Khub.info Learn TNPSC exam and online pratice

சதுரங்கம் - CHESS

Q1. சதுரங்க விளையாட்டு எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
இந்தியாவில் 6வது நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட து.
Q2. சதுரங்க விளையாட்டு என்பது என்ன?
இது மனிதனின் அறிவுத்திறனை சோதிக்கும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டை ஒரு போர்க்களமாக நினைத்து, பல யுக்திகளை கையாண்டு, எதிரணி அரசரை கைப்பிடிப்பது அல்லது செயலிழக்கச் செய்வதே இந்த விளையாட்டின் மூலக்கரு.
Q3. சதுரங்க விளையாட்டு பலகை (BOARD), என்பது என்ன?
இது ஒரு சதுரப் பலகை. இதில் 64 சிறிய அளவிலான (8 8 ) சதுரங்கள் இருக்கும். இந்த சதுரங்கள் மாறு மாறாக, இரண்டு வண்ணங்களாக - பொதுவாக வெள்ளை, கருப்பாக இருக்கும்.
Q4. சதுரங்க விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் காய்களை (PIECES) பற்றி கூறுக.
"1. PAWNS (SOLDIERS) - சிப்பாய்கள் :
சிப்பாய்கள் எனப்படும் 8 காய்கள் - இவைகள் அனைத்தும் முன் வரிசையில் நிறுத்தப்படும். விளையாடுபவருக்கு முன் உள்ள இரண்டாவது வரிசையில், கட்ட த்துக்கு ஒன்றாக நிறுத்தப்படும் போது மட்டும் நேராக 2 கட்டங்கள் நகரலாம். அதற்குப் பிறகு ஒவ்வொரு கட்டமாகத் தான் நகர முடியும். ஆரம்பத்திலும் ஒரு கட்டம் நகரவும் அனுமதி உண்டு.
2. இதர காய்கள் :
மன்னர் 1, ராணி 1, ரூக் - 2 (யானை என்றழைப்பர்), பிஷப் - 2 (தளபதி), நைட் (KNIGHT) - 2 (குதிரை) என 8 காய்கள் ஆடுபவரின் முன் உள்ளதால் வரிசையில் கீழ்க்கண்டவாறு நிறுத்தப்பட்டிருக்கும். (இடது - வலது கட்டங்கள்) ரூக் (யானை) - நைட் (குதிரை) - பிஷப் (தளபதி) - மன்னர் (கிங்) - ராணி (க்வீன்) - பிஷப் (தளபதி) - நைட் (குதிரை) - ரூக் (யானை) என்ற வரிசையில் இரண்டு வீர ர்களும் காய்களை நிறுத்தியிருப்பர்."
Q5. சிப்பாய்கள் தவிர்த்து மற்ற சதுரங்க காய்கள் நகரும் முறையை விவரிக்கவும்?
"2 ரூக் (யானை) :
முதல் வரிசையில் வலது, இடது கோடி கட்டங்களில் நிறுத்தப்படும். செங்குத்தாகவோ, அல்லது கிடைமட்டத்திலோ (வலது, இடது இரண்டு பக்கத்திலும்) நகர்த்தப்படக்கூடியது. இவ்வாறாக எதிராளியின் காயை வீழ்த்தவோ, அல்லது காலியான கட்டத்தில், ஒரு யுக்தியாகவோ நிறுத்த முடியும்.
2 நைட் (குதிரை) :
முதல் வரிசையில் யானைக்கும் தளபதிக்கும் இடையில் நிறுத்தப்படும். இது ஆங்கில எழுத்து L போன்று, அதாவது செங்குத்தாக இரண்டு கட்டம், கிடைமட்டத்தில் ஒரு கட்டம் (அதே போல் மாற்று வரிசையிலும்) நகரும். இதன் காரணமாக, வெள்ளைக் கட்டத்திலிருந்து நகர்ந்தால் கருப்புக் கட்ட த்தில், கருப்புக் கட்டத்திலிருந்து நகர்ந்தால் வெள்ளைக் கட்டத்திலும் போய், எதிராளியின் காயை வீழ்த்த்தியோ அல்லது காலி இடத்திலோ போய் அமரும்.
