Khub.info Learn TNPSC exam and online pratice

யூனியன் பிரதேசங்கள்

Q1. யூனியன் பிரதேசம் என்றால் என்ன?
அரசியல் அல்லது நிர்வாக காரணங்களுக்காக, எந்த ஒரு பகுதி, மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தில் இயங்குகிறதோ அந்த பகுதி யூனீயன் பிரதேசமாக கருதப்படுகிறது.
Q2. நம் நாடு சுதந்திரம் பெற்றவுடன் யூனியன் பிரதேசமாக இயங்கிய பகுதிகள் யாவை? அவற்றுள் மாநிலமாக உயர்த்தப்பட்டவை யாவை?
ஏழு பகுதிகள். 1. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள். 2. டெல்லி, 3. இமாச்சலப் பிரதேசம், 4. லட்சத்தீவுகள், 5. புதுச்சேரி, 6. திரிபுரா, 7. மணிப்பூர். இவற்றுள் இமாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களாகவும், டெல்லி - தேசிய தலை நகர் பகுதி மற்றும் மாநில அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு இயங்கி வருகின்றன.
Q3. 2015 நிலையில் இயங்கி வரும் யூனியன் பிரதேசங்கள் யாவை?
1. அந்தமான் & நிக்கோபார் தீவுகள், 2. சந்திகார், 3. தாத்ரா & நாகர் ஹவேலி, 4. டாமன் & டையூ, 5. டெல்லி (தேசிய தலை நகர் பகுதி), 6. லட்சத்தீவுகள், 7. புதுச்சேரி.
Q4. யூனியன் பிரதேசங்களுள் சட்டசபை, முதல் மந்திரி/ மந்திரிகள் கொண்டவை எவை?
டெல்லி மற்றும் புதுச்சேரி.
Q5. எந்த யூனியன் பிரதேசம் இரண்டு மாநிலங்களின் தலை நகராக இயங்குகிறது?
சந்திகார் - பஞ்சாப் & அரியானா.
Q6. யூனியன் பிரதேசங்களை நிர்வகிப்பவர் யார்?  2017 பிப்ரவரி நிலையில் யூனியன் பிரதேச துணை இணை ஆளுநராகவும், முக்கிய மந்திரியாகவும் இருப்பவர்கள் யாவர்? 

லெஃப்டினன்ட் கவர்னர்.
1.    டெல்லி  --  துணை இணை ஆளுநர் -- அனில் பைஜால்    
                              முக்கிய மந்திரி:  அரவிந்த் கெஜ்ரிவால் -- ஆம் ஆத்மி கட்சி. 
2.   புதுச்சேரி -- துணை இணை ஆளுநர் --  கிரண் பேடி 
                               முக்கிய மந்திரி --  வி. நாராயணசாமி -- காங்கிரஸ்.
3.   அந்தமான் நிக்கோபார் தீவுகள்:  அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி 
4.   சந்திகார்  --  நிர்வாக அதிகாரி  வி.பி.சிங் பட்னோர்.
5.   தாத்ரா நாகர் ஹவேலி -- நிர்வாக அதிகாரி : ப்ரஃபுல் கோடா படேல் 
6.   டாமன் & டையூ -- நிர்வாக அதிகாரி : ப்ரஃபுல் கோடா படேல் 
7.   லட்சத்தீவுகள் --  நிர்வாக அதிகாரி -- ஃபரூக் கான் 

Q7.

1. டெல்லி: DELHI

Q8. டெல்லி நகரின் வரலாறு பற்றி சுருக்கமாக :
வரலாற்று ரீதியாக, மௌர்யர்கள் காலத்துக்கு முன்பே இந்திரப்ரஸ்தா (பாண்டவர்களின் தலை நகரம்) என்ற நகரமாக இருந்ததாக தெரிகிறது. மௌர்யர்களின் ஆட்சிக்கு பிறகு 12வது நூற்றாண்டு வாக்கில் ஆஃப்கான் இஸ்லாமியர்கள் - முகமது கோரி - அதை தொடர்ந்து துருக்கிய இஸ்லாமியர்கள் - குத்புதீன் ஐபெக் - அடிமை வம்சம் - தொடங்கி, 16வது நூற்றாண்டில் (1526) முகலாய சாம்ராஜ்யம் தொடங்கி 1857ல் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்தடைந்து, 1947ல் இந்தியாவுடன் இணைந்தது. இவர்களில் முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் டெல்லியின் இன்றைய நிலை வளர்ச்சிக்கு முக்கிய காரணம். 1911ல் ஆங்கிலேயர்கள் டெல்லியை தலை நகராக தேர்வு செய்தபின் உருவானது தான், பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை. மற்றும் பல அரசாங்க அலுவலகங்கள், அரசாங்க குடியிருப்புகள் போன்றவை.
