்குவரத்து மற்றும் வணிகம் ஆங்கிலயர்கள் மட்டுமே செய்து வந்தனர். அந்த காலகட்டத்தில், இவர் தனது முயற்சியில், ""சுதேசி கப்பல் போக்குவரத்து கழகம்"" என்ற ஒரு நிறுவனத்தை 12 நவம்பர் 1906 அன்று தொடங்கி, தூத்துக்குடி-கொழும்பு வுக்கு இடையில் போக்குவரத்தையும், வணிகத்தையும் தொடங்கினார். இந்த நிறுவனத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் அடக்குமுறை வணிக கொள்கைகள் மூலம் முழுவதுமாக முடக்குவதில் வெற்றி கண்டனர். இதைத் தொடர்ந்து சிதம்பரனார் நாட்டு துரோகச்செயல் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபிறகு, தன்னுடைய சொந்த சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, ஏழ்மையில் 18.11.1936 அன்று காலமானார். இவருடைய இந்த சுதேசி இயக்க நடவடிக்கையால், பிற்காலங்களில் அநேக சுதேசி தனியார் நிறுவனங்கள் உருவானதே இவருடைய மிகப்பெரிய பங்களிப்பு.
Q27. சுதந்திர போராட்டத்தில் சுப்ரமணிய பாரதி (1882-1921) அவர்களின் பங்களிப்பு என்ன?
புரட்சி கவிஞர். தேசபக்தி பாடல்கள் மற்றும் தொடர்களை, அவருடைய காலத்து, தினசரி மற்றும் இதழ்களிலும் எழுதி மக்களிடைய தேசியத்தை தீவிரமாக பரப்பினார். இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக இறங்கி செயல்பட்டார். ""சுதேசமித்ரன்"" என்ற நாளிதழின் உதவி ஆசிரியராக பணியாற்றி, அதன் மூலம் தேசப்பற்று பற்றிய தொடர்களை தொடர்ந்து எழுதி மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடம் தேசபக்தியை தூண்டுவதில் இவர் அளித்த பங்கு மிக மிக பெரியது. செப்டம்பர் 11, 1921 அன்று மறைந்தார்.
Q28. சுப்ரமணிய சிவா (1884-1925) என்பவர் யார், சுதந்திர போராட்டத்துக்கு அவருடைய முக்கிய பங்களிப்பு என்ன?
வ.உ. சிதம்பரனாரின் நெருங்கிய தோழனாக அவர் கூடவே இருந்து, தேசியத்தை பரப்ப மிகவும் உதவி செய்துள்ளார். 1925ல் தொழு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
Q29. வாஞ்சிநாதன் (1886-1911) என்பவர் யார், சுதந்திர போராட்டத்தில் அவருடைய முக்கிய பங்களிப்பு என்ன?
தமிழ் நாட்டில் செங்கோட்டை பகுதியேச் சேர்ந்தவர். இவர் சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தில் இருந்த போராடிய தீவிர போராளி. மணியாச்சி ரயில் நிலைய சந்திப்பில், திருநெல்வேலி ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் திரு. ஆஷ் என்பவரை சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
Q30. திருப்பூர் குமரன் (1904-1932) என்பவர் யார், சுதந்திர போராட்ட காலத்தில் அவரின் எந்த நடவடிக்கை இன்றும் நினைவில் கொள்ளப்படுகிறது?
திருப்பூர் குமரன் -- 1904 - 1932. சுதந்திர போராட்டத்தின் ஒரு தீவிர போராளி. இவ்வகையில் ஒரு எதிர்ப்பு போராட்டம் நடக்கும் போது, காவல் துறையினர் அவர் மீது தடியடி நடத்திய போது, படுகாயம் அடைந்த போதிலும் காங்கிரஸ் கொடி கீழே விழாதவாறு ஏந்திக்கொண்டு, தனது உயிர் போகும் (11.1.1932) வரை காத்தார். இதன் மூலம், அவருடைய தேசபற்றும், காங்கிரஸ் கொடி மீது இருந்த மரியாதையும் வெளிப்படுகிறது.
Q31. வங்காள் பிரிவினை, இந்து முஸ்லீம் ஒற்றுமையை பிரிக்கவும், தேசிய உணர்வை வளர விடாமல் தடுப்பதும், ஆங்கிலேயர்கள் நோக்கம் என்பது தெரிந்த உண்மை. எப்போது இந்த பிரிவினை அதிகார பூர்வமாக அமல்படுத்தப்பட்டது?
வங்காள் பிரிவினைக்கு முன் நடந்த நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகிறது. முதலில் லெஃப்டினண்ட் கவர்னருக்கு நிர்வாக கவுன்சில் ரத்து செய்யப்பட்டது. பிறகு, வங்காளத்தை இன மற்றும் மொழி அடிப்படையில் பிரிக்க முயற்சி செய்ததும் தோல்வி அடைந்தது. அதனாலேயே ஆங்கிலேயர்கள் வங்காள பிரிவினை திட்டத்தை ஜூலை 4, 1905 ல் அறிவித்து, 16 அக்டோபர் 1905ல் பிரிவினையை அமல் படுத்தியது. இவ்வாறாக உருவானது தான், கிழக்கு வங்காளம்--> கிழக்கு பாகிஸ்தான் (1947) --> வங்காள தேசம் (1971).
Q32. பிரிவினையை வங்காள மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர்?
மக்கள் பல வழிகளில் தங்கள் எதிர்ப்பையும், போராட்டத்தையும் வெளிப்படுத்தினர். இருப்பினும், இந்த பிரிவினை அமல்படுத்தப்பட்ட நாளன்று (16.10.1905) வங்காள மக்கள் இந்த நாளை ஒரு துயர நாளாக கருதி எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தினர். இவ்வாறு “Federal Hall” என்ற அரங்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், ""சுதேச இயக்கம்"" தொடர வேண்டும் என்ற முடிவும், ""வந்தே மாதரம்"" என்ற கோஷமும் ஏற்றுக்கொண்டனர். இதே நேரத்தில், மற்ற பகுதிகளிலிருந்தும் மக்களின் பேராதரவும் கிடைத்தது. வெளிப்பகுதிகளில், தீவிரவாத தலைவர்கள் மக்கள், நீதிமன்றம், பள்ளி, கல்லூரி, வெளிநாட்டுப் பொருள்களை நிராகரித்தல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கு பிறகு தேசிய மய கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை உருவாகத் தொடங்கின.
Q33. வங்காள பிரிவினையை எதிர்த்து கிளம்பிய போராட்டங்கள் ஆங்கிலேயர்களால் எவ்வாறு ஒடுக்கப்பட்டது?
1908 க்குள் பல கடுமையான நடவடிக்கைகள், தலைவர்களை சிறை அடைத்தல், நாடு கடத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஆங்கிலேயர்கள் இறங்கி, இதைக் கட்டுப்படுத்தினர்.
Q34. இங்கிலாந்தின் எந்த சட்ட இயக்கம், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என கருதப்படுகிறது?
1909 சட்டம். The Act of 1909 – இது மிண்டோ மார்லி சீர்திருத்தம் எனப்படுகிறது. (மிண்டோ இந்திய வைஸ்ராய், மார்லி இங்கிலாந்து அரசாங்க இந்திய விவகார காரியதரிசி யாக இருந்தனர்)
Q35. மிண்டோ மார்லி சீர்திருத்தம் (1909 சட்டம்) எவ்வகையில் இந்தியர்களுக்கு எதிராக இருந்தது?
இது ஒரு சாசன சீர்திருத்த சட்டம்.
1. 1892 இந்திய கவுன்சில் சட்டத்தின் படி கவர்னர் ஜெனரல் கவுன்சிலில் 16 கூடுதல் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
2. மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் மூலம் இந்த எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்பட்டது.
3. அதே போல், மதராஸ், பாம்பே மற்றும் வங்காள் மாகாண சட்ட சபையில், கூடுதல் உறுப்பினர்கள் எண்ணிக்கை 20 லிருந்து 50 ஆக உயர்த்தப்ப்ட்டது. அதே சமயம, கவர்னர் ஜெனரல் கவுன்சிலில் அதிகார மற்றும் அதிகாரமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
4. இந்த சீர்திருத்த அடிப்படையில், முஸ்லீம்கள், ஜமீந்தார்கள், கல்வியாளர்கள், வணிகர்கள் என பலவகை பிரிவினருக்கு, வாக்காளர் தொகுதிகள் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பதாகச் சொல்லி, மக்களிடையே ஒரு பிளவை ஆங்கிலேயர்கள் தங்களுக்கு சாதகமாக செயல்படுத்தினர்.
இந்த முஸ்லீம்களுக்கு தனி வாக்காளர் தொகுதி என்ற பிரிவினை, பிறகு பல நேரங்களில் ஒரு பிரச்சனையாக பல சமயங்களில், ( இன்றும் கூட) வெளிப்படத் தொடங்கியது. இதை சைமன் கமிஷனே இவ்வாறாக விவரித்துள்ளது. ஜான் மார்லியும் பிற்காலத்தில், இவ்வாறு ஒரு நிலை ஏற்படுமென்று எதிர்பார்த்திருந்தேனேயானால், நான் இந்த மாதிரி ஒரு நடவடிக்கையிலிருந்து ஒதுங்கியிருப்பேன் என்றும் கூறியுள்ளார். இந்த பிரிவினை இந்திய அரசியலில் சுதந்திர இந்தியா, அதற்கு பிறகும் ஒரு பிரச்சனையாகவே முன் நிற்கும் என தெரிவித்தார்.
Q36. ஆங்கிலேயர்கள், வேறு எவ்வித நடவடிக்கைகள் மூலம், தங்கள் பிரித்தாளும் கொள்கைகளை தொடர்ந்து செயல் படுத்தினர்?
1. ஆங்கிலேயருக்கு சாதகமாக செயல்பட்ட, சர் சையத் அகமது கான் மற்றும் ராஜா சிவ ப்ரசாத் ஆகியோரை காங்கிரஸூக்கு எதிராக செயல்பட தூண்டினர்.
2. இந்து முஸ்லீம்களுக்கிடையில் வேறுபாட்டை மேலும் உயர்த்த, கல்வியறிவு பெற்ற இந்து முஸ்லீம்களுக்கிடையிலும், பிறகு, பொது மக்களிடையிலும், அவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதிகளை ஒதுக்கி, பிரித்தாளும் கொள்கையை மேலும் தீவிரமாக செயல்படுத்தினர்.
3. இந்தி -- உருது மொழி பிரச்சனை, மற்றும் பசு பாதுகாப்பு இயக்கம் ஆகிய சர்ச்சைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.
4. காங்கிரஸ் ல் இருந்த இருபிரிவினரிடையே இருக்கும் இடைவெளியை மேலும் விரிவடையச் செய்ய முயற்சித்தனர்.
5. 1921ல் இளவரசர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் இளவரசர்களுக்கு தனி மையம், அமைப்பு, அறை போன்றவற்றை உருவாக்கி, பொது மக்களிடமிருத்து பிரித்தனர்.
6. ஜமீந்தார்களுக்கு நில வருவாய் திட்டத்தை உறுதியாக்கி அவர்களையும் தங்கள் பக்கம் ஈர்த்தனர்.
7. 1932ல் ""இன முறை கோட்பாடு"" “Communal Award of 1932” என்ற சட்டத்தை அமல்படுத்தி, அரிஜன மக்களுக்கு அரசியல் அடையாளத்தையும், வாக்காளர் தொகுதியையும் ஏற்படுத்தி, இவர்களையும் பொது மக்களிடமிருந்து பிரிக்க திட்டமிட்டனர்.
8. சில தீவிரவாத சிறு தலைவர்களை ஆசை வார்த்தைகளையும் சலுகைகளையும் காட்டி, தங்கள் பக்கம் ஈர்க்க ஒரு பக்கம் முயன்றும், மறு பக்கம் எங்கெல்லாம் முடிந்ததோ அங்கெல்லாம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தும், தங்கள் பிரிவினை முயற்சியை தொடர்ந்தனர்.
Q37. ஆங்கிலேயர்கள் இந்து-முஸ்லீம் ஐ பிரிக்க நினத்தாலும், இருவரும் ஒற்றுமையை விரும்பினர் என்பது எவ்வாறு வெளிப்படுகிறது?
1916ல் இந்திய தேசிய காங்கிரஸ் ம் முஸ்லீம் லீக் லக்னௌல் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர்களிடம் சுய நிர்வாக உரிமைகளை சேர்ந்து போராட முடிவெடுத்தனர். இந்த உடன்படிக்கைக்கு மூலக்காரணமே முகமது அலி ஜின்னா என்பது குறிப்பிடத் தக்கது. இதற்காக இவரை சரோஜினி நாயுடு, ""இந்து முஸ்லீம் ஒற்றுமைத் தூதுவர்"" என வர்ணித்தார்.
Q38. 1916 லக்னௌ உடன்படிக்கை, காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இடையே ஏற்பட்டதன் விளைவு என்ன?
மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் 1919. இந்த சீர்திருத்தத்தின் படி, இஸ்லாமியர்களுக்கு
1. அவர்களின் எதிர்பார்ப்பை விட அதிகமான வாக்காளர் தொகுதிகள் பெற்றனர். (மக்கள் தொகை அடிப்படையிலிருந்தால் குறைவாக இருந்திருக்கும்)
2. மத்திய சட்ட சபையில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு பெற்றனர்.
Q39. மாண்டேகு செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தம் இஸ்லாமியர்களிடையில் ஒரு அமைதியை ஏற்படுத்தியது. ஆனால், இதுவே, பிளவு படாத இந்தியாவுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது? அது என்ன?
இந்த சீர்திருத்தமே இஸ்லாமியர்கள் தங்களுக்கு தனி நாடு வேண்டுமென கோருவதற்கான அடிப்படை காரணங்கள் ஆகியது. (அ) இஸ்லாமியர்கள் முன்பாக ஏற்றுக்கொண்ட, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர் தொகுதி எண்ணிக்கையில் திருப்தி அடையவில்லை. (ஆ) இஸ்லாமியர்களுக்கு தனி அரசியல் அடையாளம்/அந்தஸ்து கொடுத்ததினால், இந்துக்கள் தங்களை அறியாமலேயே இஸ்லாமியர்கள் மனதில் தனி நாடு என்ற எண்ணத்திற்கு வித்திட்டு விட்டனர்.
Q40. தீவிர வாத தேசிய வாதிகளின் தோல்விக்கு காரணம் என்ன?
1. இவர்கள் தங்கள் போராட்டத்தை பெரிய அளவில் நடத்த விரும்பிய போதிலும், இவர்களின் நோக்கங்கள் கீழ்மட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் போன்றவர்களிடம் போய் சேரவில்லை;
2. அவர்களின் உயர் எண்ண போராட்ட திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்த முடியவில்லை.
