Khub.info Learn TNPSC exam and online pratice

சேனா வம்ச ஆட்சி -- SENAS – கி.பி 1070-1230

Q1. சேனா வம்சத்தை நிறுவியவர் யார்? அவர்கள் ஆண்ட பகுதி என்ன?
ஹேமந்த சென் -- கி.பி.1070-1096

Q2. ஹேமந்த சென் - ஐ தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
விஜய் சென் -- கி.பி 1096 - 1159 -- ஹேமந்த சென் - ந் மைந்தன். சுமார் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தார். வங்காளம் முழுவதும் இவர்களுடைய ஆட்சியில் இருந்தது. இவருடைய நீண்ட ஆட்சி, வங்காளத்தை முழுமையாக ஆட்சி செய்ததின் காரணமாக இவரே இந்த வம்ச ஆட்சியை நிறுவியதாக கருதப்படுகிறது.
Q3. விஜய் சென் - க்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பெயர்கள் யார்?
பரமேஸ்வரா, பரம்பட்டக்காரா, மகாராஜாதிராஜா
Q4. விஜய் சென் காலத்தில் தலைநகரங்களாக இருந்த நகரங்கள் யாவை?
1. விஜய்புரி, மேற்கு வங்காளம்
2. விக்ரமபுரா, வங்காளதேசம்.
Q5. விஜய் சென் - ஐ பற்றி நூல் எழுதிய கவிஞர் யார்?
ஸ்ரீஹர்ஷா -- அவருடைய படைப்பு "விஜயப்ரசஸ்தி" Sri Harsha - book name is Vijayaprasasti.
Q6. விஜய் சென் - ஐ தொடர்ந்து வந்த அரசர் யார்?
பல்லால சென் -- BALLALA SENA – கி.பி. 1159 - 1179. விஜய் சென் ன் மைந்தன். இருந்த பகுதிகளை தக்க வைத்துக்கொண்டு அமைதியான ஆட்சி.
Q7. பல்லால சென் ன் இலக்கிய படைப்புகள் யாவை?
"1. தனசாகரா -- Dhanasagara – சகுனம், மற்றும் எதிர்கால நிகழ்வுகளை கூறக்கூடியது.
2. அத்புத்சாகரா -- Adhbhutasagara – வானியல் "
Q8. பல்லால சென் - ஐ தொடர்ந்து பதவிக்கு வந்தவர் யார்?
"லக்ஷ்மண் சென் -- LAKSHMANA SENA – கி.பி. 1179 - 1206. 60 வயதில் பட்டமேற்று, 20 வருட ஆட்சியில், அஸ்ஸாம், ஒடிசா, பீஹார் போன்ற பகுதிகளுக்கும் தன் ஆட்சியை நீட்டித்தார். கில்ஜி வம்ச படையெடுப்புகள், இந்த வம்ச ஆட்சியை வலுவிழக்கச் செய்தது. இவருக்கு பிறகு, விஷ்வரூப் சென் (கி.பி 1206-1225) மற்றும் கேஷப் சென் (கி.பி 1225 - 1230) ஆகிய இருவரின் ஆட்சியுடன் இந்த வம்ச ஆட்சி முடிவடைந்தது."