Khub.info Learn TNPSC exam and online pratice

பொது கேள்விகள் GENERAL QUESTIONS

Q1. இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியர்கள் யார்?
போர்ச்சுகீசியர்கள்.

Q2. எந்த போர்ச்சுகீசியர், எங்கு, எப்போது முதன் முதலாக இந்தியாவுக்கு வந்தார்?

20.8.1498 – காலிகட் – வாஸ்கோ டா காமா

Q3. போர்ச்சுகீசியர் இந்தியா வந்தடைந்த போது காலிகட் ஐ ஆண்ட மன்னர்கள் யாவர்?
ஸாமோரின் -- Zamorins.
Q4. இந்தியாவுக்கு முதன் முதலாக நியமிக்கப்பட்ட போர்ச்சுகீசிய வைஸ்ராய் யார்?
ஃப்ரான்சிஸ்கோ டி அல்மெடா -- 1505ல் கொச்சின் வந்தடைந்தார்.
Q5. ஃப்ரான்சிஸ்கோ டி அல்மெடா வை மாற்றம் செய்த போர்ச்சுகீசிய வைஸ்ராய் யார்?
1508ல் -- அஃபோன்ஸோ டி அல்புகெர்கூ நியமிக்கப்பட்டார்.
Q6. ஃப்ரான்சிஸ்கோ டி அல்மெடா நாடு திரும்பும் போது என்ன ஆயிற்று?
1510ல், தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையில், கொய் கொய் பழங்குடி இனத்தவரால் கொல்லப்பட்டார்.
Q7. கோவா வை கைப்பற்றிய போர்ச்சுகீசிய வைஸ்ராய் யார்?
1510ல் அஃபோன்ஸோ டி அல்புகெர்கூ.
Q8. கோவா வை கைப்பற்ற உதவியவர் யார்?
திம்மய்யா -- பீஜாப்பூர் ராஜ்யத்தின் உள்ளூர் தலைவனாக இருந்தவர்.
Q9. கோவா எப்போது இந்தியாவுடன் சேர்ந்தது?
12 டிசம்பர் 1961.
Q10. கோவா வை கைப்பற்ற இந்தியா எடுத்த ராணுவ நடவடிக்கையின் ரகசிய குறியீடு பெயர் என்ன?
Operation Vijay.
Q11. இந்தியா சுதந்திரம் பெறும் வரை, போர்ச்சுகீசியரால் ஆண்டு வந்த பகுதிகள் யாவை?
கோவா, தாத்ரா நாகர் ஹவேலி, தாமன் & டையூ.
Q12. பாம்பே மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகள் எவ்வாறு போர்ச்சுகீசியர் வசம் வந்தது?
முகலாயர்கள் வளர்ச்சியை பார்த்து பயந்த, இந்த பகுதியை ஆண்டு வந்த குஜராத் சுல்தான் போர்ச்சுகீசியர்களின் உதவியை நாடி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு பாம்பே மற்றும் அதை 1534ல் சுற்றியுள்ள தீவுகளை அவர்களுக்கு அளித்தார்.
Q13. போர்ச்சுகீசியர் பகுதியாக இருந்த பாம்பே, எவ்வாறு ஆங்கிலேயர்களுக்கு சென்றது?
பாம்பே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை, போர்ச்சுகீசியர்கள், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் போர்ச்சுகீசிய இளவரசி ப்ரகன்ஸா வின் திருமண பரிசாக 1661ல் கொடுக்கப்பட்டது. எஞ்சியிருந்த பகுதிகளும் பிற்காலத்தில் ஆங்கிலேயருக்கு குத்தகையில் கொடுக்கப்பட்டது.
Q14. தாத்ரா நாகர் ஹவேலி பகுதிக்கு, இந்தியாவுடன் சேருவதற்கான உடன்படிக்கைகளில் கையொப்பம் இடுவதற்காக பிரதம மந்திரி யாக உயர்த்தப்பட்ட இந்திய அதிகாரி யார்?
திரு. பத்லானி, IAS அதிகாரி, அப்போது தாத்ரா நாகர் ஹவேலி கமிஷனராக இருந்தார். இந்த ஒரு நாளுக்கு அவர் பிரதமர் மந்திரியாக பதவி ஏற்று, ஆவணங்களில், ஜவஹர்லால் நேருவுடன் கையொப்பமிட்டார்.
Q15. போர்ச்சுகீசியர்களின் கடைசி இந்திய வைஸ்ராய் யார்?
மானுவேல் அந்தோனியோ வசலோ இ சில்வா – 1958-1961.
Q16. போர்ச்சுகீசிய பகுதிகளை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றிய போது, போர்ச்சுகல் அதிபராக இருந்தவர் யார்?
அமெரிக்கோ தோமஸ்.
Q17. போர்ச்சுகீசியர் பகுதிகள் மீது ராணுவ நடவடிக்கை எடுத்த போது இந்திய பிரதம மந்திரி யார்?
ஜவஹர்லால் நேரு.
Q18. போர்ச்சுகீசியர் இந்திய பகுதிகளை ராணுவ நடவடிக்கை எடுத்த போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் யார்?
கிருஷ்ண மேனன்.
Q19. போர்ச்சுகீசியர் இந்திய பகுதிகளை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றிய போது இந்திய ராணுவ தளபதியாக இருந்தவர் யார்?
ப்ரான் தப்பார்.
Q20. ஃப்ரெஞ்ச்சுகாரர்கள், இந்தியாவில் முதன் முதலாக எங்கு தங்கள் தொழிற்சாலையை துவக்கினர்?
1668 – சூரத்.
Q21. ஃப்ரெஞ்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முதல் குடியிருப்பு காலனி எது?
பாண்டிச்சேரி (புதுச்சேரி) -- பீஜாப்பூர் சுல்தானிடமிருந்து பெறப்பட்டது.
Q22. ஃப்ரெஞ்சுக்காரர்களின் முதல் இந்திய கவர்னர் யார்?
ஃப்ராங்கோய்ஸ் மார்டின் – 1674.
Q23. 1693-1699 காலத்தில் பாண்டிச்சேரி டச் காரர்கள் வசமானது. மீண்டும் எவ்வாறு ஃப்ரெஞ்சுக்காரர்களிடம் வந்தது?
1699 ரிஸ்விக் உடன்படிக்கை மூலம்.
Q24. எந்தப் போரின் மூலம், ஃப்ரெஞ்சுக்காரர்களின் வளர்ச்சி இந்தியாவில் தடைபட்டது?
முதலில் 1760ல் வந்தவாசி போர், பிறகு முடிவாக 1763ல் மூன்றாம் கர்நாடிக் போர்.
Q25. ஃப்ரெஞ்ச் ஆளுநர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்?
ஜோசஃப் ப்ராங்காய்ஸ் டூப்ளெக்ஸ் – 1742-1754 – புதுச்சேரியின் இன்றைய நிலைக்கு அவரே காரணம்.
Q26. இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஃப்ரெஞ்ச் காரர்கள் வசமிருந்த பகுதிகள் யாவை, அவை எப்போது இந்தியாவுடன் இணைந்தது?
1. மசூலிப்பட்டினம், கோழிக்கோடு, சூரத் -- அக்டோபர் 1947ல் சேர்ந்தது.
2. சந்தர் நாகூர், வங்காளம் -- 1950ல், பிறகு 1955ல் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது.
3. பாண்டிச்சேரி, யாணம், மாஹே, காரைக்கால் -- நவம்பர் 1954.
Q27. ஃப்ரெஞ்ச் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரால் யார்?
சார்லஸ் ஃப்ராங்காய்ஸ் மாரி பேரோன் -- 20.3.1946 -- 20.8.1947. பிறகு 20.8.1947 முதல் மே 1949 வரை சுதந்திர இந்தியாவில் அவர் ஆளுநராகத் தொடர்ந்தார்.
Q28. டச்சுக்காரர்கள் தங்களது முதல் குடியிருப்பு பகுதியை எங்கு உருவாக்கினார்கள்?
1608 ல் கொச்சின் (கேரளா)
Q29. இந்தியாவுக்கு வந்த முதல் வணிக யாத்திரிகர் யார்?
ஜான் மில்டென்ஹால் -- 1599ல்
Q30. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் யாரால் நிறுவப்பட்டது?
1599ல் -- ஆங்கிலேய வணிகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து தொடங்கினர்.
Q31. உலகின் கிழக்கு பகுதிகளில் சென்று வணிகம் செய்ய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்தது?
31.12.1600 -- மகாராணி எலிசபெத் 1 வழங்கினார்.
Q32. எந்த ஆங்கிலேயர் இந்தியாவுக்கு முதன் முதலாக வந்து, தொழிற்சாலை துவங்க அனுமதி பெற்றார்?
1609 – கேப்டன் ஹாக்கின்ஸ் -- முகலாய மன்னர் ஜஹாங்கீரிடமிருந்து பெற்றார்.
Q33. ஆங்கிலேயர்கள் எங்கு தங்களது முதல் தொழிற்சாலையை துவக்கினர்?
சூரத் – 1613.
Q34. முகலாய மன்னர் ஜஹாங்கீர் ன் அரசவைக்கு வந்த இரண்டாவது ஆங்கிலேயர் யார்?
சர் தாமஸ் ரோ -- 1615ல் - மேலும் சில தொழிற்சாலைகள் துவங்க அனுமதி பெற்றார்.
Q35. கிழக்கிந்திய நிறுவனம், இந்தியாவில், நிலம் வாங்கவும், தங்கள் சொந்த படையை உருவாக்கவும், சொந்த நாணயம் அச்சிடவும், அனுமதி கொடுத்தவர் யார்?
1670 – மன்னர் ஜேம்ஸ் 2.
Q36. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் மதராஸ் நகரை யாரிடமிருந்து பெற்றனர்?
23 ஆகஸ்ட் 1639 அன்று, சந்திரகிரி மன்னர் சென்னப்ப நாயக்கர் இடமிருந்து பெற்றனர். அப்போது இது சென்னபட்டனம் என அழைக்கப்பட்டது. இதுவே ஆங்கிலேயர்கள் தங்களின் எதிர்காலத்தை ஊன்றிய இடம்.
Q37. பாம்பே எவ்வாறு ஆங்கிலேயர் வசம் வந்தது?
1668 ல், பகுதி சார்லஸ் 2 திருமணப் பரிசாகவும், எஞ்சிய பகுதி குத்தகையிலும் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கிடைத்தது. ஆங்கிலேயர்கள் மேற்கில் தங்களது எதிர்காலத்தை ஊன்றிய இடம்.
Q38. பாம்பேயின் முதல் கிழக்கிந்திய நிறுவன ஆளுநர் யார்?
ஜெரால்ட் ஆங்கியர் – 1669-1677.
Q39. ஆங்கிலேயர்களுக்கு, கிழக்கில் கல்கத்தா எவ்வாறு கிடைத்தது?
1690ல் ஆங்கிலேயர்கள் முதலில் வங்காளத்தில் சுதாநூதி என்ற இடத்தில் தொழிற்சாலையை துவக்கினர். இந்த இடத்தைச் சுற்றி, காளிகட்டா மற்றும் கோவிந்த்பூர் கிராமங்கள் இருந்தன. இவை மூன்றும் சேர்ந்து கல்கத்தா ஆனது. 1698ல் சுதாநூதி தொழிற்சாலையை சுற்றி கோட்டை எழுப்பினர். இதுவே பிற்காலத்தில் வில்லியம்ஸ் கோட்டை ஆனது. இவ்வாறாக ஆங்கிலேயர்கள் கிழக்கில் தங்கள் எதிர்காலத்தி ஊன்றினர்.
Q40. வில்லியம்ஸ் கோட்டையின் முதல் தலைவர் யார்?
சார்லஸ் அயர் -- டிசம்பர் 1699.
Q41. எந்த முகலாய மன்னர், ஆங்கிலேயர்களுக்கு, முதலில் சுங்க வரி சலுகைகள் அளித்தார்?
1691ல் அவுரங்கசீப்.
Q42. ஆங்கிலேயர்கள் எந்த பகுதியை முதன் முதலில் ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றினர்?
1745 – முதல் கர்நாடிக் போர்.
Q43. 1746ல், மதராஸ் ஃப்ரெஞ்ச் காரர்களால் கைப்பற்றப்பட்டது. அது எவ்வாறு ஆங்கிலேயர் வசம் திரும்பி வந்தது?
ஆஸ்திரியாவில் நடந்த வாரிசுச் சண்டையில் ஆங்கிலேயருக்கும் ஃப்ரெஞ்சுக்கும் 1748ல் அய்க்ஸ் லா சாபெல் என்ற இடத்தில் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி, மதராஸ் ஆங்கிலேயருக்கு திரும்ப கொடுக்கப்பட்டது.
Q44. ப்ளாசி என்ற இடம் எங்குள்ளது?
வங்காளத்தில், மூர்ஷிதாபாத் அருகில் ஒரு கிராமம்.
Q45. 1757ல் ப்ளாசி போர் யாரிடையே நடந்தது?
23 ஜூன் 1757 – ஆங்கிலேயருக்கும், வங்காள் நவாப் சிராஜ் உத் தௌலாவுக்கும் இடையில்.
Q46. ப்ளாசி போரில், வங்காள் நவாப் சிராஜ் உத் தௌலாவுக்கு எதிராக சதி செய்தவர் யார்?
மீர் ஜாஃபர் -- சிராஜ் உத் தௌலா வின் ராணுவ தளபதி.
Q47. பக்ஸார் என்ற இடம் எங்குள்ளது?
பீஹாரில் பாட்னாவுக்கு அருகில்.
Q48. பக்ஸார் போர் யாரிடையே நடைபெற்றது?
22 அக்டோபர் 1764 - மேஜர் ஹெக்டர் மன்றோ தலைமையில் ஆங்கிலேயர்களுக்கும், வங்காள நவாப் மீர் காசிம், ஆவாத் நவாப் ஷூஜா உத் தௌலா மற்றும் முகலாய ஷா ஆலம் 2 சேர்ந்த அணிக்கும் இடையில் நடந்தது.
Q49. சிராஜ் உத் தௌலாவிடமிருந்து வங்காளம் கைப்பற்றப்பட்ட போது இருந்த ஆங்கிலேய ஆளுநர் யார்?
ட்ரேக்.
Q50. ராபர்ட் க்ளைவ் கிழக்கிந்திய நிறுவனத்தில் என்னவாக சேர்ந்தார்?
எழுத்தர். (க்ளார்க்)
Q51. வங்காளத்தில் "இரட்டை ஆட்சி" முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ராபர்ட் க்ளைவி - 1765-1772.
Q52. வங்காளத்தில் "இரட்டை ஆட்சி" முறையை ஒழித்தவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் -- 1772/73களில், இரட்டை ஆட்சி முறையை ஒழித்து, நிர்வாகத்தை கிழக்கு இந்திய நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தார்.
Q53. 1769ல் மதராஸ் உடன்படிக்கை யாரிடையே ஏற்பட்டது?
ஏப்ரல் 1769 -- ஆங்கிலேயருக்கும், மைசூர் ஹைதர் அலிக்குமிடையில் ஏற்பட்டது. அந்த நிலையில் ஹைதர் அலி மதராஸூக்கு அருகில் 5 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தார்.
Q54. மைசூரை ஆண்ட உடையார் மன்னரிடம் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றும் முன் ஹைதர் அலி என்னவாக இருந்தார்?
மைசூர் மன்னர் கிருஷ்ணராஜா உடையார் 2 இடம் ராணுவ தளபதியாக இருந்தவர்.
Q55. 1784ல் மங்களூர் உடன்படிக்கை யாரிடையே ஏற்பட்டது?
திப்பு சுல்தானுக்கும் மதராஸ் ஆளுநர் மெக் கார்ட்னி பிரபுவுக்கும் இடையில்.
Q56. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் யாரிடையே நடந்தது?
திப்பு சுல்தானுக்கும் கார்ன் வாலிஸ் பிரபுவுக்கும் இடையில் – 1790-1792.
Q57. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் எந்த உடன்படிக்கையால் முடிவுற்றது?
ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை 1792 -- ஒரு புறம் திப்பு சுல்தான் மறுபுறம் ஆங்கிலேயர், நிஸாம் மற்றும் பேஷ்வா வுக்கிடையில் ஏற்பட்ட உடன்படிக்கை.
Q58. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் யாரிடையே நடந்தது?
வெல்லெஸ்லி பிரபுவுக்கும் திப்புசுல்தானுக்கும் இடையில் மார்ச் 1799ல்
Q59. நான்காம் ஆங்கிலேய மைசூர் போரில், திப்பு சுல்தானுக்கு துரோகம் புரிந்தவர் யார்?
மீர் சாதிக் -- திப்பு சுல்தானின் ராணுவ தளபதி -- போர் நடந்து கொண்டிருக்கும் போது, மீர் சாதிக் படைகளை ஊதியம் பெற அனுப்பிவிட்டதினால், திப்பு சுல்தான் தோல்வியும் மரணமும் அடைந்தார்.
Q60. ஆங்கிலேய மைசூர் போர்களில் திப்பு சுல்தான் ஏவுகணைகளை பயன்படுத்தியது சரித்திரம். இதனால் பிற்காலத்தில் ஏற்பட்டது என்ன?
1804 "கான்க்ரீவ்" ராக்கெட்டுகளை வில்லியம் கான்க்ரீவ் என்ற ஆங்கிலேயர் கண்டுபிடித்தார்.
Q61. எத்தனை ஆங்கிலேய மைசூர் போர்கள் நடந்தன?
நான்கு -- 1767-69; 1780-84; 1790-92; 1798-99.
Q62. எத்தனை ஆங்கிலேய மராத்தா போர்கள் நடந்தன?
மூன்று -- 1775-82; 1803-1805; 1816-1819 (இந்த போர் பிந்தாரி போர் எனவும் அழைக்கப்பட்டது).
Q63. முதல் ஆங்கிலேய மராத்தா போர் எதன் அடிப்படையில் முடிவடைந்தது?
சால்பாய் உடன்படிக்கை – 1782. வாரன் ஹேஸ்டிங்ஸ் அப்போதைய கவர்னர் ஜெனரல்.
Q64. இரண்டாம் ஆங்கிலேய மராத்தா போர் நடந்த காலம் ……..
1803-1805.
Q65. பிந்தாரிகள் என அழைக்கப்பட்டவர்கள் யார்?
ஆப்கானிஸ்தானின் பழங்குடி இன மக்கள் தலைவர்கள், குஜராத்தின் மேற்கு மற்றும் வடக்கில் சில சிறிய பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள். இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தனர். கரீம் கான், வாசில் முகமது மற்றும் சிட்டு என்பவர்கள் இதன் தலைவராக இருந்தவர்கள். 1817-1818 களில் ஆங்கிலேயர்கள் (பிந்தாரி போர் == ஆங்கிலேய மராத்தா போர் 4 என அழைக்கப்பட்டது) வாரன் ஹேஸ்டிங்ஸ் தலைமையில் கட்டுப்படுத்தினர்.
Q66. ஆங்கிலேயர்களுக்கும் மராத்தியர்களுக்கும் இடையில் சில உடன்படிக்கைகள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் எந்த உடன்படிக்கை மூலம், மராத்திய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது?
பசீன் உடன்படிக்கை 1802.
Q67. 1802 பசீன் உடன்படிக்கையைப் பற்றி ஆர்தர் வெல்லெஸ்லி எவ்வாறு வர்ணித்தார்?
ஒரு பூஜ்ய உடன்படிக்கை. Treaty with a cipher.
Q68. எத்தனை ஆங்கிலேய சீக்கிய போர்கள் நடைபெற்றன?
இரண்டு.
Q69. முதல் ஆங்கிலேய சீக்கிய போர் 1845-1846 எவ்வாறு முடிவுற்றது?
