Khub.info Learn TNPSC exam and online pratice

விலங்கியல் பூங்கா, சரணாலயம், தேசிய பூங்காக்கள். ZOOS, SANCTUARIES AND NATIONAL PARKS

Q1. விலங்குகள மனிதனால் ஒரு குறிப்பிட்ட அடைப்பு பகுதிக்குள் வைத்துக் காக்கும் இடத்தை எவ்வாறு அழைக்கிறோம்?
விலங்குகள் காப்பகம்.

Q2. தொடக்கத்தில், வரலாற்றுப்படி, விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மெனாகரி -- Menagerie -- காட்டு மிருகச் சாலை.
Q3. விலங்குகள் காப்பகம் என்பது என்ன?
காட்டு மிருகங்களை, ஒரு குறிப்பிட்டுள்ள மிகப்பெரிய பரப்பளவுக்குள், விலங்குகளுக்கேற்ப கூண்டுகளும், அடைப்புகளும் இயற்கை சூழலுடன் ஏற்படுத்தி, அவற்றுள் அடைத்து வைத்து வளர்ப்பதும் காப்பதும் ஆகும். விலங்குகளுக்கேற்றபடி உணவுகளை, பயிற்சி பெற்ற உழியர்கள் மூலம் கொடுத்து, விலங்கு மருத்துவ வசதிகளுடன் கூடிய இடத்தில் வளர்ப்பது.
Q4. உலகின் பழமையான விலங்குகள் காப்பகம் எது?
ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவில் 1752ல் ஹேஸ்பர்க் வம்ச ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது.
Q5. இந்தியாவின் பழமையான விலங்குகள் காப்பகம் எது?
அலிப்பூர் விலங்குகள் காப்பகம், கொல்கத்தா -- 1800ல் ஆர்த்தர் வெல்லெஸ்லி யால் நிறுவப் பட்டது. இந்த காப்பகத்தில் ""அத்வைதா"" என்ற 250 வயது ஆமை இருந்தது குறிப்பிடத்தக்கது.
Q6. இந்தியாவில் உள்ள விலங்குகள் காப்பகப் பட்டியல்……..
1. அறிஞர் அண்ணா விலங்குகள் காப்பக பூங்கா, வண்டலூர், சென்னை -- இந்த இடத்திற்கு, சுமார் 1490 ஏக்கர் பரப்பளவில், ஜூலை 24, 1985ல் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு முன்பாக சென்னை செண்ட்ரல் அருகில் 1855ல் தொடங்கப்பட்ட இது, இந்தியாவின் முதல் பொது மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்ட முதல் விலங்குகள் காப்பகம்.
2. இந்திரா காந்தி விலங்குகள் காப்பகம், ஹைதராபாத் -- 154 ஹெக்டேர் பரப்பளவு -- 1963ல் தொடங்கப்பட்டது.
3. வீர்மாதா ஜிஜாமாதா உதயான், பைக்குல்லா, மும்பை -- 1861ல் தொடங்கப்பட்டது.
4. சென்னை முதலைப் பூங்கா -- சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் உள்ள வட நெம்மேலி என்ற இடத்தில் இயங்குகிறது. 24 ஆகஸ்ட், 1976ல் ரொமலஸ் விட்டேகர் என்பவரால் தொடங்கப்பட்டது.
5. பளிங்கு மாளிகை விலங்குகள் காப்பகம், கொல்கத்தா -- 1835ல் ராஜா ராஜேந்திர மல்லீக் என்பவரால் தொடங்கப்பட்டது.
6. நேரு விலங்குகள் காப்பகம், ஹைதராபாத் -- 1963ல் தொடங்கப்பட்டது.
7. மைசூர் விலங்குகள் காப்பகம் -- 1892ல் தொடங்கப்பட்டது -- 157 ஏக்கர் பரப்பளவு.
8. நந்தங்கானன் விலங்குகள் காப்பகம், புவனேஷ்வர், ஒடிசா -- 1979ல் தொடங்கப்பட்டது.
9. குவஹாத்தி விலங்குகள் காப்பகம், அஸ்ஸாம் -- 1958ல் தொடங்கப்பட்டது.
10. சக்கர் பாக் விலங்குகள் காப்பகம், ஜூனாகத், குஜராத் -- 1863 -- 490 ஏக்கர் பரப்பளவு.
11. சிபாஹிஜோலா விலங்குகள் காப்பகம், திரிபுரா -- 1972.