Q41. உள் ஆட்சி சங்கம் Home Rule League ன் முக்கிய நோக்கங்கள் யாவை?
இங்கிலாந்து மகாராணியின் கட்டுப்பாட்டுக்குள் சுதந்திரமாக இயங்கும் ஒரு நாடு என்ற அந்தஸ்து (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போல) பெற வேண்டும் என்பதே. இதை ஒரு நிலையில், சுயராஜ்யம் வேண்டுமென வலியுறுத்திய பால கங்காதர திலக் ம் ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Q42. இரண்டு உள்ளாட்சி சங்கங்கள் இயங்கியதால், இதன் நோக்கங்கள் பல பிரிவினரிடையே சென்றடைந்தது. அதனால், வேறு சில தேசிய அளவிலி புதிதாக சில பிரிவினரும் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் யார்?
1. காயஸ்தா மற்றும் காஷ்மீர் பிராமண பிரிவினரும் ஐக்கிய மாகாணங்கள் பகுதி.
2. சிந்த் பகுதியிலிருந்து இந்து அமில் பிரிவினர்.
3. குஜராத்திலிருந்து இளைய வயது வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள்.. இதனால், தேசிய போராட்டத்தில் இளையவர்களின் பங்கு அதிகரித்தது. உதாரணமாக, ஜவஹர்லால் நேரு, சத்தியமூர்த்தி (தமிழ்நாடு), ஜிதேந்திரலால் பானர்ஜி (கல்கத்தா), ஜம்னாதாஸ் துவாரகாதாஸ் உமர், மற்றும் சிலர் பாம்பே பகுதியிலிருந்து சேர்ந்தனர்.
Q43. உள்ளாட்சி சங்கங்கள் Home Rule League மறைய காரணம் என்ன?
1. 1917ல் மாண்டேகு பிரபு, ஆங்கிலேய அரசு ஒரு பொருப்பான அரசாக இயங்கும் என உறுதி அளித்ததின் பேரில், அன்னி பெசண்ட் அம்மையார் ஆங்கிலேயர்களுக்கு சற்று ஆதரவாக இயங்கத் தொடங்கினார்.
2. பால கங்காதர திலக், ஆங்கிலேய எழுத்தாளர் வாலண்டின் சிரோல் என்பவர் மீது லண்டனில் வழக்கு தொடுத்திருந்ததால், உள் ஆட்சி சங்க விவகாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. வானண்டின் சிரோல் என்பவர் “Indian Unrest” என்ற புத்தகத்தில் இந்தியர்களை தவறாக வர்ணனை செய்திருந்ததால், திலக் அவர் மீது வழக்குத் தொடுத்தார்.
3. சம்பரான் சத்தியாகிரகத்துக்கு பிறகு, காந்திஜி தேசிய போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டதால், அணுகுமுறை மாற்றங்கள் காரணமாக, உள் ஆட்சி சங்க தானாகவே மறையத் தொடங்கியது.
Q44. ஆகஸ்ட் 1917 அறிவிப்பு -- மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு -- என்பது என்ன?
ஆகஸ்ட் 20, 1917: மாண்டேகு இங்கிலாந்து அரசாங்கத்தில் இந்திய விவகார காரியதிரிசியாக இருந்தார். (செம்ஸ்ஃபோர்டு இந்திய வைஸ்ராயாக 1916-1921 இருந்தவர்) . இவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அறிவித்தபடி,
1. இந்திய நிர்வாகத்தின் பல துறைகளிலும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
2. படிப்படியாக இந்தியர்களே தானே மேலாண்மை செய்யும் அமைப்புகள் உருவாக்கப்படும். இந்த அறிவிப்பின் மூலம் இங்கிலாந்து அரசாங்கம் பொருப்பாக செயல்படும் என தெரிவித்தார்.
Q45. ஒத்துழையாமை இயக்கம் எப்போது, எதற்காக அறிவிக்கப்பட்டது?
1. ரௌலத் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பஞ்சாப் ஜாலியன் வாலா பாக் நிகழ்வுக்கு தக்க தீர்வும், ஆங்கிலேய அரசு மன்னிப்பும் கோரவேண்டும்.
2. கிலாஃபத் இயக்கத்துக்கு ஆங்கிலேய அரசு ஆதரவு தெரிவித்து, முதல் உலகப் போரில் தோற்கடிக்கப்பட்ட துருக்கி யின் மீது கருணையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
3. தேசியவாத போராளிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஆங்கிலேய அரசாங்கம் எந்த கோரிக்கையையும் ஏற்க மறுத்ததால், காந்திஜி ""ஒத்துழையாமை இயக்கம்"" ஜனவரி 1921ல் தொடங்கினார்.
Q46. ஒத்துழையாமை இயக்கத்தை வெளிப்படுத்த எவ்வகை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
1. அரசாங்க பள்ளி, கல்லூரி, நீதிமன்றங்கள், தேர்தல்கள், வெளிநாட்டு சரக்குகள் ஆகியவற்றை புறக்கணித்தல்.
2. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பட்டங்கள், கௌரவ பதவிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகள் ஆகியவற்றை விட்டுக்கொடுத்தல்.
3. அரசாங்க நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதை தவிர்த்தல்.
4. ஆங்கிலேய ராணுவம், அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் இந்தியர்களும் இதர தொழிலாளர்களும் மெசபோடேமியாவுக்கு (இராக்) செல்ல மறுத்தல்.
Q47. ஒத்துழையாமை இயக்கத்தின் அடிப்படையில் மக்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் அணுகுமுறையும் என்ன?
1. இந்திய கல்வி முறையில் தேசிய பள்ளிகள், கல்லூரிகள் நிறுவுவது.
2. பஞ்சாயத்து போன்ற சுய நீதி மன்றங்களை அமைத்தல்.
3. இந்திய தயாரிப்பு பொருட்களை மக்களிடையே பரப்புதல். காதி ஆடைகளையும், பருத்தி நூல் தயாரிப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்துதல்.
4. இந்து முஸ்லீம் ஒற்றுமையை மேம்படுத்துதல்.
5. தீண்டாமையை ஒழித்து, அரிஜன மக்களை மேம்படுத்துவது.
6. பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களுக்கும் அதிகாரமளித்தல்.
Q48. ஒத்துழையாம இயக்கத்தின் அடிப்படையில் ஒரு நிதி திரட்டப்பட்டது. அது என்ன?
திலகர் சுயராஜ்ய நிதி TILAK SWARAJ FUND – இதன் மூலம் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி, நூல் நூற்பு சக்கரங்களை அதிக அளவில் நிறுவி, பொது மக்களை அதிக அளவில் சேர்ப்பது. இந்த முயற்சி ஏப்ரல்-ஜூன் 1921 காலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன் முதற்கட்ட முயற்சி ஜனவரி-மார்சி 1921 காலத்தில் நடந்தது. இதன் மூன்றாம் கட்டமாக வெளிநாட்டு பொருட்களை நிராகரித்தல், எரித்தல் போன்ற நடவடிக்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் ஒத்துழையாமை இயக்கம் வெற்றிகரமாக பரவுவது, நடப்பது ஆங்கிலேயர்களின் கவனத்தை ஈர்த்தது.
Q49. 11.2.1922 அன்று காந்திஜியின் உத்தரவின் பேரில், ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்டது. காரணம் என்ன?
உத்திர பிரதேசம், கோரக்பூர் அருகில் சௌரி சௌரா என்ற கிராமத்தில், 4/5.2.1922 அன்று, காவல் துறையினர் மீது கோபம் கொண்ட பொது மக்கள், காவல் துறையினரை தாக்கி 22 காவல்காரர்கள் மரணம் அடைந்தனர். காவல் நிலையமும் எரிக்கப்பட்டது. இதனால் கோபம் கொண்ட காந்திஜி ஒத்துழையாம இயக்கத்தை கைவிட்டார்.
Q50. ஒத்துழையாம இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதினா, மக்களிடையே எவ்வகை மனநிலை மாற்றம் ஏற்பட்டது?
1. தேசிய உணர்வும் விழிப்புணர்வும் ஏற்பட்டு, அதிகமான தொழிலாளர்கள் வர்க்கம் இந்த இயக்கத்தில் ஈடுபட்டது.
2. இந்தியாவின் மூலை முடுக்குகளிலும் இயக்கம் பரவியது.
3. இந்திய தேசிய காங்கிரஸ் ன் மீது அதிக பற்றுதலும், சுதந்திரத்திற்காக போராடும் மற்றும் பேச்சு வார்த்தை நடத்த தகுந்த அமைப்பு ஆக மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர்.
4. கிலாஃபத் இயக்கத்துக்கு ஆதரவு அளித்ததினால் இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஓங்கியது.
5. துன்பங்களை ஏற்று, தியாகம் செய்ய மக்கள் அதிகமாக முன்வந்தனர். இந்த முன்னேற்றங்களால் போராட்டம் சுதந்திரத்தை நோக்கி வேகமாக முன்னேறியது.
Q51. சைமன் கமிஷன் எதற்காக அறிவிக்கப்பட்டது?
8.11.1927 – ஆங்கிலேயர்களின் ஒரு பொருப்பான நிர்வாகத்தை ஏற்படுத்தும் முக்கிய எண்ணத்துடன்.
Q52. சைமன் கமிஷனை எதிர்க்க மிக முக்கிய காரணம் என்ன?
இந்த குழுவில் அனைவரும் ஆங்கிலேயர்கள் -- இந்தியர்கள் எவரும் சேர்க்கப்படவில்லை. மேலும், இந்த குழு 1930ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் இந்தியாவுக்கு, சுதந்திரம் அளிப்பதைப் அல்லது, இங்கிலாந்தின் கீழ் ஒரு சுதந்திர நாடு “Dominion Status” அந்தஸ்து கொடுப்பது பற்றிய எந்த குறிப்பும் இல்லை. இதனால் இதற்கு அதிகமான எதிர்ப்பு கிளம்பியது.
Q53. இர்வின் பிரபு எவ்வகையான அறிவிப்பை வெளியிட்டார், அது எவ்வாறு அழைக்கப் பட்டது?
31.10.1929 -- அன்று, இந்தியாவுக்கு இங்கிலாந்தின் கீழ் இந்தியாவுக்கு சுதந்திரம் - Dominion status – என அறிவித்தார். இது ""தீபாவளி அறிக்கை"" என அழைக்கப்பட்டது.
Q54. பட்லர் கமிஷன் ன் முக்கிய பரிந்துரை என்ன?
1927 - இந்த குழு ஹார்கோர்ட் பட்லர் (மற்றும் இருவர்) என்பவர் தலைமையில் அமைக்கப் பட்டதால் இப்பெயர். இந்த குழுவின் முக்கிய சிபாரிசு -- மன்னர்களால் ஆளப்பட்டு வந்த பகுதிகள் மற்றும் மன்னர்கள்/இளவரசர்களுடன் வைஸ்ராய் மட்டுமே நேரடி தொடர்பு கொள்ள அதிகாரமளிக்கப்பட்டார். இந்த சிபாரிசு, இந்திய அரசாங்க சட்டம் 1935 லும் சேர்க்கப்பட்டிருந்தது.
Q55. 1928ல் நேரு குழு - Nehru Committee அமைக்கக் காரணம் என்ன?
சைமன் கமிஷன் மீது ஏற்பட்ட கோபம் ஏமாற்றம் காரணமாக 12.2.1928 அன்று டெல்லியில் ஒரு மகாநாடு நடத்தப்பட்டது. அதற்கு அகில இந்திய அளவில், 29 மாகாண காங்கிரஸ் நிர்வாகிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் கலந்து கொண்டன. இந்த மகாநாடு, மோதிலால் நேரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து, இந்திய சாசனச் சட்டம் எழுதுவதற்கு தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிதற்காக அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த குழு தனது பரிந்துரையை ஆகஸ்ட் 1928ல் சமர்ப்பித்தது. இதுவே நேரு அறிக்கை எனப்படும்.
Q56. நேரு அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள் யாவை?
1. மதக் கோட்பாட்டு சுதந்திரம்
2. மத்திய மற்றும் மாகாண கீழ் சபையில் இணைந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் இருக்க வேண்டும். எங்கெல்லாம் இந்து மற்றும் முஸ்லீம்கள் எண்ணிக்கை சிறுபான்மையினராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்.
3. வங்காளம் மற்றும் பஞ்சாப் ல் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது.
4. இட ஒதுக்கீடு மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் 10 வருடங்களுக்கு மட்டுமே என உறுதிப்படுத்தப்படவேண்டும்.
5. பொதுவான, வயது வந்தோருக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும்.
Q57. நேரு அறிக்கை வரலாற்றில் மட்டுமே இடம் பெற்றது. நடை முறைக்கு வரவில்லை. காரணம் என்ன?
மோதிலால் நேருவின் அறிக்கை கல்கத்தா மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. கீழ்க்கண்ட காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்படவில்லை:
1. முகமது அலி ஜின்னா, இஸ்லாமியர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
2. இந்து மகா சபையின் M.R. ஜெயகர் இதை கடுமையாக எதிர்த்தார். இதனால் இருவருக்கும் இடையில் வன்முறை அளவுக்கு சர்ச்சை பெருகிற்று. ஜின்னா சமர்ப்பித்த எந்த மாற்றங்களும் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கடைசியில் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் நின்றது. இதன் விளைவாக, இந்து-முஸ்லீம் உறவு பாதிப்பு அடைந்தது.
Q58. கல்கத்தா அனைத்துக் கட்சி மகாநாட்டிற்குப் பிறகு, முஸ்லீம்களின் அணுகுமுறை, நடவடிக்கை எவ்வாறிருந்தது?
28.3.1929 முஸ்லீம் லீக் கூட்டத்தில், நேரு அறிக்கை முழுவதுமாக நிராகரிக்கப்பட்டு, அவர்கள் 14 கோரிக்கைகளை முன் வைத்தனர். அவை:
1. எழுதப்படும் அரசியல் சாசனம், மத்திய ஆட்சியை மையமாக கொண்டு, மாகாணங்களுக்கு தீர்மானிக்கும் உரிமை அளிக்கப்படவேண்டும்.
2. சிறுபான்மையினருக்கு தேவையான ஒதுக்கிட்டுடன் கூடிய தேர்தல்களே நடத்தப்பட வேண்டும்.
3. மாகாணங்களுக்கு சீரான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
4. மத்தியில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்.
5. மத அடிப்படையிலான ஒதுக்கீடு அடிப்படையில் வாக்காளர் தொகுதி தொடர வேண்டும்.