2 பிஷப் (தளபதி) :
முதல் வரிசையில், ஒன்று ராணியின் பக்கத்திலும் மற்றொன்று மன்னரின் பக்கத்திலும் நிறுத்தப்பட்டிருக்கும். மூலைவிட்ட திசையில், இடது, வலது இரு பக்கங்களிலும்,தடைபடாத வழியில், எத்தனை கட்டங்கள் வேண்டுமானாலும் நகரலாம். எதிராளியின் எந்த காய் வழியிலோ, அல்லது முடியும் கட்டத்திலோ இருந்தால் வீழ்த்தலாம் அல்லது காலியிடத்தில் நிறுத்தப்படலாம்.
ராணி (க்வீன்) :
முதல் வரிசையில் இடது பக்கத்தில் இருந்து நான்காவது இடத்தில் நிறுத்தப்படும். மிகவும் சக்தி வாய்ந்த காய். யானை, தளபதி போல, செங்குத்தாக, கிடைமட்டமாக, மூலை விட்ட திசைகளில் வலது, இடது இரண்டு திசைகளில், இடையூறு இல்லாத வரை நகரக் கூடிய சக்தி வாய்ந்தது. எதிராளியின் எந்த காயையும் வீழ்த்தவும், காலியான கட்டத்தில் ஒரு யுக்தியாக நிற்கவும் சக்தி வாய்ந்தது.
மன்னர் (கிங்) :
முதல் வரிசையில் இடது பக்கத்தில் இருந்து 5வது இடத்தில் (வலது பக்கத்தில் இருந்து 4வது இடம்) நிறுத்தப்படும். மிக முக்கியமான ஆனால் சக்தியற்ற காய். எந்த திசையிலும் ஒரு கட்டம் மட்டுமே நகரக் கூடியது."
Q6. சதுரங்க விளையாட்டை யார் முதலில் தொடக்குவது?
வெள்ளைக் காய்களுடன் விளையாடுபவர்.
Q7. சதுரங்க விளையாட்டில் பின்னோக்கி நகர முடியாத காய் எது?
சிப்பாய் - (PAWN - SOLDIER).
Q8. சதுரங்க விளையாட்டில், குறுக்கே உள்ள காயை தாண்டி செல்லக்கூடிய சக்தி எந்த காய்க்கு உண்டு?
குதிரை - KNIGHT.
Q9. சதுரங்க விளையாட்டில், ஒரு வீரர் தோல்வி அடையப் போவதை எதிர் நோக்கி, சரணடைய விரும்புவதை எவ்வாறு தெரிவிப்பார்?
தன்னுடைய மன்னர் காயை சாய்த்து விடுவது.
Q10. சதுரங்க விளையாட்டை எத்தனை வழிகளில் தொடக்கம் செய்ய முடியும்?
சுமார் 20 வழிகளில்.
Q11. சதுரங்க விளையாட்டில் CHECK என்ற தொடரின் நிலை என்ன?
ஒருவருடைய மன்னர் காய் எந்த திசையிலும் நகர முடியாத மற்றும் நகர்ந்தால் வீழ்த்தப்படக் கூடிய சூழ் நிலை இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது விளையாட்டின் (சுற்றை) முடிவை அறிவிக்கிறது.
Q12. சதுரங்க விளையாட்டு இந்தி/உருதுவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? இந்த விளையாட்டு எவர்களுடைய பழக்கத்தால் மிகவும் புகழ்பெற்றது?
சத்ரஞ்ஜ் - முன் காலத்து முகமதிய மன்னர் மற்றும் நவாப்களால் தங்கள் பொழுது போக்குக்காக அதிகம் விளையாடப்பட்ட்தால் புகழ்பெற்றது.
Q13. நம் நாட்டின் முதல் சதுரங்க சர்வ தேச மாஸ்டர் பட்டம் வென்றவர் யார்?
மேனுவல் ஆரோன் - 1960.
Q14. நம் நாட்டின் மிகக் குறைந்த வயதில் INTERNATIONAL MASTER மற்றும் GRAND MASTER பட்டம் வென்றவர் யார்?
