Khub.info Learn TNPSC exam and online pratice

உலக அதிசயங்கள் -- 7 WONDERS OF THE WORLD

Q1. உலக அதிசயங்கள் என்பது என்ன, அவை எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன?
இயற்கையாகவே அமைந்ததோ அல்லது மனித இனத்தால் செய்யப்பட்டதோ, மனித இனத்தை அதிக ஆச்சரியப்படச்செய்யும் ஒரு, பெரும்பாலும், நகர்த்தமுடியாத அமைப்பு. இவை, பண்டைய, இடைக்கால, நவீன மற்றும் இயற்கை அதிசயங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.

Q2. பண்டைய காலத்து 7 உலக அதிசயங்களை முதலில் தொகுத்தவர்கள் யார்?
ஹிரோடோட்டஸ், கிரேக்க வரலாற்று அறிஞர், லிப்யாவின் சைரீன் என்ற இடத்து காலிமாக்கஸ் என்பவர், சிசிலி யின் டியோடோரஸ், லெபனானின் சிடான் என்ற இடத்தில் இருந்து ஆண்டிபேட்டர் என்பவர், பைஸாண்டைன் சாம்ராஜ்ய ஃபிலோ என்பவர் ஆகியோர்.
Q3. பண்டைய காலத்து 7 அதிசயங்கள் யாவை?
1. கிஸாவின் பெரும் பிரமிட் -- GREAT PYRAMID OF GIZA : எகிப்தின் மன்னர் க்ஃபு, மற்றும் சியோப்ஸ் என்பவர்களின் கல்லறை பிரமிட். கி.மு. 2560ல் உருவாக்கப்பட்டது. கெய்ரோ, எகிப்தில் உள்ளது.
2. பாபிலோன் தொங்கு தோட்டம் -- கி.மு.600ல் காலடியன் மன்னர் நெபுகத் நேஸர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இப்போது இராக்கின் பாபில் பகுதியில் அல் ஹில்லா என்ற இடத்தில் உள்ளது.
3. ஸ்யூஸ் சிலை -- STATUE OF ZEUS: ஒலிம்பியா, க்ரீஸ் -- கி.மு 432 -- ஒலிம்பியா, க்ரீஸ் -- Olympic, Greece – 432 BC – இந்த சிலையை வடிவமைத்தவர் கிரேக்க சிற்பி ஃபிடிடாஸ்.
4. ஆர்டெமிஸ் கோவில் -- TEMPLE OF ARTEMIS : இஃபெஸஸ் -- கி.மு. 550 -- இப்போது இந்த இடம், துருக்கியின் சால்குக் நகரத்தில் அமைந்துள்ளது.
5. மஸோலஸ் மஸோலியம் -- கி.மு. 350 -- ஹாலிக்காமஸஸ் என்ற இடத்திலுள்ளது. இது பாரசீக ஆளுநர் மஸோலஸ் என்பவரின் கல்லறை. (MAUSOLEUM = கல்லறை).
6. கொலாஸ்சஸ் ஆஃப் ரோட்ஸ் -- COLOSSUS OF RHODES : ரோட்ஸ் தீவு , க்ரீஸ் -- கி.மு.280 -- இது ஒரு மிகப்பெரிய சிலை. இந்த சிலையின் இரண்டு கால்களும் இரண்டு நிலப் பகுதிகளை இணைக்கும் வகையில், கால்களுக்கிடையில் கடல் நீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணி கிரேக்க வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு. சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்த சிலையை புனரமைபு செய்ய 2008ல் முடிவு எடுக்கப்பட்டது.
7. அலெக்ஸாண்ட்ரியா கலங்கரை விளக்கம் -- ஃபரோஸ் தீவு, அலெக்ஸாண்ட்ரியா, எகிப்து. கி.மு. 247ல் கட்டப்பட்டது.
Q4. இடைக்கால வரலாற்றின் உலகின் 7 அதிசயங்கள் யாவை?
1. STONE HENGE : கற்காலத்துக்கு முன் கால பாறை அமைப்பு நினைவுகள். இயற்கையாக அமைந்துள்ள இந்த கருங்கல் பாறைகளின் அமைப்பு ஒரு உலக அதிசயம். இங்கிலாந்தின் வில்ட்ஷையர் பகுதியில் அமைந்துள்ளது.
2. கொலோசியம் - COLOSSEUM : ரோம், இத்தாலி -- இது ஒரு அரங்கம் -- ரோம கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. ரோமர்கள் காலத்தில் இங்கு வீரர்களுக்கிடையில் போர் நடத்துவது வழக்கம். 50000 பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்டதாக இருந்தது. கி.பி. 1ம் நூற்றாண்டில் நடத்தப்பட்டது.
