Q4. உத்திர பிரதேச மாநிலத்தின் மக்களவை தொகுதிகள் யாவை?
1. சஹாரன்பூர், 2. கைரானா, 3. முசாஃபர் நகர், 4. பிஜ்னோர், 5. நாகினா, 6. மொராதாபாத், 7. ராம்பூர், 8. சம்பால், 9. அம்ரோஹா, 10. மீரட், 11. பாக்பத், 12. கஸியாபாத், 13. கவுதம் புத்தா நகர், 14. புலந்த்ஷார் (SC) 15. அலிகார், 16. ஹத்ராஸ் (SC), 17. மதுரா, 18. ஆக்ரா (SC), 19. ஃபத்தேஹ்பூர் சிக்ரி, 20. ஃபிரோஸாபாத், 21. மைன்புரி, 22. எட்டா, 23. பதாவுன், 24. அவோன்லா, 25. பரேலி, 26. பிலிபிட், 27. ஷாஜஹான்பூர் (SC), 28. கேரி, 29. தௌராஹ்ரா, 30. சீதாப்பூர், 31. ஹர்தோய் (SC), 32. மிஸ்ரிக் (SC), 33. உன்னாவ், 34. மோகன்லால் கஞ்ச் (SC), 35. லக்னௌ, 36. ரே பரேலி, 37. அமேதி, 38. சுல்தான்பூர், 39. ப்ரதாப்கர், 40. ஃபரூக்காபாத், 41. எட்டாவா (SC) 42. கன்னவுஜ், 43. கான்பூர் நகரம், 44. அக்பர்பூர், 45. ஜலாவுன் (SC), 46. ஜான்சி, 47. ஹமீர்பூர், 48. பண்டா, 49. ஃபத்தேபூர், 50. கௌசாம்பி (SC), 51. ஃபூல் பூர், 52. அலஹாபாத், 53. பாராபங்கி (SC), 54. ஃபைசாபாத், 55. அம்பேத்கர் நகர், 56. பஹ்ரெய்ச்(SC), 57. கைசர்கஞ்ச், 58. ஷ்ரவஸ்தி, 59. கோண்டா, 60. தொமாரியா கஞ்ச், 61. பஸ்தி, 62. சந்த் கபீர் நகர், 63. மகாராஜ் கஞ்ச், 64. கோரக்பூர், 65. குஷி நகர், 66. தேவ்ரியா, 67. பன்ஸ்காவ்ன் (SC), 68. லால்கஞ்ச் (SC), 69. ஆஸாம்கர், 70. கோஸி, 71. சேலம்பூர், 72. பல்லியா, 73. ஜான்பூர், 74. மச்சிலிஷஹர் (SC), 75. காஸிபூர், 76. சந்தௌலி, 77. வார்னாசி, 78. பதோஹி, 79. மிர்ஸா பூர், 80. ராபர்ட்ஸ் கஞ்ச் (SC).
Q6. உத்திர பிரதேச மாநிலத்தின் மாவட்டங்கள் யாவை?
"1. ஆக்ரா : ராஜஸ்தான், மத்திய பிரதேச மா நிலங்கள், எட்டாவா, ஃபிரோசாபாத், எட்டா, ஹத்ராஸ், மதுரா மாவட்டங்கள் இதன் எல்லை. ஆக்ரா நகரம், 1506ல், சிக்கந்தர் லோடி-யால் நிறுவப்பட்ட து. 1526 முதல் 1658 வரை முகலாயர்களின் தலை நகராக இருந்த து. யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபத்தேபூர் சிக்ரி, ஜமா மஸ்ஜித், ஆராம்பாக் (தோட்டம்), சிக்கந்தரா அக்பர் கல்லறை மற்றும் சில சுற்றுலா தலங்கள் உள்ளன. தோல்பொருள் தயாரிப்பு அதிகம்.
2. அலிகார் : அரியானா மா நிலம், மதுரா, ஹத்ராஸ், காஸ்கஞ்ச், பதாவுன், சம்பால், புலந்த்ஷார், கௌதமபுத்தா நகர் மாவட்டங்கள் இதன் எல்லை. பூட்டு வகை தயாரிப்பில் முன்னணி மாவட்டம்.