1846 லாகூர் உடன்படிக்கை -- அப்போதைய ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் ஹார்டிஞ்ச் பிரபு.
Q70. பிளவு படாத இந்தியாவின் சிந்த் பகுதியை ஆங்கிலேயர்கள் எப்போது கைப்பற்றினர்?
1843
Q71. சிந்த் பகுதியை கைப்பற்றியவுடன், சர் சார்லஸ் நேப்பியர், கவர்னர் ஜெனரல் அனுப்பிய தந்தியில் என்ன கூறப்பட்டிருந்தது?
"நான் பாவம் செய்து விட்டேன்" “I have sinned”.
Q72. இங்கிலாந்து அரசின் எந்த சாசனத்தின் மூலம், கிழக்கிந்திய நிறுவன நிர்வாகத்துக்கு கவர்னர் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டனர்?
1773 - கட்டுப்பாட்டுச் சட்டம் Regulating Act of 1773. அதைத் தொடர்ந்து பிட்ஸ் சட்டம் -- Pitts Act of 1784.
Q73. ஆங்கிலேய இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் -- 1773-1785.
Q74. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் நடந்த போர்கள் யாவை?
முதல் மாராத்தா போர்(1775-1782); இரண்டாம் மைசூர் போர் (1780-1784) & ரோஹில்லா போர் - 1774.
Q75. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் நடந்த எந்த நிகழ்ச்சி அவருக்கு அரசியல் சங்கடத்தை ஏற்படுத்தியது?
1778 - சைல் சிங் விவகாரம். இதனால், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1785ல் அவர் இந்த விவகாரத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
Q76. ஜமீந்தார் முறை யை (நில வருவாய் வசூலிக்க ஒரு நிரந்தர திட்டம்) அறிமுகப் படுத்தியவர் யார்?
காரன் வாலிஸ் பிரபு – 1793 – வங்காளம் மற்றும் பீஹாரில்.
Q77. இந்தியாவில் பொதுப் பணி முறையை Civil Services அறிமுகப்படுத்தியவர் யார்?
காரன் வாலிஸ் பிரபு – 1793
Q78. 1806 வேலூர் கலகம், பின் காலங்களில் வந்த இதர கலகங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. இந்த கலகம் யாருடைய காலத்தில் நடந்தது?
மிண்டோ 1 பிரபு -- கவர்னர் ஜெனரல்.
Q79. மதராஸ் மாகாணம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது?
வெல்லெஸ்லி பிரபு – 1785.
Q80. மதராஸ் மாகாணத்தில் ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஹேஸ்டிங்ஸ் பிரபு -- 1820. இந்த முறையின் மூலம் அரசாங்க வருவாய்களை, அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படும் முகவர்கள் (பொதுவாக ஜமீந்தார்கள்) மூலம் நேரடியாக வசூலித்தல்.
Q81. "சதி" என்ற விதவை தீக்குளித்தல் முறையை முதலில் ரத்து செய்தவர் யார்?
வில்லியம் பெண்டிக் பிரபு -- 1829ல்.
Q82. எந்த கவர்னர் ஜெனரல் காலத்தில் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது?
வில்லியம் பெண்டிக் பிரபு 1835ல்
Q83. ஆங்கிலேயரின் எந்த போர் தோல்வி ""ஆக்லாண்ட் மடத்தனம்"" “Auckland’s folly” என வர்ணிக்கப்பட்டது?
முதல் ஆங்கிலேய ஆப்கான் போர் (1836-1842)
Q84. எந்த சீக்கிய மன்னரிடமிருந்து கோஹினூர் வைரம் ஆங்கிலேயர்கள் பெற்று இப்போது இங்கிலாந்து அரசாங்கத்திடம் உள்ளது?
துலீப் சிங்.
Q85. காஷ்மீர் பகுதியை சீக்கியர்களிடமிருந்து பெற்று, ஆங்கிலேயர்கள் அப்பகுதியை யாருக்கு விற்றனர்?
குலாப் சிங்
Q86. "வாரிசு இல்லா சட்டம்" “Doctrine of Lapse” யார் அறிமுகப்படுத்தினார்?
டல்ஹௌசி பிரபு.
Q87. வாரிசு இல்லா சட்டத்தின் மூலம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டப்பட்ட முதல் பகுதி எது?
சத்தாரா 1848.
Q88. பொதுப்பணித் துறை - Public Works Department யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது?
டல் ஹௌசி பிரபு
Q89. ஆங்கிலேய ஆட்சியின் எந்த வருடம், இந்தியாவின் கட்டுமான வசதிகள் மேம்பாட்டு வருடம் என கருதப்படுகிறது?
1853 – ரயில்வே (16.4.1853 – பாம்பே -- தானே ), பிறகு, கல்கத்தா-ஆக்ரா இடையில் தந்தி வசதி, மற்றும் தபால் வசதி ஏற்படுத்தப்பட்டது. இவையெல்லாம் டல்ஹௌசி காலத்தில் ஏற்பட்டது.
Q90. விதவை மறுமணச்சட்டம் யாரால் இயற்றப்பட்டது?
1856 -- டல் ஹௌசி பிரபு.
Q91. கல்கத்தா, மதராஸ் மற்றும் பாம்பே பல்கலைக்கழகங்கள் எந்த கவர்னர் ஜெனரல் காலத்தில் உருவாக்கப்பட்டது?
கேனிங் பிரபு -- 1857.
Q92. 1857 சிப்பாய் கலகம் யாருடைய காலத்தில் நடந்தது?
கேனிங் பிரபு.
Q93. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும், ஆங்கிலேய இந்தியாவுக்கும் தலைநகராக இருந்த நகரம் எது?
கல்கத்தா -- 1911 வரை. பிறகு 1911ல் தலைநகர் டெல்லிக்கு மாற்றப்பட்டது.
Q94. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கடைசி கவர்னர் யார்?
ராபர்ட் க்ளைவ் (1758-1773). இவருக்குப் பிறகு, வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரல் ஆக 1773ல் பதவி ஏற்றார்.
Q95. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் நிகழ்ந்த ஆங்கிலேய மைசூர் போர் எது?
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் – 1780-1784--ஹைதர் அலியுடன்.
Q96. வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் சர் வில்லியம் ஜோன்ஸ் சேர்ந்து நிறுவிய அமைப்பு எது?
1784 – Asiatic Society of Bengal.
Q97. இந்தியாவில் நீதிமன்றங்கள் அமைக்க தொடங்கியவர் யார்?
கார்ன்வாலிஸ் பிரபு 1793.
Q98. கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையை நிறுவியவர் யார்?
வெல்லெஸ்லி பிரபு.
Q99. எந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் காலத்தில் மதராஸ் மாகாணம் உருவானது?
வெல்லெஸ்லி பிரபு 1803
Q100. இந்திய பொதுப்பணித்துறை தேர்வில் முதலாவதாக தேர்வு எழுதிய இந்தியர் யார், அவரின் சாதனை என்ன?
1905 – குருசதாய் தத்தா.
Q101. 1806ல் வேலூர் கலகத்தின் போது இருந்த கவர்னர் ஜெனரல் யார்?
ஜார்ஜ் பார்லோ
Q102. மூன்றாம் ஆங்கிலேய மராத்தா போரின் போது இருந்த கவர்னர் ஜெனரல் யார்?
1817-1818 – வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு -- மராத்தா முழுவதுமாக அடக்கப்பட்டனர் -- பேஷ்வா முறை ரத்து செய்யப்பட்டு, மராத்திய பகுதிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டது.
Q103. பாம்பே மாகாணம் எப்போது உருவானது?
1818 – வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு -- கவர்னர் ஜெனரல்.
Q104. முதல் பர்மா போர் எப்போது நடந்தது?
1824-1826 – பர்மிய ஆட்சியாளர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் -- ஆம்ஹெர்ஸ்ட் பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்தார்.
Q105. மத்திய இந்தியாவில், கோண்ட் பழங்குடியினரின் மனித நரபலி பழக்கத்தை தடை செய்தவர் யார்?
ஹார்டிஞ்ச் பிரபு.
Q106. இந்திய பத்திரிகை தொழிலுக்கு மேலும் சுதந்திரம் பெற்று தந்தவர் யார்?
சர் சார்லஸ் மெட்கால்ஃப் -- மிக குறுகிய காலத்துக்கே இவர் கவர்னர் ஜெனரலாக இருந்தார். 1835-1836.
Q107. முதல் ஆஃப்கான் போர் எப்போது நடந்தது?
1836-1842 – ஆங்கிலேயர்கள் பலத்த தோல்வியை சந்தித்தனர்.
Q108. இரண்டாம் ஆங்கிலேய சீக்கிய போர் எப்போது நடந்தது?
1848-1849 – டல்ஹௌசி பிரபு தலைமையிலான ஆங்கிலேயர்களுக்கும் பஞ்சாப் மன்னர்களுக்கும் இடையில். பஞ்சாப் கைப்பற்றப்பட்டது.
Q109. இரண்டாம் ஆங்கிலேய பர்மிய போர் நடந்தது?
1852 – பர்மாவின் கீழ் பகுதிகள் கைப்பற்றப்பட்டது. டல்ஹௌசி கவர்னர் ஜெனரலாக இருந்தார்.
Q110. எந்த ராஜ்ய உத்தரவின் பேரில் இந்திய மக்களின் கல்வி பொறுப்பை ஆங்கிலேயர் ஏற்றுக் கொண்டனர்?
Wood’s Education Despatch 1854. கிழக்கிந்திய நிறுவன நிர்வாக குழுவின் தலைவராக இருந்த சார்லஸ் உட் என்பவரால் கொண்டுவரப்பட்ட இந்திய மக்களுக்கான கல்வி திட்டம்.
Q111. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்?
கேனிங் பிரபு. இவரே இந்தியாவின் முதல் வைஸ்ராய் ஆக தொடர்ந்தார்.
Q112. 1857 சிப்பாய் கலகம் எங்கு முதலில் தொடங்கியது?
பாரக்பூர் - வங்காளம் -- 29 மார்ச் 1857.
Q113. பாரக்பூரில் தொடங்கிய சிப்பாய் கலகத்தை முன்னின்று நடத்தியவர் யார்?
மங்கள் பாண்டே
Q114. சிப்பாய் கலக போராளிகள் எழுப்பிய கோஷம் என்ன?
"ஆங்கிலேயர்களை அடி" == “Maro Firangi” (இந்தி) == “Beat the English”.
Q115. இந்திய தண்டனைச் சட்டம் Indian Penal Code எப்போது இயற்றப்பட்டது?
1862 – கேனிங் பிரபு காலத்தில்.
Q116. எந்த ஆங்கிலேய இங்கிலாந்து சட்டத்தின் படி கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டது?
1858 -- இந்தியா சட்டம் -- India Act of 1858.
Q117. கல்கத்தா, மதராஸ் மற்றும் பாம்பேயில், யாருடைய காலத்தில் உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன?
1865 – ஜான் லாரன்ஸ் பிரபு.
Q118. மேயோ பிரபு இன்றும் ராஜஸ்தானின் ஒரு நகரத்தில் நினைவு கூறப்படுகிறார். அது எவ்வாறு?
1875ல் அஜ்மீர் நகரில் நிறுவப்பட்ட மேயோ பிரபு கல்லூரி மூலம். Lord Mayo College in Ajmer. ஆரம்பத்தில் இது இந்திய ராஜ வம்ச இளவரசர்களை அவர்களை அரசியல் நிலைக்கு மேம்படுத்தும் எண்ணத்தில் துவங்கப்பட்டது.
Q119. மேயோ பிரபு, இந்திய வைஸ்ராய் (1869-1872) இறந்தார்?
8.2.1872ல் அந்தமான் சிறைச்சாலையில், ஒரு கைதியால் (ஷேர் அலி அஃப்ரிதி) கொலையுண்டார்.
Q120. "டெல்லி தர்பார்" “Delhi Durbar” என்ற நிகழ்வு என்ன, எங்கு நடத்தப்பட்டது?

1911 – டெல்லி – மன்னர் ஜார்ஜ் 5, மகாராணி மேரி விஜயம் செய்த போது.  பிரிட்டன் மன்னராக ஐந்தாம் ஜார்ஜ் 1911-ல் பதவியேற்றதற்கான பாராட்டு விழா.

Q121. யாருடைய காலத்தில், மிகவும் சர்ச்சைக்குள்ளான ""தாய்மொழி பத்திரிகை சட்டம்"" “Vernacular Press Act” அமலாக்கப்பட்டது?
லிட்டன் பிரபு –1878 -- இந்திய தாய் மொழி பத்திரிக்கை நடவடிக்கைகளை அடக்கும் விதமாக இயற்றப்பட்ட சட்டம்.
Q122. இரண்டாம் ஆங்கிலேய ஆஃப்கான் போர் நடந்தது?
1878-1880 – அவ்வமயம் லிட்டன் பிரபு வைஸ்ராயாக இருந்தார்.
Q123. வங்காளத்தில் கடும் வறட்சி நிலவிய காலம் எது?
1669, 1770, 1866(ஒரிஸ்ஸாவும்) பிறகு 1943ல். இதனால் பல லட்சம் பேர் மாண்டனர்.
Q124. "வறட்சி நிவாரணக் குழு" “Famine Commission” யார் தலைமையில் அமைக்கப்பட்டது?
சர் ரிச்சார்டு ஸ்ட்ராச்சி Sir Richard Strachey – 1878.
Q125. இந்தியாவில் முதல் முறையாக மக்கள் கணக்கெடுப்பு எப்போது நடந்தது?
1881 -- ரிப்பன் பிரபு காலத்தில். அவ்வமயம் இருந்த மக்கள் தொகை 2450 லட்சம்.
Q126. எப்பொழுது முதன் முதலாக உள்ளூர் சுய அரசாங்கம் நிறுவப்பட்டது?
1882ல் – ரிப்பன் பிரபு காலத்தில்.
Q127. எப்போது, முதன் முதலாக ஒரு "கல்வி குழு" Educational Commission அமைக்கப்பட்டது?
1882ல் – சர் வில்லியம் ஹண்டர் தலைமையில்.
Q128. "இல்பர்ட் மசோதா" “Ilbert Bill” என்பது என்ன?
இந்த மசோதாவின் மூலம் இந்திய நீதிபதிகள் ஐரோப்பிய குற்றவாளிகளின் வழக்குகளை விசாரிக்கலாம்.
Q129. "இல்பர்ட் மசோதா" எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் விளைவு என்ன?
1883 – இந்தியர்கள் இதை வரவேற்ற போதிலும், ஐரோப்பியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆங்கிலேயர்களின் இந்த எதிர்ப்பை எதிர்க்கும் வகையில் இந்தியர்கள் ஒன்று சேர்ந்ததினால் உருவானதே ""இந்திய தேசிய காங்கிரஸ்"" 1885.
Q130. மூன்றாம் ஆங்கிலேய பர்மா போர் எப்போது நடந்தது?
1884-1888 – பர்மா முழுமையாக தோற்று, ஆங்கிலேயர் வசம் வந்தது.
Q131. இந்திய தேசிய காங்கிரஸ் யாரால், எப்போது நிறுவப்பட்டது?
1885 – ஆங்கிலேயர் ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்பவரும், இந்தியர்கள் தாதாபாய் நௌரோஜி, மற்றும் தீன்ஷா எடுல்ஜி வாச்சா என்பவர்களால் நிறுவப்பட்டது. ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்பவர் ஆங்கிலேய அரசாங்க ஊழியர் மற்றும் அரசியல் சீர்திருத்தவாதி.
Q132. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மகாநாடு எப்போது எங்கு நடத்தப்பட்டது?
28-31 டிசம்பர் 1885 – பாம்பே -- 72 உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்.
Q133. ஆங்கிலேய இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தானுக்கு இடையில் எல்லையை எந்தக் குழு அமைக்கப்பட்டது?
டுராண்ட் கமிஷன் -- மார்ட்டிமர் டுராண்ட் தலைமையில் -- அதனால் தான் இந்த எல்லைக்கோடு டுராண்ட் எல்லைக்கோடு என அழைக்கப்படுகிறது.
Q134. பூனாவின் சாப்பேகர் சகோதரர்கள், ஆங்கிலேய அதிகாரிகள் W.C.ராண்ட் மற்றும் Lt. ஆயெர்ஸ்ட் ஆகியோரை 1897ல் கொலை செய்தனர். இந்த சகோதரர்களின் முழுப் பெயர்கள் என்ன?
தாமோதர் ஹரி, பாலகிருஷ்ண ஹரி, வாசுதேவ் ஹரி.
Q135. வங்காள பிளவு எப்போது ஏற்பட்டது?
1905 – குறிப்பாக சொன்னால் 16.10.1805 அன்று, கர்ஸன் பிரபுவால்.
Q136. எந்த சட்டத்தின் மூலம், வைஸ்ராயின் சட்டமன்றத்திலும், மாகாண சட்டமன்றங்களிலும் இந்தியர்கள் இடம் பெற அனுமதிக்கப்பட்டனர்?
இந்திய கவுன்சில் சட்டம் 1892 -- Indian Councils Act of 1892.
Q137. 1901ல் விக்டோரியா மகாராணி இறந்த போது, இந்திய வைஸ்ராய் யார்?
கர்ஸன் பிரபு
Q138. இந்திய தேசிய காங்கிரஸின் 1907 சூரத் மகாநாட்டில், காங்கிரஸ் இரண்டு அணிகளாக பிளவுபட்டது? அவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
""தீவிரவாதிகள்"" (லோகமான்ய திலக், லாலா லஜ்பத் ராய், அரவிந்த கோஷ்) மற்றும் ""மிதவாதிகள்"" (கோபாலகிருஷ்ண கோகலே, ஃபிரோஸ்ஷா மேத்தா, சுரேந்திரநாத் பானர்ஜி)
Q139. தீவிரவாதிகள், மிதவாதிகள் காங்கிரஸ் அணிகளின் தலைவர்கள் யாவர்?
தீவிரவாதிகள் -- பாலகங்காதர திலக், மிதவாதிகள் -- கோபாலகிருஷ்ண கோகலே.
Q140. இந்தியர்கள் சட்டமன்றங்களில் பங்கு பெறும் வசதியை ஏற்படுத்திய மிண்டோ மார்லி சீர்திருத்தச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
1909
Q141. முஸ்லீல் லீக், எங்கு, எப்போது யாரால் நிறுவப்பட்டது?
1906ல் – தாக்கா வில் – அகா கான் அவர்களால்.
Q142. இந்திய தலை நகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு எப்போது மாற்றப்பட்டது?
1911 – அவ்வமயம் ஹார்டிஞ்ச் பிரபு வைஸ்ராயாக இருந்தார்.
Q143. மன்னர் ஜார்ஜ் 5, மகாராணி மேரி எப்போது இந்திய விஜயம் செய்தனர்?
1911 – டெல்லி தர்பார், மன்னர் ஜார்ஜ் 5, மகாராணி மேரி முடிசூட்டு விழா.
Q144. பிளவு பட்ட இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் அணிகள் எப்போது இணைக்கப்பட்டன?
1916 – லக்னௌ மகாநாட்டில், அன்னி பெசண்ட் அம்மையார் முயற்சியால்.
Q145. "உள்ளாட்சி சங்கங்கள்" Home Rule Leagues யாரால் நிறுவப்பட்டது?
ஒன்று, பால கங்காதர திலக் மற்றொன்று அன்னி பெசண்ட் அவர்களாலும் 1916ல் நிறுவப்பட்டது.
Q146. "லக்னௌ உடன்படிக்கை" “Lucknow Pact” 1916 என்பது என்ன?
