ஒடிசா
Q1. ஒடிசா ODISHA
தொடக்கம் :01.04.1936/1.11.1956.
தலை நகர் : புவனேஷ்வர்.
பரப்பளவு : 1,55,820 ச.கி.மீ. (9 வது நிலை)
ஜனத்தொகை : 4, 19,47,358 (11 வது)
மொழி : ஒரியா, ஆங்கிலம்.
கல்வியறிவு : 73.45%
மாவட்டங்கள் : 30.
முக்கிய நகரங்கள் : புவனேஷ்வர், கட்டாக், ரௌர்கேலா. பாலசூர், பெரம்பூர், குர்தா, பூரி, சம்பல்பூர், போலங்கீர்.
மாநில எல்லைகள் : மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், வங்கக்கடல்.
மக்களவை தொகுதிகள் : 21
மாநிலங்களவை தொகுதிகள் : 10
சட்டமன்ற தொகுதிகள் : 147
மாநில சின்னம் : குதிரை.
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : சுபர்ணரேகா, புதபலங்கா, பைத்தாராணி, ப்ரம்மணி, மகாநதி, ருஷிகுல்யா.
மாநில மலர் : அசோகா.
மாநில மரம் : அரச மரம்.
மாநில பறவை : Blue Jay
மாநில மிருகம் : சம்பார் மான்.
மாநில ஆளுநர் : கணேஷி லால்.
மாநில முதன் மந்திரி : நவீன் பட்நாயக்.
Q2. வரலாற்று சுருக்கம் :
கலிங்க வம்சத்தால் ஆளப்பட்டு வந்த பகுதி. பிறகு பல ராஜ வம்சங்களாலும், இஸ்லாமிய அரசர்களாலும், மராத்தியர் மன்னர்களாலும் ஆளப்பட்டு 1803ல் இரண்டாவது ஆங்கிலேய மராத்தா போருக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் வசம் வந்தது. 1936ல் இந்த பகுதி ஒரிஸா மாகாணமாக பெயரிடப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, 24 குறுநில மன்னர் பகுதிகளை இணைத்து, 1950ல் ஒரிசா மாகாணமாக அங்கீகரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
Q3. ஒடிசாவின் முதல் முதலமைச்சர் யார்?
ஹரே கிருஷ்ண மஹ்தாப் - 1947 - 1950.
Q4. ஒடிசாவின் முக்கிய நகரங்கள் யாவை?
கட்டாக், புவனேஷ்வர், ரௌர்கேலா, பாலசூர், பெர் ஹாம்பூர், சம்பல்பூர், போலங்கீர், குர்தா, பூரி.
Q5. ஒடிசாவின் மக்களவை தொகுதிகள் யாவை?
1. பர்கார், 2. சுந்தர்கார் (ST), 3. சம்பல்பூர், 4. கியோன் ஜார் (ST), 5. மயூர்பஞ்ச் (ST), 6. பாலசூர், 7. பத்ரக், 8. ஜெய்ப்பூர் (SC), 9. தெங்கனால், 10. போலங்கிர், 11. கலஹந்தி, 12. நப்ரங்பூர் (ST), 13. கந்தாமல், 14. கட்டாக், 15. கேந்த்ரபாரா, 16. ஜகத்சிங்பூர் (SC), 17. பூரி, 18. புவனேஷ்வர், 19. அஸ்கா, 20. பெர் ஹாம்பூர், 21. கோராபுட் (ST).
Q6. ஒடிசாவின் மாநகராட்சிகள் யாவை?
1. புவனேஷ்வர், 2. கட்டாக், 3. ரௌர்கேலா, 4. ப்ரஹாம்பூர், 5. சம்பல்பூர்.
Q7. ஒடிசாவின் தலை நகர் புவனேஷ்வர் பற்றி?
1. புவனேஷ்வர்க்கு முன்பாக கட்டாக் தான் தலை நகராக இருந்த து. (1948ல் மாறியது).
2. புவனேஷ்வர் என்பதற்கு ""பிரபஞ்சத்திற்கு காவலன்"" எ4ன சிவபெருமானை குறிப்பதாக அமைந்துள்ளது.