Q9. நவீன காலத்தில், டெல்லியின் வடிவமைப்புக்கும் பல கட்டுமான்ங்களுக்கும், பெரிதும் உதவியவர் யார்?
இங்கிலாந்து வடிவமைப்பாளர் எட்வின் லுட்யென். இவரால் வடிவமைக்கப்பட்ட பகுதிகள் ""லுட்யன்ஸ்"" என அறியப்படுகிறது.

Q10. டெல்லி - தேசிய தலை நகர் பகுதி என்ற சிறப்பு அந்தஸ்து எப்போது அளிக்கப்பட்டது?
1991 - அரசியல் சட்டத் திருத்தத்தின் படி. இதன் கீழ் கீழ்க்கண்ட பகுதிகளும் அடங்கியுள்ளன. குர்காவ்ன், நொய்டா, காஸியாபாத், ஃபாரீதாபாத், நெஹர்பார், நொய்டா பெரும்பகுதி, பகதூர்கர், சோன்பத், பானிபட், கர்னல், ரோட்டக், பிவானி, ரேவாரி, பாக்பத், மீரட், ஆள்வார், பரத்பூர். டெல்லியின் புதிய மற்றும் பழைய பகுதி.
Q11. டெல்லி நகரின் கால வரிசை முன்னேற்றம் :
1. மகாபாரத காலத்து இந்திரப்ரஸ்தா.
2. மௌரியர்கள் மற்றும் அதற்கு பிறகு வந்த வடக்கிந்திய தோமரா வம்சம் (8வது நூற்றாண்டு), சவுஹான் வம்சம் (12வது நூற்றாண்டு), இஸ்லாமியர்கள் (12வது நூற்றாண்டின் கடைசியில் இருந்து 18வது நூற்றாண்டு வரை), பிறகு மராத்தியர்களின் சிறிது கால ஆதிக்கம், மீண்டும் முகமதியர் என 19ம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை.
3. 1857ல் நடந்த புரட்சியில், முகமதியர்கள் முழுமையாக ஒடுக்கப்பட்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்.
4. 1911ல் ஆங்கிலேயர் இந்தியாவின் தலை நகராக நியமிக்கப்பட்டது.
5. 1947ல் சுதந்திரம் - இந்திய தலை நகரம்.
6. 1956ல் யூனீயன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட து.
7. 1991ல் தேசிய தலை நகர் பகுதியாக அறிவிக்கப்பட்டது. சட்டசபை, மந்திரிசபை என ஒரு மாநில நிர்வாகம் செயல்பட துவங்கியது. "
Q12. டெல்லி - தேசிய தலை நகர் பகுதியின் பரப்பளவு என்ன?
1484 ச.கி.மீ.
Q13. டெல்லி - தேசிய தலை நகர் பகுதியில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன, அவை யாவை?
11 மாவட்டங்கள். 1. புதுடெல்லி, 2. வடக்கு டெல்லி, 3. வடமேற்கு டெல்லி, 4. மேற்கு டெல்லி, 5. தென்மேற்கு டெல்லி, 6. தெற்கு டெல்லி, 7. தென் கிழக்கு டெல்லி, 8. மத்திய டெல்லி, 9. வடகிழக்கு டெல்லி, 10. ஷாதாரா, 11. கிழக்கு டெல்லி.
Q14. டெல்லி - தேசிய தலைநகர் பகுதியிலுள்ள மக்களவை தொகுதிகள் யாவை?
1. சாந்தினி சௌக், 2. வட கிழக்கு டெல்லி, 3. கிழக்கு டெல்லி, 4. புது டெல்லி, 5. வடமேற்கு டெல்லி (SC), 6. மேற்கு டெல்லி, 7. தெற்கு டெல்லி.
