Khub.info Learn TNPSC exam and online pratice

ராஜஸ்தான்

Q1. ராஜஸ்தான் RAJASTHAN
தொடக்கம் : 1.11.1956.
தலை நகர் : ஜெய்ப்பூர்.
பரப்பளவு : 3,42,239 ச.கி.மீ. (முதல்)
ஜனத்தொகை : 7,35,29,325 (8 வது)
மொழி : இந்தி, ஆங்கிலம்.
கல்வியறிவு : 67.68%
மாவட்டங்கள் : 33.
முக்கிய நகரங்கள் : ஜெய்ப்பூர், அஜ்மீர், பிக்கானீர், சித்தோர்கர், ஜெய்சல்மார், ஜோத்பூர்.
மாநில எல்லைகள் : பாகிஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், அரியானா, பஞ்சாப்.
மக்களவை தொகுதிகள் : 25.
மாநிலங்களவை தொகுதிகள் : 10.
சட்டமன்ற தொகுதிகள் : 200
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : பனஸ், சம்பல்.
மாநில மலர் : ரோஹிடா (Rohida).
மாநில மரம் :
மாநில பறவை : இந்தியன் பஸ்டர்ட் (கொக்கு வகை)
மாநில மிருகம் : ஒட்டகம்.
மாநில ஆளுநர் : கல்யாண் சிங்.
மாநில முதன் மந்திரி : வசுந்தரா ராஜே.


Q2. வரலாற்று சுருக்கம் :
இந்த பகுதி, ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த பல குறு நில மன்னர்களால் ஆளப்பட்டு வந்த பகுதி. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் அதே நிலை சுதந்திரம் வரை நீடித்தது. இந்தப் பகுதி சுதந்திரத்திற்கு பிறகு, அனைத்து குறுநில மன்னர் பகுதிகளையும் இணைத்து, 1.11.1956 முதல் ராஜஸ்தான் மாநிலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
Q3. ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்கள் யாவை?
அஜ்மீர், பிகானீர், சித்தோர்கர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மார், உதய்பூர்.
Q4. ராஜஸ்தான் என்பதன் பொருள் என்ன?
ராஜா - அரசர் ; ஸ்தான் - இடம் (வாழுமிடம்) = மன்னர்கள் வாழுமிடம்.
Q5. ராஜஸ்தான் மாநிலத்தின் மக்களவை தொகுதிகள் யாவை?
1. கங்கா நகர் (SC), 2. பிகானீர் (SC), 3. சுரு, 4. ஜூன்ஜூனு, 5. சிகார், 6. ஜெய்ப்பூர் புறநகர், 7. ஜெய்ப்பூர், 8. ஆள்வார், 9. பரத்பூர் (SC), 10. கராலி தோல்பூர் (SC), 11. தவுசா (ST), 12. அஜ்மீர், 13. டாங்க் ஸவாய் மாதோபூர், 14. நாகவுர், 15. பாலி, 16. ஜோத்பூர், 17. பார்மர், 18. ஜாலோர், 19. உதய்ப்பூர் (ST), 20. பன்ஸ்வாரா (ST), 21. சித்தோர்கர், 22. ராஜ்சமந்த், 23. பில்வாரா, 24. கோட்டா, 25. ஜலாவர் பரன். 
Q6. ராஜஸ்தான் மாநிலத்தின் மா நகராட்சிகள் யாவை?
1. ஜெய்ப்பூர், 2. ஜோத்பூர், 3. கோட்டா, 4. பிகானீர், 5. அஜ்மீர், 6. உதய்ப்பூர், 7. பரத்பூர்.
Q7. ராஜஸ்தான் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை...
10
Q8. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் யார்?
கோகுல் லால் அசாவா - 1948 (25.3.1948 - 17.4.1948).
Q9. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் பெண் முதல்மந்திரி யார்?
வசுந்தரா ராஜே சிந்தியா, டிசம்பர் 2003 - டிசம்பர் 2008.
Q10. ராஜஸ்தான் மாநிலத்தின் மாவட்டங்கள் யாவை?

1. அஜ்மீர் : பில்வாரா, ராஜ்சமந்த், பாலி, நகௌர், ஜெய்ப்பூர், டோங்க் மாவட்டங்கள் இதன் எல்லை. ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த மாவட்ட்த்தில் ஒரு சிறு பகுதி தார் பாலைவனத்திலுள்ளது. மொய்னுதீன் சிஸ்டி தர்கா (இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் ஆலயம்) மற்றும் புஷ்கர் (இந்துக்கள் புனிதமாக கருதும் தலம்) இந்த மா நிலத்தில் உள்ளது. இந்தியாவின் பழமையான் கல்லூரிகளில் ஒன்றான, 140 வருட பழமையான லார்டு மேயோ கல்லூரி இங்கு உள்ளது.