3. CATACOMBS OF KOM EL SHOQAFA: அலெக்ஸாண்ட்ரியா, எகிப்தில் உள்ள ஒரு வரலாற்று மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம்.
4. சீனப் பெருஞ்சுவர் -- GREAT WALL OF CHINA : சீனா -- கி.மு.7ம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 220-206 காலம் வரைக் கட்டப்பட்டது. கிளைச்சுவர்களையும் சேர்த்து, இது சுமார் 21196 கி.மீ எனவும், அதில் பெரும் பகுதி சுமார் 8850 கி.மீ மிங் வம்ச மன்னர்களால் கட்டப்பட்டது. இது உலகப் புராதனச் சின்னமாகவும் உள்ளது.
5. பீங்கான் தூண் -- PORCELAIN TOWER OF NANJING : யாங்ட்ஸே நதிக்கரையில், நாஞ்சிங் நகர், சீனாவில் Historical site on the banks of Yangtze river, Nanjing, China in 15th century – Ming Dynasty.
6. ஹாஜியா சோஃபியா -- HAGIA SOPHIA: இஸ்தான்புல், துருக்கி -- Istanbul, Turkey – கி.பி. 537 AD – பைஸாண்டைன் மன்னர் ஜஸ்டின் என்பவரால் கட்டப்பட்டது. முதலில் இது ஒரு கிறித்துவ தேவாலயம் ஆக இருந்து, பிறகு ஒரு இஸ்லாமிய மசூதி ஆகி, இப்போது ஒரு அருங்காட்சியகமாக இயங்குகிறது. இதன் குவிமாடம் தான் உலகச் சிறப்பு.
7. சாய்வு கோபுரம், பிஸா, இத்தாலி -- LEANING TOWER OF PISA – 14ம் நூற்றாண்டில் கட்டப் பட்டது. 56.7 மீ/ 186.02 அடி உயரம் -- 4.09 மீ/13.42 அடி விட்டம், சுமார் 14500 மெட்ரிக் டன் எடை கொண்டது. இதன் சாய்வு சுமார் 3.99 டிகிரி.
Q5. உலகின் ஏழு புதிய ஏழு அதிசயங்கள் யாவை?
1. சீனப்பெருஞ்சுவர், சீனா GREAT WALL OF CHINA : சீனாவின் கிழக்கில் ஷாங்காய்ஹுவான் என்ற இடத்தில் துவங்கி, மேற்குப் பகுதியில் லேப் நூர் என்ற இடம் வரை உள்ளது. சுமார் 8851.8 கி.மீ. கிளைச்சுவர்களையெல்லாம் சேர்த்தால் இது சுமார் 21 ஆயிரம் கி.மீ மேற்பட்ட தூரத்துக்கு செல்கிறது. இதன் பெரும் பகுதி சீனாவின் மிங் வம்ச மன்னர்களால் கட்டப் பட்டது. கி.மு 220ல் தொடங்கி, கி.பி. 14-17ம் நூற்றான்டு வரை இதன் கட்டுமானம் நீடித்தது. இது ஒரு உலகப் புராதனச் சின்னமாகவும் உள்ளது.
2. பெட்ரா, அராபா, ஜோர்டான் -- PETRA: Arabah, Jordan – கி.மு.100 காலத்தைச் சேர்ந்த மலைக் குடைவுகள். ஹோர் என்ற மலைச் சரிவில் அமைந்துள்ளது. அரேபியன் பாலைவனத்தின் ஓரத்தில், நார்பாட்டியன் சாம்ராஜ்ஜியத்தின் (Nabataean empire) அரசர் நான்காம் அரிட்டாஸ் -ன் (King Aretas IV கிமு 9 முதல் கிபி 40 வரை) தலைநகராக பெட்ரா நகர் விளங்கியது. மத்தியக் கிழக்கு நாகரீகத்தின் அடையாளமாக இன்றும் காணக் கிடைக்கிறது.
3. மீட்பர் கிறிஸ்து. CHRIST THE REDEEMER : ரியோ டி ஜெனீரோ -- ப்ரேசில் -- 1931ல் முடிவுற்றது. திஜூகா வனப்பகுதியில் கார்கோவேடோ மலை உச்சியில் யேசு கிறிஸ்துவின் சிலை -- சிலையின் அடிப்பகுதியிலிருந்து இது 39.6 மீ/130 அடி உயரமானது.