12. பத்மஜா நாயுடு இமாலயன் விலங்குகள் காப்பகம், டார்ஜிலிங், மேற்கு வங்காளம் -- 1958.
13. பரசினக்கடவு பாம்பு பண்ணை -- கன்னூர், கேரளா.
14. கமலா நேரு விலங்குகள் காப்பகம், இந்தூர், மத்தியபிரதேசம் -- 1974.
15. கான்பூர் விலங்குகள் காப்பகம், கான்பூர், உத்திரப்பிரதேசம் -- 1974.
16. ஜெய்ப்பூர் விலங்குகள் காப்பகம், ஜெய்ப்பூர், ராஜஸ்தான் -- 1877
. 17. ரோட்டக் விலங்குகள் காப்பகம், ரோட்டக், ஹரியானா.
18. சஞ்சய் காந்தி விலங்குகள் காப்பகம், பாட்னா, பீஹார் -- 1973.
19. திருவனந்தபுரம் விலங்குகள் காப்பகம், கேரளா -- 1857.
20. இந்திரா காந்தி விலங்குகள் காப்பகம், விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம் -- 1977 - 625 ஏக்கர்.
Q7. "விலங்குகள் சரணாலயம்" என்பது என்ன?
விலங்குகள் வேட்டையாடுவது, பிடிப்பது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய பகுதி, எங்கே மரம் வெட்டுவது, வனப் பொருட்கள் சேகரிப்பது, தனிமனிதர் சொந்த இடம் உரிமைப் பெறுவது ஆகியவை தடை செய்யப்பட்ட இடத்தில் விலங்குகளை சுதந்திரமாக திரியவிட்டு பாதுகாப்பது. இந்தியாவில் சுமார் 515 வன விலங்குகள் சரணாலயம் உள்ளன. சுமார் 1.25 லட்சம் சதுர கி.மீ பகுதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சரணாலயங்கள் அதிகமாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ளவை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
Q8. தமிழ்நாட்டில் உள்ள விலங்குகள் சரணாலயங்கள் யாவை?
தமிழ் நாட்டில் சுமார் 29 சரணாலயங்கள் உள்ளன. அவை:
1. வடகாவேரி சரணாலயம் -- தர்மபுரி
2. சித்ராங்குடி சரணாலயம் -- ராமநாதபுரம் -- பறவைகள்.
3. கங்கைக்கொண்டான் சரணாலயம் -- திருநெல்வேலி
4. இந்திரா காந்தி சரணாலயம் (ஆனைமலை) -- கோயம்புத்தூர்.
5. களக்காடு சரணாலயம் -- திருநெல்வேலி
6. கஞ்சிராங்குளம் பறவைகள் சரணாலயம் -- ராமநாதபுரம்
7. கன்னியாகுமரி சரணாலயம் -- கன்னியாகுமரி -- வனவிலங்கு.
8. காரைவெட்டி சரணாலயம் -- அரியலூர் -- பறவைகள்
9. கரிக்கிளி சரணாலயம் -- செங்கல்பட்டு -- பறவைகள்
10. கொடைக்கானல் சரணாலயம் -- திண்டுக்கல் -- வனவிலங்கு.
11. கூந்தங்குளம் சரணாலயம் -- திருநெல்வேலி -- பறவைகள்.
12. மேல/கீழ செல்வானூர் சரணாலயம் -- ராமநாதபுரம் -- பறவைகள்
13. முதுமலை சரணாலயம் -- நீலகிரி -- வனவிலங்கு.
14. முண்டந்துறை சரணாலயம் -- திருநெல்வேலி -- வனவிலங்கு.
15. நெல்லை சரணாலயம் -- திருநெல்வேலி -- வனவிலங்கு.
16. ஔசுடு ஏரி பறவைகள் சரணாலயம் -- புதுச்சேரி.
17. கோடியக்கரை சரணாலயம் -- நாகப்பட்டினம் -- வனவிலங்கு & பறவைகள்.
18. பழவேற்காடு ஏரி சரணாலயம் -- திருவள்ளூர் -- பறவைகள்.
19. சத்யமங்கலம் சரணாலயம் -- ஈரோடு -- வன விலங்குகள்.
20. ஸ்ரீவில்லிப்புத்தூர் சரணாலயம் -- விருதுநகர் -- நரைத்த அணில்.
21. உதயமார்த்தாண்டபுரம் சரணாலயம் -- திருவாரூர் -- பறவைகள்.
22. வடுவூர் சரணாலயம் -- திருவாரூர் -- பறவைகள்.