6. எதிர்காலத்தில் எல்லைப் பிரிவுகள், பஞ்சாப், வங்காளம் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைக்கப்பட வேண்டும்.
7. எல்லோருக்கும் முழுமையான மத சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். 8. எந்த ஒரு தேர்வு மூலம் அமைக்கப்படும் அமைப்பில், எந்த மதத்தினராக இருந்தாலும், மூன்று பங்கு உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், அந்த மசோதா நிராகரிக்கப்பட வேண்டும்.
9. பாம்பே மாகாணத்திலிருந்து சிந்த் பகுதி பிரிக்கப்பட வேண்டும்.
10. வடமேற்கு மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
11. அரசாங்க பணிகளில் இஸ்லாமியர்களுக்கு போதிய இடமளிக்கப் பட வேண்டும்.
12. இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
13. மூன்றில் ஒரு பங்கு இஸ்லாமியர் அல்லாத எந்த மந்திரி சபையும் அமைக்கப்பட கூடாது.
14. அரசியல் சாசனத்தில், மாகாணங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த மாற்றமும் செய்யக் கூடாது.
Q59. இஸ்லாமியர்களிடையில் எந்தெந்த நிலையில் தேசிய உணர்வும் அதைச் சார்ந்த அமைப்புகளும் அமையத் தொடங்கியது?
1. 29.7.1929 -- காங்கிரஸ் முஸ்லீம் கட்சி நிறுவப்பட்டது.
2. அலகாபாத் ல் நடத்தப்பட்ட அகில இந்திய தேசிய முஸ்லீம் மகாநாட்டில், மௌலானா அபுல் அபுல் கலாம் ஆஸாத் பங்கு பெற்றதினால் இஸ்லாமியர்களுக்கிடையில் தேசியம் வளர்ச்சி பெற்றது.
3. மார்ச் 1929ல் கல்கத்தாவில் நடத்தப்பட்ட முஸ்லீம் மகாநாட்டில், கிலாஃபத் இயக்கத் தலைவர்கள் பங்கு பெற்று, நேரு அறிக்கைக்கு ஆதரவு அளித்தது.
4. முஸ்லீம் தேசிய கட்சி, காலிக் ஸம்மான், டாக்டர் ஷேக் முகமது ஆலம், டாக்டர் எம்.ஏ.அன்சாரி ஆகியோரால் தொடங்கப்பட்டது.
5. வடமேற்கு மாகாணங்களில், கான் அப்துல் கஃபார் கான், ""செஞ்சட்டை"" “Khudai Khidmatgars” (meaning Red Shirts) அமைப்பை, டாக்டர் கான் சாஹிப் உடன் தொடங்கினார். இதன் காரணமாக இஸ்லாமியர்களுக்கிடையில் தேசியம் வளர மிகவும் உதவியது.
Q60. 1930-34 களில், பொது கீழ்படியாமை இயக்கத்தை காந்திஜி தொடங்க காரணமாக இருந்தவை யாவை?
1930ன் முற்பகுதியில், காந்திஜி, ஆங்கிலேயர்களிடம், பொது மக்கள் நலனுக்கான 11 கோரிக்கைகளை முன் வைத்து, 41 நாட்களில் நடவடிக்கை முடிக்கப்படவேண்டும் என கோரினார். ஆங்கிலேயர்கள் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாததினால், காந்திஜி பொது கீழ்படியாமை இயக்கத்தைத் தொடங்கினார். அவர் கொடுத்த கோரிக்கைகள்: நில வரி/வருவாய் குறைவு, உப்பு வரி நீக்கம், உப்பின் மீது அரசாங்க கட்டுப்பாட்டை நீக்குதல், கடற்கரையோர கப்பல் போக்குவரத்தை இந்தியர்களுக்கு ஒதுக்குதல், ஸ்டெர்லிங்-ரூபாய் பண பரிமாற்ற விகிதம், இந்திய ஜவுளித்துறையை பாதுகாத்தல், ராணுவ செலவீடை குறைத்தல், பொது நிர்வாக செலவினத்தை குறைத்தல், முழுமையாக மதுக்கடைகளை மூடுதல், அரசியல் தலைவர்கள் சிறையிலிருந்து விடுவித்தல், ஆயுதச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து, தற்காப்புக்காக ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதி போன்றவை.
Q61. 1930-1934 பொது கீழ் படியாமை இயக்கத்துக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்வு இந்த இயக்கத்தை மேலும் ஊக்குவித்தது. அது என்ன?
டிசம்பர் 1929ல், காங்கிரஸின் லாகூர் மகாநாட்டில், ""பூரண சுதந்திரம்"" “Purna Swaraj” (complete independence) கொடி ஏற்றப்பட்டு, ஜனவரி 26, 1930 ஐ நாடு முழுவதும் சுதந்திர நாளாக அறிவித்தது.
Q62. ஆங்கிலேயர்களின் ஆட்சியையும், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் காந்திஜி எவ்வாறு வர்ணித்தார்?
ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களைப் பற்றி ""கடவுளுக்கும், மனித குலத்துக்கும் இழைக்கப்படும் அநீதி"" என்றும், ஆங்கிலேய ஆட்சியை ""பிரிட்டிஷ் வேதாள ஆட்சி"" எனவும் வர்ணித்தார்.
Q63. காந்திஜி பொது கீழ்படியாமை இயக்கத்தை எப்போது தொடங்கினார்?
காந்திஜி பொது கீழ் படியாமை இயக்கத்தை, 12 மார்ச் 1930 அன்று, உப்பு சத்தியாகிரகத்தின் மூலம் துவக்கினார். உப்பு சத்தியாகிரகத்தை அஹமதாபாத் சாபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து, குஜராத் தண்டி வரை நடத்தினார். இந்த நடை பயணம் 24 நாட்கள், 390 கி.மீ தூரம். இவருடன் 79 தொண்டர்கள் இருந்தனர். 5 ஏப்ரல் 1930 அன்று தண்டி சென்றடைந்து, உப்பு மீது விதிக்கப்பட்டிருந்த சட்டத்தை மீறி தகர்த்தார்.
Q64. தண்டி யாத்திரைக்கு பிறகு, பொது கீழ்ப்படியாமை இயக்கத்தின் மற்ற தொடர் நடவடிக்கைகள் என்ன?
1. கிராம புறங்களிலிருந்து மக்களை ஈடுபடுத்துதல்.
2. உப்பு சத்யாகிரகம் தென் பகுதிகளிலும் பரவி, வேதாரண்யத்தில் ராஜகோபாலச்சாரி தலைமையில் நடந்தது.
3. நில வரி/வருவாய் கொடாமல் இருப்பது.
4. சாராய கடைகளை முற்றுகையிடுதல்.
5. காவல் துறை வரி கொடாமை, மற்றும் இதர போராட்டங்கள், கூட்டங்கள் என தொடர்ந்தனர்.
இந்த போராட்டங்களில், வணிகர்கள், தொழிலதிபர்கள், என அனைத்து தரப்பு மக்களும் மார்ச் முதல் செப்டம்பர் 1930 வரை பங்கு பெற்றனர். இதன் விளைவாக, ஆங்கிலேயர்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு, காந்தி-இர்வின் 1931 உடன்படிக்கை ஏற்பட்டது.
Q65. காந்தி இர்வின் 1931 உடன்படிக்கை ன் உள்ளடக்கம் என்ன?
ஆங்கிலேயர்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை ஏற்றனர்:
1. எல்லா கடுமையான சட்டங்களையும் திரும்ப பெறவும், போராளிகள் மீது இருந்த வழக்குகளை திரும்ப பெறவும் ஒத்துக் கொண்டனர்.
2. எல்லா அரசியல் கைதிகளையும் (வ்ன்முறையில் ஈடுபட்டவர்களை தவிர்த்து) விடுதலை செய்வது.
3. போராளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களை திரும்பி அளித்தல்.
4. மதுக்கடைகள் மற்றும் அயல் நாட்டு பொருள் விற்பனை மையங்களுக்கு எதிராக அமைதியான போராட்டத்தை அனுமதித்தல்.
5. கடற்கரையோரம் வாழ் மக்கள் இலவசமாக உப்பு சேகரித்தலை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை அனுமத்திக்க வேண்டும்.
காங்கிரஸ் தனது தரப்பிலிருந்து கீழ்க்கண்ட நிபந்தனைகளை ஏற்றனர்:
1. பொது கீழ்படியாமை இயக்கத்தை கைவிடுதல்.
2. காந்திஜீ இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் பங்கு பெறுவது.
3. காவல் துறையினரின் கடுமையான நடவடிக்கைகள் மீது விசாரணை வேண்டும் என வலியுறுத்தாமல் இருத்தல்.
( இதன் படி, செப்டம்பர்-டிசம்பர் 1931ல் காந்திஜி இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் பங்கு கொண்டார். வட்ட மேஜை மகாநாடு தோல்வி அடைந்தது. அதே சமயம் தங்கள் ஒடுக்கு முறையை தொடர்ந்தனர். ஆகவே, நாடு திரும்பியவுடன் பொது கீழ்படியாமை இயக்கத்தை மீண்டும் துவக்கினார். இது 1934 வரை நீடித்தது. இந்த முறை இந்த இயக்கம் வன்முறை இல்லாமல் தீவிரமாக இயங்கவே, மக்களிடையே பெரும் வரவேற்பையும், காங்கிரஸ் மிகவும் மேலும் வலிமை உடையதாகவும் ஆனது. இருப்பினும், இந்து முஸ்லீமுக்கிடையிலிருந்த நல்லிணக்கம் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்பு முன்பைவிட குறைவாக காணப்பட்டது. )
Q66. சைமன் கமிஷன் தலைவராக இருந்தவர் யார், அவ்வமயம் இங்கிலாந்து பிரதமர் யார்?
1927ல் சர் ஜான் சைமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவ்வமயம் பால்ட்வின் அவர்கள் இங்கிலாந்து பிரதம மந்திரியாக இருந்தார். அக்டோபர் 1929 இந்த குழு தனது அறிக்கையில் இரு பிரிவினருக்கும் ஒரு கூட்டு பேச்சு வார்த்தை நடத்தி, சாசன சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்த அறிக்கை இங்கிலாந்து அடைவதற்குள், இங்கிலாந்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தொழிலாளர் கட்சி ராம்சே மெக்டொனால்ட் பிரதமர் பதவியிலமர்ந்தார். இதைத் தொடர்ந்து, இந்திய வைஸ்ராயாக இருந்த இர்வின் பிரபு, தனது "" தீபாவளி அறிக்கை"" யை 31 அக்டோபர் 1929 அன்று, அதாவது, இந்தியாவுக்கு இங்கிலாந்து அரசாங்கத்தின் கீழ், சுதந்திர நாடாக Dominion status செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவித்தார். மேலும், சைமன் கமிஷன் அறிக்கை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அடுத்த வட்ட மேஜை உடனடியாக லண்டனில் நடத்தப்பம் எனவும் அறிவித்தார்.
Q67. எத்தனை வட்ட மேஜை மகாநாடுகள் நடத்தப்பட்டன? அதன் வெளிப்பாடு என்ன?
மூன்று. அவற்றின் வெளிப்பாடுகள்:
1. நவம்பர் 1930-ஜனவரி 1931: இந்த மகாநாடு, கிட்டத்தட்ட ஆங்கிலேய அரசாங்கத்தின் ஒரு உள் விவகார கூட்டமாகவே இருந்தது. இதில் 16 ஆங்கிலேய அதிகாரிகளும், 16 இந்திய பிரதிநிகளும் (எல்லாம் சிறு கட்சிகளின் பிரதிநிதிகள்) மற்றும் B.R அம்பேத்கர் ம் பங்கு பெற்றனர். காங்கிரஸ், சைமன் கமிஷன் அறிக்கையின் மீதிருந்த அதிருப்தியில் பங்கு பெறாததினால், பொருப்பான ஒரு அரசாங்கம் ஆக இருக்கும் என்ற ஒரு வாயளவிலான ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்திய தலைவர்களும், தங்கள் இனத்திற்கு இட ஒதுக்கீடுகள் கிடைக்கும் திருப்தியில், ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டனர்.
2. செப்டம்பர் -- டிசம்பர் 1931 - காங்கிரஸின் பிரதிநிதியாக காந்திஜி மட்டும் பங்கு கொண்டார். இவருடன் இதர அரசியல் மற்றும் மத தலைவர்கள் பங்கு கொண்டனர். மகாநாடு தொடங்கும் போதே, மத/இன தலைவர்களும், பின்தங்கிய மக்கள் தலைவர் அம்பேத்கரும் இட ஒதுக்கீடு, தனி வாக்கு தொகுதிகள் போன்றவற்றை தீவிரமாக முன் வைக்க, ஒரு முடிவும் ஏற்படாமல், கூட்டம் முடிவு பெற்றது. இருப்பினும், ஆங்கிலேயர்கள், தங்கள் பிரித்தாளும் கொள்கையை வலுப்படுத்தும் வகையில், வடமேற்கு மற்றும் சிந்த், இரு புதிய மாகாணங்களை உருவாக்குவதாக அறிவித்தனர். மனதளவில் பாதிக்கப்பட்ட காந்திஜி, இந்தியா திரும்பியவுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
3. 17.11.1932 முதல் 24.12.1932 வரை – காங்கிரஸ் அல்லாத (பெருந்தலைவர்கள் அனைவரும் சிறையில்) மற்ற சிறு அளவிலான கட்சி/மத தலைவர்கள் கொண்ட ஒரு பலவீனமான அணியுடன் பேச்சு வார்த்தை என்றதால், ஆங்கிலேயர்களுக்கு முடிவு எடுப்பதில் மிகவும் வசதியாக இருந்தது. முன்பாக நடத்தப்பட்ட, மற்றும் தற்போது நடந்த மகாநாட்டின் அடிப்படையில், இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்களுக்குப் பிறகு, இந்திய அரசாங்க அட்டம் 1935 இயக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு முன்பாக, இங்கிலாந்து பிரதம மந்திரி 16 ஆகஸ்ட் 1932 ""வகுப்புவாத அறிக்கை"" “Communal Award” யை அறிவித்தார்.
Q68. 1932 வகுப்புவாத அறிக்கையின் முக்கிய உள்ளடக்கம் என்ன?