பரிமார்ஜன் நேகி - 12+ வயதில் INTERNATIONAL MASTER பட்டமும், 13 வயது 142 நாட்களில் GRAND MASTER பட்டமும் பெற்ற மிக்க் குறைந்த வயது சதுரங்க வீரர். உலகிலேயே இரண்டாவது குறைந்த வயதில் பட்டம் பெற்றவர். (இவரை விடக் குறைந்த வயதில் GM பட்டம் பெற்றவர் - செர்ஜி கர்ஜாகிர் உக்ரைன் - 12 வயது 7 மாதங்களில் பெற்றார்).
Q15. சதுரங்க விளையாட்டை மேலாண்மை செய்யும் சர்வதேச அமைப்பு எது?
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு - INTERNATIONAL CHESS FEDERATION - பாரீஸ், ஃப்ரான்ஸ் - 1924. விளையாட்டின் விதிகள், போட்டிகள் நடத்துவது, பட்டங்கள் வழங்குவது இதன் பணி.
Q16. சதுரங்க விளையாட்டில் ELO RATING என்பது என்ன?
"சதுரங்க விளையாட்டில் வீர ர்களின் திறனை மதிப்பீடு செய்யும் ஒரு வழிமுறை. ஒவ்வொரு வீரரும் பங்கேற்கும் போட்டிகளில் அவர்கள் பெறும் வெற்றி தோல்விகளை கணக்கில் கொண்டு புள்ளிகள் வழங்கப்படும். இந்த வழிமுறையை வகுத்துக் கொடுத்தவர் அர்பட் எலோ என்ற அமெரிக்க இயற்பியல் முனைவர்.
இந்த புள்ளிகள் சேர்வதின் அடிப்படையில், சர்வதேச அமைப்பால் கீழ்க்கண்ட பட்டங்கள் வழங்கப்படுகிறது.
புள்ளிகள்பட்டம்
2200 - 2299CANDIDATE MASTER
2300 - 2399FIDE MASTER
2400 - 2499INTERNATIONAL MASTER
2500 - 2599GRAND MASTER

தோல்விகளால் புள்ளிகள் குறைய வாய்ப்புண்டு. இருப்பினும், ஒரு தடவை பட்டம் பெற்ற பிறகு, பட்டம் திரும்ப்ப் பெறப்பட மாட்டாது. ஆனால் உலக தர வரிசையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும்."
Q17. இந்தியாவில் முதல் GRAND MASTER பட்டம் பெற்ற ஆண்/பெண் சதுரங்க வீரர் யார்?
"1. விஸ்வநாதன் ஆனந்த் - தமிழ்நாடு - 1988ல் 19 வயதில் இந்த பட்டத்தை பெற்றார்.
2. கொனேரு ஹம்பி - ஆந்திரா - 2002ல், 15 வயதில் உலகின் குறைந்த வயது GRAND MASTER பட்டம் பெற்றார். (இந்த சாதனை 2008ல் ஹூ யிஃபான், சீனா - 14 வயது - என்பவரால் முறியடிக்கப்பட்டது)."
Q18. இந்தியாவில் எத்தனை ஆண்/பெண் GRAND MASTER-கள் உள்ளனர்?
ஆண் - 32;
பெண் - 8.
Q19. சதுரங்க போட்டிகளில் 2800+ புள்ளிகள் எடுப்பது என்பது மிகப்பெரிய சாதனை. அவ்வாறு உலகில் எத்தனை வீரர்கள் உள்ளனர்? (2016 நிலை)
"1. மாக்னஸ் கார்ல்சன் - நார்வெ.
2. கேரி காஸ்பரோவ் - ரஷ்யா,
3. ஃபேபியானோ கருவானா - இத்தாலி,
4. லேவோன் அரோனியன் - இத்தாலி,
5. விஸ்வநாதன் ஆனந்த் - இந்தியா,
6. வெஸெலின் டொப்பொலோவ் - பல்கேரியா,
7. ஹிக்காரு நக்கமுரா - ஜப்பான்/அமெரிக்கா,
8. வ்லாடிமிர் க்ரம்னிக் - ரஷ்யா,
9. அலெக்ஸாண்டர் க்ரிஷ்சக் - ரஷ்யா."