23. வேடந்தாங்கல் சரணாலயம் -- செங்கல்பட்டு -- பறவைகள்
24. வள்ளநாடு சரணாலயம் -- தூத்துக்குடி -- வனவிலங்குகள்.
25. வெள்ளோடு சரணாலயம் -- ஈரோடு -- பறவைகள்.
26. வேட்டங்குடி சரணாலயம் -- சிவகங்கை -- பறவைகள்
27. மேகமலை சரணாலயம் -- தேனி -- வன விலங்குகள்.
28. திருத்தங்கால் சரணாலயம் -- பழநி - திண்டுக்கல் -- வன விலங்குகள்.
29. சக்கரக்கோட்டை சரணாலயம் -- ராமநாதபுரம் -- பறவைகள்.
Q9. தேசிய பூங்கா என்பது என்ன?
வனவிலங்குகளுக்காக பாதுகாக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய வனப்பகுதி. விலங்குகள் காப்பகம் போல் அல்லாமல், விலங்குகள் சுதந்திரமாக அலைந்து திரிந்து வேட்டையாடி இயற்கையான வாழ்வு மேற்கொள்ளும் வசதியுடன் கூடிய இடம். இந்தியாவில் சுமார் 103 தேசிய பூங்காக்கள் சுமார் 40000 ச.கி.மீ பரப்பளவில் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் உள்ளன. இது இந்திய பரப்பளவில் சுமார் 1.23%. இவற்றில் புகழ்பெற்ற சில மட்டும் இங்கு கொடுக்கப் பட்டுள்ளது.
Q10. இந்தியாவில் உள்ள முக்கியமான தேசிய பூங்காக்கள் யாவை?
1) அன்ஷி தேசிய பூங்கா, டாண்டேலி, வட கர்நாடகா.
2) பாலஃபரான் தேசிய பூங்கா, மேகாலயா.
3) பந்தாவ்கர் தேசிய பூங்கா, உமாரியா, மத்தியபிரதேசம்.
4) பந்திப்பூர் தேசிய பூங்கா, சாமராஜ் நகர், கர்நாடகா.
5) பன்னேர்கட்டா தேசிய பூங்கா, பெங்களூரு, கர்நாடகா.
6) பொரிவிலி தேசிய பூங்கா, மும்பை, மகாராஷ்டிரா.
7) பேட்லா தேசிய பூங்கா, பலமூர் மாவட்டம், ஜார்க்கண்ட்.
8) பித்ர கணிகா தேசிய பூங்கா, கஸ்த்ரபாரா, ஒடிசா.
9) ப்ளாக் பக் தேசிய பூங்கா, பாவ்நகர், ஒடிசா.
10) ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, நைனிடால், உத்தரகாண்ட்.
11) கேம்ப்பெல் பே தேசிய பூங்கா, நிக்கோபார் தீவுகள்.
12) சௌதோலி தேசிய பூங்கா, சாங்கி மாவட்டம், மகாராஷ்டிரா.
13) பாலைவன தேசிய பூங்கா, ஜெய்சல்மேர், ராஜஸ்தான்.
14) திப்ருசைகோவா தேசிய பூங்கா, தின்சுகியா, அஸ்ஸாம்.
15) தூத்வா தேசிய பூங்கா, கேரி மாவட்டம், உத்திரபிரதேசம்.
16) எரவிக்குளம் தேசிய பூங்கா, இடுக்கி மாவட்டம், கேரளா.
17) ஃபாஸில் தேசிய பூங்கா, மனோலா மாவட்டம், மத்தியப்பிரதேசம்.
18) கிரி தேசிய பூங்கா, ஜுனாகத், குஜராத்.
19) கலாதேரா தேசிய பூங்கா, நிக்கோபார் தீவுகள்.
20) கங்கோத்ரி தேசிய பூங்கா, உத்தரகாண்ட்.
21) கொருமாரா தேசிய பூங்கா, ஜல்பைகுரி, மேற்குவங்காளம்.
22) பெரிய இமாலயன் தேசிய பூங்கா, குளு, இமாச்சலப்பிரதேசம்
23) குகாமல் தேசிய பூங்கா, அமராவதி, குஜராத்.
24) கிண்டி தேசிய பூங்கா, சென்னை, தமிழ்நாடு.
25) கட்ச் வளைகுடா தேசிய பூங்கா, ஜெய்நகர் மாவட்டம், குஜராத்.
26) மன்னார் வளைகுடா கடற்சார் தேசிய பூங்கா, ராமநாதபுரம், தமிழ்நாடு.
