Khub.info Learn TNPSC exam and online pratice

ராஷ்டிரகுட வம்ச ஆட்சி -- RASHTRAKUTAS – 753 – 973 AD

Q1. ராஷ்டிரகுட வம்சம் இந்தியாவின் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் மொழி என்ன?
மகாராஷ்டிராவின் லத்தூர் (முன்பு லத்தலூரா) பகுதியை சேர்ந்தவர்கள். மொழி கன்னடம்.

Q2. ராஷ்டிரகுட வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
"தண்டிதுர்கா -- DANTI DURGA – கி.பி. 735 – 756. சாளுக்யர்களின் சிநேக மன்னர்கள். இவர் ப்ரத்திஹாரா வம்சத்தினரிடமிருந்து மாளவா பகுதியை கைப்பிடித்தார். அப்படியே வருங்காலத்தில் மத்திய பிரதேசம், மத்திய மற்றும் தென் குஜராத் ஆகிய பகுதிகளையும் கைப்பற்றினார். சாளுக்ய மன்னர் கீர்த்திவர்மன் 2 வையும் வீழ்த்தி மத்திய இந்திய டெக்கான் பகுதிக்கு தன்னை மன்னராக அறிவித்துக் கொண்டார். "
Q3. தண்டிதுர்கா - வைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
"தண்டிதுர்கா - வுக்கு வாரிசு இல்லாததால், அவருடைய மாமன் கிருஷ்ணா 1 (கி.பி. 756 முதல் 774 வரை) பதவிக்கு வந்தார். "
Q4. கிருஷ்ணா 1 ன் ராணுவ வெற்றிகள் யாவை?
"மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் தனது ஆட்சியை பலப்படுத்திக்கொண்டு கர்நாடகவின் கங்காவாடி (மைசூரின் சில பகுதிகள் இவ்வாறு அழைக்கப்பட்டது) மீது படையெடுத்து வெற்றி பெற்று, மன்னர் ஸ்ரீபுருஷா என்ற மன்னரை தொடர்ந்து ஆட்சி புரிய அனுமதித்தார். வெங்கி பகுதி விஜயாதித்யாவையும் தனது வாரிசு இளவரசர் மூலம் அடிபணிய வைத்தார். "
Q5. கிருஷ்ணா 1 ஐ தொடர்ந்து அரசரானவர் யார்?
"கோவிந்தா 2 / (துருவா) - GOVINDAII/DHRUVA – கி.பி 774 – 793. கோவிந்தா 2 பதவியேற்றாலும் தனது இளையவர் துருவாவை ஆட்சிபுரிய அனுமதித்தார். தனது பகுதியை தக்க வைத்து பலப்படுத்தி, ப்ரத்திஹார மன்னன் வத்ஸ்ராஜவை கனௌஜ் லும், வங்காள பாலா வம்ச மன்னர் தர்மபாலவையும் வெற்றிகண்டார். இவருடைய நான்கு புதல்வர்களில் கோவிந்தா வை தனது மன்னர் வாரிசாக நியமித்தார். "
Q6. கோவிந்த 2 வை தொடர்ந்து யார் பதவியேற்றார்?
"கோவிந்தா 3 -- Govinda III – கி.பி 793 – 814. தனக்கு எதிராக இருந்த சகோதரர் ஸ்தம்பா வை அடக்கி, ப்ரத்திஹாரா மன்னர் நாகபட்டா 2 வை கனௌஜ் லும் வங்காள மன்னர் தர்மபாலா வையும் போரில் வெற்றி கண்டார். இவ்வாறே வடபகுதியில் இருந்த சிறு மன்னர்களையும் வெற்றி பெற்று தனது ஆட்சியை நிலை நாட்டினார். "
Q7. கோவிந்தா 3 ஐ தொடர்ந்து வந்த ராஷ்டிரகுட அரசர் யார்?
"அமோகவர்ஷா 1 (சர்வா எனவும் அழைக்கப்பட்டார்) – கி.பி 814 – 878 . இவர் சுமார் 64 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். ஆனால் இவருடைய ஆட்சி, சிநேக அரசர்கள் மற்றும் அண்டை நாட்டு மன்னர்களால் மிகவும் தொல்லைக்குட்பட்டார். இதனால் சில பகுதிகளையும் இழந்தார். "
Q8. அமோகவர்ஷா எந்த மதத்தின் மீது அதிக அக்கறை கொண்டார், அவருடைய ஆசான் யார்?
ஜைன மதம். ஆதிபுரானா என்ற நூலை எழுதிய ஜீனசேனா.
Q9. ராஷ்டிரகுட வம்சத்தின் இதர மன்னர்கள் யாவர்?
கிருஷ்ணா 2 -- Krishna II (878-914);
இந்திரா 3 -- Indra III (914-929);
அமோகவர்ஷா 2 -- Amogavarsha II (929-930);
கோவிந்தா 4 -- Govinda IV (930-936);
அமோகவர்ஷா 3 -- Amoghavarsha III (936-939);
