Khub.info Learn TNPSC exam and online pratice

திரிபுரா

Q1. திரிபுரா TRIPURA
தொடக்கம் : 21.01.1972.
தலை நகர் : அகர்தாலா.
பரப்பளவு : 10,492 ச.கி.மீ. (27 வது)
ஜனத்தொகை : 36,71,032 (22 வது)
மொழி : பெங்காலி, ஆங்கிலம்.
கல்வியறிவு : 94.65%
மாவட்டங்கள் : 8.
முக்கிய நகரங்கள் : அகர்தாலா, உதய்ப்பூர், அம்பாசா, கைலாசாஹார்.
மாநில எல்லைகள் வங்காள தேசம், அஸ்ஸாம், மிசோரம்.
மக்களவை தொகுதிகள் : 2.
மாநிலங்களவை தொகுதிகள் : 1.
சட்டமன்ற தொகுதிகள் : 60.
மாநில சின்னம் : -->
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : மலை ஆறுகள்.
மாநில மலர் : ரோஜா (Indian Rose Chest nut ).
மரம் : அகில் (Agarwood).
மாநில பறவை : புறா (Green Imperial Pigeon).
மாநில மிருகம் : குரங்கு (Phayre's Leaf Monkey).
மாநில ஆளுநர் : கப்தான் சிங் சொலங்கி
மாநில முதன் மந்திரி : பிப்லப் குமார் தேப்.


Q2. வரலாற்று சுருக்கம் :

" திரிபுரி ராஜ்யம்"  என்ற அரச வம்சத்தால், இந்திய சுதந்திரம் வரை நிர்வகிக்கப்பட்டு, சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவுடன் இணைந்து யூனியன் பிரதேசமாக இயங்கி 21.1.1972 முதல் ஒரு தனி மாகாணமாக இயங்கி வருகிறது.

Q3. திரிபுரா என பெயர் பெறக் காரணம் என்ன?
திரிபுரசுந்தரி என்ற உள்ளூர் பெண் கடவுளின் பெயரால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q4. திரிபுரா மாநிலத்தின் மக்களவை தொகுதிகள் யாவை?
1. திரிபுரா கிழக்கு,
2. திரிபுரா மேற்கு.
Q5. திரிபுரா மாநிலத்தின் மாநகராட்சி எது?
அகர்தாலா.
Q6. திரிபுரா மாநில மாவட்டங்கள் யாவை?

1. தலாய் : அம்பாசா இதன் தலை நகரம். வங்காள தேசம், உதய்ப்பூர், கொவாய், உனோகோடி, வட திரிபுரா மாவட்டங்கள் இதன் எல்லை. பெங்காலி மக்கள் தொகை அதிகம்.
2. சிபாஹிஜலா : பிஷ்ராம்கஞ்ச் இதன் தலை நகரம். வங்காள தேசம், தென் திரிபுரா, கொவாய், மேற்கு திரிபுரா மாவட்டங்கள் இதன் எல்லை.
3. கொவாய் : வங்காள தேசம், மேற்கு திரிபுரா, சிபாஹாஜலா, கோமதி, தலாய் மாவட்டங்கள் இதன் எல்லை.
4. கோமதி : உதய்ப்பூர் இதன் தலை நகரம். தென் திரிபுரா, சிபாஹிஜலா, கொவாய், தலாய் மாவட்டங்கள் இதன் எல்லை. இந்துக்களின் புனித சுற்றுலா தலம்.
5. உனகோட்டி : வங்காள தேசம், வட திரிபுரா மற்றும் தலாய் மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலம். உனகோட்டி இந்துக்களின் சுற்றுலா தலம்.
6. வட திரிபுரா : தர்மா நகர் இதன் தலை நகரம். வங்காள தேசம், மிசோரம், அஸ்ஸாம் மா நிலங்களும், உனகோட்டி, தலாய் மாவட்டங்கள் இதன் எல்லை. பெங்காலி மக்கள் தொகை அதிகம்.
7. தென் திரிபுரா : பெலோனியா இதன் தலை நகரம். வங்காள தேசம், சிபாஹிஜலா, கோமதி மாவட்டங்கள் இதன் எல்லை. திரிபுர சுந்தரி மற்றும் இதர கோவில்கள் நிறைந்த மாவட்டம்.
8. மேற்கு திரிபுரா : வங்காள தேசம், சிபாஹிஜலா, கொவாய் மாவட்டங்கள் இதன் எல்லை. தலை நகர் மாவட்டம். வங்காள தேசம், வட திரிபுரா மற்றும் தலாய் மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலம். 
Q7. திரிபுரா தலை நகர் அகர்தாலா பற்றி...
1. கிருஷ்ண கிஷோர் மானிக்யா என்பவரால் 1838ல் நிறுவப்பட்ட நகரம்.
2. ஹவேரா நதிக்கரையிலுள்ளது.
3. வங்காள தேசத்திலிருந்து 2 கி.மீ ல் அமைந்துள்ளது.
4. அரசாங்க அலுவலர்கள் மற்றும் பெங்காலி மக்கள் அதிகமுள்ள நகரம்.
5. உமாமகேஷ்வர் காளி கோவில், உஜ்ஜயந்தா.
6. தேசிய தொழிற் நுட்ப கல்லூரி, மருத்துவ கல்லூரி, திரிபுரா பல்கலைக்கழகம் மற்றும் இதர கல்வி நிலையங்களும் உள்ளன."
Q8. திரிபுரா மாநிலத்தின் சுற்றுலா தலங்கள் யாவை?
1. ஜம்பூரி மலைப்பகுதிகளும் அங்கு காணப்படும் நீரூற்றுகளும்.
2. ""நீர் மஹால்"" - ருத்ர சாகர் ஏரியில் மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் தேவ்வர்மன் என்பவரால் கட்டப்பட்ட அழகிய அரண்மனை - மேலகர் என்ற இட த்தில், அகர்தாலா அருகில் உள்ளது.
3. உனாகோட்டி என்ற இடத்தில் காணப்படும் லட்சக்கணக்கான இந்து மத கடவுள்களின் சிலைகள்.
4. திரிபுரசுந்தரி மற்றும் புவனேஸ்வரி கோவில்கள்.
Q9. திரிபுராவின் பொருளாதார நடவடிக்கைகள் யாவை?
இயற்கை எரிவாயு மற்றும் அது சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், ரப்பர் தயாரிப்பு ஆகியவை.
Q10. திரிபுரா மாநிலத்தின் முதல் முதலமைச்சர் யார்?
சுகமாய் சென் குப்தா - 1972 - 1977.