3. ஒடிசாவின் பழமையான பல்கலைக்கழகம் ""உத்கல் பல்கலைக்கழகம்"" இங்கு அமைந்துள்ளது.
4. குர்தா மாவட்ட த்தில் உள்ளது.
5. இந்நகரைச் சுற்றி தயா மற்றும் குவாகாய் ஆறுகள் ஓடுகின்றன.
6. சந்திரிகா வனவிலங்குகள் சரணாலயம், நந்தாகானன் உயிரியல் பூங்கா இங்குள்ளது.
7. லிங்கராஜ், முக்தேஸ்வரா கோவில்கள் மிகவும் புகழ் பெற்றவை.
8. தௌலகிரி, உதயகிரி மற்றும் கந்தகிரி ஜைன மதக்கோயில்கள், விஷ்வ சாந்தி கோவில் ஆகியவை முக்கிய சுற்றுலா தலங்கள்.
9. எல்லா துறைகளிலும் தேவையான உயர்கல்வி நிலையங்களும், மத்திய அரசு அலுவலகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்துள்ளன.
10. கிழக்கு கடற்கரை ரயில்வே தலைமையகம் இங்குள்ளது.
Q8. ஒடிசாவின் மாவட்டங்கள் யாவை?
1. அங்கூல் : புத், சம்பல்பூர், தேவ்கர், கியோன் ஜார், த்ங்கணால், கட்டாக், நாராயண்கர் மாவட்டங்கள் இதன் எல்லை. கனிம வளம் நிறைந்த மாவட்டம். அதனால் தொழிற்துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. வனவிலங்கு சரணாலயம், கோவில்கள் சுற்றுலா தலங்கள். ஹோலி பண்டிகையின் போது ரத திருவிழா மிகவும் புகழ்பெற்றது.
2. போலங்கிர் : காலஹந்தி, நுவாபாடா, பார்கர், சுபர்ணாபூர், புத் மாவட்டங்கள் இதன் எல்லை. ராணுவ தளவாட உற்பத்தி தொழிர்சாலை இங்குள்ளது.
3. பௌத் : கந்தாமல், காலஹந்தி, பாலாங்கிர், சுப்ரானாபூர், அங்கூல், நயாகர் மாவட்டங்கள் இதன் எல்லை.
4. பத்ரக் : வங்காள விரிகுடா, கேந்த்ராபாரா, ஜாஜ்பூர், கியோன் ஜார், பாலேஷ்வர் மாவட்டங்கள் இதன் எல்லை. பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது.
5. பார்கர் : சத்தீஸ்கர் மா நிலம், ஜார்ஸ்குடா, சம்பல்பூர், சுபர்னாபூர், பாலாங்கீர், நுவாபாடா மாவட்டங்கள் இதன் எல்லை. ஹிராகுட் அணை இந்த மாவட்ட த்தில் உள்ளது. விவசாயம் முக்கிய தொழில். சம்பல்பூர் கைத்தறி பருத்தி துணிகள் இங்கு உருவாகிறது.
6. பாலாசூர் : (பாலேஷ்வர்) - வங்காள விரிகுடா, பத்ரக், கியோன் ஜார், மயூர்பஞ்ச் மற்றும் மேற்கு வங்காள மா நிலம் இதன் எல்லை. பல சுற்றுலா தலங்கள் உள்ள கடலோர அழகான மாவட்டம். ஏவுகணைகள் பரிசோதனை செய்யும் இடம் - சாந்திபூர் - இந்த மாவட்ட த்தில் உள்ளது.
7. கட்டாக் : ஒடிசாவின் முன்னாள் தலை நகரம் புவனேஷ்வர், நயாகர், பௌத், அங்குல், தெங்கனால், ஜாஜ்பூர், கேந்த்ரபாரா, ஜகத்சிங் மாவட்டங்கள் இதன் எல்லை. வெள்ளி, தங்கம், பித்தளை, கைவேலைப்பொருட்கள், நெசவு பொருட்கள், விவசாயம் முக்கிய தொழில். மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனமும் மற்றும் பல உயர்கல்வி நிறுவன ங்களும் உள்ளன.