3. அலஹாபாத் : மிர்ஸாபூர், ஜான்பூர், ப்ரதாப்கர், கௌசாம்பி, சித்ரகூட் மாவட்டங்களும், மத்திய பிரதேசமும் இதன் எல்லை. உத்திர பிரதேசத்தின் மிகப்பெரிய நகரம். கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்குமிட்த்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை ""கும்பமேளா"" இங்கு நடப்பது முக்கியமான நிகழ்வு. இந்திய மேலாண்மை கல்வி நிலையம் மற்றும் பல உயர்கல்வி நிலையங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், உயர் நீதி மன்றம் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைந்த நகரம்/மாவட்டம்.
4. அம்பேத்கர் நகர் : ஆஸாம்கர், சுல்தான்பூர், ஃபைஸாபாத், பஸ்தி, கபீர் நகர் மாவட்டங்கள் இதன் எல்லை.
5. அவுரைய்யா : எட்டாவா, கன்னௌஜ், கான்பூர், தேஹத், ஜாலாவ்ன் மாவட்டங்கள் இதன் எல்லை.
6. ஆஸாம்கர் : மாவ், காஸிபூர், ஜான்பூர், அம்பேத்கர் நகர், கோரக்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
7. அமேதி : சுல்தான்பூர், ப்ரதாப்கர், ரேபரேலி, பராபங்கி, ஃபைஸாபாத், மாவட்டங்கள் இதன் எல்லை. அரசியலில் முக்கியமான தொகுதி - நேரு காந்தி குடும்ப தொகுதி.
8. அம்ரோஹா : மொராதாபாத், சம்பால், புலந்த்ஷார், ஹபூர், மீரட், பிஜ்னோர் மாவட்டங்கள் இதன் எல்லை. 9. பல்லியா : பீஹார் மா நிலம், காஸிபூர், மாவ்தேவ்ரியா மாவட்டங்கள் இதன் எல்லை. இந்த மாவட்டத்தில் ""கழுதைகள் சந்தை"" மிகவும் பிரசித்தமானது.
10. பதாவ்ன் : கஸ்கஞ்ச், அலிகார், சம்பால், ராம்பூர், பரேலி, ஷாஜஹான் பூர், ஃபருக்காபாத் மாவட்டங்கள் இதன் எல்லை.
11. பரேலி : உத்தராகண்ட் மா நிலம், ராம்பூர், பாதாவ்ன், ஷாஜஹான்பூர், பிலிபிட் மாவட்டங்கள் இதன் எல்லை. அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. ஏனென்றால் நேரு குடும்பத்தினர் இந்த தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். மூங்கில் வியாபாரம் மிகப்பெரிய வணிகம். இந்திய கால் நடை ஆராய்ச்சி மையம், ஆசியாவின் மிகப்பெரிய சூடம் தயாரிக்கும் ஆலை உள்ளன. பட்டம் தயாரித்தல், கண் மை, ஜரிகை கைவேலைப் பொருட்கள் புகழ் பெற்றவை.
12. பஸ்தி : அம்பேத்கர் நகர், ஃபைசாபாத், கோண்டா, சித்தார்த் நகர், கலீலா பாத், கோரக்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
13. பண்டா : மத்திய பிரதேச மா நிலம், ஹமீர்பூர், ஃபத்தேஹ்பூர், சித்ரகூட் மாவட்டங்கள் இதன் எல்லை. கஜுராஹோ மற்றும் கலிஞ்ஜர் மலைச் சிற்பங்கள் இங்கு உள்ளது.
14. பஹ்ரைச் : நேபாளம், கேரி, சீதாபூர், பராபங்கி, கோண்டா, ஸ்ரவஸ்தி மாவட்டங்கள் இதன் எல்லை.
15. பலராம்பூர் : நேபாளம், ஸ்ரவஸ்தி, கோண்டா பஸ்தி, கலீலாபாத், மகாராஜ்கஞ்ச் மாவட்டங்கள் இதன் எல்லை. புத்த ஜைன மத மக்களுக்கு ஒரு புனித சுற்றுலா தலம்.
16. பராபங்கி : லக்னௌ, சீதாபூர், பஹ்ரைச், கோண்டா, ஃபைஸாபாத், அமேதி, ரேபரேலி மாவட்டங்கள் இதன் எல்லை.
17. பாக்பத் : அரியானா, ஷாம்லி, முசாஃபர் நகர், மீரட், கஸியாபாத் மாவட்டங்கள் இதன் எல்லை.
18. புலந்த்ஷார் : கவுதம் புத்தா நகர், ஹபூர், அம்ரோஹா, மொராதாபாத், அலிகார் மாவட்டங்கள் இதன் எல்லை. அணுமின் நிலையம் மற்றும் களிமண் வேலைப்பாட்டு பொருட்கள் இந்த மாவட்டத்தின் முக்கியத்துவம்.