4. மச்சு பிச்சு, உருபாம்பா பள்ளத்தாக்கு, பெரு -- இங்கா பேரரசு, 1430 காலத்து தொல்லியல் இடம். 15ம் நூற்றாண்டில் அமேசான் காட்டுப் பகுதியில், உருபாம்பா நதிக்கருகில் ஒரு மலை உச்சி மீது உருவாக்கப்பட்ட நகரம். இங்கு வாழ்ந்த மக்கள் தொற்று நோயால் அழிவுக்குப் பிறகு, 1911ல் தான் ஹிராம் பிங்காம் என்பவரால கண்டுபிடிக்கப்பட்டது.
5. சிச்சென் இட்ஸா -- CHICHEN ITZA : மாயன் கலாச்சாரத்து தொல்லியல் இடம் -- யுகடான் மாகாணம், மெக்ஸிகோ. 8ம் நூற்றாண்டுக்கு முன்பான காலத்தை சேந்தது. சிச்சென் இட்ஷா என்பது, பண்டைய மாயன் நாகரீகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கிய புகழ் மிக்க கோவில் நகரமாகும். குக்குல்கானுடைய பிரமிட், சாக் மூல் கோவில், ஆயிரம் தூண் மகால், கைதிகள் விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு அமைப்புகள், கட்டிடக் கலைக்கும் வடிவமைப்புக்கும் அவர்கள் காட்டிய அதீத ஈடுபாட்டை வெளிக்காட்டும் வகையில் இன்றும் காண முடிகிறது. இந்த கடைசி பிரமிட், மாயன் நாகரீக கோவில்களில் மிகப் பெருமை வாய்ந்தது.
6. கொலோசியம் -- ரோமர்கள் காலத்து கேளிக்கைக் கூடம் -- COLOSSEUM OF ROME : இத்தாலி -- கி.பி. 70-82 காலத்து அரங்கம். வெற்றி பெற்ற படையணியினர் மற்றும் ரோம சாம்ராஜ்ஜியத்தை பெருமைப்படுத்தும் விதமாக, ரோம் நகர மையத்தில் இந்த பிரசித்தி பெற்ற நடுவட்டரங்கம் நிர்மாணிக்கப்பட்டது. வீரர்களுக்கிடையில் கொடுமையான வீரச்சண்டைகள் நடத்தப்பட்ட அரங்கம். இதன் கட்டுமானம், இன்றைய கால அரங்கக் கட்டுமானங்களுக்கு ஒரு வழிகாட்டி.
7. தாஜ் மகால் -- ஆக்ரா, உத்திரப்பீரதேசம். மறைந்த மனைவியின் நினைவை போற்றும் வகையில், முகலாயப் பேரரசர் ஷாஜகான் உத்தரவுப்படி, இந்த பிரமாண்டமான மசூதி 1630-1653 காலத்தில் கட்டப்பட்டது. இந்தியாவின் முகலாய கட்டிடக்கலையின் மகுடமாக விளங்கும் தாஜ்மகால், நன்கு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் மத்தியில், வெள்ளை சலவைக்கற்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
Q6. உலகின் 7 இயற்கை அதிசயங்கள் யாவை?
1. க்ராண்ட் கேன்யன் -- GRAND CANYON : கொலராடோ, அரிஸோனா, அமெரிக்கா. CANYON என்றால் செங்குத்தான பள்ளத்தாக்கு எனப் பொருள். இதன் நீளம் 446 கி.மீ. அகலம் சுமார் 29 கி.மீ. செங்குத்து ஆழம் சுமார் 1.83 கி.மீ. இந்த பள்ளத்தாக்கு, கொலராடோ நதியால் சுமார் 54 லட்சம் வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
2. க்ரேட் பாரியர் ரீஃப் -- GREAT BARRIER REEF : பவளக்கடல் பகுதி, க்வின்ஸ்லாண்ட், ஆஸ்திரேலியா. 1981 முதல் உலகப் புராதனச் சின்னம். சுமார் 1600 முதல் 2600 கி.மீ பரப்பளவில் பரவியுள்ளது -- பரப்பளவு சுமார் 3,44,000 ச.கி.மீ.
3. ரியோ டி ஜெனீரோ துறைமுகம், ப்ரேசில் -- RIO DE JANEIRO PORT : 32 கி.மீ நீளமான இயற்கை துறைமுகம்.
4. எவரெஸ்ட் சிகரம் -- MOUNT EVEREST : ஆசியா --
5. அரோரா -- AURORA : ஒளிக்கனல் எனக் கூறலாம். வானத்தில் இயற்கை ஒளி வெளிப்படுவது. இது வானியலின் ஒரு சிறப்பு நிகழ்வு. வானியலில் இதை அரோரா பொரியாலிஸ் Aurora Borealis எனக் காணலாம்.
6. பாரிக்யூடின் -- PARICUTIN : மிசோவாகான் மாகாணம், மெக்ஸிகோ. இது ஒரு எரிமலை.