இரண்டாம் வட்ட மேஜை மகாநாட்டில் ஒதுக்கீடு பற்றிய முடிவு எதுவும் எடுக்க முடியாத நிலையில், ராம்சே மெக்டொனால்ட் தானாகவே ஒரு வகுப்பு வாத ஒதுக்கீடு முறையை அறிவித்தார். அதன்படி, முஸ்லீம், சீக்கியர்கள், கிறித்துவர்கள், இந்திய ஆங்கிலேயர்கள், ஐரோப்பியர்கள், பெண்கள், மராத்தியர்கள் (பாம்பேயில் மட்டும்) என பலவகை மக்களுக்கு இட ஒதுக்கீடு, தனி வாக்குத் தொகுதிகள், வாக்குரிமை என மக்களை பல வகையில் பிரித்த ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
Q69. இரண்டாம் வட்டமேஜை மகாநாட்டு விளைவுகள் யாவை?
காந்திஜி, முதலாவதாக, வகுப்பு வாத அறிக்கையை இங்கிலாந்து பிரதம மந்திரி அறிவித்தது, இரண்டாவதாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீடு முறை, ஆகிய இரண்டு முடிவுகளிலும் மிகவும் வேதனையடைந்தார். ஏற்கெனவே சிறையில் இருந்து கொண்டு, செப்டம்பர் 1932ல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். இதன் விளைவாக அம்பேத்கருக்கும், காந்திஜிக்குமிடையில் பேச்சு வார்த்தை நடந்து ஒரு உடன் படிக்கை ஏற்பட்டது. அதுவை, ""பூனா ஒப்பந்தம்"" என அழைக்கப்படுகிறது. இதனால், பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீடு முறையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு, அது, வகுப்பு வாத அறிக்கையில் சேர்க்கப்பட்டது.
Q70. 1940 ஆகஸ்ட் சலுகை “August Offer” என்பது என்ன?
1932-1940 காலங்களில் ஆங்கிலேயர்களிடமிருந்து எந்த விதமான குறிப்பிடும்படியான பெரியதொரு நடவடிக்கை ஏற்படவில்லை. ஆங்கிலேய இந்தியா அரசாங்கம், இந்திய மக்களை கலந்து ஆலோசிக்காமல் இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், இந்திய ராணுவத்தினரையும் பயன் படுத்தினர். இதனால் கோபம் கொண்ட இந்திய தலைவர்கள், இந்தியாவுக்கு எதிரான ஆங்கிலேயர்களிம் போர் மற்றும் அமைதி பற்றிய திட்டங்களை விவரமாக எடுத்துரைக்க வேண்டும், மேலும் இந்திய சுதந்திரத்தைப் பற்றி ஆங்கிலேயர்களின் திட்டத்தையும் மத்தியில் தேசிய அமைச்சரவை அமைப்பது பற்றி முன் வைக்க வேண்டும் என வலியுறுத்தவே வெளி வந்தது தான் ஆகஸ்ட் 1940 சலுகை.
Q71. 1940 ஆகஸ்ட் சலுகை யின் உள்ளடக்கம் என்ன?
1. இந்தியர்கள் அதிகமாக சேர்க்கப்பட்ட வைஸ்ராயின் செயற்குழு விரிவாக்கம்.
2. இந்தியர்கள், ஆங்கிலேயர்கள் அடங்கிய ஒரு போர் ஆலோசனைக் குழு அமைத்தல்.
3. போருக்கு முன், பின் இந்திய தலைவர்களிடையே புரிந்து கொள்ளல் மற்றும் உடன்படிக்கை.
Q72. 1940 ஆகஸ்ட் சலுகை மீது காங்கிரஸின் உணர்வுகள் எவ்வாறிருந்தது?
காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. காரணம், இதில் இந்தியர்களை சேர்ப்பது மட்டுமே குறிப்பிடப் பட்டிருந்தது. இந்தியர்களுக்கு அதிகாரத்தையும், ஆட்சி மாற்றம் கொடுப்பதாக எந்த ஒரு அறிகுறி இல்லை என்பதே முக்கிய எதிர்ப்புக் காரணம். இந்தியர்கள் உணர்வுகளையும் அவர்களுடைய எதிர் நடவடிக்கைகளைப் பற்றி கவலைப்படாமல், ஜூலை 1941ல் இந்த சலுகைகளை அமல்படுத்த தொடங்கியது. வைஸ்ராஸ் நிர்வாக குழுவில், 4 ஆங்கிலேயர்கள், 8 இந்தியர்கள் என 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தவிர்த்து, இதர தலைவர்கள் பங்கு பெற்றனர்.
Q73. கிரிப்ஸ் குழு என்பது என்ன, அதன் நோக்கம், விளைவுகள் என்ன?
சர் ஸ்டான்ஃபோர்டு க்ரிப்ஸ் இங்கிலாந்து நாட்டு அரசியல் வாதி. இந்தியர்கள் ஆங்கிலேயர்கள் இடைய நிலவும் கருத்து வேறுபாடுகளை நேர் செய்து நிலைமையை சமாளிக்க அனுப்பப்பட்ட குழு. இது இரு பிரிவாக செயல்பட்டது.
முதல் பிரிவு: – இந்தியாவுக்கு, இங்கிலாந்தின் கீழ் இயங்கும் ஒரு சுதந்திர நாட்டுக்கு தேவையான சாசன தயாரித்தல். இதன் முதல் படியாக, மாகாண தேர்தல்களை நடத்துவது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு, ஒரு சாசனம் தயாரிக்கும் குழு அமைக்கப்பட வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், இந்திய சாசனத்திற்கு எதிராக கருதப்படும்.
இரண்டாம் பிரிவு: – இரண்டாம் உலக்ப்போரின் காலத்தில் செய்ய வேண்டிய காரியங்களும், முன்னேற்பாடுகளும். இதில் இந்திய அரசியல் சட்டம் 1935 செய்யப்படும் மாற்றங்களையோ, ஆங்கிலேயர்களுக்கு இந்திய ராணுவத்தின் மீது உள்ள பிடிமானம் பற்றி விளக்கம் அளிக்கப்படவில்லை. காங்கிரஸ் இதை கீழ்க்கண்ட காரணங்களுக்காக நிராகரித்தது:
1. கிரிப்ஸ் குழுவின் உள் நோக்கம் பாகிஸ்தானின் குறிக்கோளை ஏற்றுக்கொள்வதாக இருந்தது. இதைப் புரிந்து கொண்டதினால் தான் முஸ்லீம் லீக் இதற்கு ஆதரவு தெரிவித்தது. அதே சமயம் மற்றி கட்சிகளும் பிரிவுகளும் எதிர்த்தன.
2. மன்னராட்சி யில் இயங்கும் மாகாணங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் முறை காங்கிரஸுக்கு உடன்பாடு இல்லை.
3. உலகப்போர் நடக்கும் நிலைமையையும், விளைவுகளையும் புரிந்து கொண்ட காங்கிரஸ், போருக்கு பிறகு ஒரு தேசிய அரசாங்கம் நிறுவப்படும் என்ற உறுதியை எதிர்பார்த்தது.
4. ஆங்கிலேயர்களிடமிருந்து எந்த ஒரு சாதகமான முடிவு வராததால், காந்திஜி, கிரிப்ஸ் குழு வை முழுவதுமாக நிராகரித்து அதைப்பற்றி கிழ்க்கண்ட வர்ணனையும் கொடுத்தார்: "" திவாலாகும் நிலையில் உள்ள வங்கியில் கொடுக்கப்பட்ட ஒரு நாள் தள்ளிப் போடப்பட்ட காசோலை"" “post dated cheque on a crashing bank”.
இதனால், சர் ஸ்டான்ஃபோர்டு க்ரிப்ஸ் கடும் கண்டனத்துக்கு உள்ளானது மட்டுமின்றி, இங்கிலாந்து அரசாங்கத்துக்கு, இந்தியாவைப் பற்றி விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி தோழமை மற்றும் எதிர் கட்சிகளிடமிருந்து ஏற்பட்டது.
Q74. ""இந்தியாவை விட்டு வெளியேறு"" “Quit India” இயக்கத்தை 1942, காங்கிரஸ் மற்றும் இதர தலைவர்கள் தொடர காரணம் என்ன? (""வெள்ளையனே வெளியேறு"" என்றும் கூறுவர்)
1. தென் கிழக்கு ஆசியாவில், ஜப்பானிடம் ஆங்கிலேயர்களிடம் தோல்வி அடைந்தது, ஆங்கிலேயர்களை தோற்கடிக்கலாம் என்ற நம்பிக்கையை நம் தலைவர்களிடம் தோன்றியது.
2. போரினால் தோன்றுவது பணவீக்கமும் விலைவாசி ஏற்றமும். இந்த விஷயத்தில், உலகப் போரின் போது ஆங்கிலேயர்களின் மேலாண்மை மிகப் பெரிய தோல்வி.
3. இந்தியாவில் நிலை கொண்டிருந்த அமெரிக்க ஆங்கிலேயர்கள் மற்றும் ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களின் திமிரான அராஜக நடவடிக்கை.
4. 1942 ன் நடுக்காலத்தில் கூட்டணிப்படைகள் தோல்வியை காந்திஜி மற்றும் இதர தலைவர்கள் எதிர்பார்த்தனர்.
5. இந்த இயக்கத்தை தொடங்குவதற்கு முன் ஆங்கிலேயர்களின் அராஜக நடவடிக்கை, இந்த இயக்கம் தொடங்கியவுடன் மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேற்கூறிய காரணங்கள் காங்கிரஸ் மற்றும் இதர தலைவர்களையும் இந்த இயக்கத்தில் பங்கு பெற தூண்டியது.
Q75. "இந்தியாவை விட்டு வெளியேறு" தீர்மானம் எப்போது எடுக்கப்பட்டது?
க்ரிப்ஸ் குழு வின் நோக்கம் தோல்வி, மற்றும் இரண்டாம் உலகப்போரினால், ஆங்கிலேய இந்திய அரசாங்கத்துக்கும், இந்திய தலைவர்களுக்குமிடையில் பேச்சு வார்த்தையின் பெரிய இடைவெளி, முக்கிய காரணம். போர்க் காலத்தின் போது, வேறு வெளி நாட்டு ராணுவ வீரர்களை இந்தியாவில் நிலை நிறுத்தியதால், அவர்களின் திமிரான நடவடிக்கைகளும், இந்த இயக்கம் தொடங்குவதற்கு முன்பே ஆங்கிலேயர்களின் அடக்குமுறை கொள்கைகளும், இந்திய தலைவர்களை, இந்த இயக்கத்தை நடத்த தூண்டியது. அதன் அடிப்படையில், இந்திய தேசிய காங்கிரஸ் ன் ஆகஸ்ட் 8, 1942 பாம்பே மகாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேறியது. காந்திஜியும் ""செய், அல்லது செத்து மடி"" “ Do or Die” கோஷத்தை இந்தியர்களுக்கு கொடுத்தார். இந்த கோஷம், பாம்பேயின் கௌவாலியா மைதானத்தில் அறிவிக்கப் பட்டது. இந்த மைதானம் இப்போது ""ஆகஸ்ட் க்ரந்தி (புரட்சி) மைதானம்"" என்ப்படுகிறது.
Q76. ""இந்தியாவை விட்டு வெளியேறு"" “Quit India” இயக்கம் வன்முறையற்ற இயக்கமாக நடத்தத் திட்டமிடப்பட்டு பிறகு, வன்மையான நடவடிக்கைகளில் ஈடும்படியாயிற்று. காரணம் என்ன?
இந்த இயக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே 9 ஆகஸ்ட் 1942 அன்று (8ந்தேதி தான் தீர்மானிக்கப் பட்டது) காந்திஜி மற்றும் இதர தலைவர்கள் கைது செய்து சிறையடைக்கப்பட்டனர். இந்தச் செயல், மக்களிடையே மிகுந்த கோபத்தையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியது. தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில், தங்களுக்கு தோன்றிய வழியில், தனியாகவோ/கூட்டமாக செய்யத் தொடங்கினர். படித்த இளைஞர்கள் அதிகமாக பங்கு பெறத் தொடங்கினர். அரசாங்க அலுவலகங்கள், காவல் நிலையங்கள் தொலை தொடர்பு நிலையங்கள் போன்றவை தாக்கப்பட்டதுமின்றி, எரிக்கப்பட்டன. இருப்பினும், படைபலம், அதிகாரம் மிக்க ஆங்கிலேயர்களின் கடுமையான நடவடிக்கைகளால் இந்த இயக்கம் அடக்கப்பட்டது.
Q77. சுதந்திரத்திற்காக இந்து முஸ்லீம் ஒன்றாக போராடினாலும், சில காரணங்களினால் தங்களுக்கு தனி நாடு வேண்டுமென்பதில் தொடர்ந்து போராடினர். அவை யாவை?
1. இந்துக்கள் எண்ணிக்கையில் அதிகமாகவும், அதிகம் கல்வி கற்றவர்களாகவும், அரசாங்க பணிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர்.
2. 1857 சிப்பாய் கலகத்தில், முஸ்லீம்கள அதிகமாக பங்கு கொண்டிருந்ததால், அவர்களுடைய நிலை பலவீனமடைந்திருந்தது.
3. முஸ்லீம்கள் மேலை நாட்டு கலாச்சாரம்/கல்வியை தவிர்த்ததால், முக்கியமான அரசியல் மற்றும் நிர்வாக பதவிகளுக்கு அவர்களால் வர முடியவில்லை.
4. அரசியல் அறிவு மிகுந்த இந்துக்கள், இந்தியா இந்தியருக்கே என்ற கோஷத்தை எழுப்பியதால், இஸ்லாமியர்கள் ஒரு பாதுகாப்பற்ற நிலைய உணரத் தொடங்கினர்.
5. இந்திய வரலாற்றை இந்திய தேசிய கல்வி முறையில், இஸ்லாமியர்கள் பயிலும் கல்வி கூடங்களிலும் நடத்த தொடங்கியதால், அது ஒரு வித வகுப்பு வாத பிரிவினையை வரலாற்றில் உண்டாக்கியது.
6. தேசிய தீவிரவாத போராளிகளுக்கிடையில், இந்து முஸ்லீம் ஒற்றுமை மனதளவில் இருந்தாலும், போராட்ட செயல்கள் இந்துமத அடிப்படையியலேயே இருந்தது.
7. 1906ல், இஸ்லாமியர்கள் முஸ்லீம் லீக் தொடங்கியவுடன், இந்துக்கள், 1915ல் இந்து மகாசபையை மதன் மோகன் மாளவியாவாலும், 1925ல் ராஷ்டிரிய சேவா சங்கத்தை ஹெட்ஜ்வார் தலைமையிலும் தொடங்கியதால், இந்து முஸ்லீம்களுக்கிடையில் இடைவெளி அதிகரித்தது.
Q78. இஸ்லாமியர்களின் எந்த நடவடிக்கை, ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கைக்கு பெரிதும் உதவியது?