19. பிஜ்னோர் : உத்தராகாண்ட், முசாஃபர் நகர், மீரட், அம்ரோஹா, மொராதாபாத் மாவட்டங்கள் இதன் எல்லை. சுற்றுலா தலம்.
20. சித்ர கூட் : மத்திய பிரதேச மா நிலம், பண்டா, ஃபத்தேஹ்பூர், கௌசாம்பி, அலகாபாத் மாவட்டங்கள் இதன் எல்லை. இந்து மத த்தினர் சுற்றுலா தலம். ""ஆரோக்யதாம்"" எனும் ஆயுர்வேத மற்றும் யோகா மையம் மிகவும் புகழ் பெற்றது.
21. சந்தௌலி : பீஹார் மாநிலம், சோன்பத்ரா, மிர்சாபூர், வாரனாசி, காசிபூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
22. தேவ்ரியா : பீஹார் மா நிலம், பல்லியா மாவ், கோரக்பூர், குஷி நகர் மாவட்டங்கள் இதன் எல்லை.
23. எட்டா : ஃபிரோசாபாத், ஹத்ராஸ், காஸ்கஞ்ச், ஃபருக்காபாத், மைன்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
24. எட்டாவா : மத்திய பிரதேச மா நிலம், ஃபிரோசாபாத், மைன்பூரி, அவுரைய்யா, ஜலாவ்ன்
மாவட்டங்கள் இதன் எல்லை. இந்தியா தேசிய காங்கிரஸ் நிறுவிய A.O. ஹ்யூம் இந்த மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர். யமுனா மற்றும் சம்பல் ஆறுகள் கலக்குமிடம்.
25. ஃபிரோசாபாத் : ஆக்ரா, எட்டா, மைன்பூரி, எட்டாவா மாவட்டங்கள் இதன் எல்லை. கண்ணாடி பொருட்கள், கண்ணாடி வளையல்கள் தயாரிப்பில் முன்னணி மாவட்டம்.
26. ஃபரூக்காபாத் : கன்னௌஜ், மைன்பூரி, எட்டா, காஸ்கஞ்ச், பதாவ்ன், ஷாஜஹான்பூர், ஹர்தோய் மாவட்டங்கள் இதன் எல்லை. சில சுற்றுலா தலங்கள் உள்ள மாவட்டம்.
27. ஃபத்தேஹ்பூர் : பண்டா, ஹமீர்பூர், கான்பூர் நகர், உன்னாவ், ரே பரேலி, கௌசாம்பி, சித்ரகூட் மாவட்டங்கள் இதன் எல்லை.
28. ஃபைஸாபாத் : சுல்தான்பூர், அமேதி, பராபங்கி, கோண்டா, பஸ்தி, அம்பேத்கர் நகர் மாவட்டங்கள் இதன் எல்லை. இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் அயோத்யா இந்த மாவட்ட த்தில் உள்ளது.
29. கவுதம் புத்தா நகர் : அரியானா மா நிலம், அலிகார், புலந்த்ஷார், காஸியாபாத் மாவட்டங்கள் இதன் எல்லை. நொய்டா மிக வேகமாக தொழில் நகரமாக வளர்ந்து வருகிறது. (NOIDA - New Okhla Industrial Development Authority)
30. கோண்டா : பஸ்தி, ஃபைஸாபாத், பராபங்கி, பஹ்ரைச், ஸ்ரவஸ்தி, பலராம்பூர், சித்தார்த் நகர் மாவட்டங்கள் இதன் எல்லை."
31. காஸிபூர் : பீஹார் மா நிலம், சந்தௌலி, வாரணாசி, ஜான்பூர், ஆஸாம்கர், மாவ், பால்லியா மாவட்டங்கள் இதன் எல்லை. இந்தியாவின் ஒரே அரசு ஓபியம் (OPIUM - போதை மருந்துபொருள்) ஆலை இங்குள்ளது. ஆங்கிலேய கவர்னர்களில் புகழ்பெற்ற கார்ன்வாலிஸ் இந்த மாவட்ட்த்தில் இறந்தார். ராஹி மெஸூம் ராஜா என்ற புகழ்பெற்ற இந்தி நாவலாசிரியர் பிறந்த மாவட்டம்.