7. விக்டோரியா நீர்வீழ்ச்சி -- VICTORIA FALLS : ஸம்பேஸி நதி மீது, ஸாம்பியா மற்றும் ஸிம்பாப்வே நதிகளுக்கிடையில் அமைந்துள்ள மிகப்பெரிய அழகான நீர்வீழ்ச்சி.
8. யோசோமைட் பள்ளத்தாக்கு மற்றும் தேசிய பூங்கா -- YOSEMITE VALLEY & NATIONAL PARK : வ்யோமிங், அமெரிக்கா -- உலகின் முதல் தேசிய பூங்கா.
9. ஏஞ்செல் நீர்வீழ்ச்சி, ANGEL FALLS : வெனிசுலா - உலகின் உயரமான நீர்வீழ்ச்சி.
Q7. உலக அதிசயங்களை ஆய்வு செய்து வெளியிட முயற்சி செய்த நிறுவனம் எது?
New Wonders Foundation, Switzerland. இந்த ஆய்வும், வாக்கெடுப்பும் 2001ல் தொடங்கி, 21 அதிசயங்கள் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் வாக்கெடுப்பில் 7 தேர்ந்தெடுக்கப்பட்டு, 7.7.2007ல், போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டது.
Q8. உலகின் இதர முக்கியமான இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அதிசயங்கள் யாவை?
1) அல் அக்ஸா மசூதி -- AL AQSA MOSQUE : ஜெருசலேம் . மெக்கா மற்றும் மதீனாவுக்குப் பிறகு மிகவும் போற்றப்படும், இஸ்லாமிய மசூதி.
2) அல்டாமிரா -- ALTAMIRA : ஸ்பெயின் -- Paleolithic காலத்து குகை ஓவியங்களும் செதுக்கல்கள்.
3) ஆங்கர் வாட் ANKOR VAT : கம்போடியா -- உலகின் மிகப்பெரிய இந்து கோவில். சூர்ய வர்மன் 2 ஆல் கட்டப்பட்டது.
4) ஆண்டிஸ் மலைத் தொடர் -- ANDES MOUNTAIN RANGES : உலகின் நீளமான மலைத்தொடர். தென் அமெரிக்காவில் உள்ளது.
5) அஸ்வான் உயர அணை ASWAN HIGH DAM : எகிப்து.
6) பாலி - இந்தோனேசியா-- அழகான தீவு - மிகப்பெரிய சுற்றுலாத்தலம். இந்து மக்கள் அதிகம் உள்ள இடம்.
7) டியானாமென் சதுரம் -- TIANANMEN SQUARE , பெய்ஜிங்க், சீனா. உலகின் மிகப்பெரிய சதுர வடிவ திறந்த வெளி.
8) பெத் லெஹெம் -- BETHLEHEM: பாலஸ்தீனம் -- யேசு கிறிஸ்து பிறந்த இடம்.
9) கெய்ரோ -- CAIRO: ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரம். பிரமிடுகள் நிறைய உள்ளன.
10) கல்வாரி -- CALVARY: ஜெருசலேம் -- யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடம்.
11) கேன்ஸ், ஃப்ரான்ஸ் CANNES: புகழ்பெற்ற சர்வதேச திரைபட விழா நடைபெறும் இடம். 12) கேப்ரி -- இத்தாலியின் ஒரு தீவு -- சுற்றுலாத்தலம்.
13) தாக்கா -- வங்காள தேசம் -- சுமார் 700 மசூதிகள் உள்ளன.
14) ஈஃபில் டவர் -- EIFFEL TOWER : பாரீஸ், ஃப்ரான்ஸ் -- 1889ல் நடந்த ஒரு பொருட்காட்சியின் போது நிறுவப்பட்ட ஒரு இரும்பால் ஆன கோபுரம். குஸ்தாவ் ஈஃபில் என்பவர் வடிவமைத்த இந்த கோபுரம், சீன் நதிக்கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய சுற்றுலாத் தலம்.
15) பெட்ரோனா டவர்ஸ் -- PETRONA TOWERS : குலாலம்பூர், மலேசியா -- உலகின் இரண்டாவது உயர இரட்டை கோபுரக் கட்டிடம்.
16) புர்ஜ் காலீஃபா -- BURJ KHALIFA : துபாய் -- 829.84 mtrs (2723 ft) உயரம் – ஜனவரி 2010ல் பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் உயரமான கட்டிடம்.
Q9. ஆகஸ்ட் மாதத்தின் ஆங்கில ஜோதிட அடையாளங்கள் யாவை?
சிம்மம் -- கன்னி Leo and Virgo