8. தேபாகர் : அங்குல், சம்பல்பூர், சுந்தர்கார் மாவட்டங்கள் இதன் எல்லை.
9. தென்கனால் : கட்டாக், அங்குல், கியோன் ஜார், ஜாஜ்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. அடர்த்தியான காடுகள் நிறைந்த முன்னாள் குறு நில மன்னர் பகுதி. மகா சிவராத்திரி மிக சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. விவசாயம் மற்றும் சிறிதளவு தொழில் வளர்ச்சியும் உள்ள மாவட்டம்.
10. கஞ்ஜம் : சத்ராபூர் இதன் தலை நகர். வங்காள விரிகுடா, கஜபதி, கந்தாமல், நயாகர், குர்தா மாவட்டங்கள் இதன் எல்லை. கடலோர மாவட்டம். இந்த மாவட்ட்த்தில் உள்ள பெர் ஹாம்பூர் வெள்ளி, பித்தளை கைவேலைப்பாடு பொருட்களுக்கு புகழ் பெற்றது.
11. கஜபதி : பரலாக்கேமுண்டி இதன் தலை நகர். ஆந்திர பிரதேச மா நிலம், ராயகடா, கந்தாமல், கஞ்ஜம் மாவட்டங்கள் இதன் எல்லை.
12. ஜார்ஸ்குடா : சத்தீஸ்கர் மா நிலம், சுந்தர்கர், சம்பல்பூர், பார்கர் மாவட்டங்கள் இதன் எல்லை. நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன.
13. ஜாஜ்பூர் : கேந்த்ரபாரா, கட்டாக், தென்கெனால், கியோன் ஜார், பத்ரக் மாவட்டங்கள் இதன் எல்லை. இரும்பு உருக்காலைகள், விவசாயம் முக்கிய தொழில்.
14. ஜகத்சிங்பூர் : வங்காள விரிகுடா, பூரி, கட்டாக், கேந்த்ரபாரா மாவட்டங்கள் இதன் எல்லை. பாரதீப் துறைமுகம் இங்கு அமைந்துள்ளது.
15. கோர்தா : குர்தா இதன் தலை நகர். வங்காள விரிகுடா, கஞ்ஜம், நயாகர், புவனேஷ்வர், பூரி இதன் எல்லை. கடலோர மாவட்டம்.
16. கெண்டுஜார் (கியோன் ஜார்) : ஜார்க்கண்ட் மா நிலம், சுந்தர்கர், அங்கூல், தென் கெனால், ஜாஜ்பூர், பத்ரக், பாலேஷ்வர், மயூர்பஞ்ச் மாவட்டங்கள் இதன் எல்லை. கனிம வளம் மிகுந்த மாவட்டம்.
17. காளஹஸ்தி : பவானி பாட்னா இதன் தலைனகர். சத்தீஸ்கர் மா நிலம், நுவபாடா, பாலாங்கிர், பௌத், கந்தாமல், ராயகடா, நப்ரங்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. முன்னாள் குறு நில மன்னர் பகுதி. பாக்ஸைட்,க்ராஃபைட் சுரங்கத் தோண்டுதல், விவசாயம் ஆகியவை முக்கிய தொழில். பின்தங்கிய மாவட்டம்.
18. கந்தாமல் : ஃபூல்பனி இதன் தலை நகர். ராயகடா, காளஹஸ்தி, பௌத், நயாகர், கஞ்ஜம், கஜபதி மாவட்டங்கள் இதன் எல்லை. பூல் பனி ஒரு சுற்றுலா தலம்.
19. கோராபுட் : சத்தீஸ்கர் மா நிலம், ஆந்திரபிரதேச மா நிலம், மல்காங்கிரி, நப்ரங்பூர், ராயகடா மாவட்டங்கள் இதன் எல்லை. கனிமங்கள் நிறைந்துள்ள மாவட்டம். மலை வாழ் மக்கள் நிறைந்த மாவட்டம். ஹிந்துஸ்தான் எரோனாடிக்ஸ் லிமிடெட்டின் ஒரு கிளையும், அனல் மின் நிலையங்களும் அமைந்துள்ளது.
