Khub.info Learn TNPSC exam and online pratice

ராஜபுத்திரர்கள் வம்சம் -- RAJAPUTRAS

Q1. ராஜபுத்திரர்கள் யார்?
"ராஜ்புத் என்பது பழங்குடி/இனத்தை சேர்ந்தவர்கள். சத்திரியவம்சத்தை சேர்ந்தவர்களாதலால் இவர்கள் சூர்ய/ சந்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் என கருதப்படுகிறார்கள். "

Q2. ராஜபுத்திரர்கள் ஆண்ட பகுதி எது?
வடக்கு மற்றும் மேற்கு இந்திய பகுதிகள் முழுவதும்.
Q3. ராஜபுத்திரர்கள் என்பதன் கீழ் வரும் மன்னர் பரம்பரைகள் யாவர்?
பரமாரா, சோலங்கி, சஹமானா, கஹட்வல்சா, சாண்டெல்லா மற்றும் காளப்பிரர்கள்.(காலாசூரி)
Q4. பரமாரா “Paramaras” மன்னர்கள் எந்த பகுதியை ஆண்டனர்? தலைநகரம் எது?
"குஜராத்தை தாண்டிய மேற்கு பகுதியை ஆண்டனர். உபேந்திரா (கிருஷ்ணராஜா) என்பவரால் நிறுவப்பட்ட வம்சம். தாரா (மாளவா, மேற்கு மத்தியபிரதேசம்.) இதன் தலைநகரம். இன்று இது தார் Dhar என அழைக்கப்படுகிறது. "
Q5. பரமாரா வம்சத்தின் மன்னர்கள் யார்?
சியாகா 2 -- SIYAKA II – இந்த வம்சம் இவரால் பெருமைப் பெற்றது. ராஷ்டிரகுட வம்ச அதிகாரத்தை எதிர்த்தது மட்டுமின்றி, ப்ரத்திஹாரா மற்றும் ராஷ்டிரகுடர்களிடமிருந்து சில பகுதிகளைக் கைப்பற்றினார்.
முஞ்ஜா -- MUNJA – சியாகாவின் மூத்த மைந்தன் -- திறமையான போராளி -- காளப்பிரர்கள் மன்னர் யுவராஜா 2 ஐ ஓரில் வென்றார். சாளுக்ய மன்னர் தைலா 2 மாளவா பகுதியை அடிக்கடி படையெடுத்து தாக்கியதால் இவருடைய மிகப்பெரிய எதிரி. இதற்கு ஒரு முடிவுக்கு கொண்டு வர அவர் மீது போர் தொடுத்து கொலையுண்டார்.
சிந்துராஜா -- SINDHURAJA – சாளுக்ய மன்னர் தைலா 2 விடம் இழந்த பகுதிகளை மீட்டார். ஆனால் இவரால் குஜராத் பகுதிகளை கைப்பற்ற முயற்சிகள் செய்தும் முடியவில்லை.
போஜா -- BHOJA – பரமாரா மன்னர்களில் புகழ்பெற்றவர். சில ராணுவ வெற்றிகளையும் பெற்றார். இவர் ஒரு சிறந்த அறிஞர். இவரைத் தொடர்ந்து, ஜெயசிம்மா, உதயதித்யா, கடைசியாக கஹலக் தேவ். கடைசி மன்னரை அலாவுதீன் கில்ஜி தோற்கடித்து கொலை செய்து, மாளவ பகுதிகள் சுல்தானியத்துடன் இணைக்கப்பட்டது. அதற்கு பிறகு சில சிறிய பரமாரா மன்னர்கள் இருந்தனர். "