பஞ்சாப்
Q1. பஞ்சாப் PUNJAB
தொடக்கம் : 15.08.1947.
தலை நகர் சந்திகார்.
பரப்பளவு : 50,362 ச.கி.மீ. (19 வது நிலை)
ஜனத்தொகை : 2, 77,04,236
மொழி : பஞ்சாபி, ஆங்கிலம்.
கல்வியறிவு : 76.68%
மாவட்டங்கள் : 22.
முக்கிய நகரங்கள் : அமிர்தசரஸ், பட்டியாலா, லூதியானா, ஜலந்தர், மொஹாலி.
மாநில எல்லைகள் : இமாச்சல பிரதேசம், சந்திகார், அரியானா, ராஜஸ்தான், பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர்.
மக்களவை தொகுதிகள் :13
மா நிலங்களவை தொகுதிகள் : 7
சட்டமன்ற தொகுதிகள் : 117
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : ஜீலம், செனாப், ரவி, பியர்ஸ், சட்லெஜ்.
மாநில மலர் :
மாநில மரம் : இந்திய ரோஸ்வுட்.
மாநில பறவை : கழுகு இனம் (Northern Goshawk)
மாநில மிருகம் : Black Buck
மாநில ஆளுநர் : வி.பி.சிங் பத்னோர்
மாநில முதன் மந்திரி : காப்டன் அமரீந்தர் சிங்.
Q2. வரலாற்று சுருக்கம் :
பஞ்சாபின் சரித்திரம் சிந்து சமவெளி நாகரீகத்துடன் தொடர்புடையது. காலம் காலமாக சிறு சிறு மன்னர் பகுதிகளாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. ஆங்கிலேயர்களுக்கு முன், சிறு சிறு மன்னர்களின் கூட்டுறவு நிர்வாகமாக இருந்து வந்தது. ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்து, (இன்றைய பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம், சந்திகர், டெல்லி ஆகிய பகுதிகள் உள்ளடக்கிய) பஞ்சாப் மாநிலமாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இதன் ஒரு பகுதி பாகிஸ்தானுக்கும், இமாச்சல பிரதேசம், டெல்லி, சந்திகர் யூனியன் பிரதேசங்களாகவும் உருவெடுத்து மீதமுள்ள பகுதி (பஞ்சாப் + அரியானா) பஞ்சாப் மாநிலமாக நிர்வகிக்கப்பட்டது. பிறகு 1.1.196 அன்று ஹரியானா பிரிக்கப்பட்டு தனி மாநிலமானது. பஞ்சாப் என்ற புதிய மாநிலம் 1.1.196 முதல் செயல்படுகிறது.
Q3. "பஞ்சாப்" என்பதன் பொருள் என்ன?
"பஞ்ஜ்"" என்றால் ஐந்து, ""ஆப்"" என்றால் ஆறு (நதி) (பாரசீக மொழியில்). இந்த மாநிலத்தில் ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஐந்து ஆறுகள் ஓடுவதை குறிப்பிடும் விதமாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Q4. பஞ்சாப் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் யார்?
கோபிசந்த் பார்கவா - 1947 - 1949.
Q5. பஞ்சாப் மாநிலத்தின் மக்களவை தொகுதிகள் யாவை?
1. குர்தாஸ்பூர், 2. அம்ரித்சர், 3. கடூர் சாஹிப், 4. ஜலந்தர் (SC), 5. ஹோஷியார்பூர் (SC), 6. ஆனந்த்பூர் சாஹிப், 7. லூதியானா, 8. ஃபதேஹ்கர் சாஹிப் (SC), 9. ஃப்ரீத்கோட்(SC), 10. ஃபிரோஸ்பூர், 11. பதிந்தா, 12. சங்ரூர், 13. பட்டியாலா.
Q6. பஞ்சாப் மாநிலத்தின் மாநகராட்சிகள் யாவை?
1. லூதியானா, 2. பட்டியாலா, 3. அமிர்தசரஸ், 4. ஜலந்தர், 5. பதிந்தா, 6. மொஹாலி, 7. பத்தான் கோட், 8. மோகா, 9. பக்வாரா, 10. ஹோஷியார்பூர்.