Q20. இந்தியாவின் மிகமிக புகழ்பெற்ற சதுரங்க விளையாட்டு வீரர் யார்? அவருடைய சாதனைகள் என்ன?
"விஸ்வநாதன் ஆனந்த்.
1. இந்தியாவின் முதல் GRAND MASTER.
2. உலக சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்றவர்.
3. 2800+ எலோ புள்ளிகள் பெற்ற இந்திய முதல் வீரர் - உலகின் நான்காவது வீரர்.
4. தரவரிசையில் உலகின் முதல் வீரராக 21 மாதங்கள் தொடர்ந்து நீடித்தார்.
5. விளையாட்டுக்கு வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதான ""ராஜீவ் காந்தி கேல் ரத்னா"" விருதைப் பெற்ற முதல் இந்திய வீரர் (1991-92)."
Q21. சதுரங்க விளையாட்டில் செக் (CHECK) என்ற தொடருக்கு என்ன நிலை?
இரு வீரர்களில் எவரேனும் எந்த ஒரு காயை நகர்த்தினாலும், மன்னர் காய் மற்றொருவரின் காயால் வீழ்த்தப்படும் அபாயம் இருப்பின் அது செக் (CHECK) என்றழைக்கப்படுகிறது.
Q22. சதுரங்க விளையாட்டில் 2600+ எலோ புள்ளிகள் எடுத்த பெண் வீரர்கள் யார்?
"1. ஜூடித் போல்கர், ஹங்கேரி,
2. யிஃபான் ஹூ, சீனா,
3. கொனேரு ஹம்பி, இந்தியா."
Q23. சதுரங்க விளையாட்டில் "நூற்றாண்டின் போட்டி (MATCH OF THE CENTURY)" என அழைக்கப்பட்ட போட்டி எது?
1972ல், ஐஸ்லாந்தில், பாபி ஃபிஷர் (அமெரிக்கா) மற்றும் போரிஸ் ஸ்பாஸ்கி (ரஷ்யா) இடையில் நடந்த போட்டி. இருவருமே அந்த காலகட்ட த்தில் மிகவும் புகழ்பெற்ற வீர ர்கள்.
Q24. சதுரங்க விளையாட்டில் கீழ்க்கண்ட ஆங்கில சொற்கள் எதனுடன் சம்பந்தப்பட்டது? VIENNA, CATALAN, SICILIAN, DUTCH, INDIAN, SCOTCH, MANHATTAN, BERLIN, BELGRADE, LENINGRAD, DRAGON, HEDGEHOG, STONE WALL.
தற்காப்பு நகர்த்தலாக போட்டி தொடங்கும் போது நகர்த்தப்படும் வழி முறைகள் (OPENING DEFENCES).
Q25. சதுரங்க விளையாட்டில் FOOL'S MATE என்பது என்ன?
குறைந்த நேரத்தில் CHECK MATE - அதாவது மன்னர் காய் நகர முடியாத நிலை.
Q26. CHESS என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து எடுக்கப்பட்டது?
பாரசீக மொழியிலிருந்து. "ஷா" என்றால் பாரசீக மொழியில் மன்னர் என்று பொருள்.
Q27. சதுரங்க விளையாட்டில் ADJUST என்ற வார்த்தைக்கு என்ன பொருள்?
சதுரங்க காய்களில் ஏதேனும் ஒன்றை, அதை நகர்த்தும் எண்ணமில்லாமல் தொடுவது.
Q28. இன்றைய நிலையில், உலகில் குறைந்த வயதில் GRAND MASTER பட்டம் பெற்றவர் யார்?
செர்ஜி கர்ஜாகின் - உக்ரைன் - 12 வயது 7 மாதங்களில் இந்த பட்ட த்தை பெற்றார்.
Q29. சதுரங்க விளையாட்டில், உலக தர வரிசையில், முதல் இடத்தைப் பெற்ற குறைந்த வயது வீரர் யார்?
மாக்னஸ் கார்ல்ஸன், நார்வே - 2010ல், 19 வயது 1 மாதத்தில் இந்த நிலை அடைந்தார்.