27) ஹெமிஸ் தேசிய பூங்கா, லடாக்.
28) இந்திரா காந்தி தேசிய பூங்கா, ஆனைமலை, கோயம்புத்தூர், தமிழ்நாடு.
29) இந்திராவதி தேசிய பூங்கா, தந்தேவாடா, சத்தீஸ்கர்.
30) கலேசர் தேசிய பூங்கா, சந்திகர் அருகில், ஹரியானா.
31) கன்ஹா தேசிய பூங்கா, மாண்ட்லா, மத்தியபிரதேசம்.
32) கங்கேர் காட்டி தேசிய பூங்கா, பஸ்தார், சந்திகார்.
33) காசு ப்ரம்மானந்த ரெட்டி தேசிய பூங்கா, ஹைதராபாத், தெலங்கானா.
34) காசிரங்கா தேசிய பூங்கா, கோலாகாட், அஸ்ஸாம்.
35) கெய்புல் லம்ஜட் தேசிய பூங்கா, மணிப்பூர்.
36) க்யாலாதேவ் தேசிய பூங்கா, ராஜஸ்தான்.
37) கஞ்சன்ஸோங்கா தேசிய பூங்கா, காங்டாக், சிக்கிம்.
38) கிஷ்ட்வார் தேசிய பூங்கா, தொட்டா மாவட்டம், ஜம்மு காஷ்மீர்.
39) குத்ரேமூக் தேசிய பூங்கா, சிக்மகளூர், கர்நாடகா.
40) மாதவ் தேசிய பூங்கா, ஷிவ்பூர் மாவட்டம், மத்தியபிரதேசம்.
41) மகாத்மா காந்தி தேசிய பூங்கா, வண்டூர், அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
42) பணஸ்தாலி தேசிய பூங்கா, ஹைதராபாத், தெலங்கானா.
43) மணாஸ் தேசிய பூங்கா, பார்ப்பேட்டா, அஸ்ஸாம்.
44) மட்டிக்கெட்டா ஷோலா தேசிய பூங்கா, இடுக்கி, கேரளா.
45) மிடில் பட்டன் தீவு தேசிய பூங்கா, போர்ட் ப்ளெயர், அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
46) மோல்லேன் தேசிய பூங்கா, கோவா.
47) மௌலிங் தேசிய பூங்கா, கிழக்கு/மேற்கு சியாங், அருணாச்சல பிரதேசம்.
48) மவுண்ட் அபு தேசிய பூங்கா, ராஜஸ்தான்
49) மவுண்ட் ஹேரியட் தேசிய பூங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
50) மிருகவாணி தேசிய பூங்கா, ஹைதராபாத்.
51) முதுமலை தேசிய பூங்கா, கோயம்புத்தூர்.
52) முக்குருத்தி தேசிய பூங்கா, நீலகிரி.
53) முர்லீன் தேசிய பூங்கா, சம்பாணி மாவட்டம், மிஸோராம்.
54) நாகரஹோலெ தேசிய பூங்கா, கூர்க் மாவட்டம், கர்நாடகா.
55) நவ்காவ்ன் தேசிய பூங்கா, பண்டாரா, மகாராஷ்டிரா.
56) நமேரி தேசிய பூங்கா, சோமித்பூர், அஸ்ஸாம்.
57) நந்தாதேவி தேசிய பூங்கா, உத்தராகாண்ட்.
58) நியோரா பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, டார்ஜிலிங், மேற்கு வங்காளம்.
59) நோக்ரெக் தேசிய பூங்கா, மேகாலயா.
60) நார்த் பட்டன் தேசிய பூங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
61) ஓராங் தேசிய பூங்கா, தேஸ்பூர், அஸ்ஸாம்.
62) பழனி மலை தேசிய பூங்கா, திண்டுக்கல், தமிழ்நாடு.
63) பன்னா தேசிய பூங்கா, சாத்பூர், மத்திய பிரதேசம்.
64) பெஞ்ச் தேசிய பூங்கா, சிந்த்வாரா, மத்திய பிரதேசம்.
65) பெரியார் தேசிய பூங்கா, இடுக்கி, கேரளா.
66) பவங்பூய் மலை தேசிய பூங்கா, சின் மலைகள், மிஸோராம்.
67) பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, ஸ்பிதி பள்ளத்தாக்கு, சிம்லா.
68) ராஜாஜி தேசிய பூங்கா, உத்தராகாண்ட்.