32. கோரக்பூர் : குஷி நகர், தேவ்ரியா, மாவ், ஆஸாம்கர்,அம்பேத்கர் நகர், கபீர் நகர், மகாராஜ் கஞ்ஜ் மாவட்டங்கள் இதன் எல்லை. கோரக் நாத் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. வடகிழக்கு ரயில்வேயின் தலை நகர்.
33. காஸியாபாத் : டெல்லி, கவுதம் புத்தா நகர், ஹபூர், மீரட், பாக்பாத் மாவட்டங்கள் இதன் எல்லை. தொழிற்துறையில் மிகவும் முன்னேற்றமடைந்த மாவட்டம்.
34. ஹமீர்பூர் : மஹோபா, ஜான்சி, ஜலாவ்ன், கான்பூர் நகர், ஃபத்தேஹ்பூர், பண்டா மாவட்டங்கள் இதன் எல்லை.
35.ஹப்பூர்: முன்பு பஞ்ச்ஷீல் நகர் என அழைக்கப்பட்டது. விவசாயமே முக்கியமான தொழில்.
36. ஹர்தோய் : லக்னௌ, உன்னாவ், கான்பூர் நகர், கன்னௌஜ், ஃபரூக்காபாத், ஷாஜஹான்பூர், கேரி , சீதாபூர் மாவட்டங்கள் இதன் எல்லை. SAF ஈஸ்ட் தயாரிப்பின் முன்னணி நிறுவனம் ஈஸ்ட் கம்பெனி இங்குள்ளது.
37. ஹத்ராஸ் : மகர்மாய நகர் என முன்பு அழைக்கப்பட்டது. ஆக்ரா, மதுரா, அலிகார், காஸ்கஞ்ச், எட்டா மாவட்டங்கள் இதன் எல்லை. பெருங்காயம் மற்றும் நெய் தயாரிப்பில் முன்னணி.
38. ஜான்சி : மத்திய பிரதேச மாநிலம், லலித்பூர், ஜலாவ்ன், ஹமீர்பூர், மஹோபா மாவட்டங்கள் இதன் எல்லை. ரயில் போக்குவரத்தின் முக்கிய சந்திப்பு மண்டலம். சுற்றுலா தலம். ஜான்சி ராணி லஷ்மிபாய் இந்த இடத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் தலை சிறந்த ஹாக்கி வீரர் தயான் சந்த் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
39. ஜான்பூர் : வார்னாசி, சந்த் ரவிதாஸ் நகர், அலகாபாத், ப்ரதாப்கர், சுல்தான்பூர், ஆஸாம்கர், காஸிபூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
40. கான்பூர் தேஹத் : கான்பூர் நகர், ஜலாவ்ன், அவுரைய்யா, கன்னௌஸ் மாவட்டங்கள் இதன் எல்லை.
"
41. காஸ்கஞ்ச் : எட்டா, ஹத்ராஸ், அலிகார், பதாவ்ன், ஃபருக்காபாத் மாவட்டங்கள் இதன் எல்லை.
42. கௌசாம்பி : சித்ரகூட், பண்டா, ஃபத்தேஹ்பூர், ப்ரதாப்கர், அலகாபாத் மாவட்டங்கள் இதன் எல்லை.
43. குஷி நகர் : பீஹார் மா நிலம், தேவ்ரியா, கோரக்பூர், மகாராஜ்கஞ்ச் மாவட்டங்கள் இதன் எல்லை. புத்த மதத்தினர் வழிபாட்டு தலம். இங்கு தான் புத்தர் ஆன்மீக அறிவின் முழு நிலை அடைந்த்தாக கருதப்படுகிறது.
44. கன்னௌஜ் : கான்பூர், தேஹத், அவுரய்யா, மைன்புரி, ஃபருக்காபாத், ஹர்தோய், கான்பூர் நகர் மாவட்டங்கள் இதன் எல்லை.
45. கான்பூர் நகர் : உன்னாவ், ஃபத்தேஹ்பூர், ஹமீர்பூர், கான்பூர் தேஹத், கன்னௌஜ் மாவட்டங்கள் இதன் எல்லை. கான்பூர் மிகப்பெரிய நகரம். கங்கை கரையின் மீது அமைந்துள்ளது. தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் தயாரிப்பு மிக முக்கியமான தொழில். ராணுவ தளவாட தொழிற்சாலை மற்றும் இதர தொழிற்சாலைகளும் IIT உள்பட பல உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. பல சுற்றுலா மையங்களும் உள்ளன.