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் க்கு இடையில், ஆங்கிலேயரை இந்தியர்கள் மீது மேலும் தாராள நடவடிக்கையும், நாட்டை நடத்துவதற்கு இந்தியர்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என, இரு அணிகளும் சேர்ந்து, அதிக அழுத்தம் கொடுக்கவேண்டும் என போடப்பட்ட உடன்படிக்கை.
Q147. காந்தி இந்தியாவுக்கு எப்போது திரும்பினார்?
9.1. 1915. அதனால் தான் இந்த தேதியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1916ல் அஹமதாபாத் ல் சாபர்மதி ஆஸ்ரமத்தை நிறுவினார்.
Q148. காந்திஜி தனது சத்தியாகிரக இயக்கத்தைத் தொடங்கினார்?
ஏப்ரல் 1917 -- பீஹாரில் உள்ள சம்பரான் என்ற இடத்தில் தொடங்கினார்.
Q149. "ஆகஸ்ட் அறிவிப்பு" 1917 “August Declaration” என்பது என்ன?
படிப்படியாக நிர்வாக அதிகாரம் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் என வைஸ்ராய் செம்ஸ்ஃபோர்ட் பிரபு அறிவிப்பு.
Q150. "1919 ரௌலத் சட்டம்" என்பது என்ன" “Rowlatt Act of 1919”.
ஆங்கிலேய அரசுக்கு சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் சிறைப்பிடிக்க அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரம். வைஸ்ராய் செம்ஸ்ஃபோர்ட் காலத்தில் அறிவிக்கப்பட்டது.
Q151. ஜாலியன் வாலா பாக் நிகழ்வுக்கு முன்னால் நடந்த நிகழ்வு என்ன?
10.4.1919 -- ரௌலத் சட்டத்தைப் பயன்படுத்தி, டாக்டர் கிஸ்லு மற்றும் டாக்டர் சத்யபால் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பஞ்சாபில் பெருத்த எதிர்ப்பும் கிளர்ச்சியும் கிளம்பியது. இது வன்முறையாக மாறி, ஆங்கிலேயர் துப்பாக்கி சூட்டில் இறங்கினர். இந்த கிளர்ச்சியில் 5 ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
Q152. ஜாலியன் வாலா பாக் படுகொலை எப்போது நடந்தது, அதற்கு காரணமாக இருந்தவர் யார்?
13.4.1919 – அன்றைய தினம் பஞ்சாபியர்களின் ""பைசாகி"" திருவிழா நாள். ஆகவே, ஜாலியன் வாலா பாக் ல் ஒரு பொதுக்கூட்டம் கூடியது. அதில் ஆண், பெண், குழந்தைகள் உள்பட பல நூறு பேர் சேர்ந்து இருந்தனர். அப்போது ஆங்கிலேய ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்ற அதிகாரி, எந்த முன்னறிவிப்பும் இன்றி, துப்பாக்கி சூடு நடத்தியதால், சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த ஆங்கிலேய செயல் உலக நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். ஜாலியன் வாலா பாக் என்பது அமிர்தசரஸ் நகரில் ஒரு தோட்டம்.
Q153. ஜாலியன் வாலா பாக் படுகொலைக்குப் பிறகு ஜெனரல் ரெஜினால்ட் டையர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
அமிர்தசரஸ் கசாப்புக்காரர்.
Q154. ஜாலியன் வாலா பாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் ரெஜினால்ட் டையர் எங்கு, எவ்வாறு, யாரால் கொலை செய்யப்பட்டார்?
13.3.1940 -- அன்று, ஜெனரல் டையர், லண்டன் காக்ஸ்டன் அரங்கத்தில் ஒரு சொற்பொழிவு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சர்தார் உத்தாம் சிங் என்பவர் அவரை சுட்டுக் கொன்றார். இதற்காக, சர்தார் உத்தாம் சிங் 31.7.1940 அன்று கொல்லப்பட்டு, 19.7.1974 அன்று, அவருடைய அஸ்தி மக்கள் மரியாதை செலுத்துவதற்காக இந்தியா கொண்டுவரப்பட்டது.
Q155. கிலாஃபத் இயக்கம் என்பது என்ன?
1919-1920களில் – தெற்கு ஆசிய இஸ்லாமியர்கள், முதல் உலகப் போருக்குப் பிறகு, துருக்கிய ஆட்டோமான் ராஜ்யத்தை ஆங்கிலேயர்கள் பாதுகாக்க வேண்டும் என நடத்திய போராட்டம்.
Q156. இந்தியாவில் கிலாஃபத் இயக்கத்தை தொடங்கியவர் யார்?
முகமது மற்றும் சௌகத் அலி சகோதரர்கள். பிற்காலத்தில் இந்த இயக்கத்தை மௌலானா அபுல் கலாம் ஆஸாத் தலைம தாங்கி நடத்தினார். இந்த இயக்கத்துக்கு, இந்துக்கள், காங்கிரஸ் மற்றும் காந்திஜி ஆதரவு தெரிவித்தனர்.
Q157. காந்திஜி ஒத்துழையாம இயக்கத்தை எப்போது தொடங்கினார்?
1920. இதற்கு அலி சகோதரர்களும், மற்றும் மக்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த இயக்கம் 1992 வரை நீடித்தது.
Q158. இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது?
பூனா 1916 -- செம்ஸ்ஃபோர்டு பிரவு வைஸ்ராய்
Q159. லெஃப்டினண்ட் கவர்னராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?
எஸ்.பி. சின்ஹா, பீஹாருக்கு லெஃப்டினண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார். ஆங்கிலேய பாராளு- மன்றத்தில் இவர் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர். இவருக்கு முன்பாக தாதாபாய் நௌரோஜி. இச்சமயம் வைஸ்ராயாக இருந்தவர் கர்ஸன் பிரபு.
Q160. சௌரி சௌரா நிகழ்ச்சி என்பது என்ன? எப்போது நடந்தது?
5-2-1922 – சௌரி சௌரா, உத்திரபிரதேசத்தில் கோரக்பூர் அருகில் ஒரு கிராமம். இங்கு கிராம மக்கள் அங்கிருந்த காவல் துறை அதிகாரிகளுடன் மோதலில் இறங்கி, காவல் நிலையத்தை எரித்து, 22 காவல் துறையினர் கொலை செய்யப்பட்டனர்.
Q161. சௌரி சௌரா நிகழ்வினால் ஏற்பட்ட விளைவு என்ன?
மக்களின் இந்த நடவடிக்கையால் வெகுண்ட காந்திஜி, ஒத்துழையாம இயக்கத்தையும், பொது கீழ்ப்படியாமை இயக்கத்தையும் கைவிட்டார்.
Q162. காந்திஜியின் இயக்கங்களை கைவிடல் செயல், என்ன விளைவை ஏற்படுத்தியது?
இதன் விளைவாக, மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், என்.சி. கேல்கர் ஆகியோர் காங்கிரஸில் இருந்து, ஸ்வராஜ் கட்சி, பிறகு, காங்கிரஸ் கிலாஃபத் ஸ்வராஜ் கட்சி ஐ 1.1.1923 அன்று தொடங்கினர். இதன் நோக்கம் தேர்தல்களில் பங்கு பெறுவதே. 1925ல் சி.ஆர். தாஸ் ன் மறைவுக்கு பிறகு இந்த கட்சி மறைந்தது.
Q163. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தை நிறுவியவர் யார்? Rashtriya Swayamsevak Sangh (RSS)
கே.பி.ஹெட்ஜ்வார் -- நாக்பூர் -- 1925.
Q164. "ரௌலத் சட்டம்" “Rowlatt Act” எப்போது திரும்பப்பெற்றது?
1925 -- ரீடிங் பிரபு வைஸ்ராய் ஆக இருந்தார்.
Q165. ரீடிங் பிரபு காலத்தில் ராணுவத்தில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றம் என்ன?
இந்திய ராணுவத்தில் இந்திய அதிகாரிகளை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது.
Q166. எந்த வைஸ்ராய் "கிறித்துவ வைஸ்ராய்" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டது?
இர்வின் பிரபு.
Q167. "சைமன் கமிஷன்" “Simon Commission” என்பது என்ன?
1927ல் இந்திய அரசியல் சாசனச் சட்டங்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு குழு. இந்த குழுவில், சர் ஜான் சைமன் தலைமையில் ஏழு அங்கத்தினர் அடங்கிய குழு அமைக்கப் பட்டது. இந்த குழுவில் க்ளெமெண்ட் அட்லீ, பிற்காலத்தில் இங்கிலாந்து பிரதமர் ஆகி, இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தவர் ம் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
Q168. இந்திய தலைவர்கள் சைமன் கமிஷனை புறக்கணித்தது ஏன்?
ஏனெனில், இந்த குழுவில் ஒரு இந்தியரும் இடம் பெறவில்லை.
Q169. சைமன் கமிஷன் வருகையில் ஏற்பட்ட அசம்பாவித நிகழ்ச்சி என்ன?
30.10.1928 – இந்த எதிர்ப்பு, லாலா லஜ்பத் ராய் தலைமையில் நடந்தது. இவர், சைமன் கமிஷனுக்கு லாகூரில் ஒரு பெரிய எதிர்ப்பு போராட்டம் நடத்தினார். இதை எதிர்த்து, காவல் துறையினர் தடியடியில் ஈடுபட்டு, அதில் லாலா லஜ்பத் ராய் மிக காயப்பட்டு, பிறகு 17 நவம்பர் 1928 அன்று மரணம் அடைந்தார். அவ்வமயம் இர்வின் பிரவு வைஸ்ராயாக இருந்தார்.
Q170. சைமன் கமிஷனுக்கு எதிராக போராடிய லாகூர் கூட்டத்தில் தடியடி நடத்திய அதிகாரி யார், பிறகு அவருக்கு ஏற்பட்டது என்ன?
ஜேம்ஸ் ஸ்காட் -- உண்மையிலேயே இந்த நிகழ்வில் தடியடி உத்தரவு கொடுத்து, லாலா லஜ்பத் ராயை காயப்படுத்தியவரும் இவரே. அதனால், கோபம் கொண்ட, பகத் சிங் மற்றும் அவருடைய நண்பர்கள் சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தப்பார் மற்றும் சந்திரசேகர் ஆஸாத், ஸ்காட் ஐ கொல்ல திட்டமிட்டனர். ஆனால், லாகூரில், 17 டிசம்பர் 1928 அன்று, தவறான அடையாளத்தைக் கொண்டு, ஜான் பி. சாண்டர்ஸ் என்ற அதிகாரியை கொன்றுவிட்டனர். அதற்கு பிறகு, அவர்கள் பிரிந்து பல திசைகளில் பிரிந்து சென்று, பிற்காலத்திலும் சில் தீவிர செயல்களில் ஈடுபட்டனர். மார்ச் 1931ல் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
Q171. ஹார்கோர்ட் பட்லர் இந்திய மாகாண கமிஷன் என்பது என்ன? Harcourt Butler Indian States Commission.
1927 – இந்திய மாகாணங்களுக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் உள்ள உறவை மேம்படுத்த அமைக்கப்பட்ட ஒரு குழு.
Q172. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மகாநாடு எப்போது நடந்தது?
கல்கத்தாவில் டிசம்பர் 1928ல்.
Q173. "தீபாவளி அறிக்கை" “Deepavali Declaration” என்பது என்ன?
1929ல் இர்வின் பிரபு வால், இந்தியாவுக்கு, இங்கிலாந்து ராஜ்ய அரசாங்கத்தின் கீழ் சுதந்திரமாக இயங்கும் உரிமை Dominion status விரைவில் வழங்கப்படும் என அறிவித்தார்.
Q174. இந்திய சாசன சட்டத்தை தயார் செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக யார் நியமிக்கப்பட்டார்?
மோதிலால் நேரு. இவர் தனது அறிக்கையை 1928ல் சமர்ப்பித்தார். இதை, முஸ்லீல் லீக் மற்றும் இந்து மகா சபை நிராகரித்தது.
Q175. "பூரண சுதந்திரம்" “Poorna Swaraj’ (complete independence) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
1929 -- இந்திய தேசிய காங்கிரஸின் லாகூர் மகா நாட்டில்.
Q176. 1929 லாகூர் மகாநாட்டில், எந்த தேதியை இந்திய சுதந்திர நாளாக அறிவிக்கப்பட்டது?
26.1.1930
Q177. மூவர்ணக் கொடி முதன் முதலாக எப்போது ஏற்றப்பட்டது?
31.12.1930.
Q178. காந்திஜி எப்போது, பொது கீழ்ப்படியாமை இயக்கம் மற்றும் தண்டி யாத்திரையை துவக்கினார்?
12.3.1930
Q179. தண்டி யாத்திரை என்பது என்ன?
உப்பு சத்தியாகிரகம் எனவும் அழைக்கப்படும். இந்தியர்கள் உப்பு தயாரிப்பின் மீது விதிக்கப்பட்டு இருந்த சட்டங்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம். 12.3.1930 அன்று, காந்திஜி, அஹமதாபாத் சாபர்மதி ஆஸ்ரமத்தில் துவக்கி, தண்டி என்ற குஜராத் கடற்கரை கிராமத்தை நோக்கி பாதயாத்திரை தனது 79 தொண்டர்களுடன் தொடர்ந்தார். 6 ஏப்ரல் அன்று தண்டி சென்றடைந்து, உப்பு மீது விதிக்கப்பட்டிருந்த விதிகளை மீறினார்.
Q180. முதல் வட்ட மேஜை மகாநாடு எப்பொது நடைபெற்றது?
நவம்பர் 1930 முதல் ஜனவரி 1931 வரை. மன்னர் ஜார்ஜ் 5 ஆல் தொடங்கி வைக்கப்பட்டு, ராம்சே மெக்டொனால்ட், பிரதம மந்திரி மற்றும் இதர அந்நாட்டு/இந்திய தலைவர்கள் பங்கேற்றனர். இதில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.
Q181. காந்தி-இர்வின் உடன்படிக்கை 1931 என்பது என்ன?
5.3.1931 -- இது ஒரு அரசியல் உடன்படிக்கை. வருங்காலங்களில் இரண்டு அணிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றியது. இந்த உடன்படிக்கையில் இருந்த அடக்கங்கள் இரு அணியினருக்கும் நன்மை பயக்கக்கூடியதாக இருந்ததால், காந்திஜி பொது கீழ்படியாமை இயக்கத்தைக் கைவிட்டார். இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கங்கள்:
1. இந்தியர்கள் பொது கீழ்படியாமை இயக்கத்தைக் கைவிடவேண்டும்.
2. இந்தியர்கள வட்ட மேஜை மகாநாட்டில் பங்கு பெற வேண்டும்.
3. ஆங்கிலேயர்கள், கடுமையான சட்டங்களை திரும்ப பெற வேண்டும், வழக்குகளை திரும்ப பெற வேண்டும், மற்றும் போராட்ட கைதிகளை விடுவிக்க வேண்டும்.
4. உப்பின் மீது விதிக்கப்பட்ட வரிகளை நீக்க வேண்டும்.
Q182. இரண்டாம் வட்ட மேஜை மகாநாடு எப்போது நடந்தது?
செப்டம்பர் 1931 -- காந்திஜி பங்கேற்றார். காந்திஜிக்கும், அம்பேத்காருக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாடு நிரம்பி இருந்ததால், எந்த முடிவும் ஏற்படவில்லை. நாடு திரும்பிய பிறகு, காந்திஜி மீண்டும் பொது கீழ்ப்படியாமை இயக்கத்தை தொடங்கி, அவர் கைது செய்யப்பட்டார்.
Q183. மூன்றாம் வட்ட மேஜை மகாநாடு எப்போது நடைபெற்றது?
நவம்பர் 1932. இந்த மகா நாட்டில் எந்த இந்தியரும் பங்கு பெறவில்லை. காரணம் பெருந்- தலைவர்கள் அநேகம் பேர் சிறையில் இருந்தனர்.
Q184. ஆகஸ்ட் 1932 "" கம்யூனல் அவார்டு"" எனப்பட்ட இன அடிப்படையிலான வாக்குரிமை அறிவிப்பு என்பது என்ன?
17.8.1932 -- இங்கிலாந்து பிரதம மந்திரி ராம்சே மெக்டொனால்ட் அவர்களால் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம். இதன் படி, இந்தியாவில் உள்ள பல இன மக்களுக்கு, மக்கள் தொகை அடிப்படையில் வாக்குரிமைக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் ஒரு அறிவிப்பு. ஆங்கிலேயர்களின், இந்திய மக்களை பிரித்தாளும் கொள்கையில் இதுவும் ஒன்று. இது சர்ச்சைக்குரிய ஒன்றானது. இதன் மூலம், சிறுபான்மை இனமான, இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், மற்றும் தலித் இனத்தவருக்கு தனித்தனி வாக்குரிமை விகிதம் ஒதுக்கப்பட்டது. காந்திஜி இதை எதிர்த்தார், அம்பேத்கர் ஆதரித்தார். இதனால், காந்திஜி சாகும் வரை உண்ணாவிரதத்தை யெரவாடா சிறையில் மேற்கொண்டார். இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு, ""1932 பூனா ஒப்பந்தம்"" (காந்திஜி-அம்பேத்கர்) சீர் செய்யப்பட்டு, தலித்துக்கான தனி வாக்குரிமை நிறுத்தப்பட்டு, பொது வாக்குரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Q185. ஆங்கிலேய இந்தியாவிலிருந்து பர்மா எப்போது பிரிக்கப்பட்டது?
1935
Q186. "காங்கிரஸ் சோஷலிச கட்சி" ஐ நிறுவியவர் யார்?
ஆச்சார்ய நரேந்திர தேவ் மற்றும் ஜெயப்ரகாஷ் நாராயண் -- 1934.
Q187. இந்தியாவில் முதன் முதலாக காங்கிரஸ் அமைச்சரவை எப்போது நிறுவப்பட்டது?
1937. இந்திய அரசாங்க சட்டம் 1935ன் கீழ், 1936-37 காலத்தில், மாகாணங்களுக்கான அமைச்சரவை தேர்தல் நடைபெற்று பிப்ரவரி 1937ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, 8 மாகாணங்களில் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் 1939ல் அனைத்து அமைச்சரவைகளும் ராஜினாமா செய்தன. காரணம், இங்கிலாந்து ஜெர்மனிக்கு எதிராக இரண்டாம் உலகப் போரை, இந்திய தலைவர்களை ஆலோசிக்காமல் அறிவித்ததால்.
Q188. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்போது காங்கிரஸிலிருந்து விலகினார்?
1939
Q189. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆல் நிறுவப்பட்ட அரசியல் கட்சி எது?
ஃபார்வார்டு ப்ளாக். Forward Bloc. மே. 1939.
Q190. 1939ல் காங்கிரஸ் மந்திரி சபைகள் ராஜினாமா செய்ய காரணம் என்ன?
இரண்டாம் உலகப்போர் தொடங்கியதனால்.
Q191. 1939 டிசம்பரில் காங்கிரஸ் மந்திரிசபைகள் ராஜினமா செய்ததை முஸ்லீம் லீக் எவ்வாறு வர்ணித்தது?
""விடிவிப்பு நாள்"" Deliverance Day. காங்கிரஸ் ஆட்சியிலிருந்து இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டதாக கருதப்பட்டு இவ்வாறு அனுசரிக்கப்பட்டது.
Q192. இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டுமென முஸ்லீம் லீக் எப்போது முடிவு எடுத்தது?
முஸ்லீம் லீக் ன் லாகூர் மகாநாட்டில் -- 23.3.1940 அன்று.
Q193. "இரண்டு நாடு கோட்பாடு" இதை முன் வைத்தவர் யார்?
முகமது அலி ஜின்னா -- 1940 முஸ்லீம் லீக் லாஹூர் மகாநாட்டில்.
Q194. "ஆகஸ்ட் 1940 அறிவிப்பு" -- இதை அறிவித்தவர் யார்?