69) ராணி ஜான்சி கடற்சார் தேசிய பூங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
70) ரணதம்போர் தேசிய பூங்கா, சவாய் மாதோபூர், ராஜஸ்தான்.
71) ரோஹ்லா தேசிய பூங்கா, குளு, இமாச்சலப் பிரதேசம்.
72) சேடில் பீக் தேசிய பூங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
73) சலீம் அலி தேசிய பூங்கா, ஸ்ரீநகர், காஷ்மீர்.
74) சஞ்சய் காந்தி தேசிய பூங்கா, மும்பை, மகாராஷ்டிரா.
75) சரிஸ்கா தேசிய பூங்கா, ஆள்வார், ராஜஸ்தான்.
76) சத்புரா தேசிய பூங்கா, ஹோஷங்காபாத், மத்தியபிரதேசம்.
77) அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, கேரளா.
78) சிரோஹி தேசிய பூங்கா, மணிப்பூர்.
79) சிம்லிபால் தேசிய பூங்கா, மயூர்பஞ்ச், ஒடிசா.
80) சிங்கலீலா தேசிய பூங்கா, டார்ஜிலிங், மேற்குவங்காளம்.
81) தெற்கு பட்டன் தீவு தேசிய பூங்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
82) ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்கா, கடப்பா, ஆந்திரப்பிரதேசம்.
83) சுல்தான்பூர் தேசிய பூங்கா, குர்காவ்ன், ஹரியானா.
84) சுந்தரவனம் தேசிய பூங்கா, மேற்கு வங்காளம்.
85) ஷிவ்புரி தேசிய பூங்கா, மத்தியபிரதேசம்.
86) தடோபா தேசிய பூங்கா, சந்திராபூர், மகாராஷ்டிரா.
87) துங்கபத்ரா தேசிய பூங்கா, பெல்லாரி, கர்நாடகா.
88) வால்வடோர் தேசிய பூங்கா, பார்நகர், குஜராத்.
89) மலர்கள் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, கார்வால், உத்தராகாண்ட்.
90) வால்மீகி தேசிய பூங்கா, சம்பரான் மாவட்டம், பீஹார். Valmiki National Park: Champaran Dt., Bihar.
Q11. ""புலிகள் பாதுகாப்புத் திட்டம்"" என்பது என்ன, எப்போது அறிமுகப்படுத்தப் பட்டது?
புலிகள் அழிந்து வருவதையும், எண்ணிக்கையில் குறைந்து வருவதையும் கருத்தில் கொண்ட அரசு, இந்தத் திட்டத்தை 1.4.1973 அன்று, இந்தியாவில் இருக்கும் தேசிய பூங்காக்களில் 17 ஐ தேர்ந்தெடுத்து, அவைகளில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முதல் முதலாக கார்வால் மற்றும் நைனிதால் மாவட்டங்களில் பரவியுள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, உத்தராகாண்ட் ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது சுமார் 49 தேசிய பூங்காக்கள் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Q12. "யானைகள் காப்புத் திட்டம்" எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1991-1992ல் 8வது திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Q13. விலங்குகள் காப்பகத்துக்கும், சரணாலயங்கள்/பூங்காக்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
1) காப்பகத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதியில், அடைக்கப்பட்ட சுற்று சூழலில், பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்களால், விலங்கின மருத்துவர்களின் உதவியுடன் விலங்குகள் வளர்க்கப்படுகின்றன.
2) சரணாலயங்கள்/பூங்காக்களில், விலங்குகள் அவைகளுக்கேற்ற இயற்கை சூழ்நிலையில், வேட்டையாடுதல் மற்றும் கொல்லப்படும் சூழ்நிலைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு, சுற்றித்திரிந்து வாழ அனுமதிக்கப்படுகின்றன.
Q14. தேசிய பூங்காக்களுக்கும், சரணாலயங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
தேசிய பூங்காக்களில் வனம்/விலங்கு சார்ந்த எந்த மனித நடவடிக்கைகளும் அனுமதிக்கப் படுவதில்லை. சரணாலயங்களில், இவற்றுள் சில விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
Q15. இந்திய விலங்கு காப்பகங்கள், சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களை மேலாண்மை செய்யும் இந்திய அரசாங்க அமைப்பு எது?
இந்திய மத்திய விலங்குகள் காப்பக ஆணையம். Central Zoo Authority of India. 1992ல் நிறுவப்பட்டது.
Q16. வன விலங்குகளைக் காப்பதற்கான முக்கிய இந்தியச் சட்டம் எது?