46. லலித்பூர் : மத்திய பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டம் இதன் எல்லை. இயற்கை அழகும், சில அணைகளும் நிறைந்த மாவட்டம். ஜைன, இந்துமத கோயில்களும் உள்ள சுற்றுலா தலம்.
47. லக்கிம்பூர் கேரி : நேபாளம், பிலிபிட், ஷாஜஹான்பூர், ஹர்தோய், சீதாபூர், பஹ்ரைச் மாவட்டங்கள் இதன் எல்லை. சர்க்கரை ஆலைகள் நிறைந்த மாவட்டம். தூத்வா தேசிய பார்க் இந்த மாவட்ட்த்தில் உள்ளது.
48. லக்னௌ : தலை நகர் மாவட்டம். உன்னாவ், ஹர்தோய், சீதாபூர், பாராபங்கி, ரே பரேலி மாவட்டங்கள் இதன் எல்லை. லக்னௌ நகரம் தலை நகரம்.
49. மைன்பூரி : எட்டாவா, ஃபிரோசாபாத், எட்டா, ஃபருக்காபாத், கன்னௌஜ் மாவட்டங்கள் இதன் எல்லை. பருத்தி நூற்பு, புகையிலை பயிர் மற்றும் கண்ணாடி தொழில் முக்கிய நடவடிக்கைகள்.
50. மதுரா : ராஜஸ்தான், அரியானா மா நிலம், அலிகார், ஹத்ராஸ், ஃபிரோஸாபாத் மாவட்டங்கள் இதன் எல்லை. கிருஷ்ணர் பிறந்த இடம். இந்துக்களின் புனித தலம். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, வெள்ளி வேலைப்பாடுகள், புடவையில் அச்சு போன்ற வேலைகள் உள்ளது. நவராத்திரி, கோகுலாஷ்டமி போன்ற விழாக்களின் போது வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
51. மாவ் : பல்லியா, காஸிபூர், ஆஸாம்கர், கோரக்பூர், தேவ்ரியா மாவட்டங்கள் இதன் எல்லை.
52. மஹோபா : மத்திய பிரதேச மா நிலம், ஜான்சி, ஹமீர்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
53. மகாராஜ் கஞ்ச் : நேபாளம், சித்தார்த் நகர், கலீலாபாத், கோரக்பூர், குஷி நகர் மற்றும் பீஹார் மா நிலம் இதன் எல்லை.
54. மீரட் : ஹபூர், காஸியாபாத், பாக்பத், முசாஃபர் நகர், பிஜ்னோர், அம்ரோஹா மாவட்டங்கள் இதன் எல்லை. சரித்திரத்தில் முக்கியமான நகரம். இங்கிருந்து தான் 1857 சுதந்திரப் போராட்டம் துவங்கியது.
55. மொராதாபாத் : உத்தராகாண்ட் மா நிலம், பிஜ்னோர், அம்ரோஹா, சம்பால், ராம்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. பித்தளை பாத்திரம் தொழில் மிகவும் புகழ்பெற்றது.
56. முசாஃபர் நகர் : உத்தராகாண்ட் மா நிலம், சஹாரன்பூர், ஷாம்லி, பாக்பத், மீரட், பிஜ்னோர் மாவட்டங்கள் இதன் எல்லை. வெல்லம் தயாரிப்பில் முன்னணி.
57. ப்ரதாப்கர் : அலகாபாத், கௌசாம்பி, ஃபத்தேஹ்பூர், ரே பரேலி, அமேதி, சுல்தான்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. ப்ரதாப்கர் நகரில் உள்ள புகழ்பெற்ற கோட்டையை சுற்றி இந்த நகரம் அமைந்துள்ளது. நெல்லிக்காய் விளைச்சலுக்கு புகழ்பெற்ற மாவட்டம்.
58. பிலிபிட் : உத்தராகாண்ட் மா நிலம், நேபாளம், கேரி, ஷாஜஹான்பூர், பரேலி மாவட்டங்கள் இதன் எல்லை. அரசியலில் முக்கியம் வாய்ந்த தொகுதி. இந்த தொகுதியை ஸ்ரீமதி மேனகா காந்தி தொடர்ந்து வென்று வருகிறார்.