1906ல் இஸ்லாமியர்கள் முஸ்லீம் லீக் ஐ தொடங்கி தங்கள் குறைகளை எடுத்து முன் வைக்கத் தொடங்கினர். இதையே, ஆங்கிலேயர்கள் தங்களின் பிரித்தாளும் கொள்கைக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தேசிய இயக்கத்தை பிளவு படுத்த பயன்படுத்திக்கொண்டனர். வாக்காளர் தொகுதிகளில் மத ரீதியான ஒதுக்கீட்டை 1909ல் ஏற்படுத்தியதிலிருந்து ஆங்கிலேயர்களின் எண்ணம் தெளிவாகியது.
Q79. தேசிய சுதந்திர இயக்கம் மக்களை பல வழிகளில் ஒன்றுபடுத்தியது ஒரு புறமிருக்க, மற்றொரு புறத்தில், புதிய, பத்திரிக்கை, சமூக ஆன்மீக, அரசியல் அமைப்புகள், உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் துவங்கத் தொடங்கின. அவை யாவை?
ஆன்மீக மற்றும் சமூக-அரசியல் அமைப்புகள்:
1. அனுஷீலன் சமிதி -- கல்கத்தா -- 1902 -- பரீந்த்ரகுமார் கோஷ், ஜதீந்திரநாத் பானர்ஜி, மற்றும் ப்ரமோதா மிட்டர் ஆகியோர்களால் தொடங்கப்பட்ட, ஒரு ரகசியமான தீவிரவாத புரட்சி போராளிகள் இயக்கம். தாக்காவிலும் புலின் தாஸ் அவர்களால் துவங்கப்பட்டது.
2. மித்ர மேளா -- Mitramela – 1899ல் மகாராஷ்டிராவில், சவார்கர் சகோதரர்கள் -- கணேஷ் மற்றும் விநாயக் என்பவர்களால் தொடங்கப்பட்டது.
3. அபினவ பாரத் -- Abhinava Bharat – பூனாவில் கணேஷ் சவார்கர் ஆல் 1907ல் தொடங்கப்பட்டது.
4. இந்துஸ்தான் ரிபப்ளிகன் சங்கம் -- Hindustan Republican Association – 1924 -- சச்சின் சன்யால் மற்றும் ஜோகேஷ் சந்திர சட்டர்ஜி ஆல் தொடங்கப்பட்ட அகில இந்திய அளவிலான சங்கம்.
5. கத்தார் கட்சி -- Ghaddar Party – 1913 – ஹர் தயாள் மற்றும் சோகன் சிங் பாக்னா ஆகியோரால் அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ வால் தொடங்கப்பட்டது.
6. இந்திய சுதந்திர சங்கம் -- Indian Independence League: 1942 – ஜப்பானில், ராஷ் பீஹாரி போஸ் அவர்களால் நிறுவப்பட்டது.
பத்திரிக்கை துறை வளர்ச்சி JOURNALISTIC DEVELOPMENTS:
கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்திரிக்கைகள் சுதந்திர போராட்ட காலத்தில் துவங்கப்பட்டு, மக்களிடைய தேசியத்தையும் நாட்டுப் பற்றையும் வளர்ப்பதில் பெரும் பங்கு ஆற்றின:
1. ஜூகாந்தர் Jugantar – 1906 -- பரீந்த்ரகுமார் கோஷ் மற்றும் பூபேந்த்ராநாத் தத்தா -- வங்காளம்.
2. சந்த்யா -- Sandhya – 1906 – ப்ரம்மானந்த் உபாத்யாய் -- வங்காளம்.
3. கால் -- Kal – 1906 – மகாராஷ்டிரா.
4. வந்தே மாதிரம் -- Bande Mataram – மேடம் காமா -- பாரீஸ்
5. தள்வார் -- Talvar -- வீரேந்திரநாத் சட்டபோத்யாய் -- பெர்லின்.
6. ஃப்ரீ இந்துஸ்தான் -- Free Hindustan – தாரக்நாத் தாஸ் -- வான்குவர், கேனடா.
7. கடாதர் -- Gadadar – கடாதர் கட்சி -- சான் ஃப்ரான்சிஸ்கோ.
8. லங்கால் மற்றும் கனபானி -- Langal and Ganabani – 1927 -- கோபு சக்ரவர்த்தி & தரணி கோஸ்வாமி, வங்காளம்.
9. கீர்த்தி -- Kirti – 1927 – S S மீரஜ்கர், K N ஜோக்லேகர் மற்றும் S V காத்தே -- மகாராஷ்டிரா.
10. பந்தி ஜீவன் -- Bandi Jivan – சச்சீந்திரநாத் சன்யால் -- வங்காளம்.
11.ஆத்ம சக்தி -- சாரதி, தூம்கேது, பிஜோலி மேலும் சில -- வங்காளம்.
Q80. "கோமாகாத்தா மாரு" நிகழ்ச்சி என்பது என்ன?
ஏப்ரல் -- செப்டம்பர் 1914 -- கோமகாத்தா மாரு என்பது ஒரு ஜப்பானிய கப்பல் -- இதை குர்தீத் சிங் என்பவர் குத்தகைக்கு எடுத்து, கனடா நாட்டுக்கு தப்பிச்சென்று தஞ்சம் அடைய 376 பயணிகளை (340 சீக்கியர்கள், 24 முஸ்லீம்கள் மற்றும் 12 இந்துக்கள்) ஹாங்காங் ல் இருந்து கேனடா நாட்டின் வான்குவர் என்ற இடத்திற்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டு, தேவையான அனுமதி பெற்று கேனடா சென்றடைந்தார். ஆனால், கேனடா நாட்டு அதிகாரிகள் அவர்களை நாட்டுக்குள்ளே அனுமதிக்க மறுத்தனர். எதிர்ப்புகள் பல இருந்தும், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அவர்கள் திரும்பி 27.9.1914 அன்று கல்கத்தா வந்தடைந்தனர்.
வந்து சேர்ந்தவுடன், ஆங்கிலேயர்கள் அந்த பயணிகளில் சுமார் 20 பேரை, கத்தார் கட்சியை சேர்ந்தவர்கள் என சந்தேகித்து கைது செய்ய முயற்சி செய்தனர். எதிர்ப்பு கிளம்பியதில் நடந்த போராட்டத்தில், 19 பேர் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு, பஞ்சாபில் ஒரு கிராமத்தில் சிறை வைக்கப்பட்டு இருந்தனர். கனடா மற்றும் ஆங்கிலேயர்கள் நடவடிக்கை, உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் பலத்த எதிர்ப்பு பலத்தது. வெளிநாட்டு கத்தார் கட்சி உறுப்பினர்கள் இந்தியா திரும்பி ஆங்கிலேயர்களை வெளியேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Q81. தீவிரவாத உணர்வும் போராளிகளும் அதிகரித்த நிலையில், சில தீவிர செயல்கள் நடந்திருக்கும். அவை யாவை?
1. செப்டம்பர் 1915 – ஜதீன் முகர்ஜி மற்றும் அவருடைய தோழமை போராளிகள், கல்கத்தாவில் ரயில் போக்குவரத்தை பாதிக்க முயற்சி செய்து, வில்லியம் கோட்டையை கைப்பற்ற நினைத்தனர். அவர்களின் இந்த முயற்சி சரியான திட்டமிடுதல் மற்றும் ஒத்துழைப்பு இல்லாததால் தோல்வி அடைந்தது. கடைசியில், ஜதீன் ஒரிஸ்ஸாவில் பாலசூர் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார்.
2. 21.2.1915 – ராஷ் பீஹாரி போஸ், சச்சின் சன்யால் மற்றும் சில கதார் போராளிகள் நடத்திய கிளர்ச்சி சிலருடைய துரோக செயலால் தோல்வி அடைந்தது. ராஷ் பீஹாரி போஸ் ஜப்பானுக்கு தப்பி சென்றார். சச்சின் சன்யால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
3. 1915 – ஜெர்மனி, பெர்லின் நகரில், ஜெர்மன் நாட்டு வெளியுறவு துறையின் உதவியுடன், இந்திய சுதந்திர குழு, வீரேந்திரநாத் சட்டோபாத்யாய், பூபேந்திரநாத் தத்தா மற்றும் ஹர்தயாள் ஆகியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
4. 1915 – காபூலில், மகேந்திர ப்ரதாப், கதார் போராளி பரகத்துல்லா, மற்றும் ஒபைதுல்லா ஆகியோரால் ஒரு தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டது.
5. 1930 - சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தீவிரவாத போராளிகள், சுர்ஜியா சென் என்பவர், சிட்டகாங் (தற்சமயம் வங்காள தேசம்) ஆயுதக்கிடங்கை கைப்பற்ற முயற்சி செய்தனர், ரயில் போக்குவரத்து, தந்தி தொடர்பு மற்றும் இதர கட்டுமான பகுதிகளை தகர்த்தனர். பிறகு அருகில் உள்ள காட்டுக்கும், கிராமங்களுக்கும் தப்பி சென்றனர். ஆங்கிலேயர்கள் அவர்களை ஜலாலாபாத் மலைப்பகுதியில் இருப்பதை தெரிந்து, சுற்றி வளைத்து, 12 போராளிகளைக் கொன்றனர். எஞ்சியவர்கள் வேறு இடங்களுக்கு தப்பி சென்றனர். பிறகு 1932ல் இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து, ஐரோப்பிய 22 ஆங்கிலேய அதிகாரிகளை கொன்று, பிறகு மகிழ்வு மையத்தில் இருந்த 220 பேரை கொன்றனர். பிறகு இந்த போராளிகளில் பலர் கைப்பற்றப்பட்டு, பல வெளிநாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். சுர்ஜியா சென் கைது செய்யப்பட்டு, 12.1.1934 அன்று தூக்கிலிடப்பட்டார்.
6. செப்டம்பர் 1929 – ஜதீந்திரநாத் தாஸ், லாகூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சிறைச்சாலையில், எல்லா கைதிகளுக்கும் சமமான நடத்தும் முறை வேண்டி, உண்ணாவிரதம் மேற்கொண்டு, 64 நாட்கள் தொடர்ந்து, கடைசியில் இறந்தார். இது இந்தியாவில் மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
7. 23.3.1931 – லாகூரில் 1928ல், ஆங்கிலேய பாதுகாப்பு அதிகாரி சாண்டர்ஸ் அவர்களை டிசம்பர் 1928ல் கொன்ற வழக்கில், பகத் சிங், சுக்தேவ், ராஜ் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். லாகூரில் லாலா லஜ்பத்ராய் தாக்கப்பட்டு இறந்ததற்காக எடுக்கப்பட்ட எதிர் நடவடிக்கை.
8. 27.2.1931 – சந்திர சேகர் ஆஸாத் ஒரு தீவிரவாத சுதந்திர போராளி. பகத் சிங், சுக்தேவ் என பலருடன் இவரும் ஆங்கிலேயர்களை பயமுறுத்தி வந்தவர். இந்துஸ்தான் ரிபப்ளிகன் சங்கத்துடன் மிகவும் ஈடுபாடு கொண்டவர். 1925ல் காக்கோரி ரயில் கொள்ளை என்ற நிகழ்வில் சம்பந்தப்பட்டவர். பகத்சிங் உடன் சேர்ந்து லாகூரில் சாண்டர்ஸ் ஐ கொலை செய்வதில் சம்பந்தப்பட்டிருந்தார். அலகாபாத்தில் தங்கி, பகத் சிங் ஐ தப்பிக்கச் செய்யவேண்டும் என முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, சுற்றி வளைக்க பட்டு, ஆங்கிலேயர்களால் கொலை செய்யப்பட்டார்.
Q82. அடக்குமுறைக்கு சமமான எதிர்ப்பும் ஒரு கால கட்டதில் இருப்பது நியதி. அவ்வாறு, ஆங்கிலேயர்களின் கடுமையான அடக்குமுறைக்கு, இந்திய சுதந்திர போராளிகளும் பதிலடி கொடுத்தனர். நிறைய ஆங்கிலேயர்களும் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் யார்?
1. 22-7-1897 – தாமோதர், வாசுதேவ் மற்றும் பாலகிருஷ்ண சப்பேகர் சகோதரர்கள், ஆங்கிலேய அதிகாரிகள் WC ரேண்ட் மற்றும் Lt. ஆயெர்ஸ்ட் என்பவர்களை கொலை செய்தனர். பூனாவில் அப்போது ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்டு, இந்த ஆங்கிலேய அதிகாரிகள் மேற்பார்வையை சரிவர செய்யாததினால் ஏற்பட்ட உயிரிழப்புகளை எதிர்த்து, சப்பேக்கர் சகோதரர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கினர்.
2. 1908 – பரீந்த்ர குமார் கோஷ் -- வங்காளத்தில் ஜூகாந்தர் என்ற புரட்சி தினசரியை நடத்தி வந்தவர். வங்காளத்தின் லெஃப்டினண்ட் கவர்னர் ஃபுல்லர் அவர்களை கொலை செய்ய முயற்சி செய்து தோல்வி கண்டவர். ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு, 1920ல் விடுவிக்கப்பட்டார்.
3. 30.4.1908 – வங்காளத்தின் குதிராம் போஸ் மற்றும் ப்ரஃபுல்ல சக்கி என்ற சுதந்திர போராட்ட தீவிர போராளிகள், முஸாஃபர்பூர் நீதிபதி கிங்ஸ்ஃபோர்டு என்பவரை (இந்திய கைதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கி வந்தவர்) கொலை செய்வதற்காக அவர் மீது வெடிகுண்டு வீசினர். ஆனால், தவறுதலாக அந்த குண்டு, ப்ரிங்கிள் கென்னடி என்ற ஆங்கிலேய அதிகாரியின் மனைவி மற்றும் மகள் சென்ற வண்டியின் மீது விழுந்து அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு ""அலிப்பூர் குண்டு வெடிப்பு"" என அழைக்கப்பட்டது. இதில் குதிராம் போஸ் கைப்பற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டார். ப்ரஃபுல்ல சக்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அரவிந்த கோஷ் ஒரு குற்றவாளியாக கருதப்பட்டு, வழக்கின் போது, அவர் பாண்டிச்சேரி தப்பிச்சென்று, தனது வாழ்க்கையை ஆன்மீக பாதையை கழித்தார். அரவிந்த ஆஸ்ரமம் இவரால் நிறுவப்பட்டது. இந்த வழக்கில் 49 பேர் குற்றவாளி என கருதப்பட்டு, வழக்குக்குப் பிறகு பலர் ஆயுள் தண்டனைப் பெற்றனர்.
4. 1.7.1909 – மதன் லால் திங்க்ரா, இங்கிலாந்தில் படித்து வந்த மாணவர், இந்திய தீவிர சுதந்திர போராட்ட ஆதரவாளர், கர்ஸன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியைக் கொலை செய்தார்.