வனவிலங்குகள் காப்பாற்றும் சட்டம், 1972 -- Wild Life Protection Act, 1972.. இது வரை ஏழு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. 2002ல் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம், வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது விதிக்கப்படும் சட்டம் மிகக் கடுமையாக்கப்பட்டதின் மூலம் விலங்குளின் அழிவு கணிசமாகக் குறைந்துள்ளது.
Q17. எந்த தேசிய பூங்காவில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது?
பந்தார்கர் தேசிய பூங்கா, உமேரியா மாவட்டம், மத்தியப்பிரதேசம்.
Q18. இந்தியாவின் முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா எங்கு ஏற்படுத்தப்பட்டது?
பந்திப்பூர் தேசிய பூங்கா, சாமராஜ் நகர், கர்நாடகா.
Q19. எந்த இந்திய தேசிய பூங்காவில், அழிவை நெருங்கிக்கொண்டிருக்கும் ‘The Great Indian Bustard’ என்ற கானமயில் பறவை அதிகமாக காணப்படுகிறது?
பாலைவன தேசிய பூங்கா, ஜெய்சல்மேர், ராஜஸ்தான்.
Q20. இந்தியாவின் மிகப் பழமையான தேசிய பூங்கா எது?
கார்பெட் தேசிய பூங்கா, கார்வால்-நைனிடால் மாவட்டம், உத்தராகாண்ட் -- 1936ல் தொடக்கம்.
Q21. “Nilgiri Tahr” எனப்படும் ""வரையாடு"" எந்த தேசிய பூங்காவில் அதிகமாகக் காணப்படுகிறது?
எரவிக்குளம் தேசிய பூங்கா, இடுக்கி மாவட்டம், கேரளா.
Q22. ஆசிய சிங்கத்துக்கு புகழ் பெற்ற தேசிய பூங்கா எது?
கிர் தேசிய பூங்கா, ஜூனாகத் மாவட்டம், குஜராத்.
Q23. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் அதிகமாக உள்ள தேசிய பூங்கா எது?
காஸிரங்கா தேசிய பூங்கா, கோலாகாட், நகாவ்ன் மாவட்டம், அஸ்ஸாம்.
Q24. இந்திய வைஸ்ராயாக இருந்த லின்லித்கோ பிரபு, ஒரு முறை வேட்டையாடச் சென்ற போது, சுமார் 4200 பறவைகளை வேட்டையாடிய ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. அது எந்த தேசிய பூங்காவில் நடந்தது?
க்யாலாதேவ் தேசிய பூங்கா, ராஜஸ்தான். இந்த பூங்காவினுள் உள்ள ""க்யாலாதேவ்"" என்ற சிவாலயம் உள்ளதால், இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா, பரத்பூர் மகாராஜாவால் உருவாக்கப்பட்டது.
Q25. தெற்கு பட்டன், வடக்கு பட்டன், சேடிள் பீக் தேசிய பூங்காக்கள் எங்குள்ளன?
அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
Q26. ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய “The Jungle Book” என்ற நாவல் எந்த தேசிய பூங்காவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது?
பெஞ்ச் தேசிய பூங்கா, நாக்பூர் அருகில், மகாராஷ்டிரா.
Q27. இந்தியாவின் புகழ் பெற்ற பறவையியல் ஆர்வலர் சலீம் அலியின் பெயரால் உள்ள தேசிய பூங்கா எது?
ஸ்ரீநகர், காஷ்மீர்.
Q28. வங்கப் புலிகளுக்கு புகழ் பெற்ற தேசிய பூங்கா எது?
சுந்தரவன தேசிய பூங்கா -- 24 பர்கானா மாவட்டம், மேற்கு வங்காளம்.
Q29. எந்த தேசிய பூங்காவின் எல்லைக்குள் மூன்று பெரிய ஏரிகள் உள்ளன?
ரணதம்போர் தேசிய பூங்கா, சவாய் மாதோப்பூர், ராஜஸ்தான். இதனுள், பதம், மாலிக் மற்றும் ராஜ் பாக் என்ற மூன்று பெரிய ஏரிகள் உள்ளன.
Q30. "மலர்கள் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா" எங்குள்ளது?
உத்தராகாண்ட் ன் கார்வால் பகுதியில்.
Q31. இந்தியாவில் காட்டுக்கழுதைகளுக்கான Indian wild ass சிறப்பு தேசிய பூங்கா எது?
கட்ச் வளைகுடா தேசிய பூங்கா, குஜராத்.