லின்லித்கௌ பிரபு. – இதன் உள்ளடக்கம் -- இந்திய சாசனத்தில் மாற்றங்கள், இந்தியர்களுக்கு அதிகாரத்தில் மேலும் சலுகைகள், இங்கிலாந்து ஆட்சியின் கீழ் ஒரு சுதந்திர நாடு Dominion status போன்றவை. காங்கிரஸ் இதை நிராகரித்து, தனி மனித சத்தியாகிரகத்தில் இறங்கியது. இதைக் கடைப்பிடிக்க வினோபா பாவே வை காந்திஜி முதலில் தேர்ந்தெடுத்தார்.
Q195. இந்தியாவுக்கு ""இங்கிலாந்தின் கீழ் சுதந்திர நாடு"" “Dominion” status என்ற அந்தஸ்தை அளிக்க எந்த குழு இந்தியா வந்தது?
1942 -- க்ரிப்ஸ் குழு - இதன் தலைமையாக ஸ்டான்ஃபோர்ட் க்ரிப்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். காங்கிரஸ் இதை நிராகரித்தது.
Q196. "இந்தியாவை விட்டு வெளியேறு" “Quit India” தீர்மானம் எப்போது எடுக்கப்பட்டது?
8.8.1942 – இந்திய தேசிய காங்கிரஸின் பாம்பே மகாநாட்டில். இதனால், காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆகவே, தொடங்கப்பட்டது தான் "" ஆகஸ்ட் புரட்சி"" அல்லது ""இந்தியாவை விட்டு வெளியேறு"" “ Quit India Movement” என்ற இயக்கம் -- 1942.
Q197. "செய் அல்லது செத்து மடி" இந்த கோஷத்தைக் கொடுத்தவர் யார்?
காந்திஜி - 1942 ல்.
Q198. "சி.ஆர். சூத்திரம்" -- CR formula என்பது என்ன?
சி. ராஜகோபாலச்சாரியார் -- 1942 -- இந்தியா & பாகிஸ்தான் என்ற இரு நாடுகளுக்கும் பொதுவான ராணுவம் மற்றும் தொலைத் தொடர்பு முறை. இதை இரண்டு பிரிவினரும் நிராகரித்தனர்.
Q199. "கப்பற்படை கலகம்" “Naval Mutiny” என்பது என்ன, எப்போது நடந்தது?
1946 – ராஜ்ய Royal Indian Navy கப்பற்படையில் பணி புரிந்து கொண்டிருந்த இந்திய சிப்பாய்கள் பணி இட நிலவரம், இனவெறி, உணவு, தவறான நடைமுறை போன்ற குறைபாடுகளை எதிர்த்து கிளர்ச்சியில் இறங்கினர். அரசியல் ஆதரவு, குறிப்பாக காந்திஜியின் ஆதரவு இல்லாததால், இந்த கிளர்ச்சி தோல்வி அடைந்தது.
Q200. "மந்திரிசபை குழு" “Cabinet Mission” – 1946 என்பது என்ன?
இந்த குழுவின் நோக்கம் ஒரு அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி, அரசியல் சாசனத்தை தயாரிப்பதற்காக அமைப்பது.
Q201. "மந்திரிசபை குழு" “Cabinet Mission” வில் இடம் பெற்றவர்கள் யார்?
மூன்று பேர் -- லாரன்ஸ் பிரபு, சர் ஸ்டான்ஃபோர்ட் க்ரிப்ஸ் மற்றும் ஏ.வி. அலெக்ஸாண்டர்.
Q202. "இடைக்கால அரசாங்கம்" “Interim Government” எப்போது அமைக்கப்பட்டது?
செப்டம்பர் 1946. அவ்வமயம் வேவல் பிரபு வைஸ்ராயாக இருந்தார்.
Q203. முஸ்லீல் லீக் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை எவ்வாறு வலியுறுத்தினர்?
17.8.1946 -- இந்த நாளை ""நேரடி நடவடிக்கை நாள்"" என அறிவித்தது. இந்த இடைக்கால அரசாங்க ஏற்பாட்டின் மீது அதிருப்தி தெரிவித்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிறகு, பங்கு கொண்டனர். ஆனால், அரசியல் நிர்ணய சபையிலிருந்து விலகி இருந்தது.
Q204. இந்தியாவின் கடைசி ஆங்கிலேய வைஸ்ராய் யார்?
மவுண்ட்பேட்டன் பிரபு.
Q205. மவுண்ட்பேட்டன் திட்டம் என்பது என்ன?
இந்தியா & பாகிஸ்தான் என பிரிப்பது. 3.6.1947 அன்று அறிவிக்கப்பட்டது.
Q206. இந்திய பாகிஸ்தான் எல்லயை முடிவு செய்ய நியமிக்கப்பட்ட குழு எது?
சர் ராட்க்ளிஃப்
Q207. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என இங்கிலாந்து பாராளுமன்றம் முடிவு செய்தது?
18 ஜூலை 1947 அன்று இந்தியாவுக்கு 15.8.1947 அன்று சுதந்திரம் அளிப்பதாக முடிவு செய்தது.
Q208. இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்த இங்கிலாந்து பிரதம மந்திரி யார், அவர் எந்த கட்சியை சார்ந்தவர்?
க்ளெமெண்ட் அட்லீ – தொழிலாளர் கட்சி
Q209. இந்தியாவில் நீண்ட நாள் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் – 1773-1785 – 12 வருடங்கள்.
Q210. குறுகிய கால ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
கேனிங் பிரபு – 1856-1857 – 1 வருடம். இதைத் தொடர்ந்து, இவர் இந்தியாவின் முதல் வைஸ்ராயாக 4 ஆண்டுகள் 1858-1862. பணியாற்றினார். ( இவரை விட குறைந்த கால பணியில் மேலும் சிலர் இருந்தனர். அவை தற்காலிக நியமனம் ).
Q211. இந்தியாவின் முதல் மற்றும் ஓரே இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
சி. ராஜகோபாலச்சாரி – 21.6.1948 முதல் 26.1.1950. (15.8.1947 -- 20.6.1948 வரை மவுண்ட் பேட்டன் பிரபு)
Q212. இந்தியாவின் கடைசி மாமன்னர் யார்?
பகதூர் ஷா ஜாஃபர் 2 -- முகலாய மன்னர் -- 1857 சிப்பாய் கலகத்துக்குப் பிறகு முகலாய மன்னர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அவர் 7.11.1862ல் மறைந்தார்.
Q213. மேயோ பிரபு காலத்தில் 1869-1872, உருவான முக்கிய அரசாங்க துறைகள் யாவை?
1.இந்திய புள்ளியியல் கணக்கு துறை
2. விவசாயம்
3. வணிகம் மற்றும்
4. ரயில்வே துறை மாகாண ரயில்வேக்கள் ஆயிற்று.
Q214. விக்டோரியா மகாராணி இந்தியாவின் ராணியாக எப்போது பொறுப்பேற்றார்?
1877 – ராஜ்ய பட்டங்கள் சட்டம் -- Royal Titles Act of 1876.
Q215. இந்திய பல்கலைக்கழக சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
1904 – சர் தாமஸ் ராலீ அவர்களின் சீர்திருத்த அறிக்கை அடிப்படையில்.
Q216. "சுதேசி இயக்கம்" எப்போது தொடங்கியது ?
1905 – வங்காள பிரிவினையால்.
Q217. மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் சர்ச்சைக்குரிய பகுதி யாது?
இந்த சீர்திருத்தத்தில், இஸ்லாமியருக்கு, அவர்களின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதால். இதை இந்துக்கள் அதிகமாக எதிர்த்தனர்.
Q218. "இந்து மகா சபை" ஐ நிறுவியவர் யார்?
1915 – மதன் மோஹன் மாளவியா மற்றும் சில பஞ்சாபி தலைவர்கள் சேர்ந்து.
Q219. எப்போது முதன் முதலாக இந்தியா மற்றும் இங்கிலாந்தில் ஒரே சமயத்தில் பொதுப் பணி தேர்வுகள் Civil Services Examintion நடத்தப்பட்டன?
1923
Q220. ராபர்ட் க்ளைவ் எதனால், போலியாக அட்மிரல் வாட்சன் அவர்களின் கையெழுத்தை, மீர் ஜாஃபர் உடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையில் போட்டார்?
வாட்சன் அவர்களுக்கு சங்கடமும் தொல்லையும் உருவாக்கும் எண்ணத்துடன்.
Q221. சிராஜ் உத் தௌலா 1756ல் ஆங்கிலேயர்களின் தொழிற்சாலையை ஏன் கைப்பற்றினார்?
சிராஜ் உத் தௌலா வின் எதிரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தது மட்டுமின்றி, அவர்களை நவாபிடம் ஒப்படைக்க மறுத்ததினால்.
Q222. எந்த முகலாய மன்னர் 1765ல் வங்காளம், பீஹார், ஒரிஸ்ஸா பகுதிகளின் நிர்வாகத்தை ஆங்கிலேயருக்கு ஒப்படைத்தார்?
ஷா ஆலாம் 2
Q223. மீர் ஜாஃபரைத் தவிர்த்து, வேறு யார், சிராஜ் உத் தௌலாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி அவரை நவாப் பதவியிலிருந்து விலக்க விரும்பினர்?
மாணிக் சந்த், ஜகத் சேத், ஓமி சந்த்
Q224. 1717ல் முகலாய மன்னர் ஃபரூக் சியார் அரசவைக்கு, யாருடைய தலைமையில் ஆங்கிலேயர்கள் விஜயம் செய்து, அவரிடம் வணிக உத்தரவைப் பெற்றனர்?
ஜான் சுர்மன். ( வங்காளம் முழுவதும் வரியில்லா வணிகம் செய்யும் உத்தரவு. இந்த மன்னரின் உத்தரவை, வங்காள நவாப் நடைமுறைப்படுத்த மறுத்து, வரி வசூலித்தனர்.)
Q225. 1773 கட்டுப்பாட்டுச் சட்டம் Regulating Act of 1773 உள்ளடக்கம் என்ன?
i) கிழக்கிந்திய நிர்வாக குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அவர்கள் இங்கிலாந்து அரசாங்கத்துக்கு தங்கள் வணிக விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும்;
ii) நிர்வாக குழுவின் கவர்னர் ஜெனரல், பாம்பே மற்றும் மதராஸ் மாகாண நிர்வாக கண்காணிப்பு பொறுப்பு அளிக்கப்பட்டார்;
iii) கிழக்கிந்திய நிறுவன ஊழியர்கள் வெகுமதிகள் பெறலாம், ஆனால் லஞ்சம் பெறக்கூடாது.
Q226. பிட்ஸ் இந்தியா சட்டம் 1784ன் முக்கிய உள்ளடக்கம் என்ன?
i) நிறுவன நிர்வாகக் குழுவில் 6 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்;
ii) இந்தியாவில் பணிப்புரியும் ஆங்கிலேய அதிகாரிகளை பணியில் அமர்த்தவும் திரும்ப இங்கிலாந்து அனுப்பவும் அதிகாரம் அளிக்கப்பட்டது;
iii) பாம்பே மற்றும் மதராஸ் மாகாண நிர்வாகம் கவர்னர் ஜெனரல் பொதுக் குழுவுக்கு, சில விவகாரங்களில் கட்டுப்பட்டு இயங்க வேண்டும்.
Q227. 1793 சாசன சட்டத்தின் முக்கிய உள்ளடக்கம் என்ன?
i) கிழக்கிந்திய நிறுவன சாசன சட்டங்கள் மேலும் 20 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது;
ii) நிறுவனத்தின் நிதி நிலையை கட்டுக்குள் கொண்டுவந்தது;
iii) கவர்னர் ஜெனரல் நிர்வாக குழுவிலிருந்து ராணுவ தளபதி நீக்கப்பட்டார்.
Q228. 1833 சாசனச் சட்டம் - இதன் உள்ளடக்கம் என்ன?
i) இந்திய வணிகம், எல்லா ஆங்கிலேயர்களுக்கும் திறந்து விடப்பட்டது;
ii) வில்லியம் கோட்டையின் தலைவர், கவர்னர் ஜெனரல் என பதவி மாற்றம் செய்யப்பட்டார்;
iii) கவர்னர் ஜெனரல் நிர்வாக குழுவில் ஒரு சட்ட உறுப்பினரும் சேர்க்கப்பட்டார்.
Q229. கல்கத்தா வில்லியம் கோட்டையின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ். .
Q230. இந்திய உச்ச நீதி மன்றத்தின் முதல் ஆங்கிலேய தலைமை நீதிபதி யார்?
எல்ஜா இம்பி. Eljah Impey.
Q231. கவர்னர் ஜெனரலாகவும் வைஸ்ராயகவும், அதுவும் தொடர்ச்சியாக, பணியாற்றிய ஆங்கிலேயர் யார்?
கேனிங் பிரபு -- கடைசி கவர்னர் ஜெனரல் 1856-1857; முதல் வைஸ்ராய் 1858-1862.
Q232. இந்தியாவில் கல்வி மேம்பாட்டுக்காக முதன் முதலில் நிதி ஒதுக்கீடு எப்போது செய்யப்பட்டது?
1813 சாசனச் சட்டம் மூலம் ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Q233. இந்திய பொதுப்பணி யில் Indian Civil service எந்த சட்டத்தின் மூலம் முதல் முறையாக நேரடி போட்டி தேர்வு மூலம் பணியமர்வு செய்யப்பட்டது?
1853 சாசனச் சட்டம். Charter Act of 1853.
Q234. எந்த அரசு நடவடிக்கை மூலம், மத்தியில் "இரு அவை" அறிமுகப்படுத்தப்பட்டது?
மாண்ட்ஃபோர்டு சீர்திருத்தம். (மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் 1919)
Q235. "இரு அவை" சட்டமன்றம் முதன்முதலில் எந்த மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
1935 – வங்காளம், உத்திரபிரதேசம், பீஹார் மற்றும் மத்திய மாகாணங்கள்.
Q236. யாருடைய காலத்தில் பொது பணி அமர்த்தலில் இந்தியர்களுக்கு சாதகமாக சிறிய மாறுதல்கள் கொண்டு வரப்பட்டன?
காரன் வாலிஸ் பிரபு 1861. பொதுப்பணி தேர்வு சட்டம் 1861 கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட விதிகள் வருமுன், பொதுபணி தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் இந்தியர்கள் ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு, ஆங்கிலேயர்களுக்கு சமமாக எல்லா பதவிகளிலும் பணியமர்த்தப்பட்டனர். இதைப் போன்று வேறு சில சிறிய மாற்றங்களும் எதிர் காலத்தில் கொண்டு வரப்பட்டன.
Q237. ""தன்னிச்சை கொள்கை"" “Laissez Fairre Policy” என்ற ஆங்கிலேய கொள்கை என்பது என்ன? (இலகுவாக சொன்னால், எந்த ஒரு செயலிலும் இரு பிரிவினருக்கும் சமமான உரிமை இருப்பது)
இந்திய மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யவும், இங்கிலாந்திலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதிலும் பல சலுகைகளை அறிமுகப்படுத்தப்பட்டது.
Q238. கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில், பொது பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வரும் இந்தியர்களுக்கு பயிற்சி அளிக்க யாருடைய முயற்சியால் ஒரு கல்லூரி நிறுவப்பட்டது?
வெல்லெஸ்லி பிரபு.
Q239. பனாரஸ் (வாரணாசி) ல் ஒரு சமஸ்கிருத கல்லூரி நிறுவப்பட்டது?
1792ல் ஜொனாதன் டங்கன் என்பவரால் நிறுவப்பட்டது.
Q240. இந்தியாவில் பெண்களுக்கு கல்வியளிக்க எப்போது அரசாங்க ஒப்புதல் கிடைத்தது?
டல் ஹௌசி பிரபு.
Q241. 1882 இந்திய கல்விக் குழு"வுக்கு Indian Education Commission தலைமையேற்றவர் யார்?
W W ஹண்டர்.
Q242. எந்த சட்டத்தின் மூலம் கல்வி இந்தியர்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது?
இந்திய அரசாங்க சட்டம் 1919 -- Government of India Act 1919.
Q243. யாருடைய காலத்தில் இந்திய நிதி நிலைமை மாகாணங்களுக்கும் பரவலாக்கப்பட்டது?
மேயோ பிரபு.
Q244. எந்த சட்டத்தின் மூலம் முதன் முதலாக சட்ட ரீதியான சட்ட மன்றம் நிறுவப்பட்டது?
1853 சாசனச் சட்டம்.
Q245. நவீன இந்தியாவில் உள்ளூர் சுய நிர்வாக அரசாங்கம் அமைய காரணமாயிருந்தவர் யார்?
ரிப்பன் பிரபு.
Q246. நில வருவாய் வசூல் செய்ய ஏல முறையை அறிமுகப்படுத்தியவர் வாரன் ஹேஸ்டிங். இந்த முறை எதை ஒத்தது?
முகலாய மன்னர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த "இஜாரா" Ijara system முறை.
Q247. ""வடிகால் சூத்திரம்"" “Drain Theory” என்பதை முன் வைத்தவர் யார்? இதன் மூலம், இந்த நாட்டிலிருந்து சொத்துகளும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு சுரண்டப்படுகிறது என்பதும் வெளியாயிற்று?
தாதா பாய் நௌரோஜி.
Q248. 1853ல் டல்ஹௌசி பிரபு, முதல் தந்தி தொடர்பை எங்கு ஏற்படுத்தினார்?
கல்கத்தா மற்றும் ஆக்ரா வுக்கு இடையில்.
Q249. யாருடைய காலத்தில், ஐரோப்பிய சிப்பாய்கள் "வெள்ளைப் புரட்சி" யை நடத்தினர்?
கேனிங் பிரபு.
Q250. டல்ஹௌசி பிரபுவால் கைப்பற்றப்பட்ட எந்த பகுதிகள், ஆங்கிலேய நீதி நிர்வாக குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டது?
பகத் மற்றும் உதய்ப்பூர்.
Q251. சிப்பாய் கலகத்தின் போது, எந்த முகலாய மன்னரின் மனைவி, ஆங்கிலேயருக்கு சாதகமாக தூது கொடுத்து வந்தார்?
ஸின்னத் மஹால், பகதூர் ஷா ஜாஃபர் 2 ன் மனைவி.
Q252. மராத்திய பேஷ்வா நானா சாஹேப் அவர்களின் முழுப்பெயர் என்ன?
தோண்டு பண்டிட் -- இவர் மராத்திய கடைசி பேஷ்வாவின் வளர்ப்பு மகன். ஆங்கிலேயர்கள், டல்ஹௌசி பிரபு, அவரை பேஷ்வாக ஏற்க மறுத்து, அவருக்கான ஓய்வூதியத்தையும் நிராகரித்தார்.
Q253. ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலில் போராடியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் தமிழ் நாட்டின் எந்த பகுதியை ஆண்டு வந்தார்?
பாஞ்சாலங்குறிச்சி -- தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.
Q254. யாருடைய சதிச்செயலால் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரிடம் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார்?
எட்டயப்பன். 1799ல் பிடிபட்டு, கயத்தார் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
Q255. 1808-1809ல் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய வேலு தம்பி என்பவர் யார்?
திருவாங்கூர் ராஜ்யத்தில் திவான் (பிரதம மந்திரி) யாக இருந்து, ஆங்கிலேயர்களின் அதிகமான நிதி நெருக்கடி கொடுத்ததால், இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட துவங்கினார்.
Q256. கிட்டூர் புரட்சி இந்திய சரித்திரத்தில் ஒரு முக்கிய இடம் பெற்றுள்ளது. கிட்டூர் என்பது எங்குள்ளது?
தார்வார் அருகில், கர்நாடகா.