5. 17.11.1911 – தென் இந்தியாவில், தமிழ் நாட்டில், மணியாச்சி ரயில் சந்திப்பில், திருநெல்வேலி ஆளுநர் ஆஷ் என்பவர், சுதந்திர போராளி, வாஞ்சிநாதன் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
6. 23.12.1912 – ராஷ் பீஹாரி போஸ் மற்றும் சச்சின் சன்யால் (வங்காளம்) இருவரும், ஹார்டிஞ்ச் பிரபு வை டெல்லியில் கொலைசெய்ய முயற்சித்தனர். இதில் அவர் காயங்களுடன் தப்பித்தார். ஆனால் அவருடைய உதவியாளர் கொலையுண்டார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, ராஷ் பீஹாரி போஸ், ஆங்கிலேயரிடம் பிடிபடாமல் இருந்து, 1916ல் ஜப்பானுக்கு தப்பிச்சென்று விட்டார். சச்சின் சன்யால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே நோய்வாய்ப் பட்டு இறந்தார். இந்த வழக்கு ""டெல்லி சதி வழக்கு"" என அழைக்கப்படுகிறது.
7. 1928 – அக்டோபர் 1928 ல் லாகூரில், J.P. சாண்டர்ஸ், ஆங்கிலேய காவல் துறை உயர் அதிகாரி பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் சேர்ந்து கொன்றனர். பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டு, மார்ச் 23, 1931 அன்று தூக்கிலிடப்பட்டனர்.
8. 1929 – டிசம்பர் 1929ல், டெல்லியில், இர்வின் பிரபு பயணித்த ஒரு ரயிலை கொளுத்த, இந்துஸ்தான் ரிபப்ளிகன் அமைப்பின் உறுப்பினர்கள் முயற்சித்தனர்.
9. 14-12-1931 – வங்காளத்தின் சாந்தி மற்றும் சுனிதி சவுத்ரி சகோதரிகள், திப்பேரா என்ற இடத்தில் அந்த மாவட்ட நீதிபதி ஸ்டீவன் என்பவரைக் கொன்றனர். அவர்கள் காவல் துறையினரால் பிடிக்கப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், இவர்களின் குடும்பம், ஆங்கிலேயகளின் கொடுமையால் ஏழ்மைக்கு தள்ளப்பட்டனர். இவர்களில் சுனிதி, சிறையிலிருந்து வெளி வந்தவுடன், கல்வியைத் தொடர்ந்து ஒரு மருத்துவர் பட்டம் பெற்று, ஏழை மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தன் வாழ்க்கையை கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Q83. ""சுயராஜ்ய கட்சி"" “Swaraj Party” யை நிறுவியவர் யார், சுதந்திர போராட்டத்தில் அதன் பங்கு என்ன?
காங்கிரஸ் கட்சியில் இருந்த சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சிலர், இந்த கட்சியை 1.1.1923 அன்று நிறுவினர். காங்கிரஸ் கட்சியின் அமிதியான அணுகுமுறைகளின் மீது அதிருப்தி ஏற்பட்டதால் இந்த கட்சியைத் தொடக்கினர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக இவர்கள் இன்னும் தீவிரமான நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி வெற்றி பெறாததால், இந்த கட்சி உருவானது. 1925ல் காந்திஜி இவ்ர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதித்தார். இவருடைய அனுமதி பெறுவதற்கு முன்பே 1923 தேர்தலில் போட்டியிட்டு, வங்காளம் மற்றும் வேறு சில பகுதிகளில் ஒரு கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதனால், வேறு சில தனியாக வெற்றி பெற்றவர்கள் மற்றும் முகமது அலி ஜின்னாவுடன் சேர்ந்து தேசியவாத கட்சியைத் தொடங்கினர்.
ஆங்கிலேயர்களின் பல சலுகைகளை நிராகரித்த இந்த தேசியவாத கட்சியை திருப்தி படுத்துவதற்காக 1924ல் முத்திமான் குழு Muddhiman Committee, வை நிறுவி, 1919ல் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் சீராக செயல்படுகிறதா என விசாரணை மேற்கொள்ள அமைத்தனர். இது ஆங்கிலேயர்களின் காலம் கடத்தல் நடவடிக்கை. இந்நிலையில், தேசிய வாத கட்சியில் பிளவுகள் ஏற்பட்டு கட்சி மறைந்து, 1930ல், அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினர். ஆங்கிலேயர்கள் விரும்பியது போல் நடந்தது.
Q84. 1924 முத்திமான் குழு என்பது என்ன, அதன் ஆய்வு நோக்கங்கள், முடிவு என்ன?
சர் அலெக்ஸாண்டர் முத்திமான் என்பவர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 1919 மாண்டேகு செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்கள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நிறுவப்பட்டது. இது தன்னுடைய அறிக்கையில் இரண்டு பரிந்துரைகள் செய்திருந்தது.
1) அதிகமான அதிகாரிகளும் நிர்வாகிகளும் எடுத்துரைத்த படி இந்த சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக செயல்படுத்த படாத நிலையில், எந்த ஒரு பெரிய மாற்றமும் தேவையில்லை.
2). அதிகாரிகள்/நிர்வாகிகள் அல்லாத சிறுபான்மையினர், இரட்டை ஆட்சி முறை சரியாக இயங்கவில்லை என்றும், மேல்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதற்கு, இங்கிலாந்து இந்திய விவகார காரியதரிசி, பெரும்பான்மை சிபாரிசுகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார்.
Q85. கம்யூனிசம் இந்தியாவில் நுழைய காரணங்கள் யாவை?
1. அக்டோபர் 1917 புரட்சியைத் தொடர்ந்து சமத்துவம்/சமதர்ம கொள்கைகள் மறைந்து கம்யூனிச கொள்கைகள் மேலோங்கத் தொடங்கியது.
2. காங்கிரஸ் ன் வன்மையில்லாத அமைதியான புரட்சி, தேவையான எதிர்பார்த்த விளைவுகளை அளிக்கவில்லை.
3. பொருளாதார பின்னடைவுகள், கம்யூனிச கொள்கைகள் உட்புகுந்து தொழிலாளர்களிடம் அதிக ஆதரவை பெற்றது. இவ்வாறாக கம்யூனிசம் இந்தியாவுக்குள் அடி எடுத்து வைத்தது.
Q86. இந்திய கம்யூனிச கட்சி எப்போது நிறுவப்பட்டது?
இந்திய கம்யூனிச கட்சிக்கு ஒரு தொடக்கம் ரஷ்யாவின் தாஷ்கெண்ட் நகரில், (இப்போது உஸ்பெகிஸ்தான் நாட்டிலுள்ளது) 1920ல் எம்.என்.ராய், அபானி முகர்ஜி, ம்ற்றும் சிலர் சேர்ந்து தொடங்கி வைத்தனர். இவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தபோது கைது செய்யப்பட்டு, பெஷாவர் வழக்கின் கீழ், (இந்தியாவுக்குள் ஊடுருவி தீவிரவாத செயல்களுக்கு முயற்சி செய்து பிடிபட்டவர்களின் வழக்கு) சிறையில் அடைக்கப்பட்டனர். காரணம், இந்தியாவுக்குள் கம்யூனிசம் புகாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை.
இந்தியாவில், முஸாஃபர் அஹமது, எஸ்.ஏ.டாங்கே, நளினி குப்தா போன்ற கம்யூனிச தீவிர அனுதாபிகள், ஆகியோர் கைது செய்யப்பட்டு 1924ல் கான்பூர் சதி வழக்கில் (கம்யூனிஸ்டு தீவிர உறுப்பினர்களை விசாரிக்கும் வழக்கு) சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும், வேறு சில கம்யூனிச அனுதாபிகள் சேர்ந்து 25 டிசம்பர் 1925ல் கான்பூரில் ஒரு மகாநாடு நடத்தி இந்த கட்சியை நிறுவினர். இந்த நாளே இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க நாளாக கருதப்படுகிறது.
Q87. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு பரவியது/வளர்ச்சி பெற்றது?
1. 1929-1934 – இடதுசாரி நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டனர். காங்கிரஸை தீவிரமாக எதிர்த்தனர், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸை கைப்பற்றினர். ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அறிவிப்பு விடுத்தனர். இதைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியும், வேறு சில தொழிற்சங்கங்களும் சட்ட விரோதமானது என ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
2. 1934-1940 – கம்யூனிச குறிக்கோள்களை காங்கிரஸூக்குள்ளும் ஊடுருவச் செய்து, காங்கிரஸ் ஊழியர்களிடம் மன மாற்றம் ஏற்படுத்தி, 1934ல் காங்கிரஸ் சோஷியலிச கட்சி யை ஆச்சார்ய நரேந்திர தேவ், ஜெயப்ரகாஷ் நாராயண், மற்றும் சிலருடன் தொடங்கினர். இதன் ஒரு அங்கமாக, சுபாஷ் சந்திர போஸ் ""ஃபார்வர்டு ப்ளாக்"" என்ற கட்சியையும், மற்றும் பல மாணவ சங்கங்களையும், தொழிற சங்கங்களையும் தொடங்கினர். இவை நீண்ட நாள் நீடிக்கவில்லை.
3. 1941-1947 – ரஷ்யாவின் நெருக்கடியால், ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இயங்கும் நிலை உருவாயிற்று. இதனால், அரசாங்க அங்கீகாரம் பெற்றனர், ஆனால், மக்களிடையே இவர்களது புகழ் மிகவும் பின்னடைந்தது.
Q88. இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவர் யார்?
1942ல் கேப்டன் மோகன் சிங் என்பவரால், ஜப்பானிய ராணுவ உதவியுடன் நிறுவினார். பிறகு, மலேயா, பர்மா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த இந்திய வம்சாவளி இனத்தவரின் ஆதரவும் கிடைத்தது. (ஆனால் பொதுவாக இதை நிறுவியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனக் கருதப்படுகிறது, காரணம், இந்திய தேசிய ராணுவத்தை ஒருங்கிணைத்து, முன் நின்று வழி நடத்தி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரில் தீவிரமாக ஈடுபட்டார் என்ற அடிப்படையில்)
Q89. இந்திய சுதந்திரத்தில், இந்திய தேசிய ராணுவத்தின் பங்கு என்ன?
1942ல் தொடங்கப்பட்டது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று இந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அப்போது இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதனால் இந்தியாவில் பெருவிதமான பங்களிப்பு என்று கூறுவதிற்கில்லை. இந்திய தேசிய ராணுவம் ஜப்பான் ராணுவ உதவியுடன் இயங்கிய ஒன்று. ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் எதிர் அணியில் (கூட்டு அணியில் Allied Forces ) இருந்தது. ஜப்பானுடன் சேர்ந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரில் பங்கு கொண்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பெருத்த தோல்வி கண்டதினால், இந்திய தேசிய ராணுவமும் மறைந்தது. நேதாரி சந்திர போஸும் 1945ல் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்படுகிறது. (இவருடைய மறைவு இன்றளவும் ஒரு சர்ச்சைக்குரியதாக இருக்கிறது.).
Q90. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற காரணம் என்ன?
1941களில், சுதந்திர போராட்டத்தில், நேதாஜி மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். குறிப்பாக, அவருடைய ஃபார்வர்டு ப்ளாக் கட்சி, ஆதரவாளர்களுடன். அதிகமான எதிர்ப்புகள், கிளர்ச்சிகள், கூட்டங்கள் தொடர்ந்து நடத்தி வந்தார். இதால் வெகுண்ட ஆங்கிலேயர்கள், இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விடுவிக்கப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இவ்வேளையில், ஆங்கிலேயர்கள் இவரை சிறையில் அடைத்து விடுவர் என நினத்து, 16/17 ஜனவரி 1941 அன்று தப்பித்து, ஆப்கானிஸ்தான் வழியாக ரஷ்யா சென்றடைந்து, பிறகு ஜப்பான் நாட்டுக்கு சென்று, இந்திய தேசிய ராணுவத்தின் தலைமை பொறுப்பை ஏற்று, போரில் ஈடுபட்டார்.
Q91. குறைந்த காலமே இயங்கினாலும், இந்திய தேசிய ராணுவம், ஆங்கிலேயரிடைய ஒரு உளைச்சலை கொடுத்தது என்பது உறுதி. இந்திய தேசிய ராணுவத்தின் நடவடிக்கைகள் என்ன?
1. நேதாஜியின் தலைமையில் இந்திய தேசிய ராணுவம், ஜப்பான் ராணுவத்துடன் இணைந்து, இந்தியா- வுக்குள் நுழைய முயன்றது. மே 1944ல் நாகாலாந்தின் கோஹிமா நகரைக் கைப்பற்றியது. இந்த நடவடிக்கை இரண்டாம் உலகப் போரின் ஒரு அங்கமாகும். இருப்பினும், ஜப்பானின் தோல்வியினால், இந்திய தேசிய ராணுவமும் சரணடைந்து, நேதாஜி டோக்யோவுக்கு விமானத்தில் தப்பிச்செல்லும் போது விபத்தில் மறைந்து விட்டதாக தெரிகிறது.
2. இந்திய தேசிய ராணுவம் இந்திய சுதந்திரத்தை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றது. அதனால் சுதந்திரம் சம்பந்தமான நடைமுறைகள் வேகப்பட்டன.
3. ராணுவ இந்தியரகள் ஒவ்வொருவரிடமுல் உள்ள தேசப்பற்று ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்டு, அவ்ர்களை இனிமேலும் அடிமையாக்கமுடியாது என நன்றாக புரிந்து கொண்டனர்.
4. வன்மையில்லா போராட்டத்தினால் இந்தியர்களிடம் உள்ள ஆர்வம், வேகம், உணர்வு, தேசிய பற்று குறையவில்லை என ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்டனர்.
5. மத ஒற்றுமைக்கும், தோழமைக்கும் இந்திய தேசிய ராணுவம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்தது. காரணம், போர்க் கைதிகள், பல நாடுகளிலிருந்து இருந்ததே.
Q92. நேதாஜி இந்திய தேசிய ராணுவம் சார்பாக போரிட்ட போர்கள் யாவை?
இம்ஃபால் போர் -- மார்ச் -- ஜூலை 1944. இங்கிலாந்து, மற்றும் அதைச்சார்ந்த நாடுகளும், ஜப்பான் எதிராக இம்ஃபால் என்ற இடத்தில் போரிட்டனர். கோஹிமா போர் -- ஏப்ரல் - ஜூன் 1944; பிறகு தெற்கு பர்மாவில் ஆங்கிலேய இந்திய படைகளுக்கு எதிராகவும் போராடினார். 1944 நடுக்காலத்தில், பர்மா முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது.