Q32. இந்திய நகரங்களுக்குள் (எல்லைக்குள்) இருக்கும் தேசிய பூங்கா எது?
1. கிண்டி தேசிய பூங்கா, சென்னை ராஜ்பவனில் உள்ளது. தமிழ்நாடு.
2. காசு ப்ரம்மானந்த ரெட்டி தேசிய பூங்கா, ஹைதராபாத், தெலங்கானா.
3. வன் விஹார் தேசிய பூங்கா, போப்பால், மத்தியப்பிரதேசம்.
Q33. இந்தியாவில் மிகப்பெரிய விலங்குகள் காப்பகம் Zoo எது?
அறிஞர் அண்ணா விலங்குகள் காப்பகம், வண்டலூர், சென்னை. 1980ல் தொடங்கப்பட்ட இது சுமார் 1300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தெற்கு ஆசியாவில் மிகப்பெரியது.
Q34. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விலங்குகள் காப்பகம் எது?
இந்திரா காந்தி விலங்குகள் காப்பகம் -- ஹைதராபாத் -- 1972 -- 425 ஏக்கர் பரப்பளவு.
Q35. சென்னையின் உலகப்புகழ் பெற்ற முதலைகள் மற்றும் பாம்புகள் பண்ணை மற்றும் பூங்கா வை உருவாக்கியவர் யார்?
ரொமலஸ் விட்டேகர் -- 1943ல் நியூயார்க், அமெரிக்காவில் பிறந்த இவர் இப்போது இந்திய பிரஜையாக சென்னையில் வாழ்பவர் -- 1976ல் பாம்புப் பண்ணையைத் தொடங்கி, இப்போது வடநெம்மேலி (மகாபலிபுரம் அருகில்) என்ற இடத்தில் ஒரு முதலைப் பூங்காவையும் நடத்தி வருகிறார். கொடுமையான விஷம் கொண்ட பாம்புகளிலிருந்து விஷத்தை எடுத்து விஷ தடுப்பு மருந்து தயாரிப்புக்கு பெரிதும் உதவி வருகிறார்.
Q36. பளிங்கு அரண்மனை விலங்குகள் காப்பகம் எங்குள்ளது?
கொல்கத்தா -- 1835ல் ராஜா ராஜேந்திர மல்லீக் அவர்களால் கட்டப்பட்ட அரண்மனைக்குள் உள்ளது. இந்தியாவின் பழமையான ஒன்று.
Q37. மைசூர் விலங்குகள் காப்பகம் யாருடைய உதவியால் உருவாக்கப்பட்டது?
உடையார் வம்ச மன்னர்களால் 1892ல் தொடங்கப்பட்டது.
Q38. செபாஹிஸாலா விலங்குகள் காப்பகம் எங்குள்ளது?
திரிபுரா.
Q39. பத்மஜா நாயுடு விலங்குகள் காப்பக அமைப்பின் சிறப்பு அம்சம் என்ன?
மேற்கு வங்காளம், டார்ஜிலிங் ல், 44 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 2136 மீட்டர்/7007 அடி உயர மலைப்பகுதியில் உள்ளது.
Q40. பாம்புகளுக்கான ஒரு பூங்கா கேரளாவில் உள்ளது. அது எது?
பரசினக்கடவு பாம்பு பூங்கா, கன்னூர் மாவட்டம், கேரளா. இங்கு சுமார் 150 வகை பாம்புகள், நாகம், ராஜ நாகம் போன்றவைகள் உள்ளன.
Q41. உலகின் முதல் தேசிய பூங்கா எது?
யோசெமைட் தேசிய பூங்கா, வ்யோமிங், அரிஸோனா, அமெரிக்கா -- 1872ல் உருவாக்கப்பட்டது.
Q42. உலகின் இரண்டாவது தேசிய பூங்கா எது?
ராயல் தேசிய பூங்கா, சிட்னி, ஆஸ்திரேலியா -- 1879ல் உருவாக்கப்பட்டது.
Q43. இயற்கைப் பாதுகாப்புக்காக உள்ள IUCN என்பது என்ன?
International Union for Conservation of Nature. 1948ல் உருவாக்கப்பட்டு, ஸ்விட்சர்லாந்தின் க்ளாண்ட் நகரில் தலைமையகத்துடன் இயங்குகிறது. இந்த அமைப்பு உலகில் உள்ள விலங்குகளை பற்றி ஆய்வு செய்து, அவற்றின் வாழ் நிலை, வளர் நிலை, அழிவு நிலைப் பற்றி அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை செய்து, முன்னேற்ற பாதைகளுக்கு உதவி வருகிறது.