2. ஆள்வார் : ஹரியானா மா நிலம், பரத்பூர், தௌசா, ஜெய்ப்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. சரிஸ்கா தேசிய பூங்கா, புலிகள் சரணாலயம் இங்குள்ளது.
3. பன்ஸ்வாரா : குஜராத், மத்திய பிரதேச மா நிலங்கள், துங்காபூர், உதய்ப்பூர், ப்ரதாப்கர் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. வனப்பகுதி அதிகம் உள்ள மாவட்டம். பன்ஸ்வாரா நகரின் குறுக்கேஓடும் மாஹி ஆற்றில் சுமார் 1000 குட்டி தீவுகள் அமைந்திருப்பது இயற்கையின் அழகுக்கு எடுத்துக்காட்டு.
4. பரன் : மத்திய பிரதேச மா நிலம், ஜலாவர், கோட்டா மாவட்டங்கள் இதன் எல்லை. நான்கைந்து கோட்டைகளும், ஆலயங்களும் சுற்றுலா மையங்கள்.
5. பார்மர் : பாகிஸ்தான், ஜெய்சல்மார், ஜோத்பூர், ஜாலோர் மாவட்டங்கள் இதன் எல்லை. இந்த மாவட்ட்த்தின் ஒரு பகுதி தார் பாலைவனத்தில் உள்ளது. நெசவுத் தொழில் அதிகம். ப்லதோரா நகர் ""கை முத்திரை அச்சு"" (Hand Block Print) ஆடைகள் புகழ்பெற்றது. லூனி ஆற்றங்கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது.
6. பில்வாரா : சித்தோர்கர், ராஜ்சமந்த், அஜ்மீர், டாங்க், பண்டி மாவட்டங்களும், மத்திய பிரதேச மா நிலமும் இதன் எல்லை. நெசவாலைகளும், ஒரு பெரியதுணி சந்தை / மார்க்கெட்டும் உள்ளது.
7. பரத்பூர் : உத்திர பிரதேசம், ஹரியானா மா நிலங்களும், தால்பூர், தௌசா, கரௌலி, ஆள்வார் ஆகிய மாவட்டங்களும் இதன் எல்லை. க்யாலாதேவ் தேசிய பூங்கா மற்றும் சில கோட்டைகளும் உள்ளன.
8. பிகானீர் : பாகிஸ்தான், கங்கா நகர், ஹனுமாங்கர், சுரு, நகௌர், ஜோத்பூர், ஜெய்சல்மார் மாவட்டங்கள் இதன் எல்லை. தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது. இது ஒரு குறு நில மன்னர் பகுதி. இந்திரா காந்தி கால்வாய் இந்த மாவட்டத்தின் வழியே செல்கிறது. இங்குள்ள ""தேஷ் நோக்"" ஆலயம் புகழ் பெற்றது. இந்த ஆலயத்தில் எப்போதும் ஆயிரக்கணக்கான எலிகள் சுற்றிக் கொண்டேயிருக்கும். அவற்றில் வெள்ளை எலி கண்ணில் படுவது நல்ல சகுனம் என நம்பிக்கை.
9. பண்டி : கோட்டா, சித்தோர்கர், பில்வாரா, டான் க், சவாய் மாதோப்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலம்.
10. சித்தோர்கர் : மத்திய பிரதேச மா நிலம், ப்ரதாப்கர், உதய்பூர், ராஜ்சமந்த், பில்வாரா, பண்டி, கோட்டா மாவட்டங்கள் இதன் எல்லை. மேவார் ராஜவம்ச தலை நகர். 180 அடி உயர குன்றின் மீது, 280 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கோட்டை அதன் வேலைப்பாடு, அழகு, மிகப்பெரிய சுற்றுலா தலம்.
11. சுரு : ஹரியானா மா நிலம், ஜூன் ஜூனூன், சிகார், நகௌர், பிகானீர், ஹனுமான் கார் மாவட்டங்கள் இதன் எல்லை. ""ஹவேலி"" (Haveli) என்றழைக்கப்படும் அரண்மனை போன்ற, வேலைப்பாடு, கலைத்திறன், வர்ணபூச்சி ஆகியவற்றில் உயர்ந்த மாளிகைகள் நிறைந்த மாவட்டம்.
