Khub.info Learn TNPSC exam and online pratice

சோலங்கி வம்சம் -- SOLANKIS -- கி.பி 974-1238

Q1. சோலங்கி வம்ச மன்னர்கள் ஆண்ட பகுதி எது, தலைநகரம் எது?
"சோலங்கி மன்னர்கள் சாளுக்யர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். குஜராத் மற்றும் கத்தியாவார் பகுதிகளை கி.பி 950-1300 வரை ஆண்டனர். இதன் தலைநகர் அனஹிலாபடாகா (இப்போது பத்தான், குஜராத்) "

Q2. சோலங்கி வம்சத்தின் முதல் மன்னர் யார்?
"முலராஜா 1 -- MULARAJA I – கி.பி 960 to 997 -- ஒரு நீண்ட ஆட்சி நடத்தியிருந்தாலும், இவருடைய ஆட்சியில் தொடர் போர்களும், தோல்விகள், எதிரி படையெடுப்புகள் -- பரமராஜா முஞ்ஜா மற்றும் காளப்பிரர்கள் லக்ஷணா -- வால் இருந்தன. "
Q3. முலராஜாவைத் தொடர்ந்த சோலங்கி மன்னர்கள் யாவர்?
"பீமா 1 -- BHIMA I (1021 to 1963) – இவருக்கு முன் இரண்டு குறிப்பிடத்தக்க அல்லாத மன்னர்கள் இருந்தனர். இவருடைய காலத்தில் தான் கஜினி முகமது சோம்நாத் கோவில் மீது 17 முறை படையெடுத்து அங்கிருந்த புதையல்கள அள்ளிச் சென்றார். ராஜஸ்தானின் மவுண்ட் அபு தில்வாரா கோவில் இவர் காலத்தில் கட்டப்பட்டது. தனது மைந்தன் கர்னாவிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தார்.
கர்ணா -- KARNA (1063 – 1093) – 30 வருடங்கள் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லாதிருந்தது. அநேக கோவில்கள், ஒரு நகரம் (இன்றைய அஹமதாபாத்) இவரால் உருவாக்கப்பட்டது.
ஜெயசிங் சித்தராஜா -- JAYASINH SIDDHARAJA (1093 -1143) – பரமாரா, சஹமானா, சாண்டெல்லா, மற்றும் சாளுக்ய விக்ரமாதித்யா 6 போன்ற மன்னர்களை வென்று ராஜ்ய எல்லையை விரிவுபட செய்தார். இவர் ஒரு சிறந்த கவிஞர். இவருடைய அவையில் ஹேம்சந்த்ரா என்ற புகழ் பெற்ற கவிஞர் இருந்தார். நிறைய கோவில்கள், முக்கியமாக சித்தாபூர் ""ருத்ர மகாகாலா"" கோவில் இவரால் கட்டப்பட்டது.
குமாராபாலா -- KUMARAPALA (1143-1173) -- ஜெயசிங் சித்தராஜாவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர். இவருடைய காலத்தில் ஜைன மதம் அதிக முக்கியத்துவம் பெற்றது.  
முலராஜா MULARAJA II (1173+)  இவருடைய காலத்தில் முகமது கோரி 1178ல் குஜராத் மீது படையெடுத்தார்.  அவரை வெற்றிகரமாக எதிர்கொண்டு துரத்தியடித்தார்.  இருப்பினும் அதற்கு பிறகு 1197ல் துருக்கிய குத்புதீன் குஜராத் மற்றும் அதன் தலைநகர் அனஹீல பாடகா  மீது படையெடுத்த போது, பெருத்த சேதம் ஏற்பட்டது.  
பீமா BHIMA II (later 12th century to 1242) –  தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதிலும்,  கைவசமிருந்த எல்லைப்பகுதியை பாதுகாத்துக் கொள்வதிலும் அதிகம் கவனம் செலுத்தினார்.
திருபூவன்பால் Tribuvanpal (1242-44)  இவர் திறமையற்ற பலவீனமான அரசராக விளங்கிய காரணத்தால், அலாவுதீன் கில்ஜி குஜராத்தை கைப்பற்றினார்.