Q15. டெல்லி - தேசிய தலைநகர் பகுதியில் அடங்கியுள்ள மா நகராட்சிகள் யாவை?
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு - டெல்லி - 4.
Q16. டெல்லியில் அதிகமாக பேசப்படும் மொழிகள் யாவை?
இந்தி, பஞ்சாபி, உருது, ஆங்கிலம்.
Q17. டெல்லி சட்டசபை தொகுதிகள் எத்தனை?
70 தொகுதிகள்.
Q18. 1857ல் நடந்த புரட்சியின்போது, கத்தோலிக்கர்கள், கொலை செய்யப்படும்போது, ஆங்கிலேயர்கள் தங்களது டெல்லி நகர காவல் தெய்வமாக அறிவிக்கப்பட்ட கத்தோலிக்க துறவி யார்?
செயிண்ட் ஸ்டீஃபன்.
Q19. டெல்லியில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்கள் யாவை?

1. ஜனாதிபதி மாளிகை : ஆங்கிலேயர்கள் காலத்தில் ""வைஸ்ராய் மாளிகை"" என அழைக்கப்பட்டது. இங்கிலாந்தின் எட்வின் லுட்யென் அவர்களால் வடிவமைக்கப்பட்டு, 1920 களில் கட்டுமான வேலை தொடங்கி, 1929ல் முடிவடைந்து, 1931ல் பயனுக்குக் கொண்டு வரப்பட்ட து. இர்வின் பிரபு - கவர்னர் ஜெனரல் தான் முதலில் இந்த மாளிகையில் குடியேறியவர். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜகோபாலாச்சாரி தான் இங்கு முதலில் குடியேறியவர். இரும்பின் பயனில்லாமல் கட்டப்பட்ட இந்த மாளிகையில் 340 அறைகள் உள்ளன. இந்த மாளிகையின் முன்பு உள்ள தூண் (இதன்மேல் ஒரு நட்சத்திரம் இருக்கும்) ""ஜெய்ப்பூர் தூண்"" என அழைக்கப்படுகிறது. இந்த மாளிகையின் முன் உள்ள ""முகலாய தோட்டம்"" உலகப்புகழ் பெற்றது.
2. பாராளுமன்ற வளாகம் : சன்சாத் பவன் என அழைக்கப்படும் வட்ட வடிவ இந்த வளாகம் 257 உருண்டையான பளிங்கு தூண்களால் அமைக்கப்பட்ட து. தென் ஆப்பிரிக்க வடிவமைப்பாளர் ஹெர்பர்ட் பெக்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. இது அமைந்துள்ள இடம் ""ஜன்பத்"" எனப்படுகிறது.
3. ராஜ்பத் : (அரசர் பாதை - KING'S PATH) இது நம் நாட்டு விழாக்கள் (குடியரசு தினம்) நடத்தப் பயன்படுத்தப்படும் ஒரு பிரத்தியேக வழி. இந்த வழி, ஜனாதிபதி மாளிகையில் தொடங்கி, விஜய் சௌக், இந்தியா வாயில் (INDIA GATE) வழியாக தேசிய அரங்கம் சென்றடையும். வழியின் இருபுறமும் கண்கவர் அழகிய தோட்டம் அமைக்கப்பட்டுள் இந்த வழி ""ரெய்சினா குன்று"" (RAISINA HILL) என்ற இடத்திற்கும் செல்கிறது. இந்த குன்றின் மீது இந்திய பாராளுமன்ற அலுவல வளாகம் (SECRETARIATE) அமைந்துள்ளது. இந்த வளாகம் தெற்கு, வடக்கு என பிரிக்கப்பட்டுள்ளது. தெற்கு வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகமும், வடக்கு வளாகத்தில் நிதி மற்றும் உள் துறை அமைச்சகமும் அமைந்துள்ளது.
4. இந்திய வாயில் (INDIA GATE) : இது ஒரு போர் நினைவுச் சின்னம். ராஜ்பத் வழியில் அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னம் எட்வின் லுட்யென் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த சின்னம், முதல் உலகப் போர் மற்றும் ஆப்கானிஸ்தான் போரிலும் உயிர் நீத்த சுமார் 90000 இந்திய வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது. இவர்களின் பெயர்கள் இந்த சின்னத்தின் பொறிக்கப்படுள்ளது. 1911ல் தொடங்கி 1931ல் முடிவடைந்தது. இங்கு எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் தீபத்தின் பெயர் ""அமர் ஜவான் ஜோதி"".
