Khub.info Learn TNPSC exam and online pratice

சஹமான வம்சம் -- CHAHAMANAS 973-1192

Q1. சஹமானா வம்ச ஆட்சி எந்த பகுதிகளில் நடந்தது?
"சாகம்பரி (தற்போது சாம்பார், ஜெய்ப்பூர், ராஜஸ்தான்) . அவர்களுடைய் ஆட்சி சுமார் 100+ ஆண்டுகளுக்கு இருந்தது. "

Q2. சஹமானா வம்சத்தின் முக்கிய மன்னர்கள் யாவர்?
"வசுதேவா -- VASUDADEVA - இந்த வம்ச ஆட்சியை நிறுவியவர். பிற்காலத்தில் இது பிரிந்து மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு சென்று விட்டனர்.
சிம்ஹராஜவிக்ரஹராஜா -- SIMHARAJAVIGRAHARAJA II – இந்த வம்ச ஆட்சி வளர்ச்சிக்கு முக்கியமானவர்.
ப்ரிதிவிராஜஜெயராஜா -- PRITHVIRAJAAJAYARAJA II - அஜயமேரு (தற்போது அஜ்மீர்) நகரம் இவரால் உருவாக்கப்பட்டது.
விக்ரகராஜா 3 -- VIGRAHARAJA III – இந்த வம்சத்தின் மிக முக்கிய பெரிய மன்னர். இவர் காலத்தில் அனைத்து திசைகளிலும் எல்லையை நீட்டித்தார். டெல்லியை தோமரா மன்னர்களிடமிருந்தும், ஹன்சி (பஞ்சாப்) பகுதிகளைக் கைப்பற்றினார். சாளுக்ய மன்னர் குமாரபாலா-வை வீழ்த்தி, தனது தந்தையின் தோல்விக்கு பழி தீர்த்துக்கொண்டார். இவருடைய காலத்தில் பஞ்சாப் முழுமையாகவும், கங்கை சமவெளிப் பகுதிகளையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தினார். இவர் ஒரு நல்ல எழுத்தாளர், அவருடைய படைப்பு ""ஹரிகேளி நாடகா"" . அஜ்மீரில் உள்ள சரஸ்வதி கோவில் இவரால் கட்டப்பட்டது. இவரைத் தொடர்ந்து ப்ருதிவிராஜா 2, சோமேஸ்வரா மற்றும் ப்ருதிவிராஜா 3 ஆகியோர் ஆட்சியைத் தொடர்ந்தனர். "
Q3. சஹமானா வம்ச ஆட்சி எவ்வாறு முடிவுக்கு வந்தது?
"கி.பி 1192ல் இந்த வம்சத்தின் கடைசி அரசர் ப்ருதிவிராஜா 3, தரைன் (ஹரியானா) என்ற இடத்தில் நடந்த போரில், சுல்தானிய மன்னர் ஷிஹாபுத்தீன் அவர்களால் தோற்கடிக்கப் பட்டு, இந்த வம்சம் முடிவுக்கு வந்தது. "
Q4. ப்ருதிவிராஜா 3 அரசவையில் இருந்த கவிஞர்களும் அவர்களுடைய படைப்புகளும் யாவை?
ஜெயங்கா -- ப்ருதிவிராஜ விஜயா மற்றும் சண்டா - ப்ருதிவிராஜ ரஸோ