59. ரேபரேலி : லக்னௌ, பராபங்கி, அமேதி, ப்ரதாப்கர், ஃபத்தேஹ்பூர், உன்னாவ் மாவட்டங்கள் இதன் எல்லை. அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம். இந்திரா காந்தி குடும்பத்தினர் இந்த தொகுதியை தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
60. ராம்பூர் : உத்தராகாண்ட் மா நிலம், பரேலி, பதாவ்ன், சம்பால், மொராதாபாத் மாவட்டங்கள் இதன் எல்லை.
61. ஷாஜஹான்பூர் : ஹர்தோய், ஃபரூக்காபாத், பதாவ்ன், பரேலி, பிலிபிட், கேரி மாவட்டங்கள் இதன் எல்லை. தரை விரிப்புகள் மற்றும் திகார் ஜெயில் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றது.
62. சந்த் கபீர் நகர் : கோரக்பூர், ஆஸாம்கர், அம்பேத்கர் நகர், பஸ்தி, சித்தார்த் நகர், மகாராஜ் கஞ்ச் மாவட்டங்கள் இதன் எல்லை.
63. சித்தார்த் நகர் : நேபாளம், மகாராஜ் கஞ்ச், சந்த்கபீர் நகர், பஸ்தி, கோண்டா, பலராம்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. புத்தர் வாழ்ந்த கபில வாஸ்து இந்த மாவட்ட்த்தில் உள்ளது.
64. ஷ்ரவஸ்தி : நேபாளம், பலராம்பூர், கோண்டா, பஹ்ரைச் மாவட்டங்கள் இதன் எல்லை.
65. சுல்தான்பூர் : ஜான்பூர், ப்ரதாப்கர், அமேதி, ஃபைஸாபாத், அம்பேத்கர் நகர், ஆஸாம்கர் மாவட்டங்கள் இதன் எல்லை.
66. சீதாபூர் : கேரி, பஹ்ரைச், பராபங்கி, லக்னௌ, ஹார்தோய் மாவட்டங்கள் இதன் எல்லை.
67. சந்த் ரவிதாஸ் நகர் : வாரணாசி, ஜான்பூர், மிர்சாபூர், அலகாபாத் மாவட்டங்கள் இதன் எல்லை. தரைவிரிப்புகளுக்கு புகழ் பெற்றது.
68. சோன்பத்ரா : ஜார்க்கண்ட், பீஹார், சத்தீஸ்கர், மத்தியபிரதேச மா நிலங்கள், மிர்ஸாபூர், சந்தௌலி மாவட்டங்கள் இதன் எல்லை. மின்சக்தி நிலையங்கள் நிறைந்த மாவட்டம்.
69. சம்பால் : பதாவ்ன், அலிகார், புலந்த்ஷார், அம்ரோஷா, மொராதாபாத், ராம்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை.
70. ஷாம்லி : அரியானா, சஹாரன்பூர், முசாஃபர் நகர், பாக்பத் மாவட்டங்கள் இதன் எல்லை. சர்க்கரை ஆலைகள் நிறைந்த மாவட்டம்.
71. சஹாரன்பூர் : அரியானா, உத்தராகாண்ட் மா நிலங்கள், ஷாம்லி மாவட்டம் இதன் எல்லை. பாஸ்மதி அரிசி தயாரிப்புக்கு புகழ் பெற்றது.
72. உன்னாவ் : லக்னௌ, ரேபரேலி, ஃபத்தேஷ்பூர், கான்பூர் நகர், ஹர்தோய் மாவட்டங்கள் இதன்
எல்லை.
73. வாரணாசி : காஸிபூர், சந்தௌலி, மிர்சாபூர், சந்த் ரவி தாஸ் நகர், ஜான்பூர் மாவட்டங்கள் இதன் எல்லை. கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இந்துக்களின் புண்ணிய தலம். சம்தி பீடமும், காசி விஷ்வ நாத் - ஜோதிலிங்க - கோவிலும் அமைந்துள்ள மாவட்டம். இந்துஸ்தானிய பாரம்பரிய இசைக்கு இந்த மாவ்ட்டமே அடிதளம். பெனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் இதர கல்வி நிலையங்கள் உள்ளன.
74. ஹபூர் : சம்பால், கவுதம் புத்தா நகர், காஸியாபாத், மீரட், அம்ரோஹா மாவட்டங்கள் இதன் எல்லை.
75.ஜலாவ்ன் : மத்திய பிரதேசமா நிலம், எட்டாவா, அவுரய்யா, கான்பூர் தேஹத், ஹமீர்பூர், ஜான்சி மாவட்டங்கள் இதன் எல்லை."