கிருஷ்ணா 3 -- Krishna III (939-962); சோழர்களிடமிருந்து காஞ்சி, தஞ்சாவூர் பகுதிகள், கேரளா மற்றும் பாண்டிய மன்னர்களை தோற்கடித்து, ராமேஸ்வரம் சென்று சிறு காலம் தங்கி வந்தார். தன்னுடைய முந்தைய பகுதியை தக்க வைத்துக்கொண்டது மட்டுமின்றி, தொண்டமண்டலம் எனப்பட்ட ஆற்காடு, செங்கல்பட்டு, வேலூர் பகுதிகளையும் கைப்பற்றினார். பல வருடங்களுக்கு பிறகு கி.பி.949ல் தக்கோலம் (அரக்கோணம்) என்ற இடத்தில் நடந்த போரில் சோழர்கள் வெற்றி பெற்று காஞ்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளை மீட்டனர். கிருஷ்ணா 3 ன் கடைசி காலங்களில், இந்த வம்சத்தின் முடிவின் அறிகுறி தெரிந்தது.
கோட்டிகா -- Khottiga (967-972); உஜ்ஜெயின் மன்னர் சியாகாவிடம் தோல்வியடைந்து கிருஷ்ணா 3 வென்ற பகுதிகளை இழந்தார்.
கர்கா 2 -- Karka II (972-973); குறுகிய காலத்திலேயே டெக்கான் பகுதி மீது இவருக்கு இருந்த பிடி தளர்ந்தது. சிநேக அரசுகளும், முக்கியமாக சாளுக்ய வம்ச மன்னர் தைலா 2, எதிர்க்க தொடங்கினர். இவர் மேற்கு சாளுக்ய வம்சத்தை நிறுவினார். கடைசியாக இந்திரா 4 -- Indra IV (973-982) – இவருடைய ஆட்சிக்கு பிறகு இந்த வம்ச ஆட்சி முடிவடைந்தது.
திரிவிக்ரமா -- Trivikrama - நளச்சாம்பு -- சமஸ்கிருதம்.
ஹலாயுதா -- Halayudha - கவி ரஹஸ்யா - சமஸ்கிருதம்
அகலங்கா -- Akalanka - அஷ்டசதி -- ஜைன மத நூல்.
வித்யாநந்தா --Vidyananda - அஷ்டசகஸ்ரீ -- ஜைனமத நூல்.
மணிக்யாநந்தின் -- Manikyanandin - பரிஷாமுகசாஸ்த்ரா, நியாயாகௌமுடி சந்த்ரோதயா
ஹரிசேனா -- Harisena - ஹரிவம்சா -- ஜைனமத நூல்.
ஜீனசேனா -- Jinasena - பாரஸ்வப்யூதயா
சங்கடாயனா -- Sankatayana - அமோகவ்ருத்தி (இலக்கணம்)
வீராச்சார்யா -- Viracharya- கணிதசரசாம்க்ரஹகா (கணிதம்)
பம்ப்பா 1 -- Pampa I - ஆதி புரானா -- கன்னடம்; விக்ரமார்ஜூனாவிஜயா - கன்னடம்
பொன்னா -- Ponna - சாந்தி புராணா -- கன்னடம்.
Q10. ராஷ்டிரகுட ஆட்சியில் ராஜ்யம் எவ்வாறு பிரிக்கப்பட்டு நிர்வாகம் நடத்தப்பட்டது?
ராஷ்டிரா -- RASHTRAS – ராஷ்டிரபதியால் நிர்வகிக்கப்பட்ட மாகாணங்கள்.
விஷயாஸ் -- VISHAYAS – விஷ்யாபதியால் நிர்வகிக்கப்பட்ட மாகாணங்கள்.
புக்தி -- BHUKTIS – 50 முதல் 70 கிராமங்கள் கொண்ட பகுதி போகபதி யால் நிர்வகிக்கப்பட்டது.
Q11. ராஷ்டிரகுட ஆட்சியில் வருவாய்த் துறை அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
நல்கவுண்டா (அ) தேசகரமகுடா.
Q12. "ராஷ்டிரகுடர் - கள் காலத்தில் இருந்த அறிஞர்கள் யாவர், அவர்களுடைய இலக்கிய படைப்புகள் யாவை? "
திரிவிக்ரமா -- Trivikrama - நளச்சாம்பு -- சமஸ்கிருதம்.
ஹலாயுதா -- Halayudha - கவி ரஹஸ்யா - சமஸ்கிருதம்
அகலங்கா -- Akalanka - அஷ்டசதி -- ஜைன மத நூல்.
வித்யாநந்தா --Vidyananda - அஷ்டசகஸ்ரீ -- ஜைனமத நூல்.
மணிக்யாநந்தின் -- Manikyanandin - பரிஷாமுகசாஸ்த்ரா, நியாயாகௌமுடி சந்த்ரோதயா
ஹரிசேனா -- Harisena - ஹரிவம்சா -- ஜைனமத நூல்.
ஜீனசேனா -- Jinasena - பாரஸ்வப்யூதயா
சங்கடாயனா -- Sankatayana - அமோகவ்ருத்தி (இலக்கணம்)
வீராச்சார்யா -- Viracharya- கணிதசரசாம்க்ரஹகா (கணிதம்)
பம்ப்பா 1 -- Pampa I - ஆதி புரானா -- கன்னடம்; விக்ரமார்ஜூனாவிஜயா - கன்னடம்
பொன்னா -- Ponna - சாந்தி புராணா -- கன்னடம்.