20. கேந்த்ராபாரா : கடலோர மாவட்டம், வங்காள விரிகுடா, ஜகத்சிங்பூர், கட்டாக், ஜாஜ்பூர், பத்ரக் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. சிறந்த சுற்றுலா தலம்.
21. மல்காங்கிரி : சத்தீஸ்கர், ஆந்திரபிரதேச மா நிலம், கோராபுட் மாவட்டம் இதன் எல்லை. மலைவாழ் மக்கள் அதிகமுள்ள மாவட்டம்.
22. மயூர்பஞ்ஜ் : ஜார்கண்ட், மேற்கு வங்காள மா நிலங்கள், பாலேஷ்வர், கெந்து ஜார் மாவட்டங்கள் இதன் எல்லை. முன்னாள் குறு நில மன்னர் பகுதி.
23. நப்ரங்க்பூர் : சத்தீஸ்கர் மா நிலம்,கோராபுட், காளஹஸ்தி மாவட்டங்கள் இதன் எல்லை. ஜக ந் நாதர் கோவில்கள் நிறைய உள்ள ஊர். சிவராத்திரி, ஹோலி, தசரா போன்ற பண்டிகைகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
24. நுவபாடா : வனப்பகுதி அதிகமுள்ள மாவட்டம். சத்தீஸ்கர் மா நிலம். காளஹஸ்தி, பாலாங்கிர், பார்கர் மாவட்டங்கள் இதன் எல்லை.
25. நயாகர் : கொர்தா, கஞ்ஜம், பௌத், கட்டக் புவனெஷ்வர் மாவட்டங்கள் இதன் எல்லை.
26. பூரி : வங்காள விரிகுடா, கொர்தா, புவனேஷ்வர், கட்டக், ஜகத்சிங்பூர், மாவட்டங்கள் இதன் எல்லை. பிரசித்தி பெற்ற ஜகன்னாதர் ஆலயம், கொனாரக் சூரியன் கோவில் இந்த மாவட்ட்த்தில் உள்ளது. சில்கா ஏரி மற்றும் சில சுற்றுலா தலங்களும் உள்ளது. பூரி ஜக ந் நாதரின் ரத யாத்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது.
27. ராயகடா : ஆந்திரபிரதேச மா நிலம், கொராபுட், காளஹஸ்தி, கந்தாமல், கஜபதி மாவட்டங்கள் இதன் எல்லை. கனிமங்களும், மலைவாழ் மக்களும் நிறைந்த மாவட்டம்.
28. சம்பல்பூர் : சுப்ரானாபூர், பார்கர், ஜார்ஸ்குடா, சுந்தர்கர், தேவ்கர், அங்குல் மாவட்டங்கள் இதன் எல்லை. ""இகாட்"" கைத்தறி ஆடைகளுக்கு பெயர் பெற்றது. வனப்பகுதியும், சில சுற்றுலா தலங்களும் அமைந்துள்ள மாவட்டம்.
29. சுபர்ணாபூர் : பௌத், பாலாங்கிர், பார்கர், சம்பல்பூர், அங்குல் மாவட்டங்கள் இதன் எல்லை.
30. சுந்தர்கர்: சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மா நிலங்கள், ஜார்ஸ்குடா, சம்பல்பூர், தேவ்கர், கியோன் ஜார் மாவட்டங்கள் இதன் எல்லை. இம்மாவட்ட்த்தின் ரௌர்க்கேலா நகரில் தான் ஜெர்மன் நாட்டு உதவியுடன் தொடங்கப்பட்ட முதல் இரும்பு உருக்காலை அமைந்துள்ளது.
Q9. ஒடிசா மாநிலத்தின் முக்கிய ஆறு எது?
மகா நதி.
Q10. ஒடிசாவின் துறைமுக நகரம் எது?
பாரதீப், ஜகத்சிங்பூர் மாவட்டம்.
Q11. ஒடிசாவில் எங்கு ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்படுகிறது?