Q257. வஹாபி இயக்கத்தை இந்தியாவில் நிறுவியவர் யார்?
சையத் அஹமத், பரேலி -- 1820.
Q258. குக்கா போராட்டம் என்பது எங்கு மையம் கொண்டிருந்தது?
பஞ்சாப். இந்த இயக்கம் பகத் ஜவஹர் மல் அவர்களால் தொடங்கப்பட்டது.
Q259. பழங்குடி மக்களில், சந்தால் இனத்தவர், ஆங்கிலேயருக்கு பெரும் தொல்லைகளை தொடர்ந்து கொடுத்தவர்கள். இவர்கள் பொதுவாக எந்த பகுதிகளில் வாழ்ந்தனர்?
பீஹாரின் ராஜ்மஹால் மலைப்பகுதிகளிலும், ஒரிஸ்ஸாவின் சில பகுதிகளிலும்.
Q260. செஞ்சு இன பழங்குடியினர் ஆங்கிலேயருக்கு எதிராக தீவிரமாக போராடியவர்கள். இவர்கள் எந்த பகுதியில் வாழ்ந்து வந்தனர்?
நல்லமலா மலைப்பகுதி, கர்னூல், ஆந்திரபிரதேசம்.
Q261. 1857 சிப்பாய் கலகம் ஏற்பட முக்கிய காரணம் என்ன?
இந்து முஸ்லீம் சிப்பாய்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிரான வகையில், அவர்கள் பசு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய தோட்டாக்களை கட்டாயத்தின் பேரில் பயன்படுத்த தூண்டப்பட்டனர்.
Q262. 1857 சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்த மங்கள் பாண்டே ஒரு முக்கிய நபர். அவர் எந்த ராணுவ அமைப்பில் பணியாற்றி வந்தார்?
34வது உள்ளூர் படை -- 34th Native Infantry, பாரக்பூர், வங்காளம்.
Q263. சிப்பாய் கலகத்தில், மத்திய இந்திய பகுதியில், ஆங்கிலேயர்களுக்கு அதிகமான போராட்டத்தில் ஈடுபட்டு, தொல்லை கொடுத்து வந்தவர் யார்?
தாந்தியா தோப்
Q264. சிப்பாய் கலகத்தை, "இந்திய சுதந்திரத்தின் முதல் போர்" என வர்ணித்தவர் யார்?
V.D.சவார்கர்.
Q265. "நீதி கட்சி" Justice Party ஐ நிறுவியவர்கள் யார்?
C.N.முதலியார், T.M.நாயர் மற்றும் P. தியாகராஜா செட்டி.
Q266. "சுய மரியாதை இயக்கம்" “Self Respect Movement” -- தொடங்கியவர் யார்?
E.V. ராமசாமி நாயக்கர் -- "பெரியார்" என அழைக்கப்படுபவர். (E= ஈரோடு, V=வெங்கட)
Q267. E.V. ராமசாமி நாயக்கரால் தொடங்கப்பட்ட ""சுய மரியாதை இயக்கம்"" இப்போது எந்த பெயரில் இயங்குகிறது?
திராவிட கழகம்.
Q268. வளமான வணிகத்தில் ஈடுபட்டுவரும் நாடார்கள் சமூகம், முன்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
ஷானான் -- Shanans.
Q269. நாராயண குரு (நானு ஆசான்) என்பவர் கேரள மக்களின் ஒரு சமூக ஆசான்/குரு. அவர் தொடங்கிய இயக்கத்தின் பெயர் என்ன?
எழவா இயக்கம். “Ezhava Movement”.
Q270. ""மஹர் இயக்கம்"" “Mahar Movement” எங்கு மையம் கொண்டிருந்தது, அதை வழி நடத்தியவர் யார்?
மகாராஷ்டிரா -- B.R அம்பேத்கர் தலைமையில். தீண்டாமையை எதிர்த்து.
Q271. இண்டிகோ பயிரிடுதலுக்கு எதிராக முதன் முதலாக எங்கு போராட்டம் துவங்கியது?
வங்காளம் – 1859-1860.
Q272. பாப்னா இயக்கம் என்பது என்ன?
1872-1876 கிழக்கு வங்காளத்தின் பாப்னா மாவட்டத்தில், ஜமீந்தார்களால் விவசாய தொழிலாளிகளுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்ட இயக்கம்.
Q273. சம்பரன் சத்தியாகிரகம் என்பது என்ன?
1914-1918 – கட்டாயப்படுத்தி இண்டிகோ பயிரிடுவது மற்றும், அதிகமான வரி/வருவாய் பளுவை ஜமீந்தார்களும், ஆங்கிலேயர்களும் திணித்ததை எதிர்த்து நடத்தப்பட்ட இயக்கம். காந்திஜி இந்த இயக்கத்தில் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Q274. மாப்ளா இனத்தவர் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்?
கேரளாவின் வடக்கு பகுதியில் வாழ்ந்த விவசாய மக்கள்.
Q275. ஒடுக்கு முறைக்கும் ஜமீந்தார்கள்/ஆங்கிலேயர்களின் சுரண்டல் நடவடிக்கைகளை எதிர்த்து மாப்ளா புரட்சி எப்போது நடை பெற்றது?
1921 .
Q276. 1928 - பர்தோலி சத்தியாகிரகம் என்பது என்ன?
பர்தோலி மாவட்டம், குஜராத். 1927/1928 களில் ஆங்கிலேயர்கள் நில வருவாயை திடீரென 22% ஏற்றியதற்கு எதிராக நடத்தப்பட்ட இயக்கம்.
Q277. அகில இந்திய விவசாயிகள் சங்கம் -- நிறுவியவர்/கள் யார்?
என்.ஜி. ரங்கா -- ஆந்திரபிரதேசம். 1935-1936.
Q278. 1857 சிப்பாய் கலகத்தின் போது, இந்திய, ஆங்கிலேய சிப்பாய்களின் இடையே இருந்த விகிதாச்சாரம் என்ன?
ஆறுக்கு ஒன்று. (6:1)
Q279. என்ஃபீல்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட க்ரீஸ் தடவிய தோட்டாக்கள் எப்போது ஆங்கிலேய இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
ஜனவரி 1857.
Q280. 1857 சிப்பாய் கலகத்தை டெல்லியில் வழி நடத்தியவர் யார்?
ஜெனரல் பக்த் கான்.
Q281. 1857 சிப்பாய் கலகத்தை கான்பூரில் வழி நடத்தியவர் யார்?
நானா சாஹேப், ராவ் சாஹிப் மற்றும் தாந்திய தோப்
Q282. தமிழ்நாட்டின் சீர்திருத்தவாதி பெரியார் நடத்திய தமிழ் பத்திரிகையின் பெயர் என்ன?
குடியரசு
Q283. பெரியார் நடத்திய இயக்கம் எந்த இந்த மத நூலை எதிர்த்து, அந்த நூலை எரிக்கத் தொடங்கினர்?
மனு ஸ்மிரிதி.
Q284. கேரளாவில், அரசாங்க உத்தியோகங்களில், மற்றும் அரசியலில் பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, முதலில் போராட்டம் துவக்கியவர் யார்?
C.V.ராமன் பிள்ளை -- நாயர் இனத்தைச் சேர்ந்தவர் .
Q285. நாயர் குல மக்களின் ராணுவ சாதனைகளை பாராட்டும் வகையில், சி.வி.ராமன் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட புகழ்பெற்ற நூல் எது?
மார்த்தாண்ட வர்மா
Q286. நாயர் குல மக்களின் எந்த பிற்கால தலைவர் ""ஸ்வேதேஷிபிமானி"" என்ற வன்தாக்கு தினசரியை நடத்தினார்?
ஏ.கே.ராமகிருஷ்ணபிள்ளை.
Q287. "நாயர் சேவா சங்கம்" நிறுவியவர் யார்?
கேரளாவில் NSS என அழைக்கப்படுகிறது. 1914ல் பத்மநாப பிள்ளை என்பவரால் துவங்கப்பட்டது.
Q288. இண்டிகோ விவசாயிகளின் குறைகளை விசாரிக்க இண்டிகோ கமிஷன் எப்போது நிறுவப்பட்டது?
1869
Q289. வங்காள குத்தகைதாரர் சட்டம் 1885 இயற்றப்பட்டதின் நோக்கம் என்ன?
வங்காளத்தில், ஜமீந்தார்களால் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிகளை நீக்கவே.
Q290. மங்கல் பாண்டை வை படுகாயப்படுத்திய ஆங்கிலேய அதிகாரி பெயர் என்ன?
Lt. Baugh.
Q291. மீரட் ல் நடந்த சிப்பாய் கலகத்தின் போது கொலை செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரி யார்?
Col. ஃபின்னிஸ்.
Q292. 1857ல், டெல்லியில், கலகக்காரர்களிடமிருந்து தப்பித்து செல்லும் போது ஆயுதக் கிடங்கை கொளுத்தி விட்டுச் சென்ற ஆங்கிலேய அதிகாரி யார்?
லெஃப். வில்லோபி.
Q293. சிப்பாய் கலகத்தை அடக்கி, டெல்லியைக் கைப்பற்றி, பகதூர் ஷா ஜாஃபரை பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவருடைய மூன்று மகன்களையும் கொன்ற ஆங்கிலேய அதிகாரி யார்?
லெஃப். ஹாட்சன்.
Q294. 1857 சிப்பாய் கலகத்தில், டெல்லி கலகத்தை முன் நின்று நடத்திய பக்த் கான் பற்றி ……
1. ஆங்கிலேய ராணுவத்தில் கீழ்மட்ட சுபேதார் பதவியில் இருந்தவர்;
2. பகதூர் ஷா ஜாஃபரை தலைமையாகக் கொண்டு சிப்பாய் கலகத்தை தானாகவே முன் நின்று நடத்தியவர்.
3. டெல்லியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகு, இவர் ஆவாத் க்கு தப்பிச்சென்று, தனது இறுதி நாள் வரை ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார்.
Q295. இஸ்லாமிய மத குரு மௌல்வி அஹமதுல்லா ஆங்கிலேயர்களுக்கு எதிராக எவ்வகையில் போராடினார்?
1. 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்பாகவே, ஃபைஸாபாத் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு சிறிய அளவிலான போராட்டம் நடத்தினார்.
2. சிப்பாய் கலகத்தின் போது லக்னௌ பகுதி போராளிகளை வழிநடத்தினார்.
Q296. 1857 சிப்பாய் கலகத்தில் தாந்தியா தோப் ன் பங்கு பெரியது என்பது வரலாறு. அவருடைய சில நடவடிக்கைகளை கூறுக.
1. கான்பூரை ஆங்கிலேயர்களிடம் கைவிட்ட பிறகு, குவாலியரிலிருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி வந்த ராணி லக்ஷ்மி பாய் உடன் சேர்ந்து போராடினார்.
2. குவாலியரிலும் தோல்வியை சந்தித்த உடன், மத்திய இந்தியாவுக்கு தப்பிச் சென்று, தனியாகவே ஆங்கிலேயருக்கு எதிராக, கொரில்லா போர் முறை மூலம் தாக்குதல்களை நடத்தி வந்தார்.
3. அவருடைய இயற்பெயர் ராமச்சந்திர பாண்டுரங் தோப்.
4. மான்சிங் என்ற நார்வார் பகுதி மன்னரால் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு 18.4.1959 அன்று தூக்கிலிடப்பட்டார்.
Q297. 1857 சிப்பாய் கலகத்தில் எவ்வகையான மக்கள் பங்குகொண்டனர்?
விவசாயிகள், கலைஞர்கள், முன்னாள் ஜமீந்தார்கள், மற்றும் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஆட்சியாளர்கள்.
Q298. 1857 சிப்பாய் கலகத்தை அடக்க உதவிய இந்திய மன்னர்கள், ஆட்சியாளர்கள் யாவர்?
1. ஹைதராபாத் நிஸாம்;
2. குவாலியர் சிந்தியா;
3. இந்தூர் ஹோல்கர்;
4. காஷ்மீர் குலாப் சிங் மற்றும்
5. ஜோத்பூர் ராஜா.
Q299. எந்த சிறு மன்னர் பகுதி பிரதம மந்திரிகள், சிப்பாய் கலகத்தின் போது ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தனர்?
சர் திங்கர் ராவ்., சர் சாலார் ஜங்., மற்றும் சர் ஜங் பகதூர்.
Q300. 1857 சிப்பாய் கலகத்தின் போது பங்கு பெறாத பகுதிகள் யாவை?
வங்காளம், மதராஸ், பாம்பே, மேற்கு பஞ்சாப், மற்றும் ராஜபுதனா பகுதிகள்.
Q301. 1857 சிப்பாய் கலகம் தோல்வியுற முக்கியமான காரணங்கள் யாவை?
1. சரியான திட்டமிடாதது; 2. ஒழுங்கின்மை; 3. சரியான ஒருங்கிணைந்த தலைமை இல்லாதது; 4. பழங்கால ஆயுதங்களை பயன்படுத்தல்.
Q302. 1857 சிப்பாய் கலகத்தை ஆங்கிலேயர்கள் அடக்க உதவிய காரணிகள் யாவை?
1. அதிகமான ஆள்/ஆயுத பலம்;
2. நவீன ஆயுதங்களும், ராணுவ நுணுக்கங்களும்;
3. இந்திய மன்னர்களின் உதவி;
4. ஐரோப்பாவில் கிரிமியன் போர் முடிந்ததால், தங்கள் படையை இந்தியாவுக்கு கொண்டு வர முடிந்தது.
Q303. 1857 சிப்பாய் கலகத்திற்கு பிறகு டெல்லி கைப்பற்றிய பிறகு, ஆங்கிலேயர்களால் ஆயரக்கணக்கான பொது ஆண் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நேரில் கண்ட உருது கவிஞர் யார்?
மிர்ஸா காலீப்.
Q304. எந்த ஆங்கிலேய ராணுவ தளபதி, ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் ஐ, மிக வீரமான மற்றும் சிறந்த தலைவர் என வர்ணித்தார்?
சர் ஹ்யூ ரோஸ்.
Q305. 1857 சிப்பாய் கலகத்தைப் பற்றி, கீழ்க்கண்ட கூற்றுகளை கூறியவர் யார்? "" எந்த நேரத்திலும் ஆங்கிலேயர்களை நோக்கி அன்பான பார்வை இருந்ததில்லை. அவர்களுடைய கண்களில் தெரிந்த வெறி மொழி; யார் அதை சந்தேகப்படக் கூடும்; அந்த பார்வையை வேறு யாரிடம் காண முடியும்? “ In no instance is a friendly glance directed to the white man’s carriage…oh! that language of the eye! Who can doubt? Who can represent it?”
W.H.ரஸ்ஸல்.
Q306. 1857 சிப்பாய் கலகத்தைப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் யாவை?
1. இந்திய சுதந்திரப் போர் The Indian War of Independence -- V.D.Savarkar;
2. இந்திய கலகத்தின் வரலாறு History of Indian Mutiny -- T.R.Holmes;
3. இந்திய சிப்பாய் கலகத்தின் வரலாறு A History of Sepoy War in India -- Sir J.W.Kaye;
4. இந்திய கலகம் - 1857 Indian Mutiny of 1857 -- G.B.Malleson;
5. சிப்பாய்கள் புரட்சி -- காரணங்களும், விளைவுகளும் The Sepoys Revolt – Its causes and concerns -- H.Mead;
6. 1857 -- Eighteen Fifty Seven -- S.N. Sen.
Q307. "பாகல் பந்தி" இயக்கம் என்பது என்ன?
18ம் நூற்றாண்டில் வங்காளத்தின் வடக்கு மைமென்சிங் மற்றும் ஷேர்பூர் பகுதிகளில் இயங்கிவந்த, கரீம் ஷா என்பவரால் நிறுவப்பட்ட ஒரு ஆன்மீக இயக்கம்.
Q308. இந்தியாவில் வஹாபி இயக்கம் எந்த பகுதிகளில் இயங்கியது?
பீஹார், வங்காளம், பஞ்சாப், வடமேற்கு எல்லைப் பகுதி, டெக்கான் -- குறிப்பிட்டுச் சொன்னால், இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகளில்.
Q309. வஹாபி இயக்கம் அடக்கப்பட்டவுடன், ஆங்கிலேயர்கள் வஹாபி இயக்கத் தலைவர்கள் விசாரணையை பல இடங்களில் நடத்தினர். அந்த இடங்கள் யாவை?
அம்பாலா, பாட்னா, மால்டா மற்றும் ராஜ்மஹால்.
Q310. பஞ்சாப் குக்கா இனத்தவர், எந்த சீக்கிய குருவை உண்மையான குரு என கூறிக் கொண்டனர்?
குரு கோவிந்த் சிங்.
Q311. ஆரோன் என்ற பழங்குடி மக்களின் புரட்சியை வழி நடத்தியவர் யார்?
ஆரோன் இனமக்கள் ஜார்கண்ட், ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், பீஹார் மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளில் வாழ்ந்தனர். ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியில் பிக்கு பகத் என்பவர் இவர்களை வழி நடத்தினார்.
Q312. மனித நரபலி கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த எந்த பழங்குடி இன மக்களை மாற்ற ஆங்கிலேயர்கள் முயற்சி செய்த போது எதிர்த்தனர்?
கோண்ட்
Q313. எந்த பழங்குடி இன மக்கள் தங்கள் பகுதியில் கிறித்துவ இன போதகர்கள் நடவடிக்கை நடப்பதை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர்?
முண்டா இயக்கம். (முண்டா இனமக்கள் சத்தீஸ்கரில் அதிகம் உள்ளனர்)
Q314. தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட ""மஹர்"" இன மக்களின் இயக்கத்தின் முதல் தலைவர் யார்?
கோபால் பாபா வலங்கர். பிறகு B.R. அம்பேத்கர்.
Q315. நேரு அறிக்கையின் மீது பேச்சு வார்த்தையில் மோதிக் கொண்ட இரு தலைவர்கள் யாவர்?
முஸ்லீம் லீக் முகமது அலி ஜின்னாவும், இந்து மகா சபையின் M.R.ஜெயகரும்.
Q316. 1928 அமைக்கப்பட்ட ஆந்திர மாகாண விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் யார்?
N.G. ரங்கா.
Q317. தென்இந்திய விவசாயிகள் மற்றும் விவசாய உழியர்கள் கூட்டமைப்பு எப்போது எங்கு நிறுவப்பட்டது?
1935 – மதராஸ்.
Q318. அகில இந்திய விவசாயிகள் சபை எப்போது எங்கு நிறுவப்பட்டது?
1936 – லக்னௌ.
Q319. அகில இந்திய விவசாயிகள் சபை கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் யார்?
ஸ்வாமி சகஜானந்தா.
Q320. அகில இந்திய விவசாயிகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் முதல் தேதி.
Q321. ஐரோப்பிய இண்டிகோ பயிர் செய்பவர்களிடம், வங்காள இண்டிகோ பயிர் நிலங்களில் பணி புரிந்த தொழிலாளிகளின் நிலை பற்றி, யார் என்ன பெயர் கொண்ட நாடகத்தை மேடையேற்றினார்?
1860 – "நீல் தர்பன்" -- எழுதி மேடையேற்றியவர் தீனபந்து மித்ரா.
Q322. இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்திஜியின் வருகை எவ்வாறு வெளிப்பட்டது?
சம்பரான் சத்தியாகிரகம், பீஹார்.
Q323. சம்பரான் சத்தியாகிரகத்தில், காந்திஜியுடன் சேர்ந்த தலைவர்கள் யாவர்?
ராஜேந்திர பிரசாத், ஜே.பி.கிருபளானி, மஸர் உல் ஹக் மற்றும் மகாதேவ் தேசாய்.
Q324. தொழிற்சாலை கமிஷன் எப்போது அமைக்கப்பட்டது?
