Khub.info Learn TNPSC exam and online pratice

சிக்கிம்

Q1. சிக்கிம் SIKKIM
தொடக்கம் : 16.05.1975.
தலை நகர் : காங்டாக்.
பரப்பளவு : 7,096 ச.கி.மீ. (27 வது)
ஜனத்தொகை : 6,10,577
மொழி : நேபாளி, சிக்கிமிஸ், இந்தி, ஆங்கிலம்.
கல்வியறிவு : 82.2%
மாவட்டங்கள் : 4.
முக்கிய நகரங்கள் : காங்டாக், கெய்சிங், நாம்ச்சி, மங்கன்.
மாநில எல்லைகள் : நேபாளம், திபெத், பூடான், சீனா மற்றும் மேற்கு வங்காளம்.
மக்களவை தொகுதிகள் : 1.
மாநிலங்களவை தொகுதிகள் : 1.
சட்டமன்ற தொகுதிகள் : 32.
மாநில சின்னம் : -->
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : மலையாறுகள்
மாநில மலர் : நோபுள் ஆர்கிட் (Noble Orchid).
மாநில மரம் : பிலி (Rhododendron).
மாநில பறவை : Blood Phesant
மாநில மிருகம் : Red Panda.
மாநில ஆளுநர் : கங்கா ப்ரசாத்
மாநில முதன் மந்திரி : பவான் சாம்லிங்.


Q2. வரலாற்று சுருக்கம் :
இந்த பகுதி, ""சோக்யால்"" வம்ச மன்னர்களால் ஆளப்பட்டு வந்த பகுதி. ஆங்கிலேயர்கள் உடன் ஏற்பட்ட சில உடன்படிக்கைகள்படி, இந்திய சுதந்திரம் வரை மன்னர் பகுதியாகவே ஆளப்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்தது. 1972ல் உள் நாட்டு குழப்பம் காரணமாக இந்தியாவுடன் இணைய விரும்பியதை தொடர்ந்து இந்திய அரசாங்கம் நிலைமையை சமாளித்து, நிர்வகித்து, நிலைமை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்கு வந்தவுடன், 16.5.1975 முதல் இந்தியாவின் ஒரு மாகாணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
Q3. சிக்கிம் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் யார்?
காஸி லெண்டுப் தோர்ஜி - 1975 - 1979.
Q4. சிக்கிம் மாநிலத்தின் மக்களவை தொகுதி எது?
சிக்கிம்.
Q5. சிக்கிம் மாநிலத்தின் மாநகராட்சி எது?
காங்டாக்.
Q6. சிக்கிம் மாநிலத்தின் மாவட்டங்கள் யாவை?

1. கிழக்கு சிக்கிம் : சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதால் மிக முக்கியமான மாவட்டம். தலை நகர் காங்டாக் அமைந்துள்ள மாவட்டம். உலகப்புகழ் பெற்ற புத்த மத ""ரம்டெக் மடம்"" இங்குள்ளது. சீனாவின் லாசா பகுதியை இணைக்கும் ""நாதுலா வழி"" (Nathula Pass) இங்குள்ளது. மிக அழகான மாவட்டம்.
2. வடக்கு சிக்கிம் : சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியாகையால், மிகவும் முக்கியமானதும், பாதுகாப்பு அதிகமுள்ள மாவட்டம்.
3. தெற்கு சிக்கிம் : உலகப்புகழ் பெற்ற சிக்கிம் தேயிலை அதிகமாக விளையும் மாவட்டம். புத்த மத மடங்கள் நிறைந்த மாவட்டம். மலர் கண்காட்சி மிகவும் புகழ் பெற்றது. புகழ்பெற்ற இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் புட்டியா இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர். 118 அடி உயர புத்த மதகுரு ""ரின் போச்சே"" என்பவர் சிலை மிகவும் புகழ்பெற்ற தலம்.
4. மேற்கு சிக்கிம் : மிகவும் அழகான மாவட்டம்.
Q7. சிக்கிம் மாநிலத்தின் புது வருடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லாசூங்.
Q8. "பாங்லாப்சோல்" (Pang Labhsol) என்ற திருவிழா சிக்கிமில் புகழ்பெற்றது. இதன் முக்கியத்துவம் என்ன?
கஞ்சன் ஜங்கா சிகரம் சிக்கிமின் காவல் தெய்வமாக கருதப்படுகிறது. அதைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் திருவிழா. 17வது நூற்றாண்டில் மன்னர் சாக்யோல் சாக்டோர் என்பவரால் தொடங்கப்பட்டது. இத்திருவிழாவின் போது, ""டிசெங்கா"" என்ற முகமூடி அணிந்து கொண்டாடுவர்.
Q9. தலைநகரம் காங்டாக் -ன் முக்கியத்துவம் என்ன?
"மிகவும் அழகான நகரம் ""எங்சே மடம்"" - புத்தமத மடம் மிகவும் புகழ்பெற்றது. கைவினைப் பொருட்களும், சுற்றுலாவும் தான் பொருளாதார நடவடிக்கை."