Khub.info Learn TNPSC exam and online pratice

ப்ரத்திஹாரா வம்சம் -- PRATIHARAS

Q1. ப்ரதிஹாரா வம்சம் என்பவர்கள் யார்?

குர்ஜார் இன மக்களின் ஒரு பிரிவினர். மத்திய ஆசியாவின் ஒரு பழங்குடி இனத்தவர், இந்தியாவிற்கு ஹூனா இனத்தவருடன் இந்தியாவிற்கு வந்தவர்கள். 

Q2. ப்ரதிஹாரா வம்சத்தின் குறிப்பிடத்தக்க மன்னர் யார், அவர்கள் ஆண்ட பகுதி யாது?

நாகபட்டா 1 -- NAGABHATTA I – 8 வது நூற்றாண்டு – மேற்கு இந்தியாவை அரபு படையெடுப்பிலிருந்து பாதுகாத்து வந்தார். மாளவா, ராஜ்புத்தானா மற்றும் குஜராத் பகுதிகள் இவருடைய ஆட்சியில் இருந்தது. 

Q3. நாகபட்டா 1 ஐ தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முக்கியமான ப்ரத்திஹாரா மன்னர் யார்?

வத்ஸராஜா -- VATSARAJA – நாகபட்டாவின் மருமகன் -- குர்ஜாரா - பரிஹாரா வம்ச ஆட்சியை நிறுவியவராக கருதப்படுபவர். பைதி இனத்தவரின் பிடியிலிருந்து கனௌஜ் பகுதியை மீட்டார். வங்காளத்தின் தர்மபாலாவை வீழ்த்தி, இந்த வம்ச ஆட்சியை ஒரு சாம்ராஜ்யமாக மாற்றினார். இருப்பினும், ராஷ்டிரகுடா மன்னர் த்ருவா விடம் தோல்வி கண்டார். 

Q4. வத்ஸராஜாவைத் தொடர்ந்த ப்ரத்திஹாரா மன்னர் யார்?

நாகபட்டா 2 -- NAGABHATTA II – தனது தந்தையின் தோல்விக்கு பழி வாங்கும் வண்ணமாக கனௌஜ் பகுதியை மீண்டும் மீட்டு அதை தனது தலைநகராக மாற்றினார். வங்காளத்தின் தர்மபாலாவை மீண்டும் வீழ்த்தி மோங்கைர் வரை தனது ஆட்சியை நீட்டித்தார். இவருடைய ஆட்சியில், ப்ரத்திஹாரா சாம்ராஜ்யம் ராஜபுத்தானா மற்றும் உத்திர பிரதேசத்தின் பெரும் பகுதி வரை நீட்டித்தது.

Q5. நாகபட்டா 2 ஐ தொடர்ந்த ப்ரத்திஹாரா மன்னர் யார்?

ராமபத்ரா -- RAMABHADRA : இவருடைய ஆட்சி 3 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. வங்காளத்தின் தேவபாலா ப்ரத்திஹாராவின் எல்லை முன்னேற்ற முயற்சிகளை முறியடித்ததால், இருந்த நிலையிலேயே நீடித்தது.

Q6. ராமபத்ராவைத் தொடர்ந்து வந்த ப்ரத்திஹாரா மன்னர் யார்?

மிஹிரா போஜா-- MIHIRA BHOJA – இவருடைய காலத்தில் ப்ரத்திஹாரா சாம்ராஜ்யத்தின் புகழும் பலமும் இமாலயம் வரை பரவியது. இவர் 46 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால், இந்த சாம்ராஜ்யம் வடக்கில் இமாலயம், கிழக்கில் வங்காளம், தெற்கில் பண்டேல்காண்ட் அண்ட் வாத்சா, தென் மேற்கில் நர்மதா, சௌராஷ்டிரா, மற்றும் மேற்கில் ராஜ்புத்தனா வரை பரவியது. இவருடைய ராணுவ சாதனைகளால் இவரை ""மாமன்னர் மிஹிரா போஜா"" என அழைத்தனர்.

Q7. ப்ரத்திஹாரா வம்சத்தின் இதர குறிப்பிடத்தக்க மன்னர்கள் யாவர்?

மகேந்திரபால் 1 -- Mahendrapal I – கி.பி. 890 to 910;
போஜா 2 -- Bhoja II - கி.பி. 910 to 913;
மகிபாலா -- Mahipala I – கி.பி 913 to 944
மகேந்திரபால் 3 -- Mahendrapal III – கி.பி. 944 to 948. இவர்கள், இருந்த எல்லையை தக்கவைத்து ஆட்சி புரிந்தனர். இவர்களுக்கு பிறகு வந்த மன்னர்களால் இந்த சாம்ராஜ்யம் முடிவை நெருங்கியது. 1008ல் தலைநகர் கனௌஜ், முகமது கஜினியால் கைப்பற்றப்பட்டது. பிறகு சிறிது சிறிதாக கி.பி. 1036ல் இந்த சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.