12. தௌசா : ஆள்வார், ப்ரத்பூர், கரௌலி, சவாய் மாத்தோபூர், ஜெய்ப்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
13. தோல்பூர் : மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் மா நிலங்கள் கரௌலி, பரத்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. முன்னாள் குறு நில மன்னர் பகுதி.
14. துங்கார்பூர் : குஜராத் மா நிலம், உதய்பூர், பன்ஸாரா ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. பழங்குடி மக்கள் நிறைந்த முன்னாள் குறு நில மன்னர் பகுதி.
15. ஹனுமான்கார் : ஹரியானா மா நிலம், கங்கா நகர், பிகானீர், சுரு மாவட்டங்கள் இதன் எல்லை. கோட்டை மற்றும் பத்ரகாளி கோயில் சுற்றுலா தலங்கள்.
16. ஜெய்ப்பூர் : அஜ்மீர், நகௌர், சிகார், ஆள்வார், தௌசா, டாங்க் மாவட்டங்கள் இதன் எல்லை. ""இளஞ்சிவப்பு நகரம்"" (Pink City) என அழைக்கப்படும் இந்த நகரம் மன்னர் சவாய் ஜெய்சிங் II வால் நிறுவப்பட்டது. மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலம்.
17. ஜெய்சல்மேர் : பாகிஸ்தான், பிகானீர், ஜோத்பூர், பார்மர் மாவட்டங்கள் இதன் எல்லை. தார் பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ல மாவட்டம். குறு நில மன்னர் பகுதி. கோட்டைகள், மாளிகைகள் என சுற்றுலா மையங்கள் உள்ள பகுதி. அணு சோதனை நட்த்தப்பட்ட போக்ரான் இந்த மாவட்ட்த்தில் உள்ளது.
18. ஜாலோர் : குஜராத் மா நிலம், பார்மர், பால், சிரோஹி மாவட்டங்கள் இதன் எல்லை. கனிம வளம் நிறைந்த மாவட்டம்.
19. ஜலாவார் : மத்திய பிரதேச மா நிலம், கோட்டா, பரண் மாவட்டங்களும் இதன் எல்லை. பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டம்.
20. ஜூன் ஜூனூன் : அரியானா, சுரு, சிகார் மாவட்டங்கள் இதன் எல்லை. இந்திய ராணுவத்திற்கு அதிகமான உறுப்பினர்களை அளிக்கும் மாவட்டம். பிர்லா குடும்பத்தினர் இந்த மாவட்ட த்தை சேர்ந்தவர்கள். ஹவேலி எனப்படும் மாளிகைகள் நிறைந்துள்ளது.
21. ஜோத்பூர் : பார்மர், ஜெய்சல்மார், பிகானீர், நகௌர், பாலி, ஜாலோர் மாவடங்கள் இதன் எல்லை. மார்வார் மன்னர்களின் தலைமையிடம். கோட்டைகள், அரண்மனைகள், ஜைனமத கோவில் மற்றும் இதர சுற்றுலா மையங்கள் உள்ள இடம்.
22. கரௌலி : துல்பூர், சவாய் மாதோப்பூர், ஜெய்ப்பூர், தௌசா, பர்த்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. குறு நில மன்னர் பகுதி.
23. கோட்டா : பரண், ஜலாவர், சித்தோர்கர், பண்டி, மாவட்டங்கள் இதன் எல்லை. ""கோட்டா"" வகை கைத்தறி நெசவுப் புடவைகள் புகழ் பெற்றவை.
24. நகௌர் : அஜ்மீர், பாலி, ஜோத்பூர், பிகானீர், சுரு, சிகார், ஜெய்ப்பூர் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. ஆரவல்லி மலைத்தொடரில் உள்ளது. சுற்றுலா தலம்.
25. பாலி : சிரோஹி, ஜோலோர், ஜோத்பூர், நகௌர், அஜ்மீர், ராஜ்சமந்த் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. 26. ப்ரதாப்கர் : மத்திய பிரதேசம், பன்ஸ்வாரா, துங்கார்பூர், சித்தோர்கர் மாவட்டங்கள் இதன் எல்லை. குறு நில மன்னர் பகுதி. சுற்றுலா பகுதி.
27. ராஜ்சமந்த் : உதய்ப்பூர், பாலி, அஜ்மீர், பில்வாரா, சித்தோர்கர் மாவட்டங்கள் இதன் எல்லை.
28. சவாய் மாதோப்பூர் : கோட்டா, டாங்க், கரௌலி மாவட்டங்கள் இதன் எல்லை.