5. ஹுமாயூன் கல்லறை : இது உலகப் புராதனச் சின்னம். ஹுமாயூன் மற்றும் பாபரின் கல்லறைகள், அழகிய தோட்டங்களுக்கு நடுவே. டெல்லியின் கிழக்கு நிஜாமுதின் பகுதியிலுள்ளது.
"6. செங்கோட்டை : 1639 - 1650 காலத்தில் ஷாஜஹான் அவர்களால் கட்டப்பட்ட செங்கற்களால் ஆன கோட்டை. அழகிலும் அளவிலும் மிகவும் பிரம்மாண்டமான கோட்டை. 15 ஆகஸ்ட் அன்று பிரதம மந்திரி இங்கு கொடியேற்றி மக்களுடன் வாழ்த்துச் செய்தி பகிர்ந்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது.
7. குதுப்மினார் : மெஹ்ராவ்லி என்ற இடத்தில் அமைந்து உள்ளது. செங்கற்களால் உருளை வடிவ, உள்வழி கொண்ட, அழகிய வேலைப்பாடும், குரானின் சில போதனைகளையும் பதித்திருக்கும் தூண் அமைப்பிலான கட்டுமானம். 72.5 மீட்டர் உயரமுள்ள இந்த தூண் குத்புதீன் ஐபெக் என்ற அடிமை வம்ச அரசரால் துவங்கப்பட்டு, இல்தூமிஷ் மற்றும் ஃபிரோஸ் ஷா துக்ளக் ஆகியோரால் 1368ல் முடிவுற்றது.
8. புரானா கீலா : பழைய கோட்டை - 16வது நூற்றாண்டில் ஹுமாயூனால் கட்டப்பட்டது.
9. ஜமா மஸ்ஜித் : 1656ல் ஷாஜஹான் அவர்களால் கட்டி முடிக்கப்பட்ட மசூதி. மிகப்பெரிய மசூதி.
10. லக்ஷ்மி நாராயண் கோவில் : 1933 - 39 காலத்தில் பிர்லா குடும்பத்தினரால் (பல்தெவ் தாஸ் பிர்லா) கட்டப்பட்ட மிக அழகான கோவில். பிர்லா மந்திர் என்றும் அழைக்கப்படும்.
11. அக் ஷர் தாம் கோவில் : ஸ்வாமி நாராயண் கோவில், 2005ல் ஸ்வாமி மகாராஜ் அவர்களால் கட்டப்பட்ட து. 141 அடி உயரம், 356 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்று அழகான சூழல், மற்றும் பல சிற்பங்கள், வண்ணங்கள் என அனைத்து அம்சங்களும் கொண்ட கோயில்.
12. ராஜ்காட் - காந்தி சமாதி; சாந்திவன் - நேரு சமாதி; சக்தி ஸ்தல் - இந்திராகாந்தி சமாதி.
13. தாமரைக் கோவில் : இஸ்லாமியர்களில் பஹாய் என ஒரு பிரிவினர் உண்டு. இப்பிரிவினரின் வழிபாட்டுத் தலம். சுற்றியுள்ள தோட்டங்களையும் சேர்த்து ஒரு ரம்மியமான வழிபாட்டு சுற்றுலா தலம்.
14. அப்புகர் : குழந்தைகளுக்கான சுற்றுலா தலம்.
15. கொன்னாட் ப்ளேஸ் : வியாபார தலம்.
16. மிதக்கும் சந்தை : வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் இயங்கும் சந்தை.
அனைத்துப் பொருட்களும் விற்பனையில் இடம் பெறும்.