சாந்திபூர், பாலேஷ்வர் மாவட்டம்.
Q12. ஒடிசாவில் ஹிராகுட் அணை எந்த மாவட்ட்த்தில் உள்ளது?
பார்கர்.
Q13. ஒடிசாவின் முன்னாள் தலை நகர் எது?
கட்டாக்.
Q14. ஜகந்நாதர் கோயில் மற்றும் ரத யாத்திரைக்கு புகழ் பெற்ற ஒடிசாவின் கடலோர நகரம் எது?
பூரி.
Q15. "இகாத்" கைத்தறி துணிகளுக்கு புகழ்பெற்ற ஒடிசா மாவட்டம் எது?
சம்பல்பூர்.
Q16. இந்தியாவின் முதல் இரும்பு உருக்காலை தொடங்கப்பட்ட ஒடிசா நகரம் எது?
ரௌர்கேலா - சுந்தர்கார் மாவட்டம்.
Q17. ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற பாரம்பரிய நடனம் எது?
ஒடிசி.
Q18. ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற கைத்தறி புடவை வகைகள் யாவை?
சம்பல்பூரி, சோன்பூரி, பொம்காய், பராபள்ளி, பட்டா மற்றும் இகாத் வகை துணிகள்.
Q19. ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற திருவிழாக்கள் யாவை?
பூரி ரதயாத்திரை, துர்கா பூஜை, பூரி கடற்கரை திருவிழா, கொனாராக் நாட்டிய விழா, பாலி யாத்திரை, தனு யாத்திரை, மகர மேளா, தரதரிணி மேளா, லக்ஷ்மி பூஜை.
Q20. ஒடிசா மாநிலத்தின் மிகவும் புகழ்பெற்ற சமுதாய திருவிழா எது?
நுவாகாய் : இது ஒரு வகையான உணவுத்திருவிழா. சம்பல்பூர், பாலாங்கிர், காளஹஸ்தி, சோன்பூர், ஃபூல்பானி, நுவாபாடா, தேவ்கர், சுந்தர்கர், ஜார்ஸ்குடா ஆகிய பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
Q21. இந்தியாவின் 70 சதவிகித பாக்ஸைட் கனிம்ம் ஒடிசாவின் எந்த பகுதியில் கிடைக்கிறது?
காஷிபூர்.
Q22. ஒடிசா மா நிலத்தைச் சார்ந்த பிரபலங்கள் யாவர்?
1. ஸ்ரீலா வைபவா பூரி மகாராஜ் - ஆன் மீக குரு. ஸ்ரீகிருஷ்ண சைதன்யா நிறுவனத்தை நிறுவியவர்.
2. பிஜூ மற்றும் நவீன் பட் நாயக் - புகழ்பெற்ற அரசியல்வாதிகள்.
3. மனோஜ் தாஸ் : எழுத்தாலர், சிந்தனையாளர்.
4. ஜெயதேவா : சமஸ்கிருத பண்டிதர் - ""கீத கோவிந்தம்"" எழுதியவர்.
5. ஜெயந்தா மஹாபத்ர : புகழ்பெற்ற கவிஞர்.
6. ரூபா மிஷ்ரா : திருமணம் அடைந்த முதல் இந்திய பெண்மணி I.A.S தேர்வில் முதல் இடம் பெற்றவர் - 2003.
7. சஞ்ஜக்தா பாணிக் ரஹி : ஒடிஸ்ஸி கலைஞர்.
8. சாம் பிட் ரோடா : இந்தியாவின் புகழ்பெற்ற அறிவாளிகளில் ஒருவர்.
9. சிவ சுந்தர் தாஸ், தேபாஸிஷ் மொஹந்தி : இந்திய கிரிக்கெட் வீர ர்கள்.
10. ஸ்ரீலா பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் : கவுடிய வைஷ்ணவ பிரிவின் மத போதகர் / தலைவர்.
11. திலீப் டிர்கி, இக்னஸ் டிர்கி, லாஸரஸ் பர்லா : இந்திய ஹாக்கி வீர ர்கள்."