29. சிகார் : ஜெய்ப்பூர், நகௌர், சுரு, ஜூன் ஜூனூன், மாவட்டங்கள் மற்றும் ஹரியானா மா நிலம் இதன் எல்லை. செப்பு கனிம வளம் அதிகம் நிறைந்த மாவட்டம்.
30. சிரோஹி : குஜராத் மா நிலம் மற்றும் ஜாலோர், பாலி, உதய்ப்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. முன்னாள் குறு நில மன்னர் பகுதி. ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற கோடைவாசத்தலம் மவுண்ட் அபு, ஜைன மத கோவில்கள், இதர இந்து மத கோவில்களும் நிறைந்துள்ளது.
31. ஸ்ரீ கங்கா நகர் : பாகிஸ்தன் மற்றும் பிகானீர், ஹனுமான் கர் மாவட்டங்கள் இதன் எல்லை. பாலைவனத்திலிருக்கும் இந்த மாவட்டம். மகாராஜா கங்காசிங் அவர்களின் முயற்சியால் (காங் வாய்க்கால்) பசுமை மாவட்டமாக மாறியுள்ளது. விளைச்சலில் ராஜஸ்தானின் முன்னோடி மாநிலம்.
32. டாங்க் : பண்டி, பல்வாரா, அஜ்மீர், ஜெய்ப்பூர், சாவாய் மாதோபூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
33. உதய்ப்பூர் : குஜராத் மா நிலம், துங்கார்பூர், ப்ரதாப்கர், சித்தோர்கர், ராஜாசம்ந்த், சிரோஹி மாவட்டங்கள் இதன் எல்லை. மேவார் ராஜ்யத்தின் தலை நகர். பல அழகான ஏரிகள் உள்ளது. ஃபத்தேஹ் சாகர் ஏரியில் இரண்டு தீவுகள் - ஒன்றில் வானிலை ஆய்வு மையம், மற்றொன்றில் ""நேரு பூங்கா""வும் உள்ளது. பிச்சோலா ஏரியின் மத்தியில் அழகான அரண்மனை, மற்றும் கும்பார்கர், கெனாரஸ் மாளிகைகள் ஆதி நாதர் கோவில் ஆகியவை சுற்றுலா தலங்கள்.
Q11. ராஜஸ்தானில் கிடைக்கும் இயற்கை கனிமங்கள் யாவை?
செப்பு, தாமிரம், ஜிப்சம், பளிங்கு, ஆஸ்பெஸ்டாஸ், ஈயம், ஃபாஸ்பேட், கால்ஸைட், களிமண், சுண்ணாம்பு, கல்.
Q12. ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் யாவை?


ஜெய்ப்பூர் :
1.   தலை நகர் மாவட்டம் / நகரம்.
2.   1727ல் மகாராஜா ஜெய்சிங் II அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது.
3.   ""இளஞ்சிவப்பு நகரம்"" (Pink City) என அழைக்கப்படுகிறது.
4.   நகர்கர் கோட்டை - 1734ல் மன்னர் சவாய் ஜெய்சிங் I அவர்களால் கட்டப்பட்டது.
5.   ஆம்பர் மாளிகை - 16வது நூற்றாண்டில், ஒரு குன்றின் மீது, மகாராஜா மான்சிங்கால் தொடங்கப்பட்டு, சவாய் ஜெய்சிங் அவர்களால் முடிக்கப்பட்ட அழகான மாளிகை.
6.   ஜெய்கர் கோட்டை - சீல் கா தீலா என அழைக்கப்படும், மலை மேல் 1726ல் சவாய் ஜெய்சிங் III ஆல் கட்டப்பட்ட கோட்டை.
7.   ஜந்தர் மந்தர் - 1727 - 34ல், மகாரஜா ஜெய்சிங் II ஆல் கட்டப்பட்ட, வான்வெளி சம்பந்தப்பட்ட அருங்காட்சியகம்.
8.   ஜல் மஹால் : மன் சாகர் ஏரியின் நடுவில் கட்டப்பட்டுள்ள அழகான மாளிகை.
9.   ஹவா மஹால் - 1799ல் மகாராஜா சவாய் ப்ரதாப் சிங் அவர்களால், கிருஷ்ணரின் கிரீடம் போன்று வடிவமைக்கப்பட்டு, சிகப்பு கற்களால், 953 சாளரங்களுடன் கட்டப்பட்டுள்ள கலை நயம் வாய்ந்த மாளிகை.