Q20. டெல்லியில் உள்ள முக்கியமான கல்வி நிலையங்கள் :

1.   All India institute of Medical Sciences.
2.   Indian Institute of Technology.
3.   Indira Gandhi National Open University.
4.   Delhi School of Economics
5.   Nethaji Subhash Institute of Technology.
6.   Delhi University.
7.   Jawahar Lal Nehru University.
8.   Indraprastha University.
9.   Indian Institute of Mass Communication.
10. Indian Institute of Planning & Management.
11. School of Planning & Architecture.
12. International Management Institute.
13. National Law University.
14. Indian Institute of Foreign Trade
15. Indian Statistical Institute
16. National School of Drama. மற்றும் பல வகையான கல்வி நிலையங்கள்.
Q21. 2. அந்தமான் & நிக்கோபார் தீவுகள்: ANDAMAN & NICOBAR ISLANDS 
Q22. அந்தமான் நிக்கோபார் தீவுகளைப் பற்றி :
இந்திய எல்லைக்குள் அடங்கிய இரண்டு தீவு குழுக்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித இனம் இங்கு வாழ்ந்ததாக தெரிகிறது. வெளி உலகத்துடன் 1850 - 60 களில் தொடர்பு ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்து, இந்திய சுதந்திரம் வரை (1942 - 45ல் ஜப்பானியர்கள் முதல் உலகப்போர் காலத்தில் இங்கிருந்தனர்) இங்கு ஆதிக்கம் செலுத்தினர். சுதந்திரத்திற்கு பிறகு ஒரு யூனியன் பிரதேசமாக இயங்கி வருகிறது. சுமார் 8073 ச.கி.மீ. பரப்பளவில் சுமார் 572 தீவுகளை கொண்ட பகுதி. இதில் சுமார் 34 தீவுகள் மட்டுமே மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பயனில் உள்ளது. பெரிய நிக்கோபார் தீவின் ""இந்திரா பாயிண்ட்"" என்ற மையம் இந்தியாவின் தென் கோடி முனையாகும்.
Q23. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலை நகர் பற்றி...
போர்ட் ப்ளேயர் : ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனியின் நில அளவையால் ஆர்ச்சிபால்டு ப்ளேயர் (ARCHI BALD BLAIR 1788 - 89ல் பணியிலிருந்தவர்) என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்த தீவை, சுதந்திர போராட்ட வீரர்களை தண்டிக்கும் வகையில் இங்குள்ள வட்ட சிறைச்சாலை (CELLULAR JAIL) யில் அடைத்து வைப்பர். இதன் காரணமாக இங்கு இந்தி, தமிழ், பெங்காலி, பஞ்சாபி, மலையாளம் மொழி பேசுபவர்களின் குடியேற்றம் உள்ளது. கைத்தொழில், மீன் பிடிப்பு, சுற்றுலா, அரசாங்க அலுவல்கள் ஆகியவையே முக்கிய தொழில்.  ஐராவா -- இந்திய  கப்பற்படையின் ஒரு மண்டலம், இந்திய கடலோர காவற்படை, இந்திய விமானப்படைத்தளம் ஆகியவை உள்ளன. மிகப்பெரிய சுற்றுலா தலம். 2004ல் ஏற்பட்ட சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்டது.
Q24. அந்தமான் நிக்கோபார் தீவுகள் பெயர் எந்த மொழியிலிருந்து எடுக்கப்பட்டது?
மலாய்.
Q25. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் எந்த தீவு முன் காலத்தில் ஒரு எரிமலையாக இருந்து, இப்போது ஒரு "தூங்கும் எரிமலை" யாக  உள்ளது?
பாரன் தீவு (BARREN ISLAND).
Q26. 3. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி: DADRA &  NAGAR HAVELI
Q27. தாத்ரா நாகர் ஹவேலியை பற்றி...
பரப்பளவு : 487 ச.கி.மீ ; தலை நகர் : சில்வாஸா ; குஜராத் மற்றும் மகாராஷ்டிராவுக்கிடையில் அமைந்துள்ள ஒரு பகுதி. போர்ச்சுகீசியர்கள் ஆட்சியில் இருந்த பகுதி. 1954ல் இந்தியா இந்த பகுதியை கைப்பற்றிக் கொண்ட போதும், 1961 வரை தன்னாட்சியே செய்து கொண்டு வந்தது. 1961ல் போர்ச்சுகீசியர்கள் பகுதி முழுமையாக கைப்பற்றிய பிறகு, இந்த பகுதி முழுமையாக இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது. 11.8.1961 முதல் யூனியன் பிரதேசமாக இயங்கி வருகிறது. குஜராத்தி முக்கிய மொழியாகவும், இந்தி, மராத்தி, ஆங்கிலம் மொழிகளும் பயனில் உள்ளது. வனப்பகுதி அதிகமுள்ள பகுதி. பல வகை பழங்கள் பயிர் செய்வது முக்கிய தொழில். சிறிதளவு சிறு தொழில்களும் உள்ளன.