Q44. IUCN வெளியிடும் "சிகப்பு அட்டவணை" Red List என்பது என்ன?
உலகில் உள்ள விலங்கினங்கள் மற்றும் தாவர வகைகளைப் பற்றி, அவற்றின் நிலைப் பற்றி தெரிவிக்கிறது. அவற்றின் வாழ் நிலை, வளர் நிலை, அழிவு நிலைப் பற்றி அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை செய்து, முன்னேற்ற பாதைகளுக்கு உதவி வருகிறது.
Q45. IUCN Red List ""சிகப்பு அட்டவணைப்படி, தாவரம் மற்றும் விலங்குகளின் அழிவு நிலை எவ்வாறு குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது?
1. EX – Extinct – முழுவது அழிந்துவிட்டது. ஒன்று கூட மிஞ்சவில்லை.
2. EW – Extinct in the wild – அடைப்புக்குள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. வனவெளியில் இருப்பதாக தெரியவில்லை.
3. CR – Critically endangered – அழிவை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.
4. EN – Endangered - அழிவை நோக்கிச் செல்லும் பாதையில் அதிக வாய்ப்பு உள்ளது.
5. VU – Vulnerable – அழிவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. பாதுகாக்கப்படவேண்டும்.
6. LC – Least concern – Lowest risk – அதிக கவலையில்லை -- பரவலாகவும் அதிகமாகவுமுள்ளது.
Q46. உலகின் புகழ் பெற்ற மிகப்பெரிய தேசிய பூங்கா எங்குள்ளது?
Serengeti National Park -- Tanzania – இது 14,500 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.
Q47. உலகின் மிகப் புகழ்பெற்ற 10 (Top 10) தேசிய பூங்காக்கள் எவை?
1. Great Smoky Mountains -- டென்னெஸ்ஸி, அமெரிக்கா -- 1934 -- சுமார் 6400 அடி உயர மலைப்பகுதி.
2. Grand Canyon -- அரிஸோனா, அமெரிக்கா. 1919 -- 12 லட்சம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவு.
3. Rocky Mountain National Park -- கொலொரேடோ -- 1915 -- 2.65 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
4. Yosemite -- கலிஃபோர்னியா, அமெரிக்கா -- 1894 -- 7.48 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
5. Yellow Stone -- வ்யோமிங், அமெரிக்கா -- 1872 -- 40 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
6. Zion -- உத்தா, அமெரிக்கா -- 1919 -- 36 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
7. Oympic National Park--வாஷிங்டன், அமெரிக்கா -- 1938 -- 32 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
8. Grand Teton National Park -- வ்யோமிங், அமெரிக்கா -- 1929 -- 3 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
9. Acadia National Park, மெய்ன், அமெரிக்கா -- 1916, 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு.
10. Glacier National Park, மொண்டானா, அமெரிக்கா -- 1910 -- 10 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
Q48. இந்தியாவின் எந்த அரசர் முதன் முதலில் விலங்குகளுக்கு ஒரு சரணாலயம் அமைக்க உத்தரவிட்டார்?
அசோகர்.
Q49. இந்தியாவில் இன்றைய நிலையில் எத்தனை புலிகள் காப்பகம் உள்ளது?
49
Q50. இந்தியாவின் முதல் சிங்க திறந்தவெளி பூங்கா எது? (Safari)
நேரு விலங்குகள் காப்பகம் -- ஹைதராபாத் -- 17.3.1974 -- சுமார் 33 ஏக்கர் பரப்பளவிலுள்ளது.
Q51. ""பழமையான உண்மையான வெந்நீருற்றூ"" “old faithful geyser” என்ற சிறப்புப்பெயர் கொண்ட வெந்நீருற்று எந்த தேசிய பூங்காவில் உள்ளது?
Yellow Stone -- வ்யோமிங், அமெரிக்கா -- 1872 -- 40 லட்சம் ஏக்கர் பரப்பளவு.
Q52. புகழ் பெற்ற ஜிம் கார்பெட் தேசிய பூங்கா வேறு எந்த பெயர்களில் அழைக்கப் பட்டது?
முதலில் ஹேய்லி தேசிய பூங்கா எனவும், பிறகு ராம்கங்கா தேசிய பூங்கா எனவும், அதற்குப் பிறகு 1951 முதல் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா என அழைக்கப்படுகிறது.