Q93. ஆங்கிலேய இந்தியாவுக்கு எதிராக நேதாஜி எடுத்த நடவடிக்கைகள் என்ன?
1. சிங்கப்பூரில், இந்திய தற்காலிக அரசாங்கம் ஒன்றை நிறுவி, ""இந்தியா நோக்கி செல்"" என்ற கோஷத்தை முன் வைத்தார்.
2. இந்த கோஷத்தை முன் வைத்து, இந்தியர்கள ஒன்று திரட்டி, டெல்லி நோக்கி கிளம்பினார். ஆனால், வழியில், இம்ஃபால் ல் நிறுத்தப்பட்டு, நேதாஜியும் அவருடைய வீரர்களும் நடை பயணமாக மலேயா நோக்கி திரும்பி செல்லும்படியாயிற்று.
3. இந்த நிகழ்வைப்பற்றி நேதாஜி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்: ""டெல்லிக்கு பல வழிகள் உண்டு; ஆனால் டெல்லி மற்றுமே நமது குறிக்கோள். “ Roads to Delhi are many” and “ Delhi remains our goal”.
Q94. இந்திய சுதந்திரத்தின் போது, தீவிர வாதம் உட்புக/வளர முக்கிய காரணம் என்ன?
1. சாசன வழியில் செல்லுதல், மிதவாத அமைதியான அணுகுமுறை, ஆகியவற்றால் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படாததால் இளைஞர்கள் விரக்தி அடைந்தனர்.
2. சுதேசி இயக்கத்தின் தோல்வி, வங்காள பிரிவினையை தடுக்க முடியாமல் போனது.
3. ஆங்கிலேயர்கள் இனப்பிரிவினையை ஏற்படுத்தி, கடுமையான அடக்குமுறையை கடைப்பிடித்தனர்.
4. அயர்லாந்தில் கடிப்பிடிக்கப்பட்ட தீவிர செயல்களும், ரஷ்யாவில் 1860களில், ""நிஹிலிகள்"" என்ற வன்முறை இயக்கம் ஸார் அலெக்ஸாண்டர் 2 மன்னரை 1881ல் கொன்றனர். அவர்கள் அரசியல் உடன்படிக்கை ஏற்பட வன்மையை கையிலெடுத்தது இந்திய போராளிகளையும் தூண்டியது.
Q95. சுதந்திர போராட்டத்தின் போது, தீவிரவாத போராளிகள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்ன?
1. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரகசிய தீவிரவாத அமைப்புகளை அமைப்பது.
2. இந்திய துரோகிகளையும், கொடுமைப்படுத்தும் ஆங்கிலேய அதிகாரிகள் கொலை செய்வது.
3. தீவிரவாத சதிச்செயல்களை திட்டமிடுவது.
4. வங்கிகள், காவல் நிலையங்கள், ஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றை தாக்குவது.
Q96. முஸ்லீல் லீக் தலைமையை முகமது அலி ஜின்னா ஏற்றவுடன் ஏற்பட்ட முன்னேற்றங்கள் யாவை?
முஸ்லீம் லீக் ஒரு சிறுபான்மை இயக்கம். இதில் படித்த வசதியானவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருந்தது. இவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனால் பெரும் எண்ணிக்கையில் ஆதரவு இல்லாமல் இருந்து வந்தது. இதனால், முஸ்லீம் லீக், தேர்தல்களிலும் வேறு நிர்வாக பேச்சு வார்த்தை, பொறுப்புகளிலும் வெற்றிகரமாக இயங்கமுடியவில்லை. மாறாக, காங்கிரஸில் இவை எல்லாமே அதிகமான அளவில் இருந்ததால், வெற்றிகரமாக தனது திட்டங்களை செயல்படுத்த முடிந்தது.
இவ்வாறாக, முகமது அலி ஜின்னா, ஒரு பலவீனமான கட்சியை பொறுப்பேற்றுக்கொண்டார். இதனால், மக்கள் கூட்டத்தை சேர்க்கும் கட்டாயத்தில், பொறுப்பேற்ற 3 மாதத்திற்குள்--1937ல் அகில இந்திய அளவில் 170 கிளைகளையும், ஒரு லட்சத்திற்கு மேலான உறுப்பினர்களையும் சேர்த்து, கட்சியை ஓரளவுக்கு வலுவான நிலைக்கு கொண்டு வந்தார். இதனால், இது அவருக்கு எதிர்காலத்தில் மிகவும் உதவியாக இருந்தது.
Q97. இரண்டாம் உலகப்போர் முடிவடையும் நிலையில், நம் நாட்டு சுதந்திர போராட்ட நடவடிக்கையும், அதே சமயம், முஸ்லீம் லீக் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தினர். இதற்கு ராஜகோபாலாச்சாரியார் ஒரு திட்டத்தை அறிவித்தார். அது என்ன?
1944 – இது சி.ஆர் திட்டம் எனப்பட்டது. காங்கிரஸூக்கும், முஸ்லீம் லீக் கிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படாவிடில், சுதந்திரம் கிடைப்பது சிக்கலாகும் என்ற நிலையில், இவர் தனது திட்டத்தை முன் வைத்தார்.
(1) முஸ்லீம் லீக் காங்கிரஸூடன் சேர்ந்து தற்காலிக அரசாங்கம் அமைப்பதில் ஒத்துழைக்க வேண்டும்.
(2) போருக்குப் பின், வட மேற்கு பகுதிகளில் மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்லாமியர் அதிகமாக வாழும் பகுதிகளை, ஒரு கமிஷன் அமைத்து, எல்லைகளை தீர்மானிக்க வேண்டும். இந்த மக்கள் தங்கள் விருப்பப்படி, ஒரு வாக்கெடுப்பு மூலம், இந்தியாவை விட்டு வெளியேறுவதைப்பற்றி தீர்மானிக்க வேண்டும்.
(3). அவ்வாறு பிரியும் பட்சத்தில், இரண்டு பிரிவு அரசாங்கமும், பொதுவான ராணுவம், தொலைத் தொடர்பு, வணிகம் மற்றும் இதர முக்கிய துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என்ற உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
Q98. சி.ஆர் திட்டத்தின் திட்டம் என்னவாயிற்று?
9 செப்டம்பர் 1944 -- பாம்பேயில், காந்தியும் ஜின்னாவும் இந்த சி.ஆர் திட்டம் பற்றி, 27.9.1944 வரை பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைகள் படி, முஸ்லீம் லீக் ன் பல கோரிக்கைகள் ஏற்றுள்ள நிலையில், ஜின்னாவிடம் லாகூர் தீர்மானத்தை விட்டுக்கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் ஜின்னா திட்டவட்டமாக, தன்னுடை இரு நாட்டுத் திட்டத்தில் உறுதியாக இருந்ததால், இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
Q99. 1945 -- தேசாய்-லியாகத் உடன்படிக்கை என்பது என்ன?
இரு கட்சியினரிடையே நிலவிய சிக்கலை சீர் செய்யும் வகையில், காங்கிரஸை சார்ந்த பூலாபாய் ஜீவன்ஜி தேசாய் மற்றும் முஸ்லீம் லீக் ன் லியாகத் அலி கான் இருவரும் 22.4.1945 அன்று, பெஷாவர் நகரில் சந்தித்து, இரண்டு விஷயங்களில் ஒத்துக்கொண்டனர்:
(1) மத்தியில் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இணைந்து ஒரு அரசாங்கத்தை அமைக்கவேண்டும்.
(2) மத்திய நிர்வாகக் குழுவில் இரு அணியினருக்கும் சமமான உறுப்பினர் இருக்க வேண்டும்.
(3) சிறுபான்மையினருக்கு, குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீக்கியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இருப்பினும், இரு கட்சிகளும் இந்த உடன்படிகையை எந்த நிலையிலும் ஏற்கவில்லை.
Q100. காந்தி ஜின்னா பேச்சுவார்த்தை (1944) மற்றும் தேசாய் - லியாகத் உடன்படிக்கை (1945) இரண்டுமே தோல்வி கண்ட போது, ஆங்கிலேயர்கள் ஒரு திட்டத்தை அறிவித்தனர். அது என்ன?
வேவல் திட்டம் -- 1945: இரண்டு அணித் தலைவர்களுடன், வேவல் பிரபு, சிம்லாவில் ஒரு கூட்டம் நடத்தி, கீழ்க்கண்ட திட்டத்தை முன் வைத்தார்: (சிம்லா மகாநாடு எனப்படும்) “ நிர்வாகக் குழு, ராணுவ தளபதியைத் தவிர்த்து, இந்தியர்கள் பதவியில் அமர்த்தப்படுவர். நிர்வக குழுவில் இந்து-முஸ்லீம்களுக்கு சம அளவிலான உறுப்பினர் இருப்பர். இந்தியாவின் புது சாசனம் எழுதப்பட்டு ஏற்கப்படும் வரை இது ஒரு தற்காலிக ஏற்பாடு. முஸ்லீம் லீக் தலைவர்கள், நிர்வாக குழுவில் தாங்கள் நியமிக்கும் முஸ்லீம்களே இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க, காங்கிரஸ் இதை ஏற்க மறுத்தது. முஸ்லீம் லீக் தலைவர்களின் இந்த அடாவடி நடவடிக்கைகளால் இந்த கூட்டமும் முடிவின்றி தோல்வி அடைந்தது.
Q101. இந்தியாவில் இவ்வாறு அரசியல் பேச்சு வார்த்தைகள் நடைபெறும் நிலையில், இங்கிலாந்து அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. அது என்ன, அது எவ்வாறு இந்திய சுதந்திரத்திற்கு உதவியது?
1945 – இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடந்து -- சர்ச்சில் தலைமையிலான, பழமைவாத கட்சி Conservative Party தோல்வி கண்டு, தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்து, க்ளெமண்ட் அட்லீ பிரதம மந்திரி ஆனார். வேவல் பிரபுவை அழைத்து இங்கிலாந்து, இந்தியாவை விட்டு வெளியேறுவதாக முடிவெடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
Q102. இங்கிலாந்தில் இந்திய் சுதந்திர நடவடிக்கைகள் மற்றும் பேச்சு வார்த்தைகள் நடைபெறும் வேளையில் இந்தியாவில் நடந்த தேர்தலின் நிலை என்ன, விளைவு என்ன?
1945-1946 – மத்திய மற்றும் மாகாண தேர்தல்கள் நடத்தப்பட்டன. இரு கட்சியினரும் கணிசமான தொகுதிகளில் வென்றனர். குறிப்பாக முஸ்லீம் லீக் நல்லதொரு முன்னேற்றம் பெற்றிருந்தது.
Q103. இந்தியாவை விட்டு வெளியேறுவதாக முடிவெடுத்த இங்கிலாந்தில் முன்னேற என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
இங்கிலாந்து அரசியல் நிர்ணய குழு (cabinet mission) -- லாரன்ஸ் பெந்திக் பிரபு, ஸ்டான்ஃபோர்ட் க்ரிப்ஸ், மற்றும் ஏ.வி. அலெக்ஸாண்டர் ஆகியோர் இருந்தனர். இதன் பணி, இந்திய சுதந்திர விவகாரங்களை வேகப்படுத்துவது. இந்த குழு 24.3.1946 அன்று இந்தியா வந்தடைந்தது.
Q104. அரசியல் நிர்ணய குழு Cabinet Mission ன் நடவடிக்கை திட்டம் என்ன, அதன் அறிக்கை என்ன?
இந்த குழு தனக்குள்ளும், ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் இடையிலும் பேச்சு வார்த்தைகள் மற்றும் ஆலோசனைகளை முடித்துக் கொண்டு, காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உடன் மே 5, 1946 அன்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி, மாகாணப் பிரிவுகள், கூட்டாட்சி இந்திய நிலை, அரசியல் சாசனம் தயாரிக்கும் குழு ஆகியவற்றைப் பற்றி விவாதிக்க முடிவெடுத்தது. கூட்டத்தின் முடிவில் இந்தக் குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்தது.
Q105. அரசியல் நிர்ணய குழு Cabinet Mission பரிந்துரைகள் யாவை?
1. இந்தியா என்ற கூட்டமைப்பு, ஆங்கிலேய இந்தியா, மன்னர் பகுதிகள் கொண்டு, வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் தொலைத் தொடர்பு துறைகளை மட்டும் நிர்வகிக்கும்.
2. ஒரு நிர்வாக மற்றும் சட்ட அமைப்பும் இருக்க வேண்டும். It should have an executive as well as a legislature.
3. எல்லா அதிகாரங்களும் மத்தியிலும், அதன் எஞ்சிய அதிகாரங்கள் மாகணங்களுக்கும் பிரித்துவிடப்பட வேண்டும்.
4. மத்திய அரசிடம் ஒதுக்கப்பட்டுள்ள துறைகளை தவிர்த்து, மிகுதிகளை மன்னர் பகுதிகள் மேற்கொள்ளலாம்.
5. மாகாணங்களில், துணை மத்திய நிர்வாக அமைப்புகள் எதுவும் இருக்கக்கூடாது.
6. முதல் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் சாசனச்சட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால், மாகாண சட்ட சபைகளின் பெரும் பகுதி ஆதரவுடன் மட்டுமே செய்ய வேண்டும்.
7. அரசியல் சாசன சட்ட சபை, சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தல் முடிவின் அடிப்படையில், ஒவ்வொரு மாகாண மக்கள் தொகைக்கேற்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அமைக்கப்படவேண்டும். தேர்தல்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில், ஒற்றை மாற்று வாக்கு முறையில் நடத்தப்பட வேண்டும்.
8. ஒரு தீர்மானமான அரசியல் சாசன சட்டம் இயற்றப்படும் வரை, அனைத்து கட்சிகளின் ஆதரவு பெற்ற ஒரு இடைக்கால அரசாங்கம், நிர்வாகத்தை மேலாண்மை செய்ய அமைக்கப்பட வேண்டும்.
Q106. அரசியல் நிர்ணய சபை திட்டம் -- Cabinet Mission Plan என்ன ஆனது, அதன் வெளிப்பாடு என்ன?
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இரு கட்சிகளுமே இந்த திட்டத்தை ஆதரித்ததை விட, அதிகமாக எதிர்த்தனர். குறிப்பாக இடைக்கால அரசாங்கத்தில் பதவிகள் அமர்த்துவ்தில் இருவருமே ஒருமித்த கருத்தை தெரிவிக்கவில்லை. இரு கட்சிகளையும் சமரச நிலைக்கு கொண்டு வர முடியாத நிலையில், இந்த குழு, 23.6.1946 ல் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்றது.
