Khub.info Learn TNPSC exam and online pratice

பாலா வம்சம் -- PALAS : 760 -1162 AD

Q1. பாலா வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்? அவர்களின் ஆட்சிப்பகுதி என்ன?
கோபாலா -- வங்காளத்தை கி.பி. 750 முதல் 770 வரை ஆண்டார்.

Q2. கோபாலவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த பாலா வம்ச மன்னர் யார்?

தர்மபாலா DHARMAPALA –கோபாலா வின் மைந்தன் – கி.பி 770 முதல் 810 வரை. இவருடைய ஆட்சியில் இந்தியாவின் வடக்குப் பகுதி முழுமையும் இவர் ஆட்சியின் கீழ் இருந்தது. வங்காளம், பீஹார், கனௌஜ், பஞ்சாப், ராஜபுத்னா, மாளவா, பெரார் என வடஇந்தியா முழுமையும். இருப்பினும், ராஷ்டிரகுட் அரசர் த்ருவா மற்றும் ப்ரத்திஹாரா மன்னர் நாகாபட்டா 2 ஆகியவர்களிடம் இவர் கனௌஜ் பகுதியை இழந்தார். 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவர் ""உத்தரபாதஸ்வாமின்"" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார். இவருக்கு பிறகு தேவபாலா மன்னர் பதவியேற்றார். 

Q3. தர்மபாலாவைத் தொடர்ந்த பாலா அரசர் யார்?

தேவபாலா -- DEVAPALA – கி.பி 810 முதல் 850 வரை. தனக்குக் கிடைத்த பகுதிகளை தக்க வைத்துக்கொண்டது மட்டுமின்றி, இந்தியாவின் தென் பகுதிகளுக்கும் சற்று தனது ஆட்சியை நீட்டித்தார். புத்த மதத்தை மிகவும் ஆதரித்தார். நாளந்தாவில் ஒரு புத்தமத மடம் கட்டுவதற்கு 5 கிராமங்களை நன்கொடையாக அளித்தார். இவரைத் தொடர்ந்த மன்னர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. 

Q4. தேவபாலா அரசவையில் இருந்த மிகப் புகழ் பெற்ற புத்தமத கவிஞர் யார்?
வஜ்ரதத்தா -- VAJRADUTTA – இவருடைய இலக்கிய படைப்பு "லோகேஸ்வரசடகா"
Q5. தேவபாலா-வைத் தொடர்ந்த இதர மன்னர்கள் யாவர்?

விக்ரகபாலா -- VIGRAHAPALA – சிறிது காலம் ஆண்டு தனது மைந்தனை அரசராக்கினார்.
நாராயணபாலா -- NARAYANPALA – நீண்ட காலம் ஆட்சிபுரிந்தார். ராஷ்டிரகுட அரசர் அமோகவர்ஷரிடமும் ப்ரத்திஹாரா மன்னரிடமும் தோல்விகண்டு வங்காளம் மற்றும் சில பகுதிகளை இழந்தார். ப்ரத்திஹாரா வம்சம் பலமிழக்கத் தொடங்கியவுடன் இழந்த பகுதிகளை மீட்டார்.
ராஜ்யபாலா & கோபாலா 2 -- RAJYAPALA followed by GOPALA II – இவர்களின் காலத்தில் சாண்டெல்லா மற்றும் காளப்பிரர்கள் (திரிபுரா) படையெடுப்பினால், இவர்களுடைய வம்ச ஆட்சி பலவீனமானது.
மஹிபாலா -- MAHIPALA : இவருடைய காலத்தில், இழந்த சில பகுதிகளை மீட்டார்.
சோழ மன்னர் ராஜேந்திர சோழரின் தாக்குதலை சமாளித்து, தனது ராஜ்யத்தை தக்க வைத்து ஆட்சி புரிந்தார்.

Q6. பாலா வம்சத்தின் கடைசி மன்னர் யார்?
மதன பாலா -- கி.பி. 1143 -- 1162