Q28. 1961ல் இந்த பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது, அரசியல் ரீதியாக ஒரு பிரத்தியேக வித்தியாசமான நிகழ்ச்சி நடந்தது. அது என்ன?
இந்த பகுதி இந்தியாவுடன் இணைப்பதற்கான நெறிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுவதற்காக, அன்றைய தினம் இந்த பகுதியின் நிர்வாக பொறுப்பில் இருந்த IAS அதிகாரி திரு. பத்லானி என்பவர் அன்றைய ஒரு நாள் நிகழ்வுக்காக, ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக, பிரதம மந்திரி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். அன்று நம் நாட்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு.
Q29. 4. டாமன் மற்றும் டையூ: DAMAN & DIU
Q30. டாமன் மற்றும் டையூவை பற்றிய சில கூற்றுகள் :
சுமார் 122 ச.கி.மீ. பரப்பளவு உடைய சிறிய யூனியன் பிரதேசம். டாமன், குஜராத் கடலோரத்தில், டையூ கத்தியாவார் தீபகற்பத்திலும் அமைந்துள்ளது. 1961ல் இந்தியாவுடன் இணைந்த து. குஜராத்தி மொழி அதிகம் பயனில் உள்ளது. இதைத் தவிர, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலமும் பயனில் உள்ளது.
Q31. 5. லட்சத் தீவுகள்: LAKSHADWEEP
Q32. லட்சத்தீவுகளைப் பற்றி சில கூற்றுகள் :
அரபிக்கடலில், கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 200 முதல் 400 கி.மீ. தூரத்தில் பரவிக் கிடக்கும் தீவுக் கூட்டம். சுமார் 32 ச.கி.மீ. பரப்பளவில், 10 மனித வாழ்க்கை உள்ள தீவுகளும், 17 மனித நடமாட்டம் இல்லாத தீவுகளும், மற்றும் சில சிறிய தீவுகளுமாக பரவி இருக்கும் இந்த தீவுகளுக்கு ""கவராட்டி தீவு"" தலை நகராக உள்ளது. ஆண்ட் ராட் நகரம் இத்தீவுகளின் மிகப்பெரிய நகரம். மலையாளம் முக்கிய மொழி. 1956 முதல் யூனியன் பிரதேசமாக இயங்கி வருகிறது. யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்படுவதற்கு முன் - 1947 - 1956 காலத்தில், மகாராஷ்டிராவுடன் இணைந்து வந்தது. அகட்டி தீவில் ஒரு விமான தளம் / நிலையம் உள்ளது. மீன் பிடித்தல், தேங்காய் நார் தயாரிப்புகள், காய்கறி பயிரிடுதல், சுற்றுலா ஆகியவை மக்களின் பொருளாதார நடவடிக்கை.
Q33. 6. புதுச்சேரி: PUDUCHERRY
Q34. புதுச்சேரி யூனியன் பிரதேசம் பற்றி சில கூற்றுகள் ...
ஆங்கிலேயர்களுக்கு அடுத்து ஃப்ரெஞ்சுக்காரர்களும், நம் நாட்டில் ஒரு சில இடங்களில் ஆதிக்கம் செலுத்தியது சரித்திரம். இவ்வகையில் 1674 முதல் பாண்டிச்சேரியும் ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தில் வந்தது. இதற்கு முன்பாக சந்தர் நாகூர் (1673), பின்பு மாஹே (1721) யாணம் (1731) காரைக்கால் (1739) மற்றும் மசூலிப்பட்டினம் 91760) அடங்கியது ஃப்ரெஞ்ச் இந்திய பகுதியாகும். இவற்றுள் மசூலிப்பட்டினம் (ஆந்திராவுடன் இணைந்த பகுதி) தவிர்த்த மற்ற பகுதிகள் பாண்டிச்சேரியை தலைமையாகக் கொண்டு இயங்கி வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு 1954ல் இந்த பகுதிகள் இந்திய வசம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு 1956 நவம்பர் முதல் யூனியன் பிரதேசமாக இயங்கி வருகிறது.
Q35. பாண்டிச்சேரியின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
ஃப்ராங்காய்ஸ் மார்ட்டின்.