Q7. பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரங்கள் யாவை?
அமிர்தசரஸ், பட்டியாலா, லூதியானா, ஜலந்தர், மொஹாலி.
Q8. பஞ்சாப் மாநிலத்தின் மாவட்டங்கள் யாவை?
1. ஹோஷியார்பூர் : இமாச்சல பிரதேச மா நிலம், குருதாஸ்பூர், கபூர்தாலா, ஜலந்தர், நவண்சஹர், ரூப் நகர் மாவட்டங்கள் இதன் எல்லை. வனப்பகுதி அதிகமுள்ல மாவட்டம். பருத்தி விளைச்சல் முக்கிய விவசாய தொழில்.
2. ஜலந்தர் : லூதியானா, மோகா, ஃப்ரோஸ்பூர், கபூர்தாலா ஹோஷியார்பூர், நவன்ஷகர் மாவட்டங்கள் இதன் எல்லை. தொழில்துறையில் மிகவும் முன்னேற்றமடைந்த மாவட்டம். விளையாட்டுப் பொருட்கள், தோல் பொருட்கள், சிறுசிறு கருவிகள், மருத்துவ கருவிகள், சிறிய அளவிலான இயந்திரங்கள் மற்றும் பல பொருட்கள் தயாரிப்பில் முன்னேறியுள்ல மாவ்ட்டம். இந்திய கிரிக்கெட் வீர்ர் ஹர்பஜன் சிங் இந்த மாவட்ட்த்தைச் சேர்ந்தவர். டிசம்பர் மாதத்தில் நடைபெறும் பொருட்காட்சி மிகவும் புகழ்பெற்றது.
3. அமிர்தசரஸ் : பாகிஸ்தான் மற்றும் தரன் தரன், கபூர்தாலா, குருதாஸ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. அமிர்தசரஸ் என்பது ""அமிர்த தடாகம்"" என்று பொருள். 1581 - 1606 காலத்தில், ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜுன் தேவ் அவர்களால் கட்டப்பட்ட, ஹர் மந்திர் சாஹேப் எனப்படும் பொற்கோவில் உள்ளது. விவசாயத்துடன், சுற்றுலா மற்றும் தொழிற்துறையே மக்களின் முக்கிய தொழில். இந்த நகரில் இரண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துயர நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
1. ஜெனரல் டையர் அவர்களால் நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919.
2. 1984ல் சீக்கிய தீவிரவாதிகளை பொற்கோவிலில் இருந்து வெளியேற்ற நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை - OPERATION BLUE STAR. ஸ்ரீமதி இந்திராகாந்தியால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பிற்காலத்தில் அவருடைய மறைவுக்குக் காரணமாய் அமைந்தது.
4. பர்ணாலா : சங்ரூர், மன்ஸா, பதிந்தா, மோகா, லூதியானா மாவட்டங்கள் இதன் எல்லை.
5. பதிந்தா : ஹரியானா மா நிலம், முக்த்ஸார், ஃபரீத்கோட், மோகா, பர்னாலா, மன்ஸா மாவட்டங்கள் இதன் எல்லை. பருத்தி விளைச்சல் அதிகம்.
6. ஃபரீத்கோட் : ஃபிரோஸ்பூர், மோகா, பதிந்தா, முக்த்ஸார், ஃபாலில்கா மாவட்டங்கள் இதன் எல்லை. சிறு தொழில்கள் நிறைந்த மாவட்டம்.
7. ஃபத்தேஹ்கர் சாஹிப் : பட்டியாலா, சங்ரூர், லூதியானா, ரூப் நகர், சந்திகர் (UT) மாவட்டங்கள் இதன் எல்லை.
8. ஃபாஸில்கா : பாகிஸ்தான், ராஜஸ்தான் மா நிலம் மற்றும் ஃபிரோஸ்பூர், ஃபரீத் கோட், முக்த்சார் மாவட்டங்கள் இதன் எல்லை.