1875
Q325. தொழிற்சாலை சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
1881
Q326. முதல் முறை அறிவிக்கப்பட்ட 1881 தொழிற்சாலை சட்டத்தின் முக்கிய சாராம்சங்கள் என்ன?
1. 7 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை பணியமர்த்தக்கூடாது.
2. 7 முதல் 12 வயதுக்குள்ளான குழந்தைகளை 9 மணி நேரத்துக்கு மேல் பணியமர்த்தக்கூடாது. பெரும் இயந்திரங்களை இயக்க அனுமதிக்க கூடாது.
3. மாதத்திற்கு நான்கு நாட்கள் விடுமுறை. இரண்டு பணி நேரத்துக்கு இடையில் ஒரு மணி நேர இடைவெளி கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.
4. பெரிய இயந்திரங்கள் மற்றும் ஆபத்து விளைவிக்கக்கூடிய இயந்திரங்களில், ஆபத்து ஏற்படாத வண்ணம், தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
5. மாகாணங்கள், இந்த விதிகள் சரிவர கடைப்பிடிக்கப்படுவதை கண்காணிக்க தகுந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
6. எந்த தொழிற்சாலை, இயந்திர வழியிலோ அல்லது நீராவி போன்ற சக்திகளால், வருடத்தில் குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் இயக்கப்பட்டு, அங்கு 100 பேருக்கு மேல் பணி புரிந்தால், அது, ஒரு தொழிற்சாலை என உறுதியாகும்.
Q327. இரண்டாவது தொழிற்சாலை கமிஷன் மற்றும் சட்டம் இயற்றப்பட்டது?
1884ல், இரண்டாவது தொழிற்சாலை கமிஷன் அமைக்கப்பட்டு, வேலைநேரம், ஓய்வு, விடுமுறை போன்ற விஷயங்கள் மேம்படுத்தப்பட்டு 1891ல் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், வயது வந்தோருக்குண்டான எந்த சலுகைகளும் விவாதிக்கப்பட்டு மேம்படுத்தப்படவில்லை. அதனால் உருவானதே நம் நாட்டில் தொழிற்சங்க நடவடிக்கைகள். (இதைப்பற்றி இந்திய சட்டங்கள் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது).
Q328. சுதந்திர போராட்டத்தின் ஒரு அங்கமான தனி மனித சத்தியாகிரகத்துக்கு யாரை காந்திஜி தேர்வு செய்தார்?
முதலில் வினோபா பாவே, இரண்டாவதாக் ஜவஹர் லால் நேரு.
Q329. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?
1830லேயே ராஜா ராம் மோஹன் ராய் மற்றும் துவாரகநாத் தாகூர் இந்த அமைப்பதென முடிவு செய்தனர். ஆனால், 1861ல் தான் இந்த அமைப்பு, லாகூரில் நவீன் சந்திர ராய் அவர்களால் நிறுவப் பட்டது. இருப்பினும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் தான் இந்த அமைப்பை நிறுவியதாக கருதப்படுகிறது.
Q330. ராமகிருஷ்ண மடாலயத்தை (மிஷன்) நிறுவியவர் யார்?
சுவாமி விவேகானந்தர் – 1.5.1897 – மேற்கு வங்காளத்தில் பேலூர் என்ற இடத்தில் தலைமையகம் உள்ளது.
Q331. ஆர்ய சமாஜத்தை நிறுவியவர் யார்?
சுவாமி தயானந்தா – 10-4-1875.
Q332. இந்திய தேசிய காங்கிரஸ் ஐ நிறுவியவர் யார்?
டிசம்பர் 1885ல், ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற ஆங்கிலேயர், தாதாபாய் நௌரோஜி, தீன்ஷா வாச்சா, உமேஷ் சந்திர பானர்ஜி, சுரேந்திர நாத் பானர்ஜி, மன்மோஹன் கோஷ், மகாதேவ் கோவிந்த் ரானடே, மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோர் இணைந்து நிறுவினர். இவர்கள் அனைவருமே Theosophical Society ன் உறுப்பினர்கள்.
Q333. காங்கிரஸ் கட்சியின் முதல் மகாநாடு எங்கு நடைபெற்றது?
பாம்பே -- டிசம்பர் - 1885 – 72 உறுப்பினர்கள் பங்கேற்றனர். .
Q334. இந்திய தேசிய காங்கிரஸ் ன் முதல் தலைவர் யார்?
உமேஷ சந்திர பானர்ஜி
Q335. சுய ஆட்சி வேண்டுமென முதன் முதலில் கோஷம் எழுப்பியவர் யார்?
1905ல் கோபாலகிருஷ்ண கோகலே, 1906ல் தாதாபாய் நௌரோஜி.
Q336. காங்கிரஸ் கட்சியின் மிதவாத போராளிகள் எனப்பட்டவர்கள் யாவர்?
தாதா பாய் நௌரோஜி, M.G.ராணடே, சுரேந்திரநாத் பானர்ஜி, ஃபிரோஸ்ஷா மேத்தா, பஹ்ருத்தீன் தயாப்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே, தீன்ஷா வாச்சா, ஆனந்த மோஹன் போஸ், ராஷ்பீஹாரி போஸ்.
Q337. ஆங்கிலேயர்களின் "வடிகால் திட்டம்" பற்றி “Drain Theory” எடுத்துக்கூறியவர் யார்?
தாதா பாய் நௌரோஜி – ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்தியாவின் சொத்தை கொள்ளையடிக்கின்றனர் என்று எடுத்துக் கூறினார்.
Q338. ""சுயராஜ்யம் என்பது ஒவ்வொரு இந்தியனின் பிறப்புரிமை, ஆங்கிலேயர்கள் கொடுக்கும் அன்பளிப்பு அல்ல"" எனக் கூறியவர் யார்?
பால கங்காதர திலக் (பால கங்காதர திலக்)
Q339. "தீவிர தேசிய வாதிகள்" “extremists” எனக் கருதப்பட்டவர்கள் யாவர்?
பாலகங்காதர திலக், லாலா லஜ்பத் ராய், பிபின் சந்திர பால், அரவிந்த கோஷ்.
Q340. மகாராஷ்டிராவின் (இன்றும்) புகழ் பெற்ற கணபதி விழாவை தொடங்கி வைத்தவர் யார்?
பால கங்காதர திலக் -- 1893
Q341. எந்த சுதந்திர போராட்ட தலைவர் ""சிவாஜி விழா"" வைத் தொடங்கி, இந்து மக்களின் ஒற்றுமையையும், தேசபற்றையும் மேம்படுத்தினார்?
பால கங்காதர திலக் -- 1895.
Q342. ""டெக்கான் கல்விக் கழகம்"" Deccan Education Society தொடங்கி, இந்திய தேசிய கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
பால கங்காதர திலக். இத்திட்டத்தின் கீழ் இவர் தொடங்கிய புதிய ஆங்கில பள்ளி, பிற்காலத்தில் ஃபெர்கூஸன் கல்லூரி, பூனா ஆனது.
Q343. பால கங்காதர திலக் தொடங்கிய பத்திரிகைகள் யாவை?
"மராட்டா" “Maharatta”(ஆங்கிலம்) மற்றும் "கேசரி" “Kesari” (மராத்தி).
Q344. பால கங்காதர திலக் தனது ""உள் ஆட்சி சங்கம்"" “Home Rule Movement” எப்போது தொடக்கினர்?
1916. {இவருக்கு முன்பாக 1914ல் லாலா லஜ்பத் ராய் அமெரிக்காவில் தொடங்கினார். இந்தியாவில் 1916ல் அன்னி பெசண்ட் அம்மையாரும் தொடங்கினார்.}
Q345. "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதைப் பெற்றே தீருவேன்“ இக்கூற்று யாருடையது?
பாலகங்காதர திலக்
Q346. ஆங்கிலேயர்களின் வங்காள பிரிவினையை எதிர்த்து போராடிய பால கங்காதர திலக் கைது செய்யப்பட்டு எந்த சிறையில் 6 வருடங்களுக்கு அடைக்கப்பட்டார்?
மண்டாலே சிறைச்சாலை, பர்மா.
Q347. லாலா லஜ்பத் ராய் எந்த சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டார்?
பஞ்சாப் சிங்கம் (Punjab Kesari (Lion of Punjab)
Q348. லாலா லஜ்பத் ராய், சிறைவாசம் முடித்து வந்து எங்கு சென்றார்?
அமெரிக்கா சென்று அங்கு 1914ல் உள் ஆட்சி சங்கம் Home Rule League தொடங்கினார்.
Q349. லாலா லஜ்பத் ராய் ன் இலக்கிய பங்களிப்பு என்ன?
"பஞ்சாபி" “Punjabee” என்ற தினசரியையும், "மகிழ்ச்சியற்ற இந்தியா" “Unhappy India” என்ற நூலும்.
Q350. லாலா லஜ்பத் ராய் எவ்வாறு இறந்தார்?
31.10.1928 அன்று லாகூரில் சைமன் கமிஷனுக்கு எதிராக போராட்டம் நடத்தும் போது, ஆங்கிலேய காவல் துறையினரின் தடியடியினால் காயப்பட்டு, 17.11.1928 அன்று இறந்தார்.
Q351. "இந்திய புரட்சி சிந்தனை தந்தை" “Father of Revolutionary Thought in India” எனப்படுபவர் யார்?
பிபின் சந்திர பால்.
Q352. பிபின் சந்திர பால் அவர்களின் பத்திரிகை பங்களிப்பு என்ன?
""பரிதர்ஷக் “Paridarsak”, என்ற வார பத்திரிக்கையும், ""வங்காள மக்கள் கருத்து"" “Bengal Public Opinion” மற்றும் “Tribune”. என்ற தினசரியில் உதவி ஆசிரியராகவும், பிறகு ""புதிய இந்தியா"" “New India” என்ற தனது சொந்த தினசரியையும் தொடங்கினார்.
Q353. எந்த பத்திரிக்கையின் மூலம், சுதந்திர போராட்டத்தின் போது, மக்களிடையே தீவிர வாத எண்ணங்கள் பெரிய அளவில் பரவிய்து எனக் கருதப்படுகிறது?
வந்தே மாதரம் -- BANDE MATARAM – 1906ல் பிபின் சந்திர பால் மற்றும் அரவிந்த கோஷ் அவர்களால் நிறுவப்பட்டது.
Q354. பிபின் சந்திர பால் ஆங்கிலேயர்களால் எதனால் 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்?
வந்தே மாதரம் தேச துரோகம் வழக்கில், அரவிந்த கோஷ் க்கு எதிராக சாட்சியம் சொல்ல மறுத்ததால்.
Q355. ""பழைய தீபங்களுக்கு புதியது"" “New lamps for Old” என்ற தலைப்பில் ஒரு தொடர் 1893-1894 களில் ஒரு பத்திரிக்கையில், எழுதப்பட்டது. அது என்ன?
அரவிந்த கோஷ் அவர்களால், வந்தே மாதரம் பத்திரிக்கையில், காங்கிரஸின் மித வாத கொள்கைகளைப் பற்றி எழுதப்பட்டது.
Q356. "அமைதியான எதிர்ப்பு “Passive Ressistance” என்ற தத்துவத்தை பரப்பியவர் யார்?
அரவிந்த கோஷ். இந்த தத்துவத்தைப் பற்றி வந்தே மாதரம் பத்திரிக்கையில் 1907ல் தொடர்ந்து எழுதினார்.
Q357. எந்த நிகழ்வுக்குப் பிறகு, அரவிந்த கோஷ் பாண்டிச்சேரிக்கு தப்பி சென்றார்?
ஆங்கிலேய அதிகாரி கென்னடி கொலை -- அலிபூர் குண்டு வெடிப்பு வழக்கு எனப்படும்.
Q358. பாண்டிச்சேரியில் அரவிந்த கோஷ் நிறுவிய ஆன்மீக மையம் எது?
அரவிந்தர் ஆஸ்ரமம். -- Aurobindo Ashram. நவம்பர் 1926ல் நிறுவப்பட்டது.
Q359. அரவிந்த கோஷ் அவர்களின் இலக்கிய படைப்புகள் யாவை?
""சாவித்திரி"" “Savitri” ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நிண்ட கவிதை தொகுப்பு. இதைத் தவிர்த்து, ""ஆன்மீக வாழ்வு"" “The Divine Life”. என்ற புத்தகத்தையும் எழுதினார்.
Q360. வங்காளப் பிரிவினை எப்போது அறிவிக்கப்பட்டு எப்போது நடைமுறைக்கு வந்தது?
4 ஜூலை 1905ல் அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 16 1905 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
Q361. "வந்தே மாதரம்" கோஷம் எப்போது கடைபிடிக்கப்பட்டது?
கல்கத்தா நகரில் ஃபெடரல் அரங்கம் என்ற இடத்தில் நடந்த ஒரு எதிர்ப்பு கூட்டத்தில் 16 அக்டோபர் 1905 அன்று இது ஏற்கப்பட்டது.
Q362. "லால், பால், பால்" “Lal-Bal-Pal” என்ற சுருக்கத் தொடர் யாரைக் குறிக்கிறது?
லால் -- லாலா லஜ்பத் ராய்; பால் -- பாலகங்காதர திலக்; பால் -- பிபின் சந்திர பால்
Q363. வந்தே மாதரம் தேச துரோக வழக்கு “Bande Mataram Sedition Case” யாருக்கு எதிரான வழக்கு?
அரவிந்த கோஷ் -- Aurobindo Ghosh. இந்த பத்திரிக்கையில் அவர் எழுதிய தேசப்பற்று கட்டுரைகள் தேச துரோக செயல்கள் என ஆங்கிலேயர்களால் கருதப்பட்டது.
Q364. ஆங்கிலேயர்கள் இந்து முஸ்லீமை பிரிக்க நினைத்திருந்த வேளையில், இரு பிரிவினர் இடையில் ஒரு உடன்படிக்கை 1916ல் ஏற்பட்டது. அது என்ன?
1916 லக்னௌ உடன்படிக்கை -- இந்திய தேசிய காங்கிரஸ் - முஸ்லீம் லீக் இடையில்
Q365. இந்து முஸ்லீமுக்கிடையில் உடன்படிக்கை ஏற்பட காரணமாயிருந்தவர் யார்?
பால கங்காதர திலக் -- இரு பிரிவினருக்குமிடையில் ஒரு பொதுவான அரசியல் சீர்திருத்த நடவடிக்கை எடுக்க.
Q366. மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1919
Q367. அன்னி பெசண்ட் அம்மையார் உள் ஆட்சி சங்கம் Home Rule League தொடங்க எது? தூண்டியது?
அயர்லாந்தில் இதே போன்ற இயக்கம் நடந்தது.
Q368. இந்தியாவில் இரண்டு உள் ஆட்சி சங்கம் இயங்கிய நிலையில், அவை எவ்வாறு இயங்கின?
பால கங்காதர திலக் ன் இயக்கம் மகாராஷ்டிரா மற்றும் மத்திய இந்தியா பகுதிகளில் இயங்க, அன்னி பெசண்ட் அம்மையார் இயக்கம் எஞ்சிய இந்தியா முழுவதும் இயங்கியது.
Q369. பால கங்காதர திலக் யாருடன் வழக்கில் ஈடுபட்டார்?
வாலண்டின் சிரோல் -- ஆங்கிலேய எழுத்தாளர். இவர் தன்னுடைய ""இந்திய அமைதியின்மை"" “Indian Unrest” என்ற புத்தகத்தில், இந்தியர்களைப் பற்றியும், இந்திய சுதந்திர போராட்டத்தைப் பற்றியும் தரக்குறைவாக எழுதியிருந்தார். திலகரை ""இந்திய அமைதியின்மையின் தந்தை"" எனக் குறிப்பிட்டிருந்தார்.
Q370. இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட போது, இங்கிலாந்தில் உள்துறை செயலராக இருந்தவர் யார்?
க்ராஸ் பிரபு.
Q371. எந்த வைஸ்ராய் தனது சொந்த கைதியாலேயே அந்தமானில் கொல்லப்பட்டார்?
மெயோ பிரபு. அந்த சிறைச்சாலையை பார்வையிடும் போது, அங்கு கைதியாய் இருந்த ஷேர் அலி அஃப்ரிதி என்பவரால், 8.2.1872 அன்று கொல்லப்பட்டார்.
Q372. இந்திய பத்திரிக்கை தொழிலுக்கு சுதந்திரம் பெற்று தந்தவர்கள் என கருதப்படுபவர்கள் யாவர்?
1. சர் சார்லஸ் மெட்கால்ஃபே 2. மெக்காலே பிரபு.
Q373. "வாய்ப்பூட்டு சட்டம்" “Gagging Act” என அழைக்கப்பட்ட சட்டம் எது?
தாய் மொழி பத்திரிக்கைச் சட்டம் -- 1878.
Q374. தாய் மொழி பத்திரிக்கை சட்டம் Vernacular Press Act 1878 யாரால் திரும்பப் பெறப் பட்டது?
ரிப்பன் பிரபு -- 1882.
Q375. விக்டோரியா மகாராணி இந்தியாவின் மகாராணியாக பதவி ஏற்கும் விழா ""டெல்லி தர்பார்"" யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது?
லிட்டன் பிரபு.
Q376. எந்த வைஸ்ராயின் நடவடிக்கைகள், இந்திய தேசிய இயக்கத்துக்கு ஒரு அடையாளம் மற்றும் வேகத்தைக் கொடுத்தது?
லிட்டன் பிரபு.
Q377. எந்த சட்டத்தின் மூலம், இந்திய நீதிபதிகள், ஐரோப்பிய குற்றவாளிகளின் வழக்குகளை விசாரிக்கலாம் என்ற நிர்வாக அதிகாரம் கொடுக்கப்பட்டது?
இல்பெர்ட் சட்டம்.
Q378. தேசிய சுதந்திர இயக்கத்தின் போது, போராட்டத்தில் ஈடுபடாத, தொடங்கப்பட்ட இந்திய சமூக, அரசியல் மற்றும் இதர அமைப்புகள் யாவை?
1. பிரிட்டிஷ் இந்தியா சொஸைட்டி -- British India Society -1839 – வில்லியம் ஆடம்.
2. நேஷனல் இந்தியன் அசோசியேஷன் -- National Indian Association – 1867 – மேரி கார்பெண்டர்;
3. இந்தியன் சொஸைட்டி -- Indian Society – 1872 – ஆனந்த் மோகன் போஸ்.
4. சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொஸைட்டி -- Servants of India Society – 1905 – கோகலே.
Q379. எதன் அறிமுகத்தால், இந்தியாவில் தேசியம் வளரக் காரணமாயிருந்தது?
மேலை நாடுகளின் கலாச்சாரம், மற்றும் ஆங்கில வழிக் கல்வி
Q380. இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரவாத போக்கு நுழைய எந்த அமைப்பு காரணமாக இருந்தது?
ஆர்ய சமாஜ் -- Arya Samaj – இந்த அமைப்பின் அதிகமான அங்கத்தினர்கள் தேசிய போராட்ட இயக்கத்தில் முன்னணியில் இருந்தனர்.
Q381. "ஸ்வராஜ்" என்ற தொடறை முதலில் பயன்படுத்தியவர் யார்?
சுவாமி தயானந்த்.
Q382. ஆங்கிலேயர்களாலும், ஐரோப்பியர்களாலும் மீக தீவிரமாக எதிர்க்கப்பட்டாலும், இல்பெர்ட் சட்டத்தின் நோக்கம் என்னவாக இருந்தது?
நீதித்துறையில், சமூக மற்றும் நீதி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே.
Q383. அரசியல் சீர்திருத்தம் வேண்டுமென முதலில் போராட்டம் துவக்கியவர் யார்?
ராஜா ராம் மோகன் ராய்.