Q36. பாண்டிச்சேரி எப்போது முதல் புதுச்சேரி என மாற்றம் செய்யப்பட்டது?
20 செப்டம்பர் 2006.
Q37. புதுச்சேரிக்கு சட்டசபை / முதல் மந்திரி அந்தஸ்து எப்போது முதல் வழங்கப்பட்டது?
01.07.1963.
Q38. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சர் யார்?
எட்வர்டு கூபெர்ட் - 1.7.1963 - 24.8.1964. இவரை தொடர்ந்த முதல் இந்திய முதலமைச்சர் - வெங்கட சுப செட்டியார் - 1964 - 1967.
Q39. இன்றைய நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பகுதிகள் யாவை?
புதுச்சேரி - 293 ச.கி.மீ;   காரைக்கால் - 160 ச.கி.மீ;   மாஹே - 9 ச.கி.மீ;   யாணம் - 30 ச.கி.மீ.   இந்த  நான்கு பகுதிகளும் நான்கு மாவட்டங்களாக இயங்குகின்றன.
Q40. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்  சட்டசபை தொகுதிகள் எத்தனை?
33 தொகுதிகள்.
Q41. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் எத்தனை மக்களவை தொகுதிகள் உள்ளன?
ஒன்று.
Q42. புதுச்சேரி மாநில சின்னங்கள் யாவை?
விலங்கு - அணில்;   பறவை - குயில்;   மலர் - நாகலிங்கப்பூ;   மரம் - வில்வம்.
Q43. புதுச்சேரியின் சுற்றுலா தலங்கள் யாவை?
1. அரவிந்தர் ஆஸ்ரமம் மற்றும் ஆரோவில் நகர் அமைப்பு. இந்த நகரமைப்பை வடிவமைத்தவர் ரோஜர் ஏங்கர் என்ற ஃப்ரெஞ்ச் வடிவமைப்பாளர்.
2. மணக்குள விநாயகர் கோவில்.
3. ""ஜோன் ஆஃப் ஆர்க்"" சிலை.
4. தூய இருதய தேவாலயம் (SACRED HEART CHURCH).
5. தாவரவியல் பூங்கா.
6. ஆனந்த ரங்க பிள்ளை மாளிகை.
7. கடற்கரை.
Q44. புதுச்சேரி மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் என்ன?
விவசாயம் - நெல், தேங்காய், பாக்கு மற்றும் சில வாசனைப் பொருட்கள் மற்றும் சுற்றுலா.
Q45. 7. சந்திகர்:  CHANDIGARH
Q46. சந்திகர் நகரம் எப்போது உருவானது?
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, பஞ்சாப் மாநில தலைநகராக இருந்த லாகூர் மற்றும் அதைச் சார்ந்த சில பகுதிகளும் பாகிஸ்தானுடன் இணைந்ததால், இந்திய பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரு தலை நகரம் தேவைப்பட்டது. அதன் அடிப்படையில், நல்லதொரு நகரம் உருவாக்கி, அதை தலைநகராக்க பிரதமர் ஜவஹர்லால் விரும்பியதால், 1953ல் இந்த நகரம் உருவாக்கப்பட்டு பஞ்சாப் தலைநகராக நியமிக்கப்பட்டது. பிறகு அரியானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, இரண்டு மாநிலங்களுக்கும் இதையே தலைநகராக்கி, யூனியன் பிரதேச (196) அந்தஸ்துடன் இயங்கி வருகிறது.
Q47. சந்திகர் என்ற பெயர் வரக் காரணமும் பொருளும் என்ன?
பஞ்ச்குலா என்ற இடத்தில் உள்ள சந்தி தேவி - பெண் கடவுள் பெயரால். சந்திகர் என்றால் சந்தி கோட்டை.
Q48. சந்திகர் நகரை வடிவமைத்தவர் யார்?
லெ கார்புசியர் - ஃப்ரெஞ்ச் வடிவமைப்பாளர்.
Q49. சந்திகரை பற்றிய சில குறிப்புகள்...

1.   1953ல் உருவாக்கப்பட்டது.
2.   லெ கார்புசியரால் வடிவமைக்கப்பட்டது.
3.   இரு மாநிலங்களுக்கு - பஞ்சாப், அரியானா - தலைநகர்.