9. ஃபிரோஸ்பூர் : பாகிஸ்தான், முக்த்சார், ஃபரீத்கோட், மோகா, ஜலந்தர், கபூர்தாலா, தரன் தரன் மாவட்டங்கள் இதன் எல்லை. விவசாயம் முக்கிய தொழில்.
10. குர்தாஸ்பூர் : பாகிஸ்தான், அமிர்தசரஸ், கபூர்தாலா, ஹோஷியார்பூர், பதான் கோட் மாவட்டங்கள் இதன் எல்லை. அழகான மாவட்டம்.
11. லூதியானா : ஃபத்தேஹ்கர் சாஹிப், சங்ரூர், பர்னாலா, மோகா, ஜலந்தர், நவன்ஷஹர், எஸ்.ஏ.எஸ். நகர் மாவட்டங்கள் இதன் எல்லை. தொழில்துறையில் மிகவும் முன்னேற்றமடைந்த மாவட்டம். சைக்கிள், இரு சக்கர வாகனம், ஆயத்த ஆடைகள் மற்றும் சிறு தொழில்கள் நிறைந்த மாவட்டம்.
12. கபூர் தாலா : ஜலந்தர், ஃபிரோஸ்பூர், தரன் தரன், அம்ரித்சர், குருதாஸ்பூர், ஹோஷியார்பூர் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. ரயில்பெட்டி தொழிற்சாலை மற்றும் சில சுற்றுலா தலங்களும் உள்ளன. இந்தியாவின் முதல் பெண் மந்திரி ராஜ் குமாரி அம்ரித்கவுர் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
13. மான்சா : ஹரியானா மா நிலம், பதிண்டா, பர்னாலா, சங்ரூர் மாவட்டங்கள் இதன் எல்லை. பருத்தி விளைச்சல் அதிகம்.
14. மோகா : ஃபரீத்கோட், ஃபிரோஸ்பூர், ஜலந்தர், லூதியானா, பர்னாலா, பதிண்டா மாவட்டங்கள் இதன் எல்லை. கோதுமை மற்றும் நெற்பயிர் அதிகம் விளையும் மாவட்டம்.
15. அஜித்நகர்: ஹரியானா மா நிலம், ரூப் நகர், ஃபதேஹ்கர் சாஹிப், பட்டியாலா மாவட்டங்கள் இதன் எல்லை.
16. ரோபர் : ரூப் நகர் என்றும் அழைக்கப்படுகிறது. இமாச்சலப்பிரதேசம், ஹோஷியார்பூர், நவன்ஷஹர், சந்திகர், அஜித் நகர் மாவட்டங்கள் இதன் எல்லை.
17. முக்த்சார் : ராஜஸ்தான் மா நிலம், ஃபாஸில்கா, ஃபரீத்கோட், பதிண்டா மாவட்டங்கள் இதன் எல்லை. சீக்கிய ஆலயங்களும், ""மாகி மேளா"" என்ற திருவிழாவும் புகழ் பெற்றது.
18. நவன் ஷஹர் : ஹோஷியார்பூர், ஜலந்தர், லூதியானா, ரூப் நகர் மாவட்டங்கள் இதன் எல்லை.
19. சங்ரூர் : ஹரியானா மா நிலம், மன்சா, பர்னாலா, லூதியானா, ஃபத்தேஹ்கர் சாஹிப், பட்டியாலா மாவட்டங்கள் இதன் எல்லை.
20. பட்டியாலா : ஹரியானா மா நிலம், சங்ரூர், ஃபத்தேஷ்கர் சாஹிப், அஜித்கர் மாவட்டங்கள் இதன் எல்லை. முன்னாள் குறு நில மன்னர் பகுதி-கோட்டைகளும், மாளிகைகளும் நிறைந்த மாவட்டம். தேசிய விளையாட்டு பயிற்சி கல்லூரி மற்றும் பல உயர் கல்வி நிறுவன்ங்கள் மற்றும் எல்லாவிதமான தொழிற்சாலைகளும் உள்ளன.
21. பதான்கோட் : ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தான் மற்றும் குருதாஸ்பூர் மாவட்டம் இதன் எல்லை.