10. இவை தவிர்த்து இன்னும் சில மாளிகைகள், இந்து மத கோவில்கள் உள்ளன.
11. ஜெய்சல்மார் : தார் பாலைவனத்தில் அமைந்துள்ள மாவட்டம். மன்னர் பகுதியாதலால், கோட்டைகள், மாளிகைகள் உள்ளன. அணு சோதனை நட்த்தப்பட்ட பொக்ரான் இந்த மாவட்டத்தில் உள்ளது.
12. ஜாலோர் : கோட்டைகள், மாளிகைகள் நிறைந்த சுற்றுலா மாவட்டம். கனிமங்கள் நிறைந்த மாவட்டம்.
அஜ்மீர் : ஆரவல்லி, மலைத்தொடரில் அமைந்துள்ளது. மொய்னுதீன் சிஷ்டி தர்கா - இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் தலம், மற்றும் ""புஷ்கர்"" இந்துக்கள் புனித தலம், இந்தியாவின் 140 வருட பழமையான மேயோ கல்லூரி ஆகியவை உள்ள தலம்.
13. மவுண்ட் அபு : சிரோஹி மாவட்டத்தில் உள்ள மலை வாசஸ்தலம், தில்வாரா ஜைன மத கோவில்கள் நிறைந்த அழகான சுற்றுலா தலம்.
14. உதய்ப்பூர் : ஏரிகள் நிறைந்த நகரம். ஃபத்தேஹ் சாகர், பிச்சோலா ஏரிகள், கும்பார்கர், கெனாரஸ் மாளிகைகள் மேலும் பல சுற்றுலா மையங்கள் உள்ளன.
15. சித்தோர்கர் : மிகப்பெரிய மலைக்கோட்டை.
16. பிகானீர் : பாலைவனத்திலுள்ள மாவட்டம். பல நூறு எலிகள் விளையாடிக்கொண்டிருக்கும் தேஷ் நோக் கோவில் மற்றும் சில சுற்றுலா மையங்கள் உள்ள தலம்.
17. பரக்பூர் : தேசிய பூங்காக்களும் கோட்டைகளும் நிறைந்த ஊர்.

Q13. ராஜஸ்தான் மா நிலத்தில் அதிகமாக வாழும் பழங்குடியினர் இனம் எது?
மீனா.
Q14. ராஜஸ்தான் மாநிலத்தின் சில முக்கிய பிரபலங்கள் யாவர்?

1.   மேஜர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் - ராணுவத்தில் உயர் அதிகாரி - 2004 ஒலிம்பிக் துப்பாக்கி போட்டியில் வெள்ளி பதக்கம் - பாரதீய ஜனதா கட்சி அரசியல்வாதி 2015 நிலையில் மத்திய இணை அமைச்சர்.
2.   கண்ஷ்யாம் தாஸ் பிர்லா குடும்பத்தினர் - தொழிலதிபர்கள்.
3.   லஷ்மி மிட்டல் குடும்பத்தினர் - தொழிலதிபர்கள்.
4.   ஜம்னாலால் பஜாஜ் குடும்பத்தினர் - தொழிலதிபர்கள்.
5.   பைரோன் சிங் ஷேகாவத் - துணை குடியரசு தலைவர்.
6.   கைலாஷ் ஷங்காலா - சுற்று சூழல் ஆர்வலர் - ""இந்தியாவின் புலி மனிதன்"" என அழைக்கப்படுபவர்.
7.   ஜஸ்வந்த் சிங், நட்வர் சிங், கிரிஜா வ்யாஸ், ராஜேஷ், ச்ச்சின் பைலட், வசுந்தரா ராஜே சிந்தியா - முக்கிய அரசியல்வாதிகள்.
8.   ஸ்ரீ ராம் சிங் - புகழ்பெற்ற தடகள வீரர்.
9.   மகாராஜா கர்ணி சிங் - முன்னாள் அரசர் மற்றும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்.
10. லிம்பா ராம் - புகழ்பெற்ற வில் அம்பு வீரர்.
11. சலீம் துரானி, பார்த்தசாரதி சர்மா, ஹனுமந்த் சிங், விக்ரம் சோலங்கி (இங்கிலாந்து)- கிரிக்கெட் வீரர்கள்.
12. குஷி ராம், ராதேஷ்யாம், அஜ்மேர்சிங் - கூடைபந்து வீரர்கள்.
13. மெஹ்தி ஹசன், பண்டிட் விஸ்வமோகன் பட், இலா அருண் - இசை வல்லு நர்கள்."