4.   சந்தி தேவி என்ற பெண் கடவுளின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
5.   114 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது.
6.   புகை பிடித்தல் தடை செய்த முதல் நகரம் - 15.8.2007.
7.   நெகிழி (PLASTIC) பைகள் தடை செய்யப்பட்ட நகரம்.
8.   பஞ்ச்குலா, மொஹாலி யுடன் இணைந்து முப்பெரும் நகராக விளங்குகிறது.
9.   மிகவும் அழகான தோட்டங்கள், சாலை வடிவமைப்பு கொண்ட நகரம்.
10. ""ராக் கார்டன்"" என்ற தோட்டம் புகழ் பெற்றது.
Q50. சந்திகரின் சில பிரபலங்கள் கூறுக...

1. ஜிவ் மில்கா சிங் - கோல்ஃப் விளையாட்டு வீரர்.
2. அசோக் மல்ஹோத்ரா, கபில்தேவ், யோக்ராஜ் சிங், யுவராஜ் சிங், நவ்ஜோத்சிங் சித்து, ஹர்பஜன் சிங் - இந்திய கிரிக்கெட் வீரர்கள்.
3. மில்கா சிங் - இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர்.
4. அபினவ் பிந்த்ரா - ஒலிம்பிக் பதக்கம் வென்ற துப்பாக்கி சூடு வீரர்.
5. ஐஸ்பால் பட்டி - நகைச்சுவை மேடை நடிகர்.
6. நேக் சந்த் - ராக் கார்டன் வடிவமைத்தவர்.
Q51. கண்டோன்மெண்ட் - நகர்ப்புற ராணுவ முகாம்கள்: CANTONMENTS
Q52. கண்டோன்மெண்ட் என்பது என்ன?
ஆங்கிலத்தில் CANTONMENT என அழைக்கப்படுவது. ஆங்கிலேயர்கள் காலத்தில் தங்களது ராணுவ அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளுக்காக ஒதுக்கி உருவாக்கப்பட்ட சில பகுதிகள். இந்தியாவில் இவ்வாறு சுமார் 62 பகுதிகள் உள்ளன. அவை ஊராட்சி என்ற அந்தஸ்தில் இயங்கி வந்தன. (MUNICIPALITIES). இவை முதலில் தற்காலிகம்/நிரந்தர முறையில் உருவாக்கப்பட்டன. பிறகு 1903ல் கிச்சனர் பிரபு துவங்கிய ராணுவ சீர்திருத்தங்களின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் சட்டம் 1924 இயக்கப்பட்டு இவை நிரந்தரமாக்கப்பட்டன. இவ்வகை அமைப்புகள் இந்தியா, வங்காள தேசம், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் காணப்படும். 
Q53. முதன் முதலில் துவங்கப்பட்ட கண்டோன்மெண்ட் எது?
பாரக்பூர் - மேற்கு வங்காளம் - 1758. அதற்குப் பிறகு, தேனாபூர், பீஹார் - 1768.
Q54. கண்டோன்மெண்ட் பகுதிகள் இந்தியாவில் எங்கெல்லாம் உள்ளன?
1. அகமதாபாத்,   2. அலகாபாத்,   3. அம்பாலா,   4. அல்மோரா,   5. ஆக்ரா,   6. பதாமி பாக் (ஸ்ரீ நகர்),   7. பெங்களூரு,   8. பரேலி,   9. பதிண்டா,   10. பாரக்பூர்,  11. டெஹ்ராடூன்,   12. பஞ்ச்குலா,  13. சென்னை,  14. சந்திகர்,   15. டெல்லி,   16. பூனே,   17. தேனாபூர்,   18. ஜபல்பூர்,   19. ஜெய்ப்பூர்,   20. ஜலந்தர்,   21. ஜோத்பூர்,   22. கசௌலி,   23. கபூர்தாலா,   24. கட்கி,   25. காம்ப்டி,   26. முசோரி,   27. கார்வால்,   28. லக்னௌ, 29. மதுரா,   30. மீரட்,   31. மோவ்,   32.ஜம்மு,   33. நைனிடால்,   34. நாசிக்,   35. பாட்னா,   36. ராணிகேட்,   37. செகந்திராபாத்,   38. ஷில்லாங்,   39. ஷிம்லா,   40. திருச்சி,   41. உதாம்பூர்.