Q3. உத்தராகாண்ட் மாநிலத்தின் மக்களவை தொகுதிகள் யாவை?
1. கெஹ்ரி கார்வால், 2. கார்வால், 3. அல்மோரா, 4. நைனிடால் (உதாம் சிங் நகர்), 5. ஹரித்வார்.
Q4. உத்தராகாண்ட் மாநிலத்தின் மாநகராட்சிகள் யாவை?
1. டெஹ்ராடூன், 2. ஹல்த்வானி, 3. ஹரித்வார், 4. ரூர்கி, 5. ருத்ராபூர், 6. காஷிபூர்.
Q6. உத்தராகாண்ட் மாநில மாவட்டங்கள் யாவை?
1. அல்மோரா : நைனிடால், கார்வால், சமோலி, பாகேஷ்வர், சம்பாவத் மாவட்டங்கள் இதன் எல்லை. கண்டோன்மெண்ட் பகுதியாதலால் ராணுவ அலுவலகங்கள் நிறைய உள்ளது. அழகு மிகுந்த மாவட்டம். இந்த மாவட்ட்த்தின் அழகை காந்திஜியும், விவேகானந்தரும் கீழ்க்கண்டவாறு விவரித்துள்ளார்கள். காந்திஜி : ""இந்தியர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏன் செல்ல வேண்டும்?"" விவேகானந்தர்: ""அமைதிக்காக தியானம் செய்ய ஒரு அருமையான இடம்"".
2. பாகேஷ்வர் : பித்தோர்கர், அல்மோரா, சமோலி மாவட்டங்கள் இதன் எல்லை. இந்து மத சுற்றுலா தலம்.
3. சமோலி : சீனா, உத்தர்காஷி, ருத்ரபிரயாக், கர்வால், அல்மோரா, பாகேஷ்வர், பித்தோர்கர் மாவட்டங்கள் இதன் எல்லை. புகழ்பெற்ற பத்ரி நாத், கேதர் நாத் இந்துமத ஆலயங்கள் இங்குள்ளன.
4.சம்பாவத் : நேபாளம், ருத்ராபூர், நைனிடால், அல்மோரா, பித்தோர்கர் மாவட்டங்கள் இதன் எல்லை. பாலேஷ்வர் கோவில் மிகவும் பிரசித்தமானது. இந்து மத கடவுள் விஷ்ணு, இங்கு தான் ""கூர்ம அவதாரம்"" (ஆமை) எடுத்துக்கொண்டதாக நம்பப்படுகிறது.
5. டெஹ்ராடூன் :
1. தலை நகர் மாவட்டம்.
2. டூன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
3. ஷிவாலிக் மற்றும் இமாலய மலைகள் சூழ, கங்கை, யமுனை நதிகள் பாயும் அழகானதொரு மலைப்பிரதேச மாவட்டம்.
4. தனியார் பள்ளிகள் - Public Schools - நிறைய உள்ளன. இவற்றுள் மிகவும் பிரபலமானது. இதை தவிர்த்து பல கல்வி நிலையங்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளன.
5. பாஸ்மதி அரிசி விளைச்சலுக்கு மிகவும் புகழ் பெற்றது.
6. இந்துமத புனித தலமான ரிஷிகேஷி இந்த மாவட்டத்திலுள்ளது.
6. ஹரித்வார் : உத்திரபிரதேச மா நிலம், டெஹ்ராடூன், கார்வால் மாவட்டங்கள் இதன் எல்லை. பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை நட்த்தப்படும் கும்பமேளா மிகவும் புகழ் பெற்றது. இந்த மாவட்ட்த்தில் உள்ள ரூர்கி நகரத்தில் தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் ஆகியவை உள்ளன. இந்த நகரத்தில் தான் நம் நாட்டின் முதல் தொழிற் நுட்ப கல்லூரி துவங்கப்பட்டது.
7. நைனிடால் : உத்திரபிரதேச மா நிலம், கார்வால், அல்மோரா, சம்பாவட், உதம்சிங் நகர் ஆகிய மாவட்டங்கள் இதன் எல்லை. குமான் மலைத்தொடரில் அமைந்துள்ள புகழ்பெற்ற மலைவாசஸ்தலம். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட தனியார் பொதுப்பள்ளிகள் மற்றும் கல்வி மையங்களும் உள்ளன. ""நைனா தேவி"" என்ற பெண் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.
8. பவ்ரி கர்வால் : உத்திர பிரதேச மாநிலம், ஹரித்வார், டெஹ்ராடூன், தெஹ்ரி கர்வால், ருத்ரப்ரயாக், சமோலி, அல்மோரா, நைனிடால் மாவட்டங்கள் இதன் எல்லை.
9. பித்தோர்கர் : சீனா, நேபாளம் மற்றும் சம்பாவத், அல்மோரா, பாகேஷ்வர், சமோலி மாவட்டங்கள் இதன் எல்லை. மலைப்பகுதியாகையால் பல சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டம்.
10. ருத்ரபிரயாக் : பவ்ரிகர்வால், தெஹ்ரிகர்வால், உத்தர்காசி, சமோலி மாவட்டங்கள் இதன் எல்லை. அலக் ந்ந்தா மற்றும் மந்தாகினி ஆறுகள் சந்திக்குமிட்த்தின் கரையில் அமைந்திருக்கும் நகரம். இந்துக்களின் சுற்றுலா தலம். கேதார் நாத் புனித தலம் இங்கிருந்து 60 கி.மீ. ல் உள்ளது.
11. தெஹ்ரி கார்வால் : டெஹ்ராடூன், உத்தர்காசி, ருத்ரப்ரயாக், பவ்ரி கர்வால் இதன் எல்லை. முன்னள் குறு நில மன்னர் பகுதி.
12. உதரம்சிங் நகர் : ருத்ராபூர் இதன் தலை நகரம். உத்திர பிரதேச மாநிலம், சம்பாவத், நைனிடால் மாவட்டங்கள் இதன் எல்லை.
13. உத்தர்காசி : இமாச்சல பிரதேசம், டெஹ்ராடூன், தெஹ்ரி கார்வால், ருத்ரப்ரயாக், சமோலி மாவட்டங்கள் மற்றும் சீனா இதன் எல்லை. கங்கை, யமுனா நதிகள் இம்மாவட்டத்தில் உருவாகிறது.
Q7. உத்தராகாண்ட் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் யாவை?
1. கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார் நாத், பத்ரி நாத் - இந்து மத புனித தலங்கள்.
2. டெஹ்ராடூன், நைனிடால், முசோரி - மலைவாசஸ்தலம் மற்றும் சுற்றுலாதலம்.
3. ஜிம் கார்பெட் தேசிய பூங்கா மற்றும் சில தேசிய பூங்காக்களும் வனவிலங்கு சரணாலயங்களும் உள்ளன.