Q384. ராபர்ட் க்ளைவ் கிழக்கிந்திய நிறுவனத்தில் எந்த பதவியில் சேர்ந்தார்?
எழுத்தர். clerk
Q385. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
அன்னி பெசண்ட் அம்மையார்.
Q386. லண்டன் நகரில் East India Association என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
தாதாபாய் நௌரோஜி -- இங்கிலாந்து மக்களின் கருத்தையும் ஆதரவையும் பெறுவதற்காக.
Q387. ப்ரிட்டிஷ் இந்தியன் அசோசியேஷன் British Indian Association (31.10.1851) எவ்வாறு நிறுவப்பட்டது?
Landholders Society மற்றும் Bengal British India Society என்ற இரண்டு அமைப்புகளையும் இணைத்து 1851ல் உருவாக்கப்பட்டது.
Q388. பாம்பே மாகாணத்தில் அமைக்கப்பட்ட முதல் அரசியல் அமைப்பு எது?
பாம்பே அசோசியேஷன் -- 1852 -- தாதாபாய் நௌரோஜியால் நிறுவப்பட்டது.
Q389. The Madras Native Association என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
லக்ஷ்மிநரசுச் செட்டி -- 1851-52 களில்.
Q390. காங்கிரஸ் அமைவதற்கு முன் இருந்த முக்கியமான அரசியல் அமைப்பு எது?
Indian Association -- கல்கத்தா. காங்கிரஸ் அமைவதற்கு முன் இந்த அமைப்பு மட்டுமே, இரண்டு அகில இந்திய மகாநாடுகளை நடத்தி, அகில இந்திய அமைப்பாவதற்கு முயற்சி எடுத்தது.
Q391. காங்கிரஸ் ன் முதல் இஸ்லாமியத் தலைவர் யார்?
பத்ருத்தீன் தயாப்ஜி.
Q392. காங்கிரஸ் ன் சூரத் மகாநாட்டை தலைமையேற்று நடத்தியவர் யார்?
1907 – ராஷ்பீஹாரி கோஷ்.
Q393. காங்கிரஸ் ல் ஏற்பட்ட பிளவில் ஏற்பட்ட இரு பிரிவுகள் இந்தியில் எவ்வாறு அழைக்கப்பட்டன?
நரம் தல் -- மென்மை அணி - Naram Dhal (Moderates) மற்றும் கரம் தல் -- சூடு அணி -- Garam Dhal (Extremists)
Q394. தேசியம் பரப்புவதை சட்ட விரோதமானது என ஆங்கிலேயர்கள் எப்போது சட்டம் இயற்றினர்?
1898
Q395. பால கங்காதர திலக்கை "இந்திய அமைதியின்மை தந்தை" என அழைத்தவர் யார்?
வாலண்டின் சிரோல், இங்கிலாந்து எழுத்தாளர். ( Q.368 பார்க்கவும்).
Q396. ""சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை பெற்றே தீருவேன்"" என திலக் எப்போது அறிவித்தார்?
1916ல் உள் ஆட்சி சங்கத்தை நிறுவும் போது
Q397. "அமைதி புரட்சி" யை முதலில் முன் வைத்தவர் யார்?
அரவிந்த கோஷ்
Q398. காங்கிரஸ் பற்றிய கீழ்க்கண்ட கூற்றினை கூறியவர் யார்? "" அதனுடைய குறிக்கோள்கள் தவறாக உள்ளது. எதை எதிர்பார்த்து, காங்கிரஸ் இந்த அணுகுமுறையை பிரயோகப் படுத்துகிறது என புரியவில்லை. அவர்களுடைய அணுகு முறையில் உண்மை தெரிய- வில்லை. தேர்ந்தெடுத்துள்ள அணுகுமுறைகள் சரியானதல்ல. எந்த தலைவர்களை நாம் நம்பியிருக்கிறோமோ, அவர்கள தலைவர் பதவிக்கு ஏற்றவர்கள் அல்ல. சுருக்கமாக, நம்மை வழி நடத்துபவர்கள், கண் பார்வையற்றவர்கள். இல்லையெனில், நிச்சயமாக குறைந்தபட்சம் ஒரு கண் பார்வையற்றவர்கள் என்பதில் ஐயமில்லை.""
அரவிந்த் கோஷ்
Q399. கீழ்க்கண்ட கூற்று யாருடையது? "" மகாராணி யாரும் இறப்பதை விரும்பவில்லை. ஆளுநர் அனைவரும் வாழ வேண்டும் என்கிறார். அப்படியிருக்கும் போது, நீங்கள் எல்லாம் ஏன் கோழையாகவும், பட்டினியிலும் இறக்கிறீர்கள். ""
பால கங்காதர திலக்
Q400. "சத்தியாகிரகம்" என்பதின் உண்மையான பொருள் என்ன?
""உண்மையை கைப்பிடித்து நிற்றல்"" “Holding on to the truth”. இதில் பல வகையுண்டு. உண்ணாவிரதம், தானாகவே இடம் பெயர்தல், கடை அடைப்பு மற்றும் இதர தடை நடவடிக்கைகள், என அனைத்துமே ஒரு வன்முறையற்ற தார்மீக போராட்டங்களாக இருத்தல் வேண்டும்.
Q401. காந்திஜி சத்தியாகிரக வழிகளை தேர்ந்தெடுக்க தூண்டுகோலாக இருந்தவர்கள் யார்?
தோரியூ - Thoreau, எமர்சன் - Emerson மற்றும் டால்ஸ்டாய் -- Tolstoy ஆகியோரின் இலக்கிய படைப்புகள்.
Q402. காந்திஜி தனது சத்தியாகிரகத்தை முதலில் எங்குத் தொடங்கினார்?
1917ல் பீஹார் சம்பரன் மாவட்டத்தில். இதைத் தொடர்ந்து குஜராத்தின் அஹமதாபாத், கேரா பகுதிகளில்.
Q403. "இமாலயளவிலான தவறு" என காந்திஜி எதை வர்ணித்தார்?
ரௌலத் சட்டத்தைப் பற்றி. காந்திஜீ 6.4.1919 அன்று இந்த சட்டத்தை எதிர்த்து ஒரு அறப்போராட்டம் நடத்த நினைத்து இருந்தார். அதற்குள்ளாக, பஞ்சாப், குஜராத மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகளில் பல வன்முறைகள் நிகழத் தொடங்கின. இதனால், காந்திஜி இத்தகை வர்ணனையை தெரிவித்தார். மக்கள் இன்னும் சத்தியாகிரக அணுகுமுறைக்கு தயாராகவில்லை என்பதை குறிக்கும் வகையில்.
Q404. ஜாலியன்வாலா பாக் (பாக்=தோட்டம்) க்கு யாருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது?
பண்டிட் ஜல்லா -- பஞ்சாபின் மகாராஜா ரஞ்சித் சிங் ன் அரசவையில் இருந்தவர். இந்த தோட்டத்தை உருவாக்கியவர் இவரே.
Q405. 1921-1922 களில், ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப்பெறக் காரணம் என்ன?
1. ஜாலியன் வாலா பாக் படுகொலை
2. கிலாஃபத் தவறு -- துருக்கி ஆட்டோமான் ஆட்சிக்கு எதிராக கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
Q406. சுதேசி இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் என்ன?
வெளி நாட்டுப் பொருட்களை எதிர்ப்பது, நிராகரிப்பது.
Q407. யாருடைய பெயரில் ஒரு தேசிய அளவிலான நிதி திரட்டப்பட்டது?
பால கங்காதர திலக் -- "திலக் ஸ்வராஜ் நிதி" கதர் ஆடை உற்பத்தியை பெருக்குவதற்காக.
Q408. சௌரி சௌரா நிகழ்ச்சி எப்போது நடந்தது?
5--2--19225 -- சௌரி சௌரா, உத்திரபிரதேசத்தின் கோரக்பூர் அருகில் உள்ள ஒரு கிராமம். இங்கு, கிராம மக்கள் அங்குள்ள காவல்நிலையத்தைத் தாக்கி, 22 காவல் துறையினரையும் கொன்றனர்.
Q409. காந்திஜி எந்த நிகழ்வின் அடிப்படையில், தனது ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்ப பெற்றார்?
சௌரி சௌரா நிகழ்வுக்கு பிறகு, அந்த நிகழ்வுக்காக கோபம் கொண்ட காந்திஜி, 11.2.1928 – அன்று, தனது ஒத்துழையாமை இயக்கத்தை திரும்ப பெற்றார்.
Q410. சைமன் கமிஷன் அமைக்கப்பட காரணம் என்ன?
ஆங்கிலேயர்களின் அரசாட்சியை ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காக.
Q411. சைமன் கமிஷனைப் பற்றி, இர்வின் பிரபு கொடுத்த வர்ணனை என்ன?
“ கற்பனையில் குறைபாடு கொண்டது -- Lacking in imagination”.
Q412. இர்வின் பிரபு தனது கருத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார், அது எவ்வாறு அழைக்கப் படுகிறது?
31 அக்டோபர் 1929 அன்று, இந்தியாவுக்கு, இங்கிலாந்தின் கீழ் இயங்கும் சுதந்திர நாடு என்ற அந்தஸ்து Dominion status வழங்கப்பட வேண்டும் என அறிவித்தார். இது ""தீபாவளி அறிக்கை"" எனப்பட்டது.
Q413. இந்திய சாசனச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய குறிக்கோள்களை பரிந்துரை செய்ய, இந்தியர்களால் அமைக்கப்பட்ட குழு எது?
மோதிலால் நேரு குழு -- ஆகஸ்ட் 1928ல் இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதற்கு ""நேரு அறிக்கை"" எனப்பட்டது.
Q414. நேரு அறிக்கையின் முக்கிய குறிக்கோள் என்னவாக இருந்தது.
இந்தியாவின் புதிய அரசியல் சாசனம், இந்தியா இங்கிலாந்தின் கீழ் செயல்படும் ஒரு சுதந்திர நாடு என்ற அடப்படையை கொண்டதாக இருக்க வேண்டும்.
Q415. முஸ்லீம் தேசிய கட்சியை (இயங்கவில்லை) தொடங்கியவர் யார்?
காலிக்குஸ்ஸமான், டாக்டர் ஷேக் முகமது ஆலம், டாக்டர் எம்.ஏ. அன்சாரி.
Q416. ""குதாய் கிட்மட்கர்ஸ்"" (செஞ்சட்டை வீரர்கள்) “Khudai Khidmatgars” (meaning Red Shirts) என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
கான் அப்துல் கஃபார் கான் -- வட மேற்கு மாகாணங்களில் இதை நிறுவினார்.
Q417. 1930-1934 களில், காந்திஜியை பொது கிழ்படியாமை இயக்கத்தை நடத்த தூண்டியது எது?
1930 களில், காந்திஜி ஆங்கிலேயர்களிடம் 11 கோரிக்கைகளை முன் வைத்தார். அதை ஆங்கிலேயர்கள் நடைமுறைப் படுத்தாதினால், இந்த இயக்கத்தைத் தொடங்கினார்.
Q418. காந்திஜி பொது கீழ்படியாமை இயக்கத்தை எங்கு தொடங்கினார்?
12.3.1930 அகமதாபாத் சாபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து, குஜராத்தின் தண்டி என்ற இடம் வரை, உப்பு மீதி விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து, பாத யாத்திரை மேற்கொண்டார்.
Q419. தண்டி யாத்திரையில், காந்திஜி, எவ்வளவு தூரத்தை, எவ்வளவு நாட்களில், தனது பாத யாத்திரையின் மூலம் கவர்ந்தார்?
24 நாட்களில் 390 கி.மீ ட்டரை கவர்ந்தார்.
Q420. தண்டி யாத்திரையில், காந்திஜியுடன் எத்தனை தொண்டர்கள் சென்றனர்?
79 தொண்டர்கள்
Q421. தண்டி யாத்திரையின் மூலம் காந்திஜி உப்புச் சட்டத்தை முறியடித்தார்?
5 ஏப்ரல் 1930.
Q422. தென்னகத்தில், உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் யார்?
சி.ராஜகோபாலாச்சாரி.. 13.4.1930 அன்று, திருச்சியிலிருந்து கிளம்பி, பல ஆங்கிலேய தொல்லைகளுக்குப் பிறகு, 28.4.1930 அன்று வேதாரண்யம் சென்றடைந்து, 30.4.1930 அன்று உப்பு சத்தியாகிரத்தை நடத்தினார். காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் வந்த தொண்டர்களும் கொடுமைக்கும், சிறை வாசத்துக்கும் உள்ளானார்கள்.
Q423. பொது கீழ்படியாமை இயக்கத்துக்கும், உப்பு சத்தியாகிரகத்துக்கும் ஏற்பட்ட விளைவு என்ன?
காந்தி இர்வில் உடன்படிக்கை 1931.
Q424. காந்தி இர்வின் உடன்படிக்கை ஏற்பட காரணமாயிருந்தவர்கள் யார்?
சர் தேஜ் பகதூர் மற்றும் டாக்டர் ஜெயகர்.
Q425. 1927/28ல் சைமன் கமிஷனின் தலைவராக வந்தவர் யார்?
சர் ஜான் சைமன் -- 1927ல் இந்த குழு, இங்கிலாந்தின் பிரதம மந்திரி பால்ட்வின் அவர்களால் நிறுவப்பட்டது.
Q426. சைமன் கமிஷன் தனது அறிக்கையை எப்போது சமர்ப்பித்தது?
அக்டோபர் 1929.
Q427. சைமன் கமிஷனால் இந்தியாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்ன?
லாலா லஜ்பத் ராய்.
Q428. 1940 "தீபாவளிக் குறிக்கோளின்“ Deepavali Declaration” குறிக்கோள் என்ன?
இங்கிலாந்தின் கீழ் இயங்கும் ஒரு சுதந்திர நாடு அந்தஸ்து - Dominion Status.
Q429. "சாதி சலுகை" Communal Award எப்போது அறிவிக்கப்பட்டது?
1932
Q430. க்ரிப்ஸ் மிஷனை தலைமை தாங்கியவர் யார்?
சர் ஸ்டான்ஃபோர்டு க்ரிப்ஸ்.
Q431. க்ரிப்ஸ் மிஷனைப் பற்றி காந்திஜி எவ்வாறு வர்ணித்தார்?
திவாலாகப்போகும் ஒரு வங்கியின் மீது அளிக்கப்பட்ட நாள் தள்ளிப்போடப்பட்ட ஒரு காசோலை.
Q432. "வெள்ளையனே வெளியேறு" என்ற தீர்மானம் எப்போது எடுக்கப்பட்டது?
8.8.1942 -- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி -- பாம்பே மகாநாடு.
Q433. ஆகஸ்ட் 1942ல் காந்திஜி மக்களுக்கு அளித்த கோஷம் என்ன?
"செய் அல்லது செத்துமடி" “Do or Die”. பாம்பேயின் கௌவாலியா குள மைதானம் த்தில் கொடுக்கப்பட்டது.
Q434. காந்திஜி ""செய் அல்லது செத்துமடி"" என்ற கோஷத்தை கொடுத்த கௌவாலியா குள மைதானம் இப்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆகஸ்ட் கிளர்ச்சி மைதானம் -- August Kranti Maidan.
Q435. இந்து மகா சபையை நிறுவியவ்ர் யார்?
1915ல் மதன் மோகன் மாளவியா
Q436. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தை நிறுவியவர் யார்?
K.B. ஹெட்ஜ்வார் -- 1925 -- நாக்பூர்.
Q437. சுதந்திர போராட்டத்தில் ஈடுபடும் ஒரு பின்னணியுடன் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் அமைப்பு எது?
மித்ரமேளா -- 1899 -- கணேஷ், விநாயக் சவர்கர் சகோதரர்கள்.
Q438. இந்தியாவில் சுதந்திர போராட்ட காலத்தில், நிறுவப்பட்ட முதல் சமூக-அரசியல் ரகசிய அமைப்பு எது?
அனுஷீலன் சமிதி -- Anushilan Samiti –கல்கத்தா– 1902 -- பரீந்த்ர குமார் கோஷ், ஜதீந்த்ரநாத் பானர்ஜி மற்றும் ப்ரோமாதா மிட்டர்.
Q439. அகில இந்திய அளவில், ஒரு தீவிரவாத இயக்கத்தை நிறுவியவர் யார்?
இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் -- 1924 – சச்சின் சன்யல் மற்றும் ஜோகேஷ் சந்திர சட்டர்ஜி ஆகியோரால் நிறுவப்பட்டது.
Q440. கத்தார் கட்சி யாரால் எப்போது நிறுவப்பட்டது?
ஹர் தயாள் மற்றும் சோஹன் சிங் பாக்னா -- 1913 -- அமெரிக்காவில் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில்.
Q441. ஜப்பான் நாட்டில் இந்திய சுதந்திர சங்கம் Indian Independence League நிறுவியவர் யார்?
ராஷ் பீஹாரி போஸ் -- 1942.
Q442. ""ஜூகாந்தர்"" “Jugantar” என்பது சுதந்திர போராட்சி காலத்து புரட்சி தினசரி. இதை நிறுவியவர் யார்?
1906 – பரீந்த்ர குமார் கோஷ் மற்றும் பூபேந்திர நாத் தத்தா.
Q443. ""வந்தே மாதரம் “Bande Mataram” என்ற பத்திரிக்கை வெளிநாட்டில் துவங்கப்பட்ட, தேசிய சுதந்திர போராட்ட ஆதரவு பத்திரிக்கை. இதை நிறுவியவர் யார்?
மேடம் பிகாஜி காமா -- பாரீஸ், ஃப்ரான்ஸ் -- 1909.
Q444. ஜப்பானிய கப்பல் ""கோமகாட்டு மாரு"" வை வாடகைக்கு எடுத்து, இந்தியர்களை கனடா நாட்டுக்கு கூட்டிச்செல்ல முயன்றவர் யார்?
குர்தீத் சிங் சாந்து -- 1914.
Q445. 1930ல் சிட்டகாங் ஆயுதக் கிடங்கை தாக்கியவர் யார்?
18.4.1930 -- சுர்ஜியா சென். பிறகு இவர் பிடிக்கப்பட்டு, 12.1.1934 அன்று தூக்கிலிடப்பட்டார்.
Q446. லாகூர் சிறைச்சாலையில், சிறைக் கைதிகளுக்கு நல்ல வசதிகள் வேண்டுமென 64 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மறைந்த சுதந்திர போராட்ட வீரர் யார்?
ஜதின் தாஸ் -- செப்டம்பர் 1929.
Q447. சைமன் கமிஷனுக்கு எதிராக போராட்டம் நடத்தி, காவல்துறை தடியடியால் காயமுற்று மறைந்தவர் லாலா லஜ்பத் ராய். இதற்கு பழி வாங்கும் வகையில், ஆங்கிலேய அதிகாரியை கொன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் யாவர்?
பகத் சிங்க், சுக்தேவ் மற்றும் ராஜ் குரு. இவர்களால் டிசம்பர் 1928ல் கொல்லப்பட்ட ஆங்கிலேய அதிகாரி சாண்டர்ஸ். இவர்கள் மூவரும் 23.3.1931 அன்று தூக்கிலிடப்பட்டனர்.
Q448. பூனாவில், W.C.ரேண்ட் மற்றும் Lt. ஆயெர்ஸ்ட் என்ற ஆங்கிலேய அதிகாரிகளை கொன்றவர்கள் யார்?
சப்பேகர் சகோதரர்கள் -- தாமோதர், பாலகிருஷ்ணா, மற்றும் வசுதேவ் சகோதரர்கள்.
Q449. வங்காளத்தின் முஸாஃபர்பூர் நீதிபதி கிங்ஸ்ஃபோர்டு ஐ கொலை செய்யும் முயற்சியில், வேறொரு ஆங்கிகிலேய அதிகாரி, கென்னடி என்பவரின் உறவினர்கள் கொல்லப் பட்டனர். இவர்களை கொலை செய்தது யார்?
