Khub.info Learn TNPSC exam and online pratice

நாகாலந்து

Q1. நாகாலந்து NAGALAND
தொடக்கம் : 01.12.1963.
தலை நகர் : கொஹிமா.
பரப்பளவு : 16,579 ச.கி.மீ. (25 வது நிலை)
ஜனத்தொகை : 19,80,602 (24 வது)
மொழி : ஆங்கிலம்.
கல்வியறிவு : 80.11%
மாவட்டங்கள் : 11.
முக்கிய நகரங்கள் : திமாபூர், கொஹிமா
மாநில எல்லைகள் : அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மியான்மர்.
மக்களவை தொகுதிகள் : 1
மாநிலங்களவை தொகுதிகள் : 1
சட்டமன்ற தொகுதிகள் : 60
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : மலையாறுகள்
மாநில மலர் : Rhododendron.
மாநில மரம் : Alder
மாநில பறவை : Blythe's Tragopan
மாநில மிருகம் : Gaur
மாநில ஆளுநர் : பத்மநாப ஆச்சார்யா
மாநில முதன் மந்திரி :நெஃப்யூ ரியோ


Q2. வரலாற்று சுருக்கம்

மலை வாழ் மக்கள், சிறுசிறு பகுதிகளாக ஒரு தலைவனைக் கொண்டு வாழ்ந்த மக்கள். 1816 முதல் 1892 வரை பர்மாவின் ஆதிக்கதில் இருந்த்து. பிறகு ஆங்கிலேயர் வசம் வந்து, கிழக்கு வங்காள அஸ்ஸாம் மா நிலமாக இருந்து வந்தது. சுதந்திரத்திற்கு பிறாகு அஸ்ஸாம் மா நிலத்தின் ஒரு பகுதியாகவும், அதற்குப் பிறகு 1.12.1963 முதல் தனி மாநிலமாக செயல்பட்டுவருகிறது.

Q3. நாகாலந்து மா நிலத்தின் முதல் முதலமைச்சர் யார்?
ஷீலு ஆவோ - 1963 - 1966.
Q4. தலை நகர் கோஹிமாவில் இருக்கும் கல்லறையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கூற்றுப் பற்றி :

உங்கள் இல்லம் திரும்பிய பிறகு அவர்களிடம் எங்களைப்பற்றி கூறிச் செல்லுங்கள் --
உங்களின் நாளைக்காக, எங்களின் இன்றைய நாளை விட்டுக் கொடுத்தோம் என்பதை.

Q5. நாகாலந்து மாகாணத்தின் மாவட்டங்கள் யாவை?
(1) திமாபூர் (2) கிஃபையர் (3) கோஹிமா (4) லாங்லெங் (5) மோகோக்செங் (6) மோன் (7) பெரென் (8) ஃபெக் (9) டுவென்சாங் (10) வோக்கா (11) ஸூன்ஹெபோட்டோ
Q6. நாகாலந்தின் மக்களவை தொகுதிகள் எத்தனை?
ஒன்று - நாகாலந்து.