Q107. அரசியல் நிர்ணய சபை திட்ட தோல்விக்குப் பிறகு, வைஸ்ராய் மற்றும் இந்திய தலைவர்களால் என்ன முடிவு எடுக்கப்பட்டது?
காங்கிரஸ் இடைக்கால அரசாங்கத்தில் பங்கு பெற மறுத்து விட்டது. மாறாக, தேர்தல் மூலம் இடைக்கால அரசாங்கத்தை பங்குபெற/அமைக்க விரும்பியது. முஸ்லீம் லீம் தனது பங்குக்கு, வைஸ்ராய் தங்களை அரசு அமைக்க அழைப்பார் என எதிர்பார்த்தது. ஆனால் வைஸ்ராய் இதை ஏற்கவில்லை. அதனால், முஸ்லீம் லீக் அரசியல் நிர்ணய சபை திட்ட பரிந்துரைகளை முழுமையாக நிராகரித்தது. அதனால், வைஸ்ராய் வேவல் பிரபு, ஆகஸ்ட் 12, 1946 அன்று காங்கிரஸ் கட்சியை அரசு அமைக்க அழைத்தார். காங்கிரஸ் இதை தயக்கத்துடன் இதை ஏற்றுக் கொண்டது. ஆரம்பத்தில் தயங்கி வந்த முஸ்லீம் லீக், இடைக்கால அரசாங்கத்தில் இணைய ஒப்புக் கொண்டது. இருப்பினும் தங்கள் பாகிஸ்தான் கோரிக்கையைத் தொடர்ந்தது மட்டுமின்றி, அரசியல் சாசன நிர்ணய சபையில் (அரசியல் சாசனம் தயாரிப்பு குழு) சேர மறுத்தது. அந்த அரசியல் நிர்ணய குழுவை கலைக்கவும் கோரியது.
Q108. இடைக்கால அரசாங்கத்தில் பெங்கு பெற காங்கிரஸ் அழைப்பதற்கு முன் முஸ்லீம் லீக் எடுத்த ஒரு முடிவு பெரிய சர்ச்சைக்குள்ளானது. அது என்ன?
முஸ்லீல் லீக், ஆகஸ்ட் 16, 1946 ஐ ""நேரடி நடவடிக்கை நாள்"" “Direct Action Day” என நாடு முழுவதும் நடத்த அறிவித்தது. இந்நிலையில் காங்கிரஸ் முஸ்லீல் லீகை இடைக்கால அரசாங்கம் அமைக்க அழைப்பு விடுத்தது. முஸ்லீல் லீக் குறிப்பிட்ட தேதியன்று, பொதுக்கூட்டம், கடையடைப்பு, வேலை நிறுத்தம், ஆகியவற்றை தொடங்கி 4 நாட்கள் நீடித்தது. துரதிருஷ்டவசமாக, இந்த போராட்டம் இந்து முஸ்லீக்களுக்கு இடையில் பெரிய வன்முறையில் சென்றடைந்தது. இதனால பலத்த உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. இந்த நிகழ்வு கல்கத்தாவில் நடந்தது. அவ்வமயம், மாகாண அரசாங்க தலைவராக இருந்தவர் முஸ்லீம் லீகின் H.S. சுஹ்ராவார்டி. இவர் ஆகஸ்ட் 16ஐ விடுமுறை நாளாக அறிவித்தது மட்டுமின்றி, வன்முறையின் போது ராணுவ உதவியை கோர தவறியது. அதனால் வன்முறை கட்டுக்கடங்காமல் போனது. இருப்பினும், கடைசியில் ராணுவம் வந்த பிறகு நான்கு நாட்கள் கடுமையான வன்முறைக்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது.
Q109. ஜூன் 1946ல் அரசியல் நிர்ணய சபைக்காக நடத்தப்பட்ட தேர்தலின் வெளிப்பாடு என்ன?
ஜூலை-ஆகஸ்ட் 1946 க்கிடையில் 292 தொகுதிகளுக்காக இந்த தேர்தல் நடத்தப்பட்டது. அதில், நான்கு சீக்கிய தொகுதிகளுக்கு போட்டியாளர்கள் பங்கேற்க வில்லை. எஞ்சியிருந்த 288 தொகுதிகளுக்கு நடந்த இந்த தேர்தலில், காங்கிரஸ் 201, முஸ்லீம் லீக் 74, மற்றவர் 14 தொகுதிகளில் வெற்றிப் பெற்றனர். இந்த சட்ட சபை மன்றம் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் (இவருக்கு முன்பாக டாக்டர் சச்சிதானந்த சின்ஹா நியமிக்கப்பட்டிருந்தார் ஆனால் அவர் மறைந்து விட்டார்) 15 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அரசியல் சட்டம் மற்றும் விதிமுறைகளை எழுத அமைக்கப்பட்டது. 22.1.1947 அன்று ""நோக்க தீர்மானங்கள்"" “Objective resolution” எழுதப்பட்டு ஏற்றுக் கொண்டது. இது, பிறகு அரசியல் சாசன சட்ட முன்னுரையில் சேர்க்கப்பட்டது.
Q110. இடைக்கால அரசாங்கத்தில் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் யார்?
2.9.1946 முதல் 15th August 1947 – இதில் இடம் பெற்றிருந்தவர்கள்:
1. Jawaharlal Nehru – உதவித் தலைவர், நிர்வாக குழு -- வெளியுறவு மற்றும் காமன்வெல்த் உறவு.
2. வல்லபாய் பட்டேல் -- உள்துறை, தகவல், ஒலிபரப்பு
3. பல்தேவ் சிங் -- பாதுகாப்பு.
4. Dr. ஜான் மத்தாய் -- தொழிற்துறை, விநியோகம்.
5. சி.ராஜகோபாலாச்சாரி -- கல்வி.
6. C.H.பாபா -- பொதுப்பணி, சுரங்கம், மின்சாரம்.
7. ராஜேந்திர பிரசாத் -- உணவு மற்றும் விவசாயம்.
8. ஆசாஃப் அலி -- ரயில்வே.
9. ஜகஜீவன் ராம் -- தொழிலாளர் நலன்.
10.லியாகத் அலி கான் -- நிதி.
11. T.T.சுந்த்ரிகார் – வணிகம்.
12. அப்துர் ரப் நிஷ்டார் -- தொலைத்தொடர்பு.
13. கஸன்ஃபர் அலி கான் -- சுகாதாரம்.
14. ஜோகேந்திரநாத் மண்டல் -- சட்டம்.
இவர்களுள் 9 பேர் காங்கிரஸ், 5 பேர் முஸ்லீம் லீக் ஐ சேர்ந்தவர்கள். Of these nine were from Congress and the remaining five from Muslim League.
Q111. எந்த தீர்மானத்தின் அடிப்படையில், அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு, இந்திய அரசியல் சாசனத்தின் வரைவு பிரதியை தயாரிக்கப்பட்டது?
கேபினட் மிஷன் திட்டம். 1946.
Q112. அரசியல் நிர்ணய சப எப்போது அமைக்கப்பட்டது?
9.12.1946 – டாக்டர் சச்சிதானந்த சின்ஹா. அவர் மறைவுக்கு பின் டாக்டர் ராஜேந்திர பிரசாத் -- தலைவர்.
Q113. அரசியல் சாசன சட்டத்தை எழுத அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
B.R.அம்பேத்கர். அதனால் தான் இவர் "இந்திய அரசியல் சாசன தந்தை" என அழைக்கப்படுகிறார்.
Q114. இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு "நோக்கத் தீர்மானங்கள்" ஐ முன் வைத்தவர் யார்?
நோக்க தீர்மானம் - Objective Resolution என்பது, அரசியல் சித்தாந்தம் மற்றும் தத்துவம். இதை முன் வைத்தவர் ஜவஹர்லால் நேரு.
Q115. ""நோக்க தீர்மானங்கள்"" “Objective Resolution” எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது, அப்போது வைஸ்ராயாக இருந்தவர் யார்?
22.1.1948 – மவுண்ட் பேட்டன் பிரபு.
Q116. வரைவு இந்திய அரசியல் சாசன சட்டம், அரசியல் நிர்ணய சபையால் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
26.11.1949
Q117. அரசியல் சாசன சட்டம் தயாரிப்பு குழுவில் இருந்தவர்கள் யார்?
அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கோபாலசாமி அய்யங்கார், டாக்டர் கே.எம்.முன்ஷி, சையத் முகமது சௌதுல்லா, பி.ஐ.மில்லர், என். மாதவராவ், டி.பி. கைத்தான், மற்றும் டி.டி.கிருஷ்ணமாச்சாரி.
Q118. மார்ச் 1947ல், வேவல் பிரபு வுக்கு பதிலாக, மவுண்ட்பட்டன் பிரபு வைஸ்ராயாக பதவி ஏற்று, அவர் ஒரு திட்டத்தை முன் வைத்தார். அது என்ன?
இந்தியா சுதந்திர நாடாகும் ஆனால் ஐக்கியப்பட்டு இருக்க வேண்டும். அவருடைய திட்டங்கள்:
1. அரசியல் நிர்ணய சபை தனது பணியைத் தொடர்ந்தாலும், அரசியல் சாசனச் சட்டம் எழுதுவது தொடர்ந்து, அது எந்த பகுதியில் ஏற்கப்படவில்லையோ அங்கு அது அமலாகாது.
2. அரசியல் சாசன சட்டத்தை ஏற்கும் மக்களின் விருப்பத்தை, அப்போது இருந்த அரசியல் நிர்ணய சபையில், எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகளை சேர்த்து அறிந்து கொள்ள வேண்டும்.
3. பஞ்சாப், வங்காளம், வட மேற்கு மாகாணங்கள், அஸ்ஸாம் சிலெட் பகுதி -- பகுதிகளில் தேர்தல், விருப்ப வாக்கெடுப்பு, அல்லது, ஆங்கிலேய இந்திய அதிகாரிகளின் முடிவு படி அறியப்படவேண்டும்.
4. தொடர் அரசாங்கங்கள், இங்கியாந்துடன் தொடர்பு வைத்திருந்து, பிரிக்கப்பட்ட பகுதிகளின் ஆட்சி மாற்றம், நிர்வாகம், மாகாண நிர்வாகம் பற்றி ஆலோசனகளை பெற வேண்டும்.
5. இந்திய மாகாணங்களின் நிர்வாகத்தைப் பொருத்தவரை, இங்கிலாந்து தனது அதிகாரத்தை திரும்ப பெறுகிறது. மாகாணங்கள், மத்திய அரசாங்கங்களுடன் அரசியல் ரீதியான உறவு முறைகளை ஏற்படுத்தி கொண்டு நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், ஐக்கிய இந்தியாவை, இந்தியா - பாகிஸ்தான் என பிரிப்பதே மவுண்ட்பேட்டன் திட்டத்தின் உள்ளடக்கம்.
Q119. இங்கிலாந்து அரசாங்கம் எப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கவேண்டும் என முடிவெடுத்தது?
18.7.1947 அன்று -- இந்திய சுதந்திரச் சட்டம் 1947ன் படி.
Q120. இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்த இங்கிலாந்து பிரதம மந்திரி யார்?
க்ளெமெண்ட் அட்லீ -- தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்.
Q121. இந்தியப் பிரிவினை - பாகிஸ்தான் - முடிவான பிறகு எவ்வாறு இது நடைமுறைப் படுத்தப்பட்டது?
சர் சிரில் ராட்க்ளிஃப் என்பவரால், இந்தியா-பாகிஸ்தான் எல்லை முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி, 14.8.1947 அன்று பாகிஸ்தான் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
Q122. சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய நாட்டின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் யார்?
மவுண்ட் பேட்டன் பிரபு கவர்னர் ஜெனரலாகவும் 15.8.1947 to 21.6.1948, பிறகு, 21.6.1948 முதல் 26.1.1950 வரை (குடியரசு வரை) கவர்னர் ஜெனரலாக சி. ராஜகோபாலாச்சாரியும், குடியரசு ஆனவுடன், 26.1.1950 முதல் டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் குடியரசுத் தலைவராகவும், பதவி வகித்தனர்.
Q123. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, எவ்வகை அரசாங்கம் அமைக்கப்பட்டது?

அரசியல் நிர்ணய சபை, இந்தியாவின் இடைக்கால பாராளுமன்ற த்தை பதவியேற்றம் செய்தது. பாராளுமன்ற தலைவராக பிரதம மந்திரியாகவும், அவரின் கீழ் கீழ்க்கண்ட மந்திரிகளும் பதவியேற்றனர்.
1. சர்தார் வல்லபாய் பட்டேல் -- உள்துறை.
2. T.T.கிருஷ்ணமாச்சாரி -- நிதி.
3. மௌலானா ஆஸாத் -- கல்வி.
4. சரத் சந்திர போஸ் -- சுரங்கம் மற்றும் பொதுப்பணி.
5. ரஃபி அஹமத் கிட்வாய் -- தொலைத் தொடர்பு.
6. ராஜ்குமாரி அம்ரித் கௌர் -- சுகாதாரம்.
7. ஆசாஃப் அலி -- ரயில்வே, போக்குவரத்து.
8. ராஜேந்திரபிரசாத் -- உணவு, விவசாயம்.
9. பல்தேவ் சிங் -- பாதுகாப்பு

இந்த இடைக்கால அரசாங்கம், முதல் இந்திய பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை தொடர்ந்தது.

Q124. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது?
1951/1952 -- 25.10.1951 to 26.2.1952 – 489 தொகுதிகள் – காங்கிரஸ் 364 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
Q125. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மக்களவை என்று பதவியேற்றது?
17.4.1952
Q126. மக்களவையின் முதல் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
G.V. மாவ்லாங்கர்.
Q127. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரி சபையில் பங்குபெற்றவர்கள் யார்?

1. ஜவஹர்லால் நேரு -- பிரதம மந்திரி, வெளியுறவுத் துறை.
2. வல்லபாய் பட்டேல் -- உள்துறை
3. பல்தேவ் சிங் -- பாதுகாப்பு.
4. சண்முகம் செட்டி -- நிதி
5. மௌலானா ஆஸாத் -- கல்வி. Maulana Azad - Education.
6. ஜகஜீவன் ரம் -- தொழிலாளர் துறை.
7. B.R.அம்பேத்கர் -- சட்டம். 8. ரஃபி அஹமத் கிட்வாய் -- தொலைத் தொடர்பு
9. S.P. முகர்ஜி -- தொழிற்துறை
10. அம்ரித் கௌர் -- சுகாதாரம்.
11. ஜான் மத்தாய் -- ரயில்வே

இவ்வாறாக சுதந்திர இந்தியா இயங்கத் தொடங்கியது.