30.4.1908 -- ப்ரஃபுல்லா சக்கி மற்றும் குதிராம் போஸ்.
Q450. லண்டனின் இந்திய அலுவலகத்தில் கர்ஸன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை கொன்றவர் யார்?
மதன் லால் திங்ரா -- 1.7.1909.
Q451. தமிழகத்தின், திருநெல்வேலி ஆளுநர் ஆஷ் என்ற ஆங்கிலேயரை கொன்றவர் யார்?
வாஞ்சிநாதன் -- 17.11.1911 -- மணியாச்சி ரயில் சந்திப்பில்.
Q452. வைஸ்ராய் ஹார்டிஞ்ச் ஐ கொலை செய்ய முயற்சி செய்தவர் யார்?
22.12.1912 – ராஷ் பீஹாரி போஸ் மற்றும் சச்சின் சன்யால் -- டெல்லியில்.
Q453. வங்காளத்தில் பள்ளிச் சிறுமிகள் இருவர், திப்போரா என்ற இடத்து நீதிபதி ஸ்டீவன் என்பவரை கொலை செய்தனர். அந்த சிறுமிகள் யாவர்?
சாந்தி மற்றும் சுனிதி சௌதரி. -- 14.12.1931.
Q454. "ஸ்வராஜ் கட்சி “Swaraj Party” யை நிறுவியவர்கள் யாவர்?
சித்தரஞ்சன் தாஸ், ஜெய்ப்ரகாஷ் நாராயண் மற்றும் சிலர். -- 1.1.1923
Q455. மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள் அடிப்படையில் இரு ஆட்சி முறையின் செயல்பாடு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க முத்திமான் குழு எப்போது அமைக்கப்பட்டது?
1924 – இந்த குழு அலெக்ஸாண்டம் முத்திமான் தலைமையில் 9 பேர் கொண்ட குழு.
Q456. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதலில் எங்கு நிறுவப்பட்டது?
தாஷ்கெண்ட் - ரஷ்யா - (இப்போது உஸ்பெகிஸ்தான்) -- எம்.என். ராய், அபானி முகர்ஜி மற்றும் சிலரால் 1920ல் நிறுவப்பட்டது.
Q457. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் எப்போது நிறுவப்பட்டது?
1925ல் கான்பூரில், எஸ்.ஏ.டாங்கே, நளினி குப்தா, முஸாஃபர் அஹமத் போன்றவர்களால் நிறுவப்பட்டது.
Q458. இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவர் யார்?
1942 -- கேப்டன் மோஹன் சிங் -- ஜப்பானில் அந்த நாட்டு உதவியுடன் -- இந்திய சிறைக்கைதிகள், மலேயா, பர்மாவில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மக்களின் உதவியுடன்.
Q459. காந்திஜிக்கு "தேசத் தந்தை" என்ற சிறப்புப் பெயரைக் கொடுத்தவர் யார்?
சுபாஷ் சந்திர போஸ்.
Q460. காந்திஜி, நேதாஜிக்கு அளித்த சிறப்பு பெயர் என்ன?
தேசப்பற்று உடையவர்களின் இளவரசர்
Q461. தாதாபாய் நௌரோஜி, மித வாதத்திலிருந்து, தீவிரவாதத்துக்கு மாறிய காரணம் என்ன?
ஆங்கிலேய அரசியல் வாதிகள் மற்றும் அவர்களுடைய கொள்கைகளின் மீது ஏற்பட்ட பெரும் ஏமாற்றம்.
Q462. அரவிந்த கோஷ், ஆன்மீகமும், செயல்முறைகளும் கலந்த ஒரு சிறந்த தேசிய உணர்வுடன் கூடிய தீவிரவாதி என ஏன் அழைக்கப்பட்டார்?
தேசிய பற்று என்பது வெறும் அரசியல் விளையாட்டு அல்ல, அது கடவுளிடமிருந்து பெற்ற ஒரு மத நம்பிக்கை போன்றது என கூறியவர்.
Q463. ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்ட, போராட்டத்தைப்பற்றி, சரத் சந்திர சட்டர்ஜி எழுதிய நூலின் பெயர் என்ன?
பாத்தேர் தாபி -- Pather Dabi -- பொருள் -- Demand of the Road -- பாதையின் கோரிக்கை.
Q464. கணேஷ் சவார்க்கர் ஒரு ரகசிய தீவிரவாத இயக்கத்தை நிறுவினார். அது என்ன?
அபினவ பாரத்.
Q465. சுதந்திர போராட்டத்தின் போது, ஜதீந்திர சட்டபோத்யாய் ஒரு தீவிரவாத போராளி. ஆனால், அவருடைய பிற்காலம், அதற்கு எதிர்மாறாக இருந்தது. அது என்ன?
ராமகிருஷ்ண மடத்தின் ஒரு துறவியாக அவர் வாழ்க்கையை கழித்தார்.
Q466. மகாராஷ்டிராவில் இருந்த வெளிவந்த ஒரு தினசரி, சுதந்திர போராட்டத்தில் ஒரு பெரும் பங்கு வகித்தது. அது என்ன?
க்ரந்தி -- Kranti -- புரட்சி என்று பொருள்.
Q467. சுதந்திர போராட்ட தீவிரவாத போராளிகள் எந்த வகுப்பை சார்ந்தவர்களாக இருந்தனர்?
இந்தியாவின் உயர் சாதி வகுப்பினர்கள்.
Q468. "வந்தே மாதரம்" “Vande Mataram” இதன் பொருள் என்ன?
""தாயே உன்னை வணங்குகிறேன்"" “I bow to thee, mother”. 1882ல், பங்கிம் சந்திர சட்டர்ஜி யால் எழுதப்பட்ட ""ஆனந்த மாதா"" என்ற நூலில் வரும் ஒரு பாடல்.
Q469. இந்தியாவுக்கு ஒரு கொடியை முதலில் வடிவமைத்தவர் யார்?
1907ல் மேடம் பிகாஜி ருஸ்தம் காமா என்பவரால். இது ஒரு மூவர்ணக் கொடி. பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு நெடும் பட்டையில், பச்சை பட்டையில், 8 தாமரை மலர்களும், மஞ்சள் பட்டையில் ""வந்தே மாதரம்"", இளஞ்சிவப்பு பட்டையில், சூரியனும் சந்திரனும் பதிக்கப்பட்டிருந்தது. இதை, இஸ்லாமியர்களும், வேறு சிலரும் ஏற்கவில்லை.
Q470. "பாகா ஜதீன்" “Bagha Jatin” என புகழ்பட அழைக்கப்பட்டவர் யார்?
ஜதீன் முகர்ஜி.
Q471. ஜாலியன் வாலா பாக் நிகழ்வுக்கு எதிராக, ரவீந்திர நாத் தாகூர் செய்தது என்ன?
இங்கிலாந்து மகாராணியால் தனக்கு அளிக்கப்பட்டிருந்த knighthood சிறப்புப்பட்டத்தை திரும்ப அளித்தார்.
Q472. ஒத்துழையாம இயக்கத்தில் தீவிரமாக பங்கு கொண்ட புகழ் பெற்ற தொழிலதிபர்கள் யாவர்?
புருஷோத்தம்தாஸ் தாகூர்தாஸ், ஜமுனாதாஸ் துவாரகாதாஸ், சேத்தல்வாட்.
Q473. காங்கிரஸ் கட்சியின் எந்த மகாநாட்டில், பால கங்காதர திலக் ன் பெயரால் ஒரு நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்டது?
ஏப்ரல் 1921ல், ஆந்திரபிரதேச விஜயவாடா மகாநாட்டில்.
Q474. கிலாஃபத் அமைப்பின் எந்த மகாநாட்டில், அலி சகோதரர்கள், இஸ்லாமியர்களை, ராணுவத்திலிருந்து வெளிவருமாறு கோரிக்கை விடுத்தார். அதற்காக ஆங்கிலேயர்கள் அவரை எவ்வாறு தண்டித்தனர்?
ஜூலை 1921ல் கராச்சியில் நடந்த மகாநாட்டில். அலி சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Q475. முஸ்லீம் லீக் எங்கு, எப்போது நிறுவப்பட்டது?
டிசம்பர் 1906ல், டாக்காவில், நவாப் விக்கார் உல் முல்க் என்பவரால் நிறுவப்பட்டது. இருந்தாலும், முஸ்லீம் லீக் ஐ அகா கான் நிறுவியதாக கருதப்படுகிறார். காரணம், இஸ்லாமியர்களுக்கு ஒரு அரசியல் அமைப்பு வேண்டும் என, சிம்லாவில் மிண்டோ பிரபுவை சந்தித்த பிறகு, அக்டோபர் 1906ல் அறைகூவல் விடுத்து வலியுறுத்தியவர் இவரே.
Q476. முஸ்லீம் லீக் இருநாட்டு கோரிக்கையை எப்போது முன்வைத்தது?
1937 -- முஸ்லீம் லீக் ன் லக்னௌ மகாநாட்டில்.
Q477. பிரிவினை வேண்டும் என முஸ்லீம் லீக் ஆல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
1940 லாகூர் மகாநாட்டில். இது "பாகிஸ்தான் தீர்மானம்" என அழைக்கப்பட்டது.
Q478. முஸ்லீம்கள் எப்போது அங்கீகாரமும், முக்கியத்துவமும் பெறத் தொடங்கினர்?
1934ல் முகமது அலி ஜின்னா இங்கிலாந்திலிருந்து திரும்பி, முஸ்லீம் லீக் தலைமைப் Md. Ali Jinnah arrival from England and taking over the League by 1934.
Q479. முகமது அலி ஜின்னாவை, இங்கிலாந்திலிருந்து, திரும்பி வரச்சொல்லி, முஸ்லீம் லீக் தலைமையை ஏற்றுக்கொள்ள தூண்டியவர் யார்?
உத்திரபிரதேசத்தின் ஒரு முஸ்லீம் தலைவர் லியாகத் அலி கான்.
Q480. "பாகிஸ்தான்" என்ற பெயரை முன்வைத்தவர் யார்?
1933ல், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர் ரஹமத் அலி என்பவர். இந்த தொடர், பஞ்சாப், ஆஃப்கானிஸ்தான், காஷ்மீர், சிந்த் மற்றும் பலுச்சிஸ்தான் என்ற பெயர்களிலிருந்து கோர்க்கப்பட்டது.
Q481. அக்டோபர் 17, 1940, ஒரு அடையாள எதிர்ப்பாக, ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட, யார் முதலில் தேர்வு செய்யப்பட்டார்?
வினோபா பாவே.
Q482. 1939ல் மாகாணங்களின் காங்கிரஸ் ஆட்சிகள், ராஜினாமா செய்யக் காரணம் என்ன?
இரண்டாம் உலகப் போரின் தொடக்கம்.
Q483. காங்கிரஸ் ஆட்சிகள் ராஜினாமா செய்ததை, முகமது அலி ஜின்னா எவ்வாறு வர்ணித்தார்?
"விடுபட்ட நாள்" ‘A day of deliverance”.
Q484. ராஜகோபாலச்சாரி முன்வைத்த திட்டத்தை, காந்திஜியும், முகமது அலி ஜின்னாவும் எப்போது விவாதித்தார்கள்?
9 செப்டம்பர் 1944.
Q485. வேவல் திட்டம் 1945 Wavell Plan of 1945 வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிம்லா மகாநாடு Shimla Conference 1945.
Q486. கேபினெட் மிஷன் 1946 The Cabinet Mission of 1946 ல் அடங்கியவர்கள் யாவர்?
சர் ஸ்டான்ஃபோர்ட் க்ரிப்ஸ், பெந்திக் லாரன்ஸ் பிரபு மற்றும் ஏ.வி. அலெக்ஸாண்டர். இந்த குழு மார்ச் 24, 1946 அன்று வந்து, இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதை வேகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டது.
Q487. காங்கிரஸ் கட்சியை, ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்க வேவல் பிரபு எப்போது அழைத்தார்?
12 ஆகஸ்ட் 1946.
Q488. 16 ஆகஸ்ட் 1946, இந்து முஸ்லீம் உறவில் ஒரு துயரமான நாளாக கருதப்படுவதற்கு காரணம் என்ன?
16.8.1946 -- இந்த நாளை இஸ்லாமியர்கள் ஒரு ""நேரடி நடவடிக்கை நாள்"" என அனுசரித்தனர். இதன் விளைவு கல்கத்தாவில் இந்து முஸ்லீம் இடையில் ஒரு பெரும் கலவரம் ஏற்பட்டு, பல உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டது. ராணுவம் வரவழைக்கப்பட்டு, கலவரம் அடக்கப்பட்டது.
Q489. ஜூன் 1946ல், அரசியல் நிர்ணய சபை அமைக்க ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. அது எத்தனை தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது, அதன் முடிவு என்ன?
292 தொகுதிகள். அதில் 288 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடை பெற்றது, காரணம் 4 பஞ்சாப் தொகுகளுக்கு வேட்பாளர் எவரும் முன் வரவில்லை. இதில் காங்கிரஸ் 201, முஸ்லீம் லீக் 74 மற்றும் இதர பிரிவினர் 14 இடங்கள் பெற்றனர்.
Q490. ஆங்கிலேயரின் எந்த தீர்மானத்தின் படி, இந்திய சாசனம் எழுதப்படுவதற்கு, ஒரு அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது?
கேபினெட் மிஷன் திட்டம் -- 1946.
Q491. அரசியல் நிர்ணய சபை எப்போது அமைக்கப்பட்டது, அதன் தலைவராக நிறுவப்பட்டவர் யார்?
9.12.1946 – டாக்டர் சச்சிதானந்தா சின்ஹா. அவர் மறைவுக்குப் பின் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
Q492. அரசியல் சாசன சட்டத்தை எழுதும் குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் B.R.அம்பேத்கர். அதனால் தான் இவர் "இந்திய அரசியல் சாசன தந்தை" எனப்படுகிறார்.
Q493. இந்திய இடைக்கால அரசாங்கம் எப்போது அமைக்கப்பட்டது?
2 செப்டம்பர் 1946 -- இது 15 ஆகஸ்ட் 1947 வரை நீடித்தது.
Q494. இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையில் முதல் உள்துறை அமைச்சராக பதவி ஏற்றவர் யார்?
வல்லபாய் பட்டேல்.
Q495. சுதந்திரத்திற்கு பிறகு எவ்வகை அரசாங்கம் அமைக்கப்பட்டது?
அரசியல் நிர்ணய சபை, இந்தியாவின் இடைக்கால அரசாங்கமாக பதவியேற்றது. ஜவஹர்லால் நேரு பிரதமராக பதவியேற்றார்.
Q496. இந்தியாவின் முதல் பொது தேர்தல் எப்போது நடைபெற்றது?
1951/1952 – 25.10.1951 to 21.2.1952 -- 489 தொகுதிகளுக்கு -- காங்கிரஸ் 364, கம்யூனிஸ்ட் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். சுதந்திர வேட்பாளர்கள் 37.
Q497. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரிசபை எப்போது அமைக்கப்பட்டது?
17.4.1952.
Q498. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் இந்தியில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஆஸாத் ஹிந்த் ஃபௌஜ். Azad Hind Fauj
Q499. நேதாஜி சுதந்திர போஸ் ஆல் பயிற்சியளிக்கப்பட்ட இளைஞர் ராணுவம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
டோக்யோ இளைஞர்கள் Tokyo Boys என ஜப்பானிய ராணுவத்தில் அழைக்கப்பட்டனர்.
Q500. நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட மகளிர் ராணுவத்தின் பெயர் என்ன?
ராணி ஜான்சி படைப்பிரிவு.
Q501. எந்த நாட்டில் நேதாஜி ஒரு தற்காலிக இந்திய அரசாங்கத்தை நிறுவினார்?
சிங்கப்பூர்.
Q502. இந்திய தேசிய ராணுவ சிப்பாய்கள் குறிக்கோள் கோஷம் என்ன?
டெல்லி செல் -- Chalo Delhi.
Q503. இந்திய தேசிய ராணுவம், இந்தியாவுக்குள் நுழையாதவாறு இம்ஃபாலில் நிறுத்தப்பட்டு, திரும்பிச் செல்ல்வேண்டிய சூழ்நிலையில், நேதாஜியின் கூற்று என்ன?
டெல்லிக்கு பல பாதை உள்ளன. ஆனால் நமது இலக்கு டெல்லி “ Roads to Delhi are many and Delhi remains our goal”.
Q504. இந்திய தேசிய ராணுவ படை அணிப்பிரிவின் நடைப் பயணத்தின் போது செய்யப்பட்ட கோஷம் என்ன, அதை யார் எழுதியது?
"" அடி அடியாக எடுத்து வைத்து முன்னேறுவோம்"" “Kadam Kadam Badaye Jaa” (இந்தி) (step by step forward march -- English.) – இதை எழுதியவர் ராம் சிங் தாகூர்.
Q505. சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய தேசிய ராணுவத்தின் நேதாஜியை தவிர்த்து, வேறு எந்த வீரர்கள், சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள் யார்?
1. ஜெனரல் ஷா நவாஸ் கான் - இந்திய அரசாங்கத்தின் முதல் ரயில்வே மந்திரி வகித்தார். பத்ம விபூஷன் கௌரவமும் பெற்றவர்.
2. லக்ஷ்மி ஷேகல் -- பத்ம விபூஷன் கௌரவம் பெற்றவர். கம்யூனிஸ்ட் (மார்க்ஸிசம்) கட்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர். 2002ல் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்.
3. அபித் ஹசன் – நேதாஜியின் நெருங்கிய தோழர் -- இந்திய வெளியுறவுத்துறைப் பணியில் சேர்ந்து Indian Foreign Service எகிப்து, டென்மார்க் போன்ற நாடுகளின் தூதுவராக பணியாற்றியவர்.
4. கேப்டன் மோஹன் சிங் – காங்கிரஸ் சார்பாக இரு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.
5. ராம் சிங் தாகூர் – இசை அமைப்பாளர். நமது நாட்டு தேசிய கீதத்துக்கு இசை வடிவம் கொடுத்தவர்.
6. R.S. பெனெகல் – டோக்யோ பாய்ஸ் எனப்பட்ட இளைஞர் ராணுவத்தில் தீவிரமாக செயல்பட்டார். சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய விமானப்படையில் சேர்ந்து, ஏர் கமோடர் என்ற உயர் பதவி வரை உயர்ந்தவர். 1965, 1971 போர்களில் பங்கு கொண்டவர். மகா வீர் சக்ரா கௌரவம் பெற்றவர்.
Q506. இந்திய தேசிய ராணுவம் எவ்வாறு முடிவுக்கு வந்தது? நேதாஜிக்கு என்ன ஆனது?
இந்திய தேசிய ராணுவம், ஜப்பானிய ராணுவத்துடன் இணைந்து இந்தியா நோக்கி படையெடுக்கையில் கோஹிமா வை கைப்பற்றியது. இருப்பினும், ஜப்பான், இரண்டாம் உலகப் போரில் தோல்வி கண்டு இங்கிலாந்திடம் சரணடைந்தது. அதன் விளைவாக, இந்திய தேசிய ராணுவத்தினரும் சரணடைந்து, பல வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இதற்கிடையில், நேதாஜி விமானம் மூலம் தப்பி செல்லுகையில், 1945ல் டோக்யோவில் விபத்தில் இறந்ததாக சொல்லப்படுகிறது. இவருடைய மரணம் இன்றும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.
Q507. சிறை பிடிக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களின் விசாரணை எங்கு நடந்தது?
செங்கோட்டை, டெல்லி -- 1945-1946.