22. தரன் தரன் : பாகிஸ்தான், அமிர்தசரஸ், கபூர்தலா, ஃபிரோஸ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
Q9. பஞ்சாபின் தலை நகர் சந்திகரைப் பற்றி...
1. சந்திகர் பஞ்சாபின் பகுதி அல்ல. ஒரு யூனியன் பிரதேசம்.
2. மிகவும் திட்டமிட்டு, அமெரிக்க வல்லு நர் ஆல்பெர்ட் மெயெர், ஃப்ரெஞ்ச் வல்லு நர் லெ கார்புஸியர் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட ஒரு அழகான நகரம். 1950களில் வடிவமைக்கப் பட்டது.
3. பஞ்ச்குலா என்னும் இட த்தில் உள்ள ""சந்தி"" (CHANDI) என்ற பெண் தெய்வத்தின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுகிறது.
4. ஒரு யூனியன் பிரதேசமாக இருந்து இரண்டு மாநிலங்களுக்கு தலை நகரமாக இருக்கும் நகரம்.
5. அழகான வடிவமைப்பு, தோட்டங்கள், குப்பை என்று நிராகரிக்கப்பட்ட பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட தோட்டம் என சில சுற்றுலா மையங்கள் உள்ளன.
Q10. பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய நடனம் எது?
பாங்ரா (Bangra).
Q11. பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய விழா...
பைசாகி (Baisakhi).
Q12. பஞ்சாப் மாநிலத்தால் எந்த விளையாட்டுக்கு உலகின் புகழ்பெற்ற வீர ர்கள் அதிகமான அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்?
ஹாக்கி.
Q13. பஞ்சாப் மாநிலத்தின் புகழ்பெற்ற கைவேலைப் பொழுதுபோக்கு என்ன?
ஃபூல்காரி எம்ப்ராய்டரி.
Q14. பொற்கோவில் அமைந்துள்ள நகரம் எது?
அமிர்தசரஸ்.
Q15. ரயில் பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ள நகரம் எது?
கபூர் தாலா.
Q16. பஞ்சாப் மாநிலத்தின் எந்தெந்த மாவட்டங்கள் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது?
பதான் கோட், குருதாஸ்பூர், அமிர்தசரஸ், தரன் தரன், பிரோஸ்பூர், ஃபாசில்கா.
Q17. பஞ்சாப் மாநிலத்தின் பிரபலங்கள் சிலர்...
1. லாலா லஜ்பத் ராய் - சுதந்திர போராட்ட தலைவர்.
2. டாக்டர் மன்மோகன் சிங் - முன்னாள் பிரதம மந்திரி, நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி கவர்னர்.
3. ஹர்பஜன் சிங், மொஹிந்தர் அம்ர் நாத், நவ்ஜோத்சிங் சித்து, பிஷன் சிங் பேடி, மாண்டி பனேசர் (இங்கிலாந்து) கிரிக்கெட் வீர ர்கள்.
4. தர்மேந்திரா, தேவ் ஆன்ந்த், சேட்டன் ஆன்ந்த், அஜய் தேவ்கன் போன்ற ஹிந்தி சினிமா நடிகர்கள்.
5. ஷஹீத் பகத் சிங் - சுதந்திர போராட்ட தியாகி.
6. மில்கா சிங் - ""பறக்கும் சீக்கியர்"" எனப்படும் தடகள வீர்ர். ஒலிம்பிக்கில் பங்கு பெற்றவர்.
7. கியானி ஜெயில் சிங் - முன்னாள் குடியரசுத்தலைவர்.
8. தலீப் சிங் சௌண்ட் - அமெரிக்க முதல் சீக்கிய சட்டமன்ற உறுப்பினர்.
9. குருதாஸ் சிங் மான் - பாடகர், நடிகர்.
10. தலேர் சிங் - பாடகர்.
11. மாண்டேக் சிங் அலுவாலியா - பொருளாதார நிபுணர், திட்ட கமிஷன் தலைவராக இருந்தவர்.
இன்னும் பலர் எல்லா துறைகளிலும் புகழ் பெற்